Wednesday, August 26, 2020

 இந்திரசித்தன் வெந்திறல்

 

“இந்திரன் முதுகு கண்ட இராவணன்" காதற்றிருமகனாய் இலங்கையில் இந்திரசித்தன் இலங்கினான். புகழ் குன்றாத அரக்கர் குலம் தலையெடுக்கப் பிறந்த அரக்கர்கோனின் அருமந்த புத்திரனாய் அமைந்த இந்திரசித்தனின் இயற் பெயர் மேகநாதன் என்பதாகும். இம்மேகநாதன், வானவர்க்கரசாம் இந்திரன் மேலும் படை கொடு சென்று அவனை வென்று அவனைச் சிறை செய்யும் ஆற்றல் பெற்றுநின்றான். இந்திரனைச் செயித்த இவன் இந்திரசித்தனாக அமைந்து புகழ் நிறுவிய பான்மையைக் கவியாசர் ஏற்ற இடந்தோறும் போற்றியுரைக்கின்றார்.

 

இராவண வீரனது நன்மகனாய்ப் பிறந்த இவன், இளவயதிலேயே தனது ஆற்றலைக் காட்டும் இளவீரனாக அமைகின்றான். இவன் அவ்விளவயதில் இயற்றும் விளையாட்டுகளெல்லாம் அசாதாரணமானவையேயாகும். சிங்கக் குட்டிகளைப் பிடித்துவந்து அவைகளுக்குக் கோபமூட்டி, அவைகளுடன் ஏதிர்த்து விளையாடுதலே இவன்றன் விளையாட்டாக அமையும். இன்னும், வானில் விண் மீனிடையே விளங்கும் அம்புலியை அழைப்பதும், அஞ்சி வந்த அம்புலியை இரண்டு கரத்தாலும் ஏந்தி அதனைத் தாயருக்குக் கொண்டு வந்து காட்டுவதுமே, இந்திரசித் தனது இயல் விளையாட்டுகளாக விளங்கின. ''கலையினால் திங்களென்ன வளர்கின்ற காலத்தே தான், சிலையினால் அரியை வெல்லும் ஆற்றல்'' படைத்தவனாய் இலக்கிய பெருமை இந்திரசித்தனுடையதேயாகும்.


“தாளரிச் சதங்கையார்ப்பத் தவழ்கின்ற பருவந்தன்னில்
கோளரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை கொணர்ந்து கோபம்
மூளுறப் பொருத்திமாட முன்றிலின் முறையினோடி
மீளரும் விளையாட்டு"


அயரும் பான்மையைக் கம்பர் அழகாக எடுத்தெடுத்துரைத்து மகிழ்கின்றார்.


"அம்புலி யம்மவாவென் றழைத்தலும் அவிர்வெண்டிங்கள்
இம்பர்வந்தானை யஞ்சலென இருகரத்திலேந்தும்''


இந்திரசித்தனின் வெந்திறல், இளவயதிலேயே விளங்குவதாயிற்று. விளையும் பயிர் முளையில்" என்பது பழமொழி. இந்திரசித்தன் பின்னர் தானியற்றிய அரிய பெரிய காரியங்களுக் கெல்லாம் அடிப்படை வித்தாக தனது இளவயதிலேயே இகலேறு போல விளங்கினான் என்பதை கவியரசர் உணர்ந்து கூறும் திறம் கற்றார் உளத்திற்கு கழிபேருவகை தருவதாகும்.

 

இலங்கை நகரில் புகுந்து, சிறை யெய்திய செல்வியைத் தேடி புகைபுகாவாயிலும் புகுந்து வருகின்ற அனுமன்,

 

"முக்கணோக்கினன்-முதன் மகன் அறுவகை முகனும்
திக்கு நோக்கிய புயங்களும் சிலகாந்தனையா
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்ற''


இந்திரசித்தனைக் காணுகின்றான். இவன் றன் கம்பீரமான தோற்றத்தைக் கண்ட அநுமன் அவன் அளவற்ற ஆற்றல் படைத்தவன் என்பதை உணர்ந்தான்.


“வளையும் வாளெயிற்றாக்கனோ கணிச்சியான் மகனோ
வளையில் வாளரியனையவன் யாவனோ அறியேன்
இளையவீரனும், எந்தலும், இருவரும் பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளதென உணர்ந்தான்''


என்று கூறும் கம்பர் தங்கவி நலம் போற்றுதற்குரியதாகும். அரக்கர்கோன் அமளியில் தூங்குவதைக் கண்ட அனுமன் அவன்றன் வலியுணர்ந்தவனாய் அவனை அவ்விடத்தே முடித்து, தன் தோளாற்றல் காட்டத்தகும் என்று நினைத்தவன் அவ்வாக்கர்கோன் மகனைக் கண்ட காலத்து மட்டும் அவனது ஆற்றலை யடக்கத் தான் வலியற்றவன் என்பதை உணர்ந்ததோடு, தன் தலைவனாய இராமனும்
இளைய வீரனுங்கூட வீரனுங்கூட எளிதில் எளிதில் இவனை வெல்லுதல் இயலாது என்பதை உணர்ந்து கூறுவதாக அமைந்துள்ள கம்பர் கவிநலம் நடஞ் சான்றதாகும். இத்தகைய வீரனைத் துணையாவுடைய இப் போரிராவணன் புவன மூன்றையம் வென்றது ஒரு பெருங் காரியமாகப் பாராட்டத் தக்கதன்று என்றும், தனித்தனியேனும் ஒருங்கு சேர்ந்தேனும் மும்மூர்த்திகள் இவனுக்கு உவமையானால் உண்டேயன்றி வேறு உவமை தேடித் திரிதல் வீரன் புகழுக்கு இழுக்கேயாகும் என்றும் கூறும் அனுமனது செஞ்சொற்கள் அழகுடையனவாகவே அமைந்துள்ளன.


“இவனை யின் றுணையுடைய போரிராவணன் என்னே!
புவன மூன்றையும் வென்றதோர் பொருளெனப் புகறல்
சிவனை நான் முகத்தொருவனைத் திருநெடுமாலாம்
அவனையல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவே!''


என்று கவியரசர் அனுமன் வாயிலாகக் கூறும் பெருமை படைத்தவனாக இந்திரசித்தன் விளங்குகின்றான்.

 

மற்றும் இவ்வீரனது உள்ளம் பலரும் போற்றத்தக்கதொரு சிறந்த உள்ளமாயே அமைந்துள்ளது. சீதையைக் காணவந்ததொரு குரங்கு, அசோகவனத்தையும், அரக்கர் காக்கும் அரக்கர் காக்கும் ஓமகுண்டத்தையும் அழித்யாது அதனை யடக்கச் சென்ற வீரர் அனைவரையும் வீழ்த்திக் கடைசியாக அரக்கர்கோனின் அருமத்த மைந்தனான அஷய குமாரனது உயிர் குடித்து நின்றது என்று கேட்ட 'வீரத்தே நின்ற வீரன்,'' அனுமன் செருக்கடக்க அசோக வனத்தை நண்ணுயின்றான். தன்னருமைத் தம்பியை இழந்த தமையன் தன் தம்பி மாண்டு மடிந்ததற்காக வருந்தாது அத்தகைய தொரு செயலால் தன் தாதையின் புகழுக்கு நேர்ந்த பெரும்பழியை நினைந்து நினைந்து உருகுகின்றான்.


"தம்பியை உன்னுந்தோறும் தாரைநீர் ததும்புங்கண்ணான்
வம்பியல் சிலையை நோக்கி வாய்மடித்துருத்து நக்கான்
கொம் யெல மாயாவாழ்க்கைக் குரங்கினால் குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்த்தான் எந்தை புகழன்றோ தேய்ந்தது என்றான்"


என்று இந்திரசித்தனது இகலுடை உள்ளத்தைப் போற்றி யுரைகின்றார். இன்னும்,


"கானிடை அத்தைக்குற்ற குற்றமும் கானார் பாடும்
யானுடை எம்பிவீழ்ந்த இடுக்கணும் பிறவும் எல்லாம்
மானுடர் இருவரானும வானரம் ஒன்றினானும்
ஆனிடத் தளவென்வீரம் அழகிற்றே யம்மா"

 

என்று இந்திரசித்தன் தனது வெந்திறல் வலியர்றுப் போனதற்காக வருந்தி தனனத்தானே வெறுக்கின்றான்.

 

வீரஞ் செறிந்த உள்ளத்தில், தானொருவனே ஒப்பற்ற வீரன் என்ற செருக்கும் உறைந்து கிடக்கின்றது. கடத்தற்கரிய காவலையுடைய இலங்கை நகரிலே ஒரு சராகு வந்து சிறிதய அசசமின்றி, அசோக வனத்தை அழித்ததுடன், தன்னை யெதிர்த்த அரக்க வீரர்களை யெல்லாம் அழித்து நின்றது என்றதை அறிந்த மாத்திரத்தில், அக்குரங்கின் குரஙகா ஆற்றலை அறிந்திருந்தும் அதனை வலியடக்கி வெல்லும் திறமுள்ள தன்னை யேவாது வேறு பல இராக்கத வீராகளை அனுப்பினது தன் தந்தையான இராவணனது பிழையேயாகும் என்னும் பொருள்பட


"ஒன்று நீ பறிதியோராது உற்றிருந்து உளையகிற்றி
வன் திரல் குரங்கினார்றால் மரபுளி உணர்ந்துமன்
சென்று நீர் பொருதிரென்று திறத்திறஞ் செலுத்தித் தேயக்
கொன்றனை நீயேயன்றோ அரக்கர் தம் குழுவை யெல்லாம்"


என்று இந்திரசித்தன் கூறும் வெம்மொழிகள் அவன் தன் பெருமை யுணர்ந்த தலைமகன் என்பதையும் அவன் செருக்குடன் வாழ்ந்த சிறப்புடையான் என்பதையும் விளக்குவதாகும்.

 

இன்னும் தன் மாறொரு தம்பியாய அதிகாயனை இளைய வீரன் வீழ்த்தியதை அறிந்த இந்திரசித்தன், திரும்பவும் தன் தாதை தன்னையே முதலில் போர்க்கு அனுப்பாததறகா அவனைக் கடிகின்றான்.

''கொன்றாரவரோ. சொலை சூழ்கென நீ தொழுதாய்
வன்றானையர் மானுடர் ஒன்மை யறிந்து மன்னா!
என் றாலும் எனை செலவே வலையிற்ற தென்ன
நில றான நெடிதன்னி முனிந்து நெருப்புயிர்ப்பான்.''


என்று கவியரசர் கூறுஞ் செஞ்சொற்கள தன் தந்தையான இராவணனையே அவன்றன் முகத்துக் கெதிரே நீ தேர்ந்த ஆலோசனையில்லாதவன் என்று எடுத்துக் கூறும் மேட்டிமை வாய்ந்தவன் மேகநாதன் என்பதை விளக்கும்.

 

அரக்கர் புரந்தரனும் அகிலலோக பயங்கரனுமான இராவணன் மந்திராலோசனை கூட்டி, அதில் தனக்கும், தன்னகருக்கும் தன்னையடுத்த அரக்கருக்கும் ஒரு குரங்கால் ஏற்பட்ட பழி துடைக்க எண்ணி ஆலோசிக்கு மளவில் பலர் பல திறங்கூற, வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும் வீரனான இந்திரசித்தன் கூறும் சூளுரை அவன்றன் வீரஞ் செறிந்த உள்ளத்தை இனிதே விளக்குவதாகும்


"முற்று முதலா யுலகமூன்று மெதிர் தோன்றிச்
செற்ற முதலோரொடு செறுத்ததோர் திறத்தும்
வெற்றியுனதாக விளையாதொழியின் என்னைப்
பெற்றமிலையால் நெறிபிறந்துயிலன் என்றான்"


என்று கவிஞர் எடுத்துரைக்கின்றார்.


''யானையிலர், தேர் புரவியாது மிலர், ஏவும்
தானையிலர், நின்றதவ மொன்றுமிலர், தாமோர்
கூனல் முதுகின் சிறுகுரங்கு கொடுவெல்வார்
ஆனவரும் மானுடர் நம்மாண்மை இனிதன்றோ.


என்று வில்லாளர் ஆனார்க்கெல்லாம் மேலவனான மேகநாதன், அரக்கர் தம் ஆண்மையை இனிதுணர்ந்து அவ்வாண்மை பயனற்றுக் கிடப்பதற்காகப் பரிந்துகூறுஞ் செஞ்சொற்கள் கற்றார் உளத்தை உருக்குவனவாகும்.

 

இனி, இராமனுக்கும், இராவணனுக்கும் நேர்ந்த பெரும் போரில் இதிரசித்தனின் போர்த்திறம் போற்றத்தக்கதொரு பொருளாயே அமைந்துள்ளது.


"பூணெறிந்த குவடனைய தோள்களிரு
      புடைபரந்துயா வடல்வலித்
துணெறிந்தனைய விரல்கள் கோதையொடு
      சிலையெறிந்ததொரு தொழில்படச்
சேணெறிந்து நிமிர்திசைகளோடு மலை
      செவிடெறிந்துடைய மிடல்வலோன்
நாணெறிந்து முறைமுறை தொடர்ந்து
      கடலுலகம் யாவையும் நடுக்கினான்'

என்று இந்திரசித்தனது போர்திறனைப் போற்றிப் புகழ்கின்றார். இந்திரசித்தன் எய்த நாகபாசத்தாலும் பிரமாத்திரத்தாலும் வானரர்படை நலிந்த தன்மையை யாரே மறக்க வல்லார். இலக்குவனுக்கும், இந்திரசித்தனுக்கும் நேர்ந்த பெரும் போர்களிலெல்லாம், வெற்றி தோல்வி யார்பக்கமெனவே விளம்ப இயலாதிருந்தது என்பதும், முன்னர் அனுமன் கூறியபடி, இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் இவனுடன் பலநாள் பொருது கடைசியிற்றான் இவன்றன் வலியடக்கினார்கள் என்பதுமே இவன்றன் எஞ்சாத வலிக்கு ஒரு சிறந்த சான்றாகும். இந்திரன் முதுகு கண்ட இராவணன் திருமகனான, இந்திரசித்தனை இலக்குவன் முடித்தனன் என்பதைத் தேவர்களெல்லாம் அன்றே
தாம் அரக்கர் கோனிடமிருந்து சிறை நீங்கியயதாக நினைத்து, அவரவர் தூசு நீக்கி
ஆர்த்துக் கொல்லாத விரதத்தார் தம் கடவுளர் கூட்டமொத்து நின்றார்கள் என்று கவிஞர் போற்றி யுரைக்கின்றார். இந்திரசித்தனை யிழந்த இராவணன் இனி வலிகுன்றிய வீரனே யாவன் என்பதையும் அவனை முடிப்பது அருந்திறன் அன்று என்பதையும் வானவர் அறிவர். அந்த நிலையில் இந்சிரசித்தனின் வெந்திறல் முடித்த இலக்குவனையே வானவரும் போற்றி மகிழ்கின்றார்கள். இராமவீரனும், இந்திரசித்தன் பின் இராவணன் ஒருவனும் உளன் என்பதையு மறந்து,


"கம்பமதத்துக் களியானைக் காவற்சனகன் பெற்றெடுத்த
கொம்பு மென்பால் வந்து குறுகினாள் நன்றெனக் குளிர்ந்தேன்"


என்று இந்திரசித்தனது வெந்திறலுணர்ந்து அவனை முடித்த தன் தம்பியின் ஆற்றலை வியந்து கூறுகின்றான். ஆகவே இதுவரை கூறியவற்றால், இந்திரசித்தன் இகலுடையுள்ளத்தனாய் இலங்கி அதற்கேற்ற வெந்திறலுடைய பெருமகனாய் அமைந்து அரக்கர்தம் புகழ் நிறுவி நின்றனன் என்பது சொல்லாமலே யமையும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment