Wednesday, August 26, 2020

 

இந்தியாவின் ஜாதி முறை

 

ஜாதிமுறை என்பது இந்தியாவிலே தான் விநோதமாகக் காணப்படுகின்றது. இம்முறை இப்பொழுது தோன்றியதல்ல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதிமுறை இந்தியாவின் கண் தோன்றியதாகத் தோற்றுகிறது. ஜாதியின் உற்பத்தியைப் பலர் பல விதங்களாகக் கூறுவர். ஜாதியையும் வர்ணத்தையும் ஒன்றாகப் பாவித்து இவ்விரண்டும்ஒன்றெனக் கூறி வர்ணத்தாலேயே ஜாதி உண்டானதெனக் கூறுவர் சிலர். வெள்ளை நிறத்தவர் பிராமணர்களென்றும், சிவப்பு நிறத்தவர் க்ஷத்திரியரென்றும், மஞ்சள் நிறத்தவர் வைசியரென்றும், கருப்பு நிறத்தவர் சூத்திரர் என்றும் கூறுவர். பின்னும் ஒரு சாரார் கடவுளின் திருமேனியில் முறையேவாய், புஜம், தொடை, பாதம், இவைகளிற்றோன்றிய நால்வர் பிராமணர்க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்றும், மற்றும் ஒரு சாரார் அக்கினியில்நால்வர் தோன்றினார் அவரே நான்கு ஜாதியாகப் பிரிந்தனரென்றும், பின்னும் சிலர் தேக ஆரோக்கியத்திற்காகச் சுத்தத்தின் நிமித்தம் பல ஜாதிகளாகப் பிரிக்கப்பட் டிருக்கின்றனரென்றும், இன்னும் சிலர் சில குடும்பத்தார்தாம் கற்ற கைத்தொழில்களைப் பிறருக்குக் காட்டாவண்ணம் அத்தொ பழிலையே விருத்தி செய்யக் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து தனித்தனி ஜாதியாராகச் சேர்ந்தனரென்றும் பகராநிற்பர். இவை பல கேள்விகளுக்கும் தடங்கல்களுக்கும் இடமாக நிற்கின்றன.

.

மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் ஆரியர் கூட்டத்தார் வட இந்தியாவில் திராவிடர்களை முறி அடித்துச் சந்தோஷமாகக் காலங்கழித்து வந்தனர். இவர்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தயால் தங்கள் மட்டிலேயே வேலைகளைப் பார்த்து வந்தனர். இரண்டாவது முறை வந்த ஆரியர்கள் ஆடவர்களாக வந்தனிமித்தம் மற்றப் பூர்வீக இந்தியர்களுடன் கலக்க நேரிட இதைக் கண்ட ஆரியர்கள் நான்கு ஜாதிகளாகப் பிரித்துக் கொண்டார்கள். அவைகள் பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திர வகுப்புகளாகும். பிராமணர்களின் தொழிலாவது மற்றைய ஜாதியாருக்கு நன்மைபயக்கக் கடவுளைப் பிரார்த்திப்பதும், வேதம் ஓதுதலும், பணக்காரராக விருந்தால் பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுவதும், எளியவர்களாயிருந்தால்ஐயமெடுத்துண்டு தம்மைக் காத்துக்கொள்வதுமே. க்ஷத்திரியர்களின் தொழிலாவது தம்முடைய புஜபல பராக்கிரமத்தால் விரோதிகளை வென்று தமதுபிரஜைகளைப் பாதுகாப்பது. வைசியர்கள் வியாபாரம் செய்து பொருளீட்டவும் உழவுத்தொழில் புரிந்து நாட்டை வளர்க்கவும் வேண்டும். சூத்திரர்கள் மேற்கூறிய ஜாதியார்களுக்குத் தொண்டு புரிந்து அடிமை யாவதே. மனுதர்ம சாஸ்திரத்தில் அந்தணர்கள் கடவுளின் அவதாரமென்றும் அவர்களுக்குச் சர்வசுதந்தரமும் அளிக்க வேண்டுமென்றும் கூறி யிருக்கிறது. ஆகவேபிராமணர்கள் உயர்ந்த ஜாதி ஆகின்றனர். அவர்கள் தங்களுன் டைய படிப்பின்திறமையாலும் மதியூகத்தாலும் ஏனைய ஜாதியாரை எளிதில் வென்று அவர்களை அடிமையாகப் பாவித்து நடத்தி வந்தனர். சாஸ்திரங்களைப் பெரிதும்தமது நன்மைக்காகவே எழுதி வைத்துக் கொண்டனர். ஜாதி முறையின் கட்டுப்பாட்டால் ஒரு ஜாதியார் மற்ற ஜாதியாரோடு உண்பதும் கிடையாது. கலியாணம் செய் கொள்வதும் கிடையாது. சில ஜாதியார் முன்னேற்றமடைய அவர்களின் உணவே முக்கிய காரணமாகும். ஆனால் கலியாண விஷயத்தில் சில விரோதங்களுண்டு. ஒரு பிராமணன் தன் ஜாதிப்பெண் ஒருத்தியையும் மற்றைய மூன்று ஜாதிப் பெண்கள் மூவரையும் முறையே வதுவை செய்து கொள்ளச் சாஸ்திரம் உண்டு. அந்தணனுக்கு உள்ள சொத்தைப் பத்துப் பாகமாகப் பிரித்து அந்தண ஸ்திரீக்குப் பிறந்த மக்களுக்கு நான்கு பாகமும், க்ஷத்திரிய ஸ்திரீ மூலமாகப் பிறந்தகுழந்தைக்கு மூன்று பாகமும், வைசிய ஸ்திரீ மூலமாகப் பிறந்த மைந்தர்களுக்கு இரண்டு பாகமும், சூத்திரப்பெண் மூலமாகப் பிறந்த புதல்வர்களுக்கு ஒருபங்குமாகப் பங்கிடுவான். இவ்விதமாக உயர்ந்த ஜாதி ஆண்கள் தாழ்ந்தஜாதிப் பெண்களை மணக்க முறை கொண்டு தாயின் ஜாதியே பிள்ளைகளுமாவர். மேல் ஜாதி தகப்பனுக்குப் பிறந்தமையால் தங்களைச் சற்று மேலாகவேகருதுவார். இம்முறைக்கு மாறாக உயர்ந்த ஜாதி ஸ்திரீகள் தாழ்ந்தஜாதி ஆடவர்களை மணந்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கேவலமாகக் கருதப்பட்டுத் தனி ஜாதியாக்கப்பட்டனர். இவ்விதம் சில ஜாதியார் புதிதாக ஏற்பட்டனர். பின்பு நம் இந்தியாவானது ஆதிகாலத்தில் அதிகமாக அன்னியர்களால் அடிக்கடி ஆரவாரம் கொண்டு தாக்கப்பட்டது. அன்னியர்கள் ஏராள்மாகக் குடியேறினர். அன்னிய ஜாதியார்கள் இந்தியர்களுடன் கலந்து இருந்ததின் பயனாக எண்ணிறந்த ஜாதிகள் ஏற்பட்டன. தற்காலத்தில் இப்பாதகண்டத்தில் சற்றேறக்குறைய 2378- முக்கிய ஜாதியார்களிருக்கின்றனர். இவர்களுள் பல உட்பிரிவும் உண்டு.

 

கி.மு. ஆறாவது நூற்றாண்டு தேசசரிதையில் ஜாதிமத பேதத்திற்காக முக்கியமாகக் கூறப்படும். அக்காலத்தில் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லப்படுபவர் தங்களுடைய கல்வியின் மேம்பாட்டால் மற்றைய ஜாதியாரைஹிம்சித்தது கொஞ்சமல்ல. உலகத்தில் மனிதர் பல ஜென்மங்க ளெடுத்துஇறுதியில் பெற முடியாத பிராமணப் பேற்றைப் பெற்று மோக்ஷம் அடையமுடியுமே ஒழிய மற்றவர்களால் முடியாது என்று கூறினர். இக்கொடியவசனத்தை மாற்றச் சில மதாச்சாரியர்கள் தோன்றினர். அவர்களுள் புத்தரும் மகா வீரரும் முக்கியமானவர். ஆகவே சுருங்கச் சொல்லின் இந்து மதத்தின் கொள்கை என்னவெனின் ஜாதிபேதமே யொழிய வேறில்லை.

 

ஆதிகாலத்தில் இச்சாதி பேதத்தால் சில நன்மைகளும் இருந்தன. அவை ஒவ்வொரு சாதியாரும் தத்தம் தொழிலைச் செவ்வனே ஆற்றிவந்தமையும், பெரியோர்களுக்கு அடங்கி நடக்கும் தன்மையும், மரியாதையும், செட்டுத்தன்மையும், சுயநலம் கருதாமையுமாகும்.

 

ஆனால் இச்சாதிபேதத்தால் தாழ்த்தப்பட்ட ஜாதியாரை உயர்ந்த ஜாதியார் என்போர் கேவலமாக நடத்தினர். ஒரு ஜாதியாருக்கும் மற்றொரு ஜாதியாருக்கும் இயற்கையிலேயே ஒருவகையான கிளர்ச்சி உண்டாகி வேற்றுமைஉண்டாகிறது. ''The institution fosters intense class pride, fatalto a feeling of brother - hood between man and man " V. A. smith அதாவது எவ்வளவு அத்தியந்த நண்பர்களாக இருந்த காலத்தும் ஜாதி என்கிற இக் கொடிய கோடரி நட்பாகிய ஸ்தம்பத்தை இரு பிளவாகப் பிளந்து விடுகிறது. ஒரு ஜாதியாரில் ஒருவன் உயர்ந்த உத்தியோகத்திலிருக்தால் அவன் தன்னுடைய ஜாதியாரையே பெரிதாகப்பாராட்டி அவர்களுக்கேஉத்தியோகமும் கொடுப்பான். என் செய்வது? மற்ற ஜாதியார் கற்றதனாலாகிய பயன் ஏனைய ஜாதியாருக்கு அறவே நீங்கிவிடுகின்றது. ஒரு ஜாதியார்முன்னுக்கு வருவாராயின் அவர்களே மற்றையோரைத் தலையெடுக்கா வண்ணம் செய்கின்றனர். சில ஜாதியாருக்குள்ள வேலைகளை அன்னிய ஜாதியார்கற்று மேம்படப் பிந்துகின்றனர். எனவே ஜாதி பேதத்தால் உண்டாகிய தீமைகளுக்கு அளவே இல்லை.

 

தற்காலத்தில் இந்தியாவானது ஜாதிபேதத்தால் மிகவும் கெட்டுப் போயிருக்கிறது. ஜாதி துவேஷத்தால் இந்தியா முன்வருவதற்கு வழியில்லை. இதற்கேற்பதேச சரிதை ஆராய்ச்சியில் சிறந்த நிபுணர் ஒருவர், " India cannever become a nation'" என்று கூறியுள்ளார். சில ஜாதியார் வசிக்கும்தெருக்களில் கூட சிலர் செல்லலாகாது. கேவலம் பன்றிகளும்கூட உருண்டுசெல்லும் அத் தெருக்களுக்குள் சமத்துவமுள்ள மானிட ஜென்மம் எடுத்தவர்கள் செல்லலாகாதென்றால் இம்மனிதர் பன்றிகளைக் காட்டிலும் கேவலமாகக்கருதப்படுகின்றார் என்பது அங்கை நெல்லிக்கனி. மனிதன் ஒவ்வொருவனும் கடவுளால் சமமாகச் சிருஷ்டிக்கப்பட்டானென்பது திண்ணம்.


 “If we look through all the earth,
 Men, we see, have equal birth,
 Made in one great brotherhood
 Equal in the sight of God.''-- Henry Maine.


தாழ்த்தப்பட்ட ஜாதியரைக் கடவுளின் சம சிருஷ்டி யென்று கருதாது துன்புறுத்துகின்ற மதியிலிகளைக் கடவுளும் வெறுப்பார் என்பதை மறந்தனர்போலும். என்னே! அவர்களது கொடுமை! தாழ்த்தப்பட்ட ஜாதியாரைக் கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாதாம்.

 

சிலர் 'ஜாதிவித்தியாசம் இருக்கக்கூடாது' என்று அதிகமாகப் பிரசங்கம் செய்து தம்மையே முன்னுக்குக் கொண்டு வரக் கருதுகின்றனர். இன்னும் சிலர் சமத்துவம் பாராட்டவேண்டுமென்று பிறருக்கு எடுத்துக் கூறி அதைத் தாம் கவனியாது வருகின்றனர். இவர்களது செய்கை “கையிலிருப்பது ஜெபமாலை கன்னம் வைப்பது பெருமாள் கோயில்' என்பதைப்போலிருக்கிறது.

 

நம் இந்தியா முன்னுக்குவர வேண்டு மென்றால் ஜாதித்துவேஷம் அறவே நீங்கப்பட வேண்டும். சகல ஜாதியாரும் சகோதரர்கள் என்றநிலைமை ஏற்படவேண்டும்.

 

''Why let caste be so supreme?
 It is but folly's passing stream!''


 பின்னும்

"Empty is a cast dispute
 All the castes have but one root" Sri Henry Maine.


ஆகவே ஜாதி வித்தியாச மிருக்கக்கூடாது என்பது பது நன்கு தோற்றுகிறது.

 

கிறிஸ்தவர்களை எடுத்துக் கொள்வோமானால் அவர்களுக்கு மதத்தைத் தவிர ஜாதி பேதம் கிடையாது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களோ இச்சாதிப் பாராட்டில் சற்று ஈடுபட்டுள்ளார். இவர்களும் ஜாதிபேதம் இல்லைஎன்று கூறுகிறார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசம் பாராட்டுகின்றார்கள். இறைவனைத் தொழுகின்ற காலத்தில் அவர்களுக்கு வித்தியாசம் கிடையாது.

 

முஸ்லிம்களைச் சற்று நோக்குவோமாயின் அவர்களின் ஒற்றுமை மெச்சத்தக்கதே. அவர்களுள்ளும் சற்றுப் பேதமிருந்தாலும் "முஸ்லிம்'' என்ற மாத்திரத்தில் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இம்மதங்கள் பரவி வருவதற்கு இவர்களுள் அதிக வித்தியாசம் இன்மையும் இவர்களின் ஒற்றுமையும் காரணமாகும். புத்தமதம் பரவுவதற்கு ஜாதிபேத மின்மையே முதற்காரணமாகும். ஆனால் இந்துக்களை நோக்குமிடத்து இவர்களுள் ஜாதி பேதம் அதிகமாகிக் கடவுளையும் கண்டு தொழுவதற்குச் சிலர்க்கு முடியாது போகின்றது. சிலர் தெருக்களுள்ளும் செல்லமுடியாது தீண்டப்படாதவராகின்றார். அதே மனிதன் முகம்மதியனாவானாகில் அவனை வீட்டிற்குள் அழைத்து வைத்துக் கைகுலுக்கிப் பேசி அனுப்புகின்றனர் உயர்ந்த ஜாதி எனப்படுவார். என்னே இந்து மதத்தின் ஜாதிபேதம்! இந்துமதம் ஓங்கி வளராமலிருப்பதற்கு இந்துக்களின் ஜாதிபேதமே காரணமாகும்.

 

ஆகவே இந்தியராகிய நாம் ஜாதிபேதம் என்கிற கொடிய விஷத்தைக்கடிந்து நீக்கி ஜாதிபேதமில்லாமல் சகோதரத்துவமாக இருந்து எச்சாதியாரும் எம்மதத்தினரும் கடவுளின் மக்களெனக் கருதி வித்தியாசமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து இந்தியாவின் கேவல நிலைமையை மாற்றிப் பிறநாடுகளிலும் சிறந்த நாடாகச் செய்வோமாக. ஜாதி பேதம் இருக்கும் வரை இந்தியாமுன்னுக்கு வராதென்பது திண்ணம்! திண்ணம் ஆகவே ஜாதி பேதத்தை நீக்கி யாவரும் சகோதரர்கள் போன்று ஒற்றுமையாக வாழ்வோமாக.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment