Saturday, September 5, 2020

 

பெண்ணுரிமை

(பீ. உசேன்மீர்.)

பண்டைக்காலத்லே பலவளமும் குலவி வளர்ந்து பாலுந் தேனும் பெருக்கெடுத் தோடியது நமது பாரத நன்னாட்டில். கலையும், அறிவும், வீரமும் எங்கெங்கும் பொலிந் திலங்கின. அறிவும் ஞானமும் ஆனந்த நடம் புரிந்தன. தொழிலும் வாணிபமும் எழில் பெற்றோங்கின. ஏன்? அக்காலத்தில் பெண்மை கௌரவிக்கப்பட்டது. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்ந்தனர். பெண்கள் தெய்வீகமாகப் போற்றப்பெற்றனர்.

ஒளவையார், பொன்முடியார், காக்கைப் பாடினியார் போன்ற அநேக பெண் புலவர்கள் கவி மழை பொழிந்து கலைப்பயிர் வளர்த்தனர்.

அம்மட்டோ! இராஜதந்திரிகளாய் தூது சென்றும் அறிவுலா அரசர்க் குலரத்து அமைச்சராயும் அரும்பணி புரிந்தனர். இராணி மங்கம்மாள், அஹல்யாபாய் போன்றார் தாங்களே இராச்சிய பாரத்தை யோற்று செங்கோலோச்சி சீருற்றனர். ஜான்சிபாய் போன்ற வீர மாதர்கள் போர் முனைபுக்குச் சமராடி எதிரிகளைப் புறங் கண்டனர்.

ஆனால் இன்றைய தினத்தில் நம் அருமைத் தாய் நாடோ!

“அந்நியர் செய்யும் அரசாட்சியிலே

அடிமை நாடாகவும் மிடிமை நாடாகவும்

தன் வயிற்பிறந்த மன்னுயிர்த் தொகுதியின்

அரைவயிற்றுக் காகார மின்றியும்

அரையிலுடுக்க ஆடையில்லாமலும்

துன்புற்று மாண்டு தொலையு மக்களையும்

வெளிநாடு சென்று வேலைசெய்து

கண்ணீர் விட்டுச் சதறிச் பதறித்

தற்கொலை புரிந்து சாகும் மக்களையும்.''

 

கண்டு விசாரங் கொண்டு கை தாழ்த்திருக்கும் காரணத்தா னென்னே! பாரத சமுதாயத்திலே மாதர் புறக்கணிக்கப்பட்டனர். அடிமைகளாய், ஆண்களின் காமக்கோட்டமாய்ச் சீர்குலைக்கப்பட்டனர். ஆதலாற்ரன் பாரதத்தின் பீடும் பெருமையும் ஒடுக்கிற்று.

ஆணும் பெண்னும் ஒரு பறவையின் இரு சிறகைப் போல்வர். அவர்அன் ஒன்று வெட்டி யெறியப்பெறின் ஒரு சிறகைக்கொண்டே பறவை பறத்
யெலா தல்மே? அதுபோன்றே ஒரு நாட்டின் முன்னேற்றமும் ஆண் பெண் இரு பாலரின் உயர்வையும் ஒத்தழைப்பையுமே பொறுத்திருக்கின்றது. இதுபற்றியே நம் தலைவர் திலகம் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு சமயம் "நம் சமுதாயத்தின் பாதிப்பாகம் மற்றப் பாதியின் விருப்பு வெறுப்புக்கேற்ப உபயோபிக்கப்படும் விளையாட்டுப் பொம்மையாய் அடி
மைப்படுத்தப்பட்டிருக்கும் பரியந்தம் நமது சாட்டிற்கு விமோசனமில்லை" யெனக் கூறியுளார்.

இந்நிலையினும், நம் நாடின் சல்ல காலத்தால் ஒரு பாகத்தில் வீறு
கொண்டெழும் சுதந்திரப் பெண்களின் புரட்சிகரமான புதுமை யுகத் தோற்றம் கண்டு களிப் பெய்துகிறோம். தங்கள் கரங்களில் ஆண்பால் பூட்டப்பட்ட அடிமைத்தளைகள் ''படீர் படீர்" எனத் தெரிக்க உடைத் தெரிகின்றனர்.

"பட்டங்களாவதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினத் பெண்கள் படம் வந்தோம்

எட்டு மதிவினில் கணுச்சு பெண்

இளைப்பில் சாணென்று கும்மியடி."

 

எனக் குதூகலத்துடன் முன் வருகின்றனர்.

பெண்மை வாழ்க! பிறந்த நாடுயர்க.!!

ஆனந்த போதினி – 1942 ௵ - மார்ச்சு ௴

 



 

No comments:

Post a Comment