Wednesday, September 2, 2020

 

தமிழில் சுரம் உண்டா?

(வேலூர்-T. A. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்)

‘தமிழில் சங்கீதம் உண்டா?" என்று தமிழ் இசை ஆக்கத்தை விரும்பாத சிலர் முதலில் கேட்டனர். அடுத்தபடியாக, இப்போது தமிழில் சுரம் உண்டா? சுரங்களின் ஓசையைக் குறிக்கும் சொற்கள் தமிழில் உண்டா? என்று கேட்கத் தொடங்கி யிருக்கின்றனர்னர். சமஸ்கிருதத்தில் சுரங்களின் ஓசையைக் குறிக்கும் எழுத்துக்கள் இருப்பது போல் தமிழிலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற பாகுபாடுடன் எவ்வித ஓசையையும் குறிக்கும் எழுத்துக்கள் உண்டு தமிழ்மொழி இலக்கணத்தின் நுணுக்கத்தை அறிந்தார் இதை மிகத் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணமாக, உயிர் மெய்யோடு மொழிக்கு முதலில் வல்லெழுத்துக்கள் வரும்பொழுது மிருதுவான ஓசை யுடையனவாகின்றன. (உ-ம்) சருகு, சரிபாதி என்பன. க, ஞ, ண, ன, ம. என்ற மெய்லெழுத்துக்களுக்குப் பின்னே வரும் க, ச, ட, த, ப, ற என்கின்ற
வல்லெழுத்துக்கள் அவற்றின் வல்ஓசையை இழந்து, சமஸ்கிருதத்தில் பஞ்சவர்க்கங்களில் மூன்றாவதாக வரும் எழுத்து ஓசையைப் போல ஒலிக்கின்றன. (உ-ம்.) தொண்டு, துன்பம், கந்தை என்பன. ஆய்த எழுத்திற்கும் பின்னாக வரும் வல்வெழுத்துக்கள் தம் ஓசையை இழந்து சமஸ்கிருதத்திலுள்ள ஹ என்ற எழுத்தையும் சேர்த்துக்கொண்டு மெய்யெழுத்தின் ஓசையைத் தழுவி வருகின்றன. உதாரணம் அஃறிணை இருபஃது.

வடமொழியிலுள்ள சுரங்களின் பெயர்களுக்கு, பண்டைத் தமிழர்கள் வழங்கி வந்த பெயர்களாவன: -

சமஸ்கிருதம்

தமிழ்

ஷட்ஜமம்

குரல்

ரிஷபம்

துத்தம்

காந்தாரம்

கைக்கிளை

மத்திமம்

உழை

பஞ்சமம்

இளி

தைவதம்

விளரி

நிஷாதம்

தாரம்

ஆரோஹணம்

ஆரோசை

அவரோஹணம்

அமரோசை

சம்பூரணம்

பண்

ஷாடவம்

பண்ணியல்

ஒளடவம்

பண்ணின் திறம்

சுராந்தியம்

பண்ணின் திறத்திறம்

 

சிலப்பதிகாரத்தில் இதற்கு இயைந்த இசைக்குறிப்புகளின் சிலவற்றைச் கீழே தருகிறோம்: -

ஆராய்ந்து சுதியறிதல் என்பதற்கு இளங்கோவடிகள் அருளியது: -

"பண்ணல் பரிவட் டணையாராய் தறைவால்

கண்ணிய செலவு விளையாட்டுச் சைபூழ்

ஈண்ணிய குறம் பாச் சென்று நாட்டிய

வெண்வகையா லிசை யெழீஇப்

பண்வகையாற் பரிவு தீர்த்து... ....”

 

'பாவோ டணைத விசையென்றார் பண்ணென்றார்

மேவார் பெருந்தான மெட்டானும் – பாவா

யெடுத்தான் முதலா விருசான்கும் பண்ணிப்

படுத்தமையாற் பன்ணொன்று பார்.''

 

'சரிகமபதநி' யாகிய ஏழிசைக்கும் பொருந்த பன்னிரண்டு கோணத்தில் ஏழு இடல் கண்டு பாடிய முறைகளை, சிலப்பதிகாரம் மேற்கோள் சூத்திரங்களால் அறிந்து தமிழர்களின் இசைத் திறமையை நன்கு அறிந்த கொள்ளலாம்.

பண்ணிசை யாழில் பன்னிரு கரங்கள்: –

"குன்றாக் குறிலைந்து கோடா நெடிலைந்தும்

நின்றார்ந்த மந்நகரந் தவ்வோடு – நன்றாக

நீளத்தா லேழு நிதானத்தா நின்றியங்க

ஆளத்தி யாமென் றறி.''

 

இவ் வுண்மைகளால் தமிழுக்கும் இசைக்கும் மிகவும் பொருத்த முண்டென்றும், தமிழ் மொழியில் இசை நுணுக்கங்களுக்குரிய வார்த்தைகளும், சுரத்தின் ஓசையைக் குறிக்கும் எழுத்துக்களும் ஏராளமாக உண்டென்றும் தமிழிசை எதிர்ப்பாளர்கள் அறிவார்களாக.

ஆனந்த போதினி – 1942 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment