Friday, September 4, 2020

பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

(M. A. S. முத்துசாமிப் பிள்ளை.)

இன்னும் அறப்பணி மாதர் தம் நாட்களைக் கழித்த விதத்தினைக் கூறுவோம். அதிகாலையில் படுக்கை விட்டகல்வர். அறைகளை நேர்த்தியாக வைப்பர், அடுக்களையில் சென்று சிறிது புளித்த அப்பமும், பாலிலாத் தேத்தண்ணீரும் அருந்துவர். அப்புறம் அங்குள்ளவர் கட்குக் குவாக்கிழங்கும் தேயிலை நீரும் ஆக்குதல் வேண்டும். இராப்பணி மாதர் இளைப்பாறச் செல்லும் பொழுது பகற்பணி மகளிர் தம்பணி ஆற்றிடுவர். அவர் வந்து வைத்தியசாலை புகுந்து பரிபாலிக்க வேண்டிய பல பாகங்களிலும் சென்று, கழுவுதல், கட்டுதல், உடுத்தல், உணவூட்டல், வைத்தியர்களிடத்தில் நோயின் தன்மையை எடுத்துக் கூறல் முதலிய பல தொழில்களையும் 9-30 மணி முதல் 2 மணி வரை ஓயாது தொண்டு புரிவர். இரண்டு மணிக்கு நோயாளிகள் இளைப்பாறவும் தூங்கவும் விடப்படுவர். அப்பொழுது மாதர்கள் தங்கள் மத்தியான உணவுக்கு அமர்ந்திடுவர். அவர்கள் விரும்பினும், விரும்பா திருப்பினும் அவர்க்குக் கிடைப்பது ஒரு தட்டு மிதமான இறைச்சியும் ஒருவிதப் பானகமுமே. அதனை உண்பதுவே அவர்க்கு உரிய கடமையென எண்ணினர். மூன்று மணிக்கு அவர்களில் சிலர் வெளிச் சென்று சிறிது உலாவி வருதல் உண்டு. ஆனால் அந்த நவம்பர்த்திங்களில் கிரிமியாவில் போலவே ஸ்குட்டாரியிலும் அடிக்கடி மழை அதிகமா யிருந்தது. அந்நாட்களில் சளி பிடிக்காது மாதர் நைட்டிங்கேல் ஜாக்கிரதையா யிருப்பள். அதனால் மாதர்க ளெல்லாம் தங்கி யிருப்பது மருத்துவ சாலையே. அங்கு ஏதாவது வேலை எப்பொழுதும் செய்வதற்கு இருந்து கொண்டே யிருக்கும். பலக்குறைவா யிருக்கும் பிணியாளர்களுக்கு அடிக்கடி உணவு ஆக்க வேண்டிய திருந்தது. ஐக்தரை மணிக்கு அறமகளிர் அவ் வறைகளை விட்டுத் தேயிலை நீர் அருந்திடச் செல்வர். ஆனால் அது அதிக நேரம் ஆவதில்லை. இரவுக்கு வேண்டிய எல்லாச் சௌகரியங்களுடனும், அவர்கள் திரும்பி வருவர். இராப்பணி மாதர் இரவு 9.30 மணிக்குத் தங்கள் வேலையைத் தொடங்குவர்.

இவ்வாறு செய்து வந்தது ஒரு கடினமான காலங்கழித்தலாக இருந்தது. தக்களுடைய சொந்த உணவே அவ்வளவு சீர்கேடான நிலைமையிலிருந்த தென்பதை நோக்க, அவர்களில் எவரும் அவ்வளவு காலம் பொறுத்திருக்கக் கூடு மென்பது அதிவியப்பே. அதிலும் எங்ஙனம் அதனை அவ்வளவு தூரம் கொண்டு செலுத்தினர் என்பது அதிசய முடைத்தே. பணி மாதர் வேலை மிகப் பளுவானதே யாயினும், அதனுள்ளும் தலைமை மாதர் வேலை மிகப் பெரிதும் சிரமமானதே. அதிலும் எல்லாக் காரியங்களுக்கும் பொறுப்புடையார் அம் மாதர் நைட்டிங்கேலே. யோசிக்க வேண்டியது, திட்டம் அமைக்க வேண்டியது, இன்னும் நோ விருப்பவைகளை முன்னோக்கி எதிர் பார்த்திருப்பது எல்லாம் அவளே. எல்லா விபரங்களையும் பற்றி இங்கிலாந்திலுள்ள அமைச்சர் சிட்னி ஹெர்பர்ட்டுக்கும் கிரிமியாவி லுள்ள சேனைப் பெருந்தலைவர் ராக்ளன் பிரபுவுக்கும் செய்தி தெரிவிப்பதும் அவளே. சேனையிலுள்ள வேலைக்காரர். ளெல்லாம் அவளுக்குச் செய்ய வேண்டிய உதவியை விருப்பத்தோடும் செய்தனராயினும், அவர்கள் செய்ய வேண்டிய வேலைக்குரிய பயிற்சியைப் பெற்றுச் சீர் திருந்தினவர்கவல்லர். தலைமை மாதரோ, பிறரைப் பழக்குவதில் காலத்தைக் சடத்து வதைவிடத் தானே அக் காரியங்களைச் செய்வது விரைவிலும் எளிதிலும் அவை முடிவதற்கு வழி எனக் கண்டாள். ஆண் பெண் இரு பாலாரிலும் அவரவர் எந்தெந்த வேலைக்கு உபயோகப் படுவரென்பதை அவள் தீவிரமாகத் தெரிந்து விடுவாள். ஆகையால் அதற்குத் தகுதியானவர்களை
தந்த வேலையில் அமர்த்தி வைத்தனள். ஆதலினால் பொழுதை அவமே போக விடுவதற்கில்லை இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கிய பொழுதிருந்த பயங்கரமான காட்சி மாறி, மிகச் சுருங்கிய காலத்தில் அவ் வை வத்தியச்சாலை, பெரிதும் ஒழுங்கு அமைக்கப் பெற்றதாயும், சௌகரியம் வாய்க்கப் பெற்றதாயும் ஆகித் திகழ்ந்தது. கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் போர் வீரர்கள் மாத்திரமன்று. அவர் பெண்டிர் பிள்ளைகளுங் கூட அங்கிருந்தனர். அவர்களைப்பற்றி நினைப்பவர்களின்றி ஊண் உடை கிடைப்பதரிதாய் ஒவ்வேர் பக்கங்களில் ஒதுங்கிக் கிடந்தனர். மாதர் நைட்டிங்கேல் தமது உடை ஒலி சாலைகளிலும், வேறு பலலிடங்களிலும் அப் பெண்டிர்களுக்கு அலுவல் அமர்த்தி வைத்தினள். ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் குழந்தைகள் ஓதுவதற்கு ஒழுங்கு ஏற்படுத்தி இருந்தனள். ஆகவே அவர்களின் தாய்மார்க ளெல்லாம் தாராளமாகத் தங்கள் ஆதாரத்திற்காகச் சம்பாதிப்பதற்குச் செல்லத் தடையிலா திருந்தது. கணவனை இழந்த கைம்பெண்டிரை யெல்லாம் உடையும் பணமும் உதவி ஊர்க்கு அனுப்பி வைத்தனள்.

ஒருநாட் காலை தலைமை மாதர் தாம் சுற்றி வருகையில் முன் போலல்லாது அவள் முகத்தில் ஓர் ஒளி பிறங்குதலை அங்குள்ளவர்கள் யாவரும் நன்குணர்ந்தார்கள். ஏதோ ஒன்று அவட்கு மிகவும் இன்பம் விளைத்தது போல் தோன்றியது. மாலையில் எல்லோரும் மகிழ்வுடனிருக்கையில் அது என்ன வென்று அறியலாயினர். சமய போதகர் ஒருவர் வைத்தியசாலையின் பகுதி ஒவ்வொன்றிலும் சென்று விக்டோரியா மகாராணியாரிடமிருந்து போர் அமைச்சர் சிட்னி ஹெர்பர்ட்டுக்கு வந்த கடிதம் ஒன்றை
வாசித்து வந்தார்.

அது வருமாறு: -

ஆங்கில அரசியார் அரிய கடிதம்

விண்ட்ஸர் மாளிகை.

6. டிசம்பர் 1854.

மகளிர் நைட்டிங்கேல் அல்லது மாதர் பிரேஸ் பிரிட்ஜ் இருவரிடமுமிருந்து மாதர் ஹெர்பர்ட்டுக்கு வரும் விபா அறிக்கைகளை அடிக்கடி நான் பார்ப்பதற்கு அனுப்புவிக்க வேண்டுகின்றேன் என்பதை மாதர் ஹெர்பர்ட்டுக்குத் தெரிவிக்கவும். போர் நிகழ்ச்சியையும் போர்க்களத்தையும் பற்றி அதிகாரிகளிட மிருந்து பெரிதும் கேள்விப்படுகிற எனக்கு, போரில் புண்பட்டவர்களைப் பற்றிய விபரம் புகலுவாரைச் சிறிதும் காண்கிலேன். இயற்கையில் அதைப் பற்றி யன்றோ அறிய அக்கரை எனக்கு மிக்கிருக்கும்.

சிதைவுண்டு சீக்காய்க் கிடக்கும் மனிதர்களாகிய அந்த இரக்கம் பாலிக்கப்பட வேண்டிய நிலைமையிலுள்ள சிறந்த போர் வீரர்களிடம் அதிகக்
கவலையுடன் சிரத்தை யெடுப்பவரும், அவர்களுடைய வருத்தங்களுக்காக அதிகம் வருந்துபவரும், அவர்களுடைய தைரியத்தையும் வீரச் செயல்களையும் தக்கவாறு போற்றுபவரும் அவர்களின் அரசியைப்போல் வேறு ஆளிலை யென அவர் க்குரைக்குமாறு, மகளிர் நைட்டிங்கேலையும், மற்றும் மாதர்களையும் கான் விரும்புவதாக ஹெர்பர்ட்டு மாதரார் தெரிந்து கொள்ளட்டும் எனவும், இரவும் பகலும் தம்மால் நேசிக்கப்படும் சேனைகளையே நினைந்து நிற்கின்றார் எனவும், அவ் வண்ணமே அவர் தம் உறவினரும்
எனவும் அறியக்கடவர்.

விக்டேரரியா.

அங்ஙனம் அதனைப் படித்து முடிந்ததும், ''கடவுள் அரசியைக் காப்பாராக!'' எனக் கழறி கர்சமயபோ தகர். அவ்வாறே அங்குள்ள வியாதியாளர்களும் தங்கள் ஆழ்ந்த குரலில் அரசியை வாழ்த்தினர்.

அறப்பணி மாதர் அடுத்த கூட்ட மொன்று ஆங்கில நாட்டினின்று அங்கு வந்திறங்கியது. அவர்கள் பாஸ்பரஸ் கரை மருங்கிலுள்ள மருத்துவசாலைகளின் பணியை மேற் கொண்டனர். அவர்க்குத் தலைமையாய் அமைந்தவர் அம்மை ஸ்டான்லி. அவள் ஓங்கு புகழ்படைத்த வெஸ்டு மின்ஸ்டர் ஆலயத் தலைவரின் உடன் பிறந்த நங்கை. அக் குழாத்தில் தூய தொண்டியற்றலே தொழிலெனக் கொண்ட மகளிர் பகுதி ஒன்று.
மற்றும் இவ் வேலைக் கெனவே கூலிக்காக அமர்த்தப்பட்டவர்கள் மற்றொரு
பகுதி. ஐரிஷ் நாட்டிலுள்ள காருண்ணிய மாதர் குழாத்தினர் சிலரும் அதில் கலந்திருந்தனர். அவர்கள் தங்கள் அறமகளிர் (Nuns) ஆடை அணிந்து கொள்வதற்கு அனுமதிக்கப் பெற்றனர். ஆனால், அரசாங்க முறைப்படி உடைதரித் திருந்தவர்களைப் பார்த்தால் அது அதிசயமாகத்
தோன்றும். சாம்பல் வர்ணமுள்ள தளர் வங்கியும், கம்பளிச் சட்டையும், ஊதா நிறமுள்ள மேலாடையும், அதில் குறுக்கே ''ஸ்குட்டாரி வைத்தியசாலை'' எனும் செவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பட்டனவுமாய ஆடைகளே அவர்கள் அணிந்திருந்தர். அவைகள் எல்லாம் ஒரே அளவாகவே ஆக்கப்பட்டிருந்தன. ஆதலினால், வளர்ந்த மாதர்கள் குறுகிய உடைகளிலும், குட்டை மாதர்கள், நீண்ட உடைகளிலும் தோன்றுபவர்கள் போவிருந்தனர்.

இவ்வித வினோத உடைகளைத் தரித்து அவர்கள் வேண்டப்படும் இடத்தை அடைந்ததும், அவர்கள் எவ்வெவ்விடங்களில் அதிகமாய் வேண்டப்பட்டனரோ, அவ்வவ் விடங்களில் மாதர் நைட்டிங்கேலால் வெவ்வேறாக அமர்த்தப்பட்டனர். இப்பொழுது கொடிய பேதி நோய் கூற்றுவன் போலக் கொள்ளையாடிற்று. கிரிமியாவில் மழை
கொடூரமான குளிராக மாறியது. அதனால் பனியால் தாக்கப்பட்ட வீரர்கள் பல நூற்றுக் கணக்காகக் கொண்டுவரப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் ஆடைகள் கூட உறைந்து ஒட்டிக் கொண்டிருந்தனவாதலால், அவற்றை எண்ணைப் பதங் கொடுத்தே எடுக்க வேண்டியதா யிருந்தது. அவர்கள் துயரங்களைப் பற்றியதைகள் சொல்லொணாப் பயங்கரமானவை. ஆனால் எவரேனும் ஒரு சிறிதேனும் முணுமுணுத்தது கிடையா. அவர்கள் நோவை நீக்க எடுத்த முயற்சிகளுக் கெல்லாம் அவர்கள் நன்றியறி வுணர்ச்சி யுடையவர்களாகவே இருந்தனர். மரணத் தருவாயி லிருந்தவர்களுக் கெல்லாம் மாதர் நைட்டிங்கேல் அவர் மருங்கிருந்து அவர்களுடைய கடைசி விருப்பங்களைக் கவனித்து வந்தாள். வசந்தகால முழுவதிலும் விஷபேதி வாட்டிக் கொண்டே யிகுந்தது. பணி மாதரிற் சிலர் உணவுக் குறைவினாலும், உள்ளமும் உடலும் நெருக்கடியினால் ஒருங்குதாக்கப்பட்டன ராதலாலும் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் அம்மை நைட்டிங்கேலின் அரிய நட்பைப் பெற்றவள். ஏனையோர்களிற் பலர் பாலக்கிளவாவில் பணி செய்து வந்த ஐரிஷ் நாட்டு அறப்பணி மாதர்கள். அவர் உடலிடப்பட்ட குழிகளை யெல்லாம் போர் வீரர்கள் பூத்தருக்கள் நாட்டிப் பொலிவு பெறச் செய்தனர். ஆகவே, தலைமை மாதர் 1855 மே மாதம் கிரிமியாவிலுள்ள வைத்திய சாலைகளைப் பரீட்சிக்கச் சென்ற பொழுது அவைகளைப் பார்வையிட்டனள். 'அமைதி கிடைக்கும் ஒவ்வொரு கணமும் அவர்தம் கடமையினின்றும் வழுவினவராவர்? என்னும் உணர்ச்சியை நீக்கி, ஓய்வுற்று, கப்பல் மேல் தட்டிலமர்ந்து கருங்கடல் தண்ணீரைக் கவனித்த வண்ணமா யிருத்தல் எவ்வளவு கனிப்பினை நீக்கும். அவளுடன் சில அறப்பணி மாதரும் அங்கிருந் தனர். பின்னும் அவள் தன் நண்பர் பிரேஸ் பிரிட்ஜ் அவண் வைகினர். அவருடைய
மனைவி பிரேஸ் பிரிட்ஜ் மாதரே ஸ்குட்டாரியிலுள்ள பண்டகசாலைப் பொறுப்பை வகித்திருந்தவர். அங்கு பன்னிரண்டாண்டுப் பருவமுடைய தாமஸ் என்னும் தமுக்கடிக்கும் பையன் ஒருவனும் உடனுறைந்து தான். அவனுடைய இயற்கையே அடிக்கடி ஒவ்வொன்றிலும் தமாஷ் விளைத்துப் பொழுது போக்குவதற்கான வினோதச் செயல்களைப் புரிந்து மகிழச் செய்வான். அவர்கள் மயக்கமுற்றுத் தோன்றும் பொழுது அவர்களிடம் மனவெழுச்சியை வருவிப்பான்.

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 


No comments:

Post a Comment