Monday, August 31, 2020

 

குரவைக் கூத்து

("கரன்")

          சிலப்பதிகாரம் ஐம்பெருங் காவியங்களில் ஒன்றென்பது அனைவரும் அறிவர். அதில் ஆய்ச்சியர் குரவை என்ற அதிகாரத்தில் மாதரியின் முற்றத்தில் ஆடப்பட்ட வடப்பாலை என்னும் குரவைக் கூத்து ஆடும் இடம் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது.

          "இருசாண் குறுக்களவாக ஒரு வட்டமிட்டு, அவ்வட்டத்தின் திசைகள் நான்கன் பேரிலும் இவ்விரண்டு கோடுகளிட்டுக், கோணத்திசைகள் நான்கினும் ஒவ்வோர் கோட்டினைப் போக்கி அவற்றிற்குமேல் மண்டலஞ் செய்து பன்னிரண்டு வீடுகள் செய்வதாம்.'' அப்பன்னிரண்டு வீடுகளில் இராசிகள் பன்னிரண்டனுள் மேஷமுதல் கன்னி வரையில் உள்ள ஆறு இராசிகளையும் வலது புறமிருந்து இடது புறம் வரையிலுள்ள ஆறு வீடுகளிலும் துலாம் முதல் மீனம் வரையிலுள்ள ஆறு இராசிகளையும் இடது புறமிருந்து வலது புறம் வரையுள்ள ஆறு வீடுகளிலும் அமைத்தல் வேண்டும். இவ்வண்ணம் அமைந்த பன்னிரண்டு இராசிகளில், இடபம், கற்கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழு ராசிகள் மட்டும், யாழ் நரம்புகள் ஏழுடன் இயங்குவனவாகும்.

          யாழ் நரம்புகள் ஏழாவன: - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம. ராசிகள் யாழ் நரம்புகளுடன் சேர்தது வருமிடத்து குரல் சரம்புடன் துலாமும், துதத கரம்புடன் தனுசும், கைக்கிளை நரம்புடன் கும்பமும், உழை நரம்புடன் மீனமும், இளி நரம்புடன்மும், விளரி நரம்புடன் சிங்கமும் சாரும். இவ்வேழு நரம்புகளும் நிற்குமிடங்களிற் கண்ணன் முதலியோர் அக்காலத்தில் நின்று குரவையாடிய முறைப்படியே, மாதரி அவ்வேழு கன்னியரையும், குட திசைமுதல், இடமுறையாகக் குரல் முதலிய நரம்பிடங்களில் நிறுத்தினாள்.

          குரல் நடம்பிடத்து கின்றவட்கு மாயவன் எனவும், துத்த நரம்பிடத்தில் நின்றவட்குப் பிஞ்ஞை யெனவும், கைக்கிளை நரம்பிடத்தில் நின்றவட்கு ருக்குமணி எனவம், உழை நரம்பிடத்து நின்றவட்கு வாருணி எனவும், இளி நரம்பிடத்தில் நின்றவட்கு வெள்ளை (பலதேவன்) எனவும், விளரி நரம்பிடத்தில் நின்றவட்கு இரேவதி எனவும், தார நரம்பிடத்தில் வளுக்கு அசோதை எனவும் அவள் பெயரிட்டாள்.

          பின்னர், அவள் துழாய் மாலையை மாயவன் பெயர் கொண்ட மங்கையின் கழுத்திலிட்டு அவன் திருமகளையும் மறக்கும்படி செவ்விவாய்ந்த பிஞ்ஞைப் பிராட்டியின் மேன்மையை வியந்து நின்றாள். அவ்வேழு கன்னியரும் அவ்வட்டப்பாலை மண்டிலத்திற் சம நிலையாக நின்று தம்முள் கற்கடக்கை (நடுவிரலும், அணிவிரலும் மடக்கி, மற்ற இரு விரல்களையும்) கோத்து மண்டலித்துச் சூழ்ந்தனர். அவர்களுக்குள், குரல் நரம்பிடத்தில் நின்ற மாயவனாகிய கன்னி, தன கிளையாகிய துத்த நரம்பிடத்துப் பிஞ்ஞையினை நோக்கி, "கொல்லைப்புனத்துக் குருங் தொசித்தானை முலலைத் தீம்ண்ணால் பாடியாடக கடவோம்” என்றான். அவரும் மற்றையோரும் "ஓம்" என அதற்கிசைந்தனர். அவ்வளவில் குறல் நரம்பாகிய மாயவன் என்பாள் மந்த சுரமாகவும், துத்த நரம்பாகிய பிஞ்ஞை என்பாள் வலிசுரமாகவும் விளரி நரம்பாகிய ரேவதி என்பவள் வலிமையில்லாத மந்த சுரமாகவும், துத்தநரம்பாகிய பிஞ்ஞைக்குப் பற்றாகப் பின்வரும் பாட்டுக்களைப் பாடினர்: -

"கன்று குனிலாக கனியுதிரதத மாயவன்

இன்று நம்மானுள் வருமேல் அவன் வாயிற்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!'

 

"பாம்பு கயிறாக கடல்கடைந்த மாயவன்

ஈங்கு நம்மானுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!'

 

"கொல்லைபஞ்சாரல் குறுந்தொசித்த மாயவன்

எல்லை நமமானுள உருமேல் அவன் வாயில்

முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!''

 

      பின்னர்க் குரவையாடும் கன்னியர் எழுவரும் பிஞ்ஞைப் பிராட்டியார் கண்ணனோடு தொழுனையாற்றில் ஆடிய திருவளையாடலகளைப் பாடினார். மாதரி பகற்கதிரைத தன கையாழியன மறைத்த மாயவனுக்கு இடப் பக்கத்திலும், மதியையொத்த திருமேனி கொண்ட பலதேவனுக்கு வலப் பக்கத்திலுமாக நின்று சிறு புறமாகிய பிடரியினைக் காட்டிக் குரவையோடும் பிஞ்ஞைப் பிராட்டியின் தாள ஒற்றறுப்பைத் தாங்கி, நாரதனார் யாழ் நரம்பினை உருவி வாசிக மாயவன் தன் முன்னவனாகிய பலதேவனோடும் பிஞ்ஞை முதலிய பெண்மணிகளுடனும் துவராபதியிலே தாதெரு மன்றத்திலே அன்றாடிய குரவைக் கூத்தினைக் கண்கூடாக்கும். இக்கூத்து எவ்வளவு அழகாய்க் காணப்படுகிறது” என்று வியந்தாள். மேலும் அவள் அக்கனனியர்களை நோக்கி தோழிகாள்! நாம் எல்லோரும் சேர்ந்து கருடப்புள்ளை யூர்கின்ற கடல் வண்ணன் பெருமைகளைப் பாடுவோம் என்று கூறி அவர்களோடு மாதரியும் ஐயையும் கலந்து பல பாட்டுக்களைப் பாடினார்கள்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 



No comments:

Post a Comment