Monday, August 31, 2020

கோயிலா? கொலைக்களமா?

 

"ஆலயந் தொழுவது சாலவும் நன்று'- என்பது ஒளவைப் பிராட்டியின் அமுதமொழி. இவ்வுலகிலுள்ள ஏனைய எப்பிறவிகலும் மானிடப்பிறவியே சாலச் சிறந்ததென்பது சான்றோர் துணி எங்ஙனமெனின், தன்னலமொன்றையே இன்றியமையாததாகக் கொண்டு, தமது வாழ்க்கையை நடாத்திச் செல்வதோடு ஒருப்படாது, தன்னைச் சார்ந்தார்க்கும், வாயினாற் பேசி தத்தங் குறைகளை முறையி - முடிடாத கருகங்கள் முதலியவைகட்கும் இயன்ற வரை உதவிபுரிந்து வருலையும் குறிக்கொள்ளுதலின் என்ப. இது கொண்டே பகுத்தறிவற்ற விலங்குகள் முதலியவற்றினும் பகுத்தறிவுற்ற மானிடன் உயர்ந்தவனாக மதிக்கப் படுகின்றான், இவ்வாறன்றி, அன்பு என்பது சிறிதுமின்றி தன்னலத்திலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து, கேவலம் உண்டு உடுத்து உறங்குவதிலேயே தமது வானாளை வீணேகழிக்கும் மக்கள் மனித உடல் தாங்கி உலவிலும் மானிடர்' என்று அழைத்தற்கு அருகராவரோ?'' அன்பின் வழியது உயிர்களை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - என்பது தமிழ் மறை.

    மற்றும், "மனித உடல் ஒன்றில் தான் இறைவன் உறைகின் முன்; எனையபக்தி முதலியன வாய்க்கப் பெறாத விலங்குகள் முதலியவற்றின் உடல்களில் கடவுள் விளங்க வில்லை'' என்பதில்லை. உயர்திணை முதல் அஃறிணை ஈறாக உள்ள எல்லாவற்றிலும் 'அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவாகி, 'பார்க்குமிடமெங்கு மொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்த மயனாவன் பகவான்.'' எவ்வுயிரும் பராபரன் நன் சந்நிதியதாகும். இலங்கும் உடல் உயிரனைத்தும் ஈசன் கோயில்''; என்பது முதுமொழி. ஆதலின், தத்தம் நலங்களைப் பேணுதற்கென கரசரணாதி அவயவங்களும் அறிவாற்றலும் படைத்த மக்கள் பால் செலுத்தும் அன்பினும், தத்தங் குறைகளை முறையிடுதற்கென வாயில்லாத விலங்குகள் முதலியவற்றினடத்திற் செலுத்தப்படும் அன்பே எவ்வாற்றானும் சிறந்ததாகும்.

 

மாடு கோழி முதலியவைகளிடத்தினின்றும் பெரும்பயனைப் பெற்றுக் கொண்டு, அவற்றின் உழைப்பின் பயனாகப் பெற்ற ஊதியத்தில் மிகச் சிறியதொரு பகுதியைக் கொண்டு அவற்றிற்குத் தீனி முதலியன இடுமளவில் நின்று விடுவது உண்மை அன்பாகாது. அவற்றின் உழைப்பால் அடைந்த இலாபத்திற்கேற்றவாறு அவ்வவற்றின் போஷணைக்குத் தாராளமாகப் போதியவளவு தீனி முதலியன போட்டு போஷித்தல் வேண்டும். இது சாதாரண அன்பாகும். நீண்டகாலம் நன்கு உழைத்துத் தளர் வெய்திய காலத்தில், பெரும் பயன் தரப் போதிய ஆற்றலில்லாத பசுக்கள் எருதுக்கள் முதலியவற்றை அவற்றின் விருத்தாப்பிய காலத்திலும் செய்ந்நன்றி மறவாது செவ்வனே போஷித்தல் வேண்டும். இஃதே சிறந்த அன்பாகும். இவ்விருவகையுமன்றி, மனமொழி மெய்களால் மானிட சமூகத்திற்கு எவ்வகைத் தீமையும் இழையாத ஏழைப் பிராணிகளை, பகுத்தறிவையும் அன்பையும் சிறப்பாக வளர்க்கத் தக்க மனிதப்பிறவி தாங்கிய மக்கள் சிறிதும் கருணையின்றி அவற்றின் சழுத்துகளிற் கத்தியை வைத்து அவை கதறக் கதற அறுத்தல் எத்துணைப் பெரியதொரு கொடுமையாகும். அவ்வளவோடமையாது, கருணைவடிவினனாய கயிலை நாயகனது பரிவாரங்களும் பக்தர்களும் அருட்சத்தியின் அமிசங்களுமான மாரியம்மன் முதலிய சில்லரைத் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி, இருகால் விலங்குகளென்னத் தக்க மாக்கள், நாற்கால் விலங்குகளையும் பறவைகளையும் பலியிட்டு மகிழ்வது எத்துணைப் பெரியதொரு பேதமையாகும்! எவ்வுயிர்க்கும் இறைவனாம் ஈசன் திருமுன்பு, இத்தகைய மாக்கள் எப்பாடு படுத்தப்படுவரோ?' என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்'' - என்பது பொய்யாமொழியன்றோ? "

 

மற்றும், "ஒருயிர் தன்னைக் கோறல் செய்தோர்கள் உயிரினை அவ்வுயிரெய்திச் - சோர்வுறக் கொல்லு மாதலால் கோறலாதல் மற்றொழிந்திடல் வேண்டும் " - என வரும் இலிங்கபுராண மெய்ம் மொழிக் கேற்ப எவரால் எவ்வுயிர் கொல்லப்படுகிறதோ அவரை அவ்வுயிர் இயமனுலகிலேனும் மறுபிறவியிலேனும் வதைத்துப் பழிக்குப்பழி வாங்காதிராது என்பது தெளியக் கிடக்கின்றதன்றோ? மிகப்பல மிருகங்கள் முதலியவற்றைக் கொன்று ஆயிரம் யாகங்கள் செய்வதைக் காட்டினும், பலி பலி என்று சில்லரைத் தெய்வங்களின் மேற் சாக்கிட்டு எளிய பிராணிகளைக் கொல்வித்து பூசைகள் பலபோடுவதைக் காட்டிலும், ஒரு ஏழைப் பிராணியைக் காப்பாற்றி வளர்த்தல் எத்துணைச் சிறந்ததாகும்! இதனாலன்றோ, தெய்வப்புலமைத் திருவள்ளுவரும் '' அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் - - உயிர் செகுத்துண்ணாமை நன்று " - என அருளிச் செய்தனர். புவளியெல்லால் போற்றும் புத்தர் பெருமானும், ஆயிரக்கணக்கான ஆடுகளை வேள்வியில் மாள்வித்து அரும் பெரும் பாவம் அடையவிருந்த அரசனைத் தடுத்துத் திருத்தி ஆட்கொண்டருளினரன்றோ! ஆதனால், அவ்வாசர்க்கு விளைய விருந்த பெரும் பாவம் அகன்றதே யன்றி எத்தகைய தோஷங்களேனும் எய்திய துண்டோ? ஒரு பிராணியை அழித்தல் எளிதே! ஆனால், அதனைக் காப்பாற்றுதலும் வளர்த்தலும் எத்துணை ஒருமையும் இனிமையு மென்பதை சிறிதே சிந்தித்துப் பார்ப்பாராயின், எவரும் உண்மை தெளியப் பெறுவர்.

 

மற்றும், நம்முடலினுள்ளே உள்ள அக ஆலயத்தை விட்டு, கோயிலும் கோபுரமும் கூடிய புற ஆலயத்தைக் கட்டி ஆண்டவனை வழிபடுவது எதற்காக? பேரறிவு விளங்கப் பெறாதாரும்; ஒருங்கு திரண்டு கலந்து கடவுளைப் புகழ்ந்து உண்மையன்பைப் பெருக்கிக் கொள்ளாதாரும்; " எவ்வுயிரும் நீங்காதிறையும் உறைசிவனென்று - எவ்வுயிர்க்கும் அன்பாயிரா " தாரும் உய்வதற்கேயன்றோ? முன்னோர் கோலிய நன்முறைகட்கு முற்றிலும் எதிர்மாறாக நடந்து கொள்வதுதான், ஆலய வழிபாட்டுக்கு அழகாவதோ? அன்பின் பெருமையைச் சிறிதும் உணராது. சீவகாருணியம் சிறிது மின்றிகோயிலைக் கொலைக்களமாக்கிய கொடியார்க்கும் கருணை வடிவினனாய இறைவன் இரங்குவானோ?

 
 "என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு
 பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்,
 அன்போடுருகி அகங் குழைவார்க் கன்றி
 என் போன் மணியினை எய்தொண்ணாதே "


என திருமூலர் அருளிச்செய்தனரன்றோ!

எத்தகைய தெய்வமும், எனக்கு இறைச்சி படைத்திடுக' என்று கேட்பதில்லை. தசை (மாமிச உணவில் நசை (விருப்பம்) உள்ள தயையற்ற தறுகணாளர்களாம் பூசாரிகள் முதலினோரே பேதமை உலகை பயமுறுத்தி வஞ்சித்து வருகின்றனர். ஆவேசம் வந்துவிட்டதாக நடித்து, ஆர்பாட்டம் செய்வதெல்லாம் வெறும் வேடமேயன்றி வேறில்லை. எவ்வளவோ காலம் அகங்கசிந்து ஆடிப் பாடி அழுது தொழுது நெஞ்சுருகி நிற்கும் மெய்யன்பர்கள் கூட, ஆண்டவனை நேரிற் காண இயலாது புலம்பிப் புலம்பிச் சென்றுளர். அத்தகைய மெய்யன்பர்கட்கே எளிதில் தனது காட்சியை வழங்காத இறைவன், பல திறப்பட்ட பிழைகள் நிரம்பிய வாழ்க்கையுடையராய் ஊனிலும்கள்ளிலும் உவப்புடையரான ஆவேசக்காரர்களிடம் எளிதில் ஆவிர்பவித்து விடுவனோ? இத்தகைய பேதைமைச் செயல்கள், நமது செந்தமிழ் நாட்டைக் குறைகூறித் திரிவோர்க்கு பெரிதும் துணை செய்கின்றன. அங்ஙனம், எத்தெய்வமேனும் மிருகபலியை உவந்து கேட்குமாயின், அஃது உண்மைத் தெய்வமுமாகாது. பண்டைகாலத்தில், அரசர்களுக்குள் அமர் விளையுமுன் தத்தமது வெற்றியை வேண்டி, போருக்குத் தலைமை பூண்ட துர்க்கை முதலிய வீரதேவதை கட்கு களப்பலியூட்டி சமர் தொடங்கல் முன்னோர் முறையாகும். அவ்வாறன்றி, அன்புயிலையங்களாம் ஆலயங்களில் ஏழைப் பிராணிகளாய விலங்குகள் முதலியவற்றைப் பலியிடுவதென்பது வழக்கத்திலிருந்து வந்ததென்பதை வலியுறுத்தப் போதிய சான்றுகளில்லை. மற்றும்,

 

மக்களுக்கு இயல்பான குணங்கள் மூன்று. அவை தாம் தாமத இராசத சாத்துவிக மென்பன. இம்மூன்றனுள், முன்னிரண்டும் மக்கனை வெம்மையிற்புகுத்தி, இம்மையிலும் மறுமையிலும் இடுக்கண்கள் பலவற்றைக் கூட்டுவதாகும். ஆதலின், மக்களை செம்மை நெறியிற் செலுத்தி ஆண்டவனது திருவருளுக்கும், இவ்வுலகிலும் அவ்வுலகிலும் இன்பமடைவதற்கும் வழிகாட்டும் சாத்துவிக நெறியே, மானிட வாழ்க்கையின் நோக்கத்தைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதாகும். அது குறித்தே சுத்த சத்துவமான அருட்பெருஞ்சோதியை அடைந்து உய்வதற்குரிய சாத்துவிக வளர்ச்சி நெறிமுறைகளையே, சாத்திரங்கள் பெரிதும் வலியுறுத்திச் சாற்றுகின்றன. அந்நன்னெறியை அகற்றி அகப்புற வாழ்வை இரக்கமற்ற கொடுமைகளே நிறைந்ததாகச் செய்வதற்கும், ஆண்டவனது தண்டனையை அடைவதற்கும் காரணமாய் நிற்பனவும், வாயில்லா ஏழைப் பிராணிகளை வதை செய்யத் தூண்டுவனவுமாய தாமத இராசத் தன்மைகளைத் தவிர்த்தாலன்றி, ஆண்டவனது அருளுக்கு இலக்காதல் அரிதென்பதை கருத்திலிருத்தி உயர் நெறிபற்றி யொழுக ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும்.

 

இதுகாறுங் கூறியவற்றால், தன்னலமொன்றையே பேணுவதற்கென்றே மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன்று என்பது, இறைவன் எவ்வுயிரிலும் இருத்தலின், எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி வாயில்லாப் பிராணிகளிடத்திற் காட்டும் கருணையே சாலச் சிறந்ததென்பதும்; எவ்வகையிலும் மனிதர்க்குத் தீமைவினை வியாத ஏழைப்பிராணிகளை, இரக்கமின்றி கொன்று குவித்தலினும் சிறந்த கொடுமை மற்றொன்றுமில்லை யென்பதும்; ஒருவர் ஒருயிரை வீணே வதைப்பராயின், அவ்வுயிரே அவரைப் பிற்காலத்தில் வதைத்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்ளுமென்பது சாத்திர கொள்கை என்பதும்; ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிட்டு மகிழ்வதினும், ஒரு ஏழைப்பிரானியை உள்ளன்போடு போஷித்து வருதல் சிறந்ததென்பதும்; ஒருவர்க்கொருவர் கலந்து மெய்யன்பை வளர்த்து அன்பு மயமாம் ஆண்டவனை அறிந்தி - முயன்றிடற்காக ஆலய வழிபாட்டு முறை கோலப்பட்டதேயன்றி, இராசத் தாமத குணங்களை வளர்த்து இருமையிலும் இழிப்படைவதற்காக ஏற்படுத்தப்பட்டதன்று என்பதும், உயிர்ப்பலி தருமாறு உண்மையில் எத்தெய்மும் கேட்பதில்லை என்பதும், அவ்வாறு உயிர்ப்பலி கேட்கப்படுவது பூசாரிகளின் வஞ்சனையே என்பதும் பிறவும் ஒருவாறு விளக்கப்பட்டன. ஆதலின், கருணைவடிவினனாய கடவுளது திருவருளுக்கு ஆளாவதே மானிட வாழ்கையின் சீரிய நோக்கமாதலின், எவ்வுயிரிலும் ஈசன் இருப்பை உள்ளத் திருத்தி உயிர்ப் பலி வழக்கத்தை ஒழித்து, அன்பினை வளர்த்து உயர்நெறி கடைப் பிடித்து ஒழுகி, இம்மையிலும் மறுமையிலும் அனைவரும் நன்மையடைவார்களாக.


 "நலிதரு சிறிய தெய்வமொன்றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
 பலிதர ஆடு பன்றி குக்கிடங்கள் பலிக்கடா முதலிய உயிரை

பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே புந்தி நொந்து உள் நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங்கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்"


 “துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்தொடங்கியபோதெலாம் பயந்தேன்
 கண்ணினாலையோ பிறஉயிர்பதைக்கக் கண்டகாலத்திலும் பதைத்தேன்
 மண்ணினில் வலையுந் தூண்டிலும் கண்ணிவகைகளுங் கண்டபோதெல்லாம்
 எண்ணின்னுள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தையின் திருவருளறியும்.''


திருவருட்பா.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment