Thursday, August 27, 2020

 எமர்ஸனின் எழில்மொழிகள்

 

1. அசூயைப் படுவது அறியாதார் தொழில்; சுய அறிவை விட்டு மற்றொருவர் வரைந்துள்ள நூலை யனுசரித்து ஓர் நூலெழுத முயல்வது, கேவலம் தற் கொலைக்குச் சமானமாகும்; நல்லதோ, தீயதோ நமது உள்ளத்தையே நாம் ஆஸ்தியாகக் கொள்ளல் வேண்டும்.


2. நீ வலிமையுள்ளவன் என்னும் நம்பிக்கை உன் மனத்தில் எப்போதும் நிரம்பி யிருக்கட்டும்; தன்னம்பிக்கையாகிற இருப்புக் கம்பியின் நாதத்திற்கு எல்லா இருதயங்களும் அநுநாதம் செய்யும்.

 

3. எவனொருவன் மனிதனாக விரும்புகின்றானோ. அவன் மாமூல்களை நொறுக்குகிறவனாக இருத்தல் வேண்டும்.

 

4. அழியாத கீர்த்தியை விரும்புகின்றவன், தர்மம் எனும் பெயரை மாத்திரம் கண்டு மயங்கி விடலாகாது; அது அறமா இன்றா எனச் சோதித்தல் வேண்டும்.


5, உனது அறிவின் நேர்மையைப் பாதுகாத்துக் கொள்வது தான் உனக்கு எல்லாவற்றினும் பெரிய தர்மம்; உனக்குள்ளே நீ நிஷ்களங்கனாக இருப்பாயாயின் உலகம் உன்னை நாடும்.


6. எனது அறிவுக்கு நியாயமாகப் பட்டது தான் நியாயம்; அதற்கு விரோதமான தெல்லாம் அநியாயமே.

7. என்னுடைய கட என்ன என்பது தான் எனக்குப் பொருளே யன்றி, னங்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதன்று.


8. மூடத்தனமாக, முன் பின் முரண் படாமை யொன்றையே நாடுதல், சிற்றறிவினரைப் பீடித்திருக்கும் ஓர் பேய்.


9. சாமானிய ஜனங்களால் தூற்றப் பெறுதலே பெருமைக்குக் கட்டளைக் கல்லாகும்.


10. எவரும், தமது சுபாவத்தை மீறி விட முடியாது.

 

11. மனிதன் தன் யோக்கியதையை நன்றாகத் தெரிந்து கொண்டு, உலகில் காளை போன்று கம்பீரமாய் உலாவட்டும்.

 

12. மாமூல், பொருத்தம் எனும் கதைகளெல்லாம் இந்த நாட்களோடு தொலைந்து விடுமென நம்புகின்றேன்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 



 

 

 

No comments:

Post a Comment