Tuesday, September 1, 2020

 

ஞானசிந்தாமணி

(ஸ்ரீ காசி நீலகண்ட சுவாமிகள்.)

சூத்திரதருமம்

பிராமணாதிவர்ணத்திரய சேவை க்ஷேத்திர ரக்ஷை சகல தேவதாபத்தி முதலான கர்மயுக்தனானவன் சூத்திரன்.

ஆச்சிரமம்.

பிரமசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசமென ஆச்சிரமம். 4.

அஷ்டாதசபுராணம்

பிரமம், பதுமம், விஷ்ணு, சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கி நேயம், பௌஷ்யம், பிரமகைவர்த்தம், இலைங்கம், வராகம், ஸ்காந்தம், வாமகம், கூர்மம், மச்சியம், காரூடம், பிரமாண்டம் எனச் சிவப்பிரசாதத்தால் வியாசரிஷி ஈசுவரர் சொன்ன வேத நிஷ்டசாரார்த்தப் பிரதிபாதகமான நாலுலக்ஷஞ் சங்கியையுள்ள அஷ்டாதச புராணங்களில் ஸ்காந்த, இலைங்க, கூர்ம, வாமா, வராக, பௌஷ்ய, மச்சிய, மார்க்கண்டேய, பிரம்மாண்ட மென்னுமிவை 10-ம் சிவபுராணம். நாரதீயம், பாகவதம், காருடம் விஷ்ணு வென்னுமிவை, 4-ம் விஷ்ணுபுராணம். பிரமம், பதுமம் என்னுமிவை 2 - ம் பிரமபுராணம். பிரமகைவர்த்தம் – சூரியபுராணம் ஆக்கிநேயம், அக்கிநி புராணம், இந்த ஏற்றற்றாழ்வினாலேயே தேவதாதாரதம் மியமு மறிந்துகொள்க.

சர்க்காதி பஞ்சலக்ஷணம்.

இந்தப் புராணங்களில் - சர்க்க - பிரிதிசர்க்க, வங்கிச, மதுவந்தா, வங்கிசா நுசரிதம் என்னும் பஞ்சலக்ஷணங்களும், வைதீக, தாந்திரீககர்முஞ் சொல்லும்.

உபபுராணம்.

சாற்குமாரம், நாரசிங்கம், நந்தி, சிவதருமம், தூர்வாசம், காரதீயம், கபிலம், மாநவம், உசநம், பிரம்மாண்டம், வாருணம் காளி, வாசிஷ்டலைக்கம், சாம்பவம் செளரவம், பராசரம், மாரீச்சியம், பார்க்கவம் என்னுமிந்த நாமதேயமுள்ளவர்களால் நிர்மிதமான அஷ்டாதசவுப் புராணம், வைதீக தர்மமே பிரதிபாதிக்கும்.

இதியாசம்.

பாரத இராமாயணாதிகள் வியாச வான்மீகா திகளாலுண்டான இதியாசங்கள், சத்துவாதி குணபேதங்களும், தேவத்திரயலக்ஷணங்களும், தேவதான வாதிகள், சநநக்கிரமமும், யுதீஷ்டி ராமச்சந்திராதிகள் சரித்திரங்களும், வைதீகாதி தர்மங்களும், திரிடீகரித்துச் சொல்லும்.

 

அவைதிககாஸ்திரத்திரயம்.

இதற்குமேல், பிரகஸ்பதி, ஆகித, சுகதரென்னு மிவர்களால், கிரமத்திற் சொல்லப்பட்ட - சாருவாக - ஜைந - பௌத்தமென அவைதிக சாஸ்திரத்திரயமுண்டு. அவற்றுள் - சார்வாகமாவது - பிருதிவியாதி சதுர்வித பூத விகாரமான சகத்துள், சுகமே சுவர்க்கம் - துக்கமே நாகம் – இவை யன்றி வேறே சுவர்க்க நரகமில்லை யென்று பிரதிபாதிக்கும்.

சைநமாவது-சித்த, பத்த, நாரகீகளென்னும் புருஷத்திரய லக்ஷணங்களையும், ஒட்டீச - ஒட்டாமிலேச, சுவாலிநகற்ப, பதுமாவதிகற்ப, சாரதாகற்ப - குக்குடனாதி கற்பாதிகளையும், மந்திரௌஷதாதிப் பிரியோத்திருக்களான பாமசித்தர்களையும், லூநகேச, திகம்பர, பாணிபாத்திர, மயூரபிஞ்ச, பஞ்சமலதாரணாதிகளின் கொலை, களவு, கள், காமம், பொய்களில்லை யான பஞ்சாது விரதங்களில் மதுக, பலண்டு, முதலான நிஷேத்திரவியங்களை வர்ச்சித்து, தப்தசிலாசயனாதி உக்கிர தபசாசரிக்கிற முனிவிருத்திகளையும், ஏ மசந்திர, நாகசந்திர, நேமிசந்திர, ஏகிசந்திர, மாகசந்திர, அரு ஆதிநாத - அசகள - பாரீஸ்வநாத - சௌகத -- சுரு திகீர்த்தி -
ஸ்ரீமத் காமாகித முனிசுவாமி முதலான (24) தீர்த்தகருடைய சரித்திரங்களையும், சாதாஸ்தி, சாதாநாஸ்தி முதலான சத்தபங்கிகளையும், சீவ, சற்சீவ, நிர்ச்சீவ , நிர்ச்சா, ஆசீர்வ, பந்தமோக்ஷமென்னும் சத்த பதார்த்தங்களையும், பிரதிபாதிக்கும்.

பௌத்தமாவது சௌத்திராந்திகம், வைபாடிகம், யோகாசாரம் மாத்தியமிகமென நான்கு பிரகாரமாய் பிருதிவியாதி புத்தி யாந்தமான (23) தத்துவாத்மகமான பிரபஞ்சம், தீபச் சுவாலையைப்போல க்ஷணிகமாத்திரமென்று பிரதிபாதிக்கும்.

இதற்குமேல் நிஷேதகர்ம சாஸ்திரங்களுண்டு. அவை-சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர், என்னும் நவநாத சித்தர்களால் கற்பிதமான - கௌள யாமளாதி - இம்சை மைதுநாதி-நிஷேதகர்மமுள்ள சாஸ்திராந் திரங்கள், அபிசார கர்ம சநிதவியா தியா தியால், அகால மிருத்துரூபமான மரணசுழுத்தி விஷமூர்ச்சாதிரூபமோகநமும், அக்கிநிஸ்தம்பனை, ஜலஸ்தம்பனை, இந்திரிய ஸ்தம்பனை, கட்கஸ்தம்பனை சிங்வைஸ்தம்பனை. கதிஸ்தம்பனாதி ஸ்தம்பனமும், பூர்வசுகாசிரம நிரசநாத்மகமான-உச்சாடணமும், வஸ்திராபரண வநிதாதி வஸ்துக்களை நிஜஸ்தானத்திலிருந்து அழைப்பிக்கும் ஆகருஷணமும், பிராண சிநேகமான இடத்தில் அந்நியோந்நிய விரோதமுண்டாக்குகிற வித்வேஷ்ணமுமான, ஷட்கருமங்களையும், ராஜவசியா திவசியங்களையும், சுராசுர பூதக்கிரசாவேசங்களையும், பாதுகாசித்தி, அஞ்சநாசித்தி, குடிகாசித்தி-மூலிகாசித்தி, ரசவாதங்களையும் பிரதிபாதிக்கும்.

சாக்தீகபாஞ்சராத்திரம்.

இதற்குமேல், சத்திதத்துவவாசி யென்னும், ஒரு ஆத்துமனாலும், வாசுதேவனாலும் கிரமத்தில் பிரதிபாதிக்கப்பட்ட அநுக்கிரமத்தில் சாக்தீகம் - பாஞ்சராத்திரமென சாஸ்திராந்தரத்துவயமுண்டு. அவற்றுள் சாக்தீகம் - சடாசடப்பிரபஞ்சமெல்லாம் சாத்திபரிணாமமென்பது முதலாக மத விஸ்தாரஞ் செய்யும்.

பாஞ்சராத்திரம். பிருதிவியாதியான சாந்தமான சதுர்விம்சதி தத்துவத்துக்கு மேல் குணதத்வாத்மக வாசுதேவனால் சக்திதாதாத்மீகமாயுண்டான கிருஷ்ண அநிருத்த - மகாத்துவச - ரௌகிணேயரென்னும் நால்வரா அற்பத்தி முதலான கிருத்திய மென்று பிரதிபாதிக்கும். இதன்மேல் லௌகிக - வைதிக-ஆத்தியாத்மக-ஆதிமார்க்கி - மாந்திரிகமென பஞ்சவித சாஸ்திரங்களுண்டு - அவற்றுள்.

"ஓம். ஆபோ வாயிதகும் ஸர்வம். விச்வா பூசார் தியாப், ப்ராணாவா ஆப:, பசவ ஆபோ, அன்னமாப:, ஸம்ராடாபோ, விராடாப:, ஸ்வராடாப: ச்சந்தாகும்ஷியாப:, ஜ்யோதிஷ்யாப:, யஜூக்‌ஷியாப:, ஸத்யமாப: ஸர்வாதேவதா ஆப:, பூர் புவஸ்ஸுவராப: ஓம்," என்னு மந்திராபிமந்திரிதமான உதகத்தினால் கரசரணமுக பிரக்ஷானகஞ் செய்து பின் ஸர்வஞ்ஞாய நம: என்ற மந்திர முச்சரித்துப், பூஜாக் கிரகம் புகுந்து, ஓம் ஹ்ராம்பி.
ருதுவியாதமனே நம: நிவிர்த்தி கலாயை நம: என்ன மந்திரத்தினால் ஸ்தாந சுத்தியை ஆசரித்துத் திரியம்பகமென்னும் மந்திரோற்சாரணத்தினால் பூர்வோத்திர முகனாகிச் சுகாசநகத்திருந்து ஓம் ஹ்ரோம், ஈசாநாய நம: என்னு மந்திரத்தால் தக்ஷணகர
மத்தியாநாமீகாங்குஷ்டங்களால் ஸ்ரீமத் விபூதியை ஆதாரத் திருந்தெடுத்துக் கொண்டு, வாமகர அங்குஷ்டாதி அங்குலிகளில் யகாராதி நகாராந்தமான பஞ்சாக்ஷரங்களை யுச்சரித்து விபூதியை யிட்டுப் பின் ''புசாத்யஜ்ஜகத் ஸர்வம், திரிபுண்ட்ராத்ம ஸதா
சிவ:, ஐசுவரிய ப்ராப்தி பீஜாயதஸ்மை ஸ்ரீபன்மநெ நம', என்னு மந்திரத்தினால் பஜிதத்துக்கு, நமஸ்கரித்துத் தக்ஷணகரத்தால் மூடி வலது தொடையின் மேலிட்டு ஓம் நமசிவாய என்னும் மூல மந்திரத்தால் பதினொரு தரம் அபிமந்திரித்து, அன்றி அக்னிரிதி பஸ்ம - வாயரிதி பஸ்ம-ஜலமிதி பஸ்ம - ஸ்தலமிதி பஸ்ம-வ்யோமேதி பஸ்ம-ஸர்வம் ஹம்வா இதம் பஸ்ம, மநயதா நிசக்ஷுகும்ஷி பஸ்மாகி என்னும் மந்திரத்தினாலானாலும்
மந்திரித்து, மாநஸ்தொகெத நயெமாந – ஆயுஷி – மானோகேஷு - மாநொ அசுவேஷு ரீரிஷ:- வீராந்மனோருத்ரபாமிதொவதி - ஹவிஷ்மம் தொமநஸாவிதே மதே.'' என்னும் மந்திரத்தனா லெடுத்து, ஒம் ஹ்ரோம், யம் ஈசாநாயா நம: என்று சிரசிலும், ஓம் ஹ்ரேம், வாம் தற்புருஷாய நம: என்று முகத்திலும், ஓம் ஹ்ரம், ஸீம் அகோராயா நம: என்று இருதயத்திலும், ஓம் ஹ்ரீம், மம் வாமதேவாயா நம: என்று குய்யத்திலும், ஓம் ஹாம் நம் சத்தியோ ஜாதாய நம: என்று பாதத்திலும், சர்வாங்கத்திலும் சம்புரோக்ஷித்துப் பின் ஆசமாஞ் செய்து, பின்னும் விபூதியை எடுத்து மூல மந்திரத்தால் பதினொரு தரம் மந்திரித்து, அந்தப் பஸ்மத்தினால் ஓம் ஹ்ரோம் ஈசாநாய நம: என்று சிரசில் (5) தரம் தொட்டு, ஒம் ஹ்ரேம்: தற்புருஷாயா நம: என்று (4) தரம் முகத்தில் தொட்டு, ஓம் ஹ்ரம் அகோராயா நம: என்று [8] தரம் இருதயத்தைத் தொட்டு, ஓம் ஹ்ரீம் வாமதேவாய நம: என்று (13) தரம் குய்யத்தைத் தொட்டு, ஓம் ஹ்ரம் சத்தியோசாதாய நம:. என்று (8)
தரம் பாதத்தில் தொட்டுச் சர்வாங்கமும் உத்தூளனஞ் செய்து,

பின்னும் பஜிதத்தை எடுத்து ஜலமிசிரஞ் செய்து பூர்வோக்தமாக, மூர்த்தி நிலலாடாதி ஸ்தானங்களில், “த்ரியாயுஷ்ம ஜமதக்கே: கஸ்யபஸ்ய த்ரீயாயுஷம்: அகஸ்தஸ்ய த்ரியாயுஷம். யதைவாநாம்: திரியாயுஷம், மாபய்ய ஸ்துதிரியாயுஷம்,'' என்னும் திரியாயுஷ மந்திரங்களையும், "திரியம்பகம் யஜாமஹே, ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்; உர்வாருகமிவபந்தநாந் மிருத்யோர் மிருக்ஷிய்யமா மிருதாத் என்னும் திரியம்பக மந்திரத்தைச் செபித்துத் திரிபுண்டா தாரணஞ் செய்து, பின் ஓம் ஈசாந: ஸர்வ
வித்யாநாம், சசிந்யோம: மூர்த்தினீ, ஓம் ஈசுவரஸ்ஸர்வ பூதாநாம் அங்கதாயை நம: பூர்வமூர்த்திநீ ஓம். பிரம்மாதிபதி பிரம்மனோதிபதி பிரம்மே ஷாயநம: தக்ஷணமூர்த்திநீ. ஓம் சிவோநம அஸ்துமரீசயநம:

வாமமூர்த்தினீ ஓம் ஸதாசிவோம் சூலிநோநம: - பச்சிமமூர்த்தின. ஓம் தத்புருஷாயவித்மஹே சாந்தயேநம: - பூர்வவத்திரே. ஓம். மஹாதேவாய தீமஹி வித்யாய நம: - தக்ஷனவத்திரே. ஓம் தந்நோருத்ர பிரதிஷ்டாய நம: - வாமவத்திரே ஓம் ப்ரசோதயாத். நிவர்த்திரியை நம: - பச்சிமவத்திரே ஓம் ஈசானாய வக்த்ராய நம: - ஊர்த்துவவத்திரே ஓம் அகோரேப்யோதமஸே நம - இருதயம், ஓம் தத்ததோரேப்ய: - மோஹாயநம: - கண்டே ஓம் கோர அக்ஷையாயநம: - தக்ஷணாம்ஸே ஓம் கோரதரேப்ய: கநிஷ்டாயநம: -
வாமாம்ஸே ஓம் ஸர்வத: ஸர்வம்ருத்யவே நம: - நாசபெள ஓம் ஸர்வேப்யோ
மாயாய நம: - ஜடரே. ஓம் நமஸ்தே அஸ்து ருத்ர: - அபயாஜயெநம:
புருஷ்டே. ஓம் ரூபோப்யோசிவெப்ய ஜ்வராய நம: - வகூஸெ ஓம் வாம
தேவாயாநமோ ரக்ஷாயநம: குஹ்யே. ஓம் ஜ்யேஷ்டாயநமோ ரக்ஷாயநம:
லிங்கே. ஓம் ருத்ராயநமோ ரத்யாயநம: தக்ஷணொரெள ஓம் காலாயநம:
பலாயநம: வாமோரெள ஓம் கல: காலாயாநம: தக்ஷிணஜாநுநீ ஒம் விகரணாயநம: ஸம்யமிந்யேநம: வாமஜாநுநீ ஓம் பலத்ரியாயநம; தக்ஷிணஜங்காயாம். ஓம் விகரணாயாநமோ புத்யைநம: வரமஜங்காயாம். பலகார்யாயநம: - தக்ஷணஸ்பசி.

ஓம் ப்ரம்மதநாயநம: தாத்ரேநம: வாமஸ்பசி ஓம் ஸர்வபூதாத்மனே நமோக்ராமிணியே நம; கட்யாம். ஓம் மோகின்யேநம: தக்ஷிணபாரிசே, ஓம் உன்மநாயநம: தமோமோகாய நம: - வாமபாரிசே, ஓம் ஸத்யோஜாதம் பிரபத்யாமி ஸித்தியைநம: -தக்ஷிணபாதே ஓம் ஸத்யோஜாதாயவை நம: - ஹித்யைநம - வாமபாதே. ஓம் பவேபீதியைநம: - தக்ஷிணகரே. ஓம் அபவர்க்கதாயநம: - அஸ்து நம: - ஸாமகரே. ஜந்யத ஸர்வக்ராணே, ஓம் பஜன் வமாம்காதந்த்யாய நம: - சிரசு. ஓம் பவஸ்வதாய நம: -தக்ஷணவாகு ஓம் உர்தபவாயநம: - துவத்யை நம: - வாமவாகு இப்படிச் கலா நியாசம் விஸ்தரித்து,

பின், ஓம் ஹ்ராம் ஸர்வக்ஞ சத்திதாமனே ஹ்ருதயாய நம: - ஓம் ஹ்ரீம் த்ரி ஸப்த சத்திதாமனே சிரஸேஸ்வாஹ: - ஓம் ஹ்ரும் அநாதிபோத சத்திதாமனே சிகாயைவஷட் ஓம் ஹ்ரைம் ஸ்வதந்திர சத்திதாமனே கவசாயஹும், ஓம் ஹ்ரொம் அலுப்த சத்திதாமனே நேத்ரத்ரயாய வெளஷட், ஓம் ஹ்ரம் அநந்த சத்திதாமனே அஸ்த்ராயபட், என்று ஷடங்கநியாசம் செய்து.

ஓம் ஹ்ரோம் ஈசாயநம: என்று சிரசிலும், ஓம் ஹ்ரேம் தற்புருஷாய
நம: என்று முகத்திலும், ஓம் ஹ்ரும் அகோராயநம: என்று இதயத்திலும், ஓம் ஹ்ரீம் வாமதேவாயநம: என்று குய்யத்திலும்,

ஓம் ஹ்ரம் சத்தியோஜாதாய நம: என்று பாதத்திலும், பஞ்சப்ரம் நியாசஞ் செய்து, பின் மூர்த்தினீ லலாடம், கண்டம், இதயம் நாபி, களின் கிரமமாக யகாராதி நகாராந்தமான பஞ்சாக்ஷர நியாசஞ் செய்து.

ஆனந்த போதினி – 1938, 1942 ௵ - அக்டோபர், ஜனவரி ௴

No comments:

Post a Comment