Tuesday, September 1, 2020

 சொல்வகை ஓர்தல்

 

பொருளை நினைத்துணரும்படி அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியே சொல் எனப்படும். ஆற்றலாவது சொல்லாகியதனக்கும் பொருளுக்கு முள்ள தொடர்ச்சி. இச்சொல்லினால் இப்பொருள் அறியப்படும் என்னும் இறைவனியமமே ஆற்றல் என்பாருமுளர். ஆற்றல், வலி, சக்தி என்பன ஒரு பொருட் கிளவிகள். ஆற்றலில்லாதது சொல்லெனப்படமாட்டாது.

 

ஆற்றலும் முதியோர் வழக்கு, உபதேசம், நிகண்டு நூல், இலக்கண நூல்
 முதலியவற்றாற் கொள்ளப்படும். முதியோர் கூறியவாக்கியத்தைக் கேட்டு இளையோர் அறிந்து வழங்கும் முறைமை "புத்தகங் கொண்டு வா' என்று ஒரு முதியோன் கூறுங்கால் மற்றொருவனாற் புத்தகங் கொணரப் பட்டமையைப் பக்கத்தினின்ற இளையோன் கண்டு புத்தகங் கொணர்தலாகிய காரியம் இச் சொரறொடராலே தகழ்ந்தது என்றுணர்ந்து தானும் அவ்வாறு வழங்குவன். இவ்வாறுணர்ந்து வழங்குவதே முகியோர் வழக்காகும். உபதேசமாவது "இது பசு'' " இது கன்று' என்பன போலப் பொருள்களைச் சுட்டிக் காட்டிச் சொற்களைக் கூறி அறிவித்தல். நிகண்டு நூலாவது இன்ன இன்ன பொருள்களுக்கு இன்ன இன்ன சொற்களென்று சொற்பொருள்களை வரிசைப்பட அறிவிக்கும் நூல். இலக்கண நூலாவது பகுதி, விகுதி, முதலியவற்றின் பொருள்களை அறிவித்துச் சொற்களின் இயலபினையும், பொருளனையும், துணிவிக்கும் நூல். இவற்றலும் ஒப்புமை முதலிய பிறவற்றாலும் ஆற்றல் கொள்ளப்படும்.

 

உலகம் வழங்கி வருவதற்குச் சொன்னிகழ்ச்சியே காரணம். எந்தக் காரியமுஞ் சொல்லினாலேயே நிகழ்கினறது. கடவுளுடைய பிரமாணங்களாகிய விதிவிலக்குகளையும், பிறவற்றையுஞ் சொற்களே அறிவிக்கின்றன. பழையோர் சரித்திரங்களையுஞ் சொற்களே அறிவிக்கின்றன. மற்றும் செய்வன், தவிர்வன, வேண்டுவன முதலிய எல்லாவற்றையுஞ் சொற்களே அறிவிக்கின்றன. சொல்லென்னும் ஒளியில்லையாயின், அஞ்ஞானமாகிய இருள்பரந்து உலகத் தடுமாறும். ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிய மாட்டார். வேண்டும் பேறுகளைப் பெறுகலுங் கூடாது. இத் துணைச் சிறப்புடைய சொற்களைப் பிரயோகிக்குங்கால வழுப்பட வொட்டாது. ஆராய்ந்து கொள்ளுதல் யாவாக்கும் ஆவசியகம். சொற்களைத் தொடுத்துப் பேசுவோரும், எழுதுவோரும், செய்யுள் செய்வோரும், தாம் எடுத்துக் கொண்ட சொற்களிலே தாம் கருதிய பொருளை விளக்கும் ஆற்றல் உண்டோ? இன்றோ? என்பதனை ஆராய்ந்து தொடுத்தல் நன்றாகும். ஆற்றலில்லாதன கருதிய பொருளை விளக்க மாட்டா.

 

தமிழ் வாக்கியங்களிலே வருஞ் சொற்களெல்லாம் தமிழ்ச் சொற்களாய் வருதலே முறையாகும். முன்னோரால் வழங்கப்பட்டுப் பயின்று வந்த வட சொற்களும் வேண்டுழி வழங்குதற் குரியனவாகும் வடசொற்கும் தமிழ்ச் சொற்கும் இயைபுமுண்டு. திருவள்ளுவர் குறள் முகலிய இலக்கியங்களிலே வருஞ் சொர்களெலாம் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களேயாம். அற்பமாய் வடசொற்களு முன. அவையும் பயின்று வந்தனவேயாம். திசைச் சொற்களைக் காண்ட வரிது. காலத்திலே இத்திசைச் சொற்களைத் தமிழ்ச்சொற்களோடு கலந்துஞ் சிலர் பிரயோகிக்கின்றனர். அது நன்றன்று.

 

பெயர், வினை, இடை, உரி என்னும் சொற்களுள்ளும், செஞ்சொல்லாயுள்ளவைகளே தக்கனவாகும். செஞ் சொல்லாவது நேராற்றலினாலே தனக்குரிய பொருளை அறிவிக்குஞ் சொல். இதனை வடநூலார் வாசகம் என்பர். அது காரணச் சொல், இக்குறிச் சொல், காரணவிடுகுறிச் சொல் என மூவகைப்படும். காரணச் சொல்லாவது பகுதி, விகுதி முதலிய உறுப்புக்களின் ஆற்றலாற பொருளை விளக்குஞ் சொல். இடுகுறிச்சொல் உறுப்பாற்றலின்றிச் சமவாய வாற்றலாற் பொருளை விளக்குஞ் சொல், காரண விங்குறிச்சொல்லாவது உறுப்பாற்றலுடைய தாயினுஞ் சமவாய வாற்றலால் ஒருபொருளையே அறிவிப்பது.

 

மற்றைய இருக்கணச் சொல்லும், குறிப்புச் சொல்லும் நேராற்றலாற் பொருளை உணர்த்த மாட்டா. இலக்கணச் சொல்லாவது, அதன்பாலுள்ள குறியினாலே இப்பொருளுடையது என்று அறியப்படுவது. அது வழக்கும், பயனும் பற்றிக் கொள்ளப்படும். வழக்காவது தொன்று தொட்டு வழங்கி வந்த முறை. இதனாற் கொள்ளப்படுவது ஆகுபெயர் எனப்படும். பயனாம் கொள்ளப்படுவது விட்ட விலக்கணை விடாத விலக்கணை முதலியவாகப் பலவகைப்படும்.

 

குறிப்புச் சொல்லாவது குறிப்பாற் பொருள் பயக்குஞ் சொல். குறிப்பாவது கருதியறிவது. அது தனக்குரிய ஆற்றலாற் பிறப்பது, பொருட்குரிய ஆற்றலாற் பிறப்பது என இருவகைப்படும் கருதிய பொருளை நேரே விளக்காது, சார்பு, பகை முதலியன பற்றி விளக்கலால, அவையுங் குறிப்புச் சொல் எனப்படும். சார்பு முதலியனவாவன: - சார்பு வினை, இனம், இடம் என்பன. வடநூலார் இவற்றோடு பிரிவு, உடனிகழ்ச்சி, பகை, பயன், சமயம், காலம், பொருத்தம் முதலியவற்றையுங் கொள்வர்.

 

சொற்களை இன்னும் பலவகையாக வகுப்பாருமுளர். அவைகளை ஆங்காங்கு கண்டு கொள்க. வாக்கியங்களை எழுதுவோரும், செய்யுள் செய்வோருந் தாங்கள் எடுத்துக் கொண்ட சொற்களை எல்லாம் பரீட்சித்து நற் சொற்களைத் தெரிந்து பிரயோகித்தல் வேண்டும். வழுச் சொற்களையும், திசைச்சொற்களையும், இயை பில்லாச் சொற்களையும், திரிசொற்களையும், வழக்கில்லாச் சொற்களையும் பிரயோகிப்பாராயின், அவை சிறப்படைய மாட்டா. பரிமேலழகர், சேனாவரையர், சிவஞான சுவாமிகள் முதலியோர்களுடைய வாக்கியங்களும், திருவள்ளுவர் கம்பர் முதலியோர்களுடைய செய்யுள்களுஞ் சிறந்து தோன்றுவதற்குக் காரணம் பெரும்பாலும் சொற்பிரயோக வன்மையினால் என்றே கொள்ளுதும்.

 

பிற்கால வித்வான்களுள்ளே ஆறுமுகநாவலரவர்களுடைய பெரிய புராண வசனம், பாலபாடங்கள் முதலிய கத்திய ரூபங்களெல்லாம் யாவராலும் பாராட்டிக் கொள்ளப்பட்டதும் சொற்பிரயோக வன்மையினால் என்றே கொள்ளுதும். ''வாசகம் வல்லார் முன்னே யாவர் வாய் திறக்க வல்லார் " என்று கம்பருங் கூறினார்.

 

இக்காலத்திலே சிலர் சிறுவர்களுக்குக் கற்பிக்கும் பால பாடங்களைத் தானும் ஆங்கில நடையிலே எழுதி விடுகின்றார்கள். அந்நடை தமிழ் கற்கும் சிறுவர் மனத்திற் பதியுமாயின் பின்னர் திருத்தம் எப்படி வரும்? வாக்கிய நடை மாத்திரமோ சொற்களையும் பிழைப்படப் பிரயோகிக்கின்றார்கள்; கருப்பு என்பதற்குக் கறுத்த என்றும், பாவித்தல் என்பதற்கு வழங்குதல் என்றும், நிலவு என்பதற்குக் கிரஹணம் என்றும் பொருள் கூறுகின்றனர். இச் சொற்களிடத்திலே இப்பொருள்களை உணர்த்தும் ஆற்றல்கள் இல்லையே! சொற்களைப் பிரயோகிக்கும் போது இச்சொற்கும், இப்பொருட்கும், ஆற்றலுண்டா என்பதை ஆராய வேண்டாமா? ஆற்றலில்லாதன அசதியாடற் கிடனாகும்.

 

செய்யுள் செய்வோருக்கும், வாக்கியம் எழுதுவோருக்கும் சொற்களைப்பரீட்சித்துத் தக்கனவற்றை எடுத்துக் கொண்டு தகாதனவற்றை விலக்குதல் ஆவசியகமே யாகும்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment