Wednesday, September 2, 2020

 

தெய்வமாகப் போற்றுவது எப்போது?

(எல். வி. எஸ். மணியன்))

'நெருப்பின்றி புகை தோன்றுமா? ஒருக்காலும் தோன்றாது. திருத்தக்க தேவரும், குமர குருபர சுவாமிகளும் பாடி யிருப்பதில் உண்மை யுண்டா இல்லையா என்பதை
நன்கு துழாவிப் பார்க்க வேண்டும். அதுவன்றி, அவர்கள் துறவிகள்; மகளிருக்கு சமத்துவத்தை தரவிரும்பாத ஒரு சில சுயநலப் புலிகளது போலிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாடி யிருக்கிறார்களென்று வாதித்தால், பாரதியாரும் திருவள்ளுவரும் மேற் கூறிய போலிக் கொள்கை யுடையோரின் எதிரிகளின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாடினார்கள் என்று வாதிக்க முடியாதோ?

நிற்க,

உலகத்தில் வாழ்க்கையில் என்ன நிகழ்கிறதோ அதை அப்படியே திட்டுவதினால் ஏற்படக்கூடிய விபரி தங்களை பாரதியாரையும், வள்ளுவனாரையும் போன்றோர் நன்கு அறிந்து சித்திரிக்காமல், பெண்களுக்கு உயர்வைக் கொடுத்து நல்வழிக்குக் கொணர எண்ணினர் என ஏன் நாம் கருதக் கூடாது?

ஆனால் உலகை முற்றுந் துறந்த துறவிகளோ பெண்களிடம் உள்ள குறைகளை எடுத்துக் கூறினால் பெண்கள் அக்குறைகளை போக்கிக் கொள்ள முற்படுவர் என்று கருதினர் போலும்.

இருதரப்பினரது கூற்றுகளையும் சீர்தூக்கிப் பார்த்தல் அவசியம். ஒரே சார்பில் வாதிப்பது பிசகு, 'குருடர்களும் யானையும் என்ற கதையில் நாம் படித்தது போல் பார்க்கப் போயின் யாவும் உண்மை. ஒரு நாணயத்திற்கு 'இரண்டு' பக்கங்க ளுள்ளன என்பதை நண்பர் 'துரை' யவர்க ளறியவேண்டும். ஆதலால் இரு தரப்பினையும் அலசிப் பார்த்தல் அவசியம்.

தமிழ் மறையை அருளிய வள்ளுவனார் பெண்களைத் தெய்வமாகப் போற்றுவது போல உலகத்தோர் பெண்களைத் தெய்வமாக வழிபட வேண்டு மென்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே. ஆனால், எப்போது?

தற்பொழுது நம் கண் முன்னிருக்கும் உலகினிலே பெண்கள் எத்துறையில் ஆண்களைப் போல் சமத்துவத்தைப் பெறா திருக்கிறார்கள்? கல்வித் துறையிலா? அரசியலிலா? எதில்?

எத்தனை M. A. பட்டமும் B. A. பட்டமும் பெற்ற பெண்கள் வேண்டும்? எத்தனை உபாத்தியாயினிகள், எத்தனை டைபிஸ்டுகள் வேண்டும்? எத்தனை பெண்கள் வக்கீல்களாக இல்லை. ஏன்? மந்திரியாகக்கூட ஒரு பெண்மணி யிருந்தாரே! இதெல்லாம் சமத்துவ மில்லையோ?

இங்ஙனம், ஆண்களுக்கு இணையாகப் பல துறைகளிலும் சமத்துவம் பெற்ற மகளிர் யாவரும் ஒருவரைப்போல் எல்லோரும் இருக்கிறார்களா? ஐந்து விரல்களும் ஒன்றைப் போலவா இருக்கின்றன? இல்லையே!

'யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுதல்' போல், நாம் மகளிரைப் பழிக்க மகளிரே தான் காரணம் என்று கூறுவேன். சமத்துவம் கொடுக்கப் பெற்றதும் அதை அவர்கள் எங்ஙனம் காப்பாற்றிக் கொள்வது என்று அறிவதில்லை. 'குரங்கு கையில் கொடுத்த பூமாலை' போலாகிறது, அவர்கள் பெற்ற சமத்துவம் அவர்கள் கையில். 'காவல் தானே பாவையர்க்கு அழகு' என்பது அறவே மறக்கப்படுகிறது. இதுகாறும் பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காது, பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை குணங்களுடன் கற்பு நெறி தவறாது, படிதாண்டா பத்தினிகளாய் இருந்தவர்கள், அவர்கள் கடமையை, நெறியை விட்டு வழுவ இந் நாகரீக உலகிலே பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. வழுவுகின்றனர். அதனால் என்ன நேருகிறது? சீரும், சிறப்புமாயிருந்த அவர்கள் பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் இருந்த நற் பெயருக்கும் ஹானி யுண்டாகிறது. அப்போது தான் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றனர் பேதை மகளிர். இது தான் உலகில் இப்பொழுது பெரும்பாலும் நாம் காண்பதும், கேட்பதும். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கற்பு நெறி தவறாது பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும், மற்றும் பெண்கள் குலத்திற்கே தனிச் சிறப்பை கொடுக்க வல்ல மகளிரை இன்றல்ல, நாளையல்ல; என்றும் கண்ணகியைப் போல தெய்வமாகக் கொள்ள இப் பரத கண்டம் தயாரா யிருக்கிறது.

மனுமுறை வழுவாது அரசு செலுத்திய மன்னர்களின் சந்ததியில், ஒரு கொடுங்கோ லரசன் தோன்றின், அவனைக் கொடுங்கோலன் செங்கோலன் என் போற்றுதல் கூடுமோ?

அங்ஙனமே, கண்ணகி போன்ற கற்பரசிகள் உதித்த பெண் குலத்திலேயே பிறந்திருப்பினும், கற்பு நெறி தவறிய மகளிராக இருந்தால் அவர்களைப் பழித்தலே யல்லால் வழிபட இயலுமோ?

காவரைக் கடக்காத (நளாயினியை யொத்த) ஒரு பெண்ணினால், பெண்ணுலகிற்கே, பெயரும் புகழும் உண்டாவதானால், நெறி தவறிய ஒரே மங்கையால் அவள் பிறந்த பெண்ணுலகிற்கு பழிச் சொல்லும் இகழ்வும் ஏற்படுவது சகஜந்தானே! குடம் பாலானாலும், விஷம் ஒரு துளி போதாதோ?

முதலிலேயே கூறிவிடுகிறேன். மேற்கூறிய விஷயங்களுக்கும் இனி கூறப்போவதற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.

செய்யுளைக் கவனிப்போம்.

நண்பர் 'துரை' யவர்கள் செய்யுளின் பின் னிரண்டு அடிகளுக்கு பொருள் கூறுவதைக் கவனிப்போம். ஆனால் இப்பூமியில் பெண்ணாய்ப் பிறந்த எத்தகைய கற்பரசியையும், அவளுடைய அழகு கருதி விரும்பாத ஆண்மக்கள் இல்லை யாதலால் சந்தேகத்துக்கு இடந்தருகிறது! என்று கூறினாள் என்பது அவர் கொண்ட பொருள்.

ஆம், கற்புடைய ஒரு பெண்ணின் அழகு கருதி ஆண் மக்கள் விரும்பினால் அப் பெண்ணிற்கு, ஏன் தன் மனே திடத்தைப் பற்றி சந்தேகத்திற்கு இடந்தர வேண்டும்? சந்தே தேகத்திற்கு இடந் தருவதானால் திடசித்த முடையவ ளல்ல, சபல சித்த முடையவள் என்று பொருள் படவில்லையா?

இவ் விரு அடிகளுக்கும் கடற்கரையில் கண்ட பெரியார் கூறிய பொருள் ஒரு சிறிது பொருந்தும். அவர் கூறியதை இவ் வுலகில் பிறந்த பெண்களுக்கு அநேகமாய், அவர்கள் விரும்பும் ஆடவர் கணவராய் வாய்ப்பதில்லை யாதலால், அவர்கள் மனதை நம்புவதற் கில்லை' என்று பொருள் கொண்டால் சற்று நன்கு விளங்கும்.

நண்பரும், நேயர்களும் என்னுடன் திரௌபதியின் சுயம்வர காலத்திற்குச் சிறிது வர வேண்டும்.

சுயம்வரம் என்றால் என்ன? சுயம்வரம் என்ற பெயரே தவிர தமயந்திக்கும், சம்யுக்தைக்கும் நடந்த சுயம்வரம் போலா திரௌபதிக்கு நடந்தது? துரோபதை தான் விரும்பியவரை மணந்தாளா? 'திரௌபதை மச்ச யந்திரத்தை வீழ்த்துபவருக்கு மாலை யிடுவள்' என்று சுயம்வரத்திற்ரு வந்திருந்தவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதே யன்றி, மச்சயந்திரத்தை வீழ்த்துபவர் யாரானாலும் தான் அவரை கணவராக ஏற்றுக் கொள்வதாக துரோபதை ஒப்புக் கொண்டாளா? அவள் சம்மதத்தைக் கேட்டா ருண்டா?

கேட்டிருப்பின் கன்னனைத் தான் காதலிப்பதாக கூறி யிருக்கலாம். கணவனாகவும் கன்னனை அடைந்திருக்கலாம்.

இக் காரணங்களால் கன்னனைக் காதலிப்பதாக நான் கருதும் துரோபதை, பாண்டவர்களை மணந்த பின்னரும். கன்னனை உள்ளூரக் காதலித்தே வந்திருக்கிறாள். ஆனால், சமூகக் கட்டுத் திட்டங்களுக்கு (இக் காலத்தைவிட, அக்காலத்தில் சமூகக் கட்டுத் திட்டங்களுக்கு சக்தி அதிக மாயிற்றே!) அடங்கி யிருந்திருக்கிறாள். மேலும், துரோபதை கன்னனைக் காதலித்தாளே தவிர, கன்னன் தன்னைதன்னைக் காதலிக்கிறானா என்பதைத் துரோபதை யறியாள். ஆகவே, கன்னன் தன்னழகைக் கண்டு மோகிக்கும் காலமும் வரின், தான் ஐம்புலன்கள் போன்ற ஐவரைப் பதிகளாகப் பெற்றிருப்பினும் நம்புவதற்கு உளதோ? இல்லை, என்று வசிட்ட முனிவனது தரும பத்தினியான அருந்ததியை ஒத்த துரோபதையும் கூறினாள் என்று நான் கருதுகிறேன்.

உருகும் எனது பேரிதயம் - என்பதற்கு ஒருக்காலும் என் உள்ளம் உருகாது என்பதல்ல பொருள். பேசும் படம், பெய்யும் மழை என்ற ரீதியில் என்னுடைய உள்ளம் உருகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

'பேரிதயம்' என்றதற்கு வித்துவான். எம். சாம்பசிவமும் இரட்டணை ஆர். ருக்மணியும் கூறிய பொருளும் தெளிவாயுள்ளபடியால் மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை.

அருந்ததியைப் போன்றாள் என்று திரௌபதியைக் கூறுவது பொருந்துமா எனின், நன்கு பொருந்தும். பாண்டவர்களை மணந்தபின் வேறு யாரையேனும் மனத்தால் திரௌபதை நினைத்திருந்தால் அவள் கற்புக்கு பங்க மேற்பட்டது என்று கூறலாம்.
ஆனால் துரோபதை தான் ஐவரையும் பதிகளாக்க கொள்ளு முன்னரே, கன்னனைக் கணவனென வரித்து விட்டாளே! ஆதலால் கன்னனை அயலான் என்று கூற முடியுமோ?
கன்னனுக்கு இடமளித்த இதயத்தில் தான் நிர்ப்பந்தத்தினால் ஐவருக்கும் இடமளித்தாள். இட மளித்த பின்னரும், தான் மனத்தால் வரித்த கணவனை மறந்தாளா? கனவிலும் மறந்தாளில்லை. அது ஒரு கற்பரசியின் குணமல்லவா? கன்னனை மறந்து போகா விட்டாலும், நிர்ப்பந்தத்தினால் பதிகளாகக் கொண்ட் ஐவருக்கும் துரோகம் செய்தாளா? ஒரு சிறிதும் செய்யவில்லை. ஐவருக்கும் தன் கடமைகளி லிருந்து கிஞ்சிற்றும் வழுவினாளில்லை. அகத்திலேயே தான் அடங்கிக் கிடந்தது அவள் காதல். இப் பழச் சம்பவம் நேர்ந்திராவிடில் அவள் உள்ளத்தி லிருந்தது ஒருக்காலும் வெளி வரப் போவதில்லை. ஆதலால் துரோபதையைக் கற்பரசி யென்று கொள்ளாது வேறு விதமர்க பொருள் கொள்வது து ஒரு சிறிதும் பொருந்தாது என்பது என் எண்ணம்.

‘ஐம்புலன்களும் போல்' எனச் செய்யுளிலேயே தெளிவாகக் கொடுத்திருப்பதால், மக்களுக்கு இன்றி யமையாததான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்க ளெனக் கொள்ளாது வேறு பொருள் கொள்வது சரியாகப் பொருந்தாது என்பது என் அபிப்பிராயம்.

ஆனந்த போதினி – 1943 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment