Sunday, August 30, 2020

 கனவின் பலன்

CHAPTER V.

1 அக்கினியைக் கனவில் பார்ப்பது நல்லது.

 

2 அடிக்கடி அக்கினியைக் கனவிற் பார்ப்பவர்கள் அதிக கோப முடையவர்களாக யிருப்பார்கள்.

 

3 (a) வியாதியஸ்தர் புகையில்லாத அக்கினி எரிவதைக்கண்டால் சீக்கி ரம் வியாதியிலிருந்து சொஸ்தமாவார்கள்.

 

(b) அதை மற்றவர்கள் கண்டால் தனலாபம்.

 

4 நோயாளி கரி, சாம்பல், சுண்ணாம்பு, இவைகளைக் கண்டால் நோய் நீங்கும்.

 

5 மாடியிலிருந்தோ மலையுச்சியிலிருந்தோ அதிக தூரத்திலுள்ள ஊர்களில் பிரகாசமாக விளக்குகள் எரிவதைக் கண்டால் தன் ஆயுட்காலம் பூராவும் கஷ்டமே யிராது.

 

6 தீவட்டி, பிரகாசமாக எரியும் விளக்கு - இவைகளைப் பார்த்தால் காரியசித்தி, சந்தானப்பிராப்தி, பொருள் லாபம் விவாஹப்பிராப்தி, நல்ல பெயர்- இவை கிடைக்கும்.

 

7 தீவட்டி, விளக்கு தன் கையிலிருப்பதாகக் கண்டால் எல்லா ஆபத்தும் நீங்கும், புகழும் கிடைக்கும்.


8 வேறொருவர் தனக்காக விளக்குப் பிடிப்பதைப் பார்த்தால் தன்விரோதிகள் நாசம்.


9 தீவட்டி, தீப மிவைகளைத் தான் கொளுத்தினால் நற்சந்தானவிருத்தி - குடும்பவிருத்தி.

 
10 ஒரு கூட்டத்தின் நடுவில் தான் விளக்கு, தீவட்டி இவைகளைக்கொண்டு போவதாகக் கனவு கண்டால் நல்லபெயர் கிடைக்கும்.

 

11 வீடு எரியும் பொழுது புகையில்லாமல் பிரகாசமாக எரிவதாகக்கண்டால் விசேஷ லாபம். ராஜசன்மானம்.

 

12 சாவடி, கச்சேரி, பந்தல், தூண்கள் புகையில்லாமல் எரிவதைப்பார்த்தால் யசஸ்.

 

13 தான் படுக்கிற மெத்தை புகையில்லாமல் எரிகிறதை மாத்திரம்பார்ப்பதால் பாராட்டுதல் கிடைக்கும்.


14 தானியக் குவியல் எரிவதாக மாத்திரம் பார்த்தால் நல்ல விளைவு.


15 புகையுடன் கூடிய அக்கினியைப் பார்ப்பது மிகவும் கெடுதி. விரோதிகள், வியாகூலமான சமாசாரம் பலனாகும்.


16 சோதி மங்கின விளக்கு தீவட்டி இவை ரோக ஹேது.


17 தான் விளக்குக் கொளுத்தும்போது அணைந்ததாகக் கண்டால்அதிககஷ்டம், புத்திரசோகம்.


18 புகையோடு வீடு எரிவது விநாசகாலம்.

 

19 புகையோடு சமயல்வீடு எரிவது சமைப்பவளுக்கு நோய்.

 

20 கூரை புகையோடு எரிந்தால் கள்ளர்களால் நஷ்டம்.

 

21 வீட்டில் வாசல், ஜன்னல் எரிந்தால் வீட்டிலுள்ளவர்களுக்குக்கெடுதி; அல்லது கண்டவனுக்கு கெடுதி.

 

22.வீட்டின் பின்பாகம் எரிவதாகக் கண்டால் வீட்டிலுள்ள முக்கிய ஸ்திரீக்குக் கெடுதல்.

 
23 தூண்கள் புகையோடு எரிந்தால் பிள்ளைகளால் பூராச் சொத்தும்தொலையும்.


24 தன் பந்துக்கள், சினேகிதர்கள் ஆடை தீப்பட்டதாகப் பார்த்தால் அவர்களுக்குக் கெடுதி.


25 தன் உடம்பு எரிவதாகக் காண்பது ரோகம், மனோ வியாகூலம், சத்துருக்கள் அதிகம் ஏற்படும்.


26 கை, கால் விரல்கள் எரிவதாகக் காண்பது தான் முயற்சிக்கும்வேலை கிடைக்காது.


27 உளரெல்லாம் எரிவது பஞ்சம், தொத்து வியாதி.

 

CHAPTER VI.

 

1.கடலைக் கடப்பது மதிப்பான உத்தியோகம்.

 

2 கப்பல் ஏறினால் தூரதேச யாத்திரை.

 

3 தெளிவான நீருள்ள குளம் ஆறு முதலியவை காரியசித்தி, சரீரசௌக்கியம்.

4 ஜலத்தை கொப்பளித்து உமிழ்ந்தால் ஆபத்து, நோய் இவைநீங்கும்.

 

5 தலை மேலாகவைத்து நீந்துவது காரியசித்தி.

 

6 ஜலம் நிறைந்த குளத்தின் நடு மண்டபத்தில் தாமரையிலையில்தயிர் அன்னம் சாப்பிட்டால் ராஜ்யலாபம்.

 

7 ஜலம் நிறைந்த அசையாத குளத்தைப் பார்ப்பது மிகவும் நலம்.

 

8 தண்ணீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பொருள்லாபம்.


9 ஜலத்தில் சந்தோஷமாக மிதந்துபோவதாகக் கண்டால் சுகஜீவனம்.

 

10 ஓடத்தில், அல்லது தெப்பத்தில், நிர்மலமான ஜலத்தில் போவதுஎவ்வித காரியமும் சித்தியாகும்.


11 நீரிலுள்ள பாசை கா காலைச் சுற்றினால் தனலாபம்.

 

12 தன் வீட்டுப் பக்கம் நதி ஓடுவதாகக் கண்டால் உத்தியோகமேன்மை.

 

13 பிரவாகம் வந்து வற்றினால் கஷ்டங்கள் நீங்கும்.

 

14 பயிருக்கு ஜலம் பாய்ச்சுவது தனலாபம்.

 

15 நிர்மலமான கிணற்றைப் பார்ப்பதும் தனலாபம்.

 

16 தான் ஜலம் எடுப்பதாகக் காண்பதும் தனலாபம், கல்யாணப்பிராப்தி, ஸ்திரீமூலம் தனலாபம்.

 

17 குளிர்ந்த நீர் குடிப்பது நல்லது.

 

18 குளிர்ந்த ஜலம் மற்றொருவருக்குக் கொடுப்பது சந்தான விருத்தி.

 

19 கடற்கரையில் அலைகள் தன்னைச் சூழ்ந்து கொண்டதாகக் காண்பது அதிகக் கஷ்டஹேது.

 

20 ஏரி, குளம் ஆறு இவைகளிலுள்ள நீர் அழுக்கானால் வியாதி, காரியஹானி.

 

20 (a) அதில் கால் கழுவிக்கொள்வது கஷ்டஹேது.

 

20 (b) அழுக்கு ஜலத்தைச் சாப்பிடுவது துக்கம், வியாபார நஷ்டம், காரியஹானி, சிறைச்சாலை வாசம், பிறருக்குத் தெரியாமல் ஒளிந்து நடக்கநேரிடும்.

21 ஜலத்தில் தலைகவிழ்ந்துகொண்டு தீந்துவதாகக் கண்டால் வியாபாரிகளுக்கு நஷ்டம், மற்றவர்களுக்கு இடையூறு. குடும்பத்தாருக்கு அபகீர்த்தி.

 

22 அழுக்கு நீரிலுள்ள குளத்தில் தெப்பத்தில் போவதாகக் கனவுகண்டால் அனேக நோய்கள் உண்டாகும். ஆபத்துகள் நேரிடும்.

 

23 மழை பொழிந்தாற்போலாவது வெள்ளம் வந்தாற்போலாவதுகனவு கண்டால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வியாதி, அல்லது கஷ்டம் அல்லது விசனம் உண்டாகும்.

 

24 கிணறு நிரம்பித் தண்ணீர் வழிந்து கீழே போவது பொருள் கஷ்டம், சினேகர்களிலோ பந்துக்களிலோ மரணம், தன் மனைவி அல்லது புருஷன் மாணம்.

 

25 அழுக்கு ஜலம் எடுப்பதாகக் கண்டால் தீராத கஷ்டம் உண்டாகும்.

 

26 அழுக்கு ஜலம் அன்னியர்களுக்கு கொடுத்தால் சேவகர் விருத்தி.

 

27 அழுக்கு ஜலத்தில் ஸநானம் செய்தால் நோய்.

 

28 வெந்நீர் ஸ்தானம் துக்கம். செய்தது தவறானால் செய்தபின் அதற்காக வருந்துதல் தவறாகும்.


29 ஸ்நானம் செய்ய என்று வஸ்திரத்தை அவிழ்த்து வைத்துவிட்டுபிறகு ஸ்நானம் செய்யாவிட்டால் மனக் கஷ்டம்.

 

30 சுடு ஜலம் அருந்தினால் கஷ்டம், அதிகச் சூடானால் அதிகக் கஷ்டம்.

 

31 தண்ணீர் குடிக்கும் பொழுது செம்பு தவறி விழுந்துவிட்டால்தன் ஆப்த சினேகிதர்களுக்கு வருத்தம் உண்டாகும்.

 

32 ஒழுகும் சாமானில் ஜலம் கொண்டு போவதாகக் கண்டால் ஆபத்துண்டாகும். நம்பியவர்கள் தன்னை மோசம் செய்வார்கள். சோரர்களால் நஷ்டம்.

 

33 ஜலத்தில் குப்பை கொட்டியதாகவோ, ஜலத்தினால் சுவர் முழுகிப் போனதாகவோ கனவு கண்டால் கஷ்டகாலம் நெருங்கியிருப்பதாக அறியவும்.

 

34 அப்போது தண்ணீர் குடிப்பதாகக் கண்டால் அதிகக் கஷ்டம்.

 

35 வீட்டில் அழுக்கு ஜலம் தெளித்தாற்போல் கண்டால் அனேககஷ்டங்கள் சம்பவிக்கும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment