Wednesday, August 26, 2020

 ஆன்றோர் அமுதமொழிகள்

 

1.     There is no happiness without action (Disraeli.)

தொழிலின்றியிருப்பதில் சந்தோஷமே கிடையாது (டிஸ்ரேலி)

 

2.     The great end of life is not knowledge but action (Huxley.)

நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஆதாரம் செய்கையேயன்றிப் படிப் பல்ல

(ஹக்ஸ்லி)
 

3.     There is no education like adversity (Disraeli.)

கஷ்டகாலத்தைப்போல் (அறிவையுண்டாக்கும்) படிப்பு வேறெதுவு மில்லை

(டிஸ்ரேலி)
 

4.     Ambition has no rest (Lytton.)

பேராசைக்கு ஓய்வேகிடையாது (லிட்டன்)


 

5.     Anger is a short madness (Horace.)

கோபம் கொஞ்சநேரமுள்ள பைத்தியமாம் (ஹொரேஸ்)

 

6.     Preferment goes by letter and affection (W. Shakespeare.)

உத்தியோகத்தில் உன்னத பதவியடைவது, கௌரவமான பெரியோரின் வாக்கு சகாயத்தினாலும் தயையினாலுமே (வி. ஷேக்ஸ்பியர்)

 

7.     Avarice is always poor (Johnson.)

பேராசை தீராத் தரித்திரம் (ஜான்ஸன்)

 

8.     Beauty is truth, truth beauty (Keats.)

அழகே உண்மை, உண்மையே அழகு (கீட்ஸ்)

 

9.    A hard begioning maketh a good ending (Heywood.)

தொடக்கத்தில் துன்பம் முடிவில் இன்பம் (ஹேவுட்)

 

10.    There is healing in the bitier cup (Southey.)

கசப்பில் (சுகந்தரும்) குணம் உண்டு (சதே)

 

11.   Full many a gem of purest ray serene the dark unfathom'd caves of ocean bear (Thomas Gray.)

சுத்தமும், பிரகாசமும் பொருந்திய அநேக இரத்தினங்கள் ஆழம் பொருந்திய சமுத்திரத்தில் மறைந்து கிடக்கின்றன. (அவற்றைப் போல் மகிமையுள்ள பெரியார் பெயரும் மனிதர் கூட்டத்தில் அவர்களின் சொரூபம் தெரியாது மறைந்திருக்கின்றது) (தாமஸ் க்ரே)

12.    Who goeth a borrowing goeth a sorrowing (Tusser.)

      எவன் ஒருவன் கடன் படுகிறானோ அவன் வருத்தத்துக் குள்ளா கிறான் (டஸ்ஸீர்)
 

13.    Better is to bow than to break (Heywood.)

எதிர்ப்பதைக்காட்டினும் இணங்குவது நலம் (ஹேவுட்)

 

14.    The brave die never (Bailey.)

பராக்கிரமமுள்ளவர்கள் இறப்பதே கிடையாது (பெய்லி)
 

15.    Childhood should begin with obedience (Smiles.)

பாலியம் வணக்கத்துடன் ஆரம்பமாக வேண்டும் (அதாவது பாலியர்கள் வணக்கத்துடன் இருக்கவேண்டும்) (ஸ்மைல்ஸ்)

 

16.    He who is unmoved by tears has no heart (Napoleon.)

பிறர் கண்ணீரைக்கண்டு இரங்காதவன் கடினசித்தமுடையவனாவான். (நெபோலியன்)
 

17.    Cleanliness is next to godliness (J. Wesley.)

பரிசுத்தம் தெய்வபக்திக்கு அடுத்தபடியாம் (ஜெ. வெஸ்லி)

 

18.    Treason seldom dwells with courage (Scott.)

இராஜதுரோகம் பராக்கிரமமுள்ளவர்களிடம் குடிகொள்வது அருமை (அதாவது வலிமையுள்ளவர்கள் அரசனை வஞ்சித்து அவனுக்குத் துரோகஞ் செய்ய மாட்டார்கள்) (ஸ்காட்)

 

19.    Be true to your own convictions (Channing.)

உன் குற்றத்தை நீ அறிந்துகொள் (சானிங்)

 

20.    Courage leads to heaven; fear to death (Seneca.)

தைரியம் சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறது பயம் சாக வழிகாட்டுகிறது (செனகா)
 

21.    Courage conquers all things (Ovid.)

துணிகரம் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது (ஆவிட்)

 

22.    The best cure for the body is to quiet the mind, (Napoleon.)

கவலையற்ற மனமே சரீரத்திற்கு நல்ல மருந்து (நெபோலியன்)

23.    Cowards fear to die (Raleigh.)

கோழைகள் சாக பயப்படுகிறார்கள் (பாலி)

 

24.    Confidence is the secret of strength (Monod.)

மனவுறுதியே நமது வலிமைக்கு ஆதாரம் (மானாட்)

 

25.    Cowards die many times before their death (W. Shakespeare.)

கோழைகள், தாம் இறப்பதற்கு முன் அனேகந் தடவைகள் இறக்கிறார்கள் (அதாவது அடிக்கடி நேரும் சிறு காரியங்களிலும் அஞ்சி இறந்தவர் போலாகிறார்கள்) (வி. ஷேக்ஸ்பியர்)
 

26.    Neither fear nor wish for your last day (Martial.)

உன்னுடைய அந்தியநாளைப்பற்றிப் பயப்படவும் வேண்டாம்; அதைப் பற்றி எண்ணவும் வேண்டாம் - (மார்ஷல்)

 

27.    Through danger safety comes through trouble rest (Morston)

அபாயம் பாதுகாப்பையும் கஷ்டம் சுகத்தையும் தரும் (மார்ஸ்டன்)

 

28.    One develops the propensities just according to the company one moves in; apd agajn, one seeks the com. napy suiting bis propensities – (Sri Ramakrishna.)

ஒருவன், தான் பழகும் சகவாசத்திற்குத்தக்க குண விசேஷங்களை யடைகிறான்; இன்னும் ஒருவன் தன்குண விசேஷங்களுக்குத் தக்க சகவாசத்தையே தேடுகிறான்.

(ஸ்ரீ - இராமகிருஷ்ணர்)

 

29.    The locomotive engine pot only moves on and reaches the destination but also takes with it a long train of waggons behind, so are our saviours; they carry n ultitudes of men heavily laden with sin to the presence of the Almighty - Sri Ramakrishna.

இருப்புப்பாதையில் நீராவியந்திரவண்டி, தான் மட்டும் செல்வதன்றி அநேக பளுவான சாமான்களையும் தன்பின்னால் இழுத்துச் செல்வது போல, அவதார புருடராகிய லோகரட்சகரும் அதிக பாவம் செய்த மனிதர் கூட்டங்களை ஈசுவரனது சந்திதானத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்கள் (அதாவது கடவுளை யடையும் வழியை அவர்களுக்குக் காட்டுகிறார்கள்). (ஸ்ரீ - இராமகிருஷ்ணர்)


30
.    Better to have an open enemy than bidden friends – (Napoleon.)

உள்ளொன்றும் புறமொன்று முடைய சிநேகிதரைக்காட்டிலும் வெளிப்படையாயுள்ள விரோதியே சிலாக்கியமானவன். (நெப்போலியன்)


31.
   Misery acquaints a man with strange bed - fellows (Shakespeare.)

கஷ்டகாலம் ஒருவனை முகமறியாதவரிடத்திலும் சிநேகம் செய்யத் தூண்டுகிறது. (ஷேக்ஸ்பியர்)
 

32.   The more virtuous a man is the more virtues does he see in others – (Scott.)

உத்தம குணங்களை யுடையவன் எல்லோரையும் உத்தமராகவே கருதுகிறான். (ஸ்காட்)

 

33.   Do not vield to misfortunes but meet them with fortitude – (Virgil.)

கஷ்டங்களுக்கு இடங்கொடுக்காமல் அவற்றைத் துணிகரத்தோடு எதிர்த்துத் தள்ளு. (வர்ஜில்)


34.
   Tbere is no religion higher than trutb (Shakespeare.)

சத்தியத்தைக் காட்டிலும் மேலான கொள்கை வேறொன்றுமில்லை. (ஷேக்ஸ்பியர்)


35.   
Life has no pleasure nobler than that of friendship (Dr. Johnson.)

மனிதவாழ்க்கைக்குச் சிநேகத்தன்மையைக் காட்டிலும் உயர்வான சந்தோஷம் வேறு கிடையாது. (டாக்டர் ஜான்ஸன்)

 

36.    Oppose not rage while rage is in its force, but give it way awhile and let it waste- (Shakespeare,)

(ஒருவரிடத்தில்) கோபம் மிகவும் அதிகரித்திருக்கும் போது (நீ) அக்கோபத்தை எதிர்க்காதே; கொஞ்சநேரம் அதுபோகிற வழியே விட்டு விடு; அது தானே தணியட்டும். (ஷேக்ஸ்பியர்)


37.
   Affection is the broadlest basis of a good life - George Eliot.

நல்ல வாழ்க்கைக்கு அன்பே பெரிய ஆதாரம். (ஜார்ஜ் எலியட்)


38.   
A treacherous friend is the most dangerous enemy - Fielding.

துரோக சிந்தனையுள்ள சிநேகிதன் மிகவும் பயங்கரமான விரோதி. (பீல்டிங்)


39.   
Even tender creepers when united is strong – (Bepin Chandra Pal.)

படரக்கூடிய மிருதுவான கொடிகளும் ஒன்றோடொன்று சேர்ந் தால் வலிமை யடைகின்றன. (அதுபோல வலிமையற்ற மனிதரும் ஒன்றாகச் சேர்ந்தால் வலிமையடைவார்கள்.) - (பெயின் சந்திர பால்)


40.
   Stand for the right. No good thing is a failure, and no evil thing is a success – (Byron.)

நியாயத்தில் நிலைபெறுவாயாக (அதாவது நியாயத்தை உறுதியாகக் கடைப்பிடி). நன்மையுள்ள எவற்றிற்கும் அப்ஜெயமே கிடையாது. தீமையுள்ள எவற்றிற்கும் வெற்றியே கிடையாது. - (பைரன்)


41.
   What female heart can gold despise? What cat'saverse to fish? (Gray)

மீனை விரும்பாத பூனை எது? பொன்னை விரும்பாத பெண்பிள்ளை எவள்? (மீனை விரும்பாத பூனையும் இல்லை; பொன்னை விரும்பாத பெண்பிள்ளையும் இல்லை) (கிரே)


42.
   In idleness there is perpetual despair (Carlyle.)

சோம்பேறித்தனத்தில் எப்பொழுதும் ஏக்கம் குடிகொண்டிருக்கிறது. (கார்லைல்)

43.    Two leads are better than one (Heywood)

ஒருவர் ஆலோசனையைக்காட்டிலும் இருவரின் யோசனை நல்லது. (ஹேவுட்)


44.
   Evil news rides post, while gocd news baits (Milton.)

கெட்ட விஷயங்கள் காற்றைப் போல் அதிசீக்கிரம் பரவும்; நல்ல விஷயங்கள் தாமதிக்கும். (மில்டன்)

 

45.    To have a right estimate of a man's character we must see him in misfortune (Napoleon.)
ஒருவனது நடவடிக்கைகளின் சரியான இயற்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவனது வறுமையில் தெரிந்து கொள்ளலாம் (நெப்போலியன்)

 

46.   A virtuous woman is a crown to her husband: but she that maketh ashamed is as rottenness in his bones (Bible.)

கற்புள்ள ஸ்திரீ, தன் புருஷனுக்குக் கிரீடம் போல் உயர்வு கொடுக்கக் கூடியவளாயிருக்கிறாள்; புருஷனுக்கு இழிவை உண்டு பண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.  - (பைபில்)

 

47.    The sun can give heat and light to the whole world, but it can do notbing when the clouds shut on its rays. Similarly, so long as egoism is in the heart, God cannot shine upon it - Sri Ramakrishna.

சூரியன் உலக முழுமைக்கும் வெளிச்சத்தையும் உஷ்ணத்தையும் கொடுக்கிறது; ஆனால் மேகம் அதன் கிரணங்களை மறைத்து விட்டால் அது அவ்வாறளிக்க முடியாது. அதுபோல் மனதில் அகங்காரம் உள்ள வரையில் ஈசுவரப் பிரகாசம் அதில் தோன்றாது. - (ஸ்ரீ - இராமகிருஷ்ணர்)

 

48.    Forbade to wade through slaughter to a throne, and shut the gates of inercy on mankind (Gray)
கொலை செய்து ராஜபதவிக்கு வருவதை விட்டுவிடு; மனிதர் மீது ஈவிரக்கமில்லாமலிராதே. - (கிரே)

 

49.    All the world's a stage, and all the men and women merely players: They have their exits and their entrances; (Shakespeare)

உலகமே நாடக மேடை; அதிலிருக்கும் ஆடவர்களும் ஸ்திரீகளும் வெறும் நடிகர்கள்; இந்நடிகர்கள் அம்மேடையில் தோன்று வதும் மறைவதுமா யிருக்கிறார்கள். (அதாவது ஆண்களும் பெண்களுமாகிய மனிதர்கள் உலகத்தில் பிறப்பவர்களும் இறப்பவர்களுமா யிருக்கிறார்கள்.) - (ஷேக்ஸ்பியர்)

 

50.    Truth pierces the clouds, it shines as the Sun, and, like it, is imperishable- (Napoleon)
சூரியன் மேகத்தை ஊடுருவிச் செல்கிறது; அதேபோல் உண்மையும் (மேகத்தைப் போன்று மறைக்கக்கூடிய அநேகம்) சூழ்ச்சிகளையும் கடந்து செல்லுகிறது; அந்தச் சூரியனைப் போலவே பிரகாசிக்கிறது; அதைப்போலவே நிலை நிற்கிறது. (நெப்போலியன்)

51.    O Liberty! Liberty! how many crimes are committed in thy name (Madame Roland.)

ஏ சுதந்திரமே! சுதந்திரமே!! உன் பேரால் எவ்வளவு ஏமாற்றங்களாகிய குற்றங்கள் செய்யப்படுகின்றன. (மாடெம் ரோலன்ட்)

 

52.    Sceptre and crown

Must trumble down,

And in the dust be equal made

With the poor crooked scythe and spade (J. Shirley.)

(மரணத்தால் அரசருடைய) செங்கோலும் கிரீடமும் நிலை தளர்ந்து விழுந்து விடவேண்டியவைகளே; மண்ணில், ஏழை களுடைய அரிவாள்களோடும் மண்வெட்டிகளோடும் அவை சமமாக்கப்படுகின்றன. (அதாவது மரணமடைந்தபின் அரசர்களும் ஏழைகளும் சமமே.) (ஜெ. ஷெர்லி)


53
.    Enter not into the path of the wicked and go not in the way of evil men (Bible.)

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. (பையில்)


54.   
Lives of great men all remind us We can make our lives sublinie (Longfellow.)

கீர்த்திபெற்ற எல்லா மகான்களுடைய சரித்திரங்களும், நாமும் அவ்வாறு உயர்ந்த பதவியை யடைய வேண்டுமென்பதை நினைப்பூட்டுகின்றன. (லாங்பெல்லோ)

 

55.    Many are the names of God and infinite the forms through which He may be approached. In whatever name and form you worship Him; through it He will be realised by you Sri Ramakrishna.

ஈசுவரனுக்கு அநேக நாமங்களும் எண்ணிறந்த உருவங்களு முண்டு. நீ எந்த நாமத்தோடும் உருவத்தோடும் அவரை உபாசிக்கிறாயோ அவ்வாறே யவர் உனக்குக் காட்சியளிக்கிறார். (ஸ்ரீ ராமகிருஷ்ணர்)


56.   
Talk of fame, honour, pleasure, wealth; all are dirt compared with affection (Charles Darwin.)

புகழ்ச்சி, கௌரவம், சந்தோஷம், ஐஸ்வரியம் ஆகியவைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் (புகழ்ந்து) பேசலாம். ஆனால் இவைகளை "அன்பு" என்பதோடு ஒத்திட்டுப் பார்த்தால் இவையாவும் துரும்புக்குச் சமானமாய்ப் போய்விடும். (சார்லஸ் டார்வின்)

 

57.   There is nothing in the world gives as much pleasure as poetry - except little children.

(John Bright.)

குழந்தைகளின் மழலைச்சொற்கள் தவிர மற்றவையாவும் உலகத்தில் பாடல் போல் அவ்வளவு இன்பம் பயக்கக்கூடியனவல்ல. (ஜான் பிரைட்)


58.   
Think all you speak, but speak not all you think (Delarme.)

நீ பேசப்போகும் எல்லாவற்றையும் நன்றாய் யோசி. ஆனால் யோசிப்பதை யெல்லாம் பேசிவிடாதே. (டெலார்மி)

59.    We know what we are, but know not what we may be (Shakespeare)

நாம் எத்தன்மையா யிருக்கிறோம் என்பதை அறிவோம்; ஆனால் நாம் எப்படி யாவோம் என்பதை யறியோம். (ஷேக்ஸ்பியர்)


60.   
There is no treasure the which may be compared unto a faithful friend (Roxburghe Ballade.)

உண்மையுள்ள நேசனுக்கு ஒப்பிடத்தக்க பொக்கிஷமே கிடை யாது. (பாக்ஸ்பர்க் பல்லேட்)      


61
.   Art is long, time is short (Tennyson.)

கல்வியோ அதிகம்; (கற்கும்) காலமோ கொஞ்சம். (கல்விகரையில் கற்பவர் நாள் சில.) (டென்னிஸன்)


62.   
Idleness is the holiday of fools (Chesterfield)

சோம்பேறித்தனமே மூடர்களின் ஓய்வுநாள். (செஸ்டர்பீல்ட்)

 

63.    Oh, it's excellent

 To bave a giant’s strength; but it is tyrannous

To use it like a giant (Shakespeare.)

(நமக்கு) ராக்ஷஸபலம் இருப்பது நல்லது. ஆனால் அதை ராக்ஷதனைப்போல் உபயோகிப்பது கொடியது. (ஷேக்ஸ்பியர்)

 

64.    Fates ordain that dearest friends must part (Young)

விதி மிகவும் நேசமுள்ள சிநேகிதர்களையும் பிரிந்திருக்கும்படியாக நியமிக்கிறது. (யங்)

 

65.    I would rather have the affectionate regard of my fellowmen than I would have heaps and mines of gold (Dickens.)

பொற் குவியலையும் பொற் சுரங்கங்களையும் விட என்னுடைய தோழர்களின் அன்புள்ள மதிப்பே எனக்கு மேல். (டிக்கன்ஸ்)

 

66.    Great thoughts reduced to practice, become great acts (Hazlitt.)

பெரிய ஆலோசனைகளைப் பழக்கத்திற்குக் கொண்டு வரும் பட்சத்தில் அவையே பெரிய காரியங்களாக முடியும் (ஹாஸ்லிட்)


67.   
Ill babits gather by unseen degrees,

As brooks make rivers, rivers run to seas. (Dryden.)

சிற்றாறுகள் பெரிய நதிகளாகவும், நதிகள் கடல்களாகவும் விருத்தியாவது போல, கெட்ட பழக்கங்கள் தாமே விருத்தியாகின்றன. (ட்ரைடன்)

 

68.    To weep, is to make less the depth of grief (Shakespeare,)

அழுவது பெருந்துயரத்தைக் குறைப்பதாகும். (ஷேக்ஸ்பியர்)

 

69.    Who well lives, lives long (Bartas.)

கிரமமாய் நடப்பவர்கள் நீடூழிகாலம் வாழ்வார்கள். (பார்டாஸ்)

 

70.    Mine honour my life is; both growin one,

Take honour from me, and my life is done (Shakespeare.)

எனது கௌரவமே என் உயிர்; இரண்டும் ஒன்று. என்னுடைய கௌரவத்தை நீக்கின், என்னுடைய உயிரயினதாகும்.  (ஷேக்ஸ்பியர்)

 

71.    Thought takes a man out of servitude into freedom (Emerson.)

விவேகம் மனிதனை அடிமைத்தனத்தினின்று விடுதலை செய் (இமர்ஸன்)


72.   
Howpoor are they that have not patience? (Shakespeare.)

பொறுமையில்லாதவர் பொருளற்றவராவார். (பொறுமையே பொக்கிஷம்) (ஷேக்ஸ்பியர்)


73.   
In love of home the love of country has its rise (Dickens)

குடும்ப விசுவாசத்துக்குத் தக்கபடி தேச விசுவாசம் உண்டாகிறது. (டிக்கன்ஸ்)

 

74.    Wisemen never sit and be wail their loss,

But cheerly seek how to redress their harms (Shakespeare.)

புத்திசாலிகள் உட்கார்ந்து கொண்டு தங்கள் நஷ்டத்தைப்பற்றித் துக்கப்படமாட்டார்கள்; ஆனால் அக்கஷ்டங்களை நீக்கச் சந்தோஷத்துடன் வழி தேடுவார்கள். (ஷேக்ஸ்பியர்)

 

75.    Every tree bears its fruit; we reap only that which we have sown (Napoleon.)

ஒவ்வொரு மரமும் தன் இயற்கைக்குரிய பழத்தையே கொடுக் கிறது. நாம் எந்த வித்தை விதைக்கிறோமோ அதன் பலனையே அறுவடை செய்கிறோம். (இவற்றைப் போலவே மனிதன் தன் செய்கைக்குரிய பயனை அனுபவிக்கிறான்) (நெப்போலியன்)


76
.    Pride goeth before destruction, and a haughty spirit before a fall (Bible.)

(கேடுவரும் பின்னே மதிகெட்டுவரும் முன்னே என்பதைப்போல்) கெடுதல் சம்பவிக்குமுன் கர்வம் அதற்கடையாளமாக முன்வந்து நிற்கும். ஒருவனுடைய வீழ்ச்சிக்கு முன் நான் எனது' என்ற அகங்கார மமகாராதிகள் முன் வந்து நிற்கும். (பைபிள்)


77.   
And he that does one fault at first,

And lies to hide it, makes it two (Isaac Watts.)

('ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்'என்பதைப்போல்) ஒரு தவறான காரியத்தைச் செய்து அதை மறைக்க முற்படுவது இரண்டு தவறுகள் இழைத்தலுக்கு ஒப்பாம். (ஐஸாக் வாட்ஸ்)

 

78.    There is a tide in the affairs of mell,

Which taken at the flood, leads on to fortune

Omitted all the voyages of their life is bound in shallows, and in miseries (Shalkespeare)

மனிதனுடைய வாழ்க்கையாகிய (சம்ஸார) கடலில் (விவேக மாகிய) அலையிருக்கிறது; அந்தக் கடலில் அகப்பட்ட மனிதன் அவ் அலையைப் பற்றினால் (அதனால் முக்தியாகிய கரை சேர்க்கப்பட்டு) பேரின்பத்தை யடைவான். அதைப்பற்றாதவன் அக்கடலிலேயே உழன்று துன்புறுவன். (ஷேக்ஸ்பியர்)


79.   
For solitude sometimes is best society,

And short retirement urges sweet return (Milton.)

ஏகாந்தமே நல்ல கூட்டுறவு. கொஞ்சநேரமாவது தனித்திருப்பது மேலான இன்பத்தைத் தரும். (மில்டன்)

இனிது இனிது ஏகாந்தம் இனிது'- (ஒளவை.)


80.   
A day, an hour, of virtuous liberty

Is worth a whole eternity in boudage (Addison.)

ஆயுட்காலமெல்லாம் அடிமை வாழ்வில் கழிப்பதைக் காட்டிலும் சுதந்திரத்துடன் குறைந்தது ஒருநாள் அல்லது ஒருமணி நேரமாவது வாழ்வதுமேல். (அடீசன்)

 

81.    Words are like leaves; and where they most abound,

Much fruit of sepse beneath is rarely found (Pope.)

வார்த்தைகள் மரத்தின் இலைகளுக்குச் சமானமா யிருக்கின்றன. அவைகள் எங்கு மிகுந்திருக்கின்றனவோ அங்கு அறிவு என்னும் பழம் அவைகளுக் கிடையில் தென்படுவது மிகவும் அருமை. (அதாவது இலைகளடர்ந்த விடத்தில் பழம் தோற்றுவது அருமை: பேச்சு அதிகமாயிருக்கிற விடத்தில் அறிவு விளக்கமாவது அருமை) (போப்)

 

82.    Think not a trifle, though it small appear,

Small sands the mountain, moments make the year,

And trifles life (Young.)

எவ்வளவு சிறியனவற்றையும் அற்பம் அற்பம் என்று எண்ணாதே. சிறுமணலும் நாளாவர்த்தியில் பெருமலையாகும். வினாடிகள் பெருகியே ஆண்டுகளாகின்றன. சிறு முயற்சிகளும் பெரும் வாழ்க்கைக்கு ஏதுவாகும்.

 

 

83.    While man is growing, life is in decrease;

And cradle rock us nearer to the tomb

Our birth is nothing but our death begun (Young.)

மனிதன் வளர வளர அவனுடைய ஆயுளும் குறைந்து கொண்டு போகிறது. (குழந்தையின்) தொட்டி லாடுவது சவக்குழியை நோக்கிச் செல்வதுபோ லிருக்கிறது. பிறப்பு உண்டான போதே இறப்பும் இருக்கிறது. (எங்)


84.   
It is pleasant to find real merit appreciated,

Wbatever its particular walk in life may be. (Dickens.)

ஒருவனது புகழ்தற்குரிய மதிப்பு அவனுடைய வாழ்நாளில் எத்தகைய தொழிலினால் ஏற்பட்டிருந்தபோதிலும் உன்மயான மதிப்பைக்கண்டு மெச்சுவதே சந்துஷ்டியாம். (டிக்கன்ஸ்)

 

85.    The purest treasure mortal times afford,

Is spotless reputation (Shakespeare.)

ஜீவியகாலத்தில் ஒருவனுக்கு நிலையான பொக்கிஷம் சிறந்த கீர்த்தியேயாம். (ஷேக்ஸ்பியர்)

 

86.    The wisdom of life is in preventing all the evilwe can; and using what is inevitable, to the best purpose Ruskin.

நம்மால் கூடியவரையில், கெடுதல்களைத் தடுப்பதிலும், அவசியமான காரியங்களையும் நல்லவிதத்தில் முடியும்படி செய்வதிலும் செலுத்தும் விவேகமே விவேகம். (ரஸ்கின்)


87.   
What is noble? 'tis the finer

Portion of the mind and heart

Linked to something still diviner,

Than mere language can impart. (Charles Swatne.)

பெருந்தன்மை என்றால் என்ன? அது மனதும் இருதயமும் களங்கமின்றி, எல்லாவற்றிற்கும் மேலானதும் வாக்குக்கும் எட்டாததுமான ஒரு பரம் பொருளுடன் ஐக்கியமடையுஞ் சக்தியேயாம். I (சார்லஸ் ஸ்வாட்னி)


88.   
Be wise;

Soar not too high, to fall;

but stoop to rise (Massinger.)

புத்திசாலித்தனமாய் நடந்து கொள். வீழ்ச்சி யடையும்படி அவ்வளவு பேராசை கொண்டலையாதே, நீ உயர்வடைவதற்கு வணக்கத்தைக் கைக்கொள். (மேஸிஞ்சர்)


89.
   Depend your reputation, or bid farewell to your good life for ever (Shakespeare.)

உன்னுடைய மானத்திற்குப் பங்கம் வராமல் நடந்து கொள். இல்லாவிட்டால் உன்னுடைய நல்வாழ்க்கைக்கு வந்தனஞ் செலுத்திவிடு (வாழ்வை யொழித்து விடு).'' மானம் படவரின் வாழாமை முன்னிது''. (ஷேக்ஸ்பியர்)

 

90.    Only the actions of the JustSmell sweet and blossom in the dust. (J. Shirley.)

நேர்மையாளர்களுடைய செயல்கள் (உயர்ந்த புஷ்பங்களைப் போல்) பரிமளிப்பதுமல்லாமல் மலர்ச்சியும் அடைகின்றன (அதாவது பரவுகின்றன). (ஜே. ஷெர்லி)

 

91.    The state compels no man to drink,

Compels no man to game;

It is gin and gambling sink bim down

To rags, and wants and shame. (Hannah More.)

ஒருவனைக் குடிக்கும்படியும், சூதாடும்படியும் அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. (சிலர் தாங்களே அவற்றைப் பழகிக் கொள்கிறார்கள்). குடியும், சூதாட்டமுமே ஒருவனைக் கந்தை யோடிருக்கும் நிலையிலும், வறுமையிலும், மானபங்கத்திலும் அழுத்தி வைக்கின்றன. (ஹான்னா மோர்)

 

92.    On many a house the harmless babies

Are poorly clothed & fed,

Because the craving ginshop takes

The children's daily bread. (Hannah More.)

அநேக வீடுகளில் குற்றமற்ற குழந்தைகள், குறைந்த ஆகாரமும், உடையு முடையவர்களா யிருக்கிறார்கள். ஏனெனில், ஆவலோடிருக்கும் மதுபானக்கடை, அப்பிள்ளைகளுக்குரிய தினச்சாப்பாடு முதலியவற்றை விழுங்கிவிடுகிறது. (ஹான்ன மோர்)

 

93.     "Forgive and forget "
Thus friendship will flourish
And fellowship spread,
And for strife & contention
Peace prospers instead;
And the wise world will find
That it owes a deep debt
To that sweet motto Forgive & forget.

ஒருவன் செய்த குற்றத்தை மன்னிப்பதும் அதை மறந்துவிடுவதும்தான் உசிதமானவை. அப்படிச் செய்வதனால் நேசம் விருத்தி யடைகிறது; நட்பு பரவுகிறது; சண்டை சச்சரவுகளுக்குப் பதிலாகச் சமாதானம் வளர்கின்றது. 'ஒருவன் செய்த குற்றத்தை மன்னித்து மறந்துவிடு'என்ற சீரிய நீதிமொழிப்படி நடக்க உலகத்திலுள்ளவர்கள் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.


94.   
No matter how dark be thy days

How frowning the cloud over the ways

Be brave, and face every blast,

Storms come, but soon they are past.

உன்னுடைய ஜீவியகாலம் இருள் மூடியதாயிருந்தாலும் (அதாவது எவ்வளவு கெட்டதாயிருந்தாலும்) அதற்காகக் கவலை யுறாதே; உன்னுடைய பாதையில் மேகமானது கர்ஜித்துக் கொண்டு வந்தாலும் பயங்கொள்ளாதே (அதாவது உனது வாழ்க்கை செல்லும் மார்க்கத்தில் என்ன இடையூறுகள் நேர்ந்தாலும் அவைகளுக்காக அஞ்சாதே) தைரியமாயிரு. (அதில் வரும்) ஒவ்வொரு புயற்காற்றையும் தைரியமாய் எதிர்த்துநில் (அதாவது புயற்காற்றைப்போல் வரும் கஷ்டங்களுக்காக மனச் சோர்வு கொள்ளாதே). புயற்காற்றுகள் வீசுகின்றன, மறுபடியுஞ் சீக்கிரத்தில் அவைகள் நின்று விடுகின்றன (அதாவது கஷ்டங்கள் உண்டாகிச் சீக்கிரத்தில் மாறுகின்றன).

 

95.    Be bold as a lion, and dare

Every ill and every dark care!

Look to heaven, in sunshine and shade

And there find your solace and aid.

சிங்கத்தைப் போல் தைரியமாயிரு; என்ன கஷ்டம், கவலை வந்தாலும் தைரியமாய் அவற்றைப் பொறுத்துக்கொள். நல்லதுவந்தபோதும் கெட்டது வந்தபோதும் கடவுளை நோக்கு. அப்படிச் செய்தால் மனதுக்கு ஆறுதலும் உதவியும் கிடைக் கின்றன.


96.   
Never be a coward

In the cause of Right;

Be a valiant soldier

In the world's good fight.

நியாயத்தைச் செய்வதில் எப்போதும் நீ கோழையாயிராதே; உலகத்தின் நன்மைக்கான சண்டையில் மிகுந்த சூரனாயிரு.


97.   
Home Rule is my Birthright, and I want it. – (Bal Gangadhar Tilak.)

சுயாட்சியே எனது பிறப்புரிமை; அஃதெனக்கு வேண்டும். (திலகர்)

 

98.    The things that destroy us are injustice, insolence, and foolish thoughts, and the things that save us are justice, self command, andtrue thought. (Ruskin.)

நம்மைக் கெடுப்பன அநீதி, அகங்காரம், மூட எண்ணங்கள் ஆகியஇவைகளாகும். நம்மைக் காப்பாற்றக்கூடியன நீதி, தன்னடக்கம், உண்மையான எண்ணம் என்பவைகளாகும். (ரஸ்கின்)

 

99.    If people in order to secure redress of wrongs, resorted to Soul - Force, much of the present suffering would be avoided - M. K. Gandhi.

ஜனங்கள் தங்களுக்குள்ள குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள ஆன்மசக்தியைக் கைக்கொண்டால் அவர்களுக்குள்ள குறைகளில் அநேகம் நிவர்த்தியாய் விடும். (காந்தி)

 

100.   Thou Hero, take courage, be proud that youare an Indian; say in pride: "I am an Indian, every Indian is my brother.'' Say: “The ignorant Indian, the poor Indian, the Brahmin Indian, the Pariah Indian, is my brother.” —Swami Vivekananda.

ஏ! வீரனே! தைரியமாயிரு. நீ இந்தியன் என்பதற்காகப் பெருமை கொள்வாயாக. " நான் ஓர் இந்தியன்; ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன்'' என்று பெருமையோடு கூறத் தயங்காதே. " கல்வி அறிவில்லாத இந்தியனும், பிராம்மணனாகிய இந்தியனும், ஆதிதிராவிடனாகிய இந்தியனும் என்னுடைய சகோதரர்கள்'' என்று கூறிக்கொள். (சுவாமி விவேகாநந்தர்)

 

101.   No imprisonment can crush a truth; it mayhinder it for a moment; it may delay it for'an hour; but it gets an electric elasticity insidethe dungeon walls, and it grows and moves the whole world when it comes out. (Charles Bradlaugh.)

சிறைவாசம் உண்மையை ஒழிக்காது; அந்நேரத்துக்கு அல்லதுஒருமணிநேரத்திற்கு அதை அது மறைத்து வைக்கக்கூடும். உண்மையானது சிறைக்குள் மின்சாரத்தைப் போல் அதிவேகமாய் தினே தினே வளர்ந்து கொண்டு போகிறது. சிறையிலிருந்து வெளியேறி வந்தவுடன் உலகம் முழுவதிலும் அது கிளர்ச்சியை உண்டு பண்ணி விடுகின்றது. (சார்லஸ் பிராட்லா.)


102.  
Injustice will bring the mightiest on earth to ruin. (Lord Salisbury.)

அநீதியானது, உலகத்திலுள்ள மிகுந்த பராக்கிரமசாலிகளையும்அடியோடு கெடுத்துவிடும். (லார்டு சாலிஸ்பரி)


103.  
Be united, persevere, and achieve Self - government. Dada Bhai Naoroji.

ஐக்கியமாயிருங்கள்; ஊக்கங்கொள்ளுங்கள்; சுயாட்சியை அடையுங்கள். (தாதாபாய் நௌரோஜி.)

 

104.   The fundamentals of Liberty are freedom of speech and freedom of writing.

சுதந்திரத்திற்கு அடிப்படையானவை பேச்சுச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமுமாகும்.


105.  
What is wanted in our government of India is sympathy. – (George, Prince of Wales.)

நம்முடைய இந்தியா அரசாங்கத்தில் வேண்டியது அநுதாபமே யாகும். (ஜார்ஜ், வேல்ஸ் இளவரசர்)


106.
  Every noble work is at first impossible. (Carlyle.)

ஒவ்வோர் உயர்ந்த வேலையும் முதலில் கஷ்டமாகவே தோன்றும். (கார்லைல்)

 

107.   Remain always strong and steadfast in thyown faith, but eschew all bigotry and intolerance.

(Sri Ramakrishna.)

உன்னுடைய சொந்தமதத்தில் உறுதியுடனும் திடமான சித்தத்துடனுமிரு; ஆனால் மதவெறியையும் அந்நியமத துவேஷத்தையும் மேற்கொள்ளாதே. (ஸ்ரீ ராம கிருஷ்ணா)

 

108.   A truly great man never puts away the simplicity of a cbild. (Chinese Proverb.)

உண்மையான பெரிய மனிதன் டாம்பீகமற்ற வாழ்க்கையையேகொள்கிறான். (சீனாதேசத்துப் பழமொழி.)


109.  
By sacrifice, and not by arms Napoleon was defeated.

நெபோலியன் படைகளால் தோற்கடிக்கப்படவில்லை; தியாகத்தால் தான் தோற்கடிக்கப்பட்டான்.


110.  
God grants liberty only to those who love it, and are always ready to guard and defend it.

சுதந்திரத்தை விரும்புகிறவர்களுக்கும், அதைக் காப்பாற்றக் கூடியவர்களுக்கும் தான் கடவுள் அதைக் கொடுக்கிறார்.


111.  
Beware of the Weak. For the tears of theWeak uudermine the throne of Kings. (Mahabharatha.)

ஏழைகளைக் கவனித்து நட; ஏழைகளுடைய கண்ணீர் இராஜ்ஜி யங்களையும் அழித்துவிடும். (ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்) (மகாபாரதம்)


112.  
Our actious Make or mar us. We are the children of our own deeds. – (Victor Hugo.)

நம்முடைய விருத்திக்கும் தாழ்ச்சிக்குங் காரணம் நம் செயல்களேயாம். நம்முடைய சொந்த செயல்களின் குழந்தைகளாய் நாமிருக்கிறோம்.) (விக்டர் யூகோ)


113.  
Choose an author as you choose a friend. (Dillon.)

நண்பனைத் தெரிந்தெடுப்பதைப்போல் நூலாசிரியனையும் தேர்ந்தெடு (அதாவது நல்ல புத்தகங்களைக் கைக்கொள்). (டில்லன்)

 

114.   Make few acquaintances. (Rothschild.)

ஒரு சிலரையே அறிமுகப்படுத்திக்கொள். (ராத்ஸ்சைல்ட்.)

 
115.
  To bear is to conquer. (T. Campbell.)

பொறுத்துக்கொள்வது வெற்றி யடைவதாகும். (டி. காம்பெல்)


116.
  The good is always beautiful, the beautiful good. (Whittier.)

நல்லது எப்போதும் அழகாயிருக்கிறது; அழகாயிருப்பது எப்போதும் நல்லதாகவே யிருக்கிறது. (விட்டியர்)

 

117.   Rare is tbe union of beauty and virtue. (Juvenal.)

அழகும் நற்குணமும் எப்போதாகிலும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஐக்கியப்பட்டிருக்கும். (ஜூவினல்.)

 

118.   We cannot learn men from books (Disraeli.)
மனிதர்களைப் புத்தகங்களைக் கொண்டு அறியமுடியாது. (டிஸ்ரெய்லி.)
 

119.   The true University of these days is a collection of books. (Carlyle.)
இந்நாட்களின் உண்மையான சர்வகலாசாலை, புத்தகங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுதலாகும். (கார்லைல்.)
 

120.   Endure, endure, be faithful to the end. (Hamilton King.)
நீ பொறுத்துக்கொள், பொறுத்துக்கொள், கடைசிவரை விசுவா சமாயிரு. (ஹாமில்டன் கிங்.)

 

121.   England has educated us, has awakened inour minds ambitions which she is bound to satisfy. (Saurendranath Banerja.)

இங்கிலாந்து நமக்குக் கல்வியை யூட்டியிருக்கிறது; நம்முடையமனதில் எண்ணங்களை அது கிளப்பிவிட்டிருக்கிறது; அந்த எண்ணங்களைத் திருப்தி செய்வது அதனுடைய கடமையாகும். (சுரேந்திரநாத் பானர்ஜி.)

 

122.   The greatest glory of Ruler is to createpopular government. (Solon.)

ஓர் அரசனுக்குரிய பெருத்த புகழானது ஜனங்களுடைய சம்மதத்தைப்பெற்ற அரசாங்கத்தை ஏற்படுத்துவதாகும். (சோலன்)

 

123.   You cannot and ought not to emasculate a whole nation. - P. M. Mehta.

அடியோடு ஓர் இனத்தவரின் ஆண்மையை நசுக்க முடியாது. அப்படிச் செய்வதுங் கூடாத காரியமாம். (பி. எம். மேதா.)

 

124.   Words are women, deeds aro men. (Herbert.)

வார்த்தைகள் ஸ்திரீகள், செயல்கள் ஆண்கள். (ஹெர்பர்ட்)


125.  
Education is the chief defence of nations. (Burke)

கல்வியானது இனங்களை முக்கியமாய்க் காப்பாற்றக் கூடியதாயிருக்கிறது. (பர்க்)


126
.   Evil must be conquered by good. Aniel.

கெடுதலையும் நல்லதால் ஜெயிக்க வேண்டும். (ஏமியல்.)

 

127.   My conscience is my erown;

Contented thoughts my rest;

My heart is happy in itself;

 My bliss is in my breast.        (Southwell.)

என்னுடைய மனச்சாட்சியே எனக்குக் கிரீடம். என்னுடைய மன நிம்மதியே எனக்கு ஓய்வுநேரம். (அப்போது) என்னுடைய இருதயமானது தனக்குத்தானே மகிழ்கிறது; என்னுடைய பேரின்பம் (அத்தகைய) என் இருதயத்தில் அடங்கியுள்ளது. (சவுத்வெல்)

 

128.   My heart leaps up when I behold

A Rainbow in the sky;

So, it was when my life began,

So, it is now I am a man

So be it when I shall grow old

Or let me die!              (Wordsworth.)

ஆகாயத்தில் இந்திரவில்லைக் காணும் போது என்னுடைய இருதயமானது புளகாங்கித மடைகின்றது. அதேபோல் என்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்திலும் அது இருந்தது; மனிதனான இப்போதும் இருக்கிறது. நான் கிழவனாகி இறக்கும் வரை அங்ஙனமே இருக்கட்டும்.      (வொர்ட்ஸ்வொர்த்)


 129.
Courage leads to heaven; fear to death. (Seneca)

தைரியம் மேல் உலகத்திற்கு வழிகாட்டுகிறது; பயம் சாவுக்கு வழிகாட்டுகிறது. (செனீகா)

 

130.   To the noble mind

 Ricb gitts wax poor, when givers prove unkind. (Shakespeare.)

கொடுப்பவர்கள் பட்சமில்லாதவர்களென்று தெரியுமானால், அவர்களால் கொடுக்கப்படும் சிறந்த வெகுமதிகள் பெருந்தன்மை யுள்ளவர்களுக்கு அற்பமாகும். (ஷேக்ஸ்பியர்)

 

131.   Money has the effect of enslaving people.

செல்வத்திற்கு மனிதர்களை அடிமைப்படுத்தத்தக்க தன்மை உண்டு.

 

132.   Marriage brings happiness only when the purpose in life of both is one and the same.

(ஆண், பெண் ஆகிய) இருவர்களுடைய கோரிக்கை தம் வாழ்வில்ஒன்றாயிருந்தால் தான் விவாகம் சந்தோஷம் தரும்.

 

133.   The love of wife and children is not human love.

Human love is the love of man for man.

மனைவி மக்களிடத்திலுள்ள அன்பு மானிட அன்பல்ல. மானிட அன்பென்பது ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதனிடத்தி லுள்ள அன்பேயாகும்.

 

134.   The eternal life beyond the skyWealth cannot purchase. (Longfellow.)

ஆகாயத்திற்கப்பால் இருக்கும் நித்திய வாழ்வு செல்வத்தினால் அடைய முடியாது. (லாங்பெல்லோ.)

 

135.   My strength is as the strength of ten,

Because my heart is pure. (Tennyson.)

என்னுடைய மனது பரிசுத்தமாயிருப்பதனால் நான் பத்து மனிதர்களுடைய பலத்தையுடையவனா யிருக்கிறேன். (டென்னிஸன்)

 

136.   Love all, trust a few, do wrong to none. (Shakespeare.)

எல்லாரையும் நேசி, சிலரை நம்பு, ஒருவருக்கும் கெடுதி செய்யாதே. (ஷேக்ஸ்பியர்)

 

137.   Condemn the fault, and not the actor of it. (Shakespeare.)

தப்பிதத்தைக் கண்டனஞ்செய்; அதைச் செய்பவனைக் கண்டனஞ் செய்யாதே. (ஷேக்ஸ்பியர்)

 

138.   Evil recoils upon the head of evil - doers.

கெடுதி செய்வோர்களுக்குக் கெடுதியே நேரிடும்.

 

139.   The course of nature is the art of God. (Young.)

இயற்கையாக ஒரு காரியம் நிகழ்வது ஆண்டவன் செயலாகும். (எங்.)

140.   Be thou as cbaste as ice, as pure as Snow, thou shalt not escape calumny. (Shakespeare.)

பனிக்கட்டியைப் போலவும் பனியைப்போலவும் நீங்கள் பரிசுத்த வான்களாகவும், உத்தமர்களாகவு மிருந்தபோதிலும் சிலர் உங் களை நிந்திப்பர். (ஷேக்ஸ்பியர்)

 

141.   To be weak is miserable. (Milton.)

மனிதர் பலஹீனமானவர்களாயிருப்பதனால் சஞ்சலமே ஏற்படும். (மில்டன்)

 

142.   Books cannot always please, however good; (Crabbe.)

புத்தகங்களிலுள்ள விஷயங்கள் மேலானவைகளா யிருந்தபோதி லும் அவைகளை வாசிப்பதினாலேயே ஒருவர் எக்காலத்திலும் சந்தோஷமா யிருக்கமுடியாது. (கிரேப்பி.)

 

143.   With a smile on her lips and a tear in her eye. (Scott.)

மானிடர்க்குச் சந்தோஷமும் சஞ்சலமும் சமமாகவே ஏற்படு (ஸ்காட்)

 

144.   But woe awaits a country whenShe sees the tears of bearded men. Scott.

ஒருவர் வருந்தும்படி நாம் ஒரு காரியம் செய்தால் நமக்குக் கெடுதலே ஏற்படும். (ஸ்காட்)
 

145.   The many still must labour for tbe one! (Byron.)

ஒருவர் சௌகரியமாக வாழ்வதற்குப் பலர் உழைக்க வேண்டியவர்களா யிருக்கிறார்கள். (பைரன்)

 

146.   The eyes that shone

Now dimmed and gone (Moore.)

பணக்காரர்களாயிருப்பவர்கள் ஏழைகளாவதும், ஏழைகளாயிருப்பவர்கள் பணக்காரர்களாவதும் சகஜமாகும். (மூர்)

 

147.   Be wise to - day;'t is madness to defer. (Young.)

ஒரு காரியத்தைச் செய்யவேண்டியதாயிருந்தால் அதை உடனேசெய்யுங்கள்;

அதைப் பிறகு செய்ய எண்ணங் கொள்ளாதேயுங்கள். (எங்.)

 

148.   All men think all men mortal but thernselves. (Young.)

ஒருவர், மனிதர்கள் எல்லோரும் என்றைக்கிருந்தாலும் ஒருநாளைக்கு இறக்க வேண்டியவர்களே என்று நினைக்கிறார்; ஆனால் அவர், தாமும் ஒரு தினத்தில் இறக்க வேண்டியவரென்பதை நினைப்பதில்லை. (எங்.)

 

149.   Courage man! the hurt cannot be much. (Shakespeare.)

நமக்குக் கஷ்டம் ஏற்படுகையில் நாம் மனச்சோர்வு அடையாமல் தைரியத்துடனிருக்க வேண்டும். (ஷேக்ஸ்பிர்)

150.   Hant half a day for a forgotten drean. (Wordsworth.)

உங்களுக்குத் தேவையாயுள்ள தகவல் உங்கள் ஞாபகத்திற்கு வராதபோது நீங்கள், அதைப் பற்றி யோசித்தால் அது உங்கள் புத்திக்கு எட்டும். (வொர்ட்ஸ்வொர்த்)

 

151.   The soul was like a star, and dwelt apart. (Wordsworth.)

உடல் வேறு; ஆன்மா வேறு. (வொர்ட்ஸ்வொர்த்)

 

152.   I pity the man who can travel from Dan to Barsheba, and cry, 'Tis all barren. (Sterne.)

ஒரு காரியத்தைச் செய்ய பிரியப்படுகையில், அதனால் நற்பலன் ஏற்படுமாவென்பதை முன்னதாக ஆலோசித்து, நற்பலன் ஏற்படக்கூடியதாயிருந்தால் மாத்திரம் அக்காரியத்தைச் செய்ய வேண்டும். (ஸ்டெர்னி.)
 

153.   He cast off his friends, as a huntsman his pack,

For he knew, when he pleased, he could whistle them back. (Goldsmith.)
தங்களுக்கு உதவி செய்தவர்களை மறுபடியும் சமயம் வந்தபோதுஅழைத்தால் அவர்கள் உதவி செய்வார்களென்னும் எண்ணங்கொண்டு சிலர், தங்கள் காரியம் தீர்ந்ததும், தங்களுக்கு உதவி புரிந்தவர்களை உதறிவிடுவதுண்டு. (கோல்ட் ஸ்மீத்)

 

154.   With his back to the field, and his feet to the foe. (Campbell.)

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் வாதிப்பது சிறப்பாம். (காம்பல்.)

 

155.   And learn the luxury of doing good. (Goldsmith.)

மனிதர்களுக்கு நலஞ் செய்யுங்கள். (கோல்ட்ஸ்மீத்)

 

156.   By sports like these are all their cares beguiled; The sports of children satisfy the child. (Goldsmith.)

குழந்தைகள் விளையாடி இன்புறுகிறார்கள். அவர்களைப்போல்நீங்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடினால், உங்களுக்குள்ள கவலை நீங்கி நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள்.  (கோல்ட்ஸ்மீ த்.)

 

157.   I awoke one morning and found myself famous. (Byron.)

குடிகளுக்கு அனுகூலம் ஏற்படும்படி உழைப்பவரை அக்குடிகள் மேன்மையாகப் பாராட்டுவார்கள். (பைரன்.)

 

158.   He builded better than he knew. (Emerson.)

அறிவுடையோர் எந்தக் காரியத்தையும் மேலாகச் செய்வர். (எமர்சன்)

 

159.   Go forth, under the open sky, and listTo nature's teachings. (Bryant.)

ஆண்டவன் செய்துள்ள ஏற்பாடுகளைப்பற்றித் தீரயோசித்து, அந்த ஏற்பாடுகளின்படி வாழ்க்கையைச் செலுத்துங்கள். (பிரையன்ட்.)
 

160.   Truth crushed to earth shall rise again. (Bryant.)

ஜனங்களுக்கு அனுகூலம் ஏற்படும்படி உழைப்பவரைப் பிறர் எவ்வளவு இம்சித்த போதிலும் அவர்கள் கிஞ்சித்தேனும் மனத்தளர்ச்சி யடையாமல் முன்போலவே உழைப்பர். (பிரையன்ட்)

 

161.   The melancholy days are comeThe saddest of the year. (Bryant.)

அநீதம் செய்பவர்கள் பிற்காலத்தில் வருந்துவர். (பிரையன்ட்)

 

162.   My native land - good night! (Byron.)

ஒவ்வொருவருக்கும், தம்முடைய தாய்நாடே சிறந்த நாடாகும். (பைரன்)

 

163.   It is a goodly signt to see What Heaven hath done for this delicious land. (Byron.)
இயற்கை அழகே மேலான அழகாகும். (பைான்.)
 

164.   War, war is still the cry,'war even to the knife'- (Byron.)

சுயநலங்கருதும் மானிடர் உலகில் இருக்கும் வரையில் யுத்தம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். (பைரன்.)

 

165.   A mother is a mother still,

The holiest thing alive. (Coleridge.)

எல்லாரையும் விட தாயாரே மேம்பட்டவர். (கோலரிஜ்.)

 

166.   I am sure care's an enemy to life.

மனச் சஞ்சலம் வாழ்க்கையைக் குலைத்துவிடும்.

 

 

167.   Though milk be boiled, its flavour does not diminish. (Avvai)

            அட்டாலும் பால் சுவையில் குன்றாது (ஒளவை.)


168.  
Before the flood comes and the water rise, we must cast up the dam.

வெள்ளம் வருமுன்னே அணை போடவேண்டும்.

 

169.   What is in the world is also in the buman body. 

அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு.

 

170.    If free from desire (if it approach thee not) thou wilt be free from sorrow.

      ஆசை யுண்டாகாதாகில் அழுகையு மண்டாது.

 

171.   Disgrace will happen to the King who has nota competent person near him.

அண்டையிற் சமர்த்தனில்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.

 

172.   To attempt playing draughts without squares, and a fool speaking of things which he does not understand, are the same.

அரங்கின்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசலு மொன்று.

 

173.   Great men should nuaintain their relations as the banyan its descending roots.

தம்மினத்தாரை விழுது போல் தாங்குவது பெரியோர் கடன்.

 

174.   The friendship of a hero may become a sharp arrow.

வீரன் கேண்மை கூரம் பாகும்.

 

175.   A dog which goes alone to the market will be beaten with a steel - rod.

வெறும் நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.

 

176.   There is no (fixed) price for a show, no limit to a story.

வேடிக்கைக்கு விலையில்லை கதைக்குக் காலில்லை.


177.   The turkey seeing the peacock's gait may strutand imitate it.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவிக்கும்.

 

178.   The five great sins will be forgiven him who worships the one God with singleness of heart. - Kamban.

      தெய்வ மொருவ னென்றேத்தி யொருமித்திருந்தால் அருவினைகள் ஐந்தும் அறும்.

(கம்பன்)

 

179.   He who drinks his water after boiling, his curds diluted, and his butter made ghee, will find sickness flee at the sound of his name.) Theraiyar.

நீரருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர் தம் பேருரைக்கப் போமேபிணி.'(தேரையர்)

 

180.   Wealth must not be sought, nor the pleasure of love, & c., Kurma Puranam.

       அல்லாதவழியாற் பொருளீட்டல் காமந்துய்த்தல் இவை யாகா. (கூர்ம புராணம்)

 

181.   Will not the unendurable grief, (literally tears) of a people become a file, to wear away the wealth - i. e. of their oppressor?

அல்லற்பட் டாற்றாதழுதகண் ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை. 

 

182.   What though we roll in sorrow from year to year, can the deceased return again to this nether world? (Avvai.)

ஆண்டாண்டுதோறு மழுது புரண்டாலும் மாண்டார் வருவரோமாநிலத்தில்? (ஒளவை)

 

183.   If you spend what you have not earned, you will suffer. (Avvai.)

தேடாதழிக்கிற் பாடாய் முடியும். (ஔவை)

 

184.   A miser would rather lose his life than give anything from his fortune.

திரவியத்தி லழுத்த மானவன் செத்தாலுங் கொடான்.

 

185.   The prosperity of the man who does not cultivate socialitywith his friends, is like a tank full of water without banks.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந்தற்று.

186.   It is better to suffer death than disgrace.

இகழ்ச்சியடைவதைக் காட்டினும் இறப்பது நல்லது.

 

187.   If nothing be taken, nothing will be wanting; if nothingbe spoken, nothing will be rumoured; i. e. there is no rumour however vague, but has some truth in it.

அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.

 

188.   It is very difficult to swim and escape from the sea of vice, except for those who worship at the feet of Him who is the sea of virtue. (Tiruvalluvar)

அறவாழியந்தணன் றாள் சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்தலரிது. (திருவள்ளுவர்)

189.   To know one's self is knowledge, other knowledge is inferior.

தன்னையறியு மறிவே யறிவாகும் பின்னை யறிவது பேயறிவாமே.

 

190.   Riches are not permanent in their nature; if you get them, do withthem what will prove permanent; i.e., practise virtue.

      அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றா லற்குப வாங்கே செயல்

     

 

191.   The coveting of a small thing destroys the penance of years.

அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.


192.   If a mean person has obtained wealth, he will carry an umbrellaeven at midnight.
      அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியிற் குடை பிடிப்பான்.

 

193.   It is vain to cover our nakedness (small faults), while our crimesare exposed to view; i.e., not relinquished.

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம் வயிற் குற்ற மறையாவழி.

 

194.   அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

The first objects of adoration are father and mother


195.  
He who does a thing inconsiderately should suffer loss.

ஆய்ந்தோய்ந்து பாராதான் தான் சாவக் கடவன்.

 

196.   ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மேற் கண்ணாயிரு.

Though it be a sight ever so alluring, yet draw not your attentionfrom your aim.

 

197.   ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலில் பின்.
Though the fortitudo with which those who practise austeritiesendure their hunger is very great, yet it is inferior to theenergy of the generous who feed the hungry.

 

198.   Though who are too idle to engage in any enterprise, will hear thewords of rebuke which are applied to them.

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடி புரிந்து மாண்ட வுஞற்றிலவர்.

 

199.   இடிக்குந் துணையாரை யாள் வாரை யாரே கெடுக்குந் தகைமையவர்?
Who can destroy those with whom are counsellors, that cautionthem faithfully?

        

200.   To those who have adored, at the feet of him who is without· desire or aversion, there shall be no suffering for eternity.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பையில.

 

201.   நல்லிணக்கமல்லது அல்லற்படுத்தும். (கொன்றை வேந்தன்.)

Alliance with the unworthy will cause mutual pain. (Konraiventhan.)

 

202.   Make friendship with the worthy. (Ahthichudi.)

இணக்கமறிந்து இணங்கு. (ஆத்திசூடி.)

 

203.   While those in bliss enjoy eternal delight. (Vairagyasathagam.)

என்றும் வீடடைந்தவர் இறுமாப்பர். (வைராக்கிய சதகம்.)

 

204.   Be gracious to me now (Skantham.)

      இன்னே யருள்வீர். (ஸ்காந்தம்)


205.  
That which misers have hoarded will be carried off by the vicious (Koirraiventhan.)

     ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.           (கொன்றை வேந்தன்)

     

206.   Enjoyments and sufferings will accord with the doods done within the periods of former births.
வினைக்கீடாக அனுபவமுண்டாம்.

 

207.   The handle of an axe (being of word) is enimical to its own species. Proverb.

      கோடரிக்காம்பு குலத்துக் கீனம். (பழமொழி.)

 

208.   The fruit which the plantain tree produces leads to its destruction.

      வாழைக்குத் தானீன்ற காய் கற்றம்.

 

209.   Those who live in discord are as if enclosed in a vessel with a live snake. Kural.

      உடம்பாடி வாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்பொடு உடனுறைந் (குறள்.)

 

210.   (Real) Friendship to one removes bis distress with that promptitude with which the hands of him whose garments areloosened (while before an assembly) adjust them Kural.

            உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே, இடுக்கண் களைவதா நட்பு (குறள்.)

 

211.   The two possessions, viz. Knowledge and wealth are possessions indeed (Needineri.)
கல்வியுடைமை பொருளுடைமை என்றிரண்டு, செல்வமுஞ் செல்வமெனப்படும். (நீதிநெறி)

212.   Though you wash charcoal in milk and dry it ever so long, it willnot become white (Naladiyar.)
பாலார் கழீ இப் பலநாளுணக்கினும் வாலிதாம் பக்க மிருந்தைக்கிருந்தன்று (நாலடியார்)

213.   Learn perfectly what thou hast to learn, and when thou hastlearned it, act upon and persist in it. (Thiruvalluvar)

       "கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக" (திருவள்ளுவர்.)

 

214.   Whatever besides you leave unguarded, guard your tongue;

otherwise errors of speech and consequent misery will ensue. (Thiruvalluvar)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பார் சொல்லிழுக்கப் பட்டு (திருவன்ளுவர்.)

 

215.   Even to a crow its young one is regarded as a golden one (i. e.,) the best.

      "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு''

 

216.   Chastity becomes a woman.

      "காவல்தானே பாவையர்க் கழகு "

 

217.   Winnow while the wind blows; i. e., attend to a thing at a favourable time.

      “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்''

 

218.   Will the faltering words of an old man be agreeable to an organist?

      ''கிழவன் பேச்சு கிண்ணாரக்காரனுக் கேற்குமோ?'


219.   A rock that cannot be moved by a crow - bar gives way to the roots of a tree.

      ''பாரைக்கூ டாடாத பாறை பசுமரத்தின் வேருக்கூ டாடி விடும்"

 

220.   Friendship so close as not to admit of even a hair - like interruption may be destroyed by pecuniary dealings.

"மயிரூடாடா நட்புச் சிறிது பொருளூடாடக் கெடும்.''

 

221.   Be first at a feast and the last at slander.

      "ஊணுக்கு முந்தவேண்டும் கோளுக்குப் பிந்தவேண்டும்''

 

222.   The wealth of one possessing great wisdom, and who is much likedby the public is like a

tank filled with water to which allhave access.

      “ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்பேரறி வாளன் றிரு"

 

223.   The more you dig in a sandy soil the more does the water springforth; so the more you apply to science the more yourknowledge will increase.

"தொட்டனைத் தூறு மணற்கேணிமாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு"


224.  
The tongue of the inspired poet and the hand of the painter perform their functions Proverb.

தெய்வப் புலவனுக்கு நாவுணருஞ் சித்திரக்காரனுக்குக் கையுணரும். (பழமொழி.)

 

225.   To be united in friendship with the prudent who think of what they ought to think is productive of the highest felicity (Naladiyar.)

      உணர வுணரு முணர்வுடையாரைப் புணரப் புணரு மாமின்பம் (நாலடியார்)

 

226.   Relations or friends who have eaten together will cherish towards each other kind feelings.
      உண்ட சுற்ற முருகும்.

 

227.   One ought not to be ungrateful to his benefactor.

      உண்ட சோற்றுக் கிரண்டகம் பண்ணப்படாது.


228.  
A person's diet may be known by his appearance

      உண்டார் மேனி கண்டால் தெரியும்.

 

229.   Thousands crowd about the wealthy as crows about acorpso (Naladiyar)

உண்டாய போழ்தினுடைந்துழிக் காகம் போல் தொண்டாயிரவர்தொகுபவே. (நாலடியார்)


230.   
Without entertainment friendship ceases.

"ஊனற்ற போதே யுற ஏற்றது”

 
231.
   ............ There is no art

To find the mind's construction in the face. (Shakespeare.)

மனத் தோற்றத்தை முகத்தில் காண்பதற்கு ஒருவித வித்தையும்தேவையில்லை அகத்தின் அழகு முகத்தில் தெரியும். (ஷேக்ஸ்பியர்.)


232.
  Neither a borrower nor a lender be,

For loan oft loses both itself and friend; (Shakespeare.)

நீ கடனாளியாயு மிராதே கடன் கொடுப்போனுமாயு மிராதே

ஏனெனில் கடன் பணம் தொலைந்து போவதோடு சிநேகத்தையும்பிரியச் செய்கிறது. (ஷேக்ஸ்பியர்)


233.  
Doubt thou the stars are fire;

Doubt that the sun doth move;

Doubt truth to be a liar

But never doubt I love. (Shakespeare.)

நக்ஷத்திரங்கள் நெருப்பென்பதை நீ சந்தேகிக்கிறாய்;

சூரியன் தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் நீ சந்தேகிக்கிறாய்;

நீ உண்மையை பொய் என்று சந்தேகிக்கிறாய்;

ஆனால் நானோ எதை நேசிக்கிறேனோ அதை சந்தேகிப்பதில்லை. (ஷேக்ஸ்பியர்)  

 

234.   Better is a dinner of herbs where love is; than a stalled ox and hatred therewith (Bible.)

பகையுள்ள யிடத்தில் நற்சுவையுடன் கூடிய விருந்துண்ணலைக்காட்டிலும் அன்புள்ள இடத்தில் புல்லையே விருந்தாகப் புசிக்கலாம்.      (பைபில்)

(முகங்கடுத்து இடும் அமுதினும் முகமலர்ந்திடும் கூழே மேல்)   (பழமொழி)

235.   Train up a child in the way he should go; and when he isold, he will not depart from it. (Bible.)
குழந்தைப் பருவத்திலேயே எப்பாதையைப் பின்பற்ற வேண்டுமென்பதைப் பழக்கு. அது பெரியதானாலும் அப்பாதையினின்றும் பிரளாது. (பைபில்)

(தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்)

236.   What's in a name? That which we call a rose;

By any other name would smell as sweet? Shakespeare.

பெயரில் என்ன இருக்கிறது; நாம் எதை ரோஜாப் புஷ்பம்என்று சொல்லுகிறோமோ அதற்கு வேறு பெயரிட்டாலும்அதன் மணம் மாறுமா? (ஷேக்ஸ்பியர்)

(கரும்பை வேம் பென்றால் அது வேம்பாகுமா?)

 
237.  
When sorrows come, they come not single spies

But in battalions.

துன்பங்கள் தனித்து வராவாம், அவைகள் ஒன்றன்பின் ஒன்றாய்கோடிக் கணக்காய் வருமாம். (பட்ட காலிலேயே படும், கெட்டகுடியே கெடும்)

 

238.   Attempt the end, and never stand to doubt,

Nothing's so hard but search will find it out (Herrick.)

முடிவுவரையில் பிரயாசைப்படு. எப்போதும் சந்தேகத்துடனிராதே. எவையும் அவ்வளவு கடினமல்ல, ஊக்கத்தால் எவையும் சுலபமாய் முடிந்து விடும். (ஹெர்ரிக்)

(ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்) (குறள்)

239.   Virtue could see to do what virtues wouldBy her own radiant'light, though sun and moon Were

in the flat sea sunk. (Milton.)

சூரியனும் சந்திரனும் அகண்டகடலில் மூழ்கி (வெளித்தோன்றாம்லிருந்தாலும்) நற்குணம் தனக்குத்தான் உண்டாகிய ஜோதியின்மயத்தால் தன்னுடைய சுசீலத்தைப் பிரகாசிக்கச் செய்யும். (மில்டன்)

(நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும்இடும்பை தரும்) (குறள்)


            A. P. இராமன் B. A.

 

ஆனந்த போதினி - 1926, 1927, 1928, 1929, ௵

 

 

No comments:

Post a Comment