Monday, August 31, 2020

 சாங்கிய தரிசனம்

35-வது காரிகை


ஸாந்தக்கரணாபுத்தி: ஸர்வம் விஷயமவகாஹதேயஸ்மாத் – தஸ்மாத்திரி

விதம் கரணமஹாரிஹாராணி ஸேஷாணி.

 

[உட்கரணங்கட்கும் வெளிக்கரணங்கட்கும் உள்ள வேற்றுமையை ஓர் பாவனா முகத்தால் விளக்கலுற்றார்.]

 

உட்கரணங்களோடு கூடிய புத்தி சகல விஷயங்களை நோக்கவல்லதால், இந்த மூன்று விதக் கரணங்களும் துவாரபாலகர் போலவம் மற்றைக் கரணங்கள் யாவும் விஷயங்கள் உட்புகவும் வெளிப்போகவும் ஏற்பட்ட வாயில்கள் (துவாரங்கள்) போலவுமாம்.

 

உரை: ஞானேந்திரியங்க ளைந்தும் ஐந்து வாயில்கள்; கன்மேந்திரியர்கள் ஐந்தும் ஐந்து வாயில்கள்; இப் பத்துவாயில்களும் ஓர் வாயிலின்கண் ஒன்று கூடுகின்றன. அங்கு நிற்கும் உட்கரணம் மனம். மனம் அங்கு நின்று பத்து வாயில்களையும் நோக்கிக் காக்கின்றது. மனத்தின் அனுமதியால் மற்றும் உட்புகின் அங்கு இருள் ரூபமான மற்றும் ஓர் வாயில் உளது; அங்கு நின்று காப்பவன் அகங்காரம்; அவ்வாயிலையுங் கடந்து உட்செல்லின் யாவற்றையம் விளக்கஞ் செய்பவல்ல ஒளிதங்கிய மற்றும் ஓர் வாயிலுளது. இதுவே இருண்டு வழிமயக்கம் செய்யவல்ல அந்தக்கரணமான வோர் அரண்மனையினுள்ளே பிரகாசிக்கும் விளக்காம். இதனைக் காப்போன் புத்தியாம். இவ்விளக்கு எப்பொழுதும் ஒருபடித்தாய்ப் பிரகாசிக்காமல் ஒரோவழி மழுங்கியும், ஒரோவழி துலங்கியும் பிரகாசித்து நிற்கும். புருஷனாகிய சைதன்னியன் இவ் விளக்கிற்கும் அப்பால் வதிகின்றான். புத்தி, அகங்காரம், மனம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் பதின்மூன்றுங்கூடிய வொன்றை இலிங்கம் என்றனர். இந்த இலிங்கத்தோடு புருஷன் கூடுவதால்தான் சுக துக்க ரூபமான பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுகின்றது. இக் கூட்டம் அற்று விடின் புருஷன் சச்சிதானந்தன் ஆவான்.

36-வது காரிகை


யேதே பிரதியகல்பா: பரஸ்பர விலக்ஷணாகுண விசேஷ: - கிருத்ஸ்லம்

புருஷஸ்யார்த்தம் பிரகாஸ்ய புத்தௌபிரயச்சந்தி.

 

[புத்தியே விளக்கென்பதனை மற்றும் நன்கு நாட்டுகின்றனர்.)

 

குணங்களின் வேற்றுமையால் ஒன்றிற்கொன்று பிரத்தியேக இலக்கணத்தை வகித்த கரணங்களெல்லாம் (தைலமும் திரியும் அக்கினியும் வாய்த்த) விளக்குப்போல ஒன்றுகூடிப் பணி செய்து சகல புருஷார்த்தங்களையும் விளக்கமுறப் புருஷனுக்குக் காட்டி யாவற்றையும் புத்தியினிடம் சமர்ப்பிக்கின்றன.

 

உரை: புத்தியே ஜோதி, மனமே தைலம், அகங்காரமே திரி, இந்திரியங்களே தைலத்திற்கு ஆதாரமான உபதான காரணங்கள். எவ் விஷயமும் நிகழுங்கால் ஆன்ம போதத்திற் கெட்டிப் பின்னரே மறைந்துறைகின்றது. ஒரு கரணம் பிறக்குங்கால் செவி வாயிலாகப் போதத்திற்குத் தட்டிப் பின்னர்த் தோன்றாது புத்தியின் மாட்டு மறைகின்றது. ரூப, ரச, கந்தங்களும் பரிசமும் அவ்வாறே நிகழும் பொழுது தோன்றிப் பின்னர் போதத்திற்குத் தென்படாமல் புத்தியினிடத்து மறைகின்றன. கேட்ட கானத்தையேனும் பார்த்த காட்சியையேனும் திரும்பக் கேட்கவும் அல்லது பார்க்கவும் விருப்பமுண்டாயின் புத்தியாகிய விளக்கை யேற்றி விஞ்ஞானமய கோசமாகிய அறையில் ஞாபக சொரூபமாய் வதியும் கானத்தையும், காட்சியையும் திரும்பப் பெறலாம். ஆகவே புத்தியே புருஷன் ஈட்டிய சகல சம்பத்துக்களையும் காத்து வைக்கும் பொக்கிஷதாரன்.

 

Buddhi or Reason or The Lamp of Wisdom is the Custodianof all the treasures acquired by the soul during all its incarnations. Reason is in fact the manager of Purusha.

 

சாங்கிய சூத்திரம் கூறுவதாவது: - கரணங்கள் ஒன்று கூடித் தொழில் புரிவதன் கண், புத்தி பிரதானிபோல ஒழுகுகின்றது.


37-வது காரிகை


சர்வம் பிரத்யுபபோகம் யஸ்மாத் புருஷஸ்ய சாதயதி புத்தி: - சைவ

சவிசினஷ்டிபுன 8 பிரதான புருஷாந்தரம் சூக்ஷ்மம்.

 

[புத்தியால் புருஷன் அடையவல்ல மற்றும் ஒப்பற்ற நன்மையுள தென்பது]

புத்தியே புருஷனுக் கேற்பட்ட சகல போகங்களையும் அனுபவிக்கும் வண்ணம் சாதித்துத்தராநின்றதன்றே! இம்மட்டோ, கடை முடிவில் புருஷனுக்கும் பிரதானமாகிய மூலப் பிரகிருதிக்கும் உள்ள அதிநுண்ணிய வித்தியாசத்தைக் காட்டி (புருஷனை)ப் பிரகிருதி சையோகத்தை விட்டு முக்திக்கரையேற்றவும் வாயிலாகும்.

 

உரை: புத்தியாகிய விளக்கே புருஷனுக்கு மாயா தந்திரங்களையும் ஜாலங்களையும் உள்ளீடோடு விளங்கக் காட்டிப் புருஷனைச் சுதந்தரனாக்கித் தனக்கேற்ற கதிக்கண் வதியச் செய்ய வல்லது. பிரதானந் தொடங்கி பிரிதிவி வரை யமைந்த தத்துவ உற்பவ வொடுக்கங்களைக் காட்டிப் பிரகிருதியைப் புருஷன் ஆட்கொண்டு பணி கொள்ளும் தந்திரத்தைக் காட்ட வல்லது. புத்தியைக் காணாதான் பாதந்திரனே யன்றிச் சுதந்தரத்தைப் பெறான்.

 

புத்தியைத் தரிசிக்க வல்லோன் ஆத்துமாவாகிய புருஷன் பரத்தினின்று பிரிந்து மாயையுள் புகுந்து பந்தமாம் தன்மையையும், பின்னர் மாயாவிளையாட்டு முடியவும் மாயையினின்றும் தன்னைக் கழற்றிக் கொண்டு பாத்தையுடையும் தன்மையையும் காண்பன்.


அவிழ்க்கின்ற வாறும் அது கட்டுமாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் செல்கின்ற வாறும்

தமிட்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும்

உணர்த்தும் அவனை யுணரலு மாமே.


எனத் திருமூலர் திருமந்திரத்திற் கூறினர்.

 

ஆகவே புத்தியே ஸ்போடமுமாம், ஸ்போடமாகிய விந்துவைத் தரிசித்தவர்க்கே பந்தம் பெறும் வரலாறும், விடுதலை பெறும் வரலாறும், பந்தமுற்ற ஜீவன் ஜனன மரணச் சுழற்கண் திரிதரும் வரலாறும் விளங்கும். பாஷைகளுக் கெல்லாம் ஆதிவித்தும் விளங்கும். எந்தப் பாஷையின் அர்த்தங்களும் விளங்கும். தலை ஞானங்கள் யாவும் விந்துவில் அடங்கி யிருக்கின்றன. விந்து தரிசன மில்லாதார் முத்திக்கு வழி காணமாட்டார் என்பதனைப் பின் வரும் வாக்கா லுணர்க: -


"மூவகை யணுயணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம் மேவின

தில்லையாகில் விளங்கிய ஞானம் இன்றாம்.''

 

புத்தியே மகத் தத்துவமாதலின் புத்தியைக் காண்பவன் மகதைசுவரியத்தைப் பெறுதல் திண்ணம்.


ஓர் சிறு வாக்கியத்தால் பெரிய முடிவைக் கட்டுவாம்.

 

தந்திரமெல்லாம் கூடி நினைப்பது எப்படி யென்றும் மறப்பது எப்படியென்றும் உணர்ந்து தன்னைச் சுயதந்திரத்திற் கட்டித் தன்னைத் தானே கட்டவிழ்த்துக் கொண்டு வெளியேறுகையாம்.

38-வது காரிகை.

 

தன்மாத்ராண்ய விசேஷாஸ்தேப்யோ பூதானி பச்ச பஸ்ச்சப்பிய: -

ஐதேஸ் மிருதா விசேஷா: சாந்தாகோராச்ச மூடாச்ச.

தடிப் பெய்தாது (சாதாரண மாந்தர் தோற்றத்திற்கு அப்பாற் பட்டு) நிற்பன தன் மாத்திரைகள். இவற்றினிட மிருந்தே தடிப்பெய்தி, நீர், தீ, காற்று, ஆகாசம், மண் ஆகிய பஞ்சபூதங்களும் (வெளிப்பட்டுத்) தோன்றின.

 

இவ்வாறு பஞ்ச தன்மாத்திரைகள் தடிப்பெய்தி அறிவை யுறுத்துவதால் தான் அவை சந்தோஷத்தையும் பயத்தையும், மூர்ச்சையையும் (தூக்கத்தையும்) விளைவிக்கின்றன.

 

உரை: ஆகவே பஞ்ச தன்மாத்திரைகள் தந் நிலையில் நிற்குமிடத்து ஊன் தேகத்தைத் தாங்கிய மாந்தர்க்கு சுக துக்கப் பிராப்தியை உண்டு பண்ண மாட்டா. பஞ்ச தன்மாத்திரைகள் யோகிகளுக்குப் பிரத்தியக்ஷவாய்த் தோன்றவல்லன. சிறிது தன் மாத்திரைகளை விளக்குதும்.

 

பிராணிகளும் மாந்தரும் மௌனமாயிருப்பின் அவர்களுள்ளே யிருக்கின்ற சப்தம் வெளிப்பட்டுத் தோன்றாது. இவ்வாறே ஒவ்வொரு பொருளிடத்தும் சப்த மளது. மரத்திலும், கல்லிலும், நீரிலும், காற்றிலும் தீவிலும், ஆகாசத்திலும் சப்தங்கள் மறைவா யுறைகின்றன. அன்றியும் ஒவ்வொரு பொருட்கும் உயிரா யிருந்து அதனை வளர்ப்பது மந்திர ரூபமான சப்தமே. இந்த இரகசியத்தை யுணர்ந்தவரே அசேதன (அறிவில்லா)ப் பொருளையும் சேதனமாக்கிப் பணி கொள்ள வல்லார். திருமாளிகைத் தேவரது சரித்திரத்தால் இதன் உன்மையைத் தெளிக,

 

அக்கினி யெரிந்து தத்காலம் அவிந்து ஒன்றுமே தோன்றாத விடத்திற்கு ஒருவன் செல்வானாயின் அக்கினி யொன்றும் அவ்விடத்திற் காணப்படாதாபினும், தேகத்திற்கு வெப்பம் உண்டாவதை யுணருவான். குளிர்காலத்தில் ஓர் மனிதன் படுத்துறங்கி நீங்கிய இடத்திற்கு ஒருவன் சென்று அவ்விடத்தை மிதிக்க கேரின் உஷ்ண பரிசத்தைக் காண்பன். ஆகவே கண்ணிற்குப் புலப்படாது பரிச தன் மாத்திரைகள் உறைய வல்லன வென்பதும் துணியப்படும்.

 

ரூப தன்மாத்திரைகளைக் கொண்டே தூரதிருஷ்டிக் கண்ணாடியால் தொலைவில் ஊணக் கண்ணின் பார்வைக்குத் தென்படாது உறையும் பொருளை, அதனுடைய சாயலை அருகு வரவழைத்துக் காண்பர். அன்றியும் நாம் நமது முகத்தைக் கண்ணாடியில் தரிசிக்கும் பொழுது நமது முகத்தினின்று எவ்விடத்தும் பரவாநின்ற ரூப தன்மாத்திரைகள் கண்ணாடியில் தாக்கி நமது கண்ணை நோக்கித் திருமபிவந்து கட் புலனைத் தொட்டு நமது ரூபத்தை நமக்குத் தரிசிப்பிக்கின்றன. சுத்த ரூப தன்மாத்திரைப் படங்களைக்
காண விரும்புபவர் புகைப்படம் பிடிப்பாரைக் கிட்டி யுணர்க.

 

வெய்யிலினாலும் முயற்சியினாலுங் களைத்து நீர்தேடி யோடுபவன் குளிர்ந்த சோலையும் தடாகமும் வாய்த்த ஓர் இடத்தைக் கிட்டலும் அவனுடைய அடங்காத் தாகம் எவ்வாறு நீர் அருந்தும் முன்னரே யடங்குகின்றது? ரச தன் மாத்திரைகள் அவ்விடத்து நிறைந்துளது ஆதலினன்றே அவை யிவனுடைய தேகத்திற் புகுந்து தாகத்தின் கொடுமையை யடக்குகின்றன.

 

எப்பொருளிடத்தும் கந்த தன்மாத்திரைகள் உள்ளன. கல்லைப் பொடிசெய்து மூக்கின் அருகிற் கொண்டுபோவோமாயின் கல்லினிடத்துள்ள மணமும் வெளியாகின்றது. நாற்றத்தின் இரகசியத்தை பறிதலே சொர்க்க போகத்திற்கு முதற்படியெனக் கூறுவர். நாற்றத்தின் இரகசியத்தை யுணராத தன்மையாலன்றே நக்கிரனும் இறைவனை யறியாது அஞ்ஞான வயத்தனாய் நின்றதும்


39-வது காரிகை.


சூஷ்மா மாதாாபிதுருஜா: ஸஹப்ரபூதைஸ்திரிதா விசேஷா: ஸ்யு: -

சூக்ஷமாஸ் தேஷாம் நிதயதாமா தாபிதுர்ஜா நிவர்த்தந்தே.


[ஜகத் வியாபாரம் மூன்று வகையான பொருட்களால் நடை பெறுகின்ற விதம்]

 

விசேடித்து நின்று சிருஷ்டி, திதி, சங்காரத்தின் வழியாக ஜகத்தை நடத்தும் பொருள்கள் மூன்று. அவை சூக்கும சரீரங்கள், அன்னை பிதாக்கள் புணருவதால் உண்டாகும் மாமிச தேகங்கள், மலை மரம் முதலியவான பூததேகங்கள். இவற்றுள் சூக்கும் தேகங்கள் அழிவுறாவண்ணம் நியமிக்கப் பட்டன; மாதாபிதாக்களால் உற்பவமாகும் தேகங்களோ சிறிது காலம் இயங்கிப் பின்னர் விருத்தியற்றுப் போவன.

 

உரை: - சூக்கும சரீரமென்பது இலிங்க சரீரமே; இதனைப் பின்னர் விளக்கலுற்றார். சூக்கும நோக்கம் உற்றவர்களுக்கல்லாது ஏனையோர்க்கு இலிங்க சரீரம் புலப்படாது. மாதாபிதாக்கள் வனையும் தேகங்களெல்லாம் அவரவர் பற்றி நிற்கும் இலிங்க தேகங்களை (வண்டிக்கு அச்சு இருப்பது போல்) அச்சாகக் கொண்டது. Linga sareeram supplies the model upon which the body with flesh and blood is constructed. பூததேகங்களோ மாமிச தேகபோஷணத்திற்கும் மாமிச தேகங்கள் பிற மாமிச தேகங்களை வனை தற்கும் ஏற்பட்டன. பூததேகங்களும் இருவகையின; ஜீவாசம் வெளிப்படத் தோன்றாத மலம் முதலியன (The mineral kingdom), ஜீவரசம் (சைதன்னியம் தோன்றாது) ததும்பி நிற்கும் விருக்ஷம் முதலியன் (The vegetable kingdom) இவற்றுள் மண் வடிவினதாய் ஜீவரசமும் சைதன்னியமும் வெளித்தோன்றாததால், உப்பு முதலியன ஜீவரசத்தை வெளிப்படுத்தவல்ல விருக்ஷாதிகட்கு உணவாகின்றன.

 

மாமிச தேகங்கள் தத்தம் கர்மத்தை சுகதுக்கத்தோடு பூமியில் அனுபத்து, விட்ட குறை தொட்ட குறை முடித்தற்கு வந்து தோன்றி, தாம்டு வந்த வினை, போகமானபின், இயக்குஞ் சக்தி நின்ற யந்திரம் தொழில் இன்றி வாளா (சும்மா) நிற்பது போல், சுத்த ஜடப் பொருள்களாய் விடுகின்றன. இதனையே மாண மென்பர். விருக்ஷாதிகளோ ஆனந்தமான தமது சுழுத்தி நிலையினின்றும் எழுப்பப்பட்டு மாமிச மயமாகிச் சைதன்னியச்தை வகிக்க ஆரம்பிக்கின்றன. விருஷாதிகட்கு உணவாகும் மண் கல் முதலியன தாம் நிற்கும் பிரச்ஞை கடந்த துரிய நிலையை விட்டு பிரக்ஞா ரூபமான ஆனந்த நிலைக்குக் கொண்டுவரப் படுகின்றன.

 

இலிங்கங்களாகிய சூக்கும தேகங்கள் தான் இனி யூட்டப்படும் போகத்தைத் துய்த்த கன்மங்களை (கிரியாசக்திகளை)த் தம்மிடத்தே யமையப்பெற்று ஜனன மரணச் சுழற்கண் அணுக்களை வீழ்த்தி அவ்வவற்றின் வினைப்பலனை அவ்வவற்றிற்கு ஊட்டுவிக்கின்றன.

 

கன்மப் பிராப்தியை யூட்டுவிக்கும் தானமாகிய இப் பூலோகத்திற்புகுத்தி, பாவ புண்ணியப் பலன்களை ஊட்டு தற்கும், நிரயங்களுள் (நரகத்தினுள்) புகுத்தி தீவினை யூட்டுகற்கும், சொர்க்கத்தில் தூத்தி விட்டு நல்வினை யூட்டுதற்கும் தன்னிடத்தே யுகந்த சக்திகளை யமையப் பெற்ற இலிங்க தேகம் எத்தகைய தென்பதனை யடுத்த காரிகை விளக்குகின்றது.


40-வது காரிகை.

 

பூர்வோத்பந்தம சச்தம் வியதம் மஹதாதி சூக்ஷ்ம பர்யந்தம் –

சம்ஸாதி நிரூப போகம் பாவை ரதிவாஹிதம் லிங்கம்.


இலிங்கத்தின் இலக்கணம்

 

இலிங்கமே (சிருஷ்டியாரம்பத்தில்) முதற்கண் வெளித் தோன்றியது, தடையறா வியல்பினது, புருஷன் கடைத்தேறும் வரை மறையாது வெளிக்கண் நிற்கும் நியமத்தைப் பூண்டது; மகத் முதற்கொண்டு மெல்லிய தன்மாத்திரைகள் வரையுள்ள தத்துவக் கூட்டத்தாலாயது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வூடும் இயல்பினது, தனக்கெனப் போகமில்லாதது, எண்ணங்களை (பாவங்களை)த் தன்பா லமையப் பெற்றது, புருஷார்த்தத்தைச் சாதித்துத் தான் போய் பிறந்த விடத்தில் மறைந்து கொள்ள வல்லது.

 

உரை: - இலிங்கமே காரண சரீர மென்பது. இது சித்திரம் போன்றது; இதுவே அவரவர்க் குரித்தான பிரம்மலபி யென்ற தலைவிதி அல்லது தலையில் எழுதிய ழுத்து. சித்திர ரூபமா யமைந்திருப்பது பற்றிப் போலும். இஃது இலிங்க மெனும் நாமம் பெற்றது.

 

ஆலம் வித்தில் பின் உண்டாகவல்ல ஆலமரம் சக்தி மயமாய் தன் மாத்திரைகளோடும் மறைவிலிருந்து பின்னர் பிரம்மாண்டமான விருக்ஷமாய்த் தோன்றுவது போல், இலிங்க சரீரமே இம் மாயப் பிரபஞ்சத் தோற்றத்திற்கும் வித்தாம். அவ்வியக்தமாகிய பிரகிருதியில் இவ் வித்தே முதற்றோன்றி பிரமபீஜமாகிய இவ் வித்தினுள் மகத்தும், அகங்காரமும், பத்து திரியங்களும். பஞ்சதன் மாத்திரைகளும் உள்ளுறைந்து பிரபஞ்ச சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்.

 

இலிங்கமாகிய முதல் முதல் தோன்றிய காரண சரீரத்துள் ஆன்ம கோடிகளினுடைய பலவகைப்பட்ட சூக்கும சரீரங்க ளெல்லாம் உள்ளடங்கிநிற்கும். ஓர் தீபத்தினின்றும் பற்பல தீபங்களும் தோன்ற வல்லது போல் ஆன்மா பூமியில் உதயஞ் செய்யவல்ல கன்ம பக்குவம் நேர்தலும் அதற்கேற்ற சூக்கும சரீரம் வெளித தோன்ற ஆரம்பிக்கும்.

 

காரண சரீரம் கல்லையும் மண்ணையும் மற்றெதனையும் ஊடுறுவிச் செல்ல வல்லது ஆதலின் தடையுறா வியல்பினது,

 

பிரபஞ்சத்திற்றள்ளுண்ட புருஷன் கடைத்தேறும் வரை அவனது காரண சரீரம் பிரபஞ்சத்திலேயே உழலா நிற்கும் நியதியை யுடையது.


காரண சரீரம் அகங்காரத்தை யுள்ளடங்கிய பதினேழு தத்துவங்களை யுள்ளடக்கியது.

 

காரண சரீரமாகிய இலிங்கம் ஓர் பற்றுக் கோடாகிய கூட்டை விட்டு மற்சேர் பற்றுக் கோடாகிய கூட்டினுள் நுழையவல்லது. பிரகதாரண்' ணிய உப நிடதத்தில் யக்ஞ வல்கியன் ஜனகனுக்கு இலிங்கம் கூடுவிட்டுக் கூடுபாயும் தன்மைமையை விளக்கினன். புல்லிலிருக்கும் ஓர் புழுவானது புல்லின் நுனியை யடைந்து தன்னைச் சுருக்கிக் கொண்டு அடுத்து நிற்கும் புல்லின் நுனியைத் தாவிப் பற்றுவது போல் இலிங்கம் தான் வாழ்ந்த கூட்டிலுள்ள சகல போகத்தையும் அனுபவித்து மற்றும் அதன் கண் அனுபவிக்க ஒன்றுமில்லாதது கண்டு அதனை நீங்கி மற்றோர் பற்றைப் பிடித்துக் கொள்கின்றது.

 

காரண சரீரம் சுய போகமற்றது. சைதன்னியனோடு தொடக்குண்டாலன்றி, போசம் வேறு எவ்விடத்தும் உண்டாகாது. இலிக்க சையோகமே பந்தமும் இலிங்க நீக்கமே முத்தியுமாம்.

 

பாவங்களைத் தன்பா லமையப் பெற்றது; இப்பாவங்கள் (எண்ணங்கள்) புத்தியின் மாட்டுள்ளன; புத்தி இலிங்கத்தின் ஓர் அங்கமாதலின் சகல எண்னங்களும் இலிங்கத்திலிருப்பதாகத் தோற்றம் ஏற்படுகின்றது. எண்ணங்க ளெல்லாம் போகமாய் விளைந்து துய்க்கப்பட்ட பின் இலிங்கம் பந்திக்கும் ஆற்றல் குன்றி மறைந்து போகின்றது.


41-வது காரிகை.

 

சித்ரம் யதாஸ்ரய மிருதே ரதாண் வாதிப்யோ யதாவி நாசாயா -

தஹஹினா விசேஷை: நதிஷ்டதி நிராஸ்ரயம் லிங்கம்.


[இலிங்கம் (காரண சரீரம்) பற்றுக் கோடின்றி அமையாதென்பது.)

 

சித்திரம் சுவரையின்றி யமையாதது போலவும், நிழல் ஸ்தம்பம் இல்லாமல் அமையாதது போலவும் இலிங்கமும் ஏதேனு மோர் தடிப் பெய்திய பத்இக் கோட்டைப் பிடிக்காது தனித்து நிற்க முடியாதது. [பற்றுக் கோடு - அதிட்டானம்; நிலயம்.]

 

உரை: - சிலர் இலிங்கத்திற்கும் இலிங்க தேகத்திற்கும் வேற்றுமையுண்டென்பர்; புத்தி, அகங்காரம், மனம், பற்து இந்திரியங்களாகிய பதின்மூன்றன் கூட்டமே இலிங்க மெனவும்,
இவை பஞ்சதன் மாத்திரைகளோடு கூடி நிற்கும் பொழுது இலிங்க தேகம் எனவும் பெயர் பெறும் எனக் கொள்வர். தன் மாத்திரைகளை விட்டு இலிங்கமாகிய கரணந்திரியங்கள் நிலை பெறமாட்டா. தன் மாத்திரா தேகமும் தடிப் பெய்திய தூலதேகத்தை யொட்டாது நிற்பின் ஓரிடத்து அமைந்திருக்கும் திறமில்லாதது ஆகவே இலிங்க சரீரமே சித்திரம் போன்ற மெல்லிய ஓர் பொருளாம். இஃது தடித்த ஒன்றின் மாட்டு கட்டப்படாதாயின் நிலை பெறாது எங்குக்திரியும். கௌட பாதர் எலும்பு சிவபெருமான் மேனி யெங்கும் திரிவது போல் இலிங்கம் திரிலோகங்களிலும் வியாபிக்க வல்லதெனக் கூறினர்.

 

42-வது காரிகை


புருஷார்த்த ஹேதுகமிதம் நிமித்தனைமித்திக பிரசம்கேன –

பிரகிருதே: விபுத்வயோ கான்னடா வத்வ்யதிஷ்டதே லிங்கம்.

 

இலிங்கம் புருஷனுடைய வினோதார்த்தங்களைச் சாதித்துத் தருவதற்காக அமைந்த வொன்றாம். இவ்வாறு சாதித்துத் தருதற்கண் எதுபோல் ஒழுகுகின்றதெனின், அரங்கத்திற் பார்ப்பார் பொருட்டு பற்பல வேடந்தாங்கி நடிக்கும் நடன் போல், புருஷ சந்நிதானத்தில் தன்னை நடித்துக் காட்டுகின்றது

 

இவ்வாறு பற்பல கோலங்கொண்டு எவ்வாறு இலிங்கம் நடிக்கக் கூடுமெனின், பெரும் பரப்பினதாய பிரகிருதியோடு புணருவதால் அப் புணர்ச்சி காரணமாகத் தன்பாலுள்ள எண்ணங்களெல்லாம் பலவகைத்தாய கோலங்களாய் விளைய (புருஷன் தன்னைவிட்டு முத்திக்கரை யேறும்வரை) ஒய் ஒழிவிலா அற்புதக்கூத்தைச் செய்விக்கின்றது.

உரை: - கௌ.-பாதருரை: - புருஷனது நன்மையைக் கருதியே பிரதானம் கிருத்தியத்திற்கு ஆரம்பிக்கின்றது. புருஷன் தரிசிக்க வேண்டியன இரண்டு; அத் தரிசனத்தை விளைத்தற்காகவே பிரதானம் முயற்சிப்பது. கரணாதி இந்திரியங்கள் வாயிலாக சப்தம் முதலியவற்றைக் காணுதல் ஒன்று; குணங்களுக்கும் தனக்கும் (புருஷனுக்கும்) உள்ள நுட்பமான வித்தியாசத்தைக்காணுதல் மற்றையது. சப்தாதி விஷயங்களைக் காணுதல் என்பது இந்திரியபோகமாகும்; இஃது திவ்யகந்தம் முதலியற்றைப் பிரமாதி லோகங்களில் அனுபவித்து இன்புறுவது. மற்றைய தோ குணங்களுக்கும் தனக்கும் (புருஷக்கும்) உள்ள வேற்றுமையைக் கண்டு பிரபஞ்சக்கட்டில் நின்று, விடுதலை (மோக்ஷம்) பெறக் காரணமாகும். ஆகவே பிரகிருதி போக மோஷங்களைக் காட்டுதற்கே யமைந்தது,

 

நிமித்தங்கள் எனப்படும் எண்ணங்கள் புண்ணியபாவம் முதலியன; அவற்றின் பலனாகிய கைமித்தியங்கள் சொர்க்க ஆரோகணம் முதலியன.

 

பிரதானத்தோடு புணருவதால் சகல போகங்களும் விளைகின்றன.
எவ்வாறெனின் அரசன தனது ஆக்ஞா சக்கரத்தின் வலியால் தன் இஷ்டப்படி வேண்டியவற்றை யெல்லாம் செய்து இன்புறுவதுபோல் பிரகிருதியாகிய யானை பேராற்றல் வாய்ந்த பிரதானத்தைக்கூடி தனது எண்ணங்களெல்லாம் வெளிப்பட்டு பற்பல கோலங்களாக இலிங்கம் சகல தரிசனங்கனையும் புருஷனுக்குச் செய்விக்கின்றது.

 

இலிங்கம் மிகச் சூக்குமமானது. பரமாணுக்கள் ஆகிய பஞ்சதன் மாத்திரைகளால் ஆயது. இதனுள் பதின்மூன்று கரணங்கள் வதிகின்றன. பஞ்சதன் மாத்திரைவடிவாய் பதின் மூன்று கரணங்களை, உள்ளமையப் பெற்ற இவ் இலிங்க சரீரம் தேவர், மனிதர், விலங்கு முதலிய ஜீவபேதங்களாக அவதரிக்கின்றது. எவ்வாறெனின் நடன்போல் நடன் திரை மறைவிற் சென்று மனிதவேடம் போட்டுக்கொண்டு வெளிப்படுகின்றான். பின்னரும் திரைமறைவிற் சென்று கோமாளியாக வெளி வருகின்றான். இவ்வாறே சூக்கும ரூபமாகிய இலிங்க சரீரம் தன்னுடைய எண்ணங்களின் சக்தியால் உந்தப்பட்டு சொர்க்கம், பூமி, பாதலங்களுட் புகுந்து தனக்கு ஏற்படும் கோலங்களைத் தாங்கித் திரிலோகமாகிய அரங்கத்தில் விளையாடுகின்றது. யாகவும், குதிரையாகவும், புமானாகவும், பெண்ணாகவும் மற்றும் எப் பொருளாகவும் மற்றும் எல்லாப் பொருளாகவும் உருத்திரிந்து நாடகமாட வல்லது.

 

இந் நாடகத்தில் புருஷன் எஜமானனாய் விநோதங்களைத் தரிசிக்கும் பார்ப்பான்; இலிங்கம் நடிப்போன்; பிரகிருதி மறைவாயிருந்து இலிங்கத்திற் பற்பல வேடங்களைத் தரிப்பித்து விளையாட விடுபவன்.

 

இந் நாடகசாலை மூன்று லோகங்களையும் தன் மாட்டு அமையப் பெற்றதாய் பார்ப்பான் தரிபுவனங்களையும் பார்க்கவல்ல திரிலோகி.

 

எண்ணங்களாகிய நிமித்தங்கள் இவை யென்பதனையும், எண்ணங்ளின் பலனாகிய நைமித்தியங்கள் இவை யென்பதனையும் விவரித்துக் காட்டலுற்றார்.

எண்ணங்கள் = பாவங்கள், = நோக்கங்கள், = கன்ம விளைச்சிக்குக் காரணங்கள்.


43-வது காரிகை


ஸாம்ஸித்த காஸ்ச்சபாவா: பிராகிருதிகா வைகிருதிகாஸ்ச்ச தர்மாத்யா: -

திருஷ்டா: கரணாஸ்ரயிண: கார்யாஸ்ரயிண ஸ்ச்ச கல்லாத்யா:


[எண்ணம், நிமித்தம், நைமித்தம் இவை யென்பனவற்றை விளக்கலுற்றார்.]


[மூவகை ஞானமும் அவற்றிற்கு உரியாரும் உடன் கூறப்பட்டது.)

 

பாவங்கள் (எண்ணங்கள்) பிறவியின் முன்னரே புத்தியின் கண் உறைவனவாம்; பின்னர் பிறவியால் வெளிப்பட்டு (பிரகிருதிகா பாவங்களென) த் தோன்றுவனவாம்; பின்னரும் ஆசிரியனது உபதேச வாயிலாகவும் தெளி வறுத்தக்கன.

 

இவ்வித பாவங்கள் யாவை யெனின் அறம், மறம், அறிவு, அறியாமை, அவா இல்லாமை, அவா, சித்தி, சித்தியின்மை.

 

இவ் வெட்டும் புத்தி தத்துவத்தில் அருவமாயுறைந்து, சிருஷ்டி காலத்தில் கரணங்களாக உருப் பெற்றுத் தோன்றும்; இவை ஜன்மத்திற்கு (பிறவிக்குக்) காரணமாகும்.

 

காரணங்களாக உருப்பெற்று நிமித்தங்களான பாவங்கள், பின்னர் என்பு, மாமிசம், தோல் முதலாக வாய்ந்த தேகங்களாகிக் காரியப்படுகின்றன. (நைமித்தங்களாகின்றன.)

 

உரை: - ஆகவே புத்தியாகிய மகத்தை விட்ட கலாதன எண்வகைப் பாணி கொண்ட அருவ பாவங்கள்; ஆத்துமா மாயையில் இறங்கி விளையாட ஆரம்பிக்கும் பொழுது இவ் அருவ பாவங்களைக் கொண்ட இலிங்கத்தோடு தொடக்குறுகின்றான். இலிங்கம் தொடுபடவே இவ் எண்வகை அருவமான எண்ணங்களும் ஒளி, இருள் என இரு கிளைப்பட்டு, அறம், அறிவு,
வைராக்கியம், சித்தி யெனவும் மறம், அறியாமை, அளி சித்தியின்மை யெனவும் விரிகின்றது. இலிங்கமும் அவ் விருகிளைகளிலும் ஒன்றி மாட்டிக் கொள்கின்றது. இதுவே வித்தை, யவித்தைகளாகிய நிமித்தங்களோடு இலிங்கம் மாட்டிக் கொண்ட சம்பந்தம்.

 

இனி இருட்கினை பஞ்சதன் மாத்திரைகளையும் பஞ்சிகரணத்தாலுண்டாகும் கோசங்களையும் உண்டுக் காரணமாகும்; ஒளிக்கிளையோ கரணங்களை இந்திரியங்களாக வெளிக்குக் கொண்டுவரக் காரணமாகும். ஆகவே வித்தை யவித்தைகளிற் சிக்குண்ட இலிங்கம் பின்னர் தோகங்களோடும் அவற்றை நடத்தும் இந்திரியங்களோடும், மற்றும் விரிந்து அத்து விதமாகி விளையாடுகின்றது. இதுவே நைமித்தங்களோடு இலிங்கம் சிக்குண்டு மாட்டிக் கொண்ட சம்பந்தம்.

ஓர் முளையும் (பாவமும் = நோக்கமும்) கொள்ளாதிருந்த ஓங்காரம் புருஷவடிவா யிருந்தது. இவ் வோங்கார புருஷன் இருகிளையும் எட்டு நோக்கமும் வாய்ந்த இலிங்கத்தோடு சம்பந்த முறவே அவ் விருகிளைகளும் அவ்வெட்டு நோக்கங்களும் வெளிப்படையாய்த் தோன்றின. இதனால் நோக்கங்கள் கரணங்களாயின. மற்றும் ஒங்கார இலிங்கத்திற் புரளவே ஒளியின் வழி இந்திரியங்களும் இருளின் வழி தேகங்களும் தோன்றின.


 

முத்தி எவ்வாறு கை கூடும்? இலிங்கத்தைத் தேக இந்திரியங்களினின் றும் கழற்றிப் பின்னர் கரணங்களினின்றும் அவித்தையினின்றும் கழற்றி, மகத்தினிடம் சுத்த நோக்கம் ஒன்றுமே யமையும்படி நிறுவித், தான் இலிங்கத்தைத் தனிக்க விட்டுப் பாஞ்சோதியாதல் ஓர்வழி; இஃது கிரமமுத்தி, தன்னைச் சுயம்புவாகக் கண்டு தான் ஒன்றோடும் தாக்கற்றவன் என உணர்ந்துதான் பிரிந்த சோதியோடு ஐக்கிய மாதல் ஒன்று.

பந்தம் கடந்து நிற்கும் பாவங்கள் சாமுசித்திகா பாவங்கள்; கரணங்களோடுறையும் பாவங்கள் பிரகிருதிகா பாவங்கள்; தேகத்தோடுறையும் பாவங்கள் வைகிருதிகா பாவங்கள்.

 

43-வது காரிகையின் தொடர்ச்சி

 

புத்தியோடு கூடவே சித்திகள் என்றும் உறைகின்றன; இவை முதல் எண்ணங்கள்.

 

பிரகிருதியால் அறம் முதலியவாகக் கரணங்களிற் காணப்படுவன இரண்டாம் எண்ணங்கள்.

 

வாக்கால் கலலமாக (சிதால், என்பு முதலியவாகக்) காணப்படுவன மூன்றாம் எண்ணங்கள்.

 

உரை: - முதலெண்ணம் அல்லது பாவம் என்றும் அழியாதது, புத்தியை யொட்டியுறையும். இதுவே விஞ்ஞானம். இதனைத் தெரிந்து கொள்ளுபவர் முத்தி கரையைப் பிறர் உதவியின்றிக் கிட்டுவர். இலர், தம்மைப் பிறப்பில்லாப் பெரியோரெனக் காண்பர். பிறவியின் முன்னமே இந்த ஞானத்தைப் பெற்றிருப்போர் சாமுசித்தர். இவர் பிறந்தாலும் ஞானத்தைத் தம்மை விட்டகலாது கூடவே கொண்டு வரவும் வல்லவர். கபிலர், கிருஷ்ணபகவன், ஜடபரதன் முதலியோர் இத்தகையினர். கபிலன் பிறக்கும் பொழுதே (சாங்கிய) ஞானத்தோடு அவதரித்தவன் எனக் கௌடபாதர் உரைத்தனர்.

 

இவர் சாமுசித்திகாபாவத்தோடு அவதரிப்பவரெனக் கொள்ளலாம். இவர்க்கு சுதந்தரம் உண்டு.

 

சிலர்க்கு ஞானம் பிறவியாற் கிட்டும். சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தரராகிய பிரம்மபுத்திரர் சகல ஞானத்தையும் தமக்கு வயது பதினாறு நிறைந்த காலத்திற் கண்டனர். இவ்வாறு ஞானத்தைப் பிறவியால் தம்பால் பிரகிருதியீனுதவியாற் பெறுவோர் பிரகிருதிகா பாவத்தினர்.

இனிச் சாமான்னியர் ஞானத்தை ஆசிரியனது வாக்கு விசேடத்தாற் பெறுவர்.
இவரை வைகிருதிகாபாவத்தினர் எனக் கொள்க.

 

இம் மூன்று வழிகளுள்ளும் ஓர் வழியானும் மெய்ஞானத்தைப் பெறுதற்கு இயலாத அபாத்திரர் மிருகத்தன்மை நீங்காதார். இவர்க்கு இப்பிறவியில் ஞானம் கை கூடுதல் கடினம்.


ஆகவே, சாழசித்தர் தாமே முக்திக் கரை சேருவர்.

 

பிரகிருதாபாவத்தினர் உபதேச மின்றிக் காலக் கிரமத்தில் ஞானம் விளைய முத்தி சேர்வர்.

 

வைகிருதிகாபாவத்தினர் உபதேச வாயிலாக மெய்ஞ்ஞான பாவந்தோன்றி முத்திக் கரை சேர்வர்.


பாமரர் பிறவிக்கடலுள் உழலுபவர்.


ஆன்மாக்கள் விஞ்ஞான கலர், பிரளையாகலர், சகலரெனவும் பிரிக்கப்படுவர்.

 

பாவங்களை 23-வது காரிகையிற் கூறப்பட்டன. அவை அறம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் என ஒளி வழிப்பட்ட நான்கும், மறம், அஞ்ஞானம், அவா, அனைசுவரியம் என இருள் வழிப்பட்ட நான்குமாகிய எட்டுமாம். இவற்றின் பலனைக் கூறலுற்றார்.


44-வது, காரிகை


தர்மேணக்மன மூர்த்வம் கமனம் அதஸ்தாத் பவத்யதர்மேண -
ஞ்யானேன் சாபவர்கோ விபர்யயாதிஷ்யதே பந்த,

அறத்தால் மேலேறுங் கதி விளைகின்றது; பாவத்தாற் கீழ்நோக்கி விழும் கதி விளைகின்றது. ஞானமாசிய மெய்யுணர்ச்சியால் விடுதலை (முத்தி கைகூடு கின்றது; அஞ்ஞானமாகிய திரிவுணர்ச்சியால் சிக்கல் (பந்தம்) உண்டாகின்றது.


45-வது, காரிகை


வைராக்கியாத் பிரகிருதிலய: ஸம்ஸா ரோபவதி ராஜஸாஸ்த் ராகாத் -
ஜஸ்வர்யாத விகாதோ விபர்யாயாத் தஹிபர்யாஸ:

 

வைராக்கியத்தால் பிரகிருதி லயங்கிட்டுகின்றது; அவாவால் பிறவிக்கடலில் இலிங்கம் அங்கு மிங்கும் ஓடி அலமரல் நேர்கின்றது. ஐசுவரியத்தால் தடையற்ற போகத்திற்றடை நேர்கின்றது.

 

உரை: - ஆகவே, எட்டுப் பாவங்கள், எட்டுக்கதிகள் அறம் (தர்மம்) – சொர்க்கலோகப் பிராப்தி; அதர்மம் -- நரகலோகப் பிராப்தி; ஞானம் மரணத் தெளிவு; திரிவுணர்ச்சி - பிறப்பு இறப்பின் மயக்கம் வைராக்கியம் - இலிங்கம் ஓட்டமின்றிப் பிரகிருதியில் ஒடுங்கித் தூங்குதல்; அவா - பிறவிக்கடலில் திரிந்து அலைதல்; ஐசுவரியம் (சித்தி - நினைத்த போகம் தடையின்றிக் கூடிவரல்; அனைசுவரியம் (சக்தி) - நினைத்த போகத்திற்கு இடையூறு உண்டாதல்.

 

அறம் யாதோவெனில் ஆன்மாக்கள் ஈடேறும் வண்ணம் அவன் கோரிய நெறியின் வழி யொழுகலாம்.


“நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவில், நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியில் நெரிஞ்சில் முட்பாய கில்லாவே.''
                    (திருமந்திரம்)


அதர்மமாகிய நெறியல்லா நெறிவழிச் செல்லின் மொத்துற தல் உண்டாகும்.

 

ஞானம், அஞ்ஞான மென்பவையிவை யென்பதனைப் பின்வரும் அருள் வாக்கான் உணர்சு: -

திருவாசகம்

 

"வைத்தமிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வியெனும்

பித்தவுலகிற் பிறப் போடிறப்பென்னும்

சித்தவிகாரக் கலக்கம் தெளைவித்த

வித்தகச் செல்வர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.''

வைராக்கியம் என்பது இகபர போகங்களில் ஆசை செல்லாமை. எந்த எந்த ஆசைகளை யெல்லாம் விட்டு ஒருவன் நீங்குகின்றானோ, அந்த அந்த ஆசைகளாற் பின் விளையும் துன்பத்தினின்றும் விடுதலையடைகின்றான். துன்பநிவர்த்திக்கு ஆசையறுதல் வழியாகும். அவாவே பிறப்பீனும் வித்து.


''ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பம்

ஆசை விடவிட ஆனர் தமாமே.                               (திருமந்திரம்)

 

ஐசுவரியம் என்பது சக்தியைத் தன் வயப்படுத்தி அதனை யாளுதல். சக்தியை யாள்வார்க்கு எப்போகமும் இடையூறின்றி நினைத் தாங்கு நிகழும்; சக்தி கைவசமாகாதாரோ எவ்வகையான போகத்தின் கண்ணும் இடையூறைக் காண்பர்.

 

மேற்கதி யென்பது தேவசரீரம் பெறுதல். இது ஒளிவழிச் செல்லும் மார்க்கம். கீழ்க்கதி என்பது விலங்குகளாகவேனும் நரகத்திலேனும் சேருதல்; இது இருள்வழி - மனிதகதியோ ஒளியும் இருளும் உடன் கலந்த கதி. ஒளிவழிப்பட்டார் மேலே உயர்த்தப்படுவார். இருள் வழிப்பட்டார் கீழே இழுக்கப்படுவார். மனிதனோ ஒளியம் இருளும் வாய்ந் தவனாதலின் சொர்க்கம், மத்தியம், பாதலமாகிய மூன்று கதியிலும் திரியவல்லவன். பரஞானத்தைப் பெறும் பொழுது இந்த மூன்று கதிகளையும் தாண்டி தரியகதியில் பிறப்பைக் கடந்து ஏறிக்கொள்வன்.

பந்தம் என்பது பிறப்பின் மயக்கம் தீராமையாம். இது மூன்று வித மாகுமெனக் கௌடபாதர் கூறுவாராயினர். அவை பிரகிருதிகாபந்தம், வைகிருதிகாபந்தம், தக்ஷிணபந்தம், என்பன. ஒருவன் தன்னைச், சடமென நினைத்தல் இயற்கையாகிய பிரகிருதிகாபந்தம்; இந்திரியங்களாக வேனும், அந்தக்கரணங்களாக வேனும் மதித்தல் வைகிருதிகா பந்தம்; தன்னை யறியாது ஒருவன் விரதங்களாலும், தர்ம கைங்கிரியங்களாலும் தனக்கு நன்மை தேடுவது தக்ஷிண பந்தம்.


இனி, புத்தியின் சிருட்டியை விரிக்கலுற்றார்.

46-வது காரிகை


ஏஷ பிரத்ய யஸர்கோ விபர்யயா ஸக்தி துஷ்டி சித்தாக்ய: -

குணவைஷப்ய விமர்த்தாத் தஸ்யச பேதாஸ்து பம்சாஸத்.


புத்தி சிருட்டி

 

மேற்கண்ட எட்டு நோக்கங்களும் (பாவங்களும்) அவற்றாற் போதரும் பலன்களாகிய எட்டுக் கதிகளும் புத்தியின் விளைவாம். (சிருட்டியாம்)

 

இவை திரிவுணர்ச்சி, வலிக்குறைவு, மடி, சித்தி என்னும் நான்கு வகுப்பினுள் அடங்கும் இந் நான்கு வகுப்பினுள்ளும் புகுந்து நோக்கின் முக்குணங்கள் ஒன்றோடு ஒன்று முரணுவதால் ஐம்பது பாகுபாடுகள் தென்படும்.

 

உரை: -. ஆகவே புத்தி சிருட்டியை பாவங்களாகவும், அவற்றின் பலனாகவும் நோக்கின் பதினாறாம்.

மற்றுமோர் பாவனையாற் பார்க்கின் இப்பதினாறும் நான்கு வகுப்பினுள் அடங்கும். அந் நான்கையும் உட்புகுந்து நோக்க ஐம்பதாகத் தோன்றும்.


அது எவ்வாறெனிற் கூறலுற்றார்.


47-வது காரிகை


பஞ்ச விபர்யய பேதா பவந்திய சக்திஸ்ச்ச காணவைகல்யாத் –

அஷ்டா விம்ச திபேதாஸ் துஷ்டி, நவதாஷ்டதாசித்தி:


புத்தி சிருட்டி ஐம்பது வகைத்து

 

திரிவுகாட்சி ஐந்துவகையினை யுடையது; கரணங்களில் நேரும் விகற் பங்காரணமாக உண்டாகும் வலிக்குறைவு இருபத்தெட்டு வகைப்படும். மடி ஒன்பது வகைப்படும்; சித்திகள் எட்டு வகையின.


உரை: -     திரிவுக்காட்சி -     5,    

வலிக்குறைவு-     28,         

மடி               9           50         

சித்தி             8,    

 

திரிவுக் காட்சி = விபர்யயம். இந்த இடத்தில் தவறான எண்ணத்தின் மேற்று, அவித்தை யெனப் பதஞ்சலியார் பெயர் கொடுத்து யோக நூலிற்கூறியதைக் கபிலன் விபர்யம் எனக் குறியீடு கொடுத்து அதன் பிரிவுகளையும் கூறலுற்றான்.

வலிக்குறைவு =சக்தி ஈனம். அந்தக்கரணங்களிடத்தும் இந்தியங்களிடத்தும் உள்ள சக்தி குரைவுப்படுதல்.


மடி = துஷ்டி. விவேகத்தைப் பணி கொள்ளாமை,

சித்தி என்பது சர்வசக்தியும், குற்றேவலுக்குக் காத்திருத்தல். இவை அஷ்டமகா சித்திகளெனப் பெயர் பெறும். கபிலன் இவ் அட்டமா சித்திகளையும் வேறோர் பாவனையால் எட்டு வகுப்பினுள் அடக்கினான்.

 

விபர்யயம் ஆகிய திரிவுணர்ச்சியைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் தமிழில் மருள் என்னும் பெயராற் கூறினார். தானல்லாத வொன்றைத்தானாக மதித்தலே மருளாம்; பொருளல்லவற்றைப் பொருளெனக் கொள்ளுதலும் மருளாம்:

 

அறியாமை ஐந்து பாகு பாடுகளை யுடையது. இவற்றைப் பஞ்சக்கிலே சங்களென
பதஞ்சலி கூறுகின்றார். அவர் அவற்றிற்கு இடும் பெயர்களாவது: - அவித்தை அஸ்மிதை, ராகம், துவேஷம், அபினிவேசம். கபிலன் இவற்றை முறையே தமசு, மோகம், மகாமோகம், தாமிசிரம், அந்த தாய்சிரம் என்னும் பெயர்களாற் கூறினர். தமிழிற் குறியீடு கொடுப்பின் இவை: -


                        மருள்=தன்னை மற்றொன்றாக நினைத்தல்.
                        அவர் = அகங்காரம் = அஸ்மிதை.
அறியாமை.              பேரவா = ஆசை = ராகம்.
                        பேரிருள் =வெறுப்பு= துவேஷம்.
                        மிக்க பேரிருள் =பற்று = அபினிவேசம்.

48- வது காரிகை


பேதஸ்மதஸோ அஷ்ட விதோ மோஹஸ்ய சதஸ விதோ மகாமோஹ: -

தாமிஸ்ரோஷ்டதஸதா ததாபவத்யந் ததாமிஸ்ரா


(ஐந்து வித அறியாமையும் 62 வித பேதங்களாக நோக்கப் படுகின்றன.)

 

மருள் எட்ட வகையது; அகந்தையாகிய ஆணவமும் எட்டு வகையது;
ஆசை - 1 வசையது; வெறுப்பு பதினெட்டு வகையது: திகில் காரணமாக விளையும் பற்றானது பதினெட்டு வகையது. (திகிலே பதினெண் வகையதெனவுங் கொள்ளலாம்.)

 

உரை: - ஆகவே ஐவகை யறியாமையும் அறுபத்திரண்டு வகுப்பினுள் அடங்கும்: - மருள் 8, ஆணவம் 8, ஆசை 10, வெறுப்பு 18, திகில் 18. ஆக 62

 

மருள் = தானல்லா வொன்றைத் தானாகக் கருதுதல்,

ஆணவம் = தன் பாலுள்ள சக்திகளை (சித்திகளை) விடாது வகித்தல்.

ஆசை= விஷயங்களின் மேலிருக்கும் விருப்பம் ஒழியாமை.

வெறுப்பு =சித்திகளும் விஷயங்களும் தன்னை விட்டு நழுவுவதால் வரும் துவேஷம்.

திகில் = சித்திகளும் விஷயங்களும் தனது சுவாதீனத்தை விட்டு ஓடிப் போகுமோ கானும் பயம்.

 

மருள். 8: - சித்தையும் ஆனந்தத்தையும் வேண்டி யாங்கு புரிதற்கு வாய்ந்த விளக்காகிய புத்தியைத் தானாக மதித்தல் 1; சப்தத்தையும், பரிசத்தையும், ரூபத்தையும், இரசத்தையும் எழுப்பி வெளி காட்டுதற்கமைந்த அகாகார சக்தியைத் தானாகக் கொள்ளுதல் 1; அருகே யிருத்தியும், தூரத்தே செலுத்தியும் பணி வாங்குதற்கு இ. யைந்த மனத்தைத் தானெனக் கொள்ளுதல் 1; சப்தத்தையும், பரிசத்தையும், ரூபத்தையும், இரசத்தையும் கந்தத்தையும் தானாக வெண்ணு தல் 5; ஆக மருள் எட்டு வகையினை யுடையது.

 

ஆணவம் 8: - இவ் வாணவம் இந்திராதி தேவர்களிடத்து மிகவும் அமைந்து அவரை முத்திக் கரையேற வொண்டாது பிறவிச் சுழற் கண் திரும்பவும் திரும்பவும் புகுத்துகின்றது. அஷ்ட மகா சித்திகள் காலக் கிரமத்தில் நீங்கப் பார்க்கினும் அவற்றை விடாது வகிக்க ஆரம்பிக்கவே பிறவித்துன்பம் விளைந்து கொண்டிருக்கும். அஷ்ட சித்திகளைப் பதஞ்சலியார் யோக சூத்திரத்திற்கு எழுதியுள்ள உரையிற் காண்க. ஆயினும் அவற்றின் பெயர்களை இங்கு கூறுதும். அவை: --அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வரித்துவம், ஈசத்துவம் என்பவைகளாம்.

 

ஆசை 10: - ஜாக்க்கிரத்தில் தோன்றும் சப்தாதி விஷயங்களையும் அரிய
சொர்ப்பன வாயிலாக எழும் தெய்வீக சப்தாதிகளையும் பற்றி நிற்கும் விருப்பம் ஒழியாமை. இவ் விஷயங்கள் பத்தாகலின் ஆசையும் பத்தாகும்.

 

வெறுப்பு 18: - எட்டு வகைச் சித்திகளும் பத்துவகை விஷயங்களும் தம் வயத்தினின்று நீங்கப் பார்ப்பதால் எழும் துவேஷம் பதினெட்டாகும்.

 

திகில் 18: - எட்டுவகைச் சித்திகளும் பத்து விஷயங்களும் தன்னை விட்டு நீங்கி விடுமோ வென வெருக் கொள்ளல் பதினெட்டாகும்.


49-வது காரிகை


யேகாதஸேந்திரியபதா ஸஹபுத்தி பதைர சக்திருத்திஷ்டா –

சப்ததஸபதா புத்தேர்விபர்ய யாத்துஷ்டி வித்தினாம்.


இருபத்தெட்டு வகை வலிக்குறைவு.

 

இந்திரியங்கள் பதினொன்றின் கண்ணும் புத்தியின் மாட்டும் நேராக நின்ற விபத்துகள் வலிக்குறைவுகளாம். புத்தியின் மாட்டு நேரும் சக்திக்குறைவு பதினேழு வகையதாகும்; இதை எண் வகைச் சித்திகளும், ஒன்பது வகை மடியும் தம் நிலை திரிதலால் உண்டாவன.

 

உரை. ஆகவே, இந்திரியக்கேடு 11. புத்திக்கேடு 17. ஆக 28.


ஞானேந்திரியக் கேடு.                            கன்மேந்திரியக் கேடு


செவி       -      செவிட்டுத் தன்மை.            வாக்கு      -      ஊமைத்தன்மை
தோல்       -      குஷ்டம் (தோல் தடிப்பு)         பாதம்       -      கால் வாராமை.
கண்        -      குருட்டுத்தன்மை               பாணி       -      கை வாராமை.
நா          -      நாத்தடிப்பு                     பாயுரு      -      அஜீரணம்.
மூக்கு       -      மூக்கடைப்பு.                   உபத்தம்     -      வீரியக்குறைவு


மனேந்திரியக் கேடு.


பைத்தியம். ஆக இந்திரியக்கேடு 11 விதம்.

புத்திக்கேடு 17 என்பதன் விளக்கம்.


அஷ்ட சித்திகள் கை கூடாமை, 8.

 

1. அணிமா கை கூடாமை; தன்னறிவை நுணுகி ஓர் அணுவில் அடங்கும்படி செய்ய முடியாமை. அணிமாவே முத்திக்கு வழி.

 

"சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்றாய் திருப்பெருந்துறைபுறை சிவனே' என்று இந்த அதி இரகசியத்தை விளக்கினர் திருவாசக அடிகளார்.


      2. மகிமா கை கூடாமை; தனது இலிங்கத்தை வேண்டி யாங்கு பெருக்க முடியாமை,
வாமனன் திரிவிக்கிரமனாய் நீண்டது மகிமா சித்தியாம்.

 

3. இலகிமா கைகூடாமை; தனது பாரத்தைக் குறைக்க முடியாமை. இலகிமா கைவந்தவரே ஜலமேல் நடக்கவல்ல சமர்த்தர்.

 

4. கரிமா கை கூடாமை. தனது பாரத்தையேனும் வேறு எப்பொருளின் பாரத்தையேனும் பெருக்க முடியாமை. பரமன் அமர்நீதி நாயனாரை ஆட்கொள்ளக் கௌபீனத்தின்பாற் காட்டிய சதுர்ப்பாடு கரிமாவாகும்.

 

5. பிராப்திகை கூடாமை; நினைத்த பொருளை லெட்ட முடியாமை காரைக்காலம்மையார் தெய்வீக மாங்கனியைக் கைக்கொண்டு கணவற்கு சமர்ப்பித்தது பிராப்தியாகிய சித்தியாகும்.

6. பிராகாமியங்கை கூடாமை; -நினைத் தாங்கு எதனையும் ஊடறுத்துச் செல்ல முடியாமை; லெட்பீட்டர் என்பவர் எழுதிய “ஞான திருஷ்டி” என்ற நூலில் பிலடெல்பியாவிலிருந்த ஓர் மகானது சரிதத்தில் பிராகாமிய சித்தியை விளங்கக் காணலாம்.

 

7. வசித்துவங் கை கூடாமை, பிறர் மனத்னதயும் விலங்குகளின் மனத்தையும் தன் வயப்படுத்தி அவரது புத்தியை ஆட்கொள்ள முடியாமை. வசித்துவ சித்தியைப் பரமன் சுந்தரனை வன்றொண்டனாக்கித் தடுத்தாட்கொண்ட சரிதத்தால் தெளிக.

 

8. ஈசத்துவங் கை கூடாமை; ஒன்றையாக்கி, நிறுத்தி அழிக்கக் கூடாமைக் குழந்தைச் சிவனாராகிய ஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய தன்கண் சிருட்டி திதிகளையும், புத்தன் தலையில் இழையை வீழ்த்தியதில் சங்காரத்தையும் தெரிந்து ஈசத்துவ சித்தியின் சொரூபத்ஸத நாடுக.


விவேகத்தை நிகழவொட்டாப் படபடப்பு 9 வகைத்து.
(Too much impatience is of 9 kinds.)

 

இவ்வாத்திரம் உண்ணோக்கியும் வெளிநோக்கியும் நிகழும். உண்ணோக்கிய ஆத்திரம் பிரகிருதி, உபதானம், காலம், விதியாகிய நான்கையும் பற்றி நிகழும்; வெளிநோக்கிய ஆத்திரம் பஞ்சதன் மாத்திரைகளை நோக்கி யெழும்.

 

1. பிரகிருதி தானே வழிகாட்டவேண்டிய திருக்க ஏன் இன்னும் வழி காட்டவில்லை என்னும் படபடப்பு.

 

2. கண் திறத்தற்குத் துறவே காரணமா பிருப்பதனால், அதற்கு உபதானமாகிய துறவை நான் வகித்திருக்குங்கால் என முத்திக்கு வெளிச்சம் பிறக்கவில்லை என்ற படபடப்பு.

 

3. காலமே எவற்றையும் சாதித்துத் தரவல்லதாயிருக்க, நாம் நெடுங்காலம் காத்திருந்தும் என் வெளிச்சம் பிறக்கவில்லை என்ற படபடப்பு.

 

4. யாவர்க்கும் எதனையும் விதியே சாதித்துத் தரவல்லதா யிருக்க, என்னுடைய விதி ஏன் சாதித்து தரவில்லை என்ற படபடப்பு.


ஆக உள்ளாத்திரம் 4.


இனி வெளியாத்திரம் ஐந்தின் விபரம்: -

 

5. சப்தத்தை யுற்று நோக்க அதன் சொரூபத்தைத் தெரிந்து கொள்ளாது வீணே சப்தத்தைச் செவியாலேற்று, எள் எனக்குச் சப்தத்தின் தந்திரம் புலப்படவில்லை என்று கோபங்கொள்வது.

6. பரிச தந்திரத்தையற்று நோக்காது எனக்கேன் பரிசத்தின் இரக
சியம் புலப்படவில்லை யெனக் கோபங்கொள்வது.

 

7. ரூபங்களை நோக்கிய வழியும், ரூபங் கண்ணிற்கு எவ்வாறு தரிசனமாகின்றதென உள்ளீட்டில் நாட்டத்தைப் பதிப்பிக்காது, என் ரூபத்தின் இரகசியம் எனக்குப் புலப்படவில்லை யெனக் கோபங்கொள்வது.

 

8. இரசங்களைப் பருகியும் எனக்கு உருசியின் தந்திரம் ஏன் புலப்பட வில்லையெனக் கோபங்கொள்வது.

 

9. கந்தங்களை முகர்ந்தும் ஏன் எனக்கு அவற்றின் தந்திரம் தோன்ற வில்லை யெனச் கோபங் கொண்டிருத்தல்.

 

50-வது காரிகை


ஆத்யாத்மிகாஸ்ச்சதஸ்ர: பிரகிருத்யுபாதானகால பாக்யாக்யா:

பாக்யா விஷயோ பரமாத்பஞ்ச வதுஷ்டயோபிஹி தா:

 

மடி ஒன்பது வகைத்து

 

மடி ஒன்பது வகையதெனக் கொள்ளப்படுகின்றது. இம்மடி அந்தரங்கமாய் பிரகிருதி, உபாதானம், காலம், விதி என்றவற்றின் மாட்டு நிகழ்வதால் நான்கு விதங்களாகவும் வெளி நோக்கி பஞ்ச தன்மாத்திரைகளை நிக்கிரகம் பண்ணுவதால் ஐந்து விதங்களாகவும் ஆக ஒன்பது வகைப்படுகின்றது.

 

உரை: - மடி யென்பது விவேக நோக்கம் அற்றிருத்தல். படபடப் பென்பது அடக்கக் குறைவு. நோக்கமற்றிருப்பினும் ஞானம் கைவராது; நோக்கமிருப்பினும் சாவதானக் குறைவால் ஞானம் கைவராது.


"தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம்

நோக்கிற் குழையு மென்றுந் தீபற,

நோக்காமல் நோக்க வென்றுந் தீபற''


என்று திருவுந்தியாரில் கூறியபடி முனைக்காத நோக்கத்தாற் பெறப்படுவது.
ஞானங் கைகூடுதற்கு கொக்கின் நோக்கம் வேண்டற்பாற்று. தூக்கமும் ழிப்புமில்லாது இருந்து தனது காரியத்தை முடித்துக் கொள்கின்றது.

 

முள்ளில் ஓர் வஸ்திரம் மாட்டிக்கொண்டால் அதனை நோக்காது முள்ளை விட்டு நீக்க முடியுமோ? முடியாது. படபடப்பாய் இம்முள்ளிற்மூனே மாட்டியிருக்கின்றதென இழுப்பினும் வஸ்திரம் கிடைத்தும் பயனற்றுப்போம். ஆகவே நோக்கத்தையும் விடாது, இழுப்பதையும் விடாது பட படப்பையும் தூக்கத்தையும் அடக்கி வஸ்திரத்தை முள்ளினின்றும் விடுவிக்கலாம். மாயையாகிய முட் காட்டில் ஆன்மாக்கள் வினைவயத்தால் மாட்டிக்கொண்டனர். தக்க தந்திரத்தாலன்றோ மாயையை விட்டு விடுதலை பெற வேண்டும். மாயையை நோக்கவும் வேண்டும், அதனோடு போராடவும் வேண்இம். தந்திரத்தை விடவுங்கூடாது. ஆகவே மாயையின் இரகசியத்தானங்களைக் கண்டு வெகுதந்திரமாய் அவளது சிக்கலினின்றும் நீங்க வழிதேட வேண்டும்.


மடியின் ஒன்பது வகையாவது: -

 

1. பிரகிருதியை நோக்கிய மடி (அம்பா): பிரகிருதியே தனக்கேற்பட்ட ஒழுங்கில் அவரவர்க்கும் விவேகத்தை யெழுப்பி முத்திக்கரை சேர்ப்பிக்குமென வாளா (சும்மா) விருத்தல்.

 

2. உபாதானத்தை நோக்கிய மடி (சலீல): பிரகிருதியே முத்தி சேர்ப்பிக்குமெனல் பொருந்தாது; எவ்வாறெனின் பிரகிருதி எவர்க்கும் பொச வாகலின் அஃது முத்தி கூட்டி வைப்பின் யாவரும் ஏககாலத்தில் முத்திசேர வேண்டும்; அவ்வாறு கூடாமையின் துறவு பூண்டு திரிதண்டம் கமண்டலம் முதலியவற்றை ஆசிரயிப்பதுவே முத்திக்கு வழியெனத் துறவு பூண்டு வாளாவிருத்தல்.

 

3. காலத்தை நோக்கிய மடி (ஓகா): பிரகிருதியேனும் துறவேனும் முத்தி பயப்பதாகக் கொள்வது தவறு; எவையும் காலக் கிரமத்தில் நடைபெறும். நமக்குரிய காலம் வரவும் முத்திக்கு வெளிச்சம் முத்திக்கு வெளிச்சம் பிறக்குமென வாளாவிருத்தல்.

 

4 விதியை நோக்கிய மடி (விருஷ்டி): முத்திக்கு வெளிச்சம் பிறப்பது பிரகிருதியாலு மன்று, துறவாலுமன்ற, காலத்தாலுமன்று; நமக்கு அதிர்ஷ்ட மென்பது உண்டானால் அஃது கைகூடுமென விதியை நோக்கி வாளாவிருத்தல்.

 

சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய ஐந்தின் வழி புத்தியைச் செலுத்தச் சோம்பலுறுதல் ஐந்துவகை. ஆக மடி ஒன்பது வகைத்தெனக் கொள்ளப்படும். ஆயினும் பஞ்ச விஷயங்களை நாடலால் ஐந்துவகைத் துன்பங்கள் உதயமாகின்றன; அத்துன்பங்களைக் கருதியே மடி வருதலின் அவற்றின் விபரம் வருமாறு,

 

5. நன்மார்க்கத்தாற் றனத்தை (பொருளை) மீட்ட முடியாமை பற்றி இந்திரிய சுகத்தை நாடாத மடி. இஃது ஈட்டற்றுன்பத்தால் வந்த மடி.

 

6. ஈட்டிய தனத்தைக் காப்பாற்றுங்கால் நேரும் கஷ்டத்தை சோக்கி இந்திரிய சுகத்தை நாடாத மடி. இஃது காத்தற்றுன்பத்தால் வந்த மடி.

 

7. ஈட்டிக் காப்பாற்றிய தனம் செலவாய்ப்போய்ப் பின்னும் துன்பத்திற்கானாக்குமே யென இந்திரிய சுகத்தை நாடாத மடி. இஃது தனச் செலவை நோக்கி யெழுந்த மடி.

 

8. தனத்தை ஈட்டிக் காத்துச் செலவு செய்வதால் இந்திரிய சுகங்கள் மென்மேலும் விருத்தியடைந்து, இந்திரியங்கட்குத் தக்க இரைபோட முடியாமை நோக்கி யெழும் மடி. இஃது இந்திரியங்கள் போஷிப்பால் திருப்தி யடையாமையை நோக்கிய மடி.

 

9. ஒருவன் இந்திரிய சுபத்தை யனுபவித்தல் காரணமாகப் பலருக்கு துன்பம் உண்டாகின்றது. தான் சுகத்தை நாடின் பிறர்க்குத் துன்பம் விளைகின்றது; அது காரணமாக இந்திரிய சுகத்தை நாடாதது ஓர் வகை மடி.

 

இவ்வொன்பது வகை ஆலசியமும் முறையே, அம்பஸ், சலீலம், ஓகா, விருஷ்டி, சுதமஸ், பாரம், சுநேத்திரம், நாரிகாம், அனுத்தமாம் பாசிகம் என வடமொழியிற் சிலராற் பெயர் பெறும்.


இனி எண்வகைச் சித்திகளைக் குறிக்கலுற்றார்.

 

51-வது காரிகை


ஊஹ: ஸப்தோத்யயனம் துக்கவிகா தாஸ் திரிய: சுத்தத்பிராப்தி: -

தானஞ்சசித்தயோஷ்டௌசித்தே: பூர்வோங்குசஸ் திரிவித:

 

எண்வகைச் சித்திகள்

 

ஊகம், சப்தம் (கேள்வி), அத்தியயனம் (கற்றல்), முக்கூற்றுத் துன்பங்களை யொறுத்தல், நல்லாரிணக்கம், தானம் ஆகியவை எண்வகைச் சித்திகனாம்.

 

திரிவுணர்ச்சி, வலிக்குறைவு, மடியாகிய மற்றை மூன்று பாவங்களும் இவ்வெண்வகைச் சித்திகளைத் தலையெடுக்க வொட்டா அங்குசங்களாம்.

 

உரை: - வலிக்குறைவின்கண் யாம் காட்டிய சித்திகள் அஷ்டமகா சித்திகளாம். இவண் கூறிய சித்திகள் கைகூடாமையையும் எட்டுவித வலிக்குறைவுக்கு உதாரணமாகவும் பாவித்துக் கொள்க.

 

அன்றியும் இவண் கூறிய சித்திகள் எட்டும் அஷ்டமகா சித்திகள் கைகூடுவதற்கு முற்படிகளெனவுங் கொள்க.

 

பாவங்கள் நான்கினுள் சித்திகள் மாயையோ லீலை செய்தற்கும் பின்னர் முத்திப்படி யேறுதற்கும் உகந்தன. திரிவுணர்ச்சி, வலிக்குறைவு, மடியாகிய மூன்றும், சித்திகளை விளையாவண்ணம் தடைசெய்து பந்தத்தைத் திமிரவொட்டாது செய்து புருஷனை முத்திக்கரை யேறவிடாத அங்குசங்கள் போல்வன.

 

ஊகம்: - என்பது பகுத்தறி நோக்கம். இதனுதவியால் அறிவனாகிய புருஷன் ஒருவன் உளன் என்பது திண்ண மாய்ப் போதத்திலுறைக்கும்:


"உண்டோர் ஒண்பொருள்” - திருவாசகம்.

 

சப்தம்: - ஊகத்தால் இந்திரியங்கட்கும் கரணங்கட்கும் அப்பாற்பட்டு துவெனத் தெளிவுபட உணரக்கூடாத ஓர் பொருள் உளதெனத் தீர்மானஞ் செய்தலும், பெரியோரும் அவ்வாறே கூறி அதனது இலக்கணத்தையும் விளக்கமுறக் காட்டியிருக்கும் வண்ணம் சில சுருதி வாக்கியங்கள் கூறியிருப்பதும் புத்திக்கு எட்டுகின்றது. தனது ஊகத்தால் ஓர் ஒப்பிலாப் பொருள் உண்டு என்னும் நம்பிக்கையோடு தனது மனதில் நாட்டப்பட்ட பொருள் யாவராலும் மறுக்க வொண்ணாத தாகும். வேதத்தாலும் உளதெனக் கூறப்படுகின்றதைத் தெரிந்த தீரன் அவ்வேதங்களை யுள்ளவாறு உணரல்வேண்டு மன அவாக்கொள்கின்றான்.

 

அத்தியயனம்: - இந்த அவா அவனைச் சுருதிகளை ஆராய்தற்கு அவனது புத்தியைத் தூண்டுகின்றது. இதனால் சத்திய சிரத்தையோடு சுருதிகளை வாசித்து மெய்ப்பொருளைத் துணிகின்றான்.

 

முக்கூற்றுத் துன்பங்களையும் ஒறுத்தல்: - சத்திய சிரத்தை காரணமாக எழுந்த ஊகத்தால் எவரையும் கடைத்தேற்றவல்ல பரம்பொருள் ஒன்றுளதென நம்பிக்கை யெழுந்தது. ஆம்; ஆம் நீ கொண்டது சரிதான், சுருதியும் அப்படியே கூறுகின்றதெனக் கேள்வியு முண்டாதலும், சுருதியை நேரேயாராய ஊக்கம் உண்டாகி அத்தியயனமும் கைகூடிற்று.

 

இவ்வாறு ஊக்கமும் கேள்வியும் கல்வியும் ஒன்றுகூடி ஓர் முனையாயெழவே, இதுவரை துன்பங்கள் விளைந்தபொழுது அவற்றை ஒழித்தற்கு மத்திரமென்றும், யந்திரமென்றும், மருந்தென்றும், மாயமென்றும் பல சாதனங்களை நாடி ஓடிய சித்தம் அவைகளின் பால் வெறுப்பெய்தலும், துன்பங்களை முடிவுகாண்டற்கு உபாயம் மனவலிகொண்டும் அவற்றைப் பொறுத்துக் கொண்டும் அதனை நோக்குதலினும் மிக்கது வேறில்லையெனத் திண்ணம் பிறந்து அவ்வாறு நோக்கலும் முக்கூற்றுத் துன்பங்களும் ஓட்டம் எடுக்க ஆரம்பிக்கும். இதுவே அஷ்டமகாசித்திகள் உதயமாதற்கும் வாயிலாம்.

 

நல்லாரிணக்கம்: - இவ்வாறு துன்பங்கள் மனவலி கொண்டு நோக்கி முடிவுகாணப்படும் பொழுது, தேடி யோடிப் பார்த்தும் கிட்டாத பெரியோர் வலியவந்து சிநேகத்திற்கும் பாத்திரமாவர்.

 

தானம்: - நல்லார் தொடர்பு நேர்படலும் இரகசியங் கைவந்த பெரிய னுங் கிட்டுவான். அவனை மகிழ்வுடன் உபசரித்துத் தனது அனுபவங்களை யவன் வேண்டி யாங்கு விளக்கலும், அவனுக்கு உபதேசமான ஞானம் தற்காலம் அவற்கு ஐயம் திரிவின்றி யுள்ளவாறு தோன்ற, அவன் தான் கடைத்தேறும் வழியைக் கண்டதால் அவ்வதிரகசியதந்திரத்தை யிவனுக்குங் காட்டுவன். இதனால் இருவரும் கரையேறுவர்.

 

52-வது காரிகை

நவினா பானவர் லிகம் கவி நாலிங்கேன பாவனிர் விருத்தி: -

லிசாக்ய பாவாக்ய ஸ்தஸ் மாஹ்விவித: பிரவர்த்த தேஸர்க்க:

 

இருவகைச் சிருட்டி

பாவங்கள் (எண்ணங்கள்) இல்லாத வழி, இலிங்கமும் இல்லையாம் இலிங்கம் இல்லாத வழி பாவங்கள் முடிவு பெற மாட்டா (உருப்பட்டுத் தோன்ற மாட்டா.)

ஆதலின் சிருட்டி இரு விதமாய்க் கிளைவிடுகின்றது. ஒன்று இலிங்கத்திருத்தம் மற்தென்ற பாவங்களினின்றும் பிரவர்த்திக்கின்றது.

உரை: - எண்ணங்கள் இல்லாத வழி இலிங்க யில்லையாம் என்றது. மனம் சலன மறின், மனோபாவங்களை உருச் செய்யும் இலிங்கமும் (காரண சரீரமும்) பிரகிருதிக்குள் மறைந்து விடும் என்றபடி,

இலிங்கம் இல்லாத வழி எண்ணங்கள் உருப்பெற மாட்டா; ஆசவே இலிங்கம் மறைதலால் பிறவிடதும் இலிங்கம் மறைதற்கு எண்ணங்களை உதயமாகவது தடை செய்ய வேண்டும். பிறவிக் கடலைக் கடக்கும் உபாயம் எண்ணங்களின் நசிவும், அவற்றால் இலிங்கம் மறைதலுமாம்.

சிருட்டி இருகிளை: - இலிங்கத்திருந்து பஞ்ச பூசங்கள் தோன்றி அதனைப் புவியை விட்டு நீங்காது பிணத்தன. பாவங்களினின்று பிறவிகளுண்டாகின்றன. விததினிட மிருந்து வேர் உண்டாகி அவ் வித்தை நிலத்தை விட்டோடாது பிணக்கினும் அவ் வித்து விருக்ஷமாகிய தன் முடியிற் பின்னருந் தோன்றி லேறோர் விருக்ஷத்திற்குக் காரணமாகின்றது. புமானும் பஞ்சபூதத் தொடக்கை விடாது பிறவி எடுத்துழுலுகின்றான் என்பதாம்.

பஞ்சபூத மயமான தனது தூல தேசத்தி னின்றும் பஞ்ச பூதங்களைச் சிருட்டித்துக் கொண்டே அத் தூல தேகத்தின் வினைப்போகம் முடிதலும் தனது எண்ணத்தை இலிங்கத்திற் செலுத்தி மறு பிறவி யெய்துகின்றான் எனத் தெளிக.

ஜன்மம் எவ்வாறு கைகூடுகின்ற தெனின், புமான் நிமித்த காரணனாகிய அறிவன்; மனம் அவன் நினைத்தாங்கு ஒழுகவல்ல சித்சத்தி; இலிங்கம் அச்சித்சக்தியேறி தேகத்தை வனைந்து தருதற்குரிய யந்திரம். புருஷன் குயவன், மனம் அவனது கை, இலிங்கம் அவனது தண்ட சக்கரம், பிரகிருதி மண்.

இனிப் பிறவி பேதங்களை யுணர்த்தலுற்றார்.

53-வது காரிகை

அஷ்டம் விகல்பம் தைவம் தைர்யக்யோனம் பஞ்சதாபவதி –

மானுஷ்யம் த்வே காவித் ஸமாச தோயம் திரிதாசர்க்க:


பலவகைப் பிறவி.

தேவசரீரம் எட்டு வகைப்படும்; கீழ்நோக்க முடைய விலங்குகள் ஐவகைப்படும்; மனிதர் ஒரேவகை. இவற்றுள் சர்வஜீவ சிருஷ்டியும் அடக்கம்.

உரை: - தேவர்கள் (மேனோக்க முடையவர்கள்) எட்டு வகையினர்: -
விரிஞ்சன், பிரஜாபதி, பிதுர் (சந்திரன்,) இந்திரன், கந்தர்வன், யக்ஷன், ராக்ஷசன், பிசாசு,

கீழ் நோக்க முடைய விலங்கினம் ஐந்து வகைத்து: - பசு, 'மிருகம், பக்ஷி, ஊர்வன, தாவரம்.

மனிதன்; ஆகச் சீவராசிகள் பதினான்கு வகையின.

விரிஞ்சன் பிரமாண்டத்தைச் சரீரமாக வுடையவன். பிரஜாபதிகள் மனு, இருடி. முதலியோர்.

பிதுர்க்கள் சந்திரலோக வாசிகள் இந்திரன் இந்திரிய சுகத்தை முழு முற்றுங் கண்டுகளித்து மற்றைய தேவர்களுக்குத் தலைவனா யிருப்பவன். கந்தர்வர் தேவேந்திரனது பணிவிடை புரிவோர். யக்ஷர் குபேரனது வேலைக்காரர். இராக்ஷதர் தேவ விரோதிகள். பிசாசர் சுயேச்சையாய்த் திரியும் ஓர் ஜாதி.

“பசு என்பது ஆமுதல் எலி வரையுள்ள ஜீவராசிகளை யுணர்த்தும்.
மிருகம் என்பது சிங்கம முதற்கொண்டு நரி வரையுள்ள ஜீ பேதங்களையுணர்த்தும். தாவரம் பாரிஜாத முதற்கொண்டு புல் வரையுள்ள ஜீய பேதங்களை யுணர்த்தும்' (தத்துவ சமரசம்)

இனி ஜீவராசிகளின் இயல்பினைக் குறிக்கலுற்றார்.

54-வது காரிகை

ஊர்த்வம் சத்வ விசாலஸ்தமோ விசாலஸ்ச்ச மூல தஸ்ஸர்க்க: -

மத்யோஜோ விசாலோ பிரம்மாதி ஸ்தம்ப பர்யந்தம்.

 

மாயா விருக்ஷமாகிய இப் பிரபஞ்சத்தின் உச்சியி லிருப்போர்க்கு சத்துவமாசிய ஒளி மிகுந் திருக்கும். மூலத் தருப்போர்க்கு இருளாகிய தமம் மிகுந்திருக்கும்; மத்தியி லிருப்போர்க்கு இயக்க ரூபமான இரஜம் மிகுந்திருக்கும். இவ்விதி பிரமன் முதல் ஸ்தம்பம் பரியந்தம் ஏற்புடைத்து.

உரை: - தேவர்கள் இப் பிரபஞ்சத்தின் முடியில் வசித்திருப்பர்; விலங்குகள் இப் பிரபஞ்சத்தின் மூலத்தினிடம் வசிக்கின்றன. மனிதர் மத்திய தானத்தில் வசிக்கின்றனர்.

அன்றியும் ஒவ்வொரு ஜீவராசியையும் நோக்கினும் மூலத்தானமாகிய கடிப்பாகத்தில் இருளும், நடுத்தானமாகிய நெஞ்சு புயம் முதலியவற்றிற் பலமும், உச்சித்தானமாகிய சிரசில் அறிவுப் பிரகாசமும் காணப்படும். இவ்விதி பிரமன் முதல் புல்வரை யமைந்துளது.

தேவலோகமாகிய மேலுலகில் மிக்க ஒளியும், அந்தரிக்ஷமாகிய வுலகில் இயக்க ரூபமான காற்றும், பூலோகமாகிய கீழுலகில் கனமயமான இருளும் உள. ஒருவன் மலையிலேறி அங்கு தியானம் செய்யின், அதிசுலபமாய் அறிவிற்கு விளக்கங் காண்பன். இது பற்றியே சிலர் மலையிலேயே தவசிகளாய் வசிக்கின்றனர்.

பக்ஷி ஜாலங்களாலும் எட்டாத் தானத்தில் சத்துவம் மிகவும் விசாலம், பக்ஷி ஜாலங்கள் பரவுந்தானத்தில் இரஜோ குணம் விசாலம், பூமியை விட்டு மேற் செல்ல மாட்டாத விலங்குகளிடத்து தமோகுணம் விசாலம்.

55-வது காரிகை

தத்ர ஜார மரணக்கிருதம் துக்கம் பிராப்னோதி சேதனப்புருஷ: -

லிங்கஸ்யா விநிலிருத்தே ஸ்தஸ்மாத் துக்கம் ஸ்வபாவேன.

 

அவ்விடத்து (திரிலோகமாகிய பிரபஞ்சத்தில்) அறிவனாகிய புருஷன் பிறப்பு இறப்பாகிய கிருத்தியங்களால் அடிபட்டுத் துன்பத்தை யடைகின்றான். இலிங்கத்தை விட்டு நிவிர்த்தி பெறின் துன்பம் ஒழியும். இலிங்கத் தொடர்பு விடாதவரை துன்பம் இயற்கையாகவே அமைந்திருக்கும்.

உரை: - இலிங்க சையோகமே துன்பத்திற்குக் காரணம். புகுஷன் தன்னை இலிங்கமாகிய காரண தேகக் கட்டினின்று விடுபட வேண்டும். இதுவே விடுதலை மார்க்கம். (வீட்டு நெறி.) இவ்வு பாயத்தை எவ்வாறு அறிவதெனின், கூறுதும்: -

தமிழுலகத்தைக் கடைத்தேற்றத் திருவுளங் கருதிச் சிவபெருமான் அனுப்பிய திருமூலர்,

“அவிழ்க்கின்ற வாறும் அது கட்டுமாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் செல்கின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் லெனு மிவ்விரண்டும்

உணர்த்தும் அவனை யுணரலு மாமே.''

என்றருளினார்.

ஆதலின் முத்திக்கரை யேறுதற்கண் ஆத்திரம் மிகுந்தவர் தமிழ், ஆரியம் ஆகிய இரு மொழிகளின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆத்துமா தன்னை யவிழ்க்க முடியா வண்ணம் கட்டுப்பட்டிருக்கும் முடிச்சைக் கண்டு, அதனை அவிழ்க்கும் தந்திரத்தையும், பிரபஞ்சத்தில் விளையாட எண்ணங்கொள்ளின், எவ்வாறு தன்னை இலிங்கத்தோடு கூட்டி முடிய வேண்டும் என்னும் தந்திரத்தையும், அவ்வாறு முடிச்சின்கண் மாட்டிக் கொண்ட பின் எவ்வாறு ஒரு கூட்டில் வாசஞ்செய்து மரண காலத்தி லணுவாய்ச் சென்று மற்றொரு கூட்டின் வித்தைத் தொட்டு அதனைக் கூடாக வனைந்து அதன் கண் வாழ்ந்து வினைமுடிவில் அதனை விட்டு அகன்று இவ்வாறு ஜனனமரணச் சுழற்கண் அலமருந் தந்திரமும் தமிழ்ச்சொற்கண்ணும் பூட்டிட்டிருக்கின்றன. ஆதலின் அருள் வலியால் அம்மொழிகளினுடைய தந்திரத்தை (வாக்குவாணியை)ப் பெறின் பந்தம், மோக்ஷம், சம்சாரம் ஆகிய மூன்றின் மெய் இரகசியந் தோன்றும். அதுவன்றியும் இம் மொழிகட்கு நாயகனாகி நின்று பிரபஞ்சமென்னும் தேரைத் தனது அருட்சத்தியால் கட்டி முடித்துப் பின்னர் அதனை அவிழ்த்து வெட்ட வெளி யாக்குதலை ஓர் விளையாட்டாகக் கொள்ளும் பரமதந்திரியாகிய அவனையும் (அச்சிவ பெருமானை யும்) அறிதலுங் கூடும்.

மாணிக்கவாசகப் பெருமானும் "படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடி'' என்றும், ''ஐயா நீ யாட்கொண்டருளும் விளையாட்டில், உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம், எய்யாமற் காப்பாய் இனி யேலோ ரெம்பாவாய்'' என்று அருளினர்.

"இரண்டாங்கட் டவிழ்த்தால் தெரியும்'' என்றோர் முதுமொழியு முளது. மேற்கட்டாகிய முதற்கட்டை யமன் ஒவ்வொருவருக்கும் மரணகாலத்தில் அவிழ்த்து விடுகின்றான். மற்றோர் ஜன்மம் எடுக்குமுன் இந்த முதற்கட்டு முற்றும் விட்டு புருஷன் அணுவாகி இலிங்க தேகத்தொடக்கு அறாது ஆசையா லுந்தப்பட்டுத் தன தாசைக்கு உகந்த தேகத்தை வனை தற்த நிற்பான். ஆசை விடுபட்டு ஞானமும் நிலைபெறின் இலிங்கத்தினின்றும் கட்டவிழ்க்து ஓடிப் பரஞ்சோதியோடு கூடிச் சச்சிதானந்தப் பேற்றை வகிப்பன். ஜன்மதந்திரம் பிரகதாரண்ணிய உபநிடதத்தின் கண் நன்கு விளக்கப் பட்டுளது.

இலிங்க சையோகம் பரமபந்தம். ஜனனத்தாலும் மரணத்தாலும் முறையே மேற்கட்டாகிய தே*மும், அம்மேற்க. டின் நிவிர்த்தியும் நே கின்றன. ஆயினும் உள்கட்டை யவிழ்த்தாலன்றி முத்தி கை கூடாது.

துன்பம் என்பது சுத்த ஆன்மாவிற்குக் கிடையாது; ஆயினும் தான் தொடக்குண்ட இலிங்கத்தில் துன்பங்கள் நேர்வதை ஆன்மா அறிகின்றது. இவ்வித உணர்ச்சியே துன்பம் இலிங்கத்தினின்றும் ஆன்மா தொடக்கறின் துன்பம் நிவிர்த்தியாம்; துன்பம் ஸ்தம்பித்துப் போம்.

''ஜனன மாணாதிகளால் விளைகின்ற துக்கம் எவற்றிற்கும் சமமே''
(கபில சூத்திரம்.)

''பிரமன் முதல் தாவரம் வரை தேவலோகமானாலும், பாதலமானாலும்
ஆங்காங்குள்ள ஜீவராசிகட்கும் துக்கம் பொதுவாய் ஏற்பட்டுளது.''

சாங்கியப் பிரவசன பாஷ்யம்

''விருத்திக்குக் காரணமாகிய சூத்திரத்தால் படிப்படியாய ஜன்மங்கள்
விளை தலின் அஃது வெறுக்கத்தக்கது."

சூத்திரம் = இலிங்கம் (கபில சூத்திரம்)

[இனி இப் பிரபஞ்சம் பிரவிர்த்தித்துக் கொண்டிருப்பதன் காரணத்தைக் கூறுவர்.)
56-வது காரிகை
இத்யேஷ பிரகிருதிகிருதோ மஹதாதி விசேஷ பூதபர்யந்த-
பிரதி புருஷ விமோக்ஷார்த்தம் ஸ்வார்த்த இவ்பரார்த்தம் ஆரம்ப:


மாயையாகிய பிரகிருதி இவ்வாறு புத்தி (மகத்) முதற்கொண்டு விசேஷபூதங்களாகிய (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) வரை தொழிற்பட்டு வினை புரிவதெல்லாங்கூடி ஒவ்வொரு புருஷனையும் தனித்தனி கடைத்தேற்றற் பொருட்டே (விடுவித்து முத்திக் கரை சேர்ந்தற் பொருட்டே) ஆயினும் பிரகிருதி சுயநயங்கருதிப் பணிபுரிபவளை யொப்ப ஒழுகுகின்றது.
வாசஸ்பதி (ஓர் வங்காள நாட்டுப் பண்டிதர்) கூறுகின்றார்: - "பிரகிருதி செய்யும் இப் பணிவிடை தன் பொருட்டே பிரிதின் பொருட்டே யாயினுமாகுக. அறிவுடைய பொருளன்றோ சாதுரியமான பணி முடிக்கவல்லது. பிரகிருதிக்குச் சுயவறிவில்லாததால் அது தானே பிரவர்த்திக்க வியலாது. ஆதலின் அதனைப் பணிகொள்ளும் அறிவொன்றுளது. பந்த முற்ற புருஷர்களுக்கோ அறிவிருத்தும் பிரகிருதியது இரகசியத்தைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் அவர்கள் பிரகிருதியைப் பணி கொள்வதாக ஏற்படாது. ஆதலின் சுற்றறிவுடைய ஒருவன் உளன். அவனே பிரகிருதியை நடத்துபவன். அவனே யாவராலுந் தொழத்தகும் ஈசன்; அவனே கடவுள்."


விசேஷ பூதங்கள் என்பன எஞ்சி வெளிப்பட்டுத் தோன்றிய தூல பூதங்கள்.

 

கபிலன் ஈசன் ஒருவன் உளன் என்பதனை ஓர் காரணம் பற்றி மறைத்துப் பிரகிருதிக்குச் சுயகிருத்தியம் கற்பியா நின்றான் (உளதெனக் கூறினன்). சுதந்தரமும் தன்னறிவும் படையாத பிரகிருதி எவ்வாறு பிறர் நன்மையை நாடி நடித்துப் பயன் தரவல்லது. ஆதலின் யாவற்றையும் உள்ளவாறு கண்டு பிரகிருதிக்கு அப்பால் நின்றதனைப் பணிகொள்ளும் சிவன் ஒருவன் உளன்; வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுவது மாடேயாயினும் அதனைப் போன போக்கில் நினைத்தவிடத்திற்கு ஓட்டும் ஒருவன் உளனன்றே!

 

அதனைப்போல் புருஷரைத் தாங்கி யோடா நின்ற மாயை என்னும் மரக்கலத்தைத் துறைக்கண் கொண்டு சேர்க்கும் ஒருவனுளன்.  பட்கொண்டு அதன் ஆற்றலின் முடிவைப் பன்முறை கண்டதன்றியும், மற்றும் புதிதாய்க் காண்பது போல் நடிக்கும் சிறுவன் ஒருவன் உளன். இது பற்றியன்றோ அவனை,

 

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே''

 

என்று மாணிக்கவாசக அடிகள் கூறியருளினார்.

 

 [ஈய அறிவில்லா மாயை எவ்வாறு ஆன்மாக்களுக்குத் தக்காங்கு
ஒழுகுகின்றது எனின்,

 

57-வது காரிகை

வத்ஸவி விருத்தி நிமித்தம் க்ஷரஸ்ய யதாபிரவிருத்திரங்யஸ்ய –

புருஷவிமோக்ஷ நிமித்தம் ததாபிவிருத்தி: பிரதானஸ்ய.

 

சுய அறிவு பாலானது கன்றுக்குட்டியைப் போஷித்தற் பொருட்டுத்தானே பொழிவதுபோல் பிரதானமும் புருஷனைக் கட்டினின்றுப் வெளிப்படுத்தி விடுதற் பொருட்டே பிரவாத்தித்துக் கொண்டிருக்கின்றது

ரை: -      “அசேதனமாகிய பிரதானம் பணி புரிவது கறை ஈன்ற பொழுது பசிவிடத்திப் பால்சுரத்தல் போலாம்” கபில சூத்திரம்.

அசேதனமாகிய பிரதானம் பணி புரிவது கன்றை ஈன்ற பொழுது பசுவினிடத்துப் பால் சுரத்தல் போலாம்" கபில சூத்திரம்.

கௌடபாத உரை: -"பசுவினால் உட்கொள்ளப்பட்ட புல்லும் நீரும் பாலாக மாறிக் கன்றைப் போஷித்து மாடாக்கிவிட்ட பின், அந்தப்பால்

பொழியாது வற்றிப்போவது போல், பிரதானமும் புருஷனைக் கட்டினின்றும்

விடுவிக்கும் வரை பணிபுரியா நிற்கும்.''

உட்கொள்ளப்பட்ட புல்லும் நீரும் பாலாக மாறும்படி நியமித்தவனே

ஈசன்.

பிரகிருதி பணி புரிவது ஆன்மாக்களை விடுவித்தற் பொருட்டென்பது

அழகாகத்தானிருக்கின்றது. ஆயினும் அஃது வினைபுரிகற்கண் சுயநலங் கரு

திப பணிபுரிவோன் எவ்வாறு தன் உத்தேசத்தை விடாது கண்ணாயிருந்து

முடிப்பானோ அவ்வாறே பிரகிருதியும் தந்நோக்கப்படியே வினையை

முடிக்

கின்றதன்றி ஆன்மாக்கள் அவ்வப்போது விரும்பும் சுகத்தை விளைவிக்க ஓர்

சிறிதும் எண்ணங் கொள்ளவில்லை. பிரகிருதி தனது ஆசையை நிவிர்த்திக்கப்

பணிபுரியா நிற்கும்; அஃது எவ்வாறெனின: -

58-வது காரிகை

ஒளத்ஸுக்ய நிவிருத்யர்த்தம் யதாகிரியாசு பிரவர்த்ததேலோக, -

புருஷஸ்ய விமோக்ஷார்த்தம் பிரவர்த்ததேதஹ தவ்யக்தம்.

     

உலகினர் தமது ஆசையை வெளியேற்ற விரும்பி எவ்வாறு ஓர் பணிக்  கண் தொழில் செய்கின்றனரோ அவ்வாறே புருஷரைத் தன்னை விட்டு வெளியேற்றும் பொருட்டே அவ்வியக்தமாகிய மாயை தொழில் செய்து கொண்டிருக்கும்.

உரை: - இக் காரிகையின் கருத்தை நன்கு உணருதல் வேண்டும்.

மாயை தன்பாற் சிக்கிக் கொண்ட புருஷரை வெளியேற்றி விடுதற்கண் ஓர் சுகத்தையடைகின்றது. ஆதலின் தனது சுகத்தைக் கருதியே மாயை புருஷரை விடுவிக்கின்றது. ஓர் உதாரணம் காட்டுதும்: -

பசி நன்றோ தீதோ? நிற்க, பசியை விரும்பாதாருமில்லை, அதனை வெறுக்கா தாருமில்லை. பசி வரவும் வேண்டும் ; அதனை ஒட்டவும் வேண்டும். பசி வருதலும் மாந்தர் அதனை வெளியேற்றும் பொருட்டு உணவு அருந்தலாகிய தொழிலில் முயற்சிப்பர் உணவு அருந்தலும் பசி வெளியேறித் தொந்தரவு நீங்குகின்றது. உணவு அருந்தியதனை வெளிப் போக்காத விடத்து அது கொடுந் துன்பத்தை விளைக்கின்றது. இவ்வாறே பிரகிருதியும் தன்னுட் புகுந்து நிற்கும் பசியனாகிய புருஷனை வெளியேற்ற வழி தேடாதவரை, பொறுக்கலாற்றுத் துன்பமயமா யிருக்கின்றது. இத் துன்பத்தை யொழிவு காண்பதற்கு உபாயமாவது புருஷனை வெளியேற்றுவதே. ஆயினும் மாயைக்குப் புருஷனைத் தன்பால் இழுக்கும் ஆசை என்றென்றும் அமைந்துள்ளது. வ் வாசையால் அவனை யிழுத்து மாட்டிக் கொள்கின்றது. மாட்டிய பின் துன்பம் பொறுக்கலாற்றாது அவனை வெளியேற்றுகின்றது.

''நிழல் அருமை வெயிலிற் றெரியும்" என்றாற் போல் புருஷனும் நிழலினுடைய சுகத்தை நன்கு துய்க்க வெப்பமான மாயையை யணுகுகிறான். மாயையால் அடியுண்டு சுகத்தை ஏக்கத்தோடு நாடி மாயையை உதறிவிட்டு ஓடுவான்.

முன்னர் மாயையும் புருஷனுங் கூடியது குருடனும் முடவனும் ஒன்று கூடியது போலாகும் எனப்பட்டது.

[மற்றும் மாயா வோலக்கம் எத்தனைப் போன்ற தெனின், ஓர் உதாரண முகத்தால் விளக்குகின்றார்.]

59-வது காரிகை

ரங்கஸ்ய தர்ஸயித்வா நிவர்த்ததே நர்த்தகீயதா நிருத்யாது -

புருஷஸ்ய ததாத்மானம் பிரகாஸ்ய நிவர்த்ததே பிரகிருதி:

 

அரங்கத்தில் நர்த்தகி தனது கோலங்களை யெல்லாம் தரிசிப்பித்தபின் நடனத்தை நிறுத்துவதுபோல், பிரகிருதியும் புருஷனுடைய அந்தரங்கத்திற்குத் தன்னைப் பிரகாசமாகக் காட்டிப் பின்னர் பிரகாசியாது வாளா (சும்மா) நிற்கும்.

உரை:- கௌடபாதருரை; ''ஓர் நர்த்தகி அரங்கத்தில் சிங்கார முதலிய இரசங்களெல்லாம் தோன் தப் புராண இதிகாசங்களிற் காணப்படும் மாந்தரது வேடங்களைத் தாங்கி ஆடல் பாடலாதி வினோதங்களை யெல்லாங் காட்டி முடிவில் நர்த்தத்தை நிறுத்தி வாளாவிருப்பதுபோல், பிரகிருதியும் மகத், அகங்காரம், தன்மாத்திரைகள், இந்திரியங்கள், பூதங்களென்னும் பலவிதக் கோலங்களை யெல்லாம் காட்டி முடிவில் வாளா (சும்மா) நிற்கும்.

[இவ்வாறு மாயை வாளா நிற்கும் அவசரத்தில் புருஷன் அதனுடைய மெய்ச் சொரூபத்தை யறிந்து இரகசியந் தெரிந்து உகந்த தானத்தில் இருத்தல் கூடும்.

[இவ்வாறு தனது வினோதக் கூத்தைத் தரிசிப்பித்த மாயப் பிரகிருதி புருஷனிடமிருந்து ஏதேனும் இலாபம் பெறாதோ வெனின்.]

60-வது காரிகை

ஜானாவிதைருபாயை ரூபகாரிண்ய நுபகாரிண: பும்ஸ: -

குணவத்ய குணஸ்ய சதஸ் தஸ்யார்த்தம் அபார்த்தகம்சாதி.

 

உபகாரிணி (உதவி செய்பவள்) யாகிய மாயை குணவதி யாதலின் பற் பல கோலங்களை வகித்து ஓர் உபகாரமும் பெறாது புருஷனுடைய நன்மையை முற்றுவிக்கின்றாள். புருஷனோ குணங்க ளில்லா தவன் ஆதலின் நன்றி யறிதலில்லாதானா யிருக்கின்றான்.

உரை:- கௌடபாதர் கூறுகின்றார்;- மாயை புருஷனுடைய ஈன்மையை முடித்து வைப்பவள் ; புருஷனோ நன்றி மறந்தவன். எவ்வாறு நன்மை புரிகின்றனள்? மனிதர், தேவர், விலங்கு முதலிய கோலங்களைக் கொண்டும் இன்பம், துன்பம், இன்பதுன்பமில்லாமை முதலிய விஷயங்களைக் கொண்டும், இந்திரியங்கட்கு உகந்த காட்சிகளைக் கொண்டும், இவ்வாறு பலவிதத்தானும் தன்னைப் புருஷனுக்குத் தரிசிப்பித்துக் கடைமுடிவில் ''நான் வேறு; வேறு" என்று உண்மையைக் காட்டித் தனது நாட்டியத்தை நிறுத்துகின்றாள். உபகாரம் பெறாமலே மாயை என்றும் அழியாத புருஷனுடைய நன்மையைக் கொடுக்கின்றாள் பரம தயாளனது இயல்பு பிரதி யுபகாரம் கருதாது பிறர்க்குதவி செய்வதன்றே! மாயையும் அவ்வாறே புருஷார்த்தத்தை விளைக்கின்றாள்.

[இனி மாயை திரும்பவும் வந்து மருட்டாளோ வெனின், கூறுகின்றார்.]

61-வது காரிகை

பிரகிருதே: சுகுமாரதரம் நகிம்சிதஸ்திதி மேமதிர்பவதி - யா

திருஷ்டாஸ்மிதிபுனர்ன தர்ஸன முபைதி புருஷஸ்ய.

 

எனது மதியிற் றோன்றுவது யாதெனின், பிரகிருதியைப் போன்ற இள நலத்தினன் (பெருநாணினள்) வேறு கிடையாது. ஓர்தரம் “ஐயோ என்னைக் கண்டு கொண்டானே" யென உணருவாளாயின் மற்றோர்கால் ஒரு பொழுதும் புருஷனுக்குத் தனது தரிசனத்தைக் கொடுக்கவே மாட்டாள்.

உரை: -  இளநலம் = சுகுமாரதரம். எளிதே எவ்வுருவமாகவும் திரிபடுதற்கு இசைந்த தன்மை. இவ்வாறிருந்தாலன்றோ இந்திரியக் காட்சிக்கு எளிதாகிய சிருஷ்டி நிகழாதிருக்கும். (சாங்கிய பாஷ்யம்)

      ''தனது அற்றத்தை (தோஷத்தை = குற்றத்தைப் புருஷன் கண்டு கொண்டால், பிரகிருதி அவனைத் திரும்பவும் அணுக மாட்டாள். எவ்வாறெனின் மேற்குலத் துதித்துக் கெட்டுப்போன நாணமுள்ள மாதைப்போல்."

மாயையானவள் முக்குணமென்னும் மூன்று கலைகளால் (வஸ்திரத்தால்) பற்பல வேடம் பூண்டு புருடனை மருட்டி வரும் போழ்து, ஓர் அவதரத்தில் உடைகளை மாற்றும் பொழுது, அவளுடைய உண்மையான நிர்வாணகோலம் புருஷனுக்கு அசதியிற் றென்படலும், மாயை "எவரேனும் அசதியில் எனது நிர்வாணத்தைக் கண்டுளரோ'' வெளி நாட்டங்கொள்ள உடனே புருஷன், பார்வையிற் காணப்படுகிறான். "ஓகோ! காரியம் கெட்டு விட்டது; நமது யதார்த்த நிலையைப் புருஷன் உணர்ந்து கொண்டான்; இனிக் கேலியுஞ் செய்வன்'' எனப் பயந்து மாயை மறைந் திருப்பள்.

மற்றும் ஓர் பெரிய உண்மையை உடைத்துக் காட்டுகின்றார்.

[புருஷனோ தனியன், செயல் இல்லாதவன், முக்குணங்கட்கு அப்பாற்பட்டவன், அறிவே சொரூபன். இவ்வாறிருப்ப அவன் பந்தமுறுகின்றா னென்றும், பந்தங்கழல்கின்றா னென்றும், கூடுவிட்டுக் கூடு பாய்கின்றானென்றும், அலமருகின்றானென்றும் எவ்வாறு கூறக்கூடும்?]

62-வது காரிகை

தஸ்மான்ன பத்யதே நாபி முச்யதே நாபி சம்சரதி கஸ்ச்சித் -

சம்சரதி பத்யதே முச்யதேச நானாஸ்ரயா பிரகிருதி:

 

சத்தியத்தை யுள்ளவாறு நோக்குமிடத்து, ஓர் புருஷனும் பந்தமுறுவானல்லன், விடுதலை பெறுவானுமல்லன், கூடுவிட்டு ஓடுவானுமல்லன். பின்னர் யாருக்கு இவை நேருகின்றதெனின், மாயைக்கே பல கூடுகள் உளதாதலின் அவளே பல கூடுவிட்டு ஓடுபவளும், அவளே பந்தமுறுபவளும், அவளே பந்தம் நெகிழ்பவளுமாவள்.

உரை: - கூடுகள் என்றது தேவ, மனித, விலங்கு முதலானவைகளின் தேகங்களுக்கு வித்தா யிருப்பவற்றை

ஆத்துமா பந்தமுறுவதா யெழும் பிராந்தி எத்தகையது? வாசஸ்பதி கூறுவது: - அரசனுடைய சேனை யுத்த பூமியில் வெற்றியையேனும் தோல்வியையேனும் அடையின் அவைகள் அரசன்மேல் ஏற்றிக் கூறப்படுவது போலப் பிரகிருதிக்கும் நேருகின்ற இன்ப துன்பங்கள் புருஷன் மீது ஏற்றப்படுகின்றன.

நிற்க. வெற்றி தோல்விகளா லுண்டாகும் இன்பதுன்பங்களை நேரே உண்மையில் அனுபவித்தது படையாட்களே யாயினும், அபிமான தோஷத்தால் அரசனும் இன்ப துன்பத்திற்கு ஆளாகின் றான். அவ்வாறே உள்ளவாறு சுக துக்கஙகளை யனுபவிப்பது இலிங்கமேயாயினும், பாவனா தோஷத்தால் புருஷனே அனுபவிப்பதாய்த் தோன்றும். இத் தோற்றத்தைப் பொய்யாக விலக்கும் வழியுளதா? வெனின்,
தேகத்தில் ஓர்வலி (தொந்தரவு விளையின், அது தேகத்தில் ஏதோ ஓரிடத்தில் தான் நிகழ்வதாகத் தோன்றும். இவ்வலியை மனம் நோக்கியதால் தான் உளதென நம்பப்படுகின்றது.
னெனில் மனம் தேகத்தை மறந்திருக்கும் தூக்கக்காலத்திலும் ஏதேனுமோர் விஷயத்தில் ஆழ்ந்து பதிந்து கிடக்கும். தியான காலத்திலும் இலிங்கத்தில் (தேகத்தில்) நேரும் உபத்திரவம் தென்படாமலே நடைபெறுகின்றது. ஆதலின் நோக்கமற்றிருக்கின் துன்பங் தோன்றாது. அன்றியும் தான் உரிமை கொள்ளாத ஓர் சேதனப் பொருட்குத் தீங்கு நேரின், அத் தீங்கு பற்றில்லாக் காரணத்தால் சுத்த அறிவொன்றால் மட்டும் உளதென நம்பப்படுகின்றது; மனப்பற்றுள்ள சேதனப் பொருட்கண் கேரின் நெஞ்சமும் துடித்துக் கொண்டிக்கும். அறிவைக் கண்டவன் தனது தேசத்தில் நேரும் துன்பங்களைச் சாக்ஷி மாத்திரையாய் நின்று கண்டு துன்பத்தைத் துய்க்காது (அனுபவியாது) நிற்றல் கூடும்.

[பந்தமோஷங்களை மாயை எவ்வாறு புருஷனுக்குத் தோற்றுவாய்
செய்கின்றாளெனின்: -]

63-வது காரிகை

ரூபை: சப்தபிரேவ பத்னாயாத் மான மாத்மனாபிரதி:

சைவச புருஷார்த்தம் பிரதிவிமோசயத்யேக ரூபேண.

 

மாயை எழு வித கோலங்களுள் (ரூபங்களுள்) தானுள் நின்று தன்னைத் தானே பந்தித்துக் காட்டுவள். (ஆதலின் பார்க்கப்படுவது அவளது கலைகளேயன்றி யவளல்லன்.)

பிரதி புருஷனது நன்மை கருதி ஓர் தரம் ஒவ்வொருவனுக்கும் தனித்தனி தனது கட்டுகளை யவிழ்த்து ஏகமான தனது நிர்வாண கோலத்தை (ரூபத்தை)த் தரிசிப்பிப்பாள்.

உரை. ஏழுவித பாவங்களால் (கோலங்களால்) தன்னைப் பந்தித்துக் காட்டுவள். அவை: -  

அறரூபம்.

மறரூபம்.

ஆசாரூபம்.

வைராக்கியரூபம்.                    7

ஐசுவரிய ரூபம்.

அனைசுவரிய ரூபம்.

அஞ்ஞானரூபம்.

 

இவ் வெழுவகை ரூபங்களும் அவளது அற்றத்தைக் காட்டாது. கடைக் கண் ஞான ரூபிணியாய் நிற்கும் போழ்து அவளது அற்றம்? நிருவாணம் தெற்றென விளங்கும்.

ஏழு தரம் தன்னைப் போர்த்துக் காட்டுவள், ஓர் தரம் தன்னைத் திறந்து காட்டுவள். எழுவிதமாய் மருட்டுவள், ஓர் விதத்தில் தெருட்டுவள். உலகங்களும் ஏழு, இசைகளும் ஏழு, நிறங்களும் (வர்ணங்களும்) ஏழு, நிறங்களையும், சப்தங்களையும் ஞானவழியாற் கண்டு நீக்கி, அடிப்படையைக் காணின் அஃது மாயா தரிசனமாம். இதுவே தர்மதேவதை; இதுவே பரமன்
வாகனங் கொள்ளும் இடபம்.

இது பற்றியன்றே திரிலோகங்களாகிய முப்புறத்தை நெற்றிக் கட்டயாற் பரமன் சாம்பராக்கி நின்ற போழ்து மாயையாகிய விண்டும் (விட்டுணுவும்) தன்ம தேவதா ரூபமான இடபமாகச் சென்று நின்று பரமனைத் தன் மீது ஆரோகணிக்கும்படி வேண்டிக் கொண்டனன். இவ் வதிரகசியத்தை (உட்கிடையை)ப் பின் வரும் திருவாசகத்தாற் றெளிக: -

திருச்சாழல்.

"கடகரியும், பரிமாவும், தேரும், உகந்தேறாதே

இடபம் உகந்தேறியவா றெமக்கரிய வியம்பேடி

தடமதில்கள் அவை மூன்றும் தழலெரித்த வந்தாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ"

கபில சூத்திரம்: - "பிரகிருதி தன்னைத் தானே பந்தித்துக் கொள்வது உலண்டு (பட்டுப்பூச்சி) தான் கட்டிய கூட்டினுள் தான் அகப்பட்டுக் கொள் போலும்''

மாந்தர் மாயையுள் மாட்டிக் கொண்டு வெளிவரத் தெரியாது சனன மரணச் சுழற்கண் அலமரும் விந்தையைத் தெய்வப் புலமைக் கல்லாடர் பின் வருமாறு விளங்கினர்: -

''வரியுடல் சூழக் குடம்பை நூறெற்றிப் போக்குவழிபடையா துள்ளுயிர் விடுத்தலின்

அறிவுபுறம்போய வுலண்டதுபோலக் கடற்றிரை சிறுக மலக்குத் தியர் காட்டும்

உடவெனும் வாயிற் சிறைாடுவுபுக்குப் போகாதுணங்குறும் வெள்ளறிவேமும்

ஆரணம் போற்றும் நின் காலுற வணங்குதும்.''

 

[இவ்வாறு மாயை பந்தங்களை யெல்லாம் உதறிவிட்டு நிர்வாணமாய்த் தனது உண்மை (யதார்த்த) யுருவத்தைக் காட்டிய போழ்து, புருஷனுக்கு யாது நிகழ்கின்ற தெனின்?]

64-வது காரிகை

யேவம் தத்வாப்யா சான்னாஸ் கி நமே நாஹ மித்யபரிஸேஷம்

அவிபர்ய யாஹி சுத்தம் கேவல முத்பத்ய தேங்யானம்

 

இவ்வாறு தத்துவங்களை இடையறாது ஆராய்வதனால், அறிவையெஞ்சி நிற்பதானது ஒன்று மில்லையான முடிவையும், திரிவுணர்ச்சியை வெட்டி யெறிந்த வெற்றியையும், தூய்மையையும், ஒப்பிலாத் தனிமையையும் (தானே யெல்லாமா யல்லதுமா யிருக்குந் தன்மையையும்) கண்ட பாஞான முதயமாகும்.

அஃது எஃதெனின்? : -

நாஸ்மி                       நமே                    நாஹம்

நானுளனென்பதில்லை.         எனதென்பதில்லை.       எனதென்பதில்லை.

என்னும் ஞானமே.

உரை: - இவண் கூறிய ஞானம் வாக்கிறந்த பரிபூரணத்தின் மேற்று.

இதுவே ஞாதுரு, ஞானம், ஞேயங் சடந்த பரஞானம். எல்லாப் பொருண் முடிவுமிவணிருப்பினும் ஓராற்றாற் சிறிது விளக்குதும்.

ஞான நயனமாகிய மனம் வாக்கை வாகனமாகக் கொண்டு எப்போழ்தும் ஓர் பொருளை நாடி நிற்பதுண்டு. தேடிக் கொண்டி ருக்கிறதே அப்பொருள் தான் எவண் உளதோ வென போதம் நன் காராயப் புகுந்தபோழ்து அப்பொருள் போன வயனமுந் தெரியா தில்லையாயிற்று. இந்நிலைதான் "எனதென்பதில்லை'' என்றவிடம். ஞேயமற்ற விட முமாம். கண்கெட்ட விட
மென்பது மிதுவே.

பின்னர், ஞேயத்தைத் தேடுங்கால் இயங்கிக்கொண்டிருந்த வாக்கு இயக்கமற்றதால் சப்த வுணர்ச்சியும் மறைந்தது. இந்நிலை நானுள னென்பதில்லை என்றவிடம். இது செவிகெட்ட விடமுமாம்.

மனம் தேடி யோடிக் காணப்புகுந்த பொருளும் சூனியமாயிற்று; வாக்கின் இயக்கமாகிய சப்தமும் சூனியமாயிற்று.

இருக்கட்டும், சப்தம்தா னொழிந்ததே சப்தத்திற்கு உற்பத்தானமான "நான்" எனும் வாக்குத் தான் எவண் உளதென உண்ணாட்டங் கொண்ட போழ்து வித்தாகிய ஞாதுருவும் இல்லாது சூனியமாயிற்று. இதுவே ''நான் என்பதில்லை' என்ற விடம். னையே "நான் கெட்டவா"வென மாணிக்கவாசக ருரைத்தனர்போலும். இதுவே பிறப் பிறப்பில்லாவிடம்; நினைப்பும் மறப்புமற்றவிடமும் இஃதே.

ஆகவே ஞேயத்தைக் காணவெழுந்த போழ்து ஞேயங் கெட்டொழியவே தேடப்புகுந்த கண்ணும் தொழிலற்றுக் கெட்டது. காட்சியும் கண்மொழியவே சப்தம் தென்பட்டு நானுளேனெனச் சொல்லிக்கொண்டிருந்தது. பின்னர் செவியறிவு அதனை யுற்று நோக்கவே சப்தமும் மறைந்தது. சப்த மயமான ஞானத்தைக் கிட்டி யறிய ஆரம்பித்த செவியும் பற்றுதற் கொன்று மின்மையின் அவிந்து போயிற்று.

இருக்கட்டும், ஏதோ வித் திருந்தன்றே உளேன் உளேன் எனச் செப்பிற்று. அவ்வித்து எவண் உளதெனப் போதம் வலை சுருங்குவது போற் சுருங்கி மீன் போன்ற வாக்கு வித்தைப் பிடிக்க நேர்தலும் பிறவி பீஜமாகிய வாக்கும் இறந்தது. போதம் வாக்கி தந்து நிற்கவே ஓர் களை கண்ணு மில்லாத சூனியமே தோன்றிற்று.

"முப்பாலும் பாழாய் முடிவிலொரு ரூனியமாய்

அப்பாலும் பாழென் றறி.''

என்றான் பொய்யா வாக்கனும்.

பிரத்தியட்சத்தில் நின்ற வுலகம் மறைதல் ஞேயமற்ற விடம். இதுவே முதற்பாழ்.

சாங்கிய சூத்திரம்

பின்னர் சப்தப் பிரபஞ்சம் மட்டுமே போதத்திற் கெட்டிக்கொண்டிருந்தது. அதுவும் அடங்கி யொழிந்தது. இஃது இரண்டாம் பாழ்.

பின்னர் சப்தப் பிரபஞ்சத்திற்கு வித்தாயிருந்த விந்துவாகிய வாக்கு மட்டும் மோனமாய்த் தனது நிலையைக் காட்டிக்கொண்டிருந்து தானோடிப் போய் போதத்துள் மறைந்து கொண்டது. இவ்வாறு மோனமும் மறைந்தவிடமே மூன்றாம் பாழ்.

போதம் பற்றுதற்கு ஓர் களைகண்ணுமில்லாது தானே கேவலமா (தனி நிலைமையில்) யிருந்த விடமுளதே அதுவே ''முடிவிலொரு சூனியமாய்'' என்ற விடம்.

பின்னர் "தனையென்றும் மறந்திருப்ப அருள் வடிவானது தான் தட்டி யெழுந்திருக்கும்'' என்றபடி, ஓர் ஒப்பரிய ஆனந்தம், இறைத்துச் சூனியமாக்கிய கிணற்றிருந்து நன்னீர் ஊற்றெடுக்குமாபோல் எழுந்து சூனியத்தை விழுங்கி ஆனந்தமயமாயிருந்தது. இதுவே "அப்பால்'' என்ற விடமுமாம்.

பின்னர் இவ்வானந்தலாகிரி மென்மேலேறவேற போதம் அந்த லாகிரிக் யடிமையாக்கிககொண்டே அதன் வயமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இப்போக்கும் கெட்டு போதம் ஓர் சிறிதும் வெளிப்படும் ஆற்றலற்று வெட்ட வெறும் வெளியா யிருந்தவிடத்தையே வள்ளுவனார் நான்காவது ‘பாழ்” என்றனர்.

இவ்வித சிவானந்த லாகிரியை: -

“ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித், தேட்டற்றிடஞ் சிவ முந்தீபற,

தேடுமிட மதன்றுந் தீபற"             என்று உய்யவந்த தேவாருளினார்.

 

நாஸ்மீ எனபகற்கு நான் ஆண்'' ஆகவே பெண்ணல்லன், நானே சர்வத்திற்கு எஜமானனெனவும் பொருள் கொள்ளலா மென்ப.

[எவற்றிற்கும் முடிவு கண்ட இக்கைவல்ய ஞானம் அன்னமய கோசமாகிய தூல தேகத்திருக்கும் புருஷனுக்கு உதயமாவதால் போதரும் பயன் யாது? என்பதனைக் குறிக்கலுற்றார்.]

65-வது காரிகை

தேனநி விருத்த பிரஸவா மர்த்த வஸாத் சப்தரூபவினி விருத்தாம் –

பிரகிருதிம் பஸ்யதி புருஷ: பிரேக்ஷக வதவஸ்தித: சுஸ்த:

 

இந்த ஞானத்தை (ஞானநேத்திரமாகிய மந்திரநோக்கை) க் கொண்டு (அரங்கத்திற் கூத்தும்) பார்ப்பானைப்போல் சாவதானமாய் ஓர் தொந்தரவு மின்றிச் சுகமாகப் பிரகிருதியை மற்றும் உற்று நோக்கா நிற்பன். அவளோ ஈனுதலொழிந்து எழுவிதக் கோலங்களைக் கொள்ளக்கூடாமல் தனது திறனழிந்து வாளா நிற்பள்.

உரை: - ஞான ரூபத்தை யூடுருவி நுழைந்து பார்த்து விட்டமையால் பந்த மோஷங்களின் தந்திரம் கைக்கொள்ளப்பட்டது.

இத் தந்திரம் கைவந்த நோக்கால் எழுவகைத் தாய் மாயை யெடுக்க வல்ல அஞ்ஞான (அவித்தியா) ரூபத்தை நோக்கலும் அதன் இரகசியம் தென்பட்டதேயன்றி, அவித்தையின் கண் தன் வயங்கெட்டு மாட்டிக்கொள்ளப்பட மாட்டான்.

ஈனுத லொழிந்து எழுவிதக்கோலங் கொள்ளாது நின்பள் என்றது, பிரகிருதி தன்னிட மிருந்து புத்தியையும், அதனிட மிருந்து அகங்காரத்தையும், அகங்காரத்து ஓர்வளையினின்று பஞ்ச தன்மாத்திரைகளையும், தன்மாத்திரைகளி னின்று பஞ்சபூதங்களையும், அகங்காரத்தின் மற்றோர் கிளையினின்று ஞானேந்திரியங்களையும், கன்மேந்திரியங்களையும் மனத்தையும் வேண்டியாங்கு உற்பவஞ்செய்ய முடியாமையைக் குறிக்கும்.

மற்றும் அறம், மறம், ஆசை, வைராக்கியம், ஜசுவரியம், அனைசுவரியம், அஞ்ஞானமாகிய ஏழு பாவங்களுள் ஒன்றையும் மதிக்காது ஞானபாவத்தையே வகித்து நிற்பன்.

ஆதலின் சாங்கியன் மாயையின் சிக்கலை விட்டோடும் வழி கண்டான்; அவன் காத்திருப்பது தனது காலத்தை நோக்கியே. தேகத்தொடக்கறும் தருணத்தைக் காண்டலும் அதனைப் பிடித்துக்கொண்டே கரையேறி விடுவன்.

[இருவரும் காலம் நேரும்வரை யாது செய்வாரெனின்?]

66-வது காரிகை

திருஷ்டாம யேத்யுபேக்ஷகயோகோ திருஷ்டாஹ மித்யு பரமத்யன்யா –

சதிஸம் யோகேபி தயோ: பிரயோஜனம் நாஸ்தி சர்க்கஸ்ய.

 

''அவளை நான் கண்டு கொண்டேன்'' என்று புருஷன் அவள் பால் மோகம் அறுகின்றான்; அவளும் “என்னையவன் பார்த்து விட்டானே “இனி என் செய்வேன்'' என்று அபேக்ஷை கொள்ளாது நிற்பாள். இருவரும் கூடியுறையினும் சிருஷ்டிக்கு வழியற்றுப் போகின்றது.

உரை. பிரபஞ்சத்தோடு சிக்கல் மென்மேலும் உண்டாகாதென்றபடி, மாயையது இரு கூறையுங் கண்டு உடலோடு வாழ்பவன் ஜீவன் முக்தன். பண்டைப் பழவினையாகிய சஞ்சிதமும், புதிது புதிதாய் விளையும் ஆகாமியமும் ஆகிய இரண்டும் நசிய பிரத்தியக்ஷ போகமாகிய பிராப்தமொன்றுமே நின்று கொண்டிருக்கும். இதுவே தேகத்தை யோட்டும். தேகம் ஆகாமியமாகிய மேற்கருமத்தால் மேலிழுக்கப்பட்டு சுழன்று வந்து சஞ்சிதத்தோ
டொட்டி காலசக்கரத்தில் மாட்டுண்டு ஜனனமரணச் சுழற்கண் அலமராது மோக்ஷவழி யறியாதான் மரணம் நேரும் காலத்து அணுவாகி மேற்சென்று காரண தேகத்தைத் தொடலும் இவனது ஆசை யொழியாமையின், அக்காரண தேகமாகிய இலிங்கத்தி னுளதாய ஆசாபாவத்தால் கீழுந்தப்பட்டு ஆசை காட்டும் சூக்கும தேகத்தைப் பிடித்துத் தூல தேகமாக வனைதற்குக் கருவி அழலா நிற்பன். இவ்வுண்மையைப் பின்வரும் மெய்கண்டதேவர் வாக்கா லுணர்க: -

"கண்ட நன்வைக் கனவுணர்விற்றான் மறந்து

விண்படர்ந் தத்தூ வினையினாற் - கண்செவி கெட்டு

உள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்று மனம்

தள்ளவிழுங் கருவிற் மூன்.”

 

வழி கண்டவன் சொற்பனக் காட்சிக்கண் சிக்குண்டு நற்கதி தெரியாது மயங்கிச் சாகமாட்டான். சொற்பனத்தும் ஜாக்கிரமே நிகழும்.

ஜாக்கிரம் யாதோவெனில் சுழுமுனைக்கண் நிற்பதுவாம். காசிப்பதியாசிய வாரணாசி அவிமுக்தம் என்றும் பேசப்படும். அத்தானத்திற் சிவன் விடாது நின்று அவ்விடத்தி லுயிர் துறப்போரை முத்திக் கரைக்கண் ணுய்ப்பன். இவ் இரகசியத்தை அவிமுக்த ஜாபல உபநிடதத்திற் காண்க. சாங்கியனும் ஜாக்கிரமாகிய புருவமத்தியில் நின்றே, பிராப்தம் உலந்த காலத்தில், முத்திக்கரை யேறிக்கொள்வன்.

[மாயா தந்திரத்தைக் கொள்ளுதலே ஞானம்; இதுவே முத்தியங் கரைக்கண் கொண்டுய்த்தற் கேற்ற தீபம் இத்தகைய ஞானம் கைவரப் பெற்றும் மாயா தந்திர தனுவாகிய தூல தேகத்திலிருந்து அவாவில்லாதும் மாயையோடு தொடக்குண்டு அவளை விட்டுப் பிரியா துறைதற்குக் துறைதற்குக் காரண மென்னையெனின்?]

67-வது காரிகை

சம்யக்யானாதி கமாத்தர்மா தௌனாம காரணபிராப்தௌ-

திஷ்டதி சம்ஸ்கார வஸாஸ்ச் சக்ரப்ரமவத் திருதஸரீரா

 

சத்தியமான ஞானம் கைவந்து நிற்பதால் அறம் முதலான எண்ணங்கள் (பாவங்கள்) தமது பலத்தை ஈனுதற் கிடனின்றி வாளா நிற்கும்.

சரீரமோ, குயவனது சக்கரம் (பாண்டங்களை வனையாது) முன்னம் நன்றாய் உருட்டி விட்ட வேகத்தால் சிறிது காலம் வாளா சுழன்று கொண்டிருப்பதுபோல், (மேலைக்ரு வித்தாகாது) சிறிது காலம் வரை புருஷனுக்கு வதியும் தானமாய் நின்று சரிக்கும்.

உரை. சாங்கியன் யோகி போல் சமாதிநிலையை உள்ளவா, அதுவாகிக் கண்டா னல்லன். சாங்கியன் தியானம் வரை சென்று பிறப்பிறப்பைக் கடக்கும் வழியைக் கண்டு கொண்டான். இனி அவ்வழிக்கண் உள்ள இடையூறுகளை ஊடறுத் தன்றே முத்தியைக் கிட்டவேண்டும். இவ் விடையூறுகளோடு தானே போராட முயலின் மிக்க வலியைப் பெறவேண்டும். சாங்கியனோ எளிதே முத்தியை யடைய வேண்டி யிருப்பவனாதலின் மாயாசக் திகளோடு போராடுதலை யொழித்து மரண தரிசனத்தின்மாட்டு கண்ணாயிருப்பன்
மரணம் சேரும்போழ்து இடைவழிக்கண் நிற்கும் சகல மாயா சக்திகளும் செயலற்று நிற்கும். அப்போழ்து காரண சரீரமாகிய இலிங்க தேகத்திற்கு அணுவாகிச் செல்கின்றான். மேற்பிறப்பிற்கு ஏதுவாகிய அவா இல்லாமையால் காரண தேகத்தை இவன் கண்டும் அஃது ஓர் கதிக்கண்ணும் இவனை விழத்தட்டாது. காரண தேகமாகிய இலிங்கக்கட்டை, திருடன் தூங்குவோனது முடிச்சை எளிதே யவிழ்ப்பது போல், அவிழ்த்து தனது அணுவை (பிராண சொரூபத்தை) அஃது பிறத்தற் கிடமாகிய ஆத்மாவினிடம் ஒடுக்கி விடுகின்றான். இதுவே சாங்கியன் தேடும் ஆத்மலாபமாகிய கைவல்யம்.

சாங்கியன் ஆத்ம லாபத்தைக் கருதி நிற்பது சோரன் தன்பால் அன்புள்ள இளங்கன்னிகையைச் சமயம் பார்த்துப் புணர்தற்குச் செல்லுதல் போலாமென்க வீட்டிலுள்ள சேதனர் யாவரும் (தாய், தகப்பன், மக்கள், நாய் முதலியன) தம்மை யயர்ந்து நித்திரை செய்யினும் சுவைகண்ட கன்னிகை தூக்கங் கொள்ளாது எதிர்பார்த்திருப்பது போல் ஆத்மா (தனது ஹம்சத்தை) அணுவை எதிர்பார்த்து நிற்கும். சோரன் கன்னிகை நித்திரை புரியும் அறையைத் திறக்கும் திறவுகோலையும் உடன்கொண்டு போவதாய் எளிதிற் கதவைத் திறந்து கன்னிகையைப் புணர்கின்றான்.

சாங்கியன் தனது தந்திரத்தால் ஆத்மலாபமாகிய முத்தியைப் பெறுவன். யோகியோ தனது சக்தியாலும் தந்திரத்தாலும் எச் சித்திகளையும் முடிக்க வல்லன். திறவுகோலுடன், ஆற்றலோடு செல்லின் எதிர்ப்பாரை யடக்கி மோக்ஷ வீட்டைத் திறந்து நிர்ப்பயமாய் முத்தி மாதோடுங்கூடி யின்புறலாம்.

சாங்கியன் மந்திரபலயின்றி தனது தந்திரத்தால் முத்தி யடைவன்; யோகி தந்திரமும் மந்திரமுமாகிய இரண்டையுங்கொண்டு முத்திச் சுவையைக் காண்பன்.

இராஜயோகிக்கே அதிகாரத்தோடு முத்தி கைகூடும், சாங்கியனுக்கு உபாயத்தால் முத்தி கைகூடும்.

யோகி காட்டும் வழி சித்தியோடு முத்தி; சாங்கியன் காட்டும் வழி சித்தியின்றி முத்தி.

சாங்கியன் முத்தித் தானத்தைத் தெளிவாய்க்காட்டி, பிராணன் இத்தேகத்தை வினைவழி யாட்டுவிக்கக் கொணர்ந்த இயக்கம் முழுமுற்றும் செலவாகி வாளாநிற்கும் தருணமாகிய மரணகாலமே அவ் முத்தித்தானத்தை மெய்யாகக் கிட்டுதற்கு - கந்த காலமென்றான். தருணம் பார்த்து பிறவிச் சுழலைத் தாண்ட வேண்டுமென்பது சாங்கியன் கருத்து. அதுவரை அவாவின்றி பிராரப்த கன்மத்தை யனுபவித்து தேகச்சிறை நீங்காது அதன் கண் வாழ்கவென்றான்.

சாங்கியன் மரண தரிசனங் கிட்டும் வரை ஜீவன் முத்தனாயும் ஜீவபந்தனாயு மிருப்பான். இனிப் பிறப்பில்லாமையால் முத்தன் ஆயினும் இத் தேகத்தில் நேரும் இன்ப துன்பங்களைத் துய்க்க வேண்டி யிருத்தலின் ஜீவபந்தனுமாவன். ஆயினும் தான் பெற்றுள்ள ஞானத்தின் வலியால் இன்ப துன்பங்கள் இவனை யழுத்தி மேற்கதியை மறைக்க லாற்று.

[தேகத் தொடக்கறுந் தருணம் நேர்ந்துழி யாது நிகழ்கின்ற தென்பதனை நன்கு விளக்கலுற்றார்.]

68-வது காரிகை

பிராப்தே சரீரபேதே சரிதார்த்தத்வாத் பிரதான விதிவிருத்தெள –

ஐகாந்திக மாத்யந்திக முபயம் கைவல்ய மாப்னோதி.

 

தேகத்தைவிட்டு ஜீவன் கழலும் சமயங்கிட்டலும், பிரகிருதியினள் அவனைத் தொட்டு பிறப்பு இறப்புச் சுழற்கண் உருட்டும் திறனற்று வாளா நிற்பள். அச்சமயம் இரட்டைத்தன்மை வாய்ந்த கைவல்யத்தைப் பெறுகின்றான். அஃது யாதோவெனின்: -

1. எவரும் தேடியோடும் கடை முடிவு,

2. எவரும் உற்பவமாகி யொடுங்கும் தானம்.

உரை: -     English translations:

When the moment does approach for the detachment of the bounden soul from the flesh, coat the power of delusion if comes unable to push the soul any further into transmigratory existence.

The soul then attacks the duplicate Beautitude of

1. Being the final goal of all souls in evolution.

2. Being the circle of eternity in which the beginning and and of all creation take place.

எவரும் தேடிப் பிடிக்க முயலும் ஞேயப்பொருளாயும், உலகும் ஆன்மாக்களும் உற்பவமாய் ஒடுங்கும் ஆதிமூலமாயும் சாங்கியன் நிற்பன்.

மாயையுட் சிக்குண்டு இஃது என்ன மாயமெனத் தம்மை யுணர வாரம் பிப்போர் பரத்தைத் தேடுவர். பரமநாட்டங் கொண்டார் நாடும் பரம்பொருளா யமைவது கைவல்யத்தின் ஓர் பாகம். இதுவே சிவபதம் (உருத்திரபதம்.)

பெத்தத்தி லிருப்பார் உற்பவமாதற்கும் பின்னர் உற்பவித்தவாறே ஒடுங்குதற்கும் நிலைக்களனாய் (க்ஷேத்திரமாய்) நிற்பது கைவல்யத்தின் மற்றோர் பாகம் இதுவே விண்டு பதம்.

"பந்தமும் வீடும் படைப்போன் காண்க'' “பர் தமுமாய் வீடு முமாயினார்க்கு" என்ற வாக்கியங்களைச் சீர் தூக்கி ஈசுரப்பேற்றின் இரகசியத்தை யுற்று நோக்குக.

இவண் உலகத்திற்கு நிலைக்களனா யிருப்பதென்றது ஜகத்தின் வித்தாயிருப்பதன்று; அப்பேறு பிரமனுடையது; நிலைக்களனென்றது, ஜகத்தின் வித்தையும் தாங்கி நிற்கும் சுழுத்தி நிலையை.

[இத்தகைய இரட்டைத்தன்மை வாய்ந்த கைவல்யத்தைக் காட்டா நின்ற சாங்கிய ஞானத்தின் பெருமையையும், அந்நூலைக் கண்டோனையும் கூறுவர்.]

69-வது காரிகை

புருஷார்த்தஸ்யானமிதம் குஹ்யம் பரமர்ஷிணாச மாக்யாதம் –

ஸ்தித்யுத்பத்தி பிரலயாஸ்ச்சிந்தியந்தே யத்ரபூதானாம்.

இஃது புருஷனது இலாபத்தைக் காட்டாகின்ற ஞானக்கண். இவ்ஞானநேத்திரம் மிகவும் அந்தரங்கமான குகைக்குள்ளிருப்பது. இதனைப்பரம இருடி நன்கே விளக்கக் காட்டினர். இதனுள் பூதங்கள் பிரத்தியக்ஷமாய் நிகழ் காலமாய் நிற்கும் நிலையும், உற்பத்தியான வரலாறும், இனித் தோற்றங்கெட்டு மறைவுறும் கடைநிலையும், சிந்திக்கப் பட்டிருக்கின்றன.

உரை: - சாங்கியம் இலாபத்தைக் காட்டுங்கண்; யோகம் இலாபத்தைப் பிடித்துத் தருங்கை.

எவற்றையும் உள்ளவாறு காணவல்ல ஞானநேத்திரம் இருதயமாகிய குகைக்குள்ளிருப்பது. இதுபற்றியே தாரக மயமான முருகக்கடவுள் குகனெனவும் பெயர்பெற்றார்.

பரம இருடியென்றது கபில முனிவனை. இவனதுமேனி சிவன் மேனி போல் செந்நிறமா யிருப்பது பற்றி இவன் கபிலன் எனப் பெயர் பெற்றான். பின்னர் இவனைப்பற்றி சிறிது கூறுவோம்.

ஐம்புலக்காட்சி எல்லைக்குள் வந்து நிற்பது வே பிரத்தியக்ஷமாகிய திதியாம். மறைவாய் ஐம்புலக் காட்சிக்கு அப்பாற்பட்டு நின்றதை புலனறிவிற்குக் கிட்டவைத்தவன் பிரமன், அவ்வாறு வந்ததை மறையவிடாது காப்பவன்
விண்டு. தோற்றமுறும் தந்திரத்தையும், காக்குந் தந்திரத்தையும் அடக்கி யெவற்றையும் தனது சக்தியுள் மறைப்பவன் உருத்திரன். பூதங்களென்பன இவண் பஞ்ச பூதங்களையும் உயிர்களையு முணர்த்தும். ஜகமும் ஜீவராசிகளும் தோன்றிய வரலாற்றையும் அவற்றைச் சிறிது காலம் காப்பாற்றும் இரகசியத்தையும் இந்நூல் தெரிவிக்கும் என்றனர்.

[இந்நூலை முதற்கண் கண்டவன் (ஆக்கியோன்) கபிலன். இந்நூல் எவ்வாறு உலகத்திற் கெட்டியதெனின்?]

70-வது காரிகை

யேதத் பவித்ரமக்யம் முனிராசுரயே அனுகம்பயா பிரத்தென –

ஆசுரபிபம் சகாய தேனசபஹு தாகிருதம் தந்த்ரம்.

 

புனிதமும் கூர்மையும் வாய்ந்த இந்தத் தந்திரத்தை மகாமுனிவன் மிகுந்த கருணையோடு ஆசுரிக்குக் காட்டினான். ஆசுரி பஞ்சசிகனுக்குக் காட்டிக் கொடுத்தான். பஞ்சசிகனால் இவ்வரிய தந்திரம் வியாபகமுற்றது.

உரை: - இத்தந்திரம் முக்கூற்றுத் துன்பத்தினின்றும் விடுவிக்கின்ற மையின் மிகப் புனிதமான இரகசியம்.

கூர்மை கூறியது இத் தந்திரத்தின் பெருமையையும், நுண்மையையும், எதனையும் ஊடறுத்து போக்கவல்ல ஆற்றலையுங் குறித்தற்கு, இதனைத் தந்திரறது இதனது இரகசியத்தன்மையை நோக்கி.

கபிலனென்பான் அசத்திய வாயிலாகத் தன்னைவந்து தாக்கிய இடையூறு விளைத்த சகரரை நெற்றிகட்டீயால் சாம்பராக்கிய உருத்திராம்சனான அக்கினிதேவனே யாவன். இவன் வதிவது பூமியது பாதலத்தில். ஜீவராசி கட்கு அடிவயிற்றில் அக்கினி யிருப்பதுபோல் பூமிதேவியின் அடி வயிறாகிய பாதலத்தில் செந்நெருப்பனாய் வதிபவன் கபிலனே.

மற்றும் ஊன்றி நோக்கவல்லார்க்கு, முத்தித் தானத்தைக் காணுதற்கு உகந்த சாங்கியம் என்னும் ஞான நேத்திரத்தை யீந்த இக்கபிலனே, ஆயிரம் பணாமுடி கொண்ட ஆதிசேடனாகிப் புலிக்கண் பதஞ்சலி முனிவனாய் அவதரித்து முத்தித் தானத்தை எட்டிப்பிடிக்கும் கைபோன்ற யோக தரிசனத்தை யுலகிற்குத் தந்ததாகவுந் தோன்றும். பார்க்கக் கொடுத்தவன்
தொடுதற்குக் கொடானோ!!!

கபிலனது மாணாக்கன் ஆசுரி, ஆசுரியது மாணாக்கன் பஞ்சசிகன். வனைப்பற்றி மகா பாரதத்திற் சொல்லப்பட்டிருக்கிறது. இவன் மிதிலை யரசனான ஜனகனுக்குச் சாங்கிய உபதேசஞ் செய்ததாகக் காணப்படுகின்றது. [பஞ்சசிகன் பதஞ்சலிக் குபதேசஞ் செய்தான், தத்துவசமாசம்]

சாங்கிய தந்திரம் வெளிப்பட்ட வரலாறிதுவாம்: -

கபிலன்

 

ஆசுரி

 

பஞ்சசிகன்

 

ஜனகன்.                       பதஞ்சலி

 

கர்ண பரம்பரை

 

ஈசுரக் கிருஷ்ணன்.

71-வது காரிகை

வரிஷ்யப்பரம்பர யாகத மீஸ்வர கிருஷ்ணேன சைத்தார்யாபி: -

சம்க்ஷிப்த மார்ய மதினாசம்யக் விக்ஞாய சித்தாந்தம்.

மாணாக்கர்கட்கு கர்ண பரம்பரையாக வந்து கொண்டிருந்த இவ் ஞானத்தை ஈசுவரக் கிருபை பெற்று, அதனை நன்காராய்ந்து சரியான முடிவைக் கண்டு, ஆரிய மதிவாய்ந்த அத்தந்திரி அத்தந்திரத்தை ஆரியப்பாவால் மிகச் சுருங்கிய காரிகை ரூபமாய் வெளிப்படுத்தினான்.

உரை: - ஆரிய மதி யென்பது பேரறிவைக் குறிக்கு மென்ப.

ஆயினும் வட சொல்லின் இரகசியத்தை யுணர்ந்த அறி என்று
பொருள் கோடல் சால்புடைத்து. வட சொல்லது தந்திரம் கைவரின் அதுவும் முத்திக்கு வழி யென்பதனைத் திருமூலர் விளங்க வுரைத்தாரன்றோ

72-வது காரிகை

சத்பத்யாம் கில யேர்த்தாஸ்த் தேர்த்தா: கிருத்ஸ்

நஸ்யஷஷ்டி தந்த்ரஸ்ய – ஆக்யாயிகாவிர

ஹிதா: பாவா தவி வர்ஜ்ஜி தாஸ் ரவாபி

 

இந்க் நூற்கண் எழுபது ஈரடிப்பாக்களால் விளக்கம் பெற்ற விஷயங்கள் சாங்கிய ஞான முழுமையையும் அடக்கும்.

உதாரண சரிதங்களும், பரவாதழம் இவண் கூறப்பட்டில. மேலவை நீங்கலாக இவண் ஆராயப்பட்ட விஷயங்கள் அறுபது.

உரை: - அறுபது விஷயங்கள் யாவையெனின்: -

1. புருஷனுண்மை.

2. பிரகிருதியுண்மை.

3. பிரகிருதியது ஏகத்தன்மை.

4. பிரகிருதி விஷையிகரிக்கப்படுந் தன்மை.

5. பிரகிருதி ஏற்பட்டது (புருஷன் பொருட்டு.)

 


6. புருஷர் பலர்.

7. புருஷன் பிரத்தேகம்.

8. புருஷன் அசைவிலான்.

 

9. சூக்குமமாகிய இலிங்கம் அழியாமை.

10. தூலதேகம் அழிவது.

 

11. அவித்தை.

12. அஸ்மிதை.                 பஞ்சக்கிலேசம்.

13. அராகம்

14. துவேஷம்.

15. அபிநிவேஷம்.

 

16. பிரகிருதியைப் பற்றிய ஆத்திரம்.

17. உபரானத்தை பற்றிய ஆத்திரம்.                 இவை புத்தியின் உட்கேடு

18. காலத்தை பற்றிய ஆத்திரம்.                    (உண்ணோக்கிய கேடு)

19. பாக்கியத்தை பற்றிய ஆத்திரம்.

 

20. சப்தத்தைப் பற்றிய ஆத்திரம்

21 பரிசத்தைப் பற்றிய ஆத்திரம்                   

22. ரூபத்தைப் பற்றிய ஆத்திரம்                    இவை புத்தியின் வெளிக்கேடு        

23. இரசத்தைப் பற்றிய ஆத்திரம்                   (வெளி நோக்கிய கேடு.)

24. கந்தத்தைப் பற்றிய ஆத்திரம்

 

25. ஊகக் குறைவு.

26. கேள்விக் குறைவு.

27. கல்விக்குறைவு.                              

28. தன வேதனையை யாளாமை                   இவை புத்தி, சித்தி

29. தெய்வ வேதனையை யாளாமை.               பெறும் திறத்தில் சேரும் குறைவாம்.

30. வேதனையை யாளாமை.

31. அளவளாதற்குறை.

32. ஈகை (தூய்மைக்) குறை.

 

33. மனக்கேடு (பைத்தியம்.)

34. தோற்கேடு (குஷ்டம்.)                          இவை ஞானேந்திரியங்களின்

35. செவிட்டுத்தனம்.                              பால் வரவல்ல இடையூறுகள்.

36. குருட்டுத்தனம்.

37. அன்ன துவேஷம்.

38. மூக்கடைப்பு.

 


39. ஊமைத்தனம்.

40. நொண்டித்தனம்.                               இவை கன்மேந்தியங்களின்

41. கைமுடக்கம்.                                 பால் வரவல்ல இடையூறுகள்.

42. மலச்சிக்கல்,

43. வீரியக்குறை.

 


44. பிரகிருதியை நோக்கி வாளாவிருத்தல்.

45. உபதானத்தை (துறவை) வாளாவிருத்தல்.              இவை உள் ஆலசியம்.

46. காலத்தை நோக்கி வாளாவிருத்தல்.

47. பாக்கியத்தை நோக்கி வாளாவிருத்தல்.

 

48. சப்தத்தை விட்டு வாளாவிருத்தல்.

49. உணர்ச்சியை விட்டு வாளாவிருத்தல்.

50. ரூபத்தை விட்டு வாளாவிருத்தல்                     இவை வெளி ஆலசியம்.

51. இசத்தை விட்டு வாளாவிருத்தல்

52. கந்தத்தை விட்டு வாளாவிருத்தல்

 

53. ஊகம்

54. கேள்வி.

55. கல்வி.

56. முக்கூற்றுத்

57. துன்பத்தையும்                                      இவை எட்டும் சித்திகள்.

58. ஒறுத்தல்.

59. அளவளாதல்

60. தானம் (தூய்மை.)

 

உதாரண சரிதங்கள்: - சாங்கிய தரிசனத்துள் நான்காம் காண்டத்துட் கூறப்பட்டுள்ளன. அவை தொகையால் 32.

1. இராஜ புத்திரன் போல் தத்துவ உபதேச வாயிலாக.

ஓர் அரசனது ஆண் குழந்தை சில வேடர்களால் திருடப்பட்டு அவர்களால் வளர்க்கப்பட்டு வாலிப வயதை (பிராயத்தை) யடைந்தது. உள்ளீடு கண்டவன் அவ் வாலிபனுக்கு அவனது அரசப் பிறப்பை யுணர்த்தலும், அவனுக்கு நினைவு வந்து ஆமென உடனே அரசனது அரண்மனையை யடைந்து தகப்பனைக் கண்டு மேல் வாழ்வு பெற்றான். ஐம்புல வேடர்களுட் சிக்குண்டு தனது நிலையை மறந்த சிற்றுயிர் தனது மெய்ர் நிலையைத் தூண்டியுள்ளவா காட்டவல்ல ஆசிரியனால் விடுதலை பெறும்,

2. ஒரு பொருளைக் காட்ட மற்றோர் பொருளை யுபதேசிப்பது; பிசாசைப் போல் (Hinting by Probables)

இஃது தந்திரமாய் மோக்ஷ வழி காட்டல், கதையைக் கண்டு பிடிக்க.

3. அடிக்கடி யுபதேசஞ் செய்வதால் திடீரென மெய்ப்பொரு ளுதயமாகும்.

கல்லைத் தட்டிக் கொண்டிருப்பின் குபீரெனத் தீப்பொரியானது ஓர் கணத்தி லுண்டாகின்ற தன்றே!

4. தகப்பனும் பிள்ளையும் போலிருவரும் தரிசனஞ் செய்வதால் ஞான முதயமாகும்.

நெடுங்கால தகப்பனும் பிள்ளையும் பிரிந்திருந்து அகஸ்மாத்தாய்ச் சந்திக்க நேரின், எவ்வாற்றானோ பரஸ்பரம் இருவரும் நன்கிழுக்கப்பட்டுத் தமது சம்பவத்தை யுணர்வர்.

துஷ்யந்தனும் பரதனும் தமது சம்பந்தத்தை யுணர்ந்தா ரன்றே!

5. சேனம் (இராஜாளி) தானே கொடுத்தால் துன்புறாமற் கொடுக்கின்றது; வலுவிற் பிடுங்கின் துன்புறுகின்றது.

6. பாம்பு (அஹிஹி) தனது சட்டையை (நிர்வயனத்தை = நெய்யாத வஸ்திரத்தை) க் களைந்து பரிசுத்த மாவதுபோல்.

தேக இந்திரிய அசுத்தங்களை விட்டு ஞானி தன்னைப் பரிசுத்தனாக்கிக் கொள்வன்.

7. துண்டிக்கப்பட்ட கைபோல்.

கை துண்டிக்கப்படின் முன்னர் அதன்பாலுள்ள பற்று எவ்வாறு முழு முற்றும் நசிக்கின்றதோ, அவ்வாறு தத்துவங்களை நியதி களைந்து, அவற்றின் பால் பற்றவேண்டும் என்பதாம். கக்கி வெளிவந்த சோற்றின்பால் வேட்கை யறுதல்போல் எனவுங் கொள்க.

8. முக்திக்கு எதுவல்லாப் பொருளை நாடின் பந்தமுளதாம்; பரதன் போல்.

இஃதெல்லாம் துறந்த ஜடபரதர் ஓர் மான்பாற் கொண்ட பரிவால், தானும் மான் பிறவி பிறக்க நேர்ந்ததைச் சுட்டியது.

9. குமரி சங்கத்தால் மனம் வேறுபடுவள்; கிருத்தியம் செவ்வையாய் நடவாது.

வெறுங் கையாய் இந்தக் குமரிக்கு வளையல் அணியின், அவள் வீட்டுப் பணிவிடையை முடிக்க மனமெழாது விளையலையே திருப்பித் திருப்பிக் கையழகையே நோக்கி நிற்பள். அதுபோல் புத்தி புதிதான வொன்றைப் பற்றி வேட்கை கொள்ளின், முன் பற்றி யிருந்த நற்பொருள் நாட்டம் குன்றும்.

10. இரண்டு கூட விருப்பதுங் கேடு. ஒன்றே கூட விருப்பின் நலமாம். இரண்டிருப்பின் மனஞ்சிதறும்.

11. பற்றில்லாதவள் சுகியாதவள், பிங்களை போல. கதையைத் தேடிக் காண்க.

12. வேறு வீட்டில் ஆரம்பஞ் செய்யாதிருந்த போதிலும் சுகியாவான்; பாம்பைப்போல்.

13. அநேக சாத்திரங்களை பற்பல ஆசிரியர்களை வழிபடினும், பிரம் மரம் (அநுபதம் வண்டு) போல சாரத்தையே கவனித் தெடுத்துக் கொள்க.

"அருடருங் கேள்வி யமையத் தேக்க

பற்பல வாசான் பாங்கு செல்பவர்போல்

மூன்றுவகை யடுத்த தேன் றரு கொழுமலர்

கொழுதிப் பாடும் குணச்சுரும் பினங்காள்.''

என்றனர் கல்லாடர்.

14. பாணத்தை (அம்பை)க் கூர்மை செய்வான் மனம் அதன்கண் பதிந்திருப்பது போல், சித்தம் நிலைபெறின் நன்மை.

இவன் வழியே போவாரை நோக்க நேரினும், அவர்பாற் கவனஞ் செல்லாது.

15. கிருதநியம லங்கனத்தால் அனர்த்தம் சம்பவிக்கும், லோகம் போல்,

இலௌகீக விஷயங்களில் செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருப்பின் நன்மை கிடையாததுபோல், ஆதியி லேற்பட்ட ஒழுக்கத்தை (ஏற்பாட்டை) க் கைதவறின் கோரிய முடிவு கிட்டாது. (அசதியில் நஷ்டம் உண்டாகும்.)

16. அதனை மறந்தாலும் அனர்த்தம் (நஷ்டம்) சம்பவிக்கும்; தவளையைப்போல்.

ஓர் அரசன் ஓர் வனத்தில் அதியற்புதமான கன்னிகையைக் கண்டு அவளை மணந்து கொள்கையில் அவள் "எனக்கு நீர் தண்ணீரைக் காட்டாத உம்மிடம் வாழ்வேன்'' என்றனள். அவ்வாறே சிறிது காலம் அவரோடு போகந் துய்க்கையில் ஓர் நாள் அவள் விளையாட்டாற் களைப்படைந்து பருக நீர் கேட்டாள். மறதியால் நியமந்தவறி தண்ணீர் அவள் அருகே வரலும் அவள் தவளையாகி அவண் ஓர் தடாகத்துட் புகுந்து கொண்டாள். வலை போட்டுப் பார்த்தும் அவ்வரசனுக்கு அவள் திரும்பக் கிட்டாளாயினள்.

17. உபதேசத்தைச் சிரவணஞ் செய்யினும், ஆலோசனை யில்லாமற் போனால் கிருதகிருத்தியம் (நற்பயன்) கிட்டாது; விரோசனனைப்போல். சாந்தோக்கிய உபநிடதம் 8-ம் காண்டத்திற் காண்க.

18. அவ் விருவருள் இந்திரனா லறியப்பட்டது.

19. பிரணதி, பிரம்மச்சரியம், உபசர்ப்பனம் (அடுத்து நிற்றல்) ஆகிய மூன்றாலும் கிருதகிருத்தியங் கிட்டும்; இந்திரனைப்போல்

20. கால நியமனமில்லை, வாமதேவரைப்போல்.

21. பரம்பரையாய் அத்யாப்த ரூபத்தை உபாசிப்பதால் சித்தி யுண்டாகும்; யாகத்திற் பத்தி செய்கிறவர்களைப்போல்.

22. ஜன்ம சுருதிக்கு பஞ்சாக்கினியின் சேர்க்கையால் ஆவிர்த்தி யேற்பட்டது போல, மற்றொன்றின் லாபம் ஏற்பட்டிருப்பினும் ஆவிர்த்தி யுண்டு.

23. விரக்தன் விடக்கூடியதை விடுதலும் கொள்ள வேண்டியதை அங்கீகரிப்பதும் அன்னப்புள்ளும் பாலும் போல்.

அன்னம் பாலிலுள்ள சத்தை மாத்திரம் உட்கொண்டு நீரைத்தொடாது விட்டுவிடு மன்றோ!

24. அதிசயங்களை யுடையவனது சேர்க்கையாலும் (ஞானம்) உண்டாகும்.

அதிசயங்களைக் கண்டோன் ஞானமில்லா னாயினும் அவற்றை யவன் பாற் கேட்டும் தந்திர ஞானியாவன்.

25. அராகத்தா லடியுண்ணும் பக்ஷத்தில் இஷ்டப்படி சஞ்சரித்தல் கைகூடாது (காமசரித்துவம் கிட்டாது.)

(ஆசை துறந்தவன் இஷ்டானுசாரமாய்த் திரிதல் கூடும்) சுகம் போல்.

26. குணங்களோடு கூடுவதால் பந்தமுறுவன்: சுகம்போல்.

27. போகத்தால் ராகம் (ஆசை) தொலையாது! முனியைப்போல்.

28. இருவர் மாட்டும் தோஷத்தைக் கண்டிருப்பதனாலே.

29. களங்கமான சித்தத்தையுடையவ னிடத்தில் உபதேசமாகிய பீஜம் (வித்து) அங்குரிக்காது: அஜூனைப்போல்.

30. ஆபாசம் (சொற்பத்தெளிவு அல்லது பிரகாசம்) மட்டும் உதவாது: அழுக்கடைந்த கண்ணாடியைப்போல். அழுக்கடைந்த கண்ணாடி நன்றாய்த் துலக்கினன்றி முகத்தைத் தெளிவுறக் காட்டாது.

31. அதிலிருந்து உண்டாயினும் அதன் ரூபத்தை வகிப்பது கிடையாது: தாமரைபோல்.

32. விபூதி கூடினும் கிருத கிருத்தியம் (நற்பயன்) கிட்டாது, கிட்டாது. உபாச சித்தியைப் போல்.

முற்றிற்று.

ஆனந்த போதினி – 1936 ௵ ஜூலை ௴ முதல் 1937 ௵ ஜுன், ௴ வரை

No comments:

Post a Comment