Monday, August 31, 2020

 சிறுவரும் தேச சரித்திரமும்

 

சிறுவர்க்குப் பிற்கால வாழ்வுக்கு இன்றியமையாதனவாகிய ஊக்கம் விடாமுயற்சி, தேசபக்தி முதலியவற்றை விளைவிக்கக் கூடியது தேச சரித்திர அறிவேயாகும். தான் கற்ற விஷயங்களைக் கூடியமட்டும் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வர அவாக் கொள்வது சிறுவர் இயற்கை. தாம் கண்டு கேட்டு வியப்புறும் அருங்குணத்தினரான பெரியாரின் நடையுடை பாவனைகளைப் பின் பற்றவே அவர் பெரும்பாலும் விரும்புவர். உலகத்ல் உன்னத பதவிக்கு வந்துளோர் அநேகர் இளமையில் தம் தந்தை தாயிடம் கற்ற பண்டைப் பெரியாரின் வீரக்கதைகளே காரணமாய் மனவெழுச்சியடைந்துளார். சிவாஜி ராஜன் இளன மயில் தம் தாயின் மடிமீதமர்ந்து அன்னவர் செப்பிய ராமாயண முதலிய கதைகளைக் கேட்டு, மிக வீரம் பெருகி இந்து மதத்தைக்காக்க ஓர் ஊக்கமும், தம்மால் இயலாதது என்று உலகில் ஒன்று இலது என்று எண்ணும் திண்ணமும் பெற்று பிற்காலத்தில் திறமை பெற்ற சேனை மன்னரையும் கலக்கமுறச் செய்தார். வீரனான நெப்போலியன் தன் திரண்ட படையோடு ஆல்ப்ஸ் மலையைக் கடக்க நேர்ந்த போது, படை வீரர், அதன் முன் பலர் முயன்றும் அவ்வுன்னத் மலையைக் கடந்து சென்றவர் இவர் ஆதலின் இம்முயற்சி வீண் முயற்சியே எநவில, அஞ்சா நெஞ்சுடைய நெப்போலியன் செப்பியதாவது “Impossible! It is a word found only in the Dictionary of cowards; On with your men now என்று ஊக்கமளித்து நினைத்த கோரிககையை ஈடேற்றிய திண்மையை அவர் அடைந்தது எங்ஙனம்? ஒவ் வீரனையும் போரில் வென்ற நெல்சன் பிரபு, இளவயதில் "Fear! What is it? Is there any such thing in the world?" என்று வினவியதும் உண்டென்றால் இத் துணிடக்கு இன்னவர் இளமையில் வளர்க்கப்பட்ட வளர்ப்பன்றே காரணம். ஆதலின் சிறுவர்க்குப் போதிய அளவு சரித்திர அறிவு போதிப்பதி பெற்றார் கடமையாகும். மாதர் கல்வி கற்றலின் அவசியமும் ஈண்டுணர்தல் தகும்.

 

ஆனால் தற்காலத்திலோ தாய் தந்தையர் தம் குழந்தைகளுக்கு ஒழிவு நேரங்களில் வார்த்தையாடுவது இரண்டு கண்ணன் கதைகளும் பூனைக் கதைகளுமே. இதுவும் எதற்காகச் சொல்லுகிறார்க ளென்றால் (முரண்டு செய்யும் போது அவர்களைப் பயமுறுத தலேயாம். இரண்டு மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள வாலிப தம்பதிகள் நவீன நாகரீகப் பழக்கத்தால் உடலில் சக்தியற் றிருப்பதாலும் ''இடமில்லாத இடத்திற்கென் கணவனைப் பெற்றவளும் வந்தாளாம் ''The mother - in - law isa regular nuisance” என்று சிறமிகள் சொல்வது போல் பெரியோர்களை அணுக வொட்டாத படிக்கும் செய்து கொள்வதாலும் இக் குழந்தைகளைத் தக்க வழிகளில் சமாதானப் படுத்த வியலாது இம்மாதிரி பயமுறுத்துகிறார்கள். அந்தோ! இச் சிறுவர்கள் பிற்காலத்தில் பயங்காளிகளாகவும் சோம்பேறிகளாகவும் ஜன சமூகத்தில் கலந்து கொள்ள விருப்ப மற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். இத் துறைகளில் இந்திய நாடு பன்னாட்டாராலும் ஏளனம் செய்யப்பட்டு வருவது யாவரு மறிந்த விஷயம்.

 

இனிப் பள்ளிக் கூடங்களில் தேசசரித்திரம் கற்றுக் கொடுக்கப்படுகிறதே அது போதாதோ என்று கேட்கலாம். ஆங்குள்ள - பிரசுரமாகி யிருக்கும் பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் தேச பக்தியை ஊட்டும் சாதகங்களில் ஓர் சிறிதும் காணப்படவில்லை. மன்னர்களின் பெயர்களும் வம்சாவளியும் அவர்கள் ஆண்ட வருஷங்களுமே அங்கே காணப்படுகின்றன. ஓர் பன்ளிக் கூடத்துப் பரீஷைக் கேள்விகளில் பின்வரும் கேள்விகள் காண்கின்றன –

 

3 a. 1814 டில்லியில் எந்த பரம்பரை ஆண்டு வந்தது. அந்த அரசன்
 பேயரென்ன?
b.
அக்பர் எது முதல் எதுவரை அரசாண்டார்? அவர் செய்த நன்மை
 களெனை?
c.
துக்ளக் அரசனின் மூடத்தனமான செய்கைகளென்ன? மேற் சொன்ன கேள்விகளுக்குத் தயாராகும் மாணவர்க்கு அக் கல்வி எத்துணைப் பலனளிக்கும் என்பதை நேயர்களே ஊகித்தறிந்து கொள்ளலாம்.

 

இந்திய சரித்திரத்திற்கு இவற்றைத் தவிர விஷயங்களில்லாமலா போயிற்று! வீரர்கள் செறிந்து விளங்கிய நாடு அன்றோ நம் பாரத நாடு. '' செயற்கரிய செய்வர் பெரியர் " என்றபடி ஆங்காங்கு கண்டோர் வியக்கும் படிக்கான அதிசயச் செயல்களைச் செய்து காட்டிய உத்தம மதக் குரவர்களென்ன, தந்தை தாயர் ஏனைய ஐங்குரவர்களிடம் நன்னடக்கையாக நடந்து அன்னவரிடம் கல்வி கற்று வீரம் செறிந்து என்றும் மறையாத புகமுடம்பு வளர்த்த பூபாலர்களென்ன, வைத்திய சாஸ்திரத்தில் கபாலசல்யம், ஸம் மோகினிப் பிரயோகம் முதலிய தற்கால நூதனமே நாட்டுப் புதுமையெனப் புகன்று வரும் அரிய துறைகளில் பண்டையில் மேன்மையுடன் உழைத்த பண்டிதர்களென்ன. கலகமும் விரோதமும் உயிர்பயமும் மேலோங்கியிருந்த மத்திய காலத்தில் நாட்டையும் தம்மிடம் அடைக்கலம் ஒப்புவிக்கப் பட்ட யுவராஜாக்களையும் சமயோசித புத்தியோடும் தீரத்தோடும் பின் வாங்காது பாது காத்துதவிய மாது சிரோன்மணிகளென்ன, இன்னும் இத்தகையாரின் ஜீவியங்களும் அவரது அரிய செய்கைகளும் விரிந்து தோன்றும் புத்தகங்க ளன்றோ நமது நாட்டுக்கு உத்தம உதவி செய்யக் கூடியதாக உள்ளன.

 

அல்லாவுதீன் உக்கிராணத்தில் கவர்ந்து மரைத் திருந்த செல்லப்பிள்ளையார் என்ற ஹிந்து ஆலய விக்ரகத்தைப் பெற வந்து அந்த முகம்மதிய மன்னன் திகைக்கும்படி அவ்விக்ரகத்தைப் பேரிட்டழைத்துத் தம்மிடம் நடந்துவரச் செய்த ஸ்ரீமது இராமாநுஜாசாரியாரும் சரித்திரம் இடந்தராத சாமான்யரோ! நீதி நெறி விளக்கம் முதலிய அரிய நூல்களியற்றிய குமரகுருபரர் புலியிவர்ந்து காசி செல்வதாகக் கேள்வியுற்ற அக்பர் சக்கரவர்த்தியால் விருந்து உபசரிக்கப்பட்டு மாமிச உணவைத் தீங்கனியாக மாற்றிய விந்தையும் சரித்திர புத்தகத்தி லுளதோ.

 

ஆதலின் மாணவர்க்கு மன உற்சாகத்தையும் நாமும் பிற்கால வாழ்வில் நாட்டுக்கு நன்மை செய்யும் ஆற்றலை அடைவோம் என்னும் நம்பிக்கையையும் செய்விக்கக் கூடிய மேற் சொன்ன விஷயங்களடங்கிய புத்தகங்கள் நிறுவும்படி செய்வதும் பெற்றோரும் ஆசிரியர்களும் ளஞ்சிறார் மனம் வளம் பெரும்வகை போதித்து வருவராயின் நம் நாடு கூடிய சீக்கிரம் ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டியாகும் என்பதில் ஐயமின்று. இறைவன் அருள் புரிவாராக.  

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment