Thursday, August 27, 2020

 இல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது

 

இல்லுடைத் தலைவன் தலைவியால் இயற்றப்படும் இல்வாழ்க்கைக்கு, இன்பமும், மகிழ்ச்சியும், நலனும், பலனும் அளிக்கக்கூடிய பல பொருள்களில் தலை சிறந்தது ஒத்த உடல்நலம் அல்லது பிணியின்மையேயாகும் என்பதை யாவரும் நன்கறிவார்கள். நோயற்ற வாழ்வே இனிய குடிவாழ்க்கைக்குப் பெருந்துணையும் பெறுதற்கரிய பெரும் பேறுமாகும். கணவனாவது மனைவியாவது பிணிவாய்ப்பட நேரின் அவ் வில்வாழ்ச்கையின் இன்பம் பல வசதிகள் இருந்த போதிலும், பெரிதும் பாழ்பட்டுப் போகும் என்பது அனுபவ உணர்ச்சியாகும், தன் கணவனை உலகத்தில் தனக்கு எல்லாமாய்ப் பாவித்து ஒழுகும் மனையாளும், தன் மனைவியை குடிவாழ்க்கை இன்பநலத்துக்கு ஓர் பெருந்துணையாகக் கொண்ட கணவனும், நோயால் அற்பகாலம் வருந்த நேரிடின், ஒருவர்க்கொருவர் எய்தும் துன்பமும் மனக் கவலையும் எளிதல்ல.

 

உடலை நலியச் செய்யும் கொடிய பிணிகளால், மனைவி கணவன், இருவர்களில் ஒருவர் பல நாள் வருந்த நேரிட்டுவிடின் மற்றவர் படுந்துயரமும் கவலையும் ஒன்றல்ல பல. கணவன் பிணியுறும்பொழுது அவனுக்கு வைத்தியர் சொற்படி உரிய காலத்தே மருந்து, உணவு முதலியவைகளைத் தயார் செய்து கொடுத்தலும், இன்மென் மொழியால் அவனுக்குத் தேறுதல் ஆறுதல் சொல்லுதலும், படுக்கை உடை முதலியவைகள் வேண்டுவன நக்கலும், மலநீர் உபாதிகளுக்கு உற்ற துணைபுரியலும், பிணியாளனின் உடம்பு நலம் விசாரிக்க வரும் உறவினர் நண்பர்களுக் கேற்ப உபசாரம் மறுமொழி ஈதலும், தனக்கு ஊண் உறக்கமின்றி மற்றும் வீட்டுக் காரியங்களையும் சரிவர நடத்தி இன்னவையன்ன பிறவும் உடல் நலிய வருந்தியாற்றலும் ஆகிய கடமை உயர் குடிப் பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. மனையாள் பாயும் படுக்சையுமாயிருக்க நேரிடின் கணவனது தொழிலும், வரும்படியும் கெட்டு இல்லற இன்பமும் மன மகிழ்ச்சியும் பாழ்படுகின்றன. காலாகாலத்தில் உணவு கிடைக்கிறதில்லை. வீட்டு வேலைகளெல்லாம் பாழ்பட்டுப்போகின்றது. எட்டிப் பார்த்து இரக்கச் சொல் பேசுவாரேயன்றி கிட்டிவந்து உதவி செய்யும் உற்றதுணையும் உறவினருமின்றி உளம் வருந்துவர். அதிலும் பிணி வெகுகாலம் நீடித்திருக்க நேரிட்டால், பெற்ற தாயும், பிள்ளையும்கூட, மலம், மூத்திரம் எடுத்துச் சலித்துவிடுவார்கள். தன்னுடன் இன்ப சுகத்தை அனுபவித்த கணவனும்கூட சலித்து வெறுப்புறுவன். சுருங்கச் சொல்லின் இவ்வாழ்க்கை கடத்தும் கணவன் மனைவி இவர்களுக்குள் எவருக்கேனும் பிணி ஏற்படின் குடிவாழ்க்கையின் நானும் பலனும் இன்பமும் மகிழ்ச்சியும் பாழடையுமென்பது வெள்ளிடைமலைபோல் விளங்கும்.

பிணி மூப்புச் சாக்காடு மக்கட்கு இயற்கையாயிருக்கவும் ஒருவர்க்கொருவர் பிணிவாய்ப்பட்டாலாவது மரித்து விட்டாலாவது அவ்வளவு துன்பமும் மனக்கவலையும் வருத்தமும் அடைவது ஏன்? என்று விசாரித்தால் இந்து சமூகத்தினிடையே காணப்படும் சில கட்டுப்பாடுகளேயாகும். அவைகளில் முக்கியமானவை கணவனை இழந்தவன் மறுமணத் தடையும், விதவைகளுக்குக் கொடுக்கப்படும் பல அலங்கோலங்களும் கட்டுப்பாடுகளும், சொத்துரிமையின்மையும் தம்மினத்துக்குள்ளே மணஞ் செய்துகொள்ள வேண்டுமென்றவைகளுமே யாகும். இக்கட்டுப்பாடுகள் ஆதியில் ஏற்படுத்தப்பட்டதற்கு நோக்கங்களையும், அவைகளின் நன்மை தீமைகளையும், தற்காலங்களில் அவைகளின் அவசியத்தையும் ஆராய்வது நமது கருத்தன்று. உலகத்தில் தனக்கு எல்லாமாயுள்ள தனது கணவனை இழந்தவளின் கதியும், 35-வது அல்லது 40-வது ஆண்டில், மனைவியை யிழந்து 8 அல்லது 9 வயது 9 வயது விளையாட்டு மணமாறாத சிறு பெண்ணை மணஞ் செய்து கொள்ளும் கணவனின் இல்வாழ்க்கை இன்பத்தையும் எடுத்துரைப்பது அவசியமன்று.

 

இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள்ளும், இக்கட்டுகளுக்குள்ளும் வைத்திருக்கப்படுகிற பெண்களுக்குக் கணவனைத் தேடி மணமுடிக்க விரும்பும் பெற்றோர்களுக்கும், கணவனுக்குப் பெண்ணைத் தேடும் பெற்றோர்களுக்கும், அல்லது தாமாகவே கேரில், மாப்பிள்ளை, பெண்ணையும், பெண் மாப்பிள்ளையையும் தெரிந்தெடுத்துக் கொள்ள முயற்சிக்கும் காலத்தில், அவர்களுக்கு முக்கியமான ஒரு பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கணவனும் மனைவியும் மணஞ் செய்து புதிதாக நடத்தப்படும் இல்வாழ்சகையின் இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பெரும்பாலும் பெற்றோர்களும், ஒரு சிறிது கணவனும் மனைவியுமே பொறுப்பாளிகளாவார்கள். ஆகையால் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களும், கணவனும், மனைவியும் அப்பொறுப்பை நன்குணர்ந்து மணவினைக்கு முற்படவேண்டும்.

 

அப்பொறுப்புகளில் முக்கியமானவை ஒத்த உடல் நலம் உள்ள வரனையும் மனைவியையும் தெரிந்தெடுத்து மணமுடித்து வைத்தலேயாகும். ஒத்த உடல் நலம் என்றால் உருவத்கில் சிறிது ஏறக்குறைய யிருப்பினும் பெரிதன்று. முக்கியமாக அடியில் குறிக்கப்படும் கொடுமையான வியாதிகளும், பிள்ளைப் பேற்றுக்குத் தடை, அகாலமரணம் முதலியவைகளை விளை விககககூடிய சில வியாதிகளும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இல்லையென்று உறுதியாய்த் தெரிந்த பின்னரே அவ்விருவர்களுடைய மணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால் அவ் வியாதிகள் உறுதியாய்க் கொல்லுந் தன்மையுடையன. ஆபத்துக் கொஞ்ச காலத்திற்குள்ளிருப்பதைக்
குறிக்கக்கூடிய வியாதியின் தன்மை தெரிந்திருந்தும் மணமுடிக்க முற்படுது, ஆழமான கிணற்றின் விளும்பில் படுத்துக்கொண்டு பயமில்லை என்று பிதற்றிககொள்வதை ஒக்கும். கடவுள் மனிதருக்குப் பகுத்தறிவையும், புத்தியையும் கொடுத்திருக்கிறார். அவைகளை நல்வழியிற் செலுத்தி ஆராய்ந்து கூடிய அளவு நாம் நடந்து கொள்வது நமது அறிவுடையாகுமன்றோ. வராமற் நடுத்துக்கொள்ளக்கூடிய சில பிணிகளையும், காரியங்களையும், நமது பகுத்தறிவினாலும், அனுபவத்தினாலும் நாம் தடுத்துக்கொள்ள முடியுமன்றோ. ஆசையினால் ஒவ்வொருவரும் தமது பொறுப்பை யுணர்ந்து முற்படவேண்டும்.

 

எனது சொற்பமான அனுபவத்திற்குள் சிறு வயதில் கணவனை யிழந்து பரதவிக்கிற ஏழை இளம் பெண்கள் அநேகர்களை நான் பார்க்க நேரிட்டதுண்டு. அவர்களுடைய துக்கமான நிலைமையை அவர்களே யன்றி பெற்ற தாயும் தந்தையும் அறிவார்களோ. 40, அல்லது 45-வது வயதில் மணங்கோரி, 8, அல்லது 9 வயதுடைய ஏழைச் சிறுமிகளை மண முடித்துக்கொள்ளும் மனிதர்களுடைய குடி வாழ்ககையை நாம் எவ்வாறு நினைத்துக்கொள்வது.

 

பெண்ணுக்கு அணிகலமாயுள்ள மானத்தையும், உடலையும், பொருள் கொடுட் போர்களெல்லாம் அவ்வப்போது விற்று உயிர்வாழும் பரத்தையர் வயத்தனாய், பிணியுண்டு, உயிர்க்கருவிகள் பெட்டிருப்பவும அதை பிறரறியாது மறைத்துவைத்து, ஏழைச் சிறு பெண்களை மணஞ்செய்து, குற்றமற்ற அப்பெண்களுக்கும் அவன் வியாதியைக் கொடுத்து இருவரும் பூவுலகில் கண்ட கரகமென்ன இருவரும் வருந்துவதைக் கண்ட எவர்தான் அவர்கள் மடமையை நோக்கி வருந்தார்கள். க்ஷயரோக மென்னும் காச வியாதி (Tuber-culosis of the lungs) யை மறைத்துப் பொய்கூறி, ஏழைப் பெற்றோர்களையும், பெண்ணையும், ஏமாற்றித் திருமணஞ் செய்து, இரண்டு மூன்று வருடங்களுக்குள் உயிர் துறந்த பொறுப்பற்ற வாலிபர்கள் எத்தனை? பத்துப்போல் உடல் எங்கும் பரவும் குஷ்ட வியாதியை மறியாது மறைத்து வைத்து எழைப் பெண்களை மணஞ்செய்து, அவர்களைப் பரதவிக்கவிட்டு கொஞ்ச காலத்திற்குள் உயிர் துறககும் சிறு வயதுடைய மக்கள் எத்தனை? இவைகள் ஒவ்வொன்றையும் நான் நேரில் கண்டதையும் எழுதுவதென்றால் அது ஒரு பெருங் கட்டுரையாக முடியும். நான் மிகைப்படுத்திக் கூறுவதாகச் சிலர் கருதவும் கூடும். நான் அடையும் பலன் யாதொன்று மிலதால், மிகைப்படுத்திக் கூற அவசியமுமன்று.

 

ஆனால் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒத்த உடல் நலம் உள்ளவர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது யார். அப்படித் தீர்மானித்து மணமுடிந்த பின்னர் ஏற்படும் வியாதிகளுக்கென் சொல்வது. இது அனுபவத்திற்குச் சாத்தியமானதா என்ற கேள்விகள் பிறக்கும். ஒத்த உடல் நலம் உள்ளவர்கள் என்று தீர்மானித்து யோக்கியதாபத்திரம் ஈயத் தகுந்தவர்கள் ஆங்கிலேய வைத்தியத்தைக் கற்றுத் தேறியவர்களுக் கன்றி, நாடியைமட்டும் பார்த்துக் குறி சொல்லுவதைப்போல் காசுக்கும், இடத்துக்கும், ஆள் தன்மைக்கும் தக்கவாறு சொல்லும் ஏனைய ஒரு சில வைத்தியர்கள் தக்கவர்கலாசார்கள். இது ஓரங்கொண்டு சொல்லுவதன்று. க்ஷயம், இருதய வியாதி, குஷ்டம் ஆகிய இன்னும் பல வியாதிகளைப் பல கருவிகளாலும், பூதக் கண்ணாடியின் உதவியாலும் கண்டறிந்து உறுதியாய்க் கூறத்தக்கவர்கள் அவர்களேயன்றி ஏனையோர்களாகார்கள். எப்படி, லைப் இன்ஷியூரன்ஸுக்குப் பிணியுடைய ஒருவனை பிணி யாதொன்றுமில்லை யென்றும் வெகுகாலம் உயிர்வாழத் தகுந்தவனென்றும் பொய்யான யோக்கியதாபத்திரம் கொடுத்தால், எவ்வாறு அக் கம்பெனியானது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகுமோ, அதேபோல, ஆளைப்பேணியும் அறிமுகத்துக்காகவும், சொற்ப காசுக்காகவும் கொடுக்கப்படும் பொய்யான யோக்கியதாபத்திரம் கணவன் மனைவி இவர்களுடைய இன்பவாழ்க்கை இன்பத்தைப் பாதிக்கத்தக்கதா யிருக்கின்றது. ஆகையால் ஆண்களுக்கு ஆடவ ஆங்கில வைத்திய டாக்டரும், பெண்களுக்கு லேடி ஆங்கில வைத்திய ாக்டர்களும் யோக்கியதாபத்திரம் கொடுக்கவேண்டும்.

மணமுடித்துக்கொண்ட பிறகு புத்தி கூர்மை, கல்வியறிவு, உடல் நல்வழி உணர்ச்சி முதலிய குணங்களை உடையவர்கள் அநேகமான வியாதிகளைத் தடுத்துக்கொள்ளலாம். அப்படித் தடுகமுடியாத சில பிணிகளுக்கு தான் காரணமல்லவென்றும் நினைத்து அப்பிணகள் ஏற்பட்டவுழி தகுந்த பரிகாரங்களால் குணப்படுத்திக்கொள்வது மனிதர்கள் கடமை.

 

மணவினை விரும்பும் மாப்பிள்ளை பெண்ணிடத்தில் பிணியில்லையென்ற யோக்கியதா பத்திரம் வற்புறுத்திக் கேட்பது அவகம்பிக்கைக்கு இடமன்றோ. இது அனுபவ சாத்தியமா என்றால் மணமகனும் மணமகளும் வற்புறுத்த விரும்பினால் எளிதில் நடக்கக்கூடியது. அவரவர்களே அவரவர்கள் பொறுப்பை நன்குணர்ந்தால் எளிதில் நடைபெறக் கூடியது.

 

ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராம அதிகாரி (Village Magistrate) முன்னிலையில் ஒவ்வொரு திருமணமும் நிஜிஸ்டர் செய்யப்படவேண்டும்; அப்படிச் செய்யப்படுமுன், மாப்பிள்ளையும் பெண்ணும் கீழ்க் குறிக்கப்பட்டிருக்கிற பிணிகள் யாதொன்றுமில்லாதவர்கள் என்ற யோக்கியதா பத்திரமும் ரிஜிஸ்டர் காலத்தில் கிராமா திகாரிக்குக் கொடுக்கப்படவேண்டுமென்றும், பேதகமான யோக்கியதா பத்திரம் உடைய திருமணம் தடுக்கப்படவேண்டுமென்று, நமது சட்டசபை மூலமாக சட்டங்கள் பிறப்பதற்கு முன்னும், அதற்காகச் சில தலைவர்கள் அடிகோலுவதற்கு முன்பும், அன்பரிய அரசாங்கத்தாராலும், மதம் மதம் என்று நனவிலுங் கனவிலும் மாரடிக்கும் பக்தர்கள் முன்பும் இத்தகைய யோக்கியதா பத்திரமுடைத் திருமணம் ஆகரிக்கப் பெறாமல் போகக்கூடும். ஆனால் தங்களது பொறுப்பையும், இளங் கைம்பெண்களின் நிலைமையும் நண் குணர்ந்த பெற்றோர்களும் வாலிபச் சகோதர சகோதரிகளும் அவரவர்களே மனம் வைத்து ஆதரிக்க நினைத்தால் எவருடைய உதவியுமின்றி எளிதில் நடைபெறுமென்பதற்கு சிறிதும் ஐயமில்லை. நீதியை நினைத்து நடக்க விரும்பும் உத்தமர்களுக்கு வேதவாக்கும் சர்க்கார் சட்டமும் அவசியமன்று.

 

கணவனை அல்லது மனைவியை நேரில் கண்டு பேசித் தெரிந்தெடுத்துக் கொள்ளும் வழக்கமுடைய சகோதர சகோதரிகளே! நீங்கள் எளிதில் அன்பின் மூலமாய் மேற்படி யோக்கியதா பத்திரத்தை வற்புறுத்திப் பெற்ற பின்னரே மணவினைக்கு ஒத்துக்கொள்ளவேணாம். ஏனைய சகோதர சகோதரிகளே கூடிய அளவு பல வழிகளிலும் மணமகன், மணமகள் பிணியற்றவர்களென்று உறுதியாய்த் தெரிந்த பின்னர் திருமணத்துக்கிசைவது அறிவும் கடமையுமாகும். இதை ஆதியில் அனுசரித்து வந்தார்களென்று தெரிகிறது. அந்த மணமகனுக்கு வழக்கமாய் சௌரஞ் செய்யும் சௌரகன் மூலமாய் தெரிந்து கொள்வது உண்டென்ற தெரிகிறது. ஆகையால் நமது சகோதர சகோதரிகளினுடைய இல்வாழ்க்கை நலத்தைக் போகும் ஒவ்வொருவரும் தெரிந்தியற்றுவது கடமையாகும்.

 

மறுக்கத்தக்க பிணிகள் :-(1) இருதய வியாதி (Valvular disease of the heart) (2) க்ஷய வியாதி (Tuberculosis of the lung) (3) இதர காசவியாதிகள் (Tubercular diarrhoea bone disease etc.) (4) குஷ்டரோகம் (Leprosy in its early stage) (5) காக்கைவலி (Epilepsy)

 

பரிகாரம் தேடி குணமான பின் மணத்துக்கு ஒப்புக்கொள்ளத்தக்க முக்கியமான வியாதிகள் :- (1) க்ரீச்சின வாய்வெனும் குடல் வாய்வு (Hernia) (2) விரை வீக்கங்கள் (Elephantiasis of the scrotum, Hydrocile,other tumours of scrotum) (3) கிரந்தி (Syphilis in all its stages) (4) சீழ் மேகமும் அதைப் பின்பற்றும் பிணிகளும் (Gonorrhoea & its complications) (5) சோகை என்னும் கொக்கிப்புழு வியாதி (Ankylostomiasis)

 

சாத்தியம் அசாத்தியமான பிணிகளை வைத்தியர்கள் மூலமாயறிந்து, அப்பிணி, வான் மனைவி, இவர்களில் எவரிடத்தும் கண்டவுழி மணத்துக்கு ஒப்புக்கொள்ளாதிருத்தலே நலம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment