Friday, September 4, 2020

 

பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

(ஒரு சிற்றாராய்ச்சி)

 

 ஆன்மாக்கள் வீட்டையும் பேற்றைத்தரும் நான்மாடக்கடலென்னும், முத்தமிழ் விளங்கும் உத்தமமதுரையில் மாலைமகளவியவந்த கவிவாணர்கள், மலைமகள் தலைவர் தந்த, செவ்விய நறவஞ்சேர்ந்த சீரியமொழி யெனும், நம் தாய் மொழியினை நன்காராய்ந்து சிக்கெடுத்தவர் நக்கீரர், கபிலர், பரணர், கல்லாடர், சீத்தலைச் சாத்தனார் முதலிய நல்லிசைப்புலவர் காற்பத்தொன்பதின்மர். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் அப்புலவர் குழாத்துள் நாவீறுபடைத்தவர்களில் ஒருவர்.

 

தாய்நாடென்னும், நம் தமிழகத்தில், ''பெருந்தேவனார்" என்ற நல்லிசைப்புலவர் மூவருளர். அவர்களில் மற்றை இரண்டுபேரினும் வித்தியாசம் விளங்குதற்பொருட்டு, இன்னோர்க்குப் 'பாரதம் பாடிய' என்ற அடைமொழியைக் கொடுக்கப்பெற்றது. அதனால் இவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என்று அழைக்கப்படுகின்றார். மற்றையிருவருள் 'கவி சாகரப் பெருந்தேவனார்' என்பவர் கடைச்சங்ககாலத்தில் இவருடன் ஒப்பவீற்றிருந்து, அமிழ்தினுமினிய ஆனாத் தமிழினை ஆராய்ந்த புலவர். மற்றொருவர் பொன்பற்றியூர் புத்தமித்ரர் செய்த இலக்கணமாகிய வீர்சோழியத்திற்கு உரையெழுதிய பெருந்தேவனார். இவர் பிற்பட்டவர். பாரதம் பாடிய பெருந்தேவனார் அவதரித்த நாடு சான்றோர் உடைத்தென்னும் தொண்டை நன்னாடு. இதனை,


 ''சீருறும் பாடல் பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு
 வீரர்தஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார்
 பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண்
 மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே''


எனத் தொண்டை மண்டல சதகத்தில் பைங்கிளி என்னும் படிக்காசுப்புலவர் கூறுகின்றார். நிற்க, இவர் அவதரித்தநாடு தொண்டை நாடாயிருந்தாலும், இவர் பெரும்பாலும் கவிஅரசாய் செங்கோனடாத்தியவிடம் கன்னி நாட்டின் தலைநகராகிய மதுரையே.

 

பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைசசங்ககாலத்தவர் என்றபடி, இவர் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருடங்கட்கு முன்னர் இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர் அரசன் வாழ்த்தாகப் பாரதத்தின் முதலில் கூறிய,


      "வண்மையாற் கல்வியான் மாபலத்தா லாள் வினையால்
      உண்மையாற் பாராளுரிமையால் - திண்மையால்

தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ
      டியார் வேந்த ரேற்பா ரெதிர் "


என்ற செய்யுளினாலும் அதனையடுத்த கட்டுரையில், ''பல்லவர் கோமான் பண்டிதராலயனைப் பரவினோம்" என்று கூறியிருப்பதனாலும், இவர் தெள்ளாற்றிற் போர்வென்ற பல்லவராசனொருவனது காலத்திலிருந்தவர் என்றும் தெரிகிறது.

 

கடைச்சங்ககாலத்துத் தொகுக்கப்பட்ட நூல்களாகிய எட்டுத் தொகையுள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புற நானூறு என்பனவற்றின் முதற்செய்யுளாகிய கடவுள் வாழ்த்தும், மற்றுஞ் பெருத்யோனா, லான்வியால்னியிலே கலப்படுகின்றது. தாக்கினுங் சில செய்யுட்களும் இவரால் இயற்றப்பட்டன. அச்செய்யுட்களில் பெரும் பான்மையும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைப் பற்றிக் கூறியிருப்பதால், இச்செந்நாப்புலவர் சைவமதத்தைச் சார்ந்தவரென்பது தெற்றென விளங்கும். நம்தேவனார் கடவுள் வாழ்த்தாகக் கூறிய புறநானூற்றில்,

 

'கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

வண்ண மார்பிற் றாருங்கொன்றை

ஊர்திவால் வெள்ளேறே சிறந்த

சீர்கெழு கொடியு மவ்வேறென்ப

கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை

மறைநடு விலந்தணர் நுவலவும் படுமே

பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்

தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்

பிறை நுதல் வண்ண மாகின் றப்பிறை

பதினெண் கண்ணு மேத்தவும் படுமே

எல்லா வுயிர்க்கு மேம மாகிய

நீரற வறியாக் கரகத்துத்

தாழ்சடை பொலிந்த வருந்தவத் தோற்கே''

 

என்ற செய்யுளில் அரவாபரணனுக்குரிய மலரும், மாலையும், வாகநமும், கொடியும், அவர் கடுவுண்டருளிய கருணையும், ஆன்மாக்களுக்காக எடுத்த உருவமும், சென்னியிலே கங்கையும் மதியு மணிந்தமையும், எல்லாவுயிர்க்குங் காப்புப்பூண்டமையும் சொல்லப்படுகின்றது. இச்செய்யுளிலே பெண்ணுரு வொருதிறனாகின் றவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினுங் கரக்கும்" என்ற அடிகளில், படைப்பின் பொருட்டுத் தமது சத்தியை ஒருபாலாக தோற்றுவித்துப் பின்னர் உலகை யொடுக்குங்காலத்தில் தமது சத்தியைத் தம்முள்ளே மறைத்துக்கொள்வர் என்பது தோன்ற நிற்றலின், இவர் சைவசமயத்தின் உள்ளுறைபொருளெல்லாம் தெளிய வுணர்ந்தவ ரென்பது மலை விளக்காம்.
 

நம்புலவர் பெருந்தகையின் குலத்தைப்பற்றிய ஆராய்ச்சியாதொன்றும் புலப்படவில்லை. சிறுபான்மையோர் இவரை வேளாளர் எனக்கூறுவர். |

 

எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு முதலியவற்றின் கடவுள் வாழ்த்தாகக்கூறிய செய்யுட்களும், மற்றும் பொருணயம், சொன்னயம் முதலிய பன்னயங்கள் சொட்டும் செய்யுட்கள் பொருந்திய பாரதமும் தவிர, இவர் வேறு பெரிய ஏற்கள் இயற்றியதாகத் தென்படவில்லை. திருவள்ளுவமாலையில்,

''எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்

செப்பிய வள்ளுவர் தாம் செப்பவரும் - முப்பாற்குப்
      பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

நேர்வனமற் றில்லை நிகர்''

 

என்ற வெண்பாவும், இவர் இயற்றியதே. திருவள்ளுவரின் திருப்பாடலைச் சிறப்பிக்க வந்த இவர் மூன்றாமடியில், இராமாயணம், மனுதருமநூல், வேத நூல் என்பவற்றிற்கு முன்னர் பாரதத்தை வைத்திருப்பதால், இவர் தாம் இயற்றிய பாரதம் என்னும் நூலின்கண், எவ்வளவு பற்றுவைத்துளார் என்பது அங்கைநெல்லிக்கனி.

 

இவரது பாரதம், பாடலும் வசனமும் விரவிவரும் "சம்பு” வென்னும் நடையிலுள்ளது. தொல்காப்பியத்தில்,

 

''தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே.''

(தொல் -நச்சி -பொருள், செய் -சூத்திரம் 550)

 

தொன்மை என்பது உரைவிராய் பழைமையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது. உதாரணமாக பெருந்தேவனார் பாரதமும், தகடூர் யாத்திரையும் காண்கவென்று காணப்படுகின்றது. இதுபற்றியே இந் நூலை 'உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்று கூறப்படும். இந்நூலின் இடையிடையே சிற்சில அகவற்பாக்களும், பொருத்தமுள்ள விருத்தங்களும், காணப்படுகின்றன வாயினும், நூல் பெரும்பான்மையும் வெண்பாவினாலேயே மிளிர்ந்து கிடப்பதால், இதற்குப் பாரத வெண்பாவென வழங்கப்படும். இந்நூலினின்று பெரும்பான்மையான செய்யுட்களைத் தொல்காப்பியவுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியிருப்பதனால், உச்சிமேல் வைத்துப் புகழப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். தேவனார் பாரதம் பன்னீராயிரம் பாடல்கள் பொருந்தியவை என்று கூறப்படினும், தற்போது எண்னூறு பாடல்களே காணப்படுகின்றன. அவை உத்தியோக பருவம் தொடங்கித் துரோண பருவம் வரையிலும் உள்ளவை. இவர் இயற்றிய செய்யுட்கள், சுருங்கச் சொல்லப்பட்டும், விளங்கவைத்தும், நவின்றோற்கு இனிமைதரும் நன்மொழியும் புணர்த்தி,


 "தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே,
 தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலின் தேங்கின்
      றனிப்பாலுஞ் சேர்த்தொரு தீம் பருப்பிடியும் விர
 யினித்தநறு நெய்யணைந்தே இளஞ்சூட்டி னிறக்கி
      யெடுத்த சுவைக் கட்டியினு மினித்திடும்.............''
                (அருட்பா)

 

ம. த. சு. ராமகிருஷ்ணன், மடப்புரம், திருவாரூர் (S. I. Ry.)

 

ஆனந்த போதினி – 1925 ௵ - டிசம்பர் ௴

No comments:

Post a Comment