Wednesday, September 2, 2020

 

தலை நிமிர் தமிழா

(“ஓம்”)

நான் யார்?

 

நான் யார்? ''நான் மனிதன்''. இது தான் தற்காலத் தமிழன் ஒவ்வொருவனின் வாயினின்று வரும் விடை!


 இவ் வினாவை உன் எதிரியும் மனத்திடம் கேட்டுத் தெளி! "நான் தமிழன்” நாணத்துடன் நவிலும். அந்தோ! கூறுவதற்குக் கூட எவ்வளவு வெட்கம்! எத்துணை வெட்கம்......! எண்பது கோடிக்கு மேலும் எண்ணி மகிழும் உனது நெஞ்சத்திற்குத் தமிழன்" இதைக்கூட நினைக்க நேரமில்லையா?

 

இத்தனைக்கும் காரணம்......! அன்னியரிடம் நீ கொண்ட மீளா அடிமை! நீ மட்டுமல்ல......! உன் மொழி! உன் நாடு! இவைகளுந்தான்-! உன் உன் வீர மெங்கே ஒளித்தது? தலை நிமிர் தமிழா!


மொழி!

 

பண்டையது...! சிறந்தது...! கடவுட்டன்மை உடையது என நீ கூறிக் கொள்ளும் தமிழ்" இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்துணை முறை-எத்துணை வகையில் சித்திரவதை செய்யப்படுகிறது? எவ்வளவு தூசு மண்டி இருக்கிறது? துடைத்து மெருகிடு! இதுதான் உனது முதற் பணி! தலை நிமிர் தமிழா!


நாடு

 

நீ வசிக்கும் நாடு எது? “தமிழ் நாடு" இப்படிச் சொல்லும் போதே உன் நாட்டின்பெருமை நன்கு விளங்கவில்லையா? இது மிகத் தொன்மையது! பல் வளங்களும் பல்கி யுள்ளது! எங்கு பார்த்தாலும் பச்சை யலைகள் பரந் தொளிரும் மருத நிலம் எவ்வயினும் அமைதியை ஊட்டி அழ கொளிரும் குறிஞ்சி நிலம் எத்திசை நோக்கினும் ஆநிரையும் மாநிரையும் மேயும் முல்லை நிலம் / எங்கணும் திரை மோதும் நெய்தல் நிலம்........! எங்கும் மனமிரங்கும் பாலை! இங்ஙனம் சிறந்த ஐவகை நிலங்கள் இந்த அவனியில் எங்கேனும் உண்டோ?

 

இத்தகைய தமிழ் நாட்டை அடிமையாக்கி விட்டாயே! இதுதான் உனக்கு அழகோ! புறப் பொருள் நூல்களிலே கண்ட உன் பொன்றாத வீர மெங்கே? கற் சிலைகளிலே......! கல் வெட்டுகளிலே......! கண்ட கலங்காத உள்ளம் எங்கே? எல்லாம் மண்ணோடு மண்ணாய் மடிந்துவிட்டளவே! " ஓட மருந்துண்டு உறங்கி விழுந்தாயே! தலை நிமிர் தமிழா!

 

 

தமிழா!

 

உன்னையே நீ எண்ணிப் பார்? இப்பொழுதுள்ள நிலைமையை - நெருக்கடியைக் கவனி! பெயரளவில் உன்னாடு! தமிழ நாடு- பொன்னா! மொழியோ......... அமிழ்தினுமினிய தமிழ் மொழி! - ஆலை பெருகிடுவதோ! அந்நிய மொழி! அந்நிய நாகரிகம்! இவைகளைக் காண உன் கண்கள் கூசவில்லையா! காதில் ..........!

 

தறுகண் வீரன் '' தனிசு” பொருன் என்று புகழப்பட்ட உன் மீது  இச்சமயம் போர்த்தி இருக்கும் ''கடன்' போர்வைகள் எத்துணை? இச் சுமைகளை எவ்வளவு நாட்கள் சுமந்து கொண்*ருப்பாய்?

 

பகைவர்கள் போரிலே புறபிடித் தோட அவர்களைப் புறங்கண்ட் உனக்கா இக்கதி? அன்னிய ஆட்சியைக் குழி தோண்டிப் புதைத்த நீ இப்பொழுது உனக்கே குழி தோண்டிக்
கொள்ளுகின்றாயே!

 

போனது போகட்டும்! இனியாவது அடிமைத் தளையை அறுத் தெறிய ஆசை கொள்! மொழி-நாடு - மக்கள் மூன்றையும் மீட்டுப் பெருமை பெறு!

 

'நாமார்க்குங் குடியல்லோம்--நமனை யஞ்சோம்!" என வெற்றி முரசு கொட்டி வீறிட்டெழு! இதோ ஆனந்தன் ''புத்தம்புதிய முறையில்-! புன்னகை நடமாட-! பொன் போல் மிளிர்ந்து புறப்பட்டு விட்டான்! உன் அஞ்ஞானம் ஒழிந்தது! எழுந்து நில் நிமிர்ந்து பார்! வெற்றி உனதே தலை நிமிர் தமிழா!

 

ஆனந்த போதினி – 1944 – ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment