Friday, September 4, 2020

 

பகவான் புத்தரின் பாத மகிமை

(பூனுக்கலை எம். எஸ். ஆதிழலன்.)

பூரணச் சந்திரன் தனது முழு அதிகாரத்தையும், உலகிஏ செலுத்துவதற்கு வசந்த ருது காலமே தகுதியுடையதெனக் கருதினான் போலும். சில காலங்களில் அம்மதியின் அதிகாரத்துக்குச் சில தடைகள் ஏற்படுவது இயற்கையே. மழைக்கம்மல், மூடுபனி, சிறுமழை, பெருமழை இவ் வகையிலுள்ளவைகள், சந்திரனுடைய பிரகாசத்தை மாற்றி
விடக்கூடியதே. இன்னும், இலங்கையின் மேல்பகுதியில் மேற்குறித்த மூடுபனி வகைகள், அதிகமாய்க் காணும். மதியொளியை மாத்திரமல்ல, ரவி யொளியையும் மறைத்து விடும். விளக்கணைப்புத் திட்டத்துக்கு இவை உதவி புரியும். ஆனால் நாம் குறிப்பிடும் தினத்தில் எவ்வகைத் திட்டமோ, பனியோ, தூரலோ, முழுமதியின் நல்லொளியால் வெட்கின
வெனலாம். இவ்வாறு வசந்த ருதுவில், அம்மதி தனது வெள்ளிய கிரணங்களை மிக ரமணியமாக உலகிற் பரப்பினன். சம சீதனத்தை ஜீவ ராசிகளுக்குத் தந்து குதூகலப் படுத்தினன். ஆடவர், பெண்டீர், அருமைக் குழந்தைகள் முதலிய யாவர்களின் உளத்திலும், சந்தோஷ ஊற்றை அன்றிரலில் உண்டாக்கியவை அந்த முழுமதியே யாகும். சிறப்பு செங்கதிர் இடப ராசியிலும், சீர்பெறு மாமதி விருச்சிக அரணிலும், சம நோக்காக உலவும் காலாகிய, கடந்த வைகாசி மாதம், பௌர்ணமியும், விசாகமும், கூடிய தினத்தையே நாம் இங்ஙனம் குறிப்பிடுகிறோம். நீர்வளம் நிலவளம் மிக உன்னதமா யமைந்த இலங்காபுரியின் ஓர் பகுதியில் இரு மருங்களிலும் பற்பல விருக்ஷங்கள், செடி கொடிகள் தானாகவே மிக்க வனப்புடன் செழித்து வளர்ந்து, அச் சாலையை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

அதன் வழியாய்க் கும்பல் கும்பலாகவும், தனித்தனியாகவும், பல மாந்தர்கள் பலவித சந்தோஷ வார்த்தைகளைப் பேசிக்கொண்டு அதிக உல்லாசமாகக் கால் நடையாக நடந்து வந்தனர். மோட்டார் சைக்கிள் முதலிய வாகனங்களின் செளகரியத்தை, சோமு அன்று தினம் வெறுத்ததும் முழு மதியின் அன்பினாலேயே. சோமுவின் இல்வாழ் துணைவி ராதா, ஒன்றரை வயதுள்ள தனது செல்வப்புதல்வன் "மணி" யைத் தூக்கிக் கொண்டு கொஞ்சிக் குலாவி வந்தனன். மணிக்கு ஓர் சந்தோஷம் கிளம்பி விட்டது. வானத்தை அண்ணாந்து பார்த்தான். ''அம்புலி! அம்புலி!” என்றழைத்தான். ராதாவுக்கு ஆனந்தம். “எங்கே குழந்தாய்! இன்ன மொருதரம் சொல்லப்பா" பின்பும் மணி: - "அம்புலி! அம்புலி!!" சோமுவுக்கு பரமானந்தம். மணியை வாங்கி முத்தமிட்டான். "கண்ணே! ஆடிய பாதா என்று சொல்' மணி, "ஆயப்பாய!" ராதாவுக்கும் சோமுவுக்கும் மதலையின் அன்புச் சிரிப்பு!

இவர்களோடு கூட வந்த இவர்கள் அடுத்த வீட்டு சிங்களச் செல்வி லீலா, உடனே மணியை வாங்கி இரண்டு கன்னங்களையும், மாறி மாறி முத்தத்தால் நிறைத்து விட்டனள். என் செல்வமே! இங்கு பார்! பொன்னான் நெற்றியில் என்று சொல்'' என்றும் லீலா. மணி பொண்ண நெட்ன்" என்றான் கொஞ்சிக் குன்றின் மழலைச் சொல்லால். இதைக் கூர்ந்து
கவனித்து மகிழ்வுற்று இவர்களோடு வரும் பௌத்த சோதான் ஜெயபரதன்
வெகு விரைவொடு தனது மனைவி லீலா கரத்தில் மிளிரும் செல்வனை, அப்படியே வாரி எடுத்து மார்போ டனைத்துக் கொண்டான். கொஞ்சம் பாக்கியாக லீலா, வைத்திருந்த முத்தங்களை சுதனின் கன்னம், பாலம், உச்சி முதலிய ஸ்தானங்களிலெல்லாம் கொடுத்து பூர்த்தி செய்து விட்டனன். மதலையை நோக்கி, “அன்பின் பெருக்கே! நான் சொல்வதைச் சொல். அம்புலி, அம்புலி! ஆடியபாதா!! பொன்னான நெற்றியில்!!! பொட்டொடு பொட்டு!!!" என்று வரிசையாய்ச் சொல்லிக் கொடுத்தான் ஜெயவரதன்.

மணி, 'அம்புலி அம்புலி! ஆஹீம்!! புட்டு புட்டு!!!'' என்று மழலை மொழியை தேனாய்ச் சொரிந்தான். சோமு, ராதா, லீலா, ஜெயவரதன், நால்வரும் அத்தேனை கனிவோடு பருகினர். எல்லோருக்கும், ஆனந்த சிரிப்பு. எவ்வளவு குதூகலம்! என்ன குழந்தையின் அன்பு! மத பேதமற்ற இவர்களின் ஒற்றுமை எத்தகைய உயர்வு?

"குழலினி தியாழினி தென்பரம் மக்கள்

மழலை சொற் கேளாதவர்."

 

எனும் நாயனாரின் திருவாச்சை பிரதியக்ஷமாய்க் கண்டு ஆனந்த வாவியில் ஆழ்ந்து களித்தனன் சோமு.

இவர்கள் பின்னால் ஓர் கார் வந்தது. அதில் அதிகார வேட்டைப் புலி இரண்டு சாய்ந்து கிடந்தன. அப் புலிகளுக்கு அக்கார் சொந்தமா? இல்லை. இரவலாகத்தா னிருக்கும். பெட்ரோல் கூப்பன் கால மல்லவா? புலிகள் யாவரெனில் "கடைசி இந்திய னொருவன் இலங்கையை விட்டுப் போன பின் றான் என் மனம் நிம்மதி யடையும்" என்று சொன்னவர் அதிலொருவர். ஜெயவரதன் கூட்டத்தாரை மேற்படி ஆசாமி கூர்ந்து கவனித்தார். இத்தகைய அன்னியோன்னியமாய் இவர்கள் பரவச மடைகின்றார்களே! இவர்களுள் மதபேதம், சுயநலம், வீண் ஜம்பம், ஒன்றையும் காணவில்லேயே! நாடு கடத்தும் திட்டம் நம் வார்த்தை யளவிலே நின்று விட்டதே! என் அந்தப் புலியார் தன் மணத்தைப் புண்ணாக்கிக் கொண்டார். கண்களை கரங்கள் மூடிக்கொண்டன. ஏன்? வெட்கமும் அகம்பாவமுந்தான்.

"கொஞ்சம் நில்லுங்கள். பின்பு நடக்கலாம். தம்பிக்கு அந்தப் பாட்டை இன்னும் சொல்லிக் கொடுங்கள்' என்று சொல்லிக்கொண்டே லீலா, தான் வைத்திருந்த குங்குமச்சிமிழை, ராதாவிடம், “இதோ பார் தம்பிக்" கென்று காண்பித்து விட்டு, மணி இடம் போய் தம்பி! என்றாள். ஜெயவரதன் சொல்லிக் கொடுக்கிற பாட்டை புட்டு புட்டு, என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் செல்வன். அதே நேரத்தில் தனது பௌத்திர விரலால் சிமிழிலிருந்த குங்குமத்தைத் தொட்டு மணியினுடைய அழகு பெறப் படர்ந்த நெற்றியில் லீலாவும் கொஞ்சுதலாக புட்டு புட்டு என்று சொல்லிக் கொண்டே திலத மிட்டாள். மணிக்கு சிரிப்புக்கு மேற் சிரிப்பு. சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கிறான். கீழே விழுந்து விடாதபடி தன் அன்பரிடம் மணியை வாங்கி ராதாவிடம் கொடுத்தாள் லீலா,

ஜெய: - சோமு! சந்திரபிரபை இன்று எவ்வளவு அழகு பார்!

சோமு: - "ஆம் இன்று ஓர் புனிதமான நாளல்லவா?

''உண்மைதான் பௌர்ணமிக்கு நாம் பாஞ்சாலை (பெளத்தமத ஆலயம்) போய் வணங்கி வருகிறாள் தானே?"

ஆம்! வேறு மாதங்களில் நிகழும் பெளர்ணமிக்குமேல், இம்மாதம் இன்று வந்த சந்திரனுக்கு அதிக மகிமை உண்டு. அது உங்களுக்குத் தெரியாதா?"

''தெரியும். இன்று "புத்தர் ஜெனித்த நாளெனச் சொல்லப்படுகிறது அதனாற்றான் இன்று விசாக"ப் பெருநாளென்று நாம் அந்தப் பகவான் ஆலயத்துக்குப் போய், தரிசித்து வருகிறோம். ஆனால், அவரது ஜனனத்தைக் குறித்த முழு விபரம் தெரியவில்லை.'

சரிதான்! நீங்கள் எப்படித் தெரிந்து கொள்ளலாம்? பெளத்த மதத்தைச் சார்ந்தவர்காளல்லவா நீங்கள்?"

லீலா குறுக்கிட்டாள். சோமுவைப் பார்த்து, "என் மதமென்று நீங்கள் பிரித்துப் பேசுகிறீர்கள்? எம்மதமும் சம்மதமில்லை யென்று நினைக்கிறீர்கள் அப் பகவானுக்கு? அவர் பிறப்பின் விவரம் நீங்களும் அறிந்திருக்கத்தானே வேண்டும்."

"நாங்கள் அதை அறிவதற்குத்தான் என்ன உரிமை இருக்கிறது? எங்களை நாடு கடத்த எண்ணி நீங்கள் புறக்கணிக்கிறீர்களே யல்லாது எவ்வகையில் எங்களுக்கு உரிமை தந்திருக்கிறீர்கள்? அந்தப் புத்தருக்கும் அது சம்மதந்தானா?"

ஜெய: - சகல உரிமையும் உங்களுக்கு உண்டு. வாயாடி வம்பர்கள்.
அதிகாாவேட்டைப் புலிகள் பேச்சைளேன் இப்போது கொண்டு வருகிறீர்கள்? அவர்கள் வாயளவிற்றா னல்லாது நடத்தையி லென்ன சாதித்து விட்டார்கள்? நாடு கடத்த அவர்களால் முடிந்ததா? பகவான் புத்தர் அவர்கள் குடித்த மனப்பாலை தற்காலம் விஷப்பாலாக்கி இருப்பது நீங்களறிந்தவையே. விவசாயத் தொழிலில் தேர்ச்சிபெற்ற பாரத அன்னையின் புதல்வர்களைத் தேர்ந்தெடுத்தாற்றான், நாம் இனிக் கடைத் தேறலாமென்று
அவர்கள் வாயிலிருந்து அவர்களை யறியாமலே இப்போது வருகிற தல்லவா?

சோமு: - ஆம்! ஆம்! ரொம்பச்சரி, அந்திய காலத்தில் அஸ்வத்தாமாவுக்குப் பட்டம் கட்டிவைக்க எண்ணினாற்போல், உணவுப்பஞ்சம் வந்த பின் தான், விவசாயத் தொழிலுக்கு இந்தியமக்களை எதிர் சென்றழைக்க வேண்டும். இந்தியத் தாய்க்கு அன்னக்காவடி சமர்ப்பிக்கவேண்டும். அவற்றையும் உள்ளன்பு நிறைந்த பக்தியோடு சமர்ப்பித்தால், அவ்வன்னை ஏந்து கொண்டு ஆதரிப்பதில் தடை என்ன? பல ஆண்டுகளாக, லட்சக்கணக்காக இலங்கையிலுள்ள இந்தியர்கள் மூலமாய் விவசாயத்தொழிலை விருத்தி செய்திருந்தால் உணவுப் பஞ்சத்தின் தலை இப்படி நீளுமா? இந்திய மாதாவும் இலங்காதேவியும் பரஸ்பர ஒற்றுமையாய் நம்மைக் காப்பாற்றக்கூமல்லவா?

ஜெய: - சோதரரே! நீங்கள் கூறியவாறு, கூடிய விரைவில் அவ்வித ஒற்றுமை ஏற்படக் கூடும். பகவான் புத்தர் அவ்வாறு செய்வாரென, நாம் நம்பிக்கையோ டிருப்போம். அவர் யாவருக்கும், நன்மை செய்யக் கூடியவரே, மேலும், பெளத்தமதத்திற்கும், இந்துமதத்திற்கும், நெருங்கிய சம்பந்தமு முண்டு.

சோமு: - எப்படி?

லீலா குறுக்கிடாமலிருக்க மனமில்லை போலும்! "ஏன் நீங்கள் ஒன்று மறியாதவர்கள் போலவே கேட்கிறீர்கள்? சித்திரை மாதப் பிறப்பன்று, நீங்கள் சுவாமி தெரிசனம் செய்த பிரசாதம், ராதா எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தாள். அதை நம்ம மணிதன் செல்லக் கையால் எனக்குத் தந்தான். நாங்கள் வாங்கி விபூதி குங்குமம், தரித்துக் கொண்டோம். பொங்கல் சாதம் சாப்பிட்டோம் மணிக்கும் ஊட்டினோம், தம்பியைக்
கேளுங்கள், இதிலென்ன வேற்றுமை? அன்று தினம் நானும், ராதா, மணி மூவரும் பகவானை வணங்கி வந்தோம். பாஞ்சாலையில், இது காரணமாகவாவது சம்பந்த முண்டா? அல்லது இல்லை என்றீர்களா?”

ராதாவும் சேர்த்து கொண்டாள். "லீலா! லீலா!! கடந்த வருடம் பாரத நாட்டில் எங்களூரில் வைகாசி விசாசத் திருவிழா, வெகு விமரிசையாய் நடந்திருக்கிறது. அதே விசாகம், பௌர்ணமி வைகாசி இவை யாவும் இன்றைக்கு ஒற்றுமையாகத்தானே இருக்கிறது. “விசாக” எனும் நக்ஷத்திர நாளை "விசாக்" என்று சிறிய வித்தியாசமாய்க் கொண்டாடுதவாய் யூகிக்கக் கூடுந்தானே"

லீலா: -ஆம்! அதுவும் பொருத்தமாகத்தானிருக்கிறது ராதா!

இவர்கள் நால்வருமே இவ்வாறு தர்க்கித்துக்கொண்டு நடந்தார்களானால் மணி மாத்திரம் சும்மா மெளனமா யிருக்க முடியுமா? செல்வன் கனிவாய் தேனைச் சொரிகின்றன. “அம்புலி அம்புலி! ஆயப்பாயா!! புட்டு புட்டு!!!" இதுதானே அவன் கற்ற நூலில் சொல்லியது.

ஜெய: - சோமு! மணிக்குக்கூட இன்று எவ்வளவு குதூகலம்!! பகவானது ஜெனன வரலாறு நீங்க யறிந்தவரைதெ தெரிவியுங்கள். மணியும் கேட்டுக் கொள்வான்.

ராதா! லீலா! இருவரும் ஒரே தொனியாய் நீங்களதைச் சொல்லுங்கள்.

சோமு: - நான் சொல்வதென்றால் சரித்திராதாரம் சரியா யில்லையே.

"நீங்களறிந்த மட்டில் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.'' என்றார்கள் வீலா, ஜெயவரத்ன, ராதா, மணி, இந் நால்வரும். இவர்களோடு வழி நடையில் வந்து சேர்ந்து கொண்டவர்களும், கேட்டுக்கொண்டு வருகிறார்கள். சோமு தெரிவிக்கிறான். நாமும் அப்பகவான் வரலாற்றை சிறிது தெரிந்து கொள்வோம்,

மாநிலம் புகழவும், ஞானங்கள் திகழவும், பௌத்த மதத்தை ஸ்தாபிதம் செய்யவும், பல ஆண்டுகளுக்கு முன், புத்தர்கள் பலர் உலகிற் றோன்றியுளார். அவரவர்களும், தம்மாலாய நன்மைகளை அருளி மறைந்தனர். ஆயினும், இற்றைக்கு இரண்டாயிரத் தைந்நூறு வருடங்களுக்கு முன் “கெளதம புத்தர்'' இப் பூவுலகின்கண் அவதரித்து, முன்னையோர் யாவரினும், சிறப்புற்றோங்கி, பல அரிய தொண்டை யாற்றினர்.

பருவதங்களிலே மிகப் பெரியதாகிய பருவத அரச னெனப்படும் ஹிமயமலைச்சாரலில், பல சிறிய வாவிகள் அழகாக ஓடிக் கொண்டிருக்கும். அவற்றுள் சப்த நதிகளி லொன்றாகிய கங்கைக்கு வடபாலுள்ள, ரோகிணி நதி தீரத்தில், கபிலவாஸ்து எனுமோர் நகரமுளது. அவ் விடத்தில், புகழத்தக்க திட சரீரமுன் பலர் வசித்து வந்தனர். இவர்கள் சாக்கிய ரெனப்படுவர். இவர்கள் உல்லாசமாக நேரங்கழிக்கு மிடம், லும்பினி
எனும் பூங்காவனம், இதிலோர் பாகத்தில் அழகிய தடாகம், இத் தடாகத்தைச் சுற்றிலும் விருக்ஷங்கள் நிறைந்திருக்கும். அங்குறும் மக்களின் இதயத்தை ஆரோக்கியப் படுத்தும் நோக்காய் அத் தடாகத்தில், செம்மை, வெண்மை, நீலவர்ணம், பெற்ற தாமரைப் புஷ்பங்கள் ஒவ்வொரு நிறமாய், ஒவ்வொரு புஷ்பல்களாய் புஷ்பித்து அழகு செய்து கொள்ளும். இந்த
சாக்கிய ராஜதானியின் தலைமைக்காரியாலயம் கபிலவாஸ்து,

இந்நகரை சுத்தோதனன் எனும் மன்னன் நெறி வழுவாது செங்கோல் நடாத்தி வந்தான். அவனது வாழ்க்கைத் துணைவி மாயாதேவியோடு, சந்தோஷமாக இல்லற தர்மத்தையும் சீர்பெறப் போற்றி வரலாயினன். இப் பூமியின்கண், சதிபதி எனும் இவ்விருவருந் செய்த நற்நவப்பயன்முன் யாது? எவ்வகை நோன்பை எவ்வழி நோற்றார்களோ? அறியோம். இவர்கள் பிறவிக்குப் போதிய நற்பலன் கிடைத்து விட்டன.
எங்ஙனம்? உத்தம குணபக்தி நிறைந்த மாயாதேவிக்குப் பிரசவவேதனை. நகரடங்கலும் சந்தோஷப் பேரொலி; மகவைக் காண மட்டற்ற ஆவல். தனது சோதரி பக்கலில் மாயாதேவி அமர்ந்தனன். மற்றும் சிலர் ஆங்கு குழுமி இருந்தனர். அன்றைய பூரண மதி குதூகலமாய்ப் பிரகாசித்தது. குவா! குவா!! என் இன்பத்தொனி, யாவருளத்திலும் நிறைந்து புளகாங்கிதம் செய்தது. சூரியப் பிரபை போன்ற ஆண்மகவு பிறந்தது. தேவர்கள் ஆசி மழை பொழிந்தனர். இம் மதலையின் ரூபலாவண்ணியத்தையும், மகிமையையும், காருண்யம் வாய்ந்த முக வசீகரத்தையும், யாம் வரையத் தகுதி யன்று. சுதனைப் பயின்ற புண்ணியசீலர்களை யாவரும் மனமாற வாழ்த்தினர். மன்னன், மனைவி, மற்றுமோர் பலரும் ஆனந்த வாரியில் மூழ்கி சந்தோஷங் கொண்டாடி, குழந்தையைக் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தனர்.

தவத்திற் சிறந்த அசிதர் எனும் மஹாயோகி அரசனது மாளிகையை நாடி வந்தனர். இவர் வரவை யறிந்த சுத்தோதன மன்னன், அன்னவரை, எதிர்சென்று பணிந்து அழைத்து வந்து தக்க ஆசனத்தமர்த்தி வணங்கினன். மன்னவனின் திருக்குமரனை அன்னவனே ஏந்தி வந்து, அசிதரின் பாதத்திற் கிடத்தி, மகவை ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தித்தனன். சுதனை
அகமகிழ்வோடு மஹாமுனி வாங்கி அக் குழந்தையின் பாதங்களிரண்டையும் தனதிரு நயனங்களிலும் அன்போடு அணைத்துச் கொண்டார். என்ன ஆச்சரியமிது? எவ்வளவு மகிமை? எவ்வகை அன்பு? ஓர் சிறிய குழந்தையின் கால்களை மஹாயோகியான ஒருவர் தம் நேத்திரங்களில் ஒற்றிக் கொள்வதெனில் காரணம் யாது? மதலைக் கால்களின் வடிவழகைக் கண் பூரித்தனரா? அவ்வாறாயில் மெய்ஞ்ஞானிகட்கு உடல் வனப்பைக் கண்டு களிப்புற இதயம் தடை செய்யக்கூடுமே! வேறென்ன? பாதங்களிற் குழந்தையைக் கிடத்தி ஆசீர்வதிக்கும்படி வேண்டும் மன்னனின்புறச் செய்யும் சீர்வாதமா? ஆசீர்வாதமா? ஆசீர்வதிக்கும் முறை இஃதெனத் தெரியவில்லையே! யாதோ வென யாம் சந்தேகிக்க வேண்டியதாகிறது. இதிலோர் ரகசிய மிருக்கலாம். பாதம் பட்ட கண்கள் பகலவன்போற் பிரகாசிக்கக் கூடுமென்று கருதினரா? ஆம்! அவ்வித எண்ணமே! அவ்விதம் பிரகாசிக்
கவே கூடும். ஜீவராசிகளை இரக்ஷிக்க வந்த திருப்பாதம், ஏழை மக்களின் இன்னல் களைய வந்த இன்பத் திருவடி. அதன் களங்கமற்ற ஒளிவெளிப்பார்வைக்கா யமைந்த ஊனக்கண்ணை மாத்திரமன்று! அகத்து ளமைந்த ஞானக்கண்ணையே நன்கு பிரகாசிக்கச் செய்யும். இப் பதமலரை அம் மஹாயோகி கண்களில் அணைத்ததில் ஆச்சரியமென்ன இருக்கிறது! இப் பகவான் பூவிற் ஜனித்த முழு ரகசியமும், "பகவான் புத்தரின் பாத மகிமை'யும் தவயோகி, நன்குணர்ந்துவா ராதலின், அத் திருமலாடியை தன் நயனங்களில் அணைத்தனர். இவ்வரிய மகத்துவம் வாய்ந்த மதலைக்கு "சித்தார்த்தர்'' என நாமமிடப் பெற்றது. அசிதர் சித்தார்த்தரை பலவாறு போற்றிப் புகழ்ந்து அரசனிடம் விடை பெற்றுக் கொண்டேகினர்.

சித்தார்த்தர் கௌரம கோத்திரத்தில் ஜெனித்ததால் கெளதமரென்றும், சாக்கிய குடியிற் றோன்றியமையால், சாக்கியரென்ற நாமமும் பெற்றனர். புத்தர் என்ற பெயர் பிற்காலத்தில் இவருக்குச் கிடைத்த ஆசிரமப் பெயராகும். இவர் வைகாசி மாதம், பெளர்ணமியும், விசாகமும், கூடிய சுபவேளையிற் ஜனித்தாய்ச் சொல்லப்படுகிறது. இவருக்குப் பெற்றோர் செய்யவேண்டிய கடமைப்படி சல்வி கற்பிக்கவேண்டியதவசிய மல்லவா? ஆசிரியரும் இவருக்கு வேண்டுமா? எங்கிருந்து வருவார் ஆசிரியர்? ஆனால் குருவுக்கு மிஞ்சின சிஷ்யரென இவன நாம் சொன்னாற் குற்றமிராது. ஏன்? கல்வி கற்பிக்க ஓர் ஆசிரியர் வந்தார். அவர் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும் பாடங்கள் அவ்வாசிரியர் வாக்குனின்று வெளிவரும் முன், பகவான் புத்தரின் அருள் வாக்கினின்று விரைவில் உதயமாகி விடும். போதகர் சிறிது தவறுதலாய், ஏதேனும் சொல்லி விடுவாராகில் அதை கெளதமபுத்தர் திருத்திக் கொள்வார். இந்நிலையில் போதகருக்கு பகவானிடத்தில் வேலை என்ன? அவர் சென்றனர். சகலகலைகளயும் பூர்வஜன்ம வாசனையால் தாமாகவே பகவான் நன்கு கற்றுணர்ந்தனர்.

இவர் மணப் பருவமடைந்த தறிந்து பெற்றோரும், மற்றோரும், யசோதரா எனும் அழகிய அணங்கை திருமணஞ் செய்து வைத்தனர். பகவானுக்கு அம் மங்கையின் கருப்பத்திலிருந்து செல்வன் பிறந்தான். இராகுலன் என்ற நாமம் சூட்டினார்கள். ஆயினும், பகவான் இதயம் இல்லறத்தை நாடவில்லை. தெருக்களிலும் சிறு குடிசைகளிலும், இவர் திருஷ்டிக்கு அகப்பட்ட கோரச்செயல், பசிப்பிணி, துன்பம் இவை யாவும் இவர்
உளத்தை உருக்கின. பூமியின் கண் மாந்தர்களிடையே பசிநோய் பெரும் கஷ்டம், அதிகச் சஞ்சலம், ஒருங்கமைந்து துன்புறும்போது நாம் அறு சுவையோடு உண்பதா? பஞ்சணையிற் துயில்வதா? சர்வசுகமும் நாம் மாத்திரம் அனுபவிப்பதா? வேண்டாம்! வேண்டாம்! எழைமக்கள் சர்வசுகத்துடன் இன்புறுவதே நமது சசல வைபவமு மாகும். இதற்கான வகையை நாம் தேட வேண்டுமென்ற எண்ணம் இவர் மனத்தில் வேரூன்றி விட்டது.

ஓர் நாளிரவு பூரணச்சந்திரன் பிரசாரித்துக் கொண்டிருந்தான். சிதார்த்தர் அந்தப்புரத்துக்குச் சென்றார். நித்திரையி வாழ்ந்திருக்கும் தன் அன்புப் பிரியை யசோதரையையும் இன்பச் செல்வன் இராகுலனையும், ஒரு முறை பார்த்தார். உடனே வெளிப் புறப்பட்டார். தவயோகியின் நயனங்களிலனைந்த சாத்வீகத் திருவடி, மலைநதி வனாந்திரம் கடுகிச் சென்றன. எழை மக்களின் துன்ப நிவாரணத்துக்கு வகையாதென மனம் நைந் துருகினார். அங்கொரு சந்யாசியை அணுகினார். அச் சந்யாசியின் உபதேசத்தில் அதிருப்தி யடைந்தார். பின்பும் நொந்தார். என்னே கருணை உள்ளம். ராஜ்யா திகாரமும், மணிமுடியும் சர்வபோக பாக்கியங்களையும் திரணமாய் மதித்த ஜீவகாருண்யர் திருவடிகள் அப்பால் நடந்தன.

பன்னிரு திங்களில் இரண்டாம் மதி! அன்று முழுமதி! நைரஞ்சாரா
அல்லது பால் குனிநதி! அந்நதிக் கரையிலோர், அழகிய தரு. தருவினடியிலோர் சாத்வீக வொளி! ஒளியெனில் மிக்க உத்தமஜோதி! ஜோதியின் இனிது! சொல்வதற்கரிது! அரிதென நாற்பத்தைந்தாண்டுள மேனி! மேனியிலான் மவிளக்க மெய்ஞானி!

ஆம்! உண்மைஞானி! உயரிய ஜோதி! ஆ! களங்கமற்ற ஞான ஜோதி! ஞானஜோதி!!  ஆஹா!

(சோமு மெளனம்) அப்பால் நாவெழவில்லை. எவற்றையோ உற்று அண்ணாந்து நோக்குபவனாய்ச் காண்கிறான். அங்ஙனமே ஸ்தம்பித்து விட்டான். அசைவற்று நிற்கிறான். கூடவந்த யாவரும், நின்றனர். நிசப்தம் சோமுவை யாவரும் நோக்கினர். செல்வன் மணி, லீலாவிட மிருந்தான், தந்தை இடம் போகத் தாவினன், சோமுவின் கரங்கள் மதலையை
அணைக்கவில்லை. அவன் இருதயம் எங்கோ லயித்து விட்டது. அலை அந்த ஜோதியை நாடியே!

ஜெயவரதன்: - (சோமுவின் தோளில் ஓர் கையை வைத்துச்கொண்டு)
நண்பரே! சோமு! சோமு! ஏன் மெளனமாய் நிற்கின்றீர்கள்? சந்நியாசயின் உபதேசத்தில் அதிருப்தி யடைந்த சித்தார்த்தர் அப்பால் நடந்ததாகச் சொன்னீர்கள். அதன் பின் தன்னை மறந்த விதமாய் எதேதோ பேசினர்களே!

பின் சிறிது நேரம் சோமு மெளனம் இதயத்தெழுந்த பக்தியின் ஊற்றையும் நயனத்தெந்ழுந்த ஆனந்த பாஷ்யத்தையும் ஓர் வகையாங் தன் லயப்படுத்திக் கொண்டான் ஜோதி வடிவில் சொக்கிய சோமு.

      சோமு: - ஸாரஞ்சாரா எனும் பால்குனி நதிக்கரையிலுள்ள போதி விருக்ஷத்தடியில் நாற்பத்தைந்து வயதுள்ள, ஓர் உத்தம மானிட தேக மமைந்த, புருஷோத்தமர் விளங்குகின்றனர். அவர் யார்? அவரே கருணைக்குப் பாத்திரம்! அன்புக்கு அணிகலம்! செயலுக்கு அரண்! சாந்திக்கு ஆசனம்! கஷ்ட நிவாரணத்துக்குத் தக்க ஒளஷதம், அவரே மாயாதேவிக்கு மதலையாய் வந்தவர். சத்தோதன மன்னனுக்கு சதனாய் ஜனித்தவர்.
சித்தார்த்தரே ஆங்கமர்ந்த ஜோதி. உடனே ஆன்ம விளக்கத்தைக் கண்டார். அக்கணம் “புத்தர்" என்ற ஆசிரமப்பெயர் பெற்றார். இங்ஙனம் கண்ட ஆன்மஞானமே ஜோதி ஸ்வரூபமே புத்த சமயமாகும். இவற்றை உலகுக்கு சன்கு விளக்கிக்ச் காண்பித்தார். ஏழை மக்களின் வறுமைப்பிணியை நீத்தார். உலகின் கண் அநேக நன்மைகளை ஈந்து உளங்களித்தார்.

      இருடைய உயரிய தியாகத்துக்கு எதை நாம் ஒப்பிடலாம்? இன்றும் அன்னவர் புகழ் திருமேனி அன்பு வெள்ளம், நம் மனக்கண் முன் பிரதி பிம்பிக்கின்றன. ஞானவொளியை வீசிக் கொண்டிருக்கின்றன. இலங்கா நகரில் அநேக பாஞ்சாலைகளில் (பெளத்தமத ஆலயங்களில்) இப் பகவானது ஞாபகார்த்தமான உருவச்சிலைகள், பார்ப்பவர் மனத்தை பத்தியில் நாட்டி பரவச மடையச் செய்கின்றன.

      பகவான் புத்தர் கோரிய நன்மார்க்கத்தையே, தற்காலம் உலகம் போற்றும் உத்தமன் மகாத்மா காந்தியடிகள் கடைப்பிடித்தொழுகி பூவிற் பெரும் புகழை ஈட்டியுளா ரெனலாம். புத்தபகவானே புனர்ஜன்மமாக, காந்தியடிகள் என்ற நாமம் பெற்று விளங்குகின்றன ரெனவும், யூகிக்கக் கூடியதா யிருக்கிறதல்லவா?

      சோழு முதலிய யாவரும், தமதில்லம் வந்தனர். பொறுமையோடு கேட்டுக்கொண்டு வந்த செல்வன் வந்த செல்வன் கொஞ்சிய சிரிப்பொடு லீலாவிடமிருந்து தந்தையை அணுகினன். சோமுவும் அன்போடு மணியை வாங்கி முத்தமிட்டான். உடனே மணியின் கனிவாயினின்று அம்புலிப்பாட்டு கசிந்து வடிந்தது. இக்கனியின் ரசம் எவ்வளவு அருந்திடினும் தெவிட்டாததே.

      புத்தபகவானின் பொருளைப் பெற்ற பக்தர்களில், மணிமேகலை என்ற பெண்மணியின் பத்தியின் சிறப்பும், மிகப் பெருமை வாய்ந்தன வாகும். ஜீவகாருண்யமும், பரோபகாரமுமே உருவென வந்த இவ்வொளியை எம் மதத்தினரும் உண்மையான, உள்ளன்போடு வணங்கி அன்னவர் கிருபையைப் பெறுவதில் மனம் மாறலாகாதென்பதே நமது முழு நம்பிக்கை.

ஸ்ரீ பகவான் புத்தர் பதமலர் வாழ்க.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment