Monday, August 31, 2020

 

சில அனுபவ விநோதங்கள்

[எரும்பூர் - குருஸாமி ஐயர்.]


(1) செலவும் சிக்கனமும்

வரவும் செலவும் ஒன்றையொன்று தழுவியதாக இருக்கவேண்டும். செலவுக்குத் தக்க வரவைத் தேடவேண்டும். ஆனால், வரவு இருந்தால் செலவு தானே தேடி வந்து விடும். எந்த மனிதனும் சம்பாதிப்பதும் செலவு செய்வதுமாகத் தானிருக்கிறான். எனவே, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், வாழ்க்கையில் முக்கிய வேலையா யிருக்கிறதெனலாம். 'திரைகடலோடியும் திரவியம் தேடு', என்று சொல்லப்பட் டிருக்கிறது. அதன்படி அவரவரும் தன் தன் சக்திக் குகந்தவாறு சம்பாதிக்கிறார்கள். ஆனால் செலவு மட்டும் சக்திக்கு மீறிவிடுகிறது. இவ்வாறு அளவு கடந்து செலவு செய்யக் கூடாதென்பதற்குத்தான் ‘சிக்கனம்' என்று பெயர். முதலில் வரவு, பின்னர் அதில் செலவு, அந்த செலவையும் சிக்கனமாகச் செய்தல், இவைதான் ஒவ்வொருவரும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும்.

வரவைவிட செலவு அதிகமானால், கடவுள் நம்மை பணக்காரனாக்க வேண்டுமென்று வேண்டுகிறோம், அல்லது, கடவுள் கஷ்டப்பட வைப்பதற்கு திட்டுகிறோம், அல்லது, சிசேகிதர்களிடமோ, பணக்காரர்களிடமோ சென்று கடன் கேட்கிறோம், கெஞ்சுகிறோம், முதலில் யாராவது கடன் கொடுத்து விடுகிறார்கள். ஆதலால் இதே உபாயம் (தைரியம்) ஒவ்வொரு சமயமும் கையாளப்பட வேண்டியதாகிறதே யொழிய வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடிவதில்லை. இப்படியே சில நாட்கள் செல்லு
இதற்குப் பிறகு கடன் கொடுப்பார் கூட எவரும் கிடைப்பதில்லை. 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் லங்கை வேந்தன்' என்றபடி, எப்பேர்ப்பட்ட திடமன தானாலும் கடன் சுமையால் வாதிக்கப்பட்டு, உடல்மெலிர்து, மனம் தளர்ந்து, கஷ்டப்படுகிறோம். இதைவிட்டு, எப்படி முன்னுக்கு வருவதென்று யோசித்து,
(Family budget) குடும்ப வரவு செலவை திருத்திக் கொள்வதில்லை. மேலும், மேலும், அதே செலவுகளையே தொடர்ந்தும், அதிகமாகவும் செய்கிறோம். 'ஆன முதலில் அதிகம் செலவானால் ........", என்ற செய்யுளை மனதில் வைத்து நடத்தல்வேண்டும்.

(2) தனயனுக்கு தந்தை தாத்தா உறவா?

பால்யத்தில் விவாஹமாகிறது. பால்யத்திலேயே குழந்தைப் பேறும் உண்டாகி விடுகிறது. கடைசியில் கடவுள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டாரா? என்று வரம் கேட்கும் நிலைமைக்கும், ஆளாகி விடுகிறார்கள். பால்ய விவாஹம், சமூகத்தின் சட்டம், சம்பிரதாயம், எனப்படுகிறது, கடவுளை முற்றுப்புள்ளி வரம் கேட்பது, குழந்தைகளை வைத்து சமாளிக்க முடியாததால் ஏற்படும் கஷ்டங்களின் தன்மையை விளக்குகிறது அல்லவா? பின்னர், சம்பிரதாயத்திற்கு இடம் கொடுப்பதை விட்டு, சௌகரியத்திற்கு
என் இடம் கொடுக்கலாகாது? அதுதான் குருட்டு நம்பிக்கை (குருட்டுப் பாதையை விட்டுவிட மனமில்லாமை, என்பது. வீட்டிலுள்ள கிழங்களுக்கு ஆணும், பெண்ணும் பிறந்ததென்றால் அவைகளுக்கு கலியாணமால் வேண்டுமென்று பிரார்த்தனை. கலியாணமாகி விட்டால் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை. குழந்தைகளும் அதிகமாகி, தம்பதிகளும் உடல் பலங்கெட்டு கஷ்டப்பட்டால், “ஐயோ, இந்தக் குழந்தைகள் இல்லையென்று யார் தவம் செய்தார்கள்'', என்ற முணுமுணுப்பு. இவ்வாறு பால்ய விவாஹத்தினால் பிரத்தியடி பலன்களை அனுபவித்தாலும், தங்கள் பல்லவியாகிய, "கன்னி கழியவேண்டும். குஞ்சு பிறக்கவேண்டும். இந்த இரண்டையும் பார்த்து வீட்டுச் சாகவேண்டும்'', என்பதை மட்டும் மறந்துவிட மாட்டார்கள்,

ஒருவன் தன் முப்பது வயதிற்குள்ளேயே மருமகளை சம்பாதித்துவிடுகிறான். அவனைப் போலவே அவன் பிள்ளையும் எல்லா விஷயங்களிலும் முந்திக் கொள்கிறான். இதற்குள் தலைவனுக்கு ஒரு டஜன் குழந்தைகளாகி விடும். மற்றும், பெண்ணிற்கும், அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் விவாஹம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படியாக சுபா சுபங்கள் ஒரு குடும்பத்தில் நடந்துகொண்டிருக்க இவைகளை ஒரு இளம் பிராயமுள்ள தலைவன் தலை நிமிர்ந்து சமாளிக்க வேண்டி யிருக்கிறது. மேலும், ஒரே சமயத்தில் சற்றுமுன் பின்னாக, மனைவி, மகள், மருமகள் ஆக மூவரும் பிரஸவத்திற்கு தயாராயிருப்பார்கள். இதனிடையே மீதமுள்ள குழந்தைகளுக்கு விவாஹப் பேச்சு நடந்து கொண்டிருக்கும். இத்துடன் குடும்பத் தலைவனுக்கு ஷஷ்டி யப்தபூர்த்தி வந்து சேரும். சில சமயங்களில் முதல் மனைவி இறந்து மறு விவாஹம் செய்துகொள்ள வேண்டி வந்தால் குழந்தைப் பேறுக்கு குடும்பத் தலைவன் அசல் கிழமாகும் வரை முற்றுப் புள்ளியே இராதெனலாம். இத்தியாதி கஷ்டங்களால் குடும்பம் கஷ்டப்படும் போது, குழந்தைகளின் ஷேமத்தை குடும்பத் தலைவன் கருதுவது துர்லபம் தான். பெண் குழந்தைகளானால் மூன்றாம் தாரமாகவும், நாலாந் தாரமாகவும், கொடுக்க இசைந்து பணம் பெறுவதில்தான் காட்டம் கொள்ளும். குழந்தைகளானால் காபி ஹோட்டல்களிலும், மளிகைக் கடைகளிலுமாக வேலை செய்ய விடுவதைத் தவிற வேறு வழியில்லை.

மூன்றாந்தாரமாகவும், நாலாந்தாரமாகவும் கொடுத்த இடங்களில் மாப் பிள்ளைகளுக்கு ஷஷ்டி யப்த பூர்த்தி, தனக்கு வரு முன்னரே வருவதும் உண்டு. இப்படியாக ஒரு வீட்டில் பல தம்பதிகள். பல தம்பதிகளும் தலைக்கொரு மூலையை ஆக்ரமித்துக்கொண்டு உறவாடுவதும், குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு கூச்சலிடுவதும் ஒரு அழகு தான். ஆனால், ஒரேசமயத்தில், வீட்டிலுள்ள பெரியோர் முதல் சிறியோர் வரை முன் பின்னாக ஒருவர் வீதமும் குறைவுபடாத வகையில் கருப்பமுற்றிருப்பதுதான் வெறுக்கத்தக்க விஷயம்.
குடும்பத்தலைவன், தனது குழந்தைகளை கிரஹஸ்தாஸ்ரமத்திற்கு கொண்டு வரும் போதே அவன் தான் சிற்றின்ப சுசங்கனை மறந்துவிட வழக்கப் படுத்திக்கொண்டிருக்கவேண்டும். இந்தக் கஷ்டங்களுக்கு பால்ய விவாஹமே அஸ்திவாரம், அல்லவா!

மற்றொரு அசம்பாவிதம் குடும்பத்தலைவனை அவன் பேரன் 'தாத்தா' என்கிறான். அதைக் கண்டு, அவன் முதல் தாரக் கடைசிக் குழந்தையோ, அல்லது இரண்டாந்தாரக் குழந்தையோ அதே வயதுடையதால், தகப்பனை 'தாத்தா' என்கிறது, வாஸ்தவத்தில் அவன் தாத்தாதான்; (பேரன் பிறந்துவிட்டதால்), ஆனால் அவன் தன்னை தாத்தாவாக நினைத்து தன் செய்கைக்கு முற்றுப்புள்ளி இட்டால்தானே, அவ்வாறு தன்னை கூப்பிடும்
சப்தம் கேட்டாவது வெட்கப்பட்டு தங்களைத் திருத்திக் கொள்பவர்களே புத்திசாலிக ளாவார்களென வேண்டும்.

(3) "செயற்கைப் பழக்கங்களும், அதனால் ஏற்படும் செலவுகளும்"

இயற்கையை அனுபவிப்பது ஓர் ஆனந்தம். அதுவே நமக்கு இன்றி யமையாததுமாகும். இவைகளையெல்லாம் கடந்து சிலர் செயற்கைப் பழக்கங்கள் சில கொண்டு அதை ஆனந்தமாகவும், உயிர் வாழ்க்கைக்கு மிகவும்
அத்தியாவசியமாகவும் எண்ணி அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக, புகையிலை போட்டுக்கொள்ளும் வழக்கமுடையோனை எடுத்துக்கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் பல் துலக்காமல் ஒரு தடவை, காலை ஆகாரமானவுடனே ஒரு தடவை, மற்றும் மத்தியான போஜனத்திற்குமுன் 3, 4, தடவைகள், போஜனமானவுடன் ஒரு தடவை, பின்னர் இரவு சாப்பாட்டிற்கு முன் பல தடவைகள், சாப்பாட்டிற்குப் பின், நடு இராத்திரியில் கண் விழிக்கும் ஒவ்வொரு சமயமும் இப்படியாக அநேக தடவைகள், கணக்கிற்குக் கொண்டு வர முடியாத முறைகள், போடுவதும், துப்புவதுமாகக் காலங் கழிக்கிறார்கள். இதை மதிப்பிடுவோமானால், அவரவர் தினசரி ஆகார செலவிற்கு சரியாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. நமது தேசத்தில் ஒவ்வொருவரும் வயிறார உண்பதே கடினமாயிருக்கும் சமயத்தில் வீணாக உடல் நலங்கெட செலவு செய்யும் மடமைக்கு அனுதாபப்படுவதைத் தவிற வேறென்ன செய்யக்கூடும்.

இப் பழக்கத்தால் பற்களில் அழியாத காவி நிறம், கன்னங்களில் குழி, சாதாரண சமயத்திலும் நன்றாக உச்சரித்துப் பேச முடியாமை, தேவையான ஆகாரம் குறைவு படுதல் முதலிய கெடுதல்கள் உண்டாகின்றன. மற்றும், இவர்கள் சதா வாய் நிறைய புகையிலைச் சாருடன் இருப்பதால் முகவசிகரம், அழகு, இவைகள் வேறுபடுகின்றன. மேலும், வாய் திறந்து பேச முடியாமல் பேசவரும் அன்பர்களிடம் ஊமை ஜாடை காட்டியும், வாயைத் துக்கிக்கொண்டு சாறு வழிந்து விடா வண்ணமும், நாக்கு படாமலும், அறைகுறையாக வாய் திறந்து 'ழகார' சப்தத்தோடும், ஸ்வதாவான குரலில்லாமலும் பேசுகிறார்கள்.

இதுபோலவேதான் குடிகாரர்கள் நிலைமையும். ஏழை முதல் பணக்காரர் வரை சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து குடிக்கிறார்கள். புத்தி தடுமாட்டமடைகிறது. பல அநீதிகளுக்கும், கொலை களவுகளுக்கும் துணிச்சல் கொடுக்கிறது. கடைசியில் உடல் நலங் கெடுத்துக்கொண்டும், மாங்ன கெட்டும் வருந்துகிறார்கள். குடியில் காபிக் குடியும் சேரும். அதுவும் பலவிதமான நீர் சம்பந்தமான வியாதிகளைக் கொடுத்து, வயதான காலத்தில் உடல் நலனைக் கெடுத்து கஷ்டப்படச் செய்கிறது. இது சிறுகச் சிறுக உடலில் வேரூன்றுவதால், ஜனங்களுக்கு இதன் தீமை தெரியவில்லை யெனலாம். இக் குடி நாகரீகமாகவும், பகிரங்கமாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. குடித்தால் சுறுசுறுப்பு. இல்லையேல் தலைவலி, மயக்கம், இது ஒரு வழக்கம். எவ்வளவு ஏழைக் குடும்பமானாறும், தினசரி வாழ்க்கையிலும், சுபா அசுப காரியங்களிலும், காபி ஆகாரமில்லாது காரியம் நடத்துவதில்லை. இது ஓர் சம்பிரதாயமாகிவிட்டது. மற்றும், பரஸ்பர உபசார விஷயத்திலும், ‘காபி சாப்பிட்டுப் போங்கள்' என்று சொல்வது நாகரீகத்தின் சிகரமாக இருக்கிறது. இயற்கையான பசும்பால் சாப்பிடுவதற்கும், அதை (செயற்கைக்) கஷாயமாக்கிச் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது. அது ஓர் பெருமை, அவ்வளவுதான்.

இவர்க ளெல்லாம் தேவலாமென்றாகிறது புகைக் குடிக்காரர்களை நினைத்துக்கொண்டால். இந்தப் பழக்கமும் ஏழை முதல், பணக்காரன் வரை அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் பீடி மைனர்களே அதிகம் துன்பம் விளைவிப்பவர்கள். எந்தக் கூட்டமானாறும், ரயில் பிரயாணமானாலும், ஹோட்டலானாலும், தெருக்களானாலும், எந்த இடமானாலும் இவர்கள் வாயில் புகை கிளம்புவது தடைப்படாது. இதற்கு ஒரு மறைவிடம் என்பதே கிடையாது, பலர் பார்க்கக் குடிப்பதே நாகரீகமென்றும், பெருமையென்றும் கருதுகிறார்கள். இதனால் பக்கத்திலுள்ளவர் அசூயைப்பட்டாலும்,
கஷ்டப்பட்டாலும், ரயில் பிரயாணங்களில் எதிர் பெஞ்சியில் ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தாலும், அவர்களுடைய புகை மண்டல சிருஷ்டி நிற்காது.
பிறர் சௌகரியம் இவர்களுக்குப் பெரிதல்ல. இந்தச் செய்கை குடிக்காதவனைப் பார்த்து பரிகாசம் செய்வது போலக் காண்கிறது. இவ் வழக்கம் வேரூன்றிவிடுமானால், இயற்கையாக மலம் கழிவது நின்று, செயற்கை முறைக்கு இந்த புகைக் குடியின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதுதான். இடுப்பிலிருந்து நெருப்புப் பெட்டி எடுப்பதும் காதிலிருந்து பீடி எடுப்பதும், அதை வாயில் வைத்துக்கொண்டு கொளுத்திக் கொள்வதும், அப்போது முகத்தை சுளித்துக் கொள்வதும், பிறகு முகத்தை பலவித கோணல்கள் செய்தவண்ணம் புகைவிடுவதும், நாகரீகமென்றும், உடல் நலனுக்கென்றும் கருதுகிறார்கள், இந்த மடமையை என்னென்று சொல்வது? இதில் கஞ்சா குடிக்காரர்கள், கஞ்சா லேகியம் தின்பவர்களையும் சேர்க்கலாம்.

இந்தகுடிப் பைத்தியம் கிடக்கட்டும். பொடிப் பைத்தியத்தைப் பாருங்சன். இந்தப் பழக்கம், ஜாதி வித்தியாச யில்லாமலும், தனக்குத் தாழ்ந்தவரானாலும், வியாதியஸ்தரானாலும், கருதாது சமயம் கேரின் யாசிக்கச் செய்துவிடும். மேலும் பொடி போடும்போது காணும் அங்க சேஷ்டைகன், முகக் கோணல், இவைகளும், பொடி போட்டுக்கொண்ட பின் மூக்கொழுகும் விசித்திரமும், அதைத் துடைத்தும் துடைக்காமலிருப்பதும், வாயிருக்க மூக்கால் பேசுவதுபோல் த்வனி மாறிப் பேசுவதும், செயற்கைப் பழக்கத்தால் நிகழ்வனவல்லவா?

எந்த வியாபாரம் குறைவுபட்டாலும், லாகிரி வஸ்துக்களின் வியாபாராம் மட்டும் குறைவுபடாது. லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பவர்களுக்கு அதன் தீமை தெரியாமலில்லை. தெரிந்து என்ன செய்ய? விடமுடியாமை காரணம். ஆனால் சிலர் அதைப் பெருமையாக நினைத்து, தீவிர பிரசாரம் செய்யவும், தனக்குப் பிற்கால வார்சுகளைத் தயார் செய்யவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

இயற்கை யழகும், குணமும் கெட இவர்களிடையே காணும் சேஷ்டைகளை (Photo) படம் பிடித்தால் அவை (Darvin) டார்வின் கொள்கைகளுக்கு ஏன் ஆதாரமாகமாட்டா? ஆகவே, பழக்கம் செய்து கொண்டவர்கள் போக இனி வரும் பாலர்களாவது இப் பழக்கத்தை யணுகாமலிருக்தால் நாட்டின் வருங்கால பிரஜைகள் க்ஷேமமாகவும், நல்ல புத்தியுள்ளவர்களாகவும், திடகாத்திரமுள்ளவர்களாகவும் இருக்க மார்க்கமுண்டு.

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி, மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment