Wednesday, September 2, 2020

 

தன் மதிப்பு
(சித்தூர்-பண்டித பூ. ஸ்ரீநிவாசன்.)

தன் மதிப்பு என்பதற்குத் தற்காலத்தில் விளங்குமாறு பொருள் கூற வேண்டுமாயின் சுயமரியாதை என்னலாம். தன் மதிப்பு என்பது தமிழ்மொழி; சுயமரியாதை என்பது வடமொழி; தன்மதிப்பு அல்லது சுயமரியாதை என்னும் இச்சொற்றொடர்கள், ஒருவ 7 பிறருக்காயினும் பிறவற்றிற்காயினும் அடம் அடிமைப்பட்டுத் தன் பெருமையை (மேன்மையை) இழந்து விடாமல், தன்மதிப்பை அல்லது தன் மரியாதையை புடையவனாயிருத்தல் என்னும் பொருள்படும். "அடிமை நாட்டில், சுயமரியாதைக் கிட மேது'' எனச் சில மாதங்களுக்கு முன் திரு. ராஜேந்திரபாபு தமிழ்நாட்டில்
சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது சுயமரியாதைக் க்ஷியைக் குறித்துக்கூறியது உய்த்துணரத்தக்கதாம். தன் மதிப்பு நிலையில் தலை தூக்கி நிற்கவேண்டிய மானிடன் அடிமைப் படுகுழியில் வீழ்ந்து அல்லற்பட் டமுங்குகின்றான்.
ஒருவருக்கா இருவருக்கா ஒரு பொருளுக்கா இரு பொருளுக்கா பல்லோர்க்கும் பலவற்றிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றான். சுயேச்சை வாழ்க்கை யுடையவனாய்த் தன்னினும் உருவத்தினும் வலிமையினும் பராக்கிரமத்தினும் னைப் பலவற்றினும் மிகுந்துள்ள யானை சிங்கம் முதலியவற்றைத் தன்னடிமைப்படுத்தவல்ல மனி தன் அடிமைப் புத்தி கொண்டு அடிமை வாழ்க்கை நடாத்துதல் அவமானத்தைத் தரும் விஷயமல்லவா?

இத் தமிழகத்தில் சுயமரியாதையை நிலைநாட்டவும் அடிமைப்புத்தியை யொழிக்கவும் வேண்டுமென்னும் நோக்கத்தோடு ஓரியக்கம் சுயமரியாதைக் கக்ஷி யென்னும் பெயரோடு தோன்றியிருந்தது. இக் கக்ஷி சில அரும்பணிக்வாற்றியதெனினும் அஃது சுயமரியாதை என்றால் என்ன என்பதை யுள்ள படி யறிந்து தொண்டாற்றத் தவறிவிட்டதால் இழிநிலை செய்தத் தொடங்கி கடவுள் நிந்தனை அந்தணர் நிந்தனை என்னும் இவ்விரண்டுமே தன்மதிப்பாளர் கடமை என்று கருதித் தவறான நெறியிற் சென்று விட்டது. மக்கள் கடவுளுக் கடிமைப்படாமையும் அதாவது அவன் ஆண்டான் நான் அடிமை என்றெண்ணி வழிபடாற்றுதலும் அதற்கனு குணமாகவுள்ள சிரார்த்தாதி வைதிகச் சடங்குகளும் பிராம்மணர்களை வணங்க அலர் தம் சொற்படி செய்யத் தக்கனவாயிருத்தலின் அவர்தம் உதவியால் நடத்தப்படும் அத்தகைய சடங்குகளாலும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு பயனற்ற இச்சடங்குகளில் மனிதர்களை எய்த்துச் செலுத்தியவர்களெனக் கருதப்படும் பிராம்மணர்களும் அடிமைப் புத்திக்குக் காரணமெனக் கொண்டு இவற்றை யொழித்தலே சுயமரியாதை என்று அவர்கள் கொண்டு அதற்காக வேலை செய்தார்கள். அவ்வியக்கத்தைப்பற்றியோ அதன் தொண்டர்களை பற்றியோ நாம் ஏதும் இங்கு பேசவில்லை; பேசவேண்டுமென்னும் விருப்பமுமில்லை; இவ்வியாசசத்தின் நோக்கமு மதுவல்ல. தன்மதிப்பு அல்லது சுயமரியாதை என்பதைக் குறித்து எழுதத் தொடங்கினமையின் அப்பெயரா எழைக்கப்படும் இயக்கத்தைப் பற்றியும் இரண்டொரு விஷயம் சொல்ல நேர்ந்தது.

நாம் பலருக்கும் பலவற்றிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்.
கடவுள் வழிபாட்டையும் அந்தணர் கொள்கையையும் புறக்கணித்து விடுதல் மாத்திரத்தால் ஒருவன் அடிமைத் தளையினின்றும் நீங்கியவனாக - தன் மதிப்புடையவனாக-சுய மரியாதைக்காரனாக - ஆய் விடமாட்டான், ஏனெனில் அவன் வேறுபலவற்றிற்கும் அடிமைப் பட்டிருக்கின்றான். சரியான சுயமரியாதைக்காரனாகத் தன்னைச் செய்து கொள்ள வேண்டுமாயின் அந்தத் தளைகளினின்றும் மீட்சி பெறுதல் வேண்டும். அவ்வாறு நம்மை யடிமைப்படுத்தி யிருப்பன யாவை? எத்துணையோ துர்க்குணங்கள் நம்மைத் தமக்கடிமைப்படுத்தியிருக்கின்றன. அவற்றிற்கு நாம் அடிமைகளாகத்தா னிருக்கிறோம். கோபத்திற்கும், குரோதத்திற்கும், காமத்திற்கும், பொறாமைக்கும், பொய்க்கும், வஞ்சனைக்கும், ஆசைக்கும் மற்ற பல தீக்குணங்களுக்கும் நாம் அடிமைப்பட்டுக்
கிடக்கின்றோ மென்பதை யாரேனும் மறுக்க முடியுமா. அவாகள் வசப்பட்டு நாம் படும் துன்பங்கள் அம்மம்ம! அளவிட்டுரைத்தல் யாருக் கியலும். ஐம்பாறிகளை வாயிலாகவுடைய ஐம்புல வேடர்களுக்கு நாமடிமைகளல்லவா? இவைகளுடைய அடிமைத் தன்மையினின்றும் நீங்கா தவரையில் நாம் தன்மதிப்புடையவர்களெனச் சொல்லிக் கொள்ளச் சிறிதும் இடமேயில்லை. இவற்றையெல்லாம் வென்று சித்திபெற்ற வீரனே தன் மதிப்புடையவன் – சுயமரியாதைக்காரன் - சுயேச்சை பெற்றவன் - சுயராஜ்யம் பெற்றவன்.

இவ்வடிமையினின்றும் விடுதலை பெறுவதெப்படி? தன் நிலையையறிந்தால் தான் யார்? என்பதை யறிந்து கொண்டால் விடுதலை உடனே பெறலாம். இப்போதுதான் கடவுள் என்னும் பெயரால் அழைக்கப்படும் ஓர் பரம்பொருளின் உதவி நமக்கு இன்றியமையாத தாகின்றது. நான் அம்பரம்பொருளின் பிள்ளை என்பதை யறிந்தால் - ஐயமறவறிந்தால் - அடிமைத்தளையினின்று விடுதலை பெறுவோம். தன் நிலையை யறியாமல் வேடர் கூட்டத்தில் வளர்ந்த அரச குமாரனொருவன் அக் குலத்தொழில் புரிந்து கஷ்டமடைந்தவன், தான் “வேடனல்ல; அரசகுமாரன்” என்று அறிந்து கொள்வானானால் அதன் பிறகு அக் கூட்டத்தோ டிணங்கி கஷ்டப்படமாட்டான். அப்படியே நாமும். இச்சரீரம் நானல்ல, இந்திரியம் நானல்ல, புத்தியாதி அத்தக்காணம் நானல்ல; நான் ஆனந்த வடிவினனாகிய ஆண்டவனுடைய குமாரன்; என்னை நான் உள்ளவாறு தெரிந்து கொள்ளாமையால் இத்துர்க்குண வேடர்பாற் சிக்கி அவர்களுக்கடிமையா யிருந்தேன் என்று உள்ள பாறு உணர்ந்து கொண்டு அவைகள் (காமக் குரோதாதி துர்க்குணங்கள்) ஆட்டும் விதமெல்லாம் ஆடும் அடிமைகளாக இருக்கமாட்டோம். அப்போசதான் நாம் தன் மதிப்பு - சுய மரியாதை - உடையவர்களாவோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை பஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

 

ஏன்?

 

 

 

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்னும் மீளா வானாய்

கொய்ம்மலர் சேவடியிணையே குறுகினோமே.

 

இங்கே மீளா வாளாய் என்பதற்கு மீளா அடிமை எனப் பொருள் கொள்ளாது நீக்கமுடியாத மகன் எனக்கொள்க.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 



 

No comments:

Post a Comment