Wednesday, August 26, 2020

 

இந்து மதத்துக்கு விமோசனம்!

  

மன்னர்கள் பிறந்த தினங்களை முன்னிட்டு, பிரஜைகளுக்குச் சன்மானம் அளிக்கப்படுவது எங்கும் நடக்கும் சம்பிரதாயம். திருவிதாங்கூர் மஹாராஜா தமது இருபத்தைந்தாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை யொட்டி பிரஜைகளுக்கு ஒரு சன்மானம் அளித்திருக்கிறார்.

 

அச்சன்மானம் என்ன? பொன்னா! பொருளா! பட்டமா! பதவியா? இவைகளை யெல்லாம் விட மேலான - விலைமதிக்க வொண்ணாக - பிரஜா வுரிமையே யாகும். அவ்விதப் பிரஜாவுரிமையிலும் பலவகையுண்டு. லௌகீக முறைபிலும், பாரமார்த்திக முறையிலும் மக்களுக்கு இயற்கையாகப் பல உரிமைகளிருக்கின்றன. அவ்வித உரிமைகள் இடையே ஏற்பட்ட சில மூடப்பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டன. அவ்விதம் பாதிக்கப்பட்ட சில உரிமைகளில் ஆலயப் பிரவேச உரிமையும் ஒன்று. இவ்வுரிமை நம் பாட்டில் பொதுவாக, தாழ்த்தப்பட்ட வகுப்பு சகோதார்களுக்கு எக்காரணத்தாலோ மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வான்ம வேட்கை உரிமையைத்தான் இப்போது திருவிதாங்கூர் மகாராஜா தமது இந்து பிரஜைகளுக்கு வேற்றுமையின்றி யளித்திருக்கிறார். இது இந்து மக்களுக்கு முக்கியமாக, தாழ்சுதப்பட்ட இந்து சகோதார்களுக்கு ஒரு பெரியசன்மான மல்லவா!

 

திருவிதாங்கூர் மகாராஜா இந்த ஆலயப்பிரவேச உரிமை சம்பந்தமாக, பிரகடன மொன்று வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு: -

 

"நமது மதம் இறைவன் திருவருள் வழிப்பட்டது. சமாச உணர்ச்சி கொண்டது. மதவழக்கங்கள் காலத்திற் கேற்றாற்போல் மாறி வந்திருக்கின்றன. ஹிந்து மதத்தின் பேருண்மைகளை நாம் நன்கு உணரம்திருக்கிறோம். ஆகையால், பிறப்பு அல்லது சாதி காரணமாக, எந்த ஹிந்துப் பிரஜைக்கும் மத வழிபாட்டில் தடையிருக்கக் கூடாதென்பது நம்முடைய அபிப்பிராயம். உற்சவங்கள், பூஜைகள் முதலியவை சம்பந்தமாக அவ்வப்போது நாம் செய்யும் விதிகளுக்கு உட்பட்டு சமஸ்தான நிர்வாகத்தின் கீழுள்ள ஹிந்து ஆலயங்களில் புகுந்து வழிபட எந்த ஹிந்தவுக்கும் ஜாதி, பிறப்பு காரணமாகத் தடையிருத்த லாகாதென்று நாம் உத்தரவிடுகிறோம்."

 

உலகத்திலேயே இந்தியாவில் தான் சாதி, சமய வேற்றுமைகளும், மூடபழக்க வழக்கங்களும் மிகவும் மலிந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தென்னிந்தியாவில் இவைகளின் ஆதிக்கம் அதிகம். இதிலும் கேரள நாடே இவைகளுக்குத் தாயகமெனக் கூறின் மிகையாகாது. ஏனெனில் அங்குதான் வைதீகத்தின் முழு சொரூபம் காணப்படுகின்றது. தமிழ் நாட்டின் மற்ற பாகங்களில் தீண்டாமை மட்டுந்தான் அநுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கேரளத்திலோ தீண்டாமையோடு, பாராமையும் (அதாவது தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்ணால் பார்த்தலுங் கூடாது) கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.  ஆகையினால் தான், கேரளத்தின் முக்கிய பகுதியான திருவிதாங்கூரில் தாழ்க்கப்பட்ட மக்களுக்கும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்ற காரணத்தால், ஆலயப்பிரவேச உரிமை அளிக்கப் பட்டிருப்பதைக் கண்டு பெரும்பாலோர் ஆச்சரியமும், சந்தோஷமும், சிலர் சந்தேகமுங் கொண்டு அபிப்பிராயங் கூறியிருக்கின்றனர். பொதுவாக, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கலாம் என்று மகாராஜா உத்தரவிட்டிருக்தாலும், பின்னர், ஆலய நிர்வாகிகள் விதிகளை விதித்து ஆண்டவனை வழிபடும் விஷயத்தில் இடையூறு செய்து வேறொருவகையில் அவ்வுரிமையைப் பறிக்க முயலலாம் அல்லவா! ஏனென்றால், இதுவரை திருவிதாங்கூரில் சமஸ்தான ஆலயங்களில் புகும் விஷயத்தில் ஆலயப்பிரவேச உரிமையைத் தாராளமாகப் பெற்றுள்ள ஜாதி ஹிந்துக்களுக்குக் கூட சில விதிகள் இடையூறாக இருந்தன. பூஜை செய்யும் அருச்சகரைத் தவிர வேறு யாரும் கருப்பக் கிருகத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை சில வகுப்பார் நமஸ்கார மண்டபத்திற்குள் புகுவதற்கும் அநுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, இவ்வித விதிகள் ஏதேனும் விதிக்கப்பட்டு ஆண்டவன் தரிசனத்தைத் தடை செய்யலாம் எனச் சிலர் சந்தேகிப்பதற்கு நியாயமும், இடமுமிருக்கிறது. ஆனால் இப் பிரகடனத்துக்குப் பிறகு வெளியான விதிகளைக் கவனித்ததில் அவ்வித சந்தேகத்துக்குச் சிறிதும் இட இடமில்லையென நன்கு விளங்குகிறது.“ கோயில்களில் சரியான நிலைமையைப் பாது காப்பதற்கும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றைப் பராமரிப்பதற்கும் நாம் ஏற்படுத்தும் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, பிறப்பாலோ அன்றி மதத்தாலோ ஹிந்துவாக உள்ள எவருக்கும் நமது ஆதிக்கத்திற்கும் நமது கவர்ன்மெண்டின் ஆதிக்கத்திற்கும் உட்பட்ட கோயில்களில் நுழைவதற்கும், தொழுவதற்கும் இனி நிர்ப்பந்தமெதுவு மிருக்கக்கூடாதென நாம் ஆக்ஞாபிக்கிறோம்' என மகாராஜா ஸ்ரீ முகத்தில் குறிப்பிட்டிருக்கிற நோக்கங்களை நிறைவேற்றி வைப்பதற்காகவே, அவ்விதிகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.  இவ்விருபத்தொரு விதிகளில் மிக முக்கியமானவைகளை வாசகர்கள் அறிந்து
கொள்வதற்காகக் கீழே தருகிறோம்.

 

1. கோவில்களில் பூஜை, கைவேத்தியம், வழிபாடுகள், நித்ய நிதரனம், மாஸ விசேஷம், அட்ட விசேஷம், உத்ஸவம் முதலிய சாமான்ய விசேஷ காரியங்களும், கிரியைகளும் முன்போலவே நடைபெற்று வரவேண்டியது. ஸ்ரீமுகத்தை யநுசரித்து ஜனங்கள் வழிபாட்டிற்கு வருங்காலம், இடவசையறை, வருபவர்கள் தொகை முதலியவற்றை, தேவஸ்தம் பிரதம உத்தியோகஸ்தர் நிர்ணபிக்க அதிகாரமுண்டு.

 

2. ஆலயப் பிரவேசம் அநுமதிக்கப் பட்டதைக் கொண்டே கோவில் மடப்பள்ளி முதலிய தற்கால நிபந்தனைகளுக் குட்ட்பட்ட இடங்களுக்குள் எல்லோருஞ் செல்வதற்கில்லை.

 

3. இந்துக்க ளல்லாதவர்கள், ஜனன மரணங் காரணமாக, தீட்டுள்ளவர்கள், வழக்கத்தினாலும் ஆசாரத்தினாலும் குறிப்பிட்ட காலத்தில் போகக்கூடா தென்றுள்ள பெண்கள், குடித்தவர்கள் அல்லது ஒழுங்கீனமாக நடப்பவர்கள், தொத்து வியாதிக் குட்பட்டவர்கள், தகுந்த கட்டுப்பாடுட னில்லாமல் பிரதம உத்தியோகஸ்தர் முன் அநுமதி பெறாமல் வரும் சித்த சுவாதீன மற்றவர்கள் கோவில் மதிலுக்குள்ளோ, மதிலில்லாவிடில் கோவிலுக்குள்ளோ செல்லக்கூடாது.

 

4. சுத்தமான துணிகளை ஆசாரத்கை யநுசரித்த முறையில் அணியாமலும், செருப்பு முதலியன போட்டுக் கொண்டும் உள்ளே வரக்கூடாது.

 

5. கோவிலுக்குள் துப்புவதோ, வெற்றிலை, புகைபிலை போட்டுக் கொள்வதோ, சுருட்டு முதலியன குடிப்பதோ கூடாது. சரமான்களையும், மீன், முட்டை, மாமிசம், மதுலாகிரி வஸ்துகள் முதலியவைகளையும் எடுத்துப் போகக்கூடாது.

 

6. பலி கல்பூசம், வலியம்பலம், மளாம்பலம், இளமதிள் முதலிய வற்றிற்குள் யாரும் சட்டை முதலியன தரித்து செல்லக்கூடாது. பெண்கள் மட்டும் வழக்கமான ஆடையணியலாம்.


7. கோவில் குளத்தில் ஹிந்துக்கள் தவிர மற்றவர்கள் ஸ்கானஞ் செய்வக்கூடாது.

 

8. கோயிலில் உரக்கப் பேசியும், வேறுவித ஆர்ப்பாட்டம் செய்தும் வழிபாட்டு முறைக்கு இடையூறு உண்டு பண்ணக்கூடாது.

 

9. பூஜை அல்லது பூஜை சம்பந்தமான அலுவல்கள் தவிர, மற்றக் காரியங்களுக்குக் கோயிலை யுபயோகிப்பது சட்டவிரோதமாகும்.

 

10. கோயில் புனிதத்தன்மையைக் கெடுக்கக்கூடியதாக யாரும் எக்காரியமும் செய்யக்கூடாது.

 

இவ்விதிக ளெல்லாம் தமிழ் நாட்டிலுள்ள மற்ற கோயில்களில் அநேகமாக அமுலில் இருந்து வருவதேயாகும். ஆகையால் விதிகளைப்பற்றிக் குற்றமோ, குறையோ கூறுவதற்கில்லை. கோயில் நிர்வாகிகளுக்கு விசேஷ அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பழைய சம்பிரதாயத்தையும், சாதி வேற்றுமையையும் மனத் வட்கொண்டு, தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகஞ் செய்யா கவசை யாதொரு சங்கடமுமில்லை. அவர்கள் நடுநிலைமையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்வார்களென்றே நம்புவோமாக. மற்றபடி, இவ்விதிகள் ஆண்டவன் சந்நிதானமாகிய ஆலயத்தின் பரிசுத்தத்தைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானவைகளே யாகும்.

 

சென்ற இருபதாண்டுகளாகத் திருவிதாங்கூரில் தீண்டாமையை எதிர்த்துப் பிரசாரம் நடைபெற்று வந்தது. 1919-வது ஆண்டில் ஸ்ரீமூலம் சட்டசபையில் ஸ்ரீமான் டி. கே. மாதவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆலயப்பிரவேச உரிமை யளிக்க வேண்டுமென விண்ணப்பமொன்று சமர்ப்பித்தார். 1923-ம் வருஷம் இவ்வியக்கம் பலமடைந்   1924-ம் ஆண்டில் பாதைகளில் நடமாட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கும் தடையை எதிர்க்க சத்தியாக்கிரகம் நடைபெற்றது பின்னர் 1932-ம் ஆண்டில் குருவாயூரிலும் சத்தியாக்கிரக இயக்கம் நடந்தது. அவ்வருஷம் நவம்பர் 8-ந்தேதி யன்று ஆலயப் பிரவேச விசாரணைக்கமிட்டி யொன்றைச் சர்க்கார் நியமித்தனர். தீண்டாமையைச் ஈட்டமூலம் ஒழித்து ஆலயப் பிரவேச உரிமையளிக்க வேண்டுமென்று கமிட்டியார் சிபார்சு செய்தனர். ஜாதி ஹிந்தக்களில் பெரும்பாலோரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேச உரிமையளிப்பதை ஆதரித்தனர்.

இவ்வளவு காலமாக, மகாத்மாகாந்தி போன்ற தலைவர்களாலும், சீர்திருத்த நோக்குடைய பெரியோர்களாலும் விடாமுயற்சியோடு செய்து வந்த தொண்டு இன்று வெற்றி பெற்றுவிட்டது. அசோக அரசர் காலத்திற்குப் பிறகும், ஸ்ரீமத் ராமாநுஜர் காலத்திற்குப் பிறகும் திருவிதாங்கூர் மஹாராஜா அளித்திருக்கும் ஆலயப் பிரவேச உரிமையே நம் நாட்டில் பெரிய சீர்திருக்காகும். இந்தியாவின் சரித்திரத்திலும், இந்துமதத்தின் சரித்திரத்திலும் இது பொன்னெழுத்தான் பொறிக்கத் தக்கதாகும். இவ்விதம், ஆலயப் பிரவேச உரிமையளித்த மஹாராஜுவையும், இது விஷயமாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட திருவிதாங்கூர் ஹரிஜன சேவா சங்கத்தலைவர் ஸ்ரீமான் பரமேஸ்வரம் பிள்ளையையும் நாம் வாழ்த்துகிறோம். திருவிதாங்கூரில் ஏற்பட்டிருக்கும் இம் மகத்தான சீர்திருத்தம் இந்து மதத்துக்கு ஒரு வகையில் - விமோசனத்தை யளித்திருக்கிறது - உயர்வைக் கொடுத்திருக்கிறது - எனக் கூறின் மிகையாகாது. திருவிதாங்கூர் மகாராஜா மனமுவந்து தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமையளித்தது போலவே, இந்தியாவிலுள்ள மற்ற சுதேச மன்னர்களும் மேற்படி உரிமையை அளித்து, அகன் வாயிலாக இந்து மதத்துக்குச் சிறப்பையும் தங்களுக்குப் பெருமையையும் உண்டு பண்ணுவார்க ளென நம்புகிறோம். அவர்கள் அவ்விதஞ் செய்வார்களானால், பிரிட்டிஷ்- இந்திய சர்க்காரும் கட்டாயம் அவ் வுரிமையை வழங்கத் தயங்க மாட்டார்களென்பது திண்ணம் இந்தியாவுக்கும், இந்து மதத்துக்கும் இலைத்த புகழைத் தரும் இப்பெரிய சீர்திருத்தம் நம் நாட்டில் விரைவில் ஏற்படுவதற்கு இறைவன் கருணை பாலிப்பாராக.


ஓம்: தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - டிசம்பர் ௴

 


  

 



 

No comments:

Post a Comment