Monday, August 31, 2020

 சங்கீதம்

 

ப்ரஹமக்ரந்திஜ மாருதா நுகதிநா சித்தேந ஹ்ருத்பங்கஜே
சூரீணாம நுரஞ் ஜகச்ருதிபாதம் யோயம் ஸ்வயம் ராஜதே
யஸ்மாத் க்ராமவிபாகவர்ண ரசநாலங்கார ஜாதிக்ரமோ
வந்தே நாத்தநும் தமுத்தரஜகத்கீதம் முதேசங்கரம்''       
சங்கீதரத்னாகரம்.

 

இந்தச் சங்கீத வித்தையானது பற்பல மஹான்களால் புத்தி சாதுரியத்தினால் செய்யப்பட்ட பற்பல கிரந்தங்களால் பிரபலமாயிற்று. அங்ஙனம் இந்தச் சங்கீதத்தை விருத்தியாக்கியவர்கள் அநேகம் பேர் உண்டு.


 ஸதாசிவ: சிவாப்ரஹ்மா பரத: கச்யபோமுதி:
 மதங்கோயாஷ்டிகோ துர்கா சக்தி: சார்தூலகோஹலௌ.
 விசாகிலோ தந்திலஸ்ச கம்பளோச்வ தரஸ்ததா,
 வாயுர்விச்வாசூரம்பார் ஜூநநாரத தும்புரா:
 ஆஞ்ஜநேயோ மாத்ருகுப்தோ ராவணா நந்திகேச்வர:
 ஸ்வாதிர்குணோபிந்து ராஜ: ஷேத்ரராஜஸ் சராஹல:
 ருத்ரடோ நாந்ய பூபாலோ: போஜபூவல்லபஸ்ததா:
 பரமர் தீசஸோமேசோ: ஜகதேக மஹீபதி:

சங்கீதரத்னாகரம்.

 

சதாசிவன், சிவன், பிரம்மா, பரதர், கச்யபர், மதங்கர், யாஷ்டிகர்,துர்க்கை, சக்தி, சார்த்தூலர், கோஹலர், விசாகிலர், தந்திலர், கம்பளர், அச்வதரர், வாயு, விச்வாசு, ரம்பை, அர்ஜுனன், நாரதர், தும்புரு, ஆஞ்ஜநேயர், மாதுருகுப்தர், ராவணன், நந்திகேசுவரர், பிந்துராஜன், க்ஷேத்ரராஜன்ராஹலர், ருத்ரடர் முதலியவர்களும், நாந்ய பூபாலர், போஜபூவல்லபர், பரமர்தீ ஸோமேசபூபாலர் முதலிய அரசர்களும் லோல்லடர், உத்படர், சங்குகர், பட்டாபிநவகுப்தர், கீர்த்திதரர் முதலிய வ்யாக்யாதாக்களும் சங்கீதத்தை விருத்தி செய்தவர்களுள் முக்கியஸ்தராவார்கள்.


 
சங்கீத சப்தார்த்தம்

 

சங்கீதமென்ற சப்தத்துக்கு நல்ல கானம் மட்டிலும் பொருளென்று சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். ''ரஞ்ஜகஸ்வர ஸந்தர்ப்பௌ கீதமித்ய பிதீயதே'' அதாவது ஸ்வரங்களுடைய பிரயோகங்களில் மனதை ரஞ்ஜிக்கச் செய்வது கீதமென்று சொல்லப்படுகிறதென்ற விசேஷ வசனத்தால் சம் என்ற உபஸர்க்கமில்லாமல் கீதம் என்ற சப்தத்துக்கே நல்ல கீத மென்று பொருள் சித்திக்கிறபடியால் ஸம் என்ற உபஸர்க்கமானது கீத சப்தத்தோடு கூடினதாய் கீதத்தின் அந்ய ஸம்பந்தத்தை வெளியிடுகிறதாகக் கொண்டு வாத்தியத்தினுடையவும் நிருத்தியத்தினுடைய ஸம்பந்தத்தைத் தெரிவிக்கிறதாகையால்.


            கீதம் வாத்யம் ததாந்ருத்யம் த்ரயம் சங்கீத முச்யதே


என்ற சங்கீதரத்னாகர ஸ்லோகப்படி கீதம், வாத்யம், நிருத்யம் ஆகிய மூன்றும் சங்கீதமென்று சொல்லப்படுகின்றன.


இந்த லக்ஷணத்தில் நடனமும் சேர்ந்திருப்பதால் சங்கீத சப்தத்துக்குப் பொருத்தமான பொருளாகவே இருக்கிறது. இம்மூன்றுக்கும் தெளர்யத்ரிகமென்றும் பெயர்.


                  "கீதவாத்யோ பயம்யத்ர சங்கீதமிதிகேசந:''


 அதாவது கீதம், வாத்யம், ஆகிய இரண்டுமே சங்கீதமென்று சிலர் சொல்லுகிறார்கள்.


''ராகஸ்வரஸ் ததாதாளஸ்த்ரிபிஸ்ஸங்கீத முச்யதே''


அதாவது ராகம், ஸ்வரம், தாளம் இம்மூன்றும் சேர்ந்தபடியால் சங்கீதமெனப்படுமென்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

 

இந்த லக்ஷணங்களும் பாடகர்களுக்கு மிகவும் அவசியமானதா யிருப்பதால் இதுவும் சங்கீத சப்தத்துக்குப் பொருத்தமான பொருள் தான். ஆகையால் கீதம், வாத்யம், நிருத்யம், ராகம், ஸ்வரம், தாளம் இவைகளோடு மனதை ரஞ்சிக்கச் செய்வது சங்கீதமென்று சொல்லப்படுகிறது.

 

மார்கோதேசீதிதத்வேதா தத்ரமார்க்கஸ்ஸ உச்யதே

யோமார்கிதோ விரிஞ்ச்யாத்யை: ப்ரயுக்தோ பரதாதியி:

தேவஸ்ய புரதஸ்சம்போ: நியதாப்யுதயப்ரத:

தேசேதேசே ஜநாநாம்யத் ருச்யாஹ்ருதயாஞ்ஜகம்

காநஞ்சவாதநமந்ருத்யம் தததேசீத்யபி தீயதே:

ந்ருத்யம் வாத்யா நுகம்ப்ரோக்தம் வாத்யம் கீதா நுவ்ருத்திச

அதோகீதம் ப்ரதானத்வாத் அத்ராதாவபிதீயதே             - சங்கீத ரத்னாகரம்.

 

மார்கதேசி விபாகே ஸங்கீதம் தவிதம் மதம்

த்ருஹிணே நயதுத்திஷ்டம் யதுக்தம் பரதேநச

தத்தத்தேசீய யாரீத்யா யத்ஸ்யால் லோகாநு ரஞ்ஜநம்

தேசேதேசேநு ஸங்கீதம் தத்தேசீத்யபிதீயதே

 

சங்கீதம் மார்க்கமென்றும், தேசீயென்றும் இரண்டு விதம். அதில் ஈசுவர சிருஷ்டியால் உண்டாகி பிரம்மா முதலியவர்களால், 'நாட்ய ஸக்ஞமிதம் வந்தே ஸேதிஹாஸம் கரோம்யஹம்'' என்றபடி நாட்யமென்று பெயருடைய இந்த சங்கீத வித்தையை நமஸ்கரிக்கிறேன். நான் விருத்தி செய்கிறேனென்று பிரதிக்ஞை செய்து நான்கு வேதங்களிலும் தேடி விருத்தி செய்யப்பட்டதாயும் பரத முனிவரால் பிரயோகிக்கப்பட்டதாயு மிருக்கிற சங்கீதம் மார்க்கமெனப்படும். அந்தந்த தேசத்து ஜனங்கள் அந்தந்த தேசரீதியாக ஹிருதயத்தை ரஞ்சிக்கச் செய்யும் சங்கீதம் தேசீ யெனப்படும்.

 

நிருத்யம் வாத்யத்தை யநுஸரித்தது. வாத்யம் கீதத்தை யநுஸரித்தது. ஆகையால் கீதம் பிரதானமா யிருப்பதால் முதலில் சொல்லப்படுறது.

 

சங்கீத உற்பத்தி


      ஸாமவேதாதிதம் கீதம் ஸஞ்ஜக்ராஹ பிதாமஹ: - சங்கீத ரத்னாகரம்.

 

"வேதாநாம் ஸாமவேதோஸ்மி'' நான்கு வேதங்களுள் ஸாம வேதத்தில் நானிருக்கிறேன் என்று ஈசுவரன் சொன்ன பிரகாரம், உக்ருஷ்ட, ப்ரதம, த்விதீய, த்ருதீய, சதுர்த்த, மண்ட, ஸ்வார்த்த என்ற பெயருள்ள ஸப்தஸ்வரங்களையுடையதாயும் வேதங்களுள் சிறப்புற்று விளங்குகிறதாயு மிருக்கிற ஸாம வேதத்திலிருந்து பிரம்மதேவர் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதமென்ற ஸப்தஸ்வரங்களையுடைய கீதத்தை எடுத்துக் கொண்டார்.


 ஓங்காரஞ்ச பரப்ரஹ்ம யாவதோங்கார ஸம்பவ:
 அகாரோகார மாகார ஏதேஸங்கீத ஸம்பவா:
 அகாரோ விஷ்ணுரூபஞ்ச உகாரோ ப்ரஹ்மரூபகம்
 மகாரோ பர்கரூபஞ்ச ஸர்வமோங்கார ரூபகம்.

 

ஓங்காரமானது பரப்பிரம்ம ஸ்வரூபம். அதில் சகலப் பிரபஞ்சமும் உண்டாயிற்று. அதில், அகர, உகர, மகரமென்ற மூன்றெழுத்தால் சங்கீத முண்டாயிற்று. இதில் அகரம் விஷ்ணு ஸ்வரூபம் உகரம் பிரம்ம ஸ்வரூபம் மகரம் ருத்ரஸ்வரூபம். இந்த மூவருடைய ஸ்வரூபமே ஓங்கார மெனப்படும்.

 

சங்கீதம் வைதிகைர் வாக்பிர் போகிதம் ப்ராஹ்மணாஸ்ஸதா

க்ருத்வைஹிகம் ததாமோக்ஷம் ப்ராப்நுவந்தித்வராந்விதாம்

 

இவ்விதம் வேத வசனங்களால் அறியப்பட்ட சங்கீதத்தைப் பிராமணர்கள் காநஞ்செய்து ஐஹிக சுகத்தையும் மோக்ஷத்தையு மடைகிறார்கள்.


 அக்னிஹோத்ரம் யதாகார்யம் காநம்கார்யம் ததைவஹி
 வேதோக்தத்வாத் ஸம்ருதி ப்ரோக்தம் கர்த்தவ்யத்வாந்மநீஷிபி:

 

வேதத்தில் சொல்லப்பட்டதால் வேதத்தை யனுஸரித்த ஸ்மிருதியாலும் சொல்லப்பட்டது, புத்திமான்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆகையால் அக்கினி ஹோத்திரம் எவ்விதம் அவசியம் செய்யத் தகுந்ததோ அது போல் காநமும் அனுஷ்டிக்கத்தக்கது.


''கீதேநப்ரீயதே தேவ: ஸர்வக்ஞ: பார்வதீபதி:
 கோபீபதிர நந்தோபி, வம்சத்வ நிவசம்கத:
 ஸாம கீதிரதோ ப்ரஹ்மா, வீணாஸதா ஸரஸ்வதீ:
 கிமந்யேயக்ஷகந்தர்வ தேவதாநவமாநவா:
 அக்ஞாத விஷயாஸ்வாதோ பால: பர்யங்கிகாகத்:
 ருதன் கீதாம்ருதம் பீத்வா ஹர்ஷோத் கர்ஷம் ப்ரபத்யதே
 வநேசரஸ்த்ருணாஹாரஸ்சித்ரம் ம்ருகசிசு: பசு:
 லுப்தோலுப் தகஸங்கீதே கீதேத்யஜதி ஜீவிதம்''    
      - சங்கீத ரத்னாகரம்.

 

காநத்தினால் சர்வக்ஞனான பார்வதீ பதியானவர் திருப்தியடைகிறார். கோபீபதியான நாராயணனும் வேணுகாநத்தில் பிரிய முள்ளவர். பிரம்மா ஸாமகாநத்தில் பிரிய முள்ளவர். சரஸ்வதி வீணையில் ஆசை யுள்ளவள். இவர்களே காநத்தில் இவ்விதம் ஈடுபட்டிருக்கும் பொழுது யக்ஷ, கந்தர்வ, தேவ, தாநவ, மனிதர்கள் விஷயத்தில் கேட்கவேண்டுமோ? எல்லோரும் காநத்துக்கு வசப்பட்டவர்களே. விஷயத்தை யறியாத தொட்டிலில் படுத்துக் கொண்டு அழுகிற சிசுவும் காநத்தைக் கேட்டு அழுகையை நிறுத்தித் திருப்தியை அடைகிறது. வநத்தில் சஞ்சரிக்கிற புல்லை யருந்துகிற மான்குட்டியும் வேடனுடைய சங்கீதத்தில் உயிரையும் விடுகிறது. ஆகையால் '' சிசுர்வேத்தி பசுர்வேத்தி வேத்திகா நரஸம் பணி:” சிசுவும் பசுவும் - சர்ப்பமும் காநரஸத்தை அறிகிறது என்று புகழப்பட்டிருப்பதால் சங்கீதம் வைதிகமா யிருப்பதோடு பிரபஞ்சத்தின் சிருஷ்டியி லடங்கிய ஆத்மகோடிகளுக் கெல்லாம் ஆனந்தத்தைத் தருவதில் நிகரற்றது.


 வேதேததை வஸம்ப்ரோக்தம் கீயதாம்ப்ராம்மணாவிதி
 க்வணயந்தாவு பெளவீணாம் அச்வமேதேதி சுக்ஷரம்


அச்வமேதப் பிரகரணத்தில், ப்ராம்ஹணெள வீணாகாயிநௌ காயதோப்ராம்ஹணோந் யோகாயேத். பிராம்மணர்கள் காநஞ் செய்யட்டுமென்று சுருதியிலேயே சொல்லியிருப்பதால் கீதம் அவசியமென்று தெளிவாகிறது.


 சிவவிஷ்ணவாதி நாமாநி சுஸ்வரைந்விதா நிசேத்
 பவந்திஸாமதுல்யாநி கீர்த்திதாநிமநீஷிபி:

 

நல்ல கானத்துடன் கூடின சிவ விஷ்ணுவாதி நாமாக்கள் ஸாமகானத்துக்குச் சமானமானது என்று புத்திமான்கள் சொல்லியிருப்பதால் இச்சையுடன் ஈசுவராதி நாமாக்களை உச்சரிப்பது நலம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ -

அக்டோபர், டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment