Thursday, August 27, 2020

 

உலகம் என் உருவமே!

(அல்மைட்டி)

 

உண்மையாகவே இக் கட்டுரை ஒவ்வொருவரின் மூளையை யும் கலக்கத்தான் செய்யும். கூசாமல் இக் கட்டுரையை பொய் என்று மெய்போல் பொய் பேசலாம்! ஆனால், ஒன்று. இவைகள் அனைத்தும் அனுபவத்தில் பல அறிஞர்கள் கண்ட அழியா உண்மை. இவ்வுண்மையை மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் முறை தவறாமல் இருப்பவர்கள் எளிதில் உணரலாம்.

 

"நான்; நான்” என்பது உலகத்தில் பொதுவாக வழங்கிவரும் ஒரு அர்த்தமற்ற வார்த்தை! "நானே தான்'' என்று பொய்யை அறியாமையால் மெய் போல் கூறுகின்றனர் மக்கள். மனிதனின் ஒவ்வொரு அவயவத்திற்கும் தனித் தனியாகப் பெயர்கள் இருக்கும்போது "நான்" என்ற வார்த்தைக்கு அர்த்த மென்ன? “நான்'' என்ற வார்த்தை இருக்க முடியுமா? எல்லா அவயவங்களும் சேர்ந்து “நான் "மனிதன்" என்ற வார்த்தைக்கு அர்த்த மென்ன? "மனிதன்" என்ற வார்த்தை பொருந்துமா? ஆதலின், “நான்" என்பது அர்த்தமற்ற தல்லவா? இல்லாத இந்த "நான் என்னமோ என்று எண்ணிய வண்ணம் வாழும் அறியாமைதான் என்னே!

 

பொதுவாக “நான் ஆகக் கருதப்படுகிற நான், இந்த உலகத்திற்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை; அதன் பின்பும் எதையும் உண்டாக்கியது மில்லை.
பிறக்கும் பொழுது கொண்டு வந்ததாகவோ, அல்லது அதன் பின் உண்டாக்கியதாகவோ, யாரேனும் மெய்போல் பேசிடினும் அஃது ஆபத்துக் காவங்களில் தீக்கோழி எண்ணும் நினைவையும், ஜாலம், கனவு, கானல் நீர் முதலியவைகளையும் ஒக்கும்.

 

இயற்கையாக இருக்கின்றதும், எவருக்கும் பொருள்களாகவும் இருக்கின்ற இவ்வுலகப் பஞ்சபூதப் பொருள்களை அளவுக்கு மீறி அனுபவிக்கக் கருதும் அந்தமில்லா ஆசையின் மதியீனத்தைக் கண்டு வருந்தாமல் யார் தான் இருக்க இயலும்?

 

நல்ல வெயில். கொஞ்ச தூரத்தில் நீரோடை போன்ற தோற்றம்; ஆனால், பக்கத்தில் சென்றால் ஏமாற்றம். மண்ணாங் கட்டி மாம்பழமாகும் கோலமோ ஒரு பெரிய ஜாலம். என்னை வெறுக்கும் காதலியை தூக்கமென்ற விழிப்பில் கண்டு இன்பமடைகிறேன். உண்மையில் அஃது உண்மையில் அஃது சூன்யம். நல்ல உறக்கத்தில் ஒன்றுமே தோன்றவில்லை. உறக்கம் என்றால் எதின் உறக்கம்? மனதின் உறக்கம் -நினைப்பின் உறக்கம்! அப்போது தான் உலகம் சூன்யம். மனம் - நினைப்பு -அதாவது "நாம்" விழித்தால், மாடமாளிகை யென்ன, குட்டிச்சுவரென்ன எல்லாம் தெரியும். ஆனால், இதன் உண்மை காணப்படுவது போல் பொய்யாய் காணப்படுகிற இவ்வுலகையும், அதன் (பொய்) பொருள்களையும் மெய் போல் நம் நினைப்பினால் உருவப்படுத்துகிறோம். ஆனால் இவ்வுலகம் பெருஞ்சாலம், கனவு, கானல் நீர் முதலியவைகளை சேர்ந்த பொய்யான நம் கற்பனை உருவம். இவைகளை மட்டும் நாம் மறவாமல் இருந்தால் இவ்வுலகத்தினை இல்லாமல் செய்யும் வல்லமை நிலையை உடனே அடையலாம்.

 

இந்தப் பெரிய உலகந்தன்னை இல்லாமல் செய்திடும்
'கள் வல்லபம் கண்டாடு பாம்பே.
                 --பாம்பாட்டிச் சித்தர்.


இந்திரசாலம், கனவு, கானல்நீர் என உலகம்
எனக்குத் தோன்ற.............  
                              -தாயுமானவர்,

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment