Friday, September 4, 2020

 

பண்டைத் தமிழர் நீதிமுறை

(“பாபுவாசன்.'')

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்ற வானிலும் தனி சிறந்தனவே.'' - பாரதியார்.

 

பண்டைக் காலத்தில் நடந்த அரசியல் நீதி முறையைப்பற்றி அதிகமாக அறிந்து கொள்கக்கூடிய வசதிகள் தற்காலத்தில் கிடைக்காமல் போனாலும், சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன் இருந்த தமிழர்களுடைய நீதிமுறையைத் தமிழ் நூல்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

பழமையான காலத்திலே நம் முதாதையர்கள் மிகவும் சிறந்த நீதி மான்களாகவும், கள்ளம், கபடு, சூது முதலியன அற்ற தூய சிந்தனைகளும், தரும நினைவுகளு முடையவர்களாகவும், லெளகிக விவகாரங்களில் ஜாக்ரதை யுடையவர்களாகவும், சத்திய நெறியினின்றும் சிறிதும் விலகாதவர்களாகவும் இருந்தனர். தகராறும், சந்தேகமும் கொடுக்கக்கூடிய சமாசாரங்களில் விட்டுக்கொடுத்து சமாதானம் தேட முற்பட்டார்கள். இவ்வித குணமுள்ள மானிடர்களைப்பற்றி குறுந்தொகை (285) பாட்டில் உணரலாகும்.

"பண்டு தாமறி செம்மை சான்றோர் கண்ட

கடனறி மாக்கள்."

 

இந்நாகரீக காலத்திலும் பொய், சாவு, வஞ்சகம் முதலியவை எவ்வாறு
கூத்தாடுகின்றனவோ, மற்றும் போலீசார்களும், நீதி மன்றத்தார்களும் நடந்தேறியதை, நடப்பதை நடக்கவில்லை யென்றும், நிகழாதவைகளை நிகழ்ந்ததாகவும் எவ்விதம் பொய் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கிறார்களோ அவ்வண்ணமே அக்காலத்தும் ஊர்க்காவலதிகாரிகள் கண்டவைகளைக் காணவில்லை யென்றும், பார்க்காததொன்றைப் பார்த்ததாகவும் உறிப் பொய்சாட்சியமும் குற்றமும் ஏற்படுத்த முயன்றதும் உண்டு. கவித்தொகையுடையார் இவைகளைப் பாடல் (81-ல்)

"ஏதப்பாடெண்ணிப் புரிசை வீயலும்போர்

கள்வரைக் காணாது கண்டோமென்பார் போல”

எனக் கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவுதான் தங்காது ஆராய்ச்சி சாமர்த்தியத்தினால் எந்தக் காலத்தும் எந்த நாட்டிலும் சத்தியம் தான் நிலைத்திருந்தது
தது என நிரூபிக்க இயலாது. மாத மும்மாரி பெய்துவந்த கற்புக்கண்ணகி
வாழ்ந்த காலத்து வஞ்சனை செய்த பொற்கொல்லன் வாழ்ந்தது ஒரு சாட்சியன்றோ!

ஆகையினால் காலப் போக்குகளை ஒத்திட்டுப் பார்ப்பின் அவ்வாதி காலத்திலும் இப் புவியிலுள்ள எந்த நாட்டினரையும், எம் மதத்தினரையும் விட நம்நாட்டில் தமிழ் மக்களிடையே சத்தியத்துக்கும் உண்மைக்கும் கௌரவமும் மதிப்பும் அதிகம் வைக்கப் பட்டது என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.

"உள்ளத்தின் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்.”


என்றபடியும் வாழ்ந்து வந்தனர்.

வியாபாரம்தான் பொய், களவு, வஞ்சகம் முதலிய தீச் செயல்களுக்குக் காரணம் என்றிருந்தும் அவைகளில் ஈடுபட்டுப் பொருளீட்ட முற்பட்ட வணிகமக்களே நடுநிலை நின்று, பொய் கூறாது, தாம் கொடுப்பதிறும் அதிகம் கொடாது, பெறுவதிலும் அதிகம் பெறாது சரி விலையாக விற்று வந்தாரெனின் அக்காலத்திலே வாழ்ந்து வந்தவர்கள் எவ்வளவு தூய்மை யுடையவர்கள் என்பதை,

"நடுவநின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய் மொழிந்து

தமவும் பிறவு மொப்ப நாடிச்

கொள்வது மிகக் கொளாது

கொடுப்பரடங் குறைபடாது

பல்பண்டம் பகர்ந்து வீசர்

தொல் கொண்டித் துவன் றிருச்சை."    (207-212)

என்று பட்டினப்பாலை வருணிக்கிறது.

இருந்தபோதிலும், எங்கும் சத்தியமேதான் அந்நாட்களில் கொந்தளித்து, ஈசன் தனது மதிக்கத்தகாத வலிமையால் இனிது உண்டாக்கிய இத் தாணியை கொடுநரகமாக்கி நம் ஜீவியத்தைக் கெடுத்துப் பாழாக்கும் அசுத்தமான அழுக்காறுகள் அக்காலத்தில் நிலவி யிருந்தன, அக்காலத்திலும் நகரங்களில் தீயோர் குடிகொண்டிருந்தனர் என்பதை, இடைக்
குன்றூர்க்கிழார்,

''ஒருவனை யொருவ ளடுதலுங் தொலைதலும்

புதுவ தன்றிவ் உலகத் தியற்கை.

என்ற பாட்டில் அறிவிக்கிறார்.

மேலும், பண்டைய ராஜ்யங்களாகிய எகிப்து, உரோமாபுரி முதலிய அரசாங்கங்களில் நடந்த துரைத்தனத்தைப் போலவே நமது தமிழ்நாட்டிலும், நியாய வீதிகளும், சட்டதிட்டங்களும் தொகுத்து வைக்கப்படவில்ல்லை. யதேச்சையாகவே தன்னிட்டப்படி மன்னன் முரசடித்து அறிவித்தவை யாவம் சட்டமாயின. அரசன் ஆணைதான் சட்டம்; அவனே தான் நியாயத்தை வகுத்தவன்; தண்டிக்கவும் மன்னிக்கவும் வல்லவன்.

அவர்கள் செலுத்திய நீதி ஆட்சி மதுரைக்காஞ்சியில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது. அது

"அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாங்கி

            ......................................................................................

            ......................................................................................

 

            ......................................................................................

            என்று தீதுல் கண்டாய்ர் தடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்து."

 

என்பதாகும். அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு முறை வேண்டினோர்க்கும், மிடிபினால் குறை வேண்டினார்க்கும் எளிதில் முன்னின்று அறம் நாட்டினோர் அக்கால அரசர்கள். அவர்கள் தாங்களே மாறுவேடம் பூண்டு ஊரைச் சுற்றிப் பார்த்து, மக்களுக்கு வேண்டிய நலன்களை ஆலோசித்து, அவைகளை நிறைவேற்றினர்.

அந்நாட்களிலும் நியாய மன்றங்கள் இருந்தன. அம் மன்றங்களில் நீதிபதி ஒருவித தலைப்பாகையையும், நீண்ட அங்கியையும் அணிந்து தன் ஆசனத்திலமர்த்து, நியாய முறைகளைச் சீர் தூக்கி ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லுவது வழக்கம். மதுரைக்காஞ்சியிலே,

“அவிர் துகின் முடித்து

என்றும் தீதுக் கண்டாய்ந் தடக்கி

யன்புமற்று மொழியாது காத்துப்

பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களை.''                                        (494-498)

என வருணித்திருக்கிறது.

இவ்விதமாக நியாயங்களும் சட்டங்களும் தொகுக்கப்படாம லிருந்ததால், மாந்தர் மனச்சாட்சியே கன்றுக் மீதும் நியாயா நியாயமும், கண்டறிதற்குக் கரியாக கின்றது. இவை பிவை குற்றங்கள், இவ்விவற்றைச் செய்தல் தகாது, இவை பிவை புரிவார்க்கு இவ்விவ்வித தண்டனை விதிக்கப்படும் எனத் தொகை செய்து, நியாயவரம்பு ஏற்படுத்தப்படவில்லை. என்றாலும் அதிகச் சிரமமில்லாமலும் எந்தவிதச் சிலவும் அதிகப்பட்டுத் தோன்றி நில்வாதவாறு குற்றங்களைத் தடுக்க அவற்றிற்கு ஏற்பட்ட தண்டனைகளும் தெரிந்திருந்தன. உதாரணமாக, களவு செய்வாருக்குக் கொலை தண்டனை
விதிக்கப்பட்டு வந்தது. தமிழ்நூல் வல்லார் இளங்கோவடிகள் அருளிச் செய்த செஞ்சொல்வளஞ் சிறந்த சிலப்பதிகாரத்தின் கண், காவலன் அரசியினது காற்சிலம்பைக் கவர்ந்து சென்றான் கோவலன் தான் என்று அவனைக் கொணர, உடனே அதிபன் அவனைக் கொன்று விட ஆக்ஞையிட்டான். கற்பிற்சிறந்த கண்ணகி, பிறகு மன்னன் கோயிவடைந்து வழக்குரைத்துக் கடிந்த சமயத்திலும்,

"கள்வனைக் கோறல் கடுங்கோலன்று

வெள்வேற் கொற்றங்காண்''

என்று தான் மன்னன் அஞ்சாது விடையிறுத்தாண்.

வேறொரு சம்பவமும் பின் வரும் குறுந்தொகை செய்யுளில் கூறப்படுகிறது.

"மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை

புன்றரு பங்காய் தின்றதன் றப்பற்

கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன் செய்பாவை கொடுப்பவுங் கொள்ளான்

பெண் கொலை புரிந்த நன்னன் போல

வரையா நிரையத்துச் சலீஇயரோ வன்னை"

 

மறுபடியும் இப்பேர்ப்பட்ட குற்றங்களே தலை யெடுக்கா வண்ணம் வேரறுக்க, இக் கொடுமையான தண்டனைகளும், இலஞ்சம் வாங்க முற்படாத மன்னனும் இன்றியமையாதவையன்றோ?

திரும்பித் தருவதாகப் பொருள்களையும் கடனையும் பெற்றுத் திரும்பித்
தரவேண்டிய கடமையும் இருந்து வந்தது. அவ்விதம் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித்தர மாட்டாதவர்களுடைய பொருள்களைப் பிடித்து விலை பேசி வட்டிக்காகவும், முரலுக்காகவும் வரவு வைத்துச் கொள்வது நடவடிக்கையில் இருந்தது. இதைக் கலித்தொகை யுடையார்?

"கண்டபொழுதே கடவரைப் போலநீ

பண்டம் வினாய படிற்றாற் றொடீஇயதிற்

கொண்ட தெவனல்லா யான்"

என்று நமக் கறிவிக்கிறார்.

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அதற்கு பின்வருமாறு உரை கூறிச் செல்கின்றார்.

"தனிசு கடவாரிடத்துக் கொடுத்தவர்கள் அவரவர்களுக்குள்ள பண்டங்களை உசாவுமாறு போல நீயும் என்னிடத்திலுள்ள பண்டங்களை இவைகள் யாவை என்று கேட்ட வஞ்சனையினாலே எனது வட்டியைப் பிடித்ததற்கு, ஏடா | மின்னிடத்திலிருந்து யாங்கள் பெற்றுக்கொண்ட பொருள் எப் பொருள்? என்றான்."

இங்ஙனமாக நமது திராவிட சமூகத்திய நீதி முறையும் நியாய முறையும் விசாலித்ததாகவும், ஊர்ஜிதமாக இல்லாமற் போயினும், அக்காலத்திய நீதிபதிகளும், மன்னர்களும் மிக்கவும் நியாயா நியாய வரம்புகளுக் குள்ளடங்கியவர்களாகவும் இருந்தனர் என்பதை நிரூபிக்கப் போதுமான சான்றுகள் தமிழ் இலக்கியத்திலே மலிந்து கிடக்கின்றன, பொன்னும் நாலுவிதப் படைகளும் கொடுப்பதாகக் கூறியும் மனஞ்சலிக்காது தன் நெறி நின்று தண்டம் நிறுவிய மன்னன் நன்னன் கதையை யறிவோம் நாம். தான் இளைஞன் என்றதிலே தன்னிடம் நீதியினின்றும் நழுவுதல் கூடும் என்று பயந்தனர் குடிமக்கள் சிலர் என்று செவியுற்று தான் மாறு வேடம் பூண்டு நரை முடித்து விவகாரம் கேட்டு தம் முது மக்கள் அகமகிழ முடிவு கண்ட சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பற்றி,

“இளமை நாணி முதுமை யெய்தி

உரை முடிவு காட்டிய உரவோன்"

என் மணிமேகலையும்,

''உரை முடிவுகாணான் இளமை யோன் என்ற

நரை முதுமக்கள் உவப்ப - நரைமுடித்து

சொல்லால் முறை செய்தான் சோழன்''

என பழமொழியும் வியந்து பாடுகின்றன.

ஏதாவது ஒரு வழக்கில் முடிவு கண்ட பிறகும், தாம் பார்த்ததுதான் உண்மை, கொண்டதே முடிவு, அது தான் சட்டம் என்ற வீண் பிடிவாதம் காணப்பட வில்லை. அரசர் கூட தன் தவறுதலை அறிந்து தம்மாலியன்றவரை நீதி செய்து தம் தப்பிதத்தைப் பாகுபடுத்த முயற்சித்தனர் என்றும், அவ்விதம் இயலாத போது பெரிதும் பச்சாத்தாபமுற்று வருந்தினர் என்றதையும், கண்ணகி கதையில் அறியா திழைத்த அபராதத்தின் பயனாக உயிரை மாய்த்துக்கொண்ட மதுரையம்பதியின் முடிவால் நாம் நன்கதிகிறோம். தான் காற்சிலம்பிற் பதித்திருர்தவை வைர மணிகன் என்று கூறித் தன் மற்றக் காலினின்று நூபுரத்தைக் கழற்றிக் காட்டிச் சோதிக்கச் செய்த பொழுது அதிபன் என்ன செய்தான்? நான் செய்தது செய்து விட்டேன்; இனிமேல் என் செய்வது? என விடை பகர்ந்தனனா? அல்லது
நான் அறியாது செய்து விட்டேன்; அம்மணி! என்னை மன்னிப்பாயாக! என்று வஞ்சகத்துடன் பதிலளித்து நின்றானா? இல்லை. பின்:

“மணிகண்டு ......................."

தாழ்த குடையான் தளர்ந்த செங்கோலன்

பொன் செய்கொல்லன் றன்சொற் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்!

மன்பதை காக்குந்தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது! கெடுகவென் னாயுவென

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே!                                 (சிலப்பதிகாரம்.)

 

மநு நீதிச் சோழன், மைந்தன் கன்றின் மீது தல ஏற்றினதால் கன்று இறந்தது. மன்னன் குற்றஞ் செய்ததும் தன் மகன் தானே என்றும் பகுத்தறிவில்லாத பாவுக்கு என்ன நியாயம் தெரியும்? என்றும் வானா இருந்தனனா? இல்லை. நியாயம் தான் பெரியது என்று தானே ரதத்தின் மீதில் சென்று அத் தேரின் சகடத்தின் கீழ் எங்கு
கன்று இறந்து கிடந்ததோ அங்கேயே தன் மகனைப் படுக்கச் செய்து அவன் மீது
எற்றினான்.

பின்னும் குலசேகரன் என்ற பாண்டிய நாட்டு மன்னன் ஒரு நாளிரவு
ஒரு அந்தணனின் வீட்டின் கதவைத் தட்டிய குற்றத்திற்காக, தன் குடிகள் சொன்ன நியாயப்படி தன் வலது கரத்தை வெட்டிக் கொண்டான். இதனால் பிரஜைகளின் தீர்ப்புப் பிரகாரம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்று அறியலாம்.

இக் காலத்தில் போல சட்டங்களும், சட்ட முறைகளும், சாத்திரங்களும் தொகை பெற்றோறாத அப் பண்டைய நாட்களிலே, இவ்விதமாக மக்களிடையே பலவந்தமாகப் புகட்டப்பட்டு வந்த நீதிகளை நமக்கு அறிவிகும் பொருட்டுச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சில அடிகளை இங்கு மேற்கோளாகக் கூறி முடிக்கிறேன். இந் நீதிப் பாக்கள் தான் அக்கால தரும சாத்திரத் தொகுதிகளாகப் பாவிக்கப்பட்டன.

"தெரிவுறச் கேட்ட திருத்தகு நல்லீர்

பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்,

தெய்வச்தெளியின், தெளிந்தோர்ப் பேணுமின்,

பொய்யுரை யஞ்சுமின், புறஞ்சொற் போற்றுமின்,

ஊனூண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்,

தானஞ் செய்மின், தவம்பல தாங்குமின்,

செய்ந்நன்றி கொல்லன்மின்டி தீநட் பிகழ்மின்,

பொய்க்கரி போகன்மின், பொருண்மொழி நீங்கன்மின்,

அறவோ ரவைக்களம் அகலா தனுகுமின்,

பிறவோர வைக்காம் பிழைத்துப் பெயர்மின்,

பிறர்மனை யஞ்சுமின், பிழையுயி ரோம்புமின்,

அறமனை சாமின், அல்லவை கடிமின்,

கள்ளுங்க ளவுங் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரயினிலொழியின்,

இளமையுஞ் செல்வமும் யாக்கை நிலையா,

உள்நாள் வரையா தொல்லுவ தொழியாது,

செல்லூர் தேளத்துக் குறுதுணை தேடுமின்,

மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென."

 

மானிட சமூகம் இதுநாள் வரை வளர்ந்து ஓங்கி நின்றதற்கு இவ்வற வுரைகள் தான் ஆதிபீடம்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment