Saturday, September 5, 2020

 

பெண்ணின் கடமைகள்

 

இதனை ஆராய்வதில் சோர்வுறாதிருத்தல் அவசியம். காலபேதத்தினால் எண்ணம் வேறு படுவதியல்பு. பண்டைக்காலத்தில் பெண் இனம் தலைக்கடமைகளாகக் கொண்டிருந்த பொறுப்புக்கள் அயலாரின் நாகரிகக் கலப்பினால் தற்காலம் இழிவுள்ளவைகளாகக் கருதத்தலைப் பட்டு ஒருநூற்றாண்டுக்குக் கிட்டிவிட்டதென்று கூறலாம். இதற்கு உதாரணமாக வாகவியும் சிவாநுபூதிச் செல்வருமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த பெரியநாயகி யம்மையின் விருத்தமொன்றில்


 "உள்ள மென் மனையில் விருப்பொடு
      வெறுப்பாம் உறுகுழி மேடுகள் நிரவி
 ஒழிவிலா வாய்மை மெழுக்கினாற் பூசி
      உயர்தருமனம் எனப்படுமோர்
 பள்ளிமென் றவிசில் இருத்தி நின்பதியைப்
      பழுதில் யான் எனப்படுநெல்லைப்
 பழமலமாயைத் தவிடும் போக்கிப்
      பாகஞ்செய் தென்றருத்திடுவாய்''


என வருணிக்கப்பட்டிருக்கிறது.

 

இதன்பொருள், உள்ளமாகிய வீட்டில் இயல்பாகவுள்ள மேடுபள்ளங்களைச் சமப்படுத்தி, சாத்தியம் என்னும் சாணங்கொண்டு மெழுகி, உயர் நிலையுடைய மனமாகிய ஆசனத்தில் பரசிவக்கடவுளாகிய நாயகனை எழுந்தருளச்செய்து, நான் என்னுடையது எனப்படும் முனைப்பாகிய நெல்லை அறிவென்னும் உலக்கையினாற் குத்தி, பழமலமாயைகளாகிற தவிட்டினையும் உமியினையும் வேறுபடுத்திப் போக்கி, மெய்யறிவாகிய அதாவது சத்துவகுணமாகும் அரிசியைக் கொண்டு அனுபவமாகிய இன்னடி சிலாகச் சமைத்து, அவரை உண்பிப்பது எந்நாளோ? என்று இரங்குகின்றார்.

 

தாமத குணத்தினாற் றகையப்பட்டுள்ள சீவர்கள் அழுக்கினால் மூடப்பட்ட கண்ணாடியைப் போலவும், புகையினாற் சூழப்பட்ட அனல் போலவும், தெளிவின்றிக் கட்டுண்டு கிடக்கும் சிறுமையை எல்லாம் வல்ல சிற்சத்தியே முற்பட்டுப் போக்க உரியவளென்பதும் அம்மகா சக்தியின் அருள் நியதியின்றி ஆன்மாபாசநிவர்த்தி பெறுதலும் இயலாதென்பதும், இத்தொழிற்பாடு சிவசக்தியின் கடமை யென்பதும் தெளிந்த உண்மைகளே. ஆனால் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் அலியும் அல்லாமல் உலகுயிர்களில் ஊடுருவித் தோய்ந்தும் நோயாமலும் நின்று இயக்குவிக்கும் மனோவாக்கிலடங்காத ஓர் மாபெரும் சக்தியைப் பெண்மை வாசகத்தாற் பேசுவதே, பெண் ஆண் எனும் இருபெருங் கூறுகளும் இம்மைப் பயனைத் துய்த்தற்கு இன்றியமையாத உறுப்புக்க ளென்பதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்க தொன்றாம்.

 

இனி, பெண்கள் இல்லத்தைச் சமநிலையில் குளிர்ச்சியுறப் பரிசுத்தம் செய்வதும், பதியை யுபசரிப்பதும், நெல்லைக் குத்துவதும், உமியையும் தவிட்டினையும் பிரித்துப்போக்கி வாலிய அரிசி எடுப்பதும், அதனைப் பதங்கெடாமல் சமைப்பதும், அன்புடன் அனைவர்க்கும் ஊட்டுவதும் தமது சிறந்தகடமைகளாகக் கொண்டிருந்தனர் என்பதும் இவ்விருத்தத்தினாற் பெறப்படும் வெளிப்படையான கருத்துமாகும். கைக்குத்து அஞ்ஞான்று பெரியமனிதர் என்று சொல்லப்படும் தகுதியாளர் வீட்டுப் பெண்டிர்களுக்கும் சாதாரண அபிப்பியாஸத்திலிருந்த தென்பதை இன்றும் மிக முதியார் பால் கேட்டுணரலாம். காலக்கிரமத்தில் அத்தொழில் வயிற்றுக்கு இல்லா வறியோர் தொழிலாய் எண்ணப்பட்டு விட்டது. அத்தொழில் கையாளப்பட்டு வந்தகாலத்தில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற மகிழ்வும் சுகமான மகப்பேறும் நாட்டில் இடம்பெற்றுக் கலைஞானமும் தவயோகமும் தாண்டவமாடின.

 

இருபத்து நான்கு மணி நேரமும் மூளைக்கே வேலை கொடுத்து வரும் தற்கால நாகரிகக்கல்வி கற்ற பட்டதாரிணிகள் இக்காலத்தில் பெருகி வருகின்றனர். இவர்கள் உடல் நலம் சிறிதுமின்றிப் பிணிக்கூடாகி ஆயுள் நீட்சியையும் இழக்க நேருகின்றது. உடல் உழைப்பு ஒன்றினாலேயே இரத்த ஓட்டம் பெருகி உள்ளுறுப்புக்களும் வெளியுறுப்புக்களும் உரம் பெற முடியும். சரீர வுழைப்பினால் மனதில் இன்பம் எழுவதியற்கை. மூளை யுழைப்பினால் கவலையும் துன்பமும் வெறுப்பும் விளைவது அனுபவம். இரண்டும் வேண்டற்பாலவைகளே. அவசியமான இரண்டில் ஒன்றைப் புறக்கணித்து முன்னேறுவதாகக் கனாவுலகில் எண்ணி வசிக்கும் தற்கால நாகரிகமாதர் நிலை பெரிதும் பரிதபிக்கத் தக்கதே. உத்தியோக மோகமோ? பிராப்தமோ? உள்ள பெண்மணிகள் தான் மேலே கூறிய கடமைகளிலிருந்தும் வெகு தூரம் போனவர்கள் என்பதில்லை. மனைவாழ்வு நடத்தும் பெண்களும் கடமைப் பயிற்சிகளில் கவனம் செலுத்துவதில்லை. நெல்லை குத்துவதோடு நில்லாமல் தவிடு உமிபோக்கும் பணியும் இக்கவியில் வற்புறுத்தப்படுகிறது. இக்கருத்து மிக மிகப் போற்றற்குரியதாகும். தற்காலம் உள்ள இல்லறத் தலைவிகளில் ஒருவர் கூட தவிடு உமிபோக்கவும், கற்கள் பிரிக்கவும் அனுகூலமான பயிற்சியை அறிந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இதனைப் படிக்கும் சகோதரிகள் இக்கட்டுரையில் உண்மை யுண்டென்றே கொள்வர் என்பதென்உறுதி. மேல் வகுப்பினரென்று வழக்கிலிருந்து வரும் பிரிவினர்களில் ஆசாரம் என்ற காரணங்காட்டி அவலைத் தாங்களே இடிப்பதும் புடைப்பதும், கல்நீக்குவது முதலிய யாவும் கூலியாளர் உதவி நாடாமல் செய்து வரும் வழக்கம் இன்றும் பெரும்பாலும் நிலவி வருகின்றது. பிரதான நகரங்களில் இம்முறை மறையத் தலைப்பட்டு விடினும் வெளிநகரம் கிராமம் முதலிய இடங்களில் இந்நிகழ்ச்சி சாதாரணமாய் உயிர்பெற்றிருக்கின்ற தென்பதை மறுப்பதற் வெளியுறுப்பு ஒன்றினாலோதி ஆயுள் ஒருன்றும் பெரும் பட்டு விடினும் இவற்றிருக்கின்ற தெகில்லை. உடல் உரம் பெருக வேண்டியே இத்தகைய கட்டுப்பாடு ஆதியில் ஏற்பட்டதோ? யாதோ? அறியோம். அங்ஙனம் அவ்வாறு ஏழுங்குமுறை வகுத்துக்கொண்ட நுண்ணறிவை நாம் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு போற்றுவதற்கு மாறாகப் பிந்தின வகுப்பினர்கள் தங்களைப் பகிஷ்கரிக்கும் ஓர் செருக்கினால் இப்படிச் செய்வதாகச் சிலகாலமாய்த் தூற்றவும் வாய் கூசுவதில்லை. எல்லா இதர வகுப்பினரிலும் கூட தெய்வத்திற்குப் பூசை போடுவதென்னும் கொள்கையும் அதற்கு வேண்டிய அரிசியைத் தாங்களே குத்திக் கொள்ளுதல் வேண்டும் என்னும் கட்டுப்பாடும் இருந்து வருகின்றது. இதன் காரணமும் சரீர உழைப்பிற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென்பதே யென்று கொள்ளுவது அறிவுடைமை யாகும்.

 

முன்னேறிவரும் நிலையினின்று பின்னே செல்லும்படி சொல்வதாக இதனைப் படிப்போர் பெரும்பாலும் வெறுப்பர். ஆனால் எது முன் எது பின் என்பதை அநுபவந்தான் உணர்த்தும். சிவப்பிரகாசர் கூறிவிட்டால் அதனை ஏற்க வேண்டுமா? என்றும் வினா எழலாம். பழந்தவப் பயனைத் துய்க்கவேண்டி கருவிலேயே திருவுடையவராய்த் திகழும் பெரியார்களில் ஷ சுவாமிகளும் ஒருவர் என்பது சரிதம் உணர்ந்தோர்க்கு விளக்கம். பன்னிரண்டாண்டில் திருவருணகிரியை வலம் வரத் தொடங்கியதிலிருந்தே அவர் வாக்கிலிருந்து கவிமழை பொழிய ஆரம்பித்ததாகும். அன்னார் வாக்கிலிருந்து வெளிவரும் கருத்துக்கள் யாவும் உலகுய்ய வேண்டிப் பராசக்தியின் பெருங்கருணையின் குறிப்புக்களென்றே அறிவுடையோர் போற்றுவர். தெய்வமணர்கலவாத தற்காலப் புலவர்கள் மிகுதியும் பாராட்டப்படவில்லையே என்று தற்கால இளம்புலவருட் சிலர் வருந்துகின்றனர். மகாத்மா காந்தியடிகளின் கருத்துக்களே வெற்றி பெறுகின்றதே எனப் பொருமுவோர் சிலர் நம்மிடையில் உளர். அதற்கே மேலே கண்ட உவமை பொருந்தும். தெய்வத் திருவருளில் மூழ்கி நிற்கும் பெரியார் வாக்குகளும் கருத்துக்களும் எப்போதும்வாடா மலர்போல் மலர்ந்தே விளங்கும். அந்நுட்பம் சிந்திக்கப்படுமேல் காரணம் விளங்கும். எனவே பண்டு தொட்டு வந்த அருங்கடமைகளை இன்னதென்றறியாத தற்கால யுவதிகள் அமைக்கும் உணவில் நெல்லையும் கல்லையும் நீக்குவது உண்பவர் நாவின் வேலை. இயந்திர தேவதை நாட்டில் இடம் பெற்றநாளிலிருந்து வறுமையைக் கைக்கூலிக் குழைப்பதினால் சமாளிக்கும் நிலையினர்களும் கைத்தொழில் மறந்து, உடல்வன்மை யிழந்து, பட்டினியால் பரதபிக்கின்றனர். இப்பசிப்பிணி மன்னுயிரை வாட்டும் கொடுமையைக் கடவுள் திருவுளமே சகியாதன்றோ - காந்தியடிகளின் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு உய்வழி கோலுகின்றார்.

 

நமது மாகாணத்தில் சுமார் 50 - ஆண்டுகட்கு முன் நீதிபதியாயிருந்த ஒரு உத்தமர் தினமும் அதிகாலையில் ஏற்றம் இறைய்பதை ஒரு முக்கிய கடமையாக ஏற்று வந்தனர் என்பதைப் பலரும் அறிவர். உடல் உரம் உழைப்பினாலேயே வளர்வதென்பதும், அதனைப் பெருக்குவதே பிரதானம் என்பதும் உட்கொள்ள வேண்டு மன்றித் தொழிலில் பெருமை சிறுமை என்று எண்ணுதல் மடமை. கௌரியை உரலை அலங்கரித்து அதன்மீது கலசம் வைத்துப் பூஜிப்பது ஒரு நோன்பாக இன்றும் சில மரபுகளில் நடந்து வருகிறது. முன்னோர்கள் கொண்ட முறையெல்லாம் அப்படியே கொள்ள வேண்டு மென்பதில்லை. நமக்கு நிலையான நன்மை தரும் கடமைகளைக் கைவிடாமலிருக்க வேண்டுவது அவசியமன்றோ? இரத்த நரம்புகள் முறுக்கேறி ஓட்டம் பெருகு விலங்கள்லாம் வெய்யாத ஒடுகின்றது இரண்டுனையும் தேடி வேலை செய்ம் சதுப்பு இதைவிடல் வதற்கு உரித்தல்லாத வகையில் பல விளையாட்டுகள் நாகரிகப் பெண்களால் விரும்பப்படுகின்றன. இப்போலி எண்ணம் தொலைய வேண்டும். மிகமிகத் தொன்மையான கிராமங்களி லெல்லாம் ஏழைப் பெண்கள் தற்காலம் வீட்டு உபயோகத்திற்காக வேண்டிய சில படிக்கணக்கான தானியங்களையும் தாங் களே குத்தி அரிசி காண்பதை விடுத்து இரண்டுமைல் தூரத்தில் உள்ள தாயினும் நெல்மிஷினை நாடி ஓடுகின்றனர். இதைவிடப் பரிதாபம் வேறில்லை. பகலெல்லாம் வெய்யிலிலும் சதுப்பு நிலங்களிலும் கரடுமுரடான புன்செய் நிலங்களிலும் வேலை செய்துவந்த பெண்களெல்லாம் நெல் அரைக்கும் மெஷினையும் தேடிச் செல்லத் தொடங்கி விட்டனர் என்றால், நகரவாச நாரீமணிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? நாட்டில் ராட்டினம் ஒன்று மறைந்து நாசத்தைப் பரவச் செய்தது ஒன்றல்ல கேடு. நெல்லரைக்கும் மெஷின்களும், மாவு அரைக்கும் இயந்திரங்களும் பரவி பெண்கள் தொழிலை மறக்கச் செய்துவிட்டன. உடல் உழைப்பின்றித் தற்காலப் பெண்கள் பிணிக் கட்டுகளாகி விட்டனர். கரண்டி யெடுக்கவும் கையில் வன்மை குன்றியது. சுவாமிகள்செய்யுளில் மெழுக்கிடுவதும் பெண்கள் கடமையாகக் காட்டுகிறார். அந்தோ? நகரங்களில் சாணத்தைப் பரிசிக்கவும் கூசும் பெண்களே மலிந்து விட்டனரே. தவிர ஸ்டௌ என்றழைக்கும் ஆங்கில அடுப்புகளால் எங்கும் ஸ்பிரிட் மண்ணெண்ணெய் உதவியால் தீயுண்டாக்கப்படுகின்றது. அவைகளில் ஆகார முதலானதும் தயாரிக்கப்படுகின்றன. உடல் உழைப்பும் இன்றி உணவமைப்பிலும் இம்முறை புகுத்தப்படுவதால் இத்தகையார் உண்பது நஞ்சேயன்றி வேறென்ன? இந்த ஆங்கில அடுப்புக்குச் சுத்தி யென்பது வஸ்திர சுத்திதான். தண்ணீர் தேவையில்லை. மெழுக்கிடுவதற்கு மண்ணடுப்பன்றோ தேவை. மண்ணையும் சாணத்தையும் அருவருக்கத் தக்க பொருள்களாக எண்ணப்பட்டு வரும் போது மெழுக்கிடுவதற்கு மார்க்கம் என்ன? சென்னையில் குழாய் ஜலத்தினைப் பிடித்து பணிப்பெண்கள் சாணம் சம்பந்தமில்லாமல் ஊற்றிக் கழுவுவதும் அதன் பேரில் பழஞ் சுவரின் சுண்ணாம்புக் கட்டிகளைத் தூளாக்கிக் கோலம் இடுவதும் அதிர்ஷ்ட தேவதையையும் ஆசார தேவதையையும் அந்தமான் தீவுக்கு அனுப்பியதற்கு அடையாளமாகும். நம் நாடு சுதந்தரம் எய்தினும் மேலே சுட்டிய மெஷின்கள் எல்லாம் முற்றிலும் எடுபடவேண்டும். பெண்கள் அநாகரிகமான புதிய முறைகளைக் கைவிட்டு சுத்தமாகவும் ஆடம்பரமின்றியும் கடமைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

 

அஸ்ஸாம் நாட்டில் இன்னும் விவாகமாக வேண்டிய பெண்ணின் கையால் நூற்ற நூலை நெய்த ஆடையே மணமகனுக்களிப்பது வழக்கமாம். அம்முறை இந்நாட்டிலும் பரவுதல் வேண்டும்.

 

எந்திரம் என்னும் மாவரைக்கும் கருவிகள் தற்காலம் சபர்மதி, பார்டோலி ஆசிரமங்களில் தான் இருக்கின்றன என்பது மிகையாகாது. இந்தியாவிலுள்ள எல்லாப் பெண்களும் வீட்டு இயந்திரங்களாகிற உரல், அம்மி, எந்திரம் இவைகளை உவப்புடன் தொழுது முன்போல் ஏற்றுப் பெருமையுறுவார்களாக. அந்நியர் ஆள்வது ஆடவர்களை. அந்நிய மெஷின்கள் ஆள்வது பெண்கள் சமூகத்தினை. எந்த நாடும் பெண்களின் உரிமை கடமைகளை இழக்கக்கூடாது. இழந்தால் நாடு பிறகு மீளாது. ஆண்கள் வழிதவறினால் திருந்துவது எளிது. பெண்கள் பிழைப்பின் உய்வில்லை - கட்டிடத்தின் மேல்வாரம்கிலமானால் புதிதாக வேயலாம். அஸ்திவாரம் ஆடினால் வீழ்ச்சிதான். ஆகவே பெண்கள் கடமைகளை ஏற்பார்களாக - விழிப்பார்களாக.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment