Sunday, September 6, 2020

 மார்கழி மாதத்தின் மகிமை

 

நம்மிந்திய நாட்டிலே, ''வடவேங்கடர் தென்குமரியா யிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்'' என்றும், ''நெடியோன் குன்றமுந்தொடியோள் பௌவமும், சமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு' என்றும் புலவர் பெருமக்களால் சிறப்பித்துக் கூறும் பெரும்புகழினை வாய்ந்த நந்தமிழகத் துள், மாதர்க ளெல்லாவற்றிலும் மார்கழி மாதமே மிகச் சிறந்ததென்பது நமது சைவ, வைணவ, வைதிக சமயத்தார்களது கொள்கையாம். இம்மாதத்தைத் தனுர் மாதமென்று கூறுவது. மிருகசீர்ஷ நட்சத்திரமும் பௌர்ணவியும் கூடுவதால் இம்மாதம் ''மார்க சீஷ'' அல்லது மார்கழி என்று கூறப்படுகிறது.
இம் மாதத்தைத் தனுர் மாதகூறுவது வடநூல் வழக்கு. “உததம வானோர் தம்மு ளுத்தம னாகுமீசன்' என்றபடி தேவர்களித் தலை சிறந்தவன் சிவபெருமானே யாதல்போல, மாதங்களில் மார்கழி மாதமே மிக்க சிறப்புடைத்தென்பது நம்மனோர் மனக்கிடக்கை.
இதுபற்றியே கீதாசாரியராகிய கிருஷ்ண பரமாத்மாவும், "மாதங்களுள்ளே யான் மார்கழி மாதமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். வாரங்களிற் சிறந்தது சோமவாரமென்று கூறப்படுகிறது சில அறிவிலாப்பேதை மக்களால், இம்மாதம் பீடைமாதமெனவும், பீடை நாட்களெனவும் சொல்லப்படுகிறது. பீடைகழியும் நாள் அல்லது பீடைகழியும் மாதம் என்பதை, மெய்யினைப் பொய்யெனு மிவ்வுலகம் பீடை நாளெனவும், பீடை மாதமெனவும் இழித்துக் கூறுகின்றது. உண்மையில் அம்மாதமே மிக்கபுனிதமாகவும், சிரேஷ்டமாகவும் பண்டைய நூல்களில் ஆன்றோர்களால் கூறப்படுகின்றது. இராவண சம்மாரம் மாசிமாதத்திலும், திரிபுரசம்மாரம் ஆடி மாதத்திலும், இரணிய சம்மாரம் புரட்டாசி மாதத்திலும், பாரதயுத்தம் மார்கழி மாதத்திலும் நடைபெற்றதாக சுருதிகள் கூறுவதால், இம் மாதங்கள் எதனமாகச் செய்யும் சுப காரியங்களுக்கு விலக்கென்று நமது முன்னோர்கள் வரையறுத் திருக்கின்றனர். அதைக் கொண்டுதான், இவர்கள் மார்கழி மாதத்தைப் பீடை நாளெனக் கூறுகின்றனர் போலும்.
இதைத்தவிர இவர்களுக்கு வேறே யாதொரு ஆதாரமும் கிடையாது. இது மிகவும் அறியாமையின் பாற்பட்டதாகும்.

 

ஒரு சிலர் கருதுகிறபடி கூறுகிறபடி இம்மார்கழி மாதமானது பீடை நாளாயின், இம்மாதம் பிறந்தது முதல் முடிவு வரையில் தினந்தோறும் பிராதக்காலத்தில் சகல இந்து தேவாலயங்களிலும், தனுர்மாத பூஜையென்று கடவுளுக்கு அபிஷேக ஆராதன அன்ன நைவேத்திய அர்ச்சனையாதிய சிறப்புகள் மிக்க கு தூகலத்துடன் ன் நடைபெறுகின்றன? அதிகாலையில் நமது ஆலயங்களில் மேளவாத்தியம், உடல், நமரி, பேரி, சின்னம், டமாரம் முதலிய பல வாத்ய கோஷங்கள் முழங்கப்படுவதேன்? திருப்பள்ளி யெழுச்சி, வெம்பாவை யோதல் முதலிய கிரியைகள் தெய்வ சந்நிதானங்களில் ன் செய்விக்கப்படுகின்றன? இந்துக்கள் வீடுகள் தோறும் விடியற்காலையில், அறிவுசான்ற பெரியோர்களாலும் இளஞ்சிறார்களாலும் தேவார திருவாசக, பிரபந்தமாதிய தோத்திரப் பாக்களோதப் படுவதேன்? கிராமங்களிலும், நகரங்களிலும் வழக்கமாக பண்டாரங்களும், (ஆண்டிகளும்) தாசர்களும் ஜெயகண்டி, சங்கம், தப்பு சின்னம் முதலிய சுபவாத்திய கீதஞ் செய்து வீதிவலம் வந்து ஊர் பாடுவதேன்? மாதர்கள் தத்தமில்லங்கள் தோறும், கோமயத்தால் மெழுகி திருவக்கிட்டு சுத்தம் செய்து விசித்திரமாகப் பலவித கோலந் தீட்டி சாணி உருண்டைகளின் மீது பூச்சூடுவதேன்? அந்தணர்கள் வேதாத்யனஞ் செய்து மறையொலி முழக்குவதேன்? சித்தத்தைத் தேவன்பாற் செலுத்திய சைவ, வைணவ பக்தகோஷ்டிகள் பிராதகாலத்தில் துயில் நீத்துப் புதுப்புனலாடி, நித்ய கரும ஜெபதப அனுஷ்டானாதிகள் முடித்து கூட்டம் கூட்டமாகப் பஜனை பாடிக் கொண்டு வீதிவலம் வருவதேன்? இத்தகைய சத்கரு மங்களெல்லாம் இம்மாதத்தின் புனிதத் தன்மையை விளக்குகின்றதல்லவா இவ்விதமிருக்க, இம்மாதத்தைப் பீடைநா என்பது யாங்ஙனம்? இது அறியாமையின் பொய்க்கூற்றேயாம்.

 

தவிர, இம்மார்கழி மாதமானது மிக்க சிரேஷ்டமென்பதற்கு அனேக காரணங்களிருககின்றன. நமக்கு முப்பது நாழிகை கொண்ட பகலும், முப்பது நாழிகை கொண்ட இரவுஞ் சேர்ந்து ஒரு நாளாகிறது. இரவின் ஆறாம் பாகமாகிய கடைசி ஐந்து நாழிகை வைகறை, எற்பாடு அல்லது உஷத்காலம் எனப் பெயர் பெறும். இக்காலமே விஷயங்களிற் புகுந்து விவகரித்து அலுப்புற்ற கருவிகரணங்கள் இளைப்பாறிப் புதுப்பலம் பெற்றிருத்தலின், பிரம்ம த்யானத்திற்குரிய காலமாக பெரியோர்களால் சொல்லப்பட்டு வருகிறது. ஆதலின், வைகறை ஒரு நாளின் சிறந்க பாகமாகும். நாம் ஒரு வருஷமென்று சொல்லும் பன்னிரண்டு மாதங்கள் யடங்கிய காலமானது, தேவர்களுக்கு ஒரு நாளாகிறது. உத்தராயணமாகிய தை முதல் ஆனி வரையில், தேவர்களுக்குப் பகலும், தக்ஷிணாயனயாகிய ஆடி முதல் மார்கழி வரையில் இரவுமாகின்றது. ஆகவே மேற்கூறிய மார்கழி மாதமானது தேவர்களுக்கு வைகறையாம். அதுவே அவர்களுக்குக் துய்லெழுந்து கடவுளை வழிபடுதற்குரிய காலம். ஆதலின், அம்மாதத்தை நாம் சிறந்ததெனக் கொண்டு, தினந்தோறும் வைகறையிற் றுயிலெழுந்து, மார்கழிப் புது நீராடி, வீடு தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்து கோலம் தீட்டிப் பூச்சூடி யலங்கரித்து, கடவுட் பூஜை தேவார திருவாசகாதி பிரபந்த தோத்திரப் பாக்கள் பாராயணம், முதலியவை செய்து, சிறப்புறக் கொண்டாடுகிறோம். மேலும் நம் உத்தராயணமாகிய தேவரது பகற்காலம் சிருஷ்டி தொடங்கப்பெற்று உலகம் நடைபெறுங் காலமாகவும், தக்ஷிணாயனமாகிய தேவரது இராத்திரிகாலம் சம்மாரத்தின் பின்னுள்ள ஒடுக்க காலமாகவும், கொள்ளப் பறுதலின், தக்ஷிணாபனத்தின் கடைசி பாகமாகிய மார்கழி மாதம் சிருஷ்டி ஆரம்ப காலத்தைத் தெரிவிக்கிறது. சர்வ சம்மாரத்தின் பின்னர்ப் பரமசிவம் பழையபடியே பிரபஞ்சத்தைத் தோற்று விக்கத் திருவுளங்கொண்டு, வயிந்த சக்தியைச் சிருஷ்டிக்கத் தொடங்கும் சந்தர்ப்பம், அஃதாவது சம் மாச காலத்தில் சத்தியின் சம்பந்தமற்று அமர்ந்து நித்திரை செய்வது போன்று செயலற்றுத் தனித்து இருந்த நிலையினின்று புடைபெயர்ந்து பெருமான் ஐந்தொழிற் செய்தற் பொருட்டுச் சக்தியோடு சம்பந்தப்படுங் காலம், தேவர்களின் வைகறையாகிய இம் மார்கழி மாதமேயாகும். இது தேவர்களுக்கு உதயகாலமாய், சிருஷ்டிக்கு ஏதுவாயிருக்குந் தன்மையால் சிறட் புடைத்தென்ப தொருதலை. இக்கிருச்தியத்தை யுணர்த்துவதற்குச் செய்விக்கப்படும் விழாவே, ஆலயங்களில் திருப்பள்ளி யெழுச்சியென வழங்கப் பெறுகின்றது.

மேலும், திருவாதிரைத் திருநாளென்னுஞ் சீரிய விழாவானது, இம்மாதத்தில் நடைபெறுவதும் இம் மதியின் மேன்மைக் கோர் காரணமாகும். தினந்தோறும் நமது ஆலயங்களில் கடவளுக்கு ஆறு கால பூஜை நடக் வதுபோலவே, தேவர்களுக்கு ஒரு நாளாகிய (நமது) வருஷத்தில், தேவ தேவனாகிய சபாபதிக்கும் ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவ்வபிஷேச தினங்களை


“சித்திரையி லோண முதற் சீரானி யுத்திரமாம்

சத்ததன் வாதிரையில் சார்வாகும்- பத்திவளர்

மாசியரி கன்னி மருவுசதுர்த்தசிமன்

றீசரபி டேகதின மாம்''


என்னுஞ் செய்யுளா னறிக. இவ்வாறு அபிஷேகங்களிலும் மிக நனிசிறந்து விளங்குவது, இம்மார்கழித் திருவாதிரை யபிஷேகமே யாகும். ஏனெனில், இச்சீரிய நாளில் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகாதி கிரியைகள், நடராஜர் செய்தருளும் பஞ்ச கிருத்தியத்தைக் குறிக்கின்றன. அஃதாவது, சபாபதி ஆஸ்தானத்துக்கு வருதல் (புடைபெயர்ச்சி) சிருஷ்டியையும், மண்டபத்தில் அபிஷேகங் கொண்டருளல் திதியையும்; கிருஷ்ணகந்தந் தரிப்பது அதாவது சாந்து சேவை செய்தல் யாவையந் தன்னுளொடுக்கித் தான் தனித்திருக்கும் நிலையாகிய சம்மாரத்தையும், வெள்ளைச் சாத்து ஆன்மாக்களுக்கு வினைப்பயனை மறைத்து ஊட்டுவித்தலாகிய திரோபவத்தையும், தரிசனம்
அனுக்கிரகத்தையுங் குறிப்பிடுகின்றது. இது ஆருத்திரா தரிசனமெனப் பெயர் பெறுமே தவிர, உற்சவமெனப் பெயர்பெறுவதில்லை. தரிசிக்க முத்தி தரும் இத்தகைய நடராஜ மூர்த்தியினது விசேஷ தரிசனம் கிடைப்பது இம் மார்கழி மாதத்திலேயா மென்க.

 

இதுவல்லாமல், எல்லாம் வல்ல பெருமானாகிய நம் சிவபெருமான், தேவர்களும், அசுரர்களும் உய்யும் பொருட்டுத் திருப்பாற்கடலிற் றோன்றிய ஆலகால விஷத்தையுண்டு திருநீலகண்ட ரானதும் இம் மார்கழியிலேயா இவ்வாறு விஷத்தை யுண்டதனாற் பெருமான், தாமொரு தீமையடைந்தாரில்லையாயினும், ஓர் திருவிளையாடல் செய்யக்கருதி, ஒரு க்ஷணய் பொழுது ஒன்றும் கூறாராய், உமாதேவியார் தம்மை யுபசரிக்கும்படி மௌனமாய்ச் சயனித்திருந்தனர். அது கண்ட அமரர், அரனை யருச்சித் அத்திதியை யான்றோர் “ஏகாதசி' என்பர். அற்றைய நாள் முற்று முணவில்லாதி, அன்றிரவெல்லாம் நித்திரையின்றி மறுநாளாகிய துவாதசியிற் பண்ணவர் பாரணஞ் செய்தனர். இதுவே சைவர்களாலும் வைணவர்களாலும் “ஏகாதசி விரதம்” என மிக்கச் சிறப்பாய் நோற்கப்படுகின்றது. சிவபெருமான் ஏகாதசி திதியில் விஷமுண்டன ரென்பதை,


"பொங்கு கங்காதரன் சாளமயின்றே யொன்றும்

புகலாம லிருந்தனனோர் கணப்பொழுது புலவோர்

அங்கவனை யிடைலிடா தருச்சனை முன் புரிந்தார்

அத்திதியே காதசியாம்''


என வரும் ஆகமத்திரட்டா னறிக, சிவபெருமானின் முதலடியாரும், மும்மூர்த்திகளில் ஒருவருமாகிய ஸ்ரீ மகாவிஷ்ணு வானவர் அன்னாகார நித்ரையின்றி அவ்வேகாதசியில் விரத மனுஷ்டித்து, துவாதசியிற் பாரணஞ்செய் ப்தமையால் திருமா லடியவர்களாகிய வைணவர்கள், இவ்வேகாதசி தினத்தை மிக்கச் சிறப்பாகக் கொண்டாடி, அதுபோல விரத மனுஷடித்து துவாதசியிற் பாரணம் செய்கன்றனர். இவவிடதத்தை விதிப்படி யனுஷ்டித்தவர்களுக்கு சாஷாத் கண்ணபிரான் ஸ்ரீ வைகுண்ட சேவையை யருள்கிறொரென்பது வைண வாகம வழக்கு. மார்கழி மாதம் சுக்கிலபக்ஷ ஏகாதசி திதியில் வைணவாலயங்களில் நடத்தப் பெறும் சொர்க்க வாயில் திறத்தல்" என்னுந் தூய விழா இவ்வுண்மையை உறுதிப்படுத்தும். இத்தகைய பெருமை வாய்ந்த ஏகாதசி வீரகமும், சொர்க்க வாயில் திறத்தலும் இச்சீரிய மார்கழி மாதத்திலேயா மென்பதை மன்பர்கள் கவனிப்பாராக.

 

தவிர, போகத்தில் மிக்கோனாகிய தேவராஜனுக்குச் செய்விக்கப் பெறும் போகி பண்டிகை' என்னும் கொண்டாட்டமும் இம்மார்கழியில் தான் என்பது யாவருமறிந்த விஷயம். கார் காலத்தில் விதைச்கப் பெறும் செந்நெல் முதலிய நன்செய்த் தானியங்கள் மார்கழியில் அறுவடை செய்யப்படுகின்றன. இப்பிரதான உணவுத் தானியங்கள், மின்னல், இடி முதலிய கருவிகளோடு கூடிய மேகம், சூரியன், சந்திரன், வாயு முதலியவற்றின் உதவியால் தான் விளைகின்றன. மேற்கூறிய ஒவ்வொன்றிற்கும் அதி தேவதைகள் உண்டென்பதும்; அத்தேவதைகள் திருப்தி செய்விக்கப் பட்டால் தான் உலக க்ஷேமத்திற்குரிய கால மழை பெய்தல் முதலியவை சம்பவிக்கு மென்பதும், தேவர்களுக்கெல்லாம் இந்திரனே தலைவனென்பதும் ஆரிய மதக் கொள்கையாம். ஆகையால் நம்காட்டவர்களுக்குச் சீவாதாரமான தானியங்கள் விளைதற்குக் காரணமாயிருந்த மேகம், சூரியன் முதலியவற்றுற்குத் தலைவனாகிய இந்திரனுக்கு நன்றி பாராட்டுதலாக, புதிய செந்செலரிசியால் செய்த பொங்கல் முதலிய வற்றைப் படைத்துக் குதூகலமடைவது, நந்தமிழ் மக்களின் பண்டைய வழக்கமாயிருந்து வந்தது. அதனால் உலக க்ஷேமத்திற்குத் தானே காரண பூதனென எண்ணித் தேவேந்திரன் சர்வங் கொண்டிருந்தான். அதை பறிந்த கண்ணபிரான் அன்னோன் கொண்டுள்ள கர்வத்தை யடக்கக் கருதி, அவனுக்குரிய பெரும் பொங்கல் விழாவைத் தனக்குரித் தாக்கிக் கொண்டனன். இதனால் தேவேந்திரன் கோபங் கொண்டு, கண்ணபிரானையும் அவருடனிருந்த கோபாலரையும் கோக்களையும் வருத்த நினைத்துக் கன் மாரி பெய்வித்தனன். அச்சிலா வருஷத்தைக் கண்ணன், கோவர்த்தன கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்துத் தடுக்கக்கண். இந்திரன், கீழிறங்கி வந்து நெடுமாலை வணங்கி, "எம்பெருமானே! யான் அறிவீனத்தாற் செய்த குற்றத்தை மன்னித்தருளி, பொங்கல் விழாவைப் பழையபடியே அடியேனுக்குரித்தாக்க வேண்டுமென்று பிரார்த்தித்தான். மாயனும் மனமிரங்கித் தேவராஜனை நோக்கி 'ஏ! புரந்தரனே! உன் கருவத்தாலிழந்த பொங்கல் விழாவை மறுபடியும் நீ பெறாயாயினும், மார்கழிக் கடைசி நாளை யுனக்குரித்தாக்கினோம். அன்று உன்னை யாரும் பூஜிக்கக் கடவர். அது உன் பெயராலேயே "போகி பண்டிகை' என்று வழங்கப்பெறும்" என்று கட்டளை யிட்டனர். ஆகவே பொங்கல் பரமபத வாசனாகிய ஸ்ரீமந் நாராயணமூர்த்திக் குரித்தாய், சூரியன் மூலமாய் ஆராதிக்கப்பெறும். பொங்கற் பண்டிகையானது, சங்கரர்க்கே யுரித்தென்பறும், அதனால் சங்கர ஆராதனை அல்லது சங்கராந்தி பண்டிகையென்ற வழங்கப் படுகின்றன வென்பதும் சைவர்கள் கொள்கை,

 

மேற்கண்ட காரணங்களால் இம்மார்கழி மாதமானது மற்றெல்லா மாதங்களையும் விட மிக்க சிரேஷ்டமான தென்பது உள்ளங்கை நெல்லி போல் நன் குணரக் கிடக்கின்றது இதன்றி இம்மாதம், காலையில் மனிதர்க்குப் பித்தம் அதி+மாய் மேலெழுங்கால மாகையால், அக்காலத்தில் ஸ்நானம் செய்வதாலும் பிறகு பயறு, மிளகு, பச்சரிசி, நெய் முதலியவைகளும், சர்க்கரை, பால் பழம் முதலியவைகளுமாகிய சத்துவகுண பதார்த்தங்களால் செய்யப்பட்ட பொங்கல், பாயசம் முதலியவற்றை யுட்கொள்வதனாலும் திரேகத்திற்கு ஆரோக்கியமும் சுகமும் உண்டாகின்றது. இதுவுமன்றி, பொதிகை மலையிலிருந்து மார்கழி மாதத்தில் ஒருவித சஞ்சிவி கலந்த காற்று பிராதகாலத்தில் வீசுகின்றது. அம்மலையில், உயர்ந்த மூலிகைகளும் சஞ்சீவியும் இருப்பது உண்மை யென்பது ஆன்றோர்களின் கொள்கை. உண்மையுமதுவே. ஆதலால் பிராதகாலத்தில் இம்மாதத்தில் வெளிவந்துலாவுவதால், தேசத்திற்குப் பெரும்பாலும் சுகத்தைக் கொடுக்கின்றதென்பது மருத்துவ நூலார் கண்டறிந்த உண்மை. நமது முன்னோர்கள் விதித்த விதியின் கருத்து மிதுவேயாகும். நமது ஆன்றோர்கள் ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு விஷயமும், இலௌகீக ஆன்மார்த்த இலாபங்களை யளிக்கத் தக்கவைகளென்பதும், மிக்க நுட்பமாகிய சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாய் ஏம்படுத்தப்பட்டவைகளென்பதும் உண்மை. அவற்றின் காரண மறியாத சிலர், அவற்றை யலட்சியம் செய்கின்றனர். ஆனால் இப்போது வரவர அவர்களும் உண்மையை யுணர்ந்து கொள்ளுகிறார்கள்.

 

அன்றியும், நமது பண்டைப் பெரியோர்கள் இம்மாதத்தை, ஸ்நான ஜெபதப அனுஷ்டானதி கருமங்களுக்கும், தேவாலயங்களில் புலரிப்பூஜையாதி விக்ரஹாராதனை வழிபாட்டிதகும் உரிய விசேஷ காலமாகக் கொண்டிருக்கிறார்கள்.


"போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன் மலர்கள்

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்"


என்று தமது மணிவாசகப் பெருந்தகையார், தமது திருவாசகத்துட் கூறி பிருக்கின் றனர். வைணவ அடியார்களிற் சிறந்த ஆண்டாளம்மையார் அவர் களும் தமது திருப்பாவையில்,


"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்''


என்று இம்மாதத்தின் சிறப்பினை விதந்து கூறி யிருக்கின்றனர்.

 

ஆதலால், சகோதர சகோதரிகளே! இத்தகு சிறப்பினை வாய்ந்த இம்மார்கழி மாதத்தில் பிராதக்காலத்தில் எழுந்து வீடு+ளைச் சுத்தம் செய்து அலங்கரித்து, ஸ்நான ஜெபதப அனுஷ்டானாதி கருமங்களை முடித்து, கடவுட்பூஜை செய்து, மதவார, திருவ: எக, பிரபந்தமாதிய தோத்திரப் பாக்களோதி, இறைவனருளால் இம்மை மறுமை யான்மார்த்த லாபங்களை யடைய முன் வருவீர்களாக!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - டிசம்பர் ௴

 



No comments:

Post a Comment