Friday, September 4, 2020

 பணம் பற்றி மனமா



பெண்மணிகள் ஓர் குறிப்பிட்ட வயது வரை அவரவர் தம் தம் பெற்றோரின் சம்ரக்ஷணையின் கீழ் வாழ்க்கை நடத்த கடமைப்பட்டவர்களாயினும், விவாகம் செய்யத்தக்க வயது வந்தவுடன் ஓர் வரனைத்தேடி, தமது பெண் பிற்காலத்தில் கண்கலங்கா வண்ணம் அவளது கணவனுடன் இல்லறம் நடத்த வேண்டுமே என்ற எண்ணம், பெண்களை ஈன்ற ஒவ்வொருவருக்கும் உளதாம். எனினும் ஓர் சிலர் குணத்தைக் கண்டு தம் பெண்ணைக் கொடுக்காது பணம் பெரிதெனக்கருதிக் கொடுப்பதும் பல இடங்களில் நடைபெறும் சங்கதி.


1. விவாகம்

 

தமது பெண்ணிற்கு பனிரண்டு வயது வந்தவுடன் விவாகம் செய்து கொடுக்கவேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பக்கத்து ஊரிலுள்ள தங்களது சொந்தக்கார இனத்திலேயே ஏதோ சுமாரான (S S. L. C.) கல்வி பயின்ற வரன் இருப்பினும், அவ் வாலிபலுக்குக் கொடுக்க இஷ்டப் படாது, வேறு ஊர் ஊர் ஆகச் சென்று வரன் பார்க்கத் தலைப்படுகின்றார். சொந்தக்கார வரனானது மிகவும் கண்யமுள்ள குடும்பத்தில் பிறந்த வாலிபன். பரமசாது. அழகில் நிறைந்தவன். கல்வியில் தேர்ந்தவன். தன் வேலையுண்டு; தான் உண்டு என நினைத்து வேறு அனாவசிய விஷயங்களில் தலையிட்டுக்கொள்ள விரும்பாது காலம் கடத்துபவன். ஆனால் சுமாரான சொத்துக்களே அவ் வரனுக்கு உண்டு. ஆதலால் அவன் ஏழை யாயிற்றே. அவனுக்குப் பெண்ணை எப்படிக் கொடுப்பது? என்பன போன்ற வினாக்களைத் தம் வீட்டிலுள்ளவர்களிடம் கூறத் தொடங்குகிறார். இவர் பார்த்து முடித்துக் கொண்டு விவாகத்திற்கு தினத்தையும் நிச்சயித்து வந்து விடுகிறார். இப்போது பார்த்து வந்துள்ள வரனின் நிலைமை என்ன தெரியுமா? பையன் (வரன்) பம்பாயில் உத்தியோகம் செய்கிறானாம். மாதம் சம்பளம் முக்கால் நூறு பெறுகிறானாம். பூர்வீக ஊர் கல்கத்தா. பையனது படிப்பு, M. A. தலையில் மயிர் கிராப், சதாகாலமும் உடம்பில் அங்கி அணிந்தவாறுதானாம். சகோதர சகோதரி அவருக்குக் கிடையாதாம். ஒரேபிள்ளை. சொத்து
இரண்டு வேலி. விவாகம் நிச்சயித்தவிதம் எப்படி தெரியுமா? இவ்வரனுக்கு பந்து ஒருவர் திரிசிராப்பள்ளியில் உண்டாம். அவரிடம் சென்று கலியாணம் நிச்சயம் செய்யப்பட்டதாம். எல்லாம் தந்தியின் மூலம் பம்பாய்க்குத் தெரிவித்து, பதிலும் தந்தியின் மூலம் கிடைத்து, கம்பியின் உதவியினால் இவ்வரனை நிச்சயம் செய்யப்பட்ட தாகும். கடைசியில் இவ்வரனுக்கே பெண்ணை விவாகம் செய்து விடுகிறார்.

 

2. கணவ னில்லம்

 

பெண் சுசீலாவிற்கு விவாகமாய் கணவனில்லம் சென்று விட்டாள். வயதோ பதினாறு. இவள் தன் கணவனில்லம் சென்ற மறு மாதம் அவளது கணவனுக்கு அவனது உத்தியோக சாலையிலிருந்து ஓர் கடிதம் கிடைத்தது. அதில் “உமது சம்பளம் ரூபாய் 75-ல் ரூபாய் 20- 9டித்து 55-ரூபாய் சம்பளம் நிர்ணயித்திருக்கிறோம். நீர் செய்துள்ள பெரும் தவறுதலுக்கு உம்மை வேலை பிலிருந்து நீக்கிவிட வேண்வேது அவசியமாயினும், அடியுடன் உம்மைக் கெடுக்க எண்ணமில்லாததால் இவ்விதம் ஏற்பாடு செய்துள்ளோம்'' எனக் கண்டிருந்தது. மறுநிமிஷம் இவனது தாயார் இவனிடம் நெருங்க தன் குமானது கவலைக்கிடமாயுள்ள முகத்தைக் கண்டதும். என்னடா என்ன சமாசாரம், சொல்லு ஒளிக்காதேயடா'' என்று அருள் வந்து கேட்க, குமாரனும் சமாசாரத்தைக் கூறுகிறான். இவன் சொன்னது தான் தாமதம் ''அடே, எல்லாம் அந்தப் பாழாப்போன கிட்டுவினால் வந்த வினையே இது. இதற்கு முன் இந்த சம்பவம் உனக்கு நேர்ந்ததுண்டா? வீட்டில் கால் வைத்து ஏறினாள் உன் பெண்டாட்டி; பிடித்ததடா சனியன் நமக்கு. ஏதோ பட்டிக்காட்டில் பிறந்த இவளை நமக்குத்தான் கொண்டு வந்து சேர்க்கவேண்டுமா அந்தக் கிட்டு. '' இதுபோன்ற இராமாயணத்தைத் தொடங்குகின்றாள் அந்த மாமி.


3. குடும்பத்தில் சச்சரவு

 

சுசீலா யாது செய்வாள்? அறிவுள்ள நங்கைகளுள் இவளும் ஒருத்தி. எக் கஷ்டம் வந்த போழ்திலும் கணவனே தெய்வமென நம்பி இருப்பவள். மாமியோ தாங்கொணா வார்த்தைகளைக் கொட்டுகிறாள். சுசீலாவோ வாய் மூடிய வண்ணமே பூமியைப் பார்த்தவாறே நிற்பதா யிருக்கிறாள். ''ஏண்டி! என்னவோ நிற்கிறையே; கேட்டதற்கு பதில் சொல்லடி'' என்று மாமி ஆர்ப்பரிக்க வணக்கமாய் பதிலுரைக்கின்றாள் சுசீலா.
கூறுகிறேன் பதில் சொல்லுகிறாயா? தைரியமாய்? அடி- பிடாரி எனக்கு பதில் கூட சொல்றையே'' என ஆர்ப்பரித்து கர்ஜிக்கத் தொடங்குகின்றாள். உண்மையில் மாமி கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சுசீலா இருப்பின் “நான் கேட்கிறேன். பதில் சொன்னால் உன் வாயிலுள்ள முத்து உதிர்ந்தா போய்விடும்” என்று வார்த்தையை திருப்பி வீசுவாள் மாமி என்பது சுசீலா தெரிந்துதான் பதில் சொன்னதாகும். இச் சம்பவங்களி லகப்பட்ட பெண்ணரசியோ தத்தளிக்கிறாள். இவளது கணவனோ சுய அறிவற்றுக் கிடக்கும் மானிட கோஷ்டியில் சேர்ந்தவனன்று, ஆதலால் “நான் தப்பிதம் செய்தேன். சம்பளம் பிடிக்கப்பட்டது. இதற்கு நேற்று வந்த என் மனைவி என் செய்வாள்? இப்படி அறிவற்று அவளைப் போய்த் திட்டுகின்றா
ளே அறிவற்ற தாயார்'' என நினைத்து, தன் அன்னையிடம் இது விஷயங்களைத் தெரிவிக்க அவ்வளவு தாமதம. தன் குமாரனிடம் காட்டத் தொடங்குகின்றாள். நேற்று வந்த சிறுக்கிக்குப் பரிந்து பேசுகிறாயா? உன்னைவிட நான் பன் மடங்கு பெரியவள் என்பதை அறியாயோ? எனக்குப் புத்தி கூற வந்து விட்டாய். போடா, இனி நான் உன்னுடன் இருக்க வில்லை'' எனக் கூறி வெளிக்கிளம்ப, தன் தாயின் மதியீனத்தைக் கண்ட குமாரன் ஊராருக்கு பயந்து எவரேனும் சிரிக்க நேரிடுமே என்ற எண்ணத்துடன் சமாதானம் கூறத் தலைப்படுகிறான் தன் அன்னையிடம். என்னதான் சமாதானம் கூறியும் அன்றிலிருந்து ஒற்றுமை பிரிந்து அக் குடும்பம் நடந்து வரத் தொடங்குகிறது. உண்மையில் எவர் பேரிலும் குற்றமில்லை. அறிவற்ற மாமி செய்யும் ஆர்ப்பாட்டத்தினாலேயே ஏடும்பநாச கால காரணம் என்பதை அக் குடும்பத்தைச் சார்ந்தவர்
இனையார்கள். அயல் பெண்ணாகிய சுசீலாவைத்தான் நிந்தித்து அவளால் தான் கலகம் ஆரம்பம் எனக் கருதுவர். என்? மாமி ஓதிய வார்த்தை களால்.


4. எவர் பக்கம் சேருவது?

 

நாட்கள் செல்லச் செல்ல குமாரனது மனதிலும் தன் அன்னையைப்பற்றிக் கெட்ட எண்ணம் உதித்துவிடுகிறது. தான் உத்தியோகசாலை சென்று விட்டால் ஆங்கும் “வீட்டில் இரண்டும் மண்டையை உடைத்துக்கொள்ளுமே” என்று கவலைப்படுகிறான். இது சமயம் தன் தந்தையைப்பற்றி நினைக்கிறான். "அவர் என் செய்வார்? பாவம் அவரோ மானி. ஆனால் ஏதேனும் சிறு சமாசாரமாய் இருந்த போதிலும் தன் மனதிற்குள்ளேயே அவைகளை வைத்துக் கொள்ளாது மறுவினாடி தமது பத்தினியிடம் கூறி விடும் சுபாவம் கொண்டவர். இதனாலும் கலகம் நேரிடக்கூடிய சந்தர்ப்பங்கள் பல நேரிட்டுள்ளதை இவனும் அறியாதவ னன்று. இளமையிலிருந்தே தந்தை தன் அன்னையை அடக்கி வைத்திருந்தால் இவ்வளவு வாய் வாய் ஏற்பட்டிருக்கக் காரணமில்லை' எனக் கருதுகிறான். நாட்கள் செல்லச் செல்ல தன் அன்னையுடன் பேசுவதைக்கூட நிறுத்திக் கொள்கிறான். தன் மனைவி இடும் உணவையே அருந்தி உத்தியோக சாலைக்குச் செல்லத் தலைப் படுகின்றான். மாமிக்கோ உள்ளூர, தன் மருமகள் தன் மகனுக்கு உணவ இடுவது பற்றி தாங்க முடியாத அருவருப்பு. கணவனோ அவரது அன்னை இட்டால் உணவு உட்கொள்ள மறுக்கின்றார். தான் உணவு இடினும் பொறாமை கொள்கின்றாள் மாமி. இதற்கு என் செய்ய எவர் பக்கம் சேருவது? தாயும் - பிள்ளையும் இன்று பேசாதிருப்பர். நாளை பேசி சமரஸமாகி விடுவர். வீட்டிற்குப் புதிதாய் வந்துள்ள நாம் இதில் தலையிட்டுக் கொள்ளா திருத்தலே நலமெனத் தோற்றினும், கணவருக்கு உணவு பரிமாரத் தான் வேண்டுகிறது. இல்லை யேல் பட்டினி கிடப்பது திண்ணம். “இருதலைக் கொள்ளி எறும்பு போல் முழிக்கின்நேனே சரன்" சுசீலா நினைத்துக் கண்ணீர் உதிர்க்கின்றாள்.


5. முடிவு

 

பெண்ணை ஈன்ற பெற்றோர் கவனிக்க வேண்டுவது ஒன்று உண்டு. சொத்து சுதந்திரங்களைக் கண்டு பேராசையுடன் தூர தேசங்களில் கொடுப்பதைக் காட்டிலும், பக்கத்து ஊரிலேயே நல்ல (சற்குணமுள்ள) வரன் இருப்பின் பணத்தை கவனியாது குணத்தைக் கருதி பெண்ணைத் தருதல் சிலாக்கியம். ஆசையுடன் கொடுக்கப்பட்ட சுசீலா, அடைந்த சுகம் என்ன? என்பதை நம் சகோதரிகளே நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 



No comments:

Post a Comment