Wednesday, August 26, 2020

 ஆஸ்திக நாஸ்திக வாதம்

 

சுவதனா: - ஸகீ! விமர்சகே! இதோபார், சூரியபகவான் உதயமாகிறார். ஸகல சராசரங்களுக்கும் க்ஷேமத்தைக் கொடுப்பவர் இவர்தான். வேதஸ்வரூபமான இவரே பிரம்மம். நாம் இவரை நமஸ்கரிப்போம் வா!

 

விமர்சகா: - அடி சுவதனே! உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? உலகமெல்லாம் வாட்டி வரட்டுகிறவனையா நீ வணங்குகிறாய்! இவன்பூ மி முழுவதையும் வரளும்படி செய்கிறான். பயிர், பச்சை. செடி, கொடி, முதலியவைகளைக் காய்ச்சி உலர்த்துகிறான். ஏரி, குளம், வாவி, கூவம், தடாகம் இவைகளின் அழகை அடியோடு கெடுத்து விடுகிறான். இவ்விதம் குரூரமான இவனிடத்தில் எந்த நற்குண லேசத்தைக் கண்டு நீ நமஸ்கரிக்கிறாய்?

 

சுவதனா: - ஸகீ! விமர்சகே! சூரியபகவானைக் கூடவா நீ நிந்திக்கிறாய்! இவரிடத்தில் எந்த நற்குணம் இல்லை. கொஞ்சம் கவனமாய்க் கேள். இவர் தம்முடைய கிரணங்களைக் கொண்டு பூமியிலுள்ள தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து ஒன்பது மாத காலம் தம்கர்ப்பத்தில் வைத்திருந்து அநேகாயிர மடங்கு அதிகமாய் நீரை மழையாக வருஷித்து உலக முழுதையும் சந்தோஷப்படுத்துகிறார். இவர் இல்லா விட்டால் உலக மெங்கும் இருளால் பாழடைந்து போகும். இவரில்லாமல் நாம் கண்களைப் படைத்தும் பிரயோஜனமில்லை. வஸ்துக்களைப் பார்க்கும் சக்தியானது நமது கண்களுக்கு இவரால் தான் உண்டாகிறது. மேலும், பிராணிகளின் வியாதியைநீக்கி இவர் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறார். பலமான எந்தவியாதியும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் ஓடிவிடுகிறதல்லவா? தவிர ஞானிகளுக்கு மோக்ஷமார்க்கத்தைத் தருகிறார். ஏனெனில் முத்தர்கள் சூர்யமண்டலத்தின் வழியாக திவ்வியலோகம் போகிறார்கள். மேலும், சூரியனைக் காணாத தினத்தை துர்தினம் என்று சொல்லுகிறார்கள். எட்டுத் திக்குப் பாலகர்கள் இருந்த போதிலும், அவர்களில் ஒருவருக்காவது அர்க்யம் கொடாமல் ஜனங்கள் இந்த சூரிய பகவானுக்கே மூன்று காலங்களிலும் அர்க்யம் கொடுக்கிறார்கள். ஆகையால், மித்திரனாயும், அகண்ட பிரம்மாண்டத்திற்கு ஓர் விளக்காயும் விளங்கும், இவரை யார்தான் தோத்திரம் செய்வதில்லை. ஆகையால், சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும், எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயுள்ள, பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனை தியானம் செய்வோம். வா.

 

விமர்சகா: - அடி சுவதனே! உனக்கு புத்தியில்லை. கருணையில்லாத நாராயணனையும் நீ ஸ்துதிக்க ஆரம்பிக்கிறாயா?

சுவதனா: - அடி, மஹாபாவி, பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனை நீகருணையற்றவனென்று எவ்வாறு சொல்லத் துணிந்தாய்?

 

விமர்சகா: - அடி சுவதனே! என்பேரில் கோபித்துக் கொள்ளாதே; நான் பாவியல்ல. உன்னால் தோத்திரம் செய்யப்பட்ட நாராயணன் தான் மஹாபாவி. ஏனெனில், முதலில் தானே உலகத்தை சிருஷ்டித்து, தானேரக்ஷித்து, பிறகு, ஸம்ஹரிக்கிறான். விஷவிருக்ஷமா யிருந்தாலும், நாம் பயிர் செய்ததை நாமே வெட்டுவது எவ்வளவு குரூரத்தனம்? நல்ல பழங்களையுடைய பிரியமான மரத்தை ஒரு பைத்தியக்காரன் கூட வெட்ட மாட்டான். வெட்டினாலும் அதைக்குறித்து சந்தோஷப்படவு மாட்டான். அப்படி யிருக்க, போகங்களையும், போக சாதனங்களையுமுடைய ஜகத்தை சிருஷ்டித்துத் தானே அழிப்பது எவ்வளவு தயையைக் காண்பிக்கிறது! தவிர, தன்னுடைய விளையாட்டுக்காக உலகத்தை சிருஷ்டித்து ரக்ஷித்து, பிறகு ஸம்ஹரிக்கிறான். இவைகள் அவனுக்கு விளையாட்டு, நமக்குத் திண்டாட்டம். மேலும், அவன் பக்ஷபாதி; ஏனெனில், இந்திரன் முதலான தேவர்களை மிகவும் சுகத்திலும், மனிதர் முதலியவர்களை மத்யமாகவும், மிருகம் விருக்ஷம் முதலியவைகளை கஷ்டத்திலும் வைக்கிறான். தேவர்களிடத்தில் அவனுக்குப் பிரியமும், மிருகம், விருக்ஷங்களிடத்தில் அவனுக்கு வெறுப்பும் இருக்கின்றனவல்லவா? விருப்பும், வெறுப்பும் உள்ளவனை நாம் எப்படி தோத்திரம் செய்வது? மேலும், துஷ்டர்கள் கூட செய்யாத குரூரமான காரியத்தை இவன் செய்கிறான். எல்லாப் பிராணிகளிடத்திலும் அந்தர்யாமியாய் இருந்து கொண்டு, ஒவ்வொரு கெட்ட காரியத்தையும் செய்ய ஏவுகிறான். அவனால் ஏவப்பட்டு நாம் கெட்ட காரியம் செய்த பிறகு கோபங் கொண்டு நம்மை நரகத்தில் விழும்படி செய்கிறான். இவ்வித நடவடிக்கையுள்ள நாராயணனை மஹா குரூரனென்றும், நிந்திக்கத் தக்கவனென்றும் ன் சொல்லக்கூடாது?

 

சுவதனா: - அடி, அறிவில்லாதவளே! கருணா சமுத்திரனான ஸ்ரீமந்நாராயணனையும் நீ நிந்திக்க ஆரம்பிக்கிறாயா? இந்த சம்சார சமுத்திரத்தில் முழுகிக்கிடக்கும் பிராணிகளை அவர்தாமே கரையேற்றி துர்லபமாகிய தம்முடைய பதத்தை அடையச் செய்கிறார். திரௌபதி, பிரஹலாதன், குகன், சுக்கிரீவன், காகாசுரன், விபீஷணன், கஜராஜன் முதலியவர்களின் சமாசாரத்தை நீ அறியவில்லை. உலகத்தில் புத்தியில்லாதவர்கள் அல்லவோ தங்கள் குற்றத்தைப்பாராமல் பாடுபட்டுப் பிறரிடத்தில் குற்றம் காண்கிறார்கள். ஒரு திருஷ்டாந்தம் பார். ஒரு தகப்பன் தன் புத்திரனிடத்தில் உன் சத்ருக்களைக் கொன்றுவா என்று ஒரு கத்தியைக் கொடுக்க, அவன் அந்தக் கத்தியால் தன் கழுத்தையே அறுத்துக்கொண்டால் அது தகப்பனுடையகுற்றமோ புத்திரனுடைய குற்றமோ? பரமதயாளுவான சர்வேஸ்வரன் தன்ஸ்வரூபத்தையும், இது தர்மம், இது அதர்மம், என்பதையும் அறிவதற்கு வேதசாஸ்திரங்களையும், பகவானாகிய தன்னை ஆராதிப்பதற்கு சரீரத்தையும், தியானம் செய்வதற்கு மனசையும், நல்ல புத்தி உண்டாவதற்கு கங்கை முதலிய தீர்த்தங்களையும், ஆலயங்களையும், தத்வஞானம் உபதேசிப்பதற்கு சாத்குருக்களையும் நமக்குக் கொடுத்து நம்மை அனுக்கிரகிக்கிறார் அல்லவா! அப்படியிருக்க, இந்த சம்சாரத்தில் சுழன்று நின்றால் அது நமது தோஷ மல்லவா? பிராணிகளின் முன் கர்மத்தை அனுசரித்து அல்லவோ வித்யாசமான சிருஷ்டி ஏற்படுகிறது? இந்த பேதசிருஷ்டி நாராயணனுடைய துர் எண்ணத்தால் உண்டாவதல்ல. அவர் மேகம் போல் எல்லாவற்றிற்கும் பொதுவா யிருக்கிறார்.

 

விமர்சகா: - அடி சுவதனே! எப்படி மேகம் போல் பொதுவாயிருக்கிறார்?

 

சுவதனா: - சொல்லுகிறேன் கேள். நெல் முதலிய பயிர்களின் விளைவுக்கு மேகம் பொதுவான காரணம். அந்தந்த பயிர்களின் வித்தியாசமானது அந்தந்த தானியங்களிலுள்ள விசேஷகாரணத்தால் உண்டாகிறது. அது போல் பிராணிகள் செய்த நல்லகருமத்தையும், கெட்ட கருமத்தையும் அனுஸரித்து பகவான் பலனைக் கொடுக்கிறார். ஆனால், தன் இஷ்டம் போல் ஒருவனுக்கு நல்ல பலனையும், மற்றொருவனுக்கு கெட்ட பலனையும் கெடுப்பதில்லை. ஆகையால், சர்வேஸ்வரனை பக்ஷபாதி யென்றும், கருணையில்லாதவன் என்றும் சொல்லக் கூடாது.

 

விமர்சகா: - அடி, சுவதனே! நீ சொல்லுகிறபடி நாராயணன் பரமகாருணியனாய் இருக்கும் பக்ஷத்தில் இதுவரையில் ஜீவன்களை கவனித்து என் அனுக்கிரகக்கவில்லை?


சுவதனா: - அ
னாதியான கர்மத்தினால் ஜீவன் ஸம்ஸாரத்தில் மூழ்கியிருக்கிறான். அவன் ஈஸ்வரனால் தக்ககாலத்தில் கரையேற்றப் படுகிறான்.

 

விமர்சகா: - இது வரையில் அனாதியாயிருந்து சென்ற காலத்தில் கிடைக்காத மோக்ஷம், இனிமேல் ஜீவனுக்கு யாரால் எவ்விதம் கிடைக்கும்?

 

சுவதனா: - நாம் நல்ல கருமங்களைச் செய்து வந்தால் அவைகளின் பலனை நமக்குக் கொடுக்கும் காலத்தில் ஈஸ்வரனுக்கு கிருபையுண்டாகும். அப்போது அவன் நமக்கு மோக்ஷத்தையுங் கொடுக்கிறான்.


விமர்சகா: - அடி, சுவதனே! அந்த நல்லகருமங்க ளெவை?

 

சுவதனா: - சத்சங்கம் செய்து ஸம்ஸாரத்தில் வைராக்கியத்தை அடைந்து மோக்ஷத்தை விரும்பி சத்குருவை ஆச்ரயித்து தத்துவஞானம் அடைந்துபக்தி முதலிய உபாயங்களைக் கைக்கொண்டு பகவானுக்கு திருப்திகரமானகர்மங்களைப் பலனை அபேக்ஷியாமல் செய்து கொண்டு வந்தால், மரண காலத்தில் ஈஸ்வரனுடைய தயையாலேயே ஜீவன் எந்தெந்த சுபாவங்களை நினைத்துக் கொண்டு தன்தேகத்தை விடுகறானோ அந்த சுபாவத்தையே மரணத்துக்குப் பிறகு அடைகிறான் என்று பகவான் சாஸ்திரங்கள் மூலமாக அறி வித்திருக்கிறான்.

 

விமர்சகா: - ஆம், மோக்ஷத்தை அடைந்த பிறகு ஜீவன் ஸம்ஸாரத்திற்கு திரும்பி வருவானோ?


சுவதனா: - இல்லை. திரும்பி வருவதில்லை.

 

விமர்சகா: - மிகவும் துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜீவனுக்கு மோக்ஷம் உண்டென்பதும், அதை அடைந்த பிறகு ஸம்ஸாரத்திற்கு அவன் திரும்புவதில்லை யென்பதும், அழுகிற குழந்தைகளுக்கு தற்காலம் திருப்திக்காக ருசி காட்டும் பொய்வார்த்தைகளுக்கு ஒப்பானவையென்று நினைக்கிறேன்.

சுவதனா: - அடிவிமர்சகே! இந்த விஷயத்தில் நீ சந்தேதகப் படாதே. நமது தாய் தந்தைகளைக் காட்டிலும் அநேகமாயிர மடங்கு அதிகமாக நமக்கு நன்மையை உபதேசிக்கு வேதமானது எக்காலத்திலும் பொய் சொல்லாது. பரப்பிரம்மம், பரதத்வமுண்டென்று கூறுவது எப்படி உண்மையோ அப்படியே வாழ்நாள் முழுதும் துக்கியாயிருக்கும் ஜீவன் ஒரு காலத்தில் பகவானால் திருத்தப் பெற்று பிரமலோகம் அடைகிறான், மது படியும் அவன் திரும்பி வருவதில்லை என்பதும் உண்மையே. ஆகையால், அந்த பகவானாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்வோம் வா.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment