Wednesday, August 26, 2020

 

இமய மலை எங்கள் மலை

(T. S. ராஜகோபாலன், B. A., L. T.)

மனிதனாய்ப் பிறந்த எவனுக்கும் தேசாபிமானம் அவசியம் என்பதைப் பலதேசப் பெரியோர்களும் அவரவர் பாஷைகளிலே வற்புறுத்தி யிருப்பது அறிவாளிகள் அறிந்ததொரு ஸர்வ சாதாரணமான விஷயம். நமது நாட்டுப் பெரியார்களும் அவ்விதம் சொல்லி யிருக்கின்றனர்! சொல்லி வருகின்றனர்!! சொல்லவும் செய்வார்கள்!!! பாரதியாரும்
அவ்வகையிலேயே “வந்தே மாதரம்'.... தாய்நாட்டை வணங்குவோம் என்ற பாடலைத் தவிர, மற்ற பல பாடல்களிலும், அவசியமும் சந்தர்ப்பமும் சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சொல்லியிருப்பது பலரும் அறிவார்கள். அவர் பாடல்களில் எதைப் பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும் தேசாபிமானம் ஏற்படுவது திண்ணம். அந்த முறையில், 'சுதேச வணக்கம்'' என்ற பாடலுக்குப் பிறகு, பிரத்தியக்ஷப் பிரமாணமாய்க் காணக்கூடிய சில அசைக்க முடியாத சான்றுகளைப் பொறித்து நமது நாட்டின் சிறப்பை வருணித்து அதன்மூலம் நம் பாரத நாட்டில் பிறந்ததன் பெருமையை விளக்குகிறார். காலம் இப்பொழுதுள்ள நிலையில் ஆராய்ச்சியின் காரண'மாக அறிவு விசாலமாகி, பிரத்தியக்ஷ ப்ரமாணங்களின் மூலமாகவேதான் எதையும் ஒப்புக்கொள்ளும் நிலைமையில் அனைவரும் வாழுகிறோம். பிரத்தியக்ஷப் பிரமாணங்களும் "வெள்ளைக்காரர்களான மேற்கு நாட்டார்களுடைய மோதிப்பு முத்திரைகளும் கூடி" யுள்ளனவாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு நம்மையும் மறந்த மேல் நாட்டு மோகாந்தகாரத்தில் நம்மில் இன்னும் பலரும் மூழ்கிக் கிடக்கிறோம்!

மேற்கு நாட்டார், முக்கி முக்கிப் பார்த்தும், பல உயிர்களைத் துறந்தும் கணக்கிட முடியாத உயாமுடைய ''இமயமலை' தான் முதல் பிரத்தியக்ஷப் பிரமாணம். இதுபோன்ற மூன்று உதாரணங்கள் முதல் பாட்டில் இருப்பதை,

“மன்னு மிமயமலை எங்கள் மலையே!

மாநிலமீ திதைப்போற் பெரி தில்லையே!!

இன்னறு நீர்கங்கை யாறெங்கள் யாறே!

இங்கிதன் மாண்பிற்கு எதிரெது வேறே!!

பன்னரு முபநிடத நூலெங்கள் ஏலே!

பார்மிசை ஏதொரு ஏலிது போலே!!”

 

(ஆகையினால் ஏ பாரத மக்களே!)

 

“பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே!

போற்றுவோ மிஃதை எமக்கில்லை யீடே!!”


என்று பூபாள ராகத்தில் பாடவேண்டு மென்பதையும் சேர்த்து, படித்துச் சிந்தித்து உணரலாம். விடியற் காலத்திலே உதயவேளையில் பூபாளம் பாடுவதென சங்கீத ரவிகர்கள் வல்லவர்கள் சொல்லுவது இயற்கை. “ஓ! இந்தியர்களே இதுவரையில் தூங்கினாலும் இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். மேற்குநாட்டார் வந்து நமதுநாட்டு அற்புதங்களை அடுத்தடுத்து முயன்றும் அளவிடக்கூடாத நிலையில் பிரமித்து நிற்கின்றனர். கங்கை சதி
ஜலத்தின் மகிமைகளையும் சக்திகளையும் பற்றி ஆராய்ச்சி செய்து ஆஹாஹா வென்று ஆச்சரியப்படுகின்றனர். மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மனி அறிவாளி வேதங்களை யெல்லாம் அப்படியே கொண்டுபோய் மொழி பெயர்த்து ஸாரங்களை மேற்குநாட்டார் பருகி ஆத்மார்த்த அறிவு பெற்றதுடன், நமக்கும் அனுப்பி நம்மையும் தட்டிக் கொடுக்கின்றனர்.
இவ்வளவும் இருக்க நீங்கள் மட்டும் "பசி தீர உண்பதும், முயங்குவதும், உறங்குவதும், இறப்பதுமாய், பாமரராய் விலங்குகளாய்த் திரிய வேண்டாம்'' என்று சொல்லுவது போல் தோன்றுகிறது. பாரதியார் என்ன நினைத்து பாடினாரோ? நாட்டு வழக்காக “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு'' என்ற முறையில் "பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே! போற்றுவோ மிஃதை எமக்கில்லை யீடே!'' என்று சொல்ல வில்லை என்பதையும் உணரவேண்டும். கங்கா ஜலத்திற்குள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தியும், தாமிரப் பாத்திரத்திலோ, எந்தப் பாத்திரத்திலோ மாதக் கணக்காக, வருஷக் கணக்காக அடைத்து வைத்தாலும், பாசி பிடித்து, நாற்றமடித்துப்போகும் தன்மை யற்ற குணமும் இவற்றை மேற்கு நாட்டார்கூட ஒப்புக்கொள்ளும் பெருமையும் தமிழ்நாட்டில் சில வருஷங்களுக்கு முன்னால் பிரசாரம் செய்யப்பட்டது யாவருக்கும் ஞாபக மிருக்கலாம்.

இரண்டாவது பாட்டிலுள்ள சான்று றுகளும், சரித்திரங்களில் கண்டவற்றைக் கையாளுவது தெளிவாகும்.

மாதவ வீரர் மலிந்த நன்னாடு!

மாமுனிவோர் வாழ்ந்த பொன்னாடு!!

நாரத கானம் நலந்திகழ் நாடு!

நல்லன யாவையும் நாடுறு நாடு!!

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு!

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு!!

பாரத நாடு பழம்பெரு நாடே!

பாடுவோ யிஃதை எமக்கில்லை யீடே!!

 

என்றதில், பலபல வீரர்கள் கூர்க்கர்கள் என்றும், சீக்கர்கள் என்றும், ராஜ புத்திரர்கள் என்றும், வீரமறவர்கள் என்றும், வங்காளிகள் என்றும், ஹிந்துஸ்தானத்து மல்லர்கள் என்றும் கண்டு வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருப்பவர்களில், மஹாராஷ்டிரர்களை இங்கு எடுத்து “மாரத வீரர்" மலிந்த நன்னாடு என்று எழுதியிருக்கிறார்.
அப்படி எடுத்து இங்கே எழுதிய காரணத்தையும் அந்தக் கொடிவணக்கப் பாட்டிலேயே, “போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்'' என்ற குறிப்பிலேயே காட்டுகிமுரோ என்று நினைக்கவேண்டி யிருக்கிறது. இப்படி முரட்டு வீரர்கள் மட்டுமின்றி, மாமுனிவோர் பலர் வாழ்ந்ததையும் சொல்லி அக்காலத்தில் பத்துத்திக்குகளிலும் ஜெயத்துடன் சென்றுவரும் சக்கரவர்த்திகளும், திரிகாலமும் உணர்ந்து முற்றும் துறந்து “லோகா ஸமஸ்தாத் சுகினோபவந்து" என்றபடி “நாட்டின் நன் னலமெண்ணிப் பூசை செய்யும்" பெரியார்களான
முனிவர்களின் யோசனைகளைக் கேட்டே. குடிகளைக் கொற்றவன் குழந்தைகளாகவும், குடிகள் கொற்றவனைக் கொண்ட தகப்பனாகவும் பாவித்து ராஜரீகம் நடந்ததென்பதைச் சித்திரிக்கிறார். அடுத்து பூரணஞானம் பொவிர்து, 'எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிருக் கவ்வுபிராய் அங்கங்திருப்பது நீயன்றோ பராபாமே" என்ற தாயுமானார் வாக்குப் பிரகாரமும், எல்லா உலகிற்கிறைவன் ஒருவன், எல்லா உடலும் இறைவன் ஆலயமே" என்ற அறநூல் வாக்குப் பிரகாரமும், யாகப்பசுவாக வந்த நொண்டியாட் இக்குட்டியைச் சுமந்து. அக்குட்டியனுடைய தாயின் நன்றியறிதல் கண்ணிரைக் கண்டு சித்தமிரங்கி, சைசுநாக வம்சத்தைச் சேர்ந்த மகத அரசன் பிம்பிசாரன் ராஜசபையில் உயிர்க்கொலை யாகத்தை நிறுத்தி. அஹிம்சா தர்ம சக்தியை நிலைநிறுத்திய, 'புத்தர் பிரானருள் பொங்கிய சாடு" என்பதில் எவ்வளவு கருத்துக்களை ஆழ்த்திப் பதித்திருப்பது விளங்கும். இவையெல்லாம் இன்று நேற்று அல்ல! ஆனால் வெகு பழமையான காலத்தில் என்பதை, "பாரதநாடு பழம் பெருநாடே! பாடுவம் இஃதை யெமக்கில்லை வீடே!'' என்று ணர்த்துவது வெகு அழகு

முதல் பாடலில் பிரத்தியக்ஷமான ருஜுக்களையும் இரண்டாவது பாட்டில் சரித்திர சம்பந்தமான ருஜுக்களையும், “அணுவைத் தொளைத்து ஏழு கடலையமைத்த குறளை "ப்போன்று சுருக்கமாக அமைத்து, அதே போக்கில் பூகோள, பூசார ருஜுக்களையும் கொடுத்து நம்மில் பலருக்குப் புத்தி வரக்கூடிய நிலைமையை விளக்கி, மூன்றாவது பாட்டில் காட்டுகிறார். எடுத்த எடுப்பில்,

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்!

தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்!!

என்றும், அப்படிப் பாடுபடும்போது,

இன்னல் வந் துற்றிடும் போததற் கஞ்சோம்!

ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்!!

 

என்றும், நம்மெல்லாரையும் நினைக்கச் செய்கிறார். இவ்வளவு சொன்ன பிறகாவது 'பண்டுபோயின நாட்களுக்கு இனி மனம் நாணும் மனோபாவம் வாட்டும்' என்று விரும்புகிறார் போலும். ஏனெனில்,

கன்னலும் தேனும் கனியுமின் பாலும்,

செந்நெலும் கதலியும் நல்கு மெக்காலும்!

அப்படிப்பட்ட,

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

ஓதுவம் இஃதை யெமக்கில்லை யீடே!!

 

என்று நம்மெல்லாரையும் ஊக்கப்படுத்தும் நேர்த்தியை எவ்வளவு விவரித் தெழுதினாலும் போதாததாகும்; முடியாததும் ஆகும். இயற்கை வளம் பொருந்தியது இந்தியா. பயிர் விளைவுக்கு அத்தியாவசியமான சூரிய உஷ்ணம் வேண்டியது உள்ளது இந்தியா.
நல்ல மழையல்லது மழையால் போஷிக்கப்பட்ட நதிகள் உள்ளது இந்தியா. பயிர் செய்வதற்கு விஸ்தார மானதும் உரமுள்ள திமான நிலப்பரப்பை உடையது இந்தியா. நல்ல விவசாயம் முறை தெரிந்து அனாதிகாலந்தொட்டு, பலவகை விளைபொருள்களை விளைவிக்கக்கூடிய அறிவும், ஆற்றலும் ஒருங்கே யமையப்பெற்ற புண்ணியமக்கள் நிறைந்தது இந்தியா. கிருஸ்து பிறப்பதற்கு பல ஆயிர வருஷக்களுக்கு முந்தியே அறுசுவை பேதங்களுடன், உண்டி சமைத்து விருந்தினரை, ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்தது உலக சரித்திரத்திலேயே இந்தியா. நூறு குற்றங்களல்ல நூறாயிரம் குற்றங்களை, ஆயிரம் தடவைகளிலல்ல நூறாயிரம் தடவைகளில் மறந்து குற்றங்களை யெல்லாம் நீக்கி, நன்குணத்தைக் கொள்ளப்பழகி, அனுஷ்டிப்பது இந்தியா, தினையளவு நன்றி செய்யினும் பனையளவாகக் கொள்வர் பயன்றெரிவார் என்பதை கணக்குக்கு அகப்படாத முற்காலத்திலேயே போதித்திருப்பது இந்தியா. மிக நாகரீக முற்போக்கடைந் திருப்பதாகக் கொள்ளும் இந்தப் பேய் நாகரிக காலத்திலும், அஹிம்சையின் வெற்றி பெறுவோம் என்று அன்று "அருள் வாட் சுடர் கொண்டேந்திய அசோகனார்" கொள்கையை இன்று சந்தேகப்ரவர்த்திகளுக்கும் உளங்கொக நடத்திக்காட்டுவது இந்தியா. பாரி ஆயி, சந்திரன் சுவர்க்கி, சடையப்பவள்ளல் போன்ற வள்ளல்கள் பிறந்து வழிகாட்டியது இந்தியா. பசுங்கன்றின் உயிர்க்காக தன் சீமந்த புத்திரனைத் தேர்க்காலில் கிடத்தி உயிரைக்கொடுத்து நீதியைப் பரிபாலனம் செய்தது. இந்தியா. இது புராணக் குப்பையென்றால், மொகலாய சக்கரவர்த்தினி நூர்ஜஹான் ஆராய்ச்சி மணியைக்கட்டி, அதை அடித்து உள்ளேவந்த வண்ணாத்தி கையில் துப்பாக்கியைக் கொடுத்து, வண்ணானைக் கொன்ற சக்கரவர்த்தியைச் சுடும்படி அனுமதி யளித்ததையாவது நம்பலாகாதா?

இவ்வளவு சான்றுகளும் வெள்ளைக்காரர் முத்திரையுள்ளவை யென்பது மீண்டும் குறிப்பது மிகையாகாது. உலகத்திலுள்ள முக்கியமாக உஷ்ணம், சமசீதளம், அதி தளம் என்ற மூன்று வகை சீதோஷ்ணங்களின் பிரதேசங்களையும், அதற்கேற்ற ஜீவராசிகளையும், பயிர் வகைகளையும் ஒருங்கே யமையப்பெற்றது உலகத்திலேயே இந்தியா. பல தீர்த்தங்களும், ஆலயங்களும், பலவித இயற்கை யழகுகளையும் கொண்டது இந்தியா. பல மதாசாரங்களையும் தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை
செப்பொணா இடர்க்கடலை ஜெயித்தே நின்று கர்ஜித்து விவேக. கர்தர் நிலை நிறுத்திவைத்த ஹிந்துமதம அனாதிகாலந்தொட்டு ஏற்பட்டது இந்தியா நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து, ஸோ ராஸ்ட்டர், கன்பூஷியஸ் முதலிய முக்கிய மதஸ்தாபகர்களையும் ஈன்ற ஆசியாவிலுள்ளது இந்தியா. தன்னளவிலும் புத்தர், மஹா வீரர், குரு நானக், சங்கரர், ராமாநுஜர், மத்வர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்தர் பிறந்து உலகத்தாரால் அடிவணங்கப்பட்டது இந்தியா, இந்தியாவில், 'எல்லோரும் அமரநிலையை யெய்தும் வழியை உலகிற்களிக்கப் போவது இந்தியா. ஆம். இந்தியா உலகிற் களிக்கும்!

நாட்டு வழக்கமாக ஒரு தூதன் எதோ ஒரு இந்திய அரசனிடம் வந்து, ''மஹாராஜா....... வந்து நமது ஊரிலுள்ள, அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் கொண்டு போய் விட்டாள் என்று சொன்ன சாரத்தை சாந்தமாக ஏற்றுக்கொண்டு, “என்ன முழுகி விட்டது? என் தெய்வத்தையும், காற்றையும், மேகத்தையும், சூரிய வெளிச்சத்தையும், பூமி சாரத்தையம் கொண்டு போய்விடவில்லையே?" என்று பதில் சொன்னதாக கேரளப் பிரதேசக் கதையொன்றுண்டு. அம்மாதிரியாக 'உள்ளதைக்கொண்டு, போனதற்கு வருந்திப் புழுங்காத புனிதர்கள் எவ்வளவோ? இவ்வளவு சுகங்களும், செல்வங்களும் இருந்தாலும், 'பிறந்தவர் யாவரும் இறப்பதுறுதி'' "வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்'' ''பிறக்கும்
பொழுது கொண்டு வராமலும், இறக்கும் பொழுதுகொண்டு போகாமலும், நடுவே குறிக்கு மிச்செல்வம்' என்பதையும் அறிந்து "கமலநீர்போல் பிரிந்திருந்து வாழ்க்கை நடாத்தி தெய்வத் திருவருளில் கலந்து கொண்ட தியாகிகள், ராஜரிஷிகள் எத்தனை பேர்? அவ்வளவும் கொண்டது இந்தியா. அந்த இந்தியாவை, இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவனும், இந்தியன், இந்தியன் என்ற பெருமை கொண்டு, உலகத்தில் இகழ்ச்சியைப் போக்க முயலுவதற்கு ஆதாரமானவை அவ்வளவு பாரதி பாடல்களும். அனைவரும், படித்து பாடி, படிப்பித்து பாடு வித்து, கேட்டு, கேட்பித்து எல்லாரும் இன்பநிலை யெய்த அன்னை பாரத சக்தி அருள் புரிவாளாக.

உன்னத ஆரிய சாடெங்கள் நாடே!

ஓதுவம் இஃதை யெமக்கில்லை யீடே!!

 

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment