Sunday, September 6, 2020

 

முக்கூடற்பள்

 

“பள்'' என்பது தமிழ் நாட்டுக் கூத்து வகையில் ஒன்றாகும். பள்ளிற் சிறந்தது “முக் கூடற் பள்'' என்று நயமறிந்த புலகர் போற்றிப் புகழ்வர். பொதிய மலையில் பிறக்கும் பொருனையாறும், திருக்குற்றால மலையில் பிறக்கும் சித்ரா நதியும், சங்கரன் பறம்பிற் பிறக்கும் சிற்றாறும் ஒன்றாய்க் கலக்கும் இடத்தில் அமைந்த சிற்றூர் "முக்கூடல்'' என்று பெயர் பெறும். திருநெல்வேலிச் சீமையில் இவ்வூர் முற்காலத்திற் சீரும் சிறப்பும் வாய்ந்து விளங்கிற்று. பிற்காலத்தில் “ஸ்ரீ. வல்லபப் பேரி' என்று பெயர் பெற்று இக்காலத்தில்''சீவலப்பேரி' என்று சிதைந்து வழங்கும் இச் சிற்றூரின் பெருமை முக்கூடற் பள்ளில் சிறந்து விளங்கக் காணலாம்.

 

சீவலப் பேரி என்னும் சிற்றூருக் கருகே ''மருதூர்'' என்னும் மற்றோர் ஊர் உண்டு. மு முக்கூடற் பதியில் வாழையடி வாழைபோல் வளர்ந்தோங்கியபள்ளர் குலத்தில் "வடிவழகக் குடும்பன்'" என்னும் பேர் பெற்ற பள்ளன் தலை சிறந்து வாழ்ந்தான். இவ்வழகன் முக்கூடலிற் றோன்றிய ஓர் பள்ளியையும், மருதூரில் பிறந்த மற்றோர் பள்ளியையும் மணம் புரிந்து இரு பள்வியர்க்கு ஓர் பள்ளனாய் இல்வாழ்க்கை நிகழ்த்தினான். திருமால் திருவடியை ஒரு நாளும் மறவாத அழகக் குடும்பன் முறுக்கு மீசையோடும் குறுக்கில் தடியோடும் நாடகமேடையில் தோன்றுகின்றான். பண்படாத நிலத்தை எரால் உழுது சேறாக்கிப் பண்படுத்தும் பணியில் சிறந்த பள்ளன்,


 "ஒருபோதும் அழகர் தாளைக் கருதா மனத்தை வம்பன்
 உழப்பார்க்குள் தரி சென்று கொழுப்பாச்சுவேன்
 சுருதியெண் ணெழுத்துண்மை பெரிய நம்பியைக் கேளாத்
 துட்டர் செவி புற்றெனவே கொட்டால் வெட்டுவேன்
 பெருமாள் பதி நூறெட்டும் மருவிவலம் செய்யார் தம்
 பேய்க்காலை வடம் பூட்டி நோக்கால் செய்வேன்
 திருவாய் மொழி கலலாரை இருகால் மாடுகளாக்கித்
 தித்தி என்றுழக்கோலால் குத்துவேன் ஆண்டே"


என்று வீர மொழி பேசிக் கொண்டு வருகின்றான். அழகர் தாளைக் கருதாதபாழும் மனதைப் பள்ளன் கொழுவால் உழுது பண்படுத்துவான். எண்ணெழுத்தைக் கேளாத இரு செவிகளைக் கொட்டால் வெட்டித் திருத்துவான். பெருமாள் உறையும் பதிகளை வலம் வந்து 6ாத பேய்க் கால்களைத் தறித்து போக்கால் செய்வான். திருவாய் மொழி கல்லாத கசடரை இருகால் மாடுகளாக்கித் தாற்றுக் கோலால் குத்துவான்.

 

இவ்வாறு அழகர் பணியில் தலை சிறந்த அழகக் குடும்பனுக்கு வாய்த்த இரு பள்ளியரில் முக்கூடல் மூத்த பள்ளி திருமால் அடியாளாய்த் திகழ்ந்தாள், மருளர் இளைய பள்ளி சிவநேசப் பள்ளியாய்ச் சிறந்தாள். இவ்விருபள்ளியரும் முறையே நாடக மேடையில் தோன்றி தம் குலப் பெருமைகூறும் முறை யறிந்து இன்புறத் தக்கதாகும். முக்கூடல் மூத்த பள்ளி முதலில் வருகின்றாள். - தனது பழம் பெருமையைப் பாராட்டுகிறாள்.


 "உத்தரபாகமான சித்திர நதி தென்பால்
 ஓடும் பொருனையுடன் கூடும் போதே
 அத்தனை காலமும் தொட்டு இத்தனை காலமும் கண்டு
 அடியடி வாழையான குடியில் வந்தேன்.
 பத்திலே பதினொன்றாய் வைத்தானிலைக் குடும்பன்
 பன் டேசாடு கட்டிக் கொண்டான் என்னை
 முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியானுக் கான
 முக் உடல் மூத்த பள்ளி நானே ஆண்ட”

 
என்று பிறந்த குலப் பெருமையையும் புகுந்த குலப் பெருமையையும் மூத்தஎள்ளி போற்றிப் புகழ்கின்றாள். அப்பால் மருதூர் இளய பள்ளி மேடையிலே தோன்றுகின்றாள்.


 "செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும்
 செங்கோல் வடமலேந்திரன் எங்கள் ஊரே
 நெஞ்சில் குறித்துக் குளமஞ்சுக்குஞ் சக்கரக்கால்
 நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்ட நாள்
 கஞ்சிக்கும் தன்னிலேதான் கெஞ்சிப் பூந்த வள்ளல்
 கண்டாசைப்பட்டே கொள்ளும் பெண்டானவன்.
 மஞ்சிற் கருப்பழகர் தஞ்சைப் பள்ளனுக் கேற்ற
 மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே”


என்று தன் குலப் பெருமையை நிறைந்த சொற்களால் நிகழ்த்துகின்றாள்.

 

இவ்வாறு குலப்பெருமை கூறி மகிழ்ந்த பள்ளியர் இருவரும் நாட்டுவளம் பாடும் முறை கேட்டு மகிழத் தக்கதாகும். மஞசுதோய உயர்ந்த கோபுரமும், வெளியை மறைத்து நின்ற வியன் கொடிகளும், விண்ணளாலி நின்றதண்ணருஞ் சோலைகளும், அன்னம் விளையாடும் அழகிய பொழில்களும், மதுவைச் சொரியும் மலர்ப்பூஞ் சோலைகளும், அமைந்திருந்த செம்மை சான்ற ஊரின் பெருமையைக்


 “கொண்டல் கோபுர மண்டையிற் கூடும்
 கொடிகள் வானம் படிதா மூடும்
 கண்டபே ரண்டம் தண்டலை நாடும்
 கனக முன்றில் அனம்விளை யாடும் 
 விண்ட பூமது வண்டலிட் டோடும்
 வெயில் வெய்யோன் பொன் எயில் வழிதேடும்
 அண்டர் நாயகர் செண்டலங்காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே "

 

என்று பள்ளியர் பாராட்டும் முறை பண்பு வாய்ந்த தாகும். இன்னும் அவ்வரில் குளிர் நிலா விரிக்கும் மதியிலமைந்த கறையல்லால் மற்றோர் கறையில்லை. வேழத்தின் வெறியல்லால் வேறோர் வெறியில்லை. பறவையை அடைக்கும்பஞ்சரமல்லால் பிறிதோர் சிறை இல்லை. விளக்கில் அமைந்த திரியல்லால் மனத்தில் திரிவில்லை, தேய்வது அம்மியே யல்லாக் வேறொன்றில்லை, கொம்புகள் தழைத்துக் குழைபடுவ தல்லால் மற்றொன்றும் குழைவதில்லை, நிறை மொழிமாந்தர் அருளிய மறையே யல்கால் மற்றொன்றும் மறைவதில்லை என்று பள்ளியர் நாட்டின் பெருமையை நன்மொழிகளால் இசைக்கின்றார்.


 “கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
 கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
 சிறைப்பட்டுள்ளது விண்ணெழும்புள்ளு
 திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
 குறைப்பட்டுள்ளது கம்மியர் அம்மி
 குழைப்பட்டுள்ளது வில்லியம் கொம்பு
 மறைபட்டுள்ளது அரும்பதச் செய்யுள்
 மையாசூர் வடகரை நாடே”


என்று பள்ளியர் கூறும் வளமார்ந்த மொழிகளில் அந்நாட்டு வளம் நன்கு விளங்கக் காணலாம்.

 

இன்னும் சீரும் சிறப்பும் உற்ற சீவலப்பேரியில் காய்வது சூரியகாந்திமலரேயாம், கலங்குவது கட்டித் தயிரேயாம், மாய்வது காலமேயாம், மறுகுவது வெள்ள மேயாம், சாய்வக நெல்லேயாம், தனிப்பது முனிவர் மனமேயாம், தேய்வது சந்தனக் குறடேயாம் என்று பள்ளியர் பாலித்துரைக்கும்முறை அறிந்து இன்புறத்தக்கதாகும்.


“காயக்கண்டது சூரிய காந்தி
 கலங்கக் கண்டது வெண்டயிர்க் கண்டம்
 மாயக்கண்டது நாழிகை லாரம்
 மறுகக்கண்டது வான்சுழி வெள்ளம்
 சாயக்கண்டது காய்க் குலைச் செந்நெல்
 தனிப்பக்கண்டது தாபதர் உள்ளம்
 தேயக்கண்டது உரைத்திடும் சந்தம்
 சீவலம்மங்கைத் தென்கரை நாடே”


 என்று பள்ளியர் பாடும் பாட்டு சொல் நயம் பொருள் நயம் வாய்ந்து விளங்கக் காணலாம்.

இன்னும் நீர்வளமும் நில வளமும் மிகுந்த செழுமை வாய்ந்திருந்த சீவலப் பேரியின் செம்மையை,


 “சோதிமாமணி வீதிநெருக்கும்
 சுரும்பு பாடி இரும்பும் உருக்கும்
 சாதி நால்வளம் நீதி பெருக்கும்
 தடத்து வாளை குடத்தை நெருக்கும்
 போதில் மேய்ந்து இன்பேதி செருக்கும்
 புலமெலாம் தன் மார்வண்டிருக்கும்
 ஆதிநாதர் அனயொ ருசதர்
 அழகர் முக்கூட ஊரெங்கள் ஊரே''


என்று பள்ளியர் புகழும் அழகிய மொழி எள் கற்போர் உள்ளத்தைக் கர்வனவாம். எங்கும் இன்னொளியும் இன்னொலியும் நிரம்பி நின்ற அவ்வூல் சுரும்புகள் பாடி இரும்பையும் உரு கு மரம், கயத்து வாளை மீன் குடத்தைசெருக்கும் என்றும், இனம் புல் மேய்ந்து எருமை செருக்கு மென்றும், மலர்களில் மதுவை மாந்தி வண்டுகள் இன்னொலி பெருக்கு மென்றும், பள்ளியர்அந்நாட்டின் பெருமையைப் பண்ணார்ந்த சொற்களால் பாராட்டிப் போற்றுகின்றார்.

 

இவ்வாறு நல்ல றமும் நல்வளமும் நனி சிறந்தோங்கிய அந்நாட்டில் கன்னையும், கமுகும், மாவும், பலாவும், மாதுளையும், வாழையம் மாசு புறவளர்ந்து தீங்கனி நல்கிய திறத்தினை பள்ளியர் காயாரப் புகழ்ந்து போற்றும்முறை வளமார்ந்த தாகும். ஓங்கி உயர்ந்த தெங்கின் கனிகள் கமுகில் தூங்கவும், கமுகின் காய்கள் மாவில் தூங்கவும், மாவின் கனிகள் பலாவில் தூங்கவும், பலாவின் கனிகள் வாழையிற் சாயவும், வாழைக்குலைகள் மாதுளையிற்பாயவும் நின்ற வளமார்ந்த சோலையை,


 "மீதுயர்ந்திடு தெங்கிளநீரை மிடைந்தபூகம் சுமந்து தன்காயைச்
 சூதமொன்று சுமக்கக் கொடுக்கும் சூதம் தன்கனி தூங்கும் பலாவில்
 ஓதும் அந்தப் பலாக்கனி வாழை வுளுக்கவேசுமந் தொண்குலை சாய்க்கும்
 மாதுளக்கொம்பு வாழையைத்தாங்கும் வளமையாசூர் வடகரை காடே''


என்று பள்ளியர் புகழும் முறை புதியதோர் இன்பம் அளிப்பதாகும்.

 

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.)

 

ஆனந்த போதினி – 1930 ௵ - மே ௴

 

 

 

No comments:

Post a Comment