Thursday, August 27, 2020

 

இளமை நிலையல்ல

(க. சிதம்பரம் பிள்ளை.)

மனிதன் இவ்வுலகத்தில் இன்பமாய் வாழ்ந்து வருவதற்காக கடவுளால் சிருட்டிக்கப்பட் டிருக்கும் பொருள்கள் அனேகம். ஆனால், அவைகளை மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையில் இன்பமாகவே அனுபவித்து வர முடியுமா?

உலகப் பொருள்களில் கிடைக்கும் இன்பத்தை மனிதன் இறக்கும் வரையில் ஒன்றுபோல் அனுபவித்து விடலாம் என்றாலோ, அதற்கு அவடைய வயது வேறு குறுக்கே நிற்கிறது.

பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்குங் வயது நூறுஙானால், இந்த நூறு வயதும் ஒன்று போல் இருக்கிறதா? ஒவ்வொரு வயதிலும் - ஏன்? ஒவ்வொரு நிமிடத்திலும் மனிதனுடைய உடல் நிலை மாறுபட்டுக் கொண்டே வருகிறது.

இருந்தாலும், மனிதனுடைய பருவ அமைப்பைக் கீழ்வருமாறு ஆன்றோர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.

ஆண்

வயது

பெண்

வயது

பாலன்

5

பேதை

7

மீளி

10

பெதும்பை

11

மறவோன்

14

மங்கை

13

திறலோன்

15

மடந்தை

16

காளை

16

அரிவை

25

விடலை

30

தெரிவை

31

முதியன்

48

பேரிளம்பெண்

40

இனி வேறொரு வகையிலும் கூறுவர்.

பாலன்

5

வாலை

12

யெளவனம்

16

தருணி

16

குமரன்

32

பிரவிடை

30

வார்த்திகம்

42

விருத்தை

40

இதன் மேல் நூறு வயது வரையும் கடைசியாகச் சொல்லம்பட்ட பருவமே.

மளிதனின் பருவங்கள் இத்தனை வகைகளில் நடை பெற்றுக் கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு பருவத்திலும் அவனுடைய உடல் நிலையும் மனோ நிலையும் வெவ்வேறு விதங்களில் மாறுபட்டுக் கொண்டிருப்பதாலும், மனிதன் இவ்வுலக இன்பத்தை இறக்கும் வரையில் எப்படி ஒன்று போல் அனுபவித்து வர முடியும்?

பொதிவாக்க கவனிக்கு மிடத்து ஆண்கள் 48-ம், பெண்கள் 40-ம் வயதுகள் வரையில் தான் ஒருவாறு உலக இன்பத்தை அனுபவித்து வரத்தக் காலம் என்ற சொல்லாம். ஆனால், அதற்கிடையிலும் வியாதிகள் வேறு காத்துக் கொண்டிருக்கின்றன!

ஒருவனுக்கு 35 வயது சென்று விட்டாலே அவன் இவ்வுலக சுகத்தை வெறுத்து விட்டு, மறு உலகச் செல்வமாகிய பேரின்பத்துக்கு வேண்டிய காரியாதிகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று ஆன்றோர் கூறுகின்றனர். அப்படிச் செய்பவன் தான் அறிவாளனாம்.

அதிலும் முதுமைப் பருவத்தில் உடலில் போதுமான பலம் இல்லாமல் போவதால் எழுந்து நடக்கவும் தடியை ஆதரவாகக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்று, அதனால் உடல் நிலை சரியாக இருக்கும் இளமைப் பருவத்திலேயே அவ்வுலகச் செல்வத்தை அனுபவிப்பசற்கு வேண்டிய செயல்களில் மனதை ஈடுபடுத்த வேண்டு மென்றும் எண்ணி ஒருவன் அவ் வழியில் செல்வானேயானால் அவனை 'நல்லறிவாளன்' என்று கூறல் வேண்டும்.

“நரைவரும் என்றெண்ணி நல்அறி வாளர்

குழலி யிடத்தே துறந்தார்; - புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்.''

 

[குழவியிடத்தே = இளமைக் காலத்திலேயே, துறந்தார் = இவ்வுலக ஆசையை வெறுத்து விலக்கினவர், புரை = காமம் வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்கள், மன்னா = நிலையில்லாத, இன்னாங்கு = துன்பத்தோடு)

இனி, உலக இன்பத்தை வாலிபப் பருவத்தில் மிகுதியாக அனுபவித்து வரலாம் என்றாலும் அவ் வின்பத்தின் தன்மை தான் என்ன?

தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் முறையில் ஒரு சிலர் ஆடுகளைப் பலியிடுவது வழக்கம். அப்போது கோயில் பூசாரியானவன் பத்திரங்களையும் பூக்களையும் கொண்டு கட்டப்பட்ட மாலையை ஒரு கையிலும், மற்றொரு கையில் வேலையும் பிடித்துக்கொண்டு ஆவேசத்துடன் வந்து பலிக்களத்தில் நிற்பான். உடனே தன்னை வெட்டப்படும் என்பதை அவ்வாடு அறியாது. தனக்கு ஆகாரங் கொடுக்கத்தான் வந்து நிற்கிறான் என்று எண்ணி, அது அம்மாலையிலுள் பத்திரங்களைக் கடித்துத் தின்று மகிழ்ச்சி அடைகிறதாம்.
அப்படி அது அடைந்த இன்பம் எவ்வளவு நேரம்? அடுத்தபடி அவ் வாட்டுக்கு நேரும் கதி என்ன!

இளமைப் பருவத்தில் அனுபவிக்கும் மனித சுகத்தின் தன்மையும் அவ்வளவினதே.

“வெறிஅயர் வெம்களத்து வேல்மகன் பாணி

முறுஆர் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க,

மறிகுள(கு) உண்டன்ன மன்னா மகிழ்ச்சி

அறிவுடை யாளர்கண் இல்'

 

[வெறி அயர் = ஆவேசம் ஆடுகின்ற, வேல்மான் = பூசாரி, பாணி = கை, முறி = பத்திரம், மறி = ஆடு, குளகு = இரை.]

இதனால் இளமைப் பருவத்தை நம்பி இருப்பதில் பயனில்லை என்பது தெரிந்து விட்டது. நாம் தற்போது இல்லற நிலையில் இருக்கிறோம். அத்தகைய நாம் அந் நிலையில் செய்ய வேண்டிய தென்ன?

இல்லறத்தில் இருக்கக் கூடியவர்களாகிய ஒவ்வொருவரும் சற்பாத்திரங்களா யுள்ளவர்களுக்கு தன்னால் இயன்ற தருமங்களைச் செய்துவரக் கடமைப்பட் டிருக்கிறார்கள் என்பதாச தரும சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவும் கையில் எப்பொழுது
பொருள் இருக்கிறதோ, அப்பொழுதே அதைத் தவணை வைக்காமல் செய்யவேண்டுமாம். ஏன்? செல்வமும் நிலையாய் நிற்கக் கூடியதல்ல, அதனால். *

* சற்பாத்திரங்கள் யார்? நாம் பாடுபட்டுத் தேடிய திரவியத்தை தருமத்தில் ஏன் செலவிட வேண்டும்? தருமம் செய்வதற்கும் பேரின்பத்துக்கும் சம்பந்தமென்ன! என்பன போன்றவைகளை “மனிதனும் கடமைகளும்” என்னும் நூலில் பரக்கக் காணலாம். கிடைக்குமிடம்; ஆனந்த போதினி” ஆபீஸ்.

சரி; தருமம் செய்ய வேண்டியது தான். ஆனால் அதற்கு இப்பொழுது அவசரமென்ன? நாம் இப்போது இளம்பிராயமுள்ளவர்களாகத் தானே இகுக்கிறோம். வயது முதிர்ந்த பிற்காலத்தில் அதைச் செய்வோமே.

அப்படியல்ல. நாம் வயது முதிர்ந்து தான் இறப்போம் என்பது நமக்கு எப்படித் தெரியும்? கொடுங்காற்று அடிக்கும்போது மரத்திலுள்ள பழங்கள் மட்டுமல்லாமல், உதிரும்பக்குவ மில்லாத காய்களுங் கூட விழுந்து விடுவதில்லையா? ஆதலால், சமயம் வாய்க்கும்போ தெல்லாம் நல்லறத்தை செய்து வருவதே சாலச் சிறந்ததாகும்.

“மற்றறிவாம் நல்வினை, யாம் இளையம், என்னாது

கைத்(து)உண்டாம் போழ்தே கரவாது அறம்செய்மின்;

முற்றி இருந்த கனிபொழிய, தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு"

 

[சைத்து = கையில், சாவாது = ஒளிக்காமல, தீவளி = கொடுங்காற்று]

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜனவரி ௴

          

No comments:

Post a Comment