Saturday, September 5, 2020

 

பெண்மை வேண்டும் பெருந்தகை

[ஸ்ரீமதி ஈ. த. இராஜேஸ்வரி, M. A., L. T.]

ஒளவையார் பிறந்த நாடு; கண்ணகி பிறந்த நாடு; காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் உலகுக்குக் கண்ணைத் திறந்து கடவுளைக் காட்ட வேண்டுமென்றே பிறந்த நாடு; திலகவதியாரும் மங்கையர்க்கரசியாரும் ஆண்மக்களையும் நாட்டையுமே' திருத்தி வழிப்படுத்தி ஆட்கொண்ட காடு. இப்படிப்பட்ட நாட்டில் இத்தகைய வான் புகழிலே ஈடுபட்ட மனமுடையவர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் ஆவர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே இவர் பத்து வயது பிள்ளையாக இருக்கையில் என்ன கண்டார்? எங்குப் பார்த்தாலும் எழுதப் படிக்கத் தெரியாத பெண்கள், பெற்றோராலும், கணவன்மாராலும், மைந்தராலும் பண்டமாற்றுப் பொருள் போலக் கருதப்பட்டவர்களைக் கண்டார். “பிசாசும்
வேதத்தைச் கையாளும்" என்னும் பழமொழிக்கு ஏற்பத் தேவார திருவாசகங்களும் பிரபந்தங்களும் பெண்களுடன் வாழ்தலால் துன்பமே என்று கூறுகின்றன. என எடுத்துக் காட்ட முன்வந்தனர்.

சீதை பிறந்த இந்த நாட்டிலே பெண்கள் எல்லாவற்றையும் தம் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப் பட்டினி கிடப்பதே பேரின்பம் எனக் கருதியது வியப்பன்று. அன்பால் நிகழும் அச்செயல் என்றும் நிகழ வேண்டும் என அச்சமூட்டி ஆடவர்கள் வற்புறுத்தினார்கள். பெண்களுக்கு என ஓர் உரிமையும் இல்லை என ஓட்டாண்டியாகப் பலரையும் ஓட்டினர். அதற்கேற்ப ஆண்மகின் அமைத்த சட்டத்தில் பெண்ணின் உரிமையும் குறுகிய எல்லையில் அடைபட்டுக் கிடந்தது. நிலை குலைந்து ஆதரவற்ற பெண்கள் எத்தனையோ பேர் இன்னும் இந்த நாட்டில் அலைகின்றதை
நாம் காணவில்லையா? துறவு பேசியவர்கள் எல்லாம் பெண் பிறவியின் இழிவையே எடுத்துரைத்தார்கள். இத்தனை இக்கட்டுக்குள்ளே பெண்கள் "பெண்ணாய்ப் பிறப்பதிலும் பேயாய்ப் பிறப்பது மேல்'' என்று எண்ணமிடத் தொடங்கினர். தம் நம்பிக்கையை இழப்பதல்லவா அழிவின் முடிவெல்லை!

திரு. வி. க. அவர்கள் இந்த நிலையைக் கண்டார்; அன்புடைய தாயாரின் வயிற்றிற் பிறந்தவர்; (சில ஆண்டுகளுக்கு முன்னே), அந்த அம்மையார் மறையும்வரை சீராட்டிப் பாராட்டி வளர்க்கச் சிறு குழவிபோல் வளர்ந்து தாய்மை அன்பிலே திளைத்தவர்; திரு. உலகதாதரையே தமையனாகப் பெற்றவர்: அன்புடைய சகோதரிகளோடு ஒன்ாைக வாழ்பவர்; தம்மை உயிரெனக் கருதிய மனைவியோடு இல்லறம் நடத்தியவர். குழந்தைகளிடத்தே குழைந்த மனமுடையவர்.

திரு. வி. க. இயற்கையிலே இளகிய மனமுடையவர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் பெருமையும் இவரிடம் உண்டு. பெண்களின் தாழ்ந்த நிலைமையைக் கண்ட இவர் மனம் சரந்தி அடையவில்லை. அவர்களை உயர்த்துவதற்கே உழைக்க வேண்டும் என்று காப்புக் கட்டிக் கொண்டார்: பலராலும் போற்றப்படும் திருக்குறளை எடுத்தார். திருவள்ளுவர் பெண்ணை எவ்வாறு மதித்தார் என்பதை உலகம் அறிய “பெண்ணின் பெருமை” என்ற நூலை எழுதி எம்மனோருக்கு உதவினார். இந்த நூல் தமிழ்
காட்டிலே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கி விட்டது என்பது மிகையாகாது. எளிய நடையிலே, தெளிவாகக் கூறப்பட்ட அவ்வாழ்ந்த கருத்துக்கள் படித்தவர்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதியலாயின. மாத்திரமல்ல. அவர் பெண்ணின் பெருமையை வற்புறுத்தாமல் பேசுவதே இல்லை. பெண்களுக்கு வீடுபேறில்லை என்றார்க்கு ஆண்மகன் பெண்ணாக மாறினாலன்றி அவனுக்கு வீடுபேறில்லை என்று சொல்லலாயினர்.
இவர் வணங்கும் கடவுளும் பெண்ணோடு விளங்கும் பெருமானே. இயற்கையைப்
புகழ்வதும் பெண் வடிவம் கொண்ட தாயாய் இருப்பதாலேயே. நாட்ரிமை கேட்பது இவருடைய பெண் தொண்டேயாம். பொய்த்துறவை ஓட்டி, உண்மையான காதல் வாழ்வை-கடவுள் வாழ்வை-நிலைநாட்ட இவர் பட்டபாடு சிறிதல்ல. இத்தகைய காதல் திருமணங்கள் பல்கவேண்டும்; உலகமெங்கும் பார்வதி பரமேசுவரராயும், இலக்ஷ்மி நாராயணராயும், வள்ளி முருகனாகவும் தாம் கண்ணாரக் காணல் வேண்டும் என்னும் ஆசையாலே தாமே புரோகிதராகி மூலைமுடுக்குகளிலும் கஷ்டம் பாராது சென்று இத்திருமணங்களை நடத்தி வைக்கிறார். ஆனால் முறையற்ற காமத்தை வளர்ப்பவர் இவர் அல்லர்.

30-35 வயது கடந்ததும் கணவனும் மனைவியும் வீட்டிலேயே இருந்து கொண்டு துறவிகளாகிப் பொதுத்தொண்டு செய்தல் வேண்டும் என வற்புறுத்தி வருகின்றார். இன்னும் இத்தகைய தொண்டு செய்யத் தாயுமானவர் போல் "மறமலி உலக வாழ்க்கையே வேண்டும்”, “வைகுண்டம் வேண்டாம்; மோக்ஷம் வேண்டாம்'', “என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்ற கருத்துடையராய்ப் பிறவி வேண்டும் என்கிறார்.

இத்தொண்டிற்கெனவே இவர் பிறப்பெடுத்தார் எனலாம். இத்தொண்டும் வெற்றி பெற்றுள்ளது. அரசியற்றுறை, கல்வித்துறை, வாழ்க்கைத்துறை என்ற பல்வகையான துறைகளிலும் முன்னுக்கு வந்து இவரை வாயார வாழ்த்தும் பெண்களுக்குக் கணக்கேயில்லை. பெண்களின் முன்னேற்றதைக் காண்பதிலே இவருக்குப் பேராசை. பெண்களுக்கு இவர் பேசுவதைக் கேட்பதில் பெருவிருப்பம் உண்டு. இவர் தலைமையிலே
பேசத் தாயெதிரே பேசும் குழவிகளைப் போலப் பெண்கள் முந்தி வருவதை இன்றும் காணலாம். “பெண்களே தலைமை பூண்டு பெருஞ் செயல் செய்து தாய்மையை வளர்க்காரா? பெண்களுக்கென்றே ஒரு பல்கலைக்கழகம் கலைக்கோயிலாக எழாதா? பெண்கள் ஆட்சியில் அரக்க வாழ்வு ஒழிந்து அன்புவாழ்வு எங்கும் ஒளிருமல்லவா?" என்றெல்லாம் இவர் கனாக் கண்டு வருகிறார். இவர் எண்ணங்களின் சக்தி வீணாகாது என்பது திண்ணம். இவர் தம்மைப் பெண்ணெனக் கருதிக் கொள்வதிலே பெருமகிழ்ச்சி கொள்பவர். பெண்களாகப் பிறந்து அப்பிறவித் துன்பக்கடலில் அலைப்புண்டு வரும் நாங்களும் பெண் பிறவி வேண்டாம் என்று சொல்லும்போது, இப்பெருமகனாரோ பல றெவியும் பெண் பிறவியாக வாராவோ என்று வேண்டிக் கொள்ளும் தாய்மை அன்பை என்னென்பது! என்னென்பது பெண்ணுலகம் இவரை வாயார் வாழ்த்துகிறது.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

 



 

No comments:

Post a Comment