Monday, August 31, 2020

 

சார்லஸ் லாம்ப்

(தா. மா. அப்பாவு.)

அறிவை அடிமைப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்ச்சி மிக்க கட்டுரைகள் வரைபவர் சார்லஸ் லாம்ப். இங்கிலாந்து நாட்டிற் றோன்றி ஆங்கில மொழியில் நற்புலமை எய்தி உணர்ச்சி மிக்க கட்டுரைகளையும் கருத்தை யுண்ணும் சிறு கதைகளையும் குன்றாச் சுவையுடைய கவிதைகளையும் வெளியிட்டு மங்காப்புகழ் எய்தியவர் அவர். அவாது நூல்கள் ஆங்கிலமொழியி லிருப்பினும் உலகெங்கணுமுள்ள மக்களால் படித்து போற்றப்படுகின்றன. அவரைப்பற்றி நாமும் சிறிது தெரிந்து கொல்வது நல்லதல்லவா?

லாம்ப் 1775-ம் ஆண்டு லண்டன் மாநகரிலே பிறந்தவர். கிறிஸ்தவப் பள்ளி யொன்றில் கல்வி கற்று வந்தார். இவருடன் அங்கு கூடப் படித்து வந்தவர்களில் பிற்காலத்தில் புகழ்பெற்ற காலரிட்ஜ் என்பவரும் ஒருவர். லாம்பின் சகோதரியான மேரி லாம்பும் பிற்காலத்திலே இலக்கியத் துறையில் புகழ் எய்தினர்.

1791-ம் ஆண்டு இவர் தென்கடல் இல்லத்திலே (South Sea-House)
கணக்காளராய் அமர்ந்தார். இரண்டாண்டுகட்குப் பின்னர் கிழக்கிந்தியாக் கம்பெனியில் எழுத்தாளராய்ச் சேர்ந்தார். இங்கு அவர் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தார். இவ்வாண்டுகளில் தான் அவரது முதற் கட்டுரைகள் லண்டன் சஞ்சிகை (London Magazine) யில் வெளியாயின. முதலில் ஓர் கவிஞனாக இலக்கிய உலயில் தோன்றிய போதிலும் பெரும் புகழ் எய்தியது தனது கட்டுரைகள் மூலம்தான். ‘எலியாவின் கட்டுரைகளை உலகம் அறியும். 'ஷேக்ஸ்பியரின் சிறுகதைகளையும் உலகம் போற்றிற்று.

லாம்பின் வாழ்க்கை துக்கம் நிறைந்தது. தன் வாழ்நாள் பூராவையும் பித்தம் பிடித்த தன் சகோதரியுடனேயே கழிக்க வேண்டி நேரிட்டது. தன் வாலிப வயதில் ஆன்ம்மன்ஸ் என்னும் நங்கையைக் காதலித்தார். தன் மனத்தைக் கொள்ளை கொண்ட அம்மங்கையிடம் தன் வாழ்க்கையையே ஒப்படைக்கத் தயாரா விருந்தார். ஆனால் அப்பெண் இவரை மணக்க மறுத்து, பெட்ரம் என்பவனை மணந்து கொண்டாள். இதனால் மனமுடைந்த இவருக்கு சம்சார வாழ்க்கையிலேயே ஓர் வெறுப் பேற்பட்டது இவ் வெறுப்பை ‘பிரமசாரியின் புகார்' என்று மோர் கட்டுரையின் மூலம் தெளிவாக்குகிறார். வேறொரு கட்டுரையில் சொல்லுகிறார். 'என் கனவின் தோன்றிய அக் குழந்தைகள் மெதுவாக நழுவத் தொடங்கின. அவை என்னுடைய குழந்தைகால்ல. அவன் வேறொருவனை மணந்து
கொண்டிருக்கிறாள்.'

அவரது ஒரே சகோதரன் வாலிப வயதிலேயே இறந்து விட்டான். இம்மாதிரி சம்பவங்களாலான துக்கச்சுடர் தான் 'கனவில் தோன்றிய குழந்தைகள்' மூலம் இலக்கிய அழகொளி வீசுகிறது. ‘இதுதான் அழகு. துக்கம் தான் அழகு. ஏமாற்றம் ஓர் அழகு. வாழ்க்கை அழகியது. நான் உங்களுக்குச் சொல்றுகிறேன் - உங்களுக் கறிவிக்கிறேன்' என்று சொல்லுவது போலிருக்கிறது அக் கட்டுரை.

லாம்ப் பெரிய ஆசிரியரென்று போற்றப்படுவதேன்? அவர் எழுதுவதியே சுவை யிருக்கும்- உணர்ச்சி யிருக்கும். உள்ளதை உள்படியே வெளியிட்டு அதை உங்களை நம்பச் செய்து விடுவார். படிக்கும் போது கதா பாத்திரங்கள் நம் எதிரில் கூத்தாடத் தொடங்கும். கெளரவமான முறைகளிலே நுண்மையான பொருள்களை அழகாக எழுதுவதில் லாம்ப் வல்லவர். தான் கண்ட அதிசயங்களை அழகு குன்றாது வெளியிட்டு அதன் மூலம் மகிழ்ச்சி யடைபவர். தனது மனத்திற் றோன்றியவைகளைக் கூட்டாமலும் குறைக்காமலும் வெளியிடுபவர். இவைதான் ஓர் இலக்கிய வாதிக்கு வேண்டிய குணங்கள்.

.      ஹாஸ்யம் ததும்ப எழுதுவதில் லாம்ப் தேர்ந்தவர். தான் வேலை பார்த்து வந்த கம்பெனியில் கூட உழைத்த கணக்கர் (Clerks) களைப்பற்றி வர்ணிப்பதைப் பாருங்கள். "கனவுலகிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அம்மனிதர்கள் உயிருள்ள பேனாக்களைக் காதில் செருகிக்கொண்டு என்னை நோக்கி ஆந்தை போல் விழிக்கிறார்கள். உயிருள்ள கடிதங்களும் கணக்குகளும் என்னைத் தொந்திரவு செய்கின்றன. நான் தவறாகச் சொல்லவில்லை, உயிருள்ள கணக்கர்களைப் புதைத்திருக்கும் சமாதிதான் இந்தப் பாங்கியின் இடிந்த கட்டிடம். உடல் பூராவும் காற்றோட்டம் கொடுக்கும்படியான (பல
பொத்தல்களையுடைய). அங்கியை அவர்கள் அணிந்திருந்தனர். அவர்கள் உபயோசித்து வந்த பேனாக்கத்திகள் உருவான காலத்தைக் காண சரித்திரத்தைத் தான் புரட்டிப் பார்க்க வேண்டும்!

தாம் எழுதிய ஓர் கட்டுரையில் ஓர் பெரிய வீட்டை யழகாக வர்ணிக்கிறார். 'என் விடுமுறை நாட்களில் பெரும்பாகம் அவ் வீட்டின் உட்புறங்களுக்குள் சுற்றித் திரிவ நிலேயே செலவாகும். ஆங்கிருந்த ரோம் சாம்ராஜ்யத்தை யாண்ட பன்னிரண்டு ஸீஸர்களின் உருவங்களைக் கண்டு இன்புறவது எனக்கு ஓர் பொழுது போக்கு. அப்போது அவை என்னுடன் பேச இருப்பிடத்தை விட்டுப் பெயர்ந்து வருவதைப் போன்ற பிரமை யுண்டாகும். அவ் வீட்டின் அறைகள் பெரியனவா யிருந்தபோதிலும்
காலியாகவே கிடந்தன. கிழிந்து போன திரைகளும் மங்கிப்போன சாயங்களும் இற்றுப்போன சாளரங்களும் அவ் வீட்டிற்குத் தனிச் சோபையையளித்தன. தோட்டத்தைக் கண்டு இன்புற நானொருவன் தான் – சிற்சில சமயங்களில் தோட்டக்காரன் வருவதைத் தவிர. மரங்களிலே பழங்கள் குலை குலையாய்த் தொங்கும் - செடிகளிலே நறுமணம் கமழும் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும். ஆயினும், இவற்றைப்பறிக்க எனக்
குரிமையில்லை. பார்வைக் கழகாய்த்தோன்றும் சிறு செடிகளின் நறும் பூக்களையும் அழகிய காய்களையும் பறித்து விளையாடுவேன். சுற்றிலும் இன் மணம் கமழ பசும் புற்றரைகள் புரள்வதில் எனக்கோர் ஆனந்தம். கனிந்த தொங்கும் எலுமிச்சம் பழங்களை நோக்கும்போது எனது எதிர்கால வாழ்க்கையின் இனிய செயல்கள் நினைவுக்கு வரும். குளத்திலிருக்கும் சிறுமீன்களையும் அவற்றை சோம்பேறியான பெரிய மீன் ஏளனஞ் செய்து கொண்டிருப்பதையும் காணுவதில் எனக்கோர் களிப்பு - இவ்விதமாகத் தான் நான் சந்தோஷமாகக் காலத்தைக் கழித்து வந்தேன். இது மற்றையோருக்குச் சோம்பேறித்தனமாகவும் தோன்றலாம்.''

குழந்தைகளைப் பற்றிச் சொல்லும்போது, ''குழந்தைகள் கதை கேட்பதில் ஆர்வமுள்ளவர்கள். தாம் கண்டறியாத தம் முன்னோர்களைப்பற்றித் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆவல். தமது சிறிய அறிவைக் கொண்டு தம் முன்னோர்களின் செயலின் நன்மை தீமைகளை அளந்து விடுவார்கள்.

குழந்தைகள் என்றும் குதூகலமானவர்கள். மாசற்ற அவர்களது முகத்தில் வீசும் தெய்வீக ஒளி நமக்கு இன்ப மளிக்கிறது. இன்மொழி பேசும் நற்குழந்தைதான் உலகிலேயே இனிய பொருள்.''

லாம்ப் தமக்கு முன் இருந்த நூலாசிரியர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளவர். ஏனெனில் அவர்களுடைய நூற்களுக்கும் இவருடைய நூற்களுக்கும் மிகவும் சம்பந்தம் உண்டு. பைபிள், ஷேக்ஸ்பியரின் மில்டன், மார்வெல், கவ்லி (Cowley), ஐஸாக் வால்டன் முதலியோருடைய நூல்களினின்று செய்திகளையும் சொற்கட்டங்களை (Phrases) இவர் எடுத்தாண்டிருக்கிறார். ஆனாலும் இவருடைய எழுத்து நடையானது மற்றை
யவர்களுடையதைச் ‘காப்பி' யடிக்காமல் தனித்த சுவையுடையது சர் தாமஸ் பிரெளனின் கட்டுரையில் விருப்ப மில்லாதவர்களும் அதையே வாம்ப் நவீன நடையில் எழுதும்போது மிகவும் சுவாரஸ்யமாகப் படிக்கின்றார்கள். ஹாஸ்லிட்
(Hazlitt) எழுதினார் "இம்மாதிரி உபயோகமற்ற பழைய ஆசிரியர்களின் நூல்களிலேயே ஊறிக்கிடக்கும் லாம்ப் பெரிய
எழுத்தாளராய் வர முடியாது" என்று. ஆனால், இந்த கொள்கைக்கு எதிராக, பழைய எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் பின்பற்றி நவீன முறையில் எழுதியதால் லாம்ப் மக்களது அன்பையும். பெருமதிப்பையும் பெற முடிந்தது. இவ்வாறு பேழும் புகழும் எய்திய சார்லஸ் லாம்ப், 18845 ஆண்டு டிஸம்பர் மாதம் 27-ம் தேதி இறந்தார். அவரது பிரேதம் எட்
மண்டன் மாதா கோவிலிலே புதைக்கப்பட்டது.

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment