Monday, August 31, 2020

 

சிலம்பொலி 

 

சிலம்பின் கதை யிசைத்த சேரர்பெருமான் செந்தமிழ் நாட்டிற் சிறந்து பற்றுடைய சவிஞராய்த் திகழ்ந்தார். தமிழ்மொழி வழங்கும் நாடு தெய்வ மணங்கமழும் திருநாடாகவே கவிஞர் உள்ளத்துள் மிளிர்வதாயிற்று. தமிழகத்தின் வடபாலுந் தென்பாலும் பெருந்தெய்வங்கள் நின்று காவல்புரியும் பெற்றியை நினைந்து கவிஞர் களிகூர்ந்தார். தொல்காப்பியமென்னும் பழந்தமிழ் இலக்கண மெழுந்த காலத்து வடவேங்கடமுக் தென்குமரியும் தமிழகத்தின் எல்லையாய் அமைந்து விளங்கிய தன்மையை அறிவிக்கப் போந்த பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப்புலவர்,


'வடவேங்கடந் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம்"


என்று எல்லை குறித்தமுறை தொல்காப்பியப் பாயிரத்திற் காணப்படும். வடமொழிக்கும் தென்மெழிக்கும் வரம்பாய் அமைந்த வேங்கடமலையை எல்லையாகவும், குமரித் துறையைத் தென்னெல்லையாகவும் கொண்டு திகழ்ந்த தமிழகத்தின் பரப்பும் சிறப்பும் பனம்பாரனார் மொழிகளால் பண்புறவிளங்கக் காணலாம். சிலம்பின் கதையால், சீரிய உண்மைகளை உணர்த்தப் போந்த செஞ்சொற் கவிஞராய இளங்கோவடிகள் தமிழகத்தின் எல்லை குறிக்க நேர்ந்தபோது,


“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு''


என்று புகழ்ந்துரைப்பாராயினார். வடபாலமைந்த விழுமியமலை, சோர்பெருமான் மனத்தில் நெடியோன் குன்றமாக இலங்குகின்றது. மும்மைசா லுலக மெல்லாம் காக்குங் கடப்பாடுடைய நீலமேனி நெடியோன், சீர்பூத்த செக் தமிழ்நாட்டின் வடபால் நின்று காக்கின்றானென்று கவிஞர் கருதுகின்றார். நல்லாரை ஆக்கவும் அல்லாரை அழிக்கவும் வல்ல நிறையமைந்த கன்னி தென்பாலமைந்து தெய்வத் தமிழ்நாட்டைக் காக்கும் முறைமையைக் கருதும் பொழுதும் கவிஞர் உள்ளம் களித்து நிமிர்கின்றது. இவ்வாறு கடவுளர் காவலில் அமைந்த கன்னித் தமிழ்நாட்டின் செம்மையைச் சிலம்பொலியா விசைத்த செஞ்சொற் கவிஞரது கவிநயம், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இளங்கவிஞர் நெஞ்சை அள்ளுவதாயிற்று. பண்புற்ற தமிழ்நாட்டின பெருமையைப் பேசப் போந்த பாரதியார்,


“நீலத்திரைக் கடலோரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றமிவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு"


என்ற மணிமொழிகளால் எழுதி யமைத்தார். நீலத்திரை சுருட்டும் கரும் கடலின் நெடுங்கரையில் கன்னித்தெய்வம் நின்று காவல்புரிகின்றதென்றும், வேங்கடமென்னும் ஓங்குயர் மலையில் பைர் தமிழின் சுவையறிந்த பச்சைப் பசுங் கொண்டலாய் திருமால் கண் துயிலாது நின்று காவல் செய்கின்றான் என்றும், பாரதியார் இசைத்த பாட்டில், சிலம்பொலியின் எதிரொலி சிறக்தொலிக்கக் காணலாம். இவ்வாறு பசுந்துளவ மாலையனும் பைந்தமிழ்ப்பாவையும் கண்ணிமையாது காக்கும் தமிழ்நாடு, நற்றவம் முயலும் சான்றோ குறையும் நல்லுலக மாதலால், செயற்கரிய செய்து செம்மையுற்ற செந்தமிழ் முனிவர் மேற்றிசையில் நின்று தமிழகத்தைப் போற்றுகின்றாரென்று பாரதியார் கூறும் மொழிகள் பண்பு வாய்ந்தனவாம், சிலம்பொலி எழுந்த காலத்து, சேர நாடு முத்தமிழ்நாடுகளுள் ஒன்றாய் மிளிர்ந்தமையால், சிலப்பதிகாரம் இயற்றிய கவிஞர், புகழ் பூத்த பொதியமலையைக் குட எல்லையாகக் கூறுது விடுத்தார். ஆயினும் பிற்காலத்தில் தமிழ்த்தாயின் மகவாய்த் தோன்றிய மலையாளம் என்னும் மொழி, மேற்புலத்தைக் கவர்ந்து கொண்டமையால், பண்ணார்ந்த பாட்டிசைத்த பாரதியார் முத்தமிழ் முனிவருறையும் முதுமலையை மற்றோ ரெல்லையாகக் குறித்துப் போந்த முறை சாலப்பொருத்த முடையதாகும். "என்று முள தென் தமிழ் இயம்பி பிசைகொண்ட' குறுமுனிவன் தமிழகத்தின் பெருமை குன்றாது காக்கின்றான் என்று பாரதியார் கூறும் கவிகள் பாடி மகிழத் தக்கனவாம்.

 

இத்தகைய தெய்வத் திருநாட்டில் பரந்து பாயும் ஆற்றையும், விரிந்து வீசும் காற்றையும், ஆசிரியர் இளங்கோவடிகள் தமிழ் மயமாகவே கண்டு மனந்தழைப்பா ராயினார். அதிராச் சிறப்பமைந்த மதுரை மூதூரில் அழகுறப் பரந்து சென்ற ஆற்றின் பெருமையை,


''புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி''


என்று இளங்கோவடிகள் கூறும் முறை இனிமை சான்றதாகும். பழமுதிர்சோலைகளினிடையே நெளிந்து வளைந்து சென்ற வையையாற்றைப் 'பூங்கொடி என்று புலவர் புகழ்ந்துரைத்தார். பழந்தமிழ்ப் புலவர்கள் பரிபாடலில் அமைத்துப் பாராட்டும் பண்பு வாய்ந்த வையையாற்றைப் ''புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி" யென்று போற்றினார்.

ஆற்றுப் பெருக்கற்று
அடிசுடும் அருங்கோடை காலத்தும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்
ரிய நலம் வாய்ந்த உயிர் ஆற்றைப் "பொய்யாக் குலக்கொடி"

 

என்று வாயாரப்புகழ்ந்து வாழ்த்தினார். இவ்வாறே மதுரைமாநகரில் வீசிய மெல்லிய
பூங்காற்றை,


"மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றல்"


என்று புலவர் புகழ்ந்துரைத்த நயம் அறிந்து போற்றுதற் குரியதாகும். இல்லனம் தமிழ்நாட்டின் ஆற்றையும் அருங்காற்றையும் புகழ்ந் துரைத்த புலவர் பெருமான், தமிழகத்தில் வைத்த தலையாய ஆர்வத்தால், கொடுமை செய்த கருங்கடலைக் குறை கூறுகின்றார். குமரி முனைக்குத் தென்பாலமைந்த திருந்திய தமிழ்நாட்டைக் கவந்தன்போற் கவர்ந்து விழுங்கிய கருங்கடலின் கொடுமையை நினைந்து மனந்தளர்ந்த கவிஞர்,


"வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் மன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"


என்று குழைந்து கூறும் மொழிகள் கூர்ந்து அறியத்தக்கனவாம். பெருச் தமிழகத்தின் தென்பா லமைந்தநாடும், காடும், ஆறும், மலையும் ஆழிவாய்ப் பட்டு அழிந்த கதையைக் கேள்வியுற்ற அடிகளார் உள்ளம், அனலிடைப் பட்ட மெழுகுபோல் உருகிற்று. அடுக்கடுக்காக ஓங்கி யுயர்ந்த மலையையும், அம்மலையின் குடுமியாய்த் திகழ்ந்த குமரி என்னும் கோட்டையும், அக்குன்றினின்றும் இழிந்து பரந்து பாய்ந்த பஃறுளி என்னும் ஆற்றையும் வாரியெடுத்து வயிற்றி லடக்கிய ஈரமற்ற நெடுங்கடலைக் கொடுங்கடல்' என்று அருள் சாலடிகள் நெஞ்சம் குமுறிக் குறிக்கும் முறை கற்போர் கருத்தைக் கவர்வதாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment