Friday, September 4, 2020

 

நெஞ்சு விடு தூது

(ஆரியூர் -வ, பதுமநாப பிள்ளை.)

கண்ககளுக்கும் கருத்துக்கும் ஒருங்கே பெருங் களிப்பூட்டும் இயற்கை யின்பக் காட்சிகள் பற்பல நிறைந்த தொரு பூஞ்சோலை. கரத்தில் செங்கரும்பு வில் ஏந்தி முதுகில் ஐம்மலர்க் கணைகள் நிறைந்த அம்புப் புட்டிலைத் தாங்கி தென்றல்-தேர் ஏறி மாரவேள் பவனி வரும் மாலை வேளை. பலவகை நறுமண மலர்களில் படிந்த பூந் தென்றற்
காற்று, இனிய நறு மணத்துடன் மென்மையாக வீசிக்கொண் டிருக்கிறது. அச் சோலையி னிடையிலுள்ள அழகிய தொரு செந்தாமரைக் குளத்தின் சரையிலே- பசும்புல் தரையிலே -- சுமார் பதினெட்டு வயது மதிப்புடைய அழகிற் சிறந்த இள மங்கை ஒருத்தி அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளது மலர் முகத்தில் நிலவும் புன்னகையை இப்பொழுது காணோம்; அவளது அழகிய கருவிழிகளி னின்றும் அடிக்கடி கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருக்கிறது. அவளெதிரிலே, ஐந்தாறு அழகிய இள மங்கைகள் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் வடிவழகிற் பன் மடங்கு சிறந்து விளங்கும் அந்த சுந்தரி, தன் எதிரில் அமர்ந்து கொண்டுள்ள மற்ற மங்கைகளை நோக்கிப் பின் வருமாறு கூறுகிறாள்: -

''அன்பிற் சிறந்த இன்னுயிர்த் தோழிகளே! எனது நிலையை உங்களுக்கு என்னென்று எடுத்துக் கூறுவேன்? உங்களுக்கு என்னிடம் எவ்வளவு அன் புண்டென்பதை இப்பொழுதே நான் உணர்கிறேன். என்னைப் பிரிந்து சென்ற எனது இன்னுயிர்த் தலைவராகிய தென்னரங்கத்தின்ன முதரிடம் உங்களுள் எவரை யேனும் தூதனுப்பி யிருப்பின், எனது கவலை நீங்க இதற்குள் எனக்கு ஒரு நற்செய்தி கிடைத்திருக்கும். ஆனால், என்னை மனம் கவர்ந்து மையலேற்றி மயக்கி விட்ட எனது ஆருயிர்த் தலைவரிடம் தெரிவிக்க வேண்டிய செய்தியை, உங்களிடம் வெளியிட எனக்கு மிகுந்த வெட்கமாக இருந்தது. அவ்வாறு
உங்களிடம் வெளி யிட்டால், நீங்கள் என்னை நாணமற்ற மங்கையாகக் கருதி பரிகசிக்கத் தொடங்கி விடுவீர்களோ என்ற பெரும் பயமும் என் அகத்தினின்றும் அகன்ற பாடில்லை. அவ் வெட்கத்தையும் அச்சத்தையும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஆற்றல்
எனக்கு இல்லாமற் போய் விட்டது. அதன் பயனாக, எனது மனோகரராகிய மணிவண்ணரிடம் உங்களுள் யாரையும் தூதாக அனுப்ப நான் துணியவில்லை.

எனது ஆருயிர்த் தலைவராகிய சீர ரங்கேசரிடம், அப்பெருமானது திருமேனியைப் போன்ற பச்சை மேனியும், அவனது செங்கனி வாயைப் போன்ற செம்பவள வாயும் பெற்று எப்பொழுதும் 'ரங்கா' 'ரங்கா'என்று கத்திய வண்ணமே எங்கும் பறந்து திரிந்துகொண்டிருக்கும் கிளிகளை யேனும் தூதனுப்பி யிருக்கலாம். ஆனால், மார வேளைத் தாங்கித் திரியும் வாகனமாகிய கிளியை, அம் மாரனை ஈன்ற திருமாலிடம் தூதனுப்பத் துணிய முடியவில்லை. மேலும், 'சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை' என்னும் முது மொழிக் கிணங்க, நான் சொன்னதையே பெருமாளிடம் திருப்பிச் சொல்லக் கூடுமே யன்றி, நான் இங்கு படும் பாட்டை எனது உண்மை நிலையை உள்ளபடி உணர்ந்து கொண்டு, தமது சொல் வன்மையினால் கேட்போர் நெஞ்சு கரைந்து உருகும்படி செய்விக்கக் கூடிய சக்தி கிளிகளுக்கில்லை. நான் இங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் மனத்துயர் எத்தகைய தென்பதைச் சிறிதும் அறியாதவர்களைத் தூதனுப்புவதால் பயனென்ன?

இந்த சோலையிலே மலர்ந்துள்ள பலவகைப் பட்ட மலர்களினின்றும் பெருகிய செந்தே னருந்திச் சிந்தை மயங்கித் தந்தா-தனா' என்று பல வகைப் பட்ட பண்கள் பாடிப் பறந்து திரிந்து கொண்டிருக்கும் பொன் வண்டுகளைத் தூதனுப்பவும் நான் துணியவில்லை. மாரவேளின் செங்கரும்பு வில்லின் நாண்கயிறாக விளங்கும் அவற்றை, தேவ தேவனாகிய திருமாலிடம் தூதனுப்புவது நன்றோ? மேலும், மது வருந்தி மதி மயங்கிப் பித்து பிடித்தனவே போல் தம்மை மறந்து பறந்து திரிந்து கொண்டிருக்கும் அவ் வண்டுகள், நான் படும் பாட்டை உள்ளபடியே உணர்ந்து கொண்டு எனது நிலையை எம்பெருமானிடம் தெளிவாகத் தெரிவிக்கக் கூடிய சக்தி யுடையன வாகுமோ? அவற்றைத் தூதனுப்புவதாலும் நற்பயன் எதுவும் விளையா தென்பதை நன்கு உணர்ந்து கொண்டு விட்ட நான், அவற்றைத்
இசையவில்லை.

அதோ, அந்த தாமரைக் குளத்திலே, நீல நீரின் மேல் கம்பீரமாக நீந்திக் கொண்டிருக்கும் அந்த அன்னப் பறவைகளைப் பார்க்கப் பார்க்க மிகுந்த இன்பமாகத்தானிருக்கிறது. அவற்றைப் பார்க்கும் போது, முன்னொரு கால் 'அன்னமதாகி அற ர லுரைத்த' அரங்கேசரின் நினைவு அகத்தில் தோன்றுகிறது. எனினும், அவற்றைத் தூதனுப்பவும் நான் விரும்பவில்லை. நீர் கலந்த பாலை அவ்வன்னப் பறவைகள் அருந்தும் போது அவை பாலினின்றும் நீரைத் தனியே பிரித்து விடும் இயல்பினவாக இருப்பதால்,
அவற்றை எனது ஆருயிர்த் தலைவரிடம் தூதனுப்பி விட்டால், அவை அவருக்கும் எனக்கும் இடையிலுள்ள இணையற்ற நட்பைப் பிரிக்க முயன்று விடுமோ எனும் பயமும் எனக்கு உண்டு. ஆதலால், அவ்வன்னப் பறவைகள் அக் குளத்தில் வரிசை வரிசையாக நீந்திக்கொண்டிருப்பது கண்டும், எம்பெருமானிடம் தூதனுப்ப அவற்றுள் எதையும் தேர்ந்தெடுக்க என் மனம் இணங்கிய பாடில்லை.

மற்ற எவரையும் எளிதில் நம்பாத நான், முடிவிலே தஞ்ச மடைந்தார்க்கு அஞ்சல்' என்று அருளும் அழகிய மணவாளப் பெருமாளிடம் எனது நெஞ்சையே தூதாக அனுப்பத் துணிந்து விட்டேன். என்னைச் சுற்றிலும் எவ்வளவு பேர் சூழ்ந்திருப்பினும், அவர்களுள் எவரும் எனது நெஞ்சைப் போல் எனக்கு உதவ மாட்டார்களென்ற எண்ணத்தினாலே,
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரைத் தழுவி மகிழக் கொண்ட ஆர்வப் பெருக்கினாலே, எனது ஆருயிர்த் தலைவராகிய அணியாங்கேசரிடம் எனது நெஞ்சையே தூதாக அனுப்பினேன். நான் படும் பாடு எத்தகைய தென்பதை நான் எடுத்துச் சொல்லாமலே, அந் நெஞ்சு நன்கு உணர்ந்து கொண்டு விட்டிருக்கிறது. மேலும், மற்றெல்லாவற்றைக் காட்டிலும் எம்பெருமானிடம் மிக மிக விரைவில் சென்று விரைவில் திரும்பி வரக் கூடிய மகத்தான அற்புத சக்தி அந் நெஞ்சுக்கு உண்டென்பது, நேற்று வரையில் எனக்குப் பேராறுதலாக இருந்து வந்தது. அந் நெஞ்சைக் காட்டிலும் என்னிடம் அன்பும் ஆர்வமும் பரிவும் மிகுந்தவர்கள் வேறு எவருமில்லை யாதலின், அந் நெஞ்சை தென்னரங்கச் செல்வனாரிடம் தூதனுப்புவதால் கோரிய சீரிய காரியம் விரைவில் இனிது நிறைவேறக் கூடுமென்னும் நம்பிக்கை எனக்கு மிகுந்திருந்தது. எனது நெஞ்சு என்னிடமிருந்து பிரிந்து எம்பெருமானிடம் சென்ற போதே, நான் அனுபவித்துக் கொண்டிருந்த எல்லா வகைப்பட்ட துன்பங்களுக்கும் விமோசன காலம் நெருங்கி விட்டதென்று நான் கொண்ட மகிழ்ச்சிப் பெருக்கு எத்தகைய தென்பதை வாயினால் சொல்லி உணர்த்தக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. ஆனால், அந்நெஞ்சை அரங்க நாயகரிடம் தூதனுப்பியது பெரும் பிழை என்பதை இப்பொழுதே நான் உணர்கிறேன். நானே எனக்குத் தேடிக் கொண்ட பெரும் பிழையை நினைக்க நினைக்க, எனக்குத் துன்பமும் ஆத்திரமும் மேன் மேலும் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. எனது நெஞ்சை எனது ஆருயிர்த் தலைவரிடம் தூதனுப்பியதன் பயனாக, ஏற்கெனவே நான் அனுபவித்துக் கொண்டிருந்த துன்பம் இப்பொழுது இரட்டித்து விட்டது. இப் பெரும் பிழையை - இக் கொடுந்துயரை--இனி நான் யாரிடத்தில் முறையிட்டு ஆறுதல் பெறக் கூடும்? எனது நெஞ்சே என்னை வஞ்சிக்கத் துணிந்துவிட்ட போது, இனி என் பக்கலில் மனமிரங்கக் கூடியவர்கள் வேறு யார்?

எனது நெஞ்சிடம் நான் என்ன சொல்லி யனுப்பினேன். தெரியுமா?

"வாராய் மட நெஞ்சே! உனக்கும் எனக்கும் தனிப் பெருந் தலைவராக விளங்குபவர் எவர் தெரியுமா? அவர்தான், இரு காவிரிகளின் இடையிலே - அழகிய சோலைகளின் நடுவிலே- வேதங்களின் உயரிய தத்துவப் பொருளை உணர்த்தி நிற்பதாக ஒப்புயர்வற்ற தனிப் பெருஞ் சிறப்புடன் விளங்கும் எங்க விமானத்திற்குள்ளே - ஐந்தலைகள் கொண்ட அரவாசப் பள்ளியின் மேலே - அறிதுயில் கொண்டு கிடக்கும் ஆதிமூலப்
பரம்பெருளாகிய அரங்கநாயகர் ஒருவரே, உனக்கும் எனக்கும் தனிப்பெருந் தலைவராவர். அவரது சிறப்புகள் அளவிட முடியா தன வாகும். அவரது திருவருட் சிறப்புகளைப் பேசிப் பேசி- அவரது கல்யாண குணங்களைப் புகழ்ந்து பாடிப் பாடி- வடமொழி வேதங்கள் நான்கும், அவற்றின் முடிவு காண முடியாமல் பெரிதும் தவித்து நிற்கின்றன. ஆதலால், சிற்றுருவம் பெற்றுள்ள யும் எம்பெருமானது கல்யாண குணங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விடாதே. அதனால், உன்னை நீயே மறந்து சிற்கும் நிலை நேர்ந்துவிடும். நான் மறைகளாலும் கண்டு பிடித்தற்கு அரியனவாகிய எம்பெருமானது கல்யாண குணங்களுக்கு எல்லை காண முடியவில்லை யென்பது உனக்கு அவமான
மாகாது. அக் கல்யாண குணங்களை அவ் வெம்பெருமானே உணத்ர்தணர்ந்து கொண்ட ஆழ்வார்கள் பதின்மரும், அவற்றைத் தமது அருள் கனிந்து பக்தி ரஸம் நிறைந்த செந்தமிழ்ப் பாக்களில் தெளிவாக விளக்கிக் காட்டிச் சென்றிருக்கின்றனர். ஆதலால், அத் திருவருட் செல்வர்களாகிய ஆழ்வார்கள் அகம் கரைந்து உருகிப் பாடிய - தேவாமிர்தத்தினும் பன் மடங்கு சிறந்த சுவையை உடைய-அருட்பாக்களைப் பெரிதும் 'உருகிக்கரைந்து நின்று விண்ணப்பித்துத் துதித்து திருவரங்கச் செல்வனாரின் திருவுள்ளத்தைப் பெரிதும் குளிர்விக்கக் செய்ய வேண்டுவதே உனது முதற் பெருங் கடமையாகும்.

உனது விண்ணப்பத்தால் பெரிதும் திருவுள்ளம் உகந்தருளும் திருவரங்கச் செல்வனார், உன்னை நோக்கி உனது விருப்பம் என்னவென்று 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பெரும் பரிவு'டன் கேட்டருள்வார். அவ்வேளையிலே, அசட்டுத்தனமாக அப் பெருமானிடம் ரீ வேறு எதையேனும் கேட்டுவிடாதே.

“தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர்மூடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் உடை அம்மான்' - ஆக விளங்கும் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனரது செங்கமல வண்ண மென்மலர்த் திருவடிகளின் மேல் கிடக்கும் 'தெய்வத் தண்ணந்துழாயின் மேலேயே, எனக்குப் பெரு விருப்பமாயிருக்கிறது. பகலும் இரவும் அவன் ஒருவனையே நினைந்து நினைந்து உருகிக் கொண்டிருக்கும் எனக்கு, அத் தெய்வத் தண்ணந் துழாய் ஒன்றே ஆறுதலும் ஆனந்தமும் அளிக்கக் கூடியதாகும். அப் பெருமானது 'தாட் பட்ட தண் துழாய்' எனது மார்பில் சேருமாயின், எனது கொங்கைகள் குதூகலித்துப் பூரித்து விம்மி, எனது ஹிருதயத்தை ஆனந்தக் கடலில் ஆழ்த்திவிடும். அத் திருத்துழாய் எனது தோள்களில் படுமாயின், இப்பொழுது எம்பெருமானது பிரிவாற்றாமல் பெரிதும் ஏங்கி மெலிந்து தளர்ந்து கிடக்கும் இத் தோள்கள், மகிழ்ச்சிப் பெருக்கால் இழந்த வளத்தைத் திரும்பவும் அடைந்து பூரித்து நிமிர்ந்து நிற்கும். அத் திருத்துழாய் எனது முடியின் மேல் படுமாயின், இப்பொழுது என்னைச் சூழ்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் எல்லாவகைப் பட்ட துன்பங்களும் தத்தம் வலியொடுங்கி விரைந்து விலகிச் சென்று விடும். ஆதலின், எனக்கும் உனக்கும் தனிப்பெருந் தலைவராய அழகிய மணவாளப் பெருமாளிடம் நீ சென்று நின்று, அவரது திருவுள்ளத்தைக் குளிர்விக்கும் ஆழ்வார்களின் அருட்பாசுரங்களால் அவரை உண்மைப் பேரன்புடன் துதித்து, அதற்குப் பரிசாக அவரது திருவடி மலர்களின் மேல் கிடக்கும் 'தெய்வத் தண்ணந்துழா'யை அளித்தருளுமாறு கேட்டுப் பெற்று வாங்கிக் கொண்டு என்னிடம் திரும்பி வந்து சேரக்கடவாய்.''

- என்று எனது நெஞ்சுக்குச் சொல்லிக் கொடுத்து, அதனை அணி
யரங்கச் செல்வனாரிடம் தூதனுப்பி வைத்திருந்தேன். அது திருத்துழாய் பெற்றுத் திரும்பி வருமென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து நெடுங்காலம் கடந்தும், அது இன்னும் என்னிடம் திரும்பிவந்து சேர்ந்த பாடில்லை.

இனிமேல், அந்த நெஞ்சைக் குறித்து வருந்தித்தான் என்ன பயன்?
நீல மேகத்தினிடையே ஒப்புயர்வற்ற சீரிய பேரருள் ஒளி பொருந்திய மின்னல் ஒன்று நிலைத்து நிற்பதே போல், கருணை பொழியும் கண்களுடன் கூடியவரான திருமாமகளார் சிங்காரமாக வீற்றிருக்கும் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரின் திருமார் பின் அழகில் எனது நெஞ்சு ஈடுபட்டு விட்டிருப்பின், அந்த திவ்ய ஸேவானந்தத்தை அனுபவிப்பதை விட்டு விட்டு என்னிடம் திரும்பிவர அதனால் முடியுமோ? மேலும், அவனது வீரத் தோள்களின் பேரழகில் எனது நெஞ்சு ஈடுபட்டு விட்டிருந்தால், அது அந்த ஆனந்தானும் வத்தை விட்டு விட்டு இங்குவர இயலுமோ?

"என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்!

யான் இனிச் செய்வது என்? என் கெஞ்சு என்னை

நின்னிடையேனல்லேன்' - என்று நீங்கி,

நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு

பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு

பால் மதி ஏந்தி ஓர் கோல நீல

நன்னெடுங் குன்றம் வருவதொப்பான்

நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே!''

 

ஒளி பொருந்திய நெற்றியுடைய எனது இன்னுயிர்த் தோழிகளே! இனி, என்னால் என்ன செய்ய முடியும்? முன் பெல்லாம் எனக்கு உரியதாக இருந்துவந்த எனது நெஞ்சு இப்பொழுது என்ன செய்துவிட்ட தென்பதை நீங்கள் அறிவீர்களா? அது, இப்பொழுது என்னை நோக்கி, “இனிமேல் எனக்நம் உனக்கும் எவ்வித சம்பந்தமு மில்லை"- என்று கூறிக் கட்டறுத்து எனது பிணிப்பினின்றும் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு என்னி
டத்தினின்றும் நீங்கிச் சென்று, செஞ்சுடர் வெங்கதிரோனையும் வெண் சுடர்த் தண்மதியையும் ஒரே காலத்தில் தாங்கிய வண்ணம் ஓர் நீலக் கோல மலை நடந்து வருவதேபோல், வெற்றி வீரச் சக்கர - சங்கங்களைப்பற்றிய திருக்கைகளுடன் வரும் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரின் செங்கமல வண்ண மென மலரடிகளையே அடைக்கலமாக அடைந்து விட்டது. திருவரங்கச் செல்வனாரின் திருமார்பின் அழகிலும் திருத்தோள்களின் அழகிலும் மயங்கி இன் புற முயங்கிப் பரவச மடைந்து நிற்கும் எனது நெஞ்சு, இப்பொழுது என்னையும் மறந்து - தன்னையும் மறந்து - சொற்களினால் உணர்த்த
முடியாத-வர்ணனைக்கு அடங்காத - தனிப்பெரும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், அந்த நெஞ்சு என்னுடன் நெடுங் காலமாகச் சேர்ந்திருந்ததைக் கூட சிறிதும் சிந்தித்துப் பாராமல், எனது உடலை இங்கே கிடந்து தலிக்கும்படி விட்டு விட்டு தான் மட்டும் தன்னந் தனியாக திருவரங்கப் பெரு நகரில் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பது முறை தானோ? அந்த நெஞ்சு அனுபவிக்கும் ஆனந்தத்தை, எனது உடல் முழுதும் அனுபவித்துப் பரவச மடையும்படி, திருவரங்கச் செல்வனார் எளியேனைத் தம்மிடம் அழைத்துக் கொண்டருள என்று தான் திருவுள்ளம் இரங்கியருள் வாரோ அறியேன். அவர் அவ்வாறு செய்தருளத் திருவுள்ளம் இரங்கியரு
ளும் வரையில், இம்மாய உலக வாழ்க்கையிலே எனக்கு அமைதியேனும் ஆறுதலேனும் ஏற்பட இடமுண்டோ?''

(இக் கட்டுரை, திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்திலுள்ள “நீரிருக்க''- என்று தொடங்கும் இருபத்து நான்காவது திருப்பாசுரத்தின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டதாகும்.)

ஆனந்த போதினி – 1937 ௵ - மே ௴

 



 

                                 

No comments:

Post a Comment