Monday, August 31, 2020

 

சபரிமலை சாஸ்தா

(வி. சங்கரய்யர்.)

ஒவ்வொரு மனிதனும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டியது அவசியம். மனிதனுடைய ஹிருதயத்தில் கடவுளிருக்குமிடம் ஒன்று இருக்கிறது. திருவாங்கூர் ராஜ்யம், கடவுள் பக்தி நிறைந்த ஒரு தேசம் என்பது பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அங்கு, கோவில்கள் அதிகம். அக் கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களும் அபரிமிதம். காலை சூரியோதத்திற்கு முன்னும், மாலை சூரியன் அடையும் சமயத்திலும், ஒவ்வொரு
கோவிலிலும் ஸ்நானம் செய்து சுத்தமாக பகவானுடைய நாமோச்சாரணம் செய்யும் பக்தர்களுடைய கோஷ்டியை காண்பது நேத்திரானந்தமும் சுரோத்திரானந்தமுமாக யிருக்கும்.

திருவாங்கூர் ராஜ்யத்திலிருக்கும் சபரிமலை என்னுமிடம் ஒவ்வொரு வருஷமும் தவராமல் பல்லாயிரம் பக்தர்களை வரவழைத்துக் கொள்ளுகிது. மணிமாலை மலைகளினுள்ளிருக்கும் ரான்னிக் காட்டின் மத்தியில் 2000 அடி உயரத்திலிருக்கிறது சாஸ்தாவின் கோவில். இது பெருத்தோடு எனனு மிடத்துக்கு 25 மைல் தென்கிழக்கில் இருக்கிறது. இந்த சபரிமலை ஹிந்துக்கள், பௌத்தர்கள் ஆகிய இரு மதஸ்தர்களுக்கும் முக்கியமானது. தவிர, எருமேலியிலிருக்கும் முகம்மதிய க்ஷேத்திரம் முகம்மதியர்களுக்கு
முக்கியமானது. மூன்று மதஸ்தர்களுக்கும் இந்த சபரி மலையானது முக்கியமானது.

சபரிமலை சாஸ்தாவை தரிசிக்கச் செல்லும் யாத்திரீகர்கள் வழியில் ஜாதி மத வித்தியாசம் பாராட்டுவதில்லை. இம் மலைக்குச் செல்ல இரண்டு வழிகளிருக்கின்றன. குறுக்கு வழி இரண்டு மலைகளினூடே பத்து மைல் தூரம் காட்டில் நடக்க வேண்டும். வழக்கமாக எல்லோரும் செல்லும் மார்க்கம் மலைகளின் வழியாக முப்பது மைல் தூரம் இருக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள அகழ் வனமிருகங்களை அங்கே வரவிடுவதில்லை. இந்த க்ஷேத்திரத்தில் மிருகபலி கிடையாது. கூட்டம் கூட்டமாகச் செல்லும் யாத்திரிகர்கள் ஐயனாரைத் தவிர வேறொரு நினைவுமில்லாமல் செல்வதால் வழியில் ஒருவித பயமுமில்லை.

புது நாகரீகங்களும் புது மதக்கொள்கைகளும் நாள்தோறும் வளர்ந்து கொண்டு வருகின்ற இந்தக் காலத்திலும் சபரிமலைக்குச் செல்லும் யாத்திரீகர்களுடைய கூட்டம் குறைந்ததாகக் காணோம். சபரிமலை யாத்திரை மிகக்
கட்டுப்பாடுகளுக்கு அடங்கினாலே செய்ய முடியும். தினசரி காலக்ஷேபத்திற்காக ஸ்வயகாரியப் புலிகளாக வேலை செய்தும்; லௌகிக ஆடம்பரத்திற்காகவும், பண சம்பாத்தியத்திற்காகவும் அதிக ஆவல் உண்டாகின்ற இக் காலத்தில் இரண்டு மாதம் பூராவும் பகவத் விஷயமாக எத்தனை அய்யப்பர்கள் (இது சபரிமலைக்குச் செல்பவர்களுக்குள்ள பொதுவான பெயர்) செலவழிக்கின்றனர் என்பது மிக ஆச்சரியமே யாகும். கார்த்திகை மாதம் முதல் தேதி யன்று முதல் அய்யப்பவிரதம் ஆரம்பிக்கிறது மலைக்கு புறப்படுவதற்கு முன் நாற்பத்து ஒருநாள் இவர்கள் கடுமையான விரதத்தை
அனுஷ்டிக்கவேண்டும். ஆகாரமோ தண்ணீரோ அருந்த வேண்டுமானால் குளிக்கவேண்டும். க்ஷெளரம் செய்து கொள்ளக் கூடாது. ஸ்திரி ஸங்கமம் கூடாது. மனதினாலோ, வாக்கினாலோ, கர்மத்தினாலோ செய்யக்கூடாத காரியங்களை நினைக்கவோ, செய்யவோ கூடாது. எல்லோரையும் கடவுளாகவும் சகோதரனாகவும் பாவிக்கவேண்டும். எப்பொழுதும்
கடவுளின் நாமத்தையே உச்சரிக்கவேண்டும். இம்மாதிரியாக 41 நாட்கள் இருக்கவேண்டும். இம்முறை தப்பி ஒருநாள் நடந்தாலும் அவன் மலைக்குச் செல்லப் பயப்படுவான். முதல் வருஷம் ஒருவன் மலைக்குச் சென்றால் பின் அவன் வருஷாவருஷம் செல்ல ஆரம்பித்து விடுவான். இது தான் சபரிமலை சாஸ்தாவின் மஹிமை. முதல் வருஷம் செல்பவன் கன்னி அய்யப்பன் என்றும், தலைவனை பெரியசாமி என்றும், மற்றவர்களை அய்யப்
பன்மார்கள் என்றும் கூறுவர். பெரியசாமிச் சொற்படி யாவரும் நடப்
பார்கள். கூட்டமாகச் செல்வார்கள். ஒரு கூட்டத்தில் சுமார் பத்தோ, பதினைந்தோ பேர்கள் இருப்பார்கள். இக் கூட்டம், இக் கூட்டத்திலுள்ள பெரியசாமியை சபரிமலை சாஸ்தாவாக பாவித்து அவர் சொற்படி நடப்பார்கள். விரதகாலமான 41 நாட்களும் காலை மாலை இவர்கள் ஒன்று கூடி அவரவர்கள் கிராமங்களில் சாஸ்தாவின் தோத்திரங்களை நல்ல பிராசத்சோடும் ஸ்வரத்தோடும் அதிக நேரம் உச்சரிப்பார்கள். இப்படியே 41 நாட்களுக்குள் இவர்களுக்கு சாஸ்தாவைத் தவிர வேறு நினைவே கிடையாது. இதன் பிறகுதான் மலையாத்திரை.

சுமார் மூன்று நான்குநாட்கள் யாத்திரை செய்த பிறகே சபரிமலையையடைய முடியும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனியின் வேகம் அதிகம். அக்காலத்தில் கல்லும் முள்ளும் காட்டு மிருகங்களும் நிறைந்த அடவி வழியாக நான்கு நாட்கள் நடக்கவேண்டும். காடு, பல இடங்களில் ஏற்றமும் இறக்கமும் உள்ளதாக இருக்கும். இரவில், வழியில் திறந்த இடத்தில் தான் படுக்கவேண்டும். தனக்கு சாப்பாட்டுக்கு வேண்டிய அரிசி, உப்பு, புளி முதலியவைகளும், பாத்திரங்களும் சேர்ந்த மூட்டையை
தானே எடுத்துச் செல்லவேண்டும். அய்யப்பர்கள் இதைவிட அதிகக் கஷ்டங்களையும் சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டு சபரிமலைக்கு வருஷா வருஷம் செல்லுவது அந்த சாஸ்தாவின் மஹிமையாலேயே தான் ஆகும். மகர சங்கராந்தி தான் முக்கிய தினம். இந்த க்ஷேத்திரத்தில் ஐந்து தினங்கள் தங்கி உற்சவத்தைத் தரிசித்து விட்டு யாவரும் திரும்பி விடுவார்கள்.

ஸ்தல புராணம்

காலவ மஹரிஷிக்கு லீலை என்ற ஒரு புதல்வி விருந்தாள். அவளை திருமூர்த்திகளின் அம்சமான தத்தன் என்ற தேவனுக்கு மஹரிஷி விவாஹம் செய்துகொடுத்தார். இருவரும் சுகமாக வெகு காலம் காலம் கழித்த பின் தத்தன் தபஸ் செய்யப் புறப்பட்டார். இது லீலைக்குப் பிடிக்கவிவில்லை. அவள் அவரைத் தடுத்தாள். அதனால் கோபம் கொண்ட தத்தன் அவளை நோக்கி, “ஹே, மஹிஷி! (மனைவியே) நீ மஹிஷி (பெண் எருமை) யாகக் கடவாய்" என சபித்தார். அவர் சாபத்தின்படி லீலை, கரபன் என்ற அசுரனுக்குக் குமாரியாக மஹிஷ ரூபத்தோடு பிறந்தாள். பிறகு அவர்களுக்கு வேறொரு குமாரனும் பிறந்தான். இருவருச்கும் முறையே அசுரராஜன், மமிஷி, மஹிஷன் எனப் பெயரிட்டான். இந்த மஹிஷனைத் தான் சண்டிகா தேவி கொன்றதாக தேவீ மகாத்மியாத்தில் கூறப்படுகிறது. தன் சகோதானின் அழிவைக் கேட்ட மஹிஷி பிரம்மாவை யுத்தேசித்து தவம் செய்து, "பரமசிவனும் மஹாவிஷ்ணுவும் ஒன்று சேர்ந்து ரமித்து உற்பத்தியான புத்திரன், புவியில் ஒரு அரசனுக்கு 12 வருஷ காலம் தாஸனாச
இருந்த பிறகுதான் என்னைக் கொல்லக்கூடியவனான தன்மையுடையவனாக
வேண்டும்" என்னும் வரத்தைப் பெற்றாள்.

பிரம்மதத்தமான வர மஹிமையால் மஹிஷி தேவர்களை அதிகத் துன்பப்படுத்த ஆரம்பித்தாள். இதை யறிந்த விஷ்ணுவானவர், பிரம்ம சிவ சக்தியால் ஒரு சுந்தர மஹிஷத்தை சிருஷ்டிக்கச் செய்தார். மஹிஷியானவள் சுந்தர மஹிஷத்தோடு வெகு காலம் சுகமாக ரமித்து வந்தாள்.

இச் சமயத்தில் பால்கடல் கடையப்பட்டு அதிலிருந்து வெளிவந்த அமிருதத்தை மஹாவிஷ்ணு மோஹினி ரூபமெடுத்து அஸுரர்களை ஏமாற்றித் தேவர்களுக்குக் கொடுத்தார். இதை யறிந்த பரமசிவன் மோஹம் கொண்டு மோஹினியுடன் ரமிக்க ஹரிஹர புத்திரரான சாஸ்தா மார்கழி மாதமும் உத்திர நக்ஷத்திரமும் பஞ்சமி திதியும் விருச்சிக லக்கினமும் கூடிய சுபதினத்தில் அவதரித்தார். பிறக்கும் பொழுதே தே கழுத்தில் ஒரு மணி யிருந்தது. வேட்டைக்குச் சென்ற பந்தள தேசத்து அரசன் இக் குழந்தையை பம்பாநதி தீரத்தில் கண்டான். தன் அரண்மனைக்கு கொண்டு வந்து ஜாதகர்மம் செய்து 'மணிகண்டன்' என நாமகரணமும் செய்தார்.

சரியான வயது வந்ததும் வித்யாப்பியாசத்திற்காக குருவினிடம் நமது மணிகண்டன் அனுப்பப்பட்டான். ஒரு வருஷ காலத்திற்குள் வித்தைகளையும் நன்றாக அப்பியசித்து விட்டதால் குருவும் இவனைக் கடவுளின் அவதாரம் என எண்ணினார். குரு புத்திரன் அந்தக குருடனாகவும், மூகனா (ஊமையா)கவும் இருந்தான். அதை மது மணிகண்டன் நிவர்த்தி செய்தான். பின் ராஜதானியை யடைந்தான். அக்காலத்தில் கர்ப்பவதிவான ராஜபத்தினி ஒரு புருஷப் பிரஜையைப் பிரசவித்தாள். ராஜாவும் மணிகண்டனுக்கு யுவ ராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்தார் இது அந்த ராஜ்யத்து மந்திரிக்கு சம்மதமில்லை. ஆகையால் மணிகண்டனை கொல்ல பல வழிகளைப் பார்த்தார். ஆபிசாரப் பிரயோகம் செய்தார்; விஷம் கொடுத்தார். ஒன்றாலும் மணிகண்டனைக் கொல்ல முடியவில்லை.

முடிவாக ராஜபத்னி மூலம் மணிகண்டனைக் கொல்லத் துணிந்தார் ராஜபத்னிக்கு அதிகத் தலைவலி யென்றும் அதைக் குணப்படுத்த புலிப்பால் வேண்டும் என்றும் கூறப்பட்டது. இக் காரியம் ஒருவராலும் முடியாத காரியமேயாம். மணிகண்டன் புலிப்பால் கொண்டுவர அனுப்பப்பட்டான். இதற்குள் 12 வருஷ காலமும் ஆகிவிட்டது. காட்டில் செல்லவும் மணிகண்டனை தேவர்கள் அணுகி அவளிடம் பூர்வ விருந்தாந்தங்களைக் கூறினர். இதற்குள் சுந்தர மஹிஷமும் மஹிஷியைவிட்டு அந்தர்த்தானமாசி பரமசிவனை யடைந்துவிட்டது. மஹிஷியும் தேவர்களை மறுபடியம் துன்புறுத்த ஆரம்பித்தான். அன்றிரவே மணிகண்டனுக்கும் மஹிஷிக்கும் சண்டை நடக்க, மஹிஷி சொல்லப்பட்டாள். உடனே அவள திவ்ய ரூபமடைந்தாள். சாபத்திலிருந்து விடுபட்டாள். இந்த மஹிஷியே சபரிமலையிலுள்ள 'மஞ்சமாதா'வாகும்.

வனத்திலுள்ள ஒரு பெரிய சிங்கத்தின் மீதேறி பல பெண் புலிகனோடு மணிகண்டன் பந்தன ராஜசானிக்குத் திரும்பினான். ஜனங்கள் காட்டு மிருகங்களைக் கண்டு பயந்து வீட்டினுள் ஓடியொளித்தனர். இவ் விஷயத்தைக் கேட்டு வெளியே வந்தார். உடனே மணிகண்டன் தன் பிதாவான ராஜாவை ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்து புலிப்பாலச்
கொடுத்தார். இச்சமயத்தில் அவ்விடத்துக்கு அகஸ்திய மஹரிஷி வந்தார்.
அகஸ்திய மஹரிஷி மணிகண்டனின் சரிதத்தை ராஜாவினிடம் கூறினார்.

பிறகு மணிகண்டன் விரயத்தோடு பந்தன ராஜாவினிடம் கூறியதாவது, ''பம்பா நதியின் கிழக்கில் நீலி மலை யிருக்கிறது. அங்கே ஒரு க்ஷேதிரம் கட்டி என் பிம்பத்தை பிரதிஷ்டை செய்யவும். என்னுடைய இடது புறம் மஞ்சமாதாவக்கும் கோவில் கட்டவும். என் கோவிலுக்குக் கிழக்குப் புறத்தில் பஞ்சேந்திரியங்கள் (5, அஷ்டராகங்கள் (8', திரிகுலங்கள் (3), வித்யாவித்யைகள் (2) ஆக 18 படிக்கட்டுகளைக் கட்டவும். இப் படிக்கட்டுகளைத் தாண்டி வருபவனுக்கு தான் என்னை யடைய முடியும். ஆதியில் சபரி தபஸ் செய்த பெருமையுள்ள இடமாகையால் இதை சபரிமலை அழைக்கவும் என் பூதகணங்களின் தலைவனான வாபரனையும் பிரதிஷ்டிக்கவும். என்னை தரிசிக்க வருவோர் பூரண பிரம்மசரியம் அனுஷ்டிக்க வேண்டும். சபரிமயைானது
தேஹிகளுடைய க்ஷேத்திரமும், நான் தேஹியும் ஆக இருப்பதால், இங்கே வருகின்ற பக்தர்கள் தன்னை மறந்து என்னிலேயே பரிபூரணமாக மனதை நிலைநிறுத்தி 18 படிகளையும் தாண்ட வேண்டும்" என அந்தர்த்தானமானார்.

அகஸ்திய முனிவரின் ஆக்ஞைப்படி க்ஷேத்திரம் முதலியன நிர்கிவிக்கப்பட்டன. பிம்பங்களும் பிரதிஷ்டிக்கப்பட்டன ராஜ்ய நிர்வாகத்தைச் தன் புத்திரனிடம் ஒப்பித்துவிட்டு பந்தன ராஜா தபம் செய்ய வனத்திற்குச் சென்றார்.

ஆனந்த போதினி – 1942 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment