Wednesday, September 2, 2020

 

திரிந்த பழமொழி

(ஆ. ஜீவரத்தினம் அம்மாள்.)

“வெண்ணெயுண்பவன் ஒருவன், சுண்.........பவன் ஒருவன்" என்பது ஒரு பழமொழி. இது இருவர் சேர்ந்து செய்யும் ஒரு தொழிலில் வரும் பயனைத் தானே அநுபவித்து மற்றவளை அதில் வரும் நஷ்டத்துக்கே ஆளாக்கும் ஒருவனைக் கண்டு கூறுவதாகும். வெண்ணெய் உண்பதற்குச் சுவையானது உடறுக்கு உரமளிப்பது. நிறத்திலும் பருமையிலும் வெண்ணெயை ஒத்திருப்பது சுண்ணாம்பு இதைத் திண்போன் வாய், குடல் வெந்துவிடும். இதனால் "பயனை" வெண்ணெய்க்கும் "கஷ்டத்தை" சுண்ணாம்புக்கும் ஒப்பிட்டு "வெண்ணெயுண்பவன் ஒருவன் சுண்ணாம்புண்பவன் ஒருவன்" என்று கூறிப் போந்தனர் நம் முன்னோர். இவ்வரிய பழமொழியில் "சுண்ணாம்புண்பவன்" என்ற சொற்றொடர் ஏறக்குறைய அதேபோல் ஒலிக்கும் ஒரு ஆபாசச் சொற்றொடாகத் திரிந்து
வழங்குகிறது.

      மாமியார் மருமகன்பால் மிக்க பற்றுதல் கொண்டிருப்பது இயல்பு. ஏன்? “பெண்ணைக் கொடுத்தேனோ கண்ணைக் கொடுத்தேனோ" என்றபடிக் கண்போன்ற தம் பெண்ணைக் காப்பாற்றுபவன் மருமகனன்றோ? மருமகளை மகனினும் மேலாக மதிப்பார் மாமியார். மருமகனுக்கு ஏதேம் ஒன்றளிக்க மாமியார் இஷ்டப்பட்டால் எப்படியாவது தம் கொழுந்ரைச் சரிகட்டிக் கொடுத்தே தீருவார். பெரும்பாலும் மாமியார் தம் மருமகனுக்கு பாலும் மோருங் குடித்துப் பருத்து வலுப்பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புவார்; இஃது உலக வியல்பு. ஆகையால் மாமியார் மருமகன் வீட்டுக்குப் பசு வாங்கியனுப்புவார் என்று கூறுவதில் என்ன புதுமை உள்ளது? ஆனால் மாமியாருக்கு மருமகன்பால் சலிப்பு உண்டானால் எல்லாம் நடக்காது. இதுபற்றியே பெரியோர்கள் மாமியார்க் கிஷ்டமா
தவ மாடுங் கன்றஞ் சேரும்' என்றொரு பழிமொழி கூறிவந்தனர். இப்பழமொழியில் ''இஷ்டமானால்" என்பது "கிட்டே போனால்" என்று கொடுந் தமிழாகத் திரிந்து விபரீத அர்த்தமாயிற்று.

''எத்தாக............ தட்டான் பொன்னாக விளைந்ததாம்.......''என்பது மற்றொரு பழமொழி.

மேற்கூறிய பழமொழியைக் கருதுவோம். தட்டான் உரைகல் ஒன்று வைத்துக்கொண்டு தன்னிடம் கொண்டு வரப்படும் பொற்கட்டிகளை யெல்லாம் உரைத்துப் பார்ப்பான். அப்படி உரைக்குங்கால் பொன் துகள் அக்கல்லில் ஒட்டிக்கொள்ளும். அதை ஒரு மெழுகு உருண்டை கொண்டு ஒற்றி எடுத்துக்கொள்வான். இவ்வாறு ஒற்றிக்கொண்டு வர நாளடைவில் அம்மெழு குருண்டை பொன் பொடி நிறைந்துவிடும் அதை உருக்கிப் பொன்னை வேறாக்கி எடுத்துக்கொள்வான். இதுபற்றி நம் பழந்தமிழர் ''எத்தாக ஒற்றினானாம் தட்டான், பொன்னாக விளைந்ததாம் உருண்டை" என்று ஒரு பழமொழி கூறினர். இச்சிறந்த பழமொழியில் "ஒற்றினானாம்".

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment