Monday, August 31, 2020

 சங்கீத சாஸ்திரம்

சங்கீத உற்பத்தி.

 

சர்வலோக சுகார்த்தமாக, ஆதியில், பரமேஸ்வரன் அருளால் அவருடைய அங்கப் பிரதிபிம்பமாக காந்தார சுரமும், பூமியும் உண்டாயின வென்றும், பிறகே பூமியிலிருந்து சரிய வாத்தியங்கள் உண்டாகிவாமதேவனிடத்திலிருந்து தைவத சுரமும் ஜலமும் தோன்றின வென்றும்,அகோர சொரூபத்திலிருந்து ஷட்ஜர்ஷ சுரங்களும், அக்னியும் பிரத்தியக்ஷப்பட்டனவென்றும், அக்னியிலிருந்து காம்சிய வாத்தியங்களும், தத்புருஷனிடத்திருந்து பஞ்சம் சுரமும், வாயுவும் ஜனித்தன வென்றும், வாயுவிலிருந்து தந்திரீ வாத்தியங்கள் புறப்பட்டன வென்றும், ஈசான முகத்திலிருந்து மத்திம நிஷாத சுரங்களும் ஆகாயமும் உண்டாயின வென்றும்,ஆகாசத்திலிருந்து சப்தம் சாதகமாயிற்றென்றும் பாத முனிவரால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. சங்கீத சாஸ்திரம் உலக சிருஷ்டியோடு கலந்த வொன்றென்று இதனால் அறியக்கிடக்கிறது. இதனால் தான் இது உண்டானகாலத்தை நிர்ணயிக்க இடமில்லாமற் போயிற்று போலும்!


கீதம், வாத்தியம், நிருத்தியம் என்று மூன்று வகை சேர்ந்ததே சங்கீதமாகும்.


சங்கீத விபாகம்.

 

மார்க்கம், தேசி என்று சங்கீதம் இரண்டு விதமாகும். பரனஞ்ஞர்களால் பிரயோகிக்கப்படுகிற சங்கீதம் மார்க்கமும், அந்தந்த நாடுகள் அநுசரித்து அந்தந்த ஜனங்களுக்கு ரஞ்சிதமாகும் வண்ணமுள்ள சங்கீதம் தேசியுமாகும்.


நாதசப்தார்த்தம்.

 

பிராண அச்நியினுடைய கூட்டுறவு கொண்டு உண்டாவதே நாதமாகும். நாகாரம் பிராணனையும், தகாரம் அக்நியையும் குறிக்கும்.


நாத உற்பத்தி.

 

சப்தம் அல்லது ஒலியை உண்டாக்குவிப்பதற்கு விசாரிக்கப்படுகிற தோரணையில் ஆத்மாவானது மனதை உத்போதம் செய்கிறது. மனசானது நாபியில் ஸ்திதி செய்துகொண்டிருக்கிற அக்கியை சம்பாதித்துக் கொள்கிறது. அந்த அக்னியானது வாயுவைப் பிரேரிக்கும் போது பிரம்ம கிருந்தியில் ஸ்திதி செய்கிற நாதம் ஊர்த்துவ மார்க்கமாக சலனம் செய்து கிரமமாக நாபி, இருதயம், கண்டம், முருத்தாவு, முகம் என்றிவற்றோடு சேர்ந்து பகிர்க்கதமாகிறது.


நாத விபாகம்.

 

ஆஹத மென்றும், அநாஹத மென்றும் நாதமானது இரண்டு விதமாகும். ஏகாக்கிரச் சித்தமுடைய முனிவர்களால் குருமுகமாக உபாவிக்கப்படுவது அநாஹத மென்றும், அது சக்திவி ஹீனத்துவம் காரணமாக ஜனங்களுக்கு ரஞ்சிதமாய் இராததால் லோக ராஜகம், பவ பஞ்சகமானவற்றை சுருதி உபாயங்களால் சாதிப்பது ஆஹதம் என்றும் கூறப்படும்.


நாதப் பிரசம்சம்.

 

கீதம், சுரம், ராகம் என்றிவை நாதத்தைச் சேர்ந்தவை. இம்மூன்றும், நாதாரமங்களென்று சொல்லப்படுகின்றன. கீதத்திற்கு முக்கியமான வாத்தியம் நாதத்தால் பிரசித்தமாகும். நிருத்தியமானது கீத வாத்தியங்களுடன் அநுசரிக்கிறது. ஆகையால் இம் மூன்றும் நாதாதீனங்களாகும். இது மாத்திரமன்றி நாதத்திலிருந்து அக்ஷரமும், அக்ஷரத் திலிருந்து பதமும், பதத்திலிருந்து வாக்கியமும், வாக்கியத்திலிருந்து விவகாரமும் உண்டாவதால் உலகமானது நாதாதீனமாமென்று சொல்லப்படுகிறது. நாதத்தை உபாஸிப்பதினால் பிரம்ம விஷ்ணு மகேஸ்வரர்கள் உபாஷிதர்களாகின்றனர். ஆதலால், திரிமூர்த்திகளும் நாதாத்மர்களாகின்றனர். அன்றியும் தர்மார்த்த காமமோக்ஷங்கள் ஒவ்வொன்றிலும் நாதம் சாதனமாயிட்டுள்ள தாகையால், சாஸ்வதி தேவியின் அநுக்கிரகத்தால் சிரேஷ்டமான நாத வித்தையை யுடைய கம்பலம், அசுவதரம் என்ற சர்ப்பங்கள் மகாதேவனைச் சந்தோஷப்படுத்திக் கர்ணாபரணங்களாயின. சிசுக்களும், பசுக்களும் மிருகங்களும் சர்ப்பங்களும் இந்நாதங்கொண்டு ஆனந்த பரவசமாகும். இத்தகைய மகாத்மியங் கொண்ட நாதத்தின் பெருமையை எவரால் வர்ணிக்க முடியும்?


நாத விவகாரம்.

 

நாத விவகாரமானது மூன்று விதங்களாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இருதயத்தில் விவகரிப்படுவதற்கு மந்திர மென்றும், கண்டத்தில் விவகரிக்கப்படுவதற்கு மத்தியமென்றும், சிரசில் விவகரிக்கப்படுவதற்குத் தாரமென்றும் பெயர்களா மந்திரத்திற்குப் பிரமாணமாயிருக்கிற நாதத்தினுடைய இரட்டிப்பு தாரத்திற்கு நாதமுண்டாயிருக்கிறது.


நாத சுருதி ஜாதி ராகங்கள்.

 

முதன் முதல் கேட்கப்படுகிற கிரக சுவக்ஷர உச்சாரண சப்தத்தைச் சுருதி என்று கூறுவர். இந்தச் சுருதியைச் சுராவயமாய்க் கற்பித்து, சுருதியிலிருந்து சுரங்களும், சுரங்களிலிருந்து கிராமங்களும், கிராமங்களிலிருந்து ஜாதிகளும் ராகங்களும் உற்பத்தியாயின.


சுருதி ஜாதி விபாகம்.

 

தீப்தம், ஆயதம், கருணம், மிருது, மத்தியம் என்ற ஐந்து ஜாதிகளே சுருதியாகும். தீப்த ஜாதியில், தீவிரு, ரௌத்திரு, வஜ்ஜிருக, உக்கிரா என்றும், ஆயத ஜாதியில் குழுதுவதி, குரோதி, பிரசாரிணி ஸந்தீபினி, ரோகிணி என்றும், கருண ஜாதியில் தயாவதி, ஆலாபினி, மதந்தி என்றும், மிருது ஜாதியில் மந்த, ரதிக, பிரீதி, க்ஷிதி என்றும், மத்தியஜாதியில் சந்தோ வதி, ரஞ்சனி, மார்ஜினி, ரக்த, ரம்மியா, க்ஷோபினி என்றும் பேதங்க ளுண்டு. அதனால், இவைகள் சுவற்பன சுரங்களில் விவஸ்தை உள்ளவையா யிருக்கும்.

 

சுருதிகளுடைய ஸ்திதி.

 

ஷட்ஜத்திற்கு நான்கு சுருதிகளும், ரிஷபத்திற்கு மூன்றும், காந்தாரத் திற்கு இரண்டும், மத்திமத்திற்கு நான்கும், பஞ்சமத்திற்கு நான்கும், தைவதத் திற்கு மூன்றும், நிஷாதத்திற்கு இரண்டுமாக எழு சுரங்களுக்கு இருபத்தி ரண்டு சுருதிகளுண்டு.

 

துவாபிம்ச சுருதி நாமங்கள்.

 

ஷட்ஜத்திற்கு தீவ்விரு, குமுதுவந்தி, மந்த, சந்தோபதி என்ற நான்கு சுருதிகளும், ரிஷபத்திற்கு தயாவதி, ராஜனி, பதிக, என்ற மூன்று சுருதிகளும், காந்தாரத்திற்கு ரௌத்திரி, குரோதி என்ற இரண்டு சுருதிகளும், மத்திமத்திற்கு வஜ்ஜிருக, பிரசாரிணி, பிரீதி, மார்ஜ்ஜினி என்ற நாலு சுருதிகளும், தைவதத்திற்கு, மதந்தி, ரோகிணி, ரம்மியா என்ற மூன்று சுருதிகளும் நிஷாதத்திற்கு உக்கிரா, க்ஷோபிணி என்ற இரண்டு சுருதிகளுமாகும்.


நியத சுருதி நிர்மாணம்.


மேலே சொல்லப்பட்ட சப்த சுரங்களுக்குள்ள இருபத்திரண்டு சுருதிகளில் நான்காவதாகிய சுருதியிலே ஷட்ஜமமும், ஏழாவதிலே ரிஷபமும், ஒன்பதாமதிலே காந்தாரமும், பதின்மூன்றாவதிலே மத்திமமும், பதினேழாவதிலே பஞ்சமமும், இருபதாவதலே தைவதமும், இருபத்திரண்டாமதிலேநிஷாதமும், சுத்த சுருதிகளும் பாக்கியுள்ள விக்கிருதி சுருதிகளும் ஆகும்.


சுரசப்தார்த்தம்.


சுரோதாவினுடைய மனதைச் சுயமாக ரஞ்சிக்கச் செய்வதே சுரமாகும்.

 

 

 

சப்த சுர நாமங்கள்.

 

ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவாம்.


சுர உற்பத்தி ஸ்தானங்கள்.

 

நாசி, கண்டம். உரசு, நாக்கு, ஜிக்வா, தந்தம் இவை முதஸ்தானத்திலிருந்து புறப்படுகிற சுரமாகும். ஷட்ஜம் ரிஷபம் தொடங்கிய சுரங்கள் ஆறும் ஷட்ஜமத்திலிருந்து உற்பவித்தாகக் கொண்டு ஷட்ஜம் என்ற பேருண்டாயிற்று. (2) காளையினுடைய சப்தத் திலிருந்து அநுசரித்ததேரிஷப சுரமாகும். (3) காந்தார வாசிகளுடைய ரஞ்சிதத் தொனியே காந்தார சுரமென்று சொல்லப்படுகிறது. (4) சப்த சுரங்களுடைய மத்திய ஸ்தானத்தை அடைவதால் மத்திமம் என்றும், (5) ஐந்தாவதாக இருப்பதால் பஞ்சமம், அன்றியும் நாபி, இருதயம், கண்டம் மிருர்த்தாவு ஆசியம் ஆகியவற்றைத் (ஐந்து ஸ்தானங்களை) தொட்டுவருவதாலும் அப்பேருண்டாயிற்று. (6) தீமானர்களைச் சம்பந்திப்பதால் தைவதமென்னலாயிற்று. (7) நிஷாத சுரத்தில் மனம் ஈடுபடுகிறது. ஆதலால் ஏழாவது சுரத்திற்கு நிஷாதமென்று பேருண்டாயிற்று. ஷட்ரஸோ அன்னத்தை மனிதர் புசிப்பது போல நிஷாதத்தைச் சாசகர்கள் ஆறு சுரங்களைக் கொண்டு சேவிக்கின்றார்கள்.


சுரவிபாகம்.

 

சுரங்கள் பிரகிருதி (சுத்தம்) விகிருதி என்று இரண்டு வித நியதங்களையுடையன. சுத்த சுருதிகளோடு கூடியுள்ள சுரங்கள் சுத்தமென்று சொல்லப்படுகிற றது. சுத்த சுருதிகளில் கீழுள்ள சுருதிகளோ, மேலேயுள்ள சுருதிகளோசேர்ந்திருக்கிற சுரங்களை விகுருதி சுரங்கள் என்று சொல்லுவர்.


சப்த சுர வாரங்கள்.

 

ஷட்ஜம், ஞாயிற்றுக்கிழமையிலும், ரிஷபம் திங்களிலும், காந்தாரம் செவ்வாயிலும், மத்திமம் புதனிலும், பஞ்சமம் வியாழனிலும், தைவதம் வெள்ளியிலும், நிஷாதம் சனியிலும் சாதகமாகும்.


ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment