Saturday, September 5, 2020

பெரியார் வணக்கம்

 

 

பெரியார் வணக்கத்தில் முற்பட்டதும் தலைமை சான்றதும் இந்தியா. ஆதிகாலந் தொடங்கி இன்றுவரை புகழோடு காலஞ்சென்ற பெரியார்களுக்கு மக்கள் காலத்துக்குத் தக்கவாறு வணக்கத்தையும் மரியாதையையுஞ் செலுத்தும் வழக்கம் இங்கே இருந்து வருகிறது.

 

மனிதர்களுக்குள் எழுத்துப் பிறப்பதற்கு முன், மனவலி, உடல் வலி, ஆயுதப் பயிற்சி முதலியவைகளில் சிறந்து விளக்கிய சிலர்கள் பெரியவர்களாகக் கருதப் பட்டார்கள். எழுத்துக்கள் பிறந்து மொழிகள் விருத்தியானவுடன், கல்வி யறிவு, கடவுள் வழிபாடு, அறவழி நிற்றல், தவயோகம் ஆகியவைகளில் சிறந்து விளங்கிய சிலர்கள் பெரியார்களாகக் கருதப்பட்டு வணங்கப் பெற்றார்கள்.

 

இப்பெரியார் வணக்கம் ஒவ்வொரு நாட்டிலும், மக்களுக்கிடையே காணப்படுகிறது. வெளிநாட்டு மக்கள் தங்கள் தங்கள் பெரியார்களுக்குத் தகுந்த வணக்கம் செய்து வந்தார்களென்பதும் சரித்திர வாயிலாகத் தெரிகிறோம். ஐரோப்பியர்கள் தங்கள் பெரியார்களுக்குச் செலுத்திய வணக்கத்துக்கும், இந்திய மக்கள் தங்கள் பெரியார்களுக்குச் செலுத்திய வணக்கத்துக்கும் உள்ள ஒரு சிறிது வேற்றுமை ஊன்றிப்பார்த்தால் புலனாகும்.

 

மொழிகள் ஒலிவடிவாயிருந்தபோது, பெண்களோடும், பிள்ளைகளோடும், மாடுகளோடும், தண்ணீரும் புல்லும், தகுந்த விளை நிலமும் காணப்பட்ட இடங்களில் கும்பல் கும்பலாக வாழ்ந்து வந்த ஆதிமனிதர்கள் தங்கள் தங்களுக்கு மத்தியில் தோன்றிய பெரியார்களுக்கு அப்பெரியாருடைய அழகு, வீரச்செயல் முதலியகைகளை இசைப் பாட்டுகளாக அமைத்து ஆண்ளும் பெண்களும் அவைகளைப் பாடி வணக்கஞ் செய்து வந்தார்கள். புலங்களில் தொழில் செய்யும் போதும், இதர சமயங்களிலும் இவ்விசைப்பாட்டுக்களைப் பாடி வந்தார்கள். அன்றியும் வாய்ப்பாடமாக இவ்லிசைப் பாட்டுக்கள் அவர்கள் சந்ததியாருக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன. இதன் உண்மை விசாகபட்டினம் ஜில்லாவைச் சேர்ந்த கீழ்மலைத் தொடர்ச்சியில் வாழ்ந்துவருகிற 'காண்ட்ஸ்,' என்கிற ஆதிகுலத்தாருக்குள் விலங்குகிறது. எழுத்துப் படிப்புத் தெரியாத இக்கூட்டத்தார், ஆண்களும் பெண்களும் இத்தகைய இசைப்பாட்டுக்களைப் பாடக் கேட்கலாம்.

 

சில பெரியார்களுக்குச் சில பிரிவினர் அப்பெரியாரை அடக்கம் பண்ணப்பட்ட புதைகுழியின் மேல், எவருக்குஞ் செய்யாத ஓர் பெருஞ் சிறப்பினைச் செய்து வணக்கத்தைச் செலுத்தினார்கள். காலத்துக்கேற்ப ஓர் சிறு கல்லினை அப்புதை குழியின் மேல் ஞாபகார்த்தமாக நட்டு வைத்தார்கள். அல்லது ஓர் சிறிய கட்டடத்தைக் கட்டிவைத்தார்கள் (சமாதி என்று இக்காலத்தில் வழங்குகிறது). அன்றியும் சிறுவிழாக்களும் செய்து வந்தார்கள் (குருபூஜை என்று சில இடங்களில் சொல்லப் படுகிறது.)

 

மனிதர்களுக்குள் அறிவு வளர்ச்சியான காலத்து, கற்களினால் அப்பெரி யார்களைப் போல உருவங்களைச் செய்து முக்கியமான இடங்களில் நிறுத்தியும் சிறிய ஆலயங்கள் கட்டியும் வணக்கம் செலுத்தி வந்தார்கள். (மதுரை மீனாக்ஷி ஆலயத்துக்கு வலதுபுறமாகக் காணப்படும் மதுரை வீரன் கோவில் - திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பொதியை மலையின் மேலுள்ள பட்டவராயர் கோயில்)

 

இன்னும் சிலர் சில பெரியார்களின் உருவங்களையும், அவர்கள் வீரச் செயல்களையும் கற்களிலும், குகைகளிலும் தீட்டி வந்தார்கள் (கிஷ்கிந்தா என்னும் ஹம்பியிலுள்ள ஜைன மதப் பெரியார்களின் குகைகளிலும் மற்றும் எல்லோரா முதலிய குகைகளிலும் இத்தகையவை காணப்படுகின்றன).

 

மனிதர்களுக்குள் எழுத்துப் பிறந் மொழி விருத்தி யடைந்தவுடன் கற்றவர்களில் சிலர் தங்கள் பெரியார் வணக்கத்தை நூல்கள் மூலமாகச் செலுத்த முயன்றனர். ஆனால் பெரியார் வணக்கத்தை நினைத்து நூல் எழுதப் புகவில்லை. கல்வியின் முதிர்வால் எழுதப் புகுந்த அக்கட்டுரையாளர்கள் மிகவும் பெரியார்களின் வணக்கத்தில், தங்களை அறியாமலே ஈடுபட்டார்கள்.

 

அங்ஙனமே முதல் முதல் புராணங்களும் இதிகாசங்களும் எழுதப் புகுந்த ஆசிரியர்களுக்கு ஆதாரமாகவும், முதல் நூலாகவும் இருந்தவைகள் வாய்ப்பாடமாகத் தொன்று தொட்டுவந்த பெரியார்களின் கீர்த்தி நிறைந்த இவ்விசைட் பாட்டுக்களே. கர்ண பரம்பரையாக நிலவி வருகிறவைகளையும், வாய்ப்பாடமாக வந்த இசைப் பாட்டுக்களையும் ஆதாரமாக வைத்து, "ரவி காணாததைக் கவி காண்பான்' என்னும் முதுமொழிக் கேற்ப ஆசிரியர்கள் நூல் நூற்க ஆரம்பித்தார்கள். அங்ஙனம் ஆரம்பித்தவர்கள், காப்பிய தலைவன், தலைவி, இவர்களுக்குச் செய்யவேண்டிய முறைமைக்கு மிகுதியாய், அவர்கள் பாலுள்ள அன்பினாலோ பக்தியினாலோ, பேதமையினாலோ அளவுகடந்து ஈடுபட்டு, கல்வியின் முதிர்ச்சியால், கற்பனைகளை வரையறை யின்றிக் கலந்து நூற்களை யெழுதி முடித்தார்கள்.

 

கற்பனைகளைக் கலந்தது மன்றி, தலைவன் தலைவிகளுக்குத் தெய்வீகத் தன்மையையும் கொடுத்துச் சில ஆசிரியாகள் நூற்களை எழுதி விட்டார்கள் பெரியார் வணக்கத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தாங்கள் வணங்கித் துதிக்கும் பெரியாரிடத்தே காணப்படும் அற்பச் செயல்களும், சம்பவங்களும், நடைகளும், விசேஷமான பொருளுடனும் கருத்துடனும் தோன்றுவது இயற்கையே.

தாம் செய்த நூற்கள் நன்கு மதிக்கப்படும் பொருட்டும், சில ஆசிரியர்கள் அந்நூற்களை, சிவன் சொன்னதாகவும், நந்தி சொன்ன காகவும், சுப்பிரமணியர் சொன்னதாகவும் வரைந்து நூர்களை வெளிப்படுத்தினார்கள்.

 

கல்வி முதிர்ச்சியால் சில பெயர்களைக் கற்பித்து விசேஷ சம்பவங்களையும் அற்புதச் செயல்களையும் ஏற்றிச் சில நூல்களை வரைந்து விட்டார்கள். (மயிலிராவணன். ஜீவகன். அல்லி.)

 

பரிசில் கருதிப்போலும் - சில ஆசிரியர்கள் புகழுரைகளை எல்லை கடந்து எழுதிவிட்டார்கள். சில சம்பவங்களின் உண்மையை ஆராய்ச்சி செய்யாது, கேட்டதைக் கேட்டவாறே, உண்மையென நம்பி வரைந்தனர் ஆசிரியர். பெரியார் சொல்லைக் கேட்டு முழு நம்பிக்கையோடு எதிர் வினவாமல் கீழ்ப்படியும் புராண காலமானதால், சிலகற்றறிந்த ஆசிரியர்களும் சில உண்மைகளையும் கட்டுரைகளையும் ஆராய்ச்சி செய்யாமல் அவ்வாறே வரைந்து விட்டனர்.

 

தென்னிந்தியாவில் நிலவி வருகிற சில புராணங்களும் கதைகளும் பெரியார் வணக்கத்தைப் பெரும்பாலும் தழுவியுள்ளன என்று துணியலாம். ஏனைய நாட்டுச் சரித்திரங்களோடும் வரலறுகளோடும் ஒப்பிட்டு மனவேற் றுமையின்றி உண்மையாய் விசாரித்தால் இவ்வுண்மை விளங்கும்.

 

இக்காலத்திலும் கற்றுணர்ந்த சில பெரியார்கள், தாமாக நினைக்கவும், தனி ஏற்கள் செய்யவும் நினைப்பின்றி முன்காலத்திய சில பெரியார்களின் நூலிலும் கவிச்சுவை முதலியவைகளிலும் அளவு கடந்து ஈடுபட்டுக் கரை யேற வகையறிரது ஆழ்ந்திருக்கிறார்கள். உண்மையினை ஆராய்ச்சி செய்யாமல் கட்டுரைகளில் ஆழ்ந்து வந்தார்கள்.

 

பெரியார் வணக்கத்தின் சார்பாக எழுந்த புராணங்களும் கட்டுரைகளும் இந்தியர்களுக்கு அநேக நமைகள் பயந்தனவாயினும் சில இடையூறுகளும் உண்டாகாமலிருக்கவில்லை.

 

கவிகளின் கற்பனைகளினின்றும், புகழுரைகளினின்றும் உண்மையாக நடந்த சம்பவங்கள் எவை, கற்பிதங்கள் எவை என்று வேறுபாடு காண்பது உண்மை ஆராய்ச்சியுடையோர்க்கு அன்றி மற்ற சாதாரண மனிதர்களுக்கு விளங்காமற் போயிற்று. விளங்காமற்போகவே சில கட்டுரைகளிலும், சம்பவங்களிலும் அநேகர் ஈடுபட்டு விட்டார்கள்

 

உண்மையான தேச சரித்திரம் - வரலாறுகள் கிடைப்பது மிகவும் அரிதாவிருக்கிறது. உண்மையை விசாரிக்கப் புகுந்தோறும் மதப்பற்று தேசப்பற்று ஆகியவைகளில் சிறிது ஈடுபட்டு விடுகிறார்கள்.

 

காலங்கருதிச் சொன்ன கட்டுரைகள் எவை, நீதிகளை நிரூபிக்க எழுந்த கட்டுரைகள் எவை, அபிமானம் அல்லது பற்றின் சார்பாகச் சொன்னவை எனை, பெரியார் வணக்கத்தில் சொன்னவை எவையென்று விசாரிப்பார் சிலர்களே என்று துணியலாம். ஏனைய மதங்களின் கட்டுரைகளோடும், மொழிகளோடும், சம்பவங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்து விசாரியாமல், பற்றின் சார்பாய், தன் மொழியையும், சமயத்தையும், கட்டுரைகளையும், கொள்கைகளையும் போற்றிப் புகழ்ந்து கொள்கின்றனர். தமிழ் மொழியானது கம்பரோடும் திருவள்ளுவரோடும் முற்றுப் பெற்றது என்று சிலர்கள் நினைத்துத் தங்களை யறியாமலே அப்பெரியார்களின் வணக்கத்தின் பால் ஆழ்ந்து விட்டார்கள்.

 

உண்மையில்லாதவைகளையும், புகழுரைகளையும், கட்டுரைகளையும், சமயப் பற்று, ஜாதிப் பற்று, தேசப்பற்று, பாஷைப்பற்று ஆகியவைகளினால் எழுந்த உரைகளையும் மறுத்துக் கண்டிக்கப் பெரியார்களும், கற்றறிந்தவர்களும் முன் வருகிறார்களில்லை - இவர்கள் முன்வராம லிருப்பதால் மொழிக்கும் சமயத்துக்கும் பொய்யுரைகள் சாற்றப்படுவது இயற்கையே.

 

தமிழின் பெருமையைத் திருவாளர். பொ. திருகூட சுந்தரம் பிள்ளையவர்கள் ஆராய்ச்சி செய்து வெளிப் பரப்புவது போல், ஒவ்வொரு கற்றறிந்த பெரியார்களும், பற்றும் வேற்றுமையின்றி ஏனைய மொழிகள், சமயங்கள் கட்டுரைகளோடும் ஒப்பிட்டு, உண்மையான சம்பவங்களையும், வரலாறுகளையும் ஆராய்ச்சி மூலமாய் வெளிப்படுத்த வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஏப்ரல் ௴

 

 

No comments:

Post a Comment