Monday, August 31, 2020

 

சகோதர வாஞ்சை

(அம்புநாதன்)

1. தம்பி அண்ணனைத் தந்தையாகவும் தேவதையாகவும் கருதி நடக்க வேண்டும் என்பது ஆன்றோர் அருளிய நீதி. அண்ணன் தன் தம்பியை தன் உயிராகப் பாவித்து அன்புபூண்டு ஒழுகவேண்டும். இராமனுடைய சகோதர வாஞ்சையை வாலி தன் தாரம் தாரைக்கு உரைக்குமிடத்து,

"தம்பிய ரல்லது தனக்கு வேறுயிர்

இம்பரி னில து என வெண்ணி யேய்ந்தவன்''

 

இப்பூவுலகில் தம்பிகளைத் தவிர தனக்கு வேறு உயிர் இல்லையென்று ஆராய்ந்து துணிந்த இராமன் என்று இராமரை சிறப்பித்துக் கூறுகிறான்.

2. இலக்குவன் இராமனிடத்தில் எவ்வாறு சசோதர வாஞ்சை பூண்டு ஒழுகினான் என்பதை கவனிப்போம். இராமனைக் கண்டவர்கள் இராமனுக்கு தம்பி உண்டு என்று அவனை விசாரிக்காது தெரிந்து கொள்ளலாம். இலக்குவன் நீங்காது எப்பொதும் பக்கத்திலிருந்து கொண்டிருந்ததால் இராமனுக்கு தம்பி உண்டென்று இராமனைப் பார்த்தவர்கள் எளிதில் அறிந்தார்கள். இலக்குவன் தாயாகிய சுமித்ரா தேவியை பரதாழ்வான் குகப்பெருமானுக்கு உணர்த்துமிடத்து,

"இராமனுக்குப் பின் பிறந்தானு முளனெனப் பிரியாதான் தாய்'' என்று வர்ணிக்கிறார்.

3. கைகேசியின் சூழ்ச்சியினால் இராமன் தனக்கு கொடுக்கப்பட்ட அரசை இழந்தார் என்றும் கானகத்திற்கேக வேண்டுமென்று அவள் தசரதனிடம் வரங்கள் பெற்ற செய்தி தனக்கு தெரியவந்தவுடன் கோபாவேசங் கொண்டு கைகேசியையும தசரதனையும் கொன்று விடுவதாக இலக்குவன் யுத்தத்திற்கு எழுந்தான். அது தெரிந்த இராமன் தம்பியை அணுகி விதி என்று நீதியைக் கூறிய காலத்து அண்ணன் கருத்துக்கு மாறுபட
அஞ்சி தன்னுடைய வாஞ்சையைத் தெரிவிக்கிறான்.

“நற்றாதையுநீ தனிநாயகன நீ வயிற்றிற்

பெற்றாயுநீயே பிறரில்லை''

 

இராமனைப் பார்த்து இலக்குவர் அவர் தனக்கு நன்மை நல்கும் தாதை கான்
றும், ஒப்பற்ற தலைவன் என்றும் ஈன்றெடுத்த தாயென்றும் தனக்கு வேறொ
வர் உலகத்தில் உற்றவரில்லை யென்றும் அதனால் தான் இராமனுக்கு கீழ்ப்
படிவதாக கோபத்தைத் தவிர்த்தான்.

4. இலக்குவன் பூமியில் வில்லை யூன்றிக்கொண்டும் துக்கத்தினால் பெகு மூச்சு விட்டுக்கொண்டும் கண்களை இமைக்காமல் விழித்துக்கொண்டு இரவு முழுமையும் இராமனும் பிராட்டியும் புற்றரையில் துயிலுணர மருங்கே நின்று காவல் புரிந்தான்.

 

“அல்லையாண் டமைந்தமேனி யழகனு மவளுந் துஞ்ச

வில்லையூன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும் வீரன்

கால்லையாண் டுயர்ந்த தோளாய் கண்கணீர் சொரியக் கங்குல்

எல்லைகாண் பளவு நின்றா னிமைப்பிலன் யனமென்றான்”


இப் பாசுரத்தில் குகப்பெருமான் இலக்குவன் காவலை பரதாழ்வாருக்கு தெரிவிக்கிறான். இராமன் எவ்வண்ணம் இலக்குவனிடத்தில் வாஞ்சை காட்டினாரென்று கவனிப்போம்.
சுக்ரீவன் அண்ணணுக்குத் துரோகி. அவன் போர் நியாயம் அன்று என்று இலக்குவன் இராமபிரானிடம் உணர்த்திய போது அவர் மாற்றாந்தாய் வயிற்றிலோ ஒரே தாய் வயிற்றிலோ பிறந்தவர்கள் சகோதர வாஞ்சையில் பரதனுக்கீடாக மாட்டார்கள் என்றும், அவர்களிடம் சகோதர வாஞ்சை இருக்குமானால் பரதனுடைய சகோதர வாஞ்சைக்கு
மேன்மை கிடையாதென்றும் விலங்கினமாகிய குரங்குகளுக்குள் ஒழுங்கீனம் இருப்பது இயல்பு என்றும் இராமன் விடை பகருமிடத்து இலக்குவனை இராமன் “அப்பா" என்று விளிக்கிறார்.

''அத்தாவிது கேளென வாரியன் கூறுவானிப்

பித்தாய விலங்கி னொழுக்கினைப் பேசலாமோ

வெத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்க ளெல்லா

மொத்தார் பரதன் பொதுத்தம னாதலுண்டோ”

 

இலக்குவன் இராமனுக்கு தசரதனாக விளங்கினான். எல்லையற்ற அன்பு இராமனிடம் பாராட்டி கன்றைக் காக்கும் தாய்ப்பசுபோல் இராமனைக் கண்ணுங்கருத்துமாய் கவனித்து வந்தான். இந்திரஜித் ஏவிய நாக பாசத்தால் இலக்குவன் பிணிக்கப்பட்டு மூர்ச்சையாகி கிடந்தகாலத்து இராமன் பெருமூச்செறிந்தார். உயிரும் உணர்வும் சோர்ந்தார். என்ன செய்வது என்று தெரியாது திகைத்தார். இலக்குவன் வாயிலும் மூக்கிலும் கையை வைத்து
சுவாசத்தின் அடையாளம் ஏதேனு மிருக்கிறதாவென சோதித்து, “இலக்குவா நீ பிழைப்பாயா'' என்று கதறினார்.

      5. பரதாழ்வான் சகோதர வாஞ்சைக்கு எல்லைக்கல். கேகய நாட்டிலிருந்து பரதாழ்வான் அயோத்திக்குவந்து தன் தாயின் சூழ்ச்சியினால் இராமன் கோல் துறந்து, நகர் நீங்கி கானகம் சென்றார் என்று தெரிந்து கொண்டவுடன் ஆற்றொணாத் துயரமடைந்தார். தன்னுடைய தாயும் தந்தையும் கடவுளும் அண்ணனுமாகிய நற்குணங்களுக்கு உறைவிடமாகிய இராமனை தான் காட்டிற்குச் சென்று வணங்கினாலொழிய தன் துயர் நீங்காது என்று காட்டிற்குப் புறப்பட்டார்.

''எந்தையும் யாயு மெம்பிரானு மெம்முனும்

அந்தமில் பெருங்குணத திராம னாதலால்

வந்த னையவன் கழல்லைத்த போதலாற்

சிந்தைவெங் கொடுந்துயர் தீர்கலா தென்றான்"

 

சகோதர பிரிவாற்றாமையினால் மரவுரி உடுத்தார். ஜடையைத் தரித்தார்; சுகத்தைத் துறந்தார்; முகம் ஒளி இழந்தது; மனம் நைந்து உருகியது.

தசரதன் தனக்கு அரசு கொடுத்தால் மூத்த மகனுக்கே முடி சூட்டும் குலாசாரத்திற்கு மாறுதலாக நடந்து பழிக்குள்ளானானென்று ஏங்கினார். இராமன் திருவடிபட்ட தென் திசை டாக்யம் செய்த திசையென அதை மீண்டும் நமஸ்கரித்தார். இராமனை அயோத்திக்கு அழைத்து வர சித்ரகூட பர்வதத்திற்கு புறப்பட்டார். இராமன் துயிலுணர்ந்த இடத்தைக் கோபிலெனக் கருதி அதை வலம்வந்து கண்ணீரால் அபிஷேகம் செய்தார். தன்னை நொந்து கொண்டார். இராமனுடைய இன்னுயிர்த் துணைவன் குகனானால் அவளைத்தான் முதன் முதலில் கண்டு வணங்க வேண்டுமென்று கடுகிச் சென்றார். சென்னிமீது கரங்களைக் குவித்து கண்ணீர் ஆறாய்ப் பெருக துக்கம் என்னும் சித்திரம் நடைபெயர்ந்து சென்றது போல் சித்ரகூட பர்வதத்திலிருந்த இராமனை அணுகினார். எவ்வளவோ மன்றாடி இறைஞ்சியும் இராமன் நாட்டிற்கு வர மறுதலித்து பரதாழ்வானை ஆளும்படிக் கட்டளை யிட்டார். பரதாழ்வான் கோரியபடி திருவடித்தலம் இரண்டையும் வழங்கினார்.
பரதன் இராமன் பதினான்காவது ஆண்டு கழிந்தவுடன் அயோத்திக்கு வந்து செங்கோல் செலுத்த வேண்டுமென்றும் இல்லாவிடில் தான் தீக்கிரையாவதாகவும் இராமன் பேரில் ஆஃ ணையாக சபதம் செய்தான். சகோதர வாஞ்சை பொங்கி வழியும் அச்செய்யுள் பின்வருமாறு,

"ஆமெனி லேழிரண் டாண்டி லையரீ

நாமநீர் செடுக்கர் நன்னி நானிலம்

கோமுறை புரிகிலை யென்னிற் கூசெரிச்

சாமிது சரத நின்னாணை சாற்றினேன்''

 

குகப்பெருமான் பரதாழ்வானுடைய உறுதியை வியந்து ''ஆயிரம் இராமர்
நின்கேழாவரோ தெரியில் அம்மா'' என்று ஏத்தித் துதிக்கிறான்.

6. சத்ருக்கனனுடைய சகோதர வாஞ்சையை ஆராய்வோம். இலக்குவன் இராமனை விட்டகலாது பணிவிடை இயற்றிக்கொண்டிருந்தது போல் பரதாழ்வானுக்கு மருங்கில் எப்போதும் இருந்து கொண்டு குற்றேவல் செய்து கொண்டிருந்தான். குகப்பெருமான் பரதாழ்வானையும் பக்கத்திலிருந்த சத்ருக்கனனையும் பார்த்து,

''நம்பியுமென் நாயகனை யொக்கின்றா னயனின்றான்

தம்பியையு மொக்கின்றான்''

 

என்று வியந்து கூறினான். பதினான்காவது வருஷம் முடியும் சமயம் வந்து விட்டது. ஆவலோடு எதிர்பார்த்திருந்த இராமன் வரவில்லை. தீமூட்ட பரதன் உத்தரவிட்டான். சத்ருக்னனைப் பார்த்து நான் தீக்கிரையாகிறேன்; நீ அரசை ஏற்றுக்கொள் என்று அழுதுகொண்டே தம்பியிடம் வரம் வேண்டினான். அதற்கு சத்ருக்கனன் பின்வரும் சகோதர வாஞ்சை ததும்பும் அருமையான செய்யுளின்படி,

"கானான நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு

போனானு மொரு தம்பி போனவர்கள் வருமவதி போயிற்றென்னா

ஆனாதவுயிர்விட வென்றமை வானுமொரு தம்பியயலே நாணா

தியானா மிவ்வரசால்வென வென்னே யிவ்வரசாட்சி யினிதே யம்மா.''

இராமபிரான் அரசை நீத்து காட்டிற்கு சென்ற போது தொடர்ந்து சென்றான் இலக்குவன். இராம இலக்குவர்கள் குறித்த கெடுவில் வரவில்லையென்று அருமையான ஆவியை நீ துறக்கிறாய். வெட்கமில்லாமல் உன் பக்கத்திலிருக்கும் மற்றொரு சகோதரனாகிய எனக்கு இந்த அரசியல் விருப்பமா? நான் உனக்கு முன் தீக்கிரையாவனே அல்லாது அரசையும் ஆவியையும் பொருட்படுத்தாத தியாகிகளுக்கு உடன் பிறக்கும் பாக்கியம் வாய்த்த நான்
அரசையும் உயிரையும் சுமக்கமாட்டேன் என்று விடை பகர்ந்தான்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment