Monday, August 31, 2020

 

கிறிஸ்தவர்களும் ஜாதிவித்தியாசமும்

1. உலகத்திலுள்ள எல்லாராலும் போற்றுதற்குரிய நமது பாரத நாட்டிலுள்ள கிறிஸ்துவர்கள் கடைப்பிடித்தொழுகும் ஜாதிவித்தியாசம் அதிக கேடுள்ளதாக இருக்கிறது. ஐாதி வித்தியாசம் கூடவே கூடாது என்று இயேசு பெருமான் போதித்திருக்க அதை நமது கிறிஸ்தவ சகோதரர்கள் எத்தனையோ விதத்தில் கைக்கொள்ளத் தலைப்பட்டு விட்டார்கள். இதைப் பற்றி ஆராயுமுன், இந்துக்களுக்குள் உள்ள ஜாதிவித்தியாசம் எப்படிப் பட்டதெனக் கவனிப்பது சாலச் சிறந்ததாகும்.

 

2. தற்காலம் இந்தியாவில் பல ஜாதிகளிருப்பினும் அவை யெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வையசி, சூத்திரர் என்னும் இந்நால்வகைச் சாதியிலேயடங்கும். முற்காலத்தில் ஒவ்வொரு ஜாதியாரும் தங்களுக்குக் குறிப்பிட்ட வேலையையே செய்து வந்தார்கள். இதினிமித்தம் நமது இந்தியாவானது அதிக உன்னத நிலைமையிலேயே இருந்துவந்தது. தற்காலம் நாகரீகத்தில் தேர்ந்தவராகக் கருதப்படும் ஜாதியாரும், தேசத்தாரும் ஆடையுடுத்தவும் தெரியாது, காய், கனி, கிழங்குகளைத் தின்று கொண்டு காட்டு மனிதர்போல் சஞ்சரித்திருந்த காலத்திலேயே நமது இந்தியர் டெக்கா மஸ்லின் போன் மெல்லிய ஆடையணிந்து, தொழிலிலும், வியாபாரத்திலும், சாஸ்திரப் பயிற்சியிலும், நாகரீகத்திலும், ஆசாரத்திலும், பெண்கல்வியிலும் உச்சநிலை யடைந்திருந்தார்கள் என்பதை தேசசரித்திர வாயிலாக அறியலாம். அக்காலத்தில் ஜாதி வித்தியாசத்தை ஒருவருக்கொருவர் பேதமாக எண்ணாமல், ஓர் குடும்பத்திலுள்ள தகப்பன், தாய், மூத்தான், இளையான் என்ற தோரணையில் அவரவர்கள் தொழிலைச் செய்தும், செங்கோலேந்தி மனு நீதி வழுவாமல் மன்னுயிரைத் தன்னுயிர்போல் கருதி நடத்திய இந்திய மன்னருக்கு ஆறிலொருகடனை வரியாகச் செலுத்தியும், ஒருவருக்கொருவர் அடங்கித்தான் நடக்க வேண்டுமென்ற ஒற்றுமையோடு கூடிய மேலான எண்ணத்தையே கொண்டிருந் தார்களானதால் அவ்வுன்னத நிலைமையை அடைந்திருந்தார்கள். இதை உண்மையான சரித்திரவாயிலாக அறியலாம்.

 

3. வைசியர் சூத்திரருக்கு ஏற்பட்டது வர்த்தகமும் விவசாயத் தொழிலும். இவர்களிலேயே தீண்டக்கூடாதவர் என்று ஒரு சாரார் விலக்கப்பட்டதெப்படியெனில், விவசாயத்துக்கு வேண்டிய உப தொழில்களும், கருவிகளும் செய்யச் சக்கிலியர், பறையர், பள்ளர் போன்ற சில தொழிலாளிகள் வேண்டியிருந்ததும், அவர்கள் செத்தமாட்டுத் தோலையுரிப்பது, தோல் பதனிடுவது, தோல் தைப்பது, பிணஞ்சுடுவது, தெருக்கூட்டுவது, சாக்கடை கக்கூஸ் சுத்தஞ் செய்வது முதலிய தொழில்களைச் செய்து வந்ததும், அதனால் அவர்கள் எப்போதும் ஆசாரத்தையும், சுத்தத்தையும் கவனிக்கமுடியாது புறக்கணிக்க நேரிட்டதும், அதினிமித்தம் அவர்களை அந்த நிலைமையில் தீண்ட அருவருப்படைந்து சிலர் விலகி நின்றதும், மேற்படி தொழிலாளரும் தங்கள் தொழிலினிமித்தம் சற்று எட்டியே தங்கள் விடுதிகளை அமைத்துக்கொண்டு விட்டதுவும் சுபாவத்துக்கும் அனுபவத்துக்கும் ஒத்ததேயாகும்.

 

4. இவர்கள் செத்த மாட்டை உரிப்பது, தோல் பதனிடுவது முதலிய தொழில் செய்யும் போது அதினின்றும் உண்டாகும் துர்நாற்றம் ஊருக்குள் நுழைந்து சுகாதாரத்தைக் கெடுக்காமல், அவ்வித துர்நாற்றம் அதிகநாள் நீடித்தும், உக்கிரமாகவும் வீசும் தென்மேற்குக் காற்றினால் ஊருக்குள் கொண்டுவரப்படும் என்ற நோக்கத்தின் பேரிலேயே மேற்படி யார் சேரிகளை ஊருக்கு வடக்கிலாவது, வடகிழக்கிலாவது, கிழக்கிலாவது உண்டாக்கிக் கொண்டார்கள். இதை ஒவ்வொரு கிராமங்களிலும் பார்க்கலாம். ஊருக்கு மேற்கிலாவது, தென்மேற்கிலாவது, தெற்கிலாவதுஷை சேரிகளைப் பார்ப்பதருமையே.

 

5. இவர்களுக்கு மேல் க்ஷத்திரியர் என்பார் யுத்தம் செய்வதைத் தொழிலாகக் கொண்டு அவரவர்களுடைய தொழில் முறைக் கேற்றவாறு கூடியவரையில் சாத்தியப்பட்ட வழிகளிலெல்லாம் ஆசாரத்தையும், சுத் தத்தையும் கடைபிடித்து வந்தனர். இது நிற்க, க்ஷத்திரிய வைசியரில் சிலரும், சூத்திரரில் சிலரும் உணவு விஷயத்தில் வித்தியாசப்பட்டு மாமிசம் மச்சம் போன்ற பல ஆகாராதிகளை உட்கொள்ளத் தலைப்பட்டு விட்டார்கள். மாமிசம் புசிப்பவர்களிடம் மாமிசம் புசியாத ஒரு சாரார் அருவருப்படைந்து விலகி நின்றதும், நிற்பதும் இயற்கையே.

 

6. பிராமணர். இவர்களுக்கு வேதம் ஓதும் தொழில். மற்ற மூன்று ஜாதியாரும் உலகத்துக்கு வேண்டிய தொழில்களைச் செய்து கொண்டே யிருப்பதினாலும், ஆன்மார்த்த விஷயங்களை ஆராய்ந்தறிய அவர்களுக்கு அவகாசமில்லாததினாலும், அப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்தும், கடவுளுடைய இலக்ஷணம், மனித ஜென்மம் முத்தியடையும் வழி இவைகளைத் தேர்ந்தும் அப்போதைக்கப்போது மேற்கண்ட முத்தரப்பட்ட ஜாதியாருக்குப் போதிப்பதும், சமையாசாரக் கொள்கைகளையும், சடங்காசாரங்களையும் நிறை வேற்றுவதுமே இவர்களுக்குத் தொழிலான படியால் எப்போதும் ஆசாரம், சுத்தம் முதலிய சிறிதளவேனும் குறையாது கடைபிடித்தொழுகச் சமயம் வாய்ந்ததுவும், அதனால் இவர்கள் மற்ற ஜாதியாரை விட உயர்ந்தவர்களெனக் கருதப்பட்டதுவும் கவனிக்கப்படத்தக்க விஷயமாகும்.

 

7. ஆகவே ஈஸ்வர சிருஷ்டியில் மனிதரெல்லாம் ஒரே ஜாதியாகச் சிருஷ்டிக்கப்பட்டிருந்தும், தொழில், ஆசாரம், சுத்தம், உணவு முதலிய வற்றினாலேயே ஜாதிகள் பிரிந்து நின்றதென்பது வெள்ளிடைமலை. நமது குடும்பத்துக்குள்ளேயே ஒரு குழந்தை நரகலில் வீழ்ந்துவிட்டால் அக்குழந்தையைத் தீண்டவும், சுத்தமான இடத்தில் சேர்க்கவும் பிறர் சம்மதியாததையும், ஒருவர் சாப்பிடும் உணவு இன்னொருவருக்குப் பிடிக்கா விட்டால் ஒதுங்கி நிற்பதையும் பார்க்கிறோம். புராணங்களில் கூறியவாறு பிரம்மாவுடைய நெற்றி, புஜம், தொடை, பாதம் இவைகளினின்றும் நால் வகைச்சாதியார் தோன்றினார்களென்பது எப்படியிருப்பினும், உலக அனுபவத்தாலும் ஜாதி வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு மேற் கூறிய காரணமும் பொருந்துமல்லவா?

 

8. மேற்கூறிய ஜாதி வித்தியாசத்தாலேயே இந்தியாவில் ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டதென்பதும், அதினின்றும் இந்தியா அவ்வப்போது வேற்றரசர் கைக்குளகப்பட்டு கடைசியாக அடிமைப்பட்டிருக்கிறதெனக் கூறுவதும் உண்மையான விஷயத்தை ஆராய்ந்தறியாமற் சொல்லும் கூற்றேயன்றி வேறல்ல. இந்தியாமீது பலவேற்றரசர்கள் படையெடுத்து வந்ததற்கும், இந்தியருடைய ஒற்றுமை கெட்டுப் பிரதேசத்தினருக்கு அடிமைப்பட்டதற்கும் எழுதி முடியாத வேறு எத்தனையோ காரணங்களிருக்க ஜாதிவித்தியாசத்தை மட்டும் ஒரு காரணமாகக் கூறுவது முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் ஜாதி வித்தியாசம் இல்லையெனச் சொல்லிக் கொள்ளப்படும் ஐரோப்பாக் கண்டத்திலுங்கூட அடிக்கடி யுத்தம் ஏற்பட்டு அதின் பலனாக குறிப்பிட்ட ஒரு பிரதேசம் ஒருகாலத்தில் ஆங்கிலேயரிடமும், சிலகாலம் பிரஞ்சுக்காரரிடமும், வேறு சிலகாலம் ஜெர்மானியரிடமும், ரஷியரிடமும் இருப்பதற்குக் காரணமென்ன? இவ்விஷயங்களிலிருந்தும், இஸ்ரவேல் ஜாதியார் எகிப்து தேசத்தில் 400 வருஷ காலம் அடிமைகளாய்ச் சேவித்தார்களென்று பைபிளில் (Bible) கூறியிருப்பதிலிருந்தும், உலக சரித்திரங்களிலிருந்தும், பல காரணங்களையிட்டு ஒரு தேசம் ஒரு காலத்தில் அடிமைப்பட்டும், இன்னொருகாலத்தில் சுயாதீனமடைந்துமிருக்கும் என்பது விளங்குகின்றதல்லவா?

 

9. மேனாட்டாரில் இன்னார் இன்ன தொழில் தான் செய்ய வேண்டு கொள்ளப்படும் ஏனெனில் ஒரு கட்டுப்பாடு இல்லாததினாலும், எல்லாரும் மாமிசம் புசிப்பவர்க ளானதாலும் அவர்களுக்குள் தீண்டக்கூடியவர், தீண்டக்கூடாதவர் என்ற வித்தியாசம் ஏற்படக் காரணமில்லையெனினும், இராஜ குடும்பத்தார் என்றும், பிரபுக்களென்றும், கனவான்களென்றும், தனவான்களென்றும், ஏழைகளென்றும் இப்படிப்பட்ட வித்தியாசங்கள் பண்டைக்காலந் தொட்டு நாளதுவரை ஒழிந்தபாடில்லையே! ஆகவே எல்லாத் தேசங்களிலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட முறையில் அந்தத் தேசத்துக்குத் தகுந்தவாறு ஜாதிவித்தியாசம் இருந்துகொண்டிருக்க இந்தியர் முறையை மட்டும் கண்டிக்க வருவது, 'முதலாவது உன் கண்ணிலிருக்கிற உத்தாத்தை எடுத்துவிடு, பின்பு உன் அயலான் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்து விட வழி தேடுவாய்" என்று இயேசுநாதர் திருவுளம் பற்றியதை வாய்ப் பேச்சோடு முடித்து விட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது.

 

10. தற்காலம் இந்தியாவில் தொழில் முறைகெட்டு, பிராமணன் உத்தியோகம் செய்வதும், ஆதிதிராவிடன் வேதாந்தம் பேசுவதும், வியாபாரம் செய்வதும், எல்லா ஜாதியாரும் யுத்த வீரர்களாகப் பயிற்றப்படுவதும், இவ்விதமாக பற்பல ஜாதியாரும் பண்டைக்காலக் கட்டுப்பாட்டை விட்டு, அடிமைத்தனம், தரித்திரம் காரணமாகத் தங்கள் வயிற்றுப் பிழைப்பையே முக்கியமாகக் கொண்டு பற்பல தொழில்களைச் செய்ய முன் வந்து விட்டதினாலேயே இனி தீண்டக் கூடியவர், தீண்டக் கூடாதவர் என்ற ஜாதிலித்தியாசங்களைப் பாராட்டக்கூடாது என்று மகாத்மா காந்தி போன்ற பல தேகாபிமானிகள் தேகமுன்னேற்றத்தைக் கருதி போதிக்கின்றார்கள். நமமையாளும் காருண்ய கவர்ன்மெண்டாரும் நமது நலத் தைக்கருதி ஜாதிவித்தியாசத்தை ஒழிக்கக் கங்கணங்கட்டிக்கொண்டிருப்பது நமது முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனேயாகும்.

 

11. ஆனால் ஜாதிவித்தியாசம் இல்லை இல்லையென்று பறைசாற்றும் ‘இந்தியக் கிறிஸ்தவர்களுக்குள் இந்தியாவிலுள்ள ஜாதிவித்தியாசமும்’, 9 - வது பாராவில் கண்ட மேனாட்டு ஜாதி வித்தியாசமும் தாண்டவமாடுகின்றன. இதை நோக்குமிடத்து, குற்றம் செய்யாதவன் போல் வெளியில் பாசாங்கு செய்து அந்தரங்கமாகச் செய்பவனை விட, குற்றம் செய்து ஜெயிலில் அடைபட்டு, சர்க்கார் தண்டனையை அனுபவிக்கும் ஒருவன் பாவமற்றவனாகக் கருதப்படுவானல்லவா? அதுபோல் ஜாதிவித்தியாசம் உண்டு என்று சொல்லிக்கொண்டே அதை அனுசரிக்கும் இந்துக்களை விட ஜாதிலித்தியாக இல்லை யென்று சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் அவ்வித்தியாசத்தை இந்திய முறையிலும், மேனாட்டு முறையிலும் அனுசரிப்பதால் எவ்வளவ கொதேமும், தேசத்துக்கும், கடவுளுக்கும், மனிதருக்கும் துரோகம் செய்ததாகவும் ஆகிறது என்பதை பறிப்பாருங்கள்.

 

12. முற்கூறிய இந்துக்கள் முறையைப் படியள்ள ஜாதியித்தியாசம் சற்று இயற்கையைப் பொறுத்தது. இது பெரும்பாலும் ஆங்கிலமும் மேனாட்டு நாகரீகமும் பரவாத கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேல்ஜாதி கிறிஸ்தவர்கள், கீழ் ஜாதிக்கிறிஸ்தவர்கள் ஆக இருவரும் காரணமாவார்கள். எப்படியெனில் ஆதித்திராவிடர் போன்ற கீழ்ஜாதிக் கிறிஸ்தவர்கள் மேல்ஜாதியார் தங்களிடம் அருவருப்பின்றி நெருங்கிப் பழகும் வண்ணம் நடை, உடை, உணவு சுத்தம் முதலியவற்றில் வெகுதூரம் முன்னேற்றமடையவேண்டும். இப்படிக்கின்றி கிறிஸ்தவர்களானவுடனேயே தாங்கள் எப்படியிருந்தபோதிலும் மற்றக் கிறிஸ்தவர்கள் ஜாதிவித்தியாசம் பாராட்டாது தீண்டவும் உண்ணவுமாக இருக்கவேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது பகற்கனவே யாகும். ஏனெனில் எல்லோரும் ஏசுக்கிறிஸ்துவல்லவென்றும், மனிதனுடைய இயற்கை சுபாவம், அருவருப்பு முதலிய அவனை விட்டகலாது என்றும் அவர்கள் நினைக்க வேண்டும். மேல்ஜாதிக் கிறிஸ்தவர்கள் அவர்களைத் தங்களோடு சேர்த்துக்கொள்ளும் வண்ணம் அவர்களுக்குப் போதித்து சகல விதத்திலும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்து, அப்படித் திருந்தினவர்களை உடனே யாதொரு வித்தியாசமும் பாராட்டாது தங்களோடு சேர்த்துக்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். இவ்விதமாக உபயகட்சியாரும் சேர்ந்தே ஜாதிவித்தியாசம் என்னும் பேயை ஒழிக்க வேண்டியது அவசியமாகும்.

 

13. இரண்டாவது கூறிய மேனாட்டு முறைப்படியான ஜாதிவித்தியாசம் பட்டணங்களில் வாசஞ்செய்யும் ஆங்கிலங்கற்று ஐரோபபிய நாகரீகத்தில் கிடந்துழலும் ஒரு சாராறிற் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. எப்படியெனில், ஆங்கிலங்கற்று உணவிலும், உடையிலும் ஐரோப்பியர் போல் வேடம் போட்டு நிற்கும் ஒருவன், தன் சொந்தக் கிராமத்தில் விவ சாயத்தொழில் செய்தும், அதற்குரிய இந்திய நாகரீகப்படி சாதாரணமும், அவசியமுமான உடையுடுத்தியும், தன் பிரயாசத்துக்குத் தக்கபடி கிடைக்கும் உணவையருந்தியும் காலங்கழிக்கும் தன் சகோதரர்களையும், பெற்றோரையும், உறவினரையும் அநாகரீகமுடையவர்களென்றும், புத்தியீனர்களென்றும், தன்னைச் சேர்ந்த ஜாதியாரல்லவென்றும் புறக்கணிக்கத் தலைப்பட்டு விடுகிறான். தலையில் குடுமிவைத்திருப்பதும், பழையசாதம் சாப்பிடுவதும் கூட இவனுக்குப் பெரிய அநாகரீகமாகத் தோன்றுகிறது! இவனுடைய மதியீனமும், செருக்கும் என்னென்றுரைப்பது! இப்படிப் பட்ட ஒருவன் தன் தகப்பனைத் தனக்கு வேலைக்காரனென்று தன்னைப் போன்ற ஒருவனிடத்தில் சொன்னான் என்பதைக் கூற மனம் கூசுகின்ற  

 

14. ஆகவே இன்னும் எத்தனையோ விதமாகக் கிறிஸ்தவர்கள் ஜாதி வித்தியாசததை யனுஷ்டிக்கிறார்கள். விரிக்கிற் பலஏடுகள் நிறையும், பேனாமுனையும் மழுங்கும். மேற்கூறிய விஷயங்களை நோக்குமிடத்து இந்திய முறைப்படி அனுசரிக்கும் ஜாதிவித்தியாசம் தொழில், உணவு, ஆசாரம் முதவியவற்றைப் பொருந்தியதாயிருக்கிற தென்றும்; ஐரோப்பிய முறைப்படி அனுசரிக்கும் ஜாதிவித்தியாசம், போலிநாகரீகம், டாம்பீகம், ஆணவம், கர்வம் முதலியவற்றைப் பொருந்தியதாயிருக்கிற தென்றும் தெரிந்து கொண்டதோடு முந்தினதைவிடப் பிந்தினது அதிககேடுள்ளதென்றும் தெரிந்து கொண்டோம். இதை நீக்க வேண்டுமானால் என்ன கற்றபோதிலும், எவ்வளவு பொருளிருந்தபோதிலும் போலி நாகரீகத்தையும், ஆடம்பரமான வாழ்க்கையையும் விட்டு, அவசியமும், சாதாரணமுமான வாழ்க்கையைக் கடைபிடித்து, கர்வம் என்ற பிசாசை ஒழித்து சுயதேச நாகரீகத்தை அனுசரித்து கடவுளிடம் உண்மையான பகதியை வைத்து இவ்விதமாக நமது நடக்கைகளையும், கொள்கைகளையும் சகல விதத்திலும் சீர்ப்படுத்தவேண்டும். இதற்கான அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் நமது பாரதமாதா பெற்றெடுத்த சிங்கங்களாகிய நமக்குக் கொடுத்து ரக்ஷிக்குமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு இவ்வியாசத்தை முடிக்கிறேன்.

 

A. மேத்து சலா உபாத்தியாயர்,

போர்டு பெண்பாடசாலை,

 ஜெயங்கொண்ட சோழபுரம்,

திருச்சி.

குறிப்பு: - நமது சகோதரர் மேலே பகர்ந்தவாறு ஜாதி வித்தியாசம் வேறு உருவத்தோடேனும் எல்லா நாடுகளிலுமே இருக்கிறதென்பது உண்மையே. நம் நாட்டிலுள்ள ஜாதிபேதம், வைதீகம், ஆசாரம், தொழில் இவற்றைப் பொருத்தது ஆதியில் தொழிலாலும் யோக்கியதையாலும் இப்பிரிவினைகளுண்டாயின. அக்காலத்தில் யோக்கியத்திலும் ஆசாரத்திலும் உயர்வான மாறுதலடைந்தவன் உயர்ந்த ஜாதியில் சேர்க்கப்பட்டு வந்தான். கீழ்வகுப்பு, தீண்டாமையிவையுண்டானது ஆசாரத்தாலேயே. இப்பிரிவினைகளுண்டாகி நெடுங்காலமாயின. ஆதலின் ஏககாலத்தில் இவையடியோடொழியா. மேல்நாட்டாரைப் போல் அழியும் உலக போகங்களாகிய செல்வம் அந்தஸ்து இவற்றின் வித்தியாசப்படி உயர்வு தாழ்வு ஏற்படுத்திக்கொள்வது மிக்க கேவலமான கொள்கையேயாகும்.

 

இத்தகைய வித்தியாசம் இருப்பினும் யாவரும் கடவுளின் மக்களே ஒரே மனிதவர்க்கமே ஆதலின் எல்லோரும் சகோதரர்களே என்ற கொள்கையை விட்டுவிட்டு, மனிதருக்கு இயற்கையாகவுள்ள சுதந்தரங்களைக்கூட சிலருக்களிக்க மறுத்து, அவர்களை மிருகங்களிலும் இழிவாய் நடத்துவது (அதிலும் வைகம் விஷயம் பெருங்கோரமானது) கடவுளுக் கொவ்வாததே. சற்றும் ஜீவகாருண்யமில்லாததே. இன்று தீண்டப்படாதவனாக நடத்தப்படும் ஒருவன் நாளை கிருஸ்தவனாகிவிட்டால் அவனைச் சமமாக நடத்துகிறார்கள். ஏன்? அவன் மதம் மாரியதாலா? அல்ல. கிருஸ்தவனானபின் அவன் சுத்தமான உடையணிந்து ஆசாரமுடையவனாகக் காணப்படுவதால் தான் அருவருப்பின்றி அவனோடு சம்பாஷணை முதலியன செய்கிறார்கள். ஆதலின் நமக்கும் நமது மதத்திற்கும் இழிவையுண்டாக்கி, தற்காலம் நம் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவிருப்பதும், நம் நாட்டுச் சகோதரர்களில், நமது மதத்தைச் சேர்ந்தவர்களில் அனேகர் புறச்சமயம் புகுவதற்குக் காரணமாக விருப்பதுமாகிய இந்த அநீத வித்தியாசம் ஒழியவேண்டுமாயின் நமது நண்பர் மேலே 12 - வது பத்தியிற் கூறியதே அதற்கு மார்க்கம். தாழ்ந்த வகுப்பாருக்குக் கல்வியும் ஆசாரமும் உண்டாகும்படி நாம் செய்ய முயல வேண்டும். ஜீவகாருண்ய முடையோரும் தாய்நாட்டின் க்ஷேமத்தைக் கோருவோருமாகிய புண்ணியவான்கள் இதற்கு வேண்டிய சகல முயற்சிகளையும் முறையாய்ச் செய்யவேண்டும்.
 

தாழ்ந்த வகுப்பினரை மேலுக்கிழுப்பது தாய் நாட்டின் முன்னேற்றமாகிய சுயநலத்தொண்டேயாகும். கீழவகுப்பாரில் அந்த வழிக்கு வந்தவர்களுக்கெல்லாம் சாதாரணமான சுதந்தரங்களை யளிக்க வேண்டும். அவர்களும் ஏக காலத்தில் எடுத்ததே "உன் வீட்டுப் பெண்ணை யெனக்குக் கொடுக்க வேண்டும்'' என்று மலையுச்சியிலுள்ளவன் ஒரே பாய்ச்சலாகக் கீழே குதித்து அடியோடு மாள்வது போல் நடந்து கொள்ளாமல், நாம் ஆசாரத்தோடு நடந்து கொண்டு சம உரிமைபெற வேண்டுமென்று அடக்கத்தோடேயே ஒற்றுமையாய் வேலை செய்யவேண்டும். வஞ்சத்தோடும் விரோதத்தோடும் செய்யும் எம் முயற்சியும் ஜெய மடையாது அகங்காரமின்றி, குரோதமின்றி அடக்கத்தோடும் சினேக பாவமாகவும் எடுக்கப்பட்ட முயற்சி கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
 

பத்திரிகாசிரியர்

 

ஆனந்த போதினி – 1924 ௵ - மே ௴



 

No comments:

Post a Comment