Wednesday, August 26, 2020

 

ஆண் பெண் சமத்துவம்

("சுரபி.")

ஒரு ஜாடியும் சட்டியும் குயவன் கடையில் விற்பனைக்கு வந்திருந்தன. அப்பொழுது ஜாடி சட்டியைப் பார்த்து, "ஓ இழிந்த சட்டியே! உனக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்! என்னைப் பணக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய் அந்தஸ்தாக வைப்பார்கள். உன்னையோ
உலோகங்களினால் செய்த பாத்திரங்களை உபயோகிக்க சக்தியற்றவர்களாகிய ஏழைகள் வாங்குவார்கள். என் அருகில் உட்காரவும் உனக்கு வெட்கமில்லையா?" என்றது. அப்பொழுது சட்டி, ''ஏன் அகாரணமாக என்னை தூஷிக்கிறாய். உனக்கும் எனக்கும் உருவத்தில் மாத்திரம்தான் வித்தியாசம். இருவரும் ஒரே குழியில் இருந்தோம். ஒரே குயவஞால் வெட்டி எடுக்கப்பட்டோம். ஒரே தண்ட சக்கரத்தில் சுழன்றோம். இப்பொழுதும் ஒரே கடையில் தான் இருக்கிறோம். உடைந்தால் இருவரும் எடுத்து எறியப் படுவோம் இதற்காக என் கர்வப்படுகிறாய்?'' என்று விடையளித் ததாம்! ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜாடிக்கும் சட்டிக்குமுள்ள வித்தியாசம் தான் இருக்கிறது ஒரேமாதிரி சந்தர்ப்பங்களில் தான் இருதிறத்தாரும் ஜனிக்கின்றனர். சுமார் 5, 6- வயது வரையில் (நம்முடைய நாடுகளில்) ஒரேமாதிரியாக வளர்கின்றனர். குழந்தைப் பருவத்தில் ஒரேமாதிரியாகப் போற்றப்படுகின்றனர். இறந்து விட்டால் ஒரே மாதிரியாக புதைக்கவோ, தகனம் செய்யவோ நேரிடுகிறது. இவ்வளவு ஒற்றுமைக ளிருந்தும் உருவ வேற்றுமை யிருப்பது கவனிக்கத்தக்கது. ஜாடியும் சட்டியும் ஒன்று தான்; ஆனால் உருவ வித்தியாசம்
ஜாடிக்கு மேன்மையையும் சட்டிக்குத் தாழ்வையும் அளிக்கிறது. அதே போல மனிதர்களிலும் ஆணுக்கு இருக்கும் சில சுதந்திரங்கள் பெண்ணுக்கு இல்லை.

ஒரே தச்சன் மேஜையையும் நாற்காலியையும் செய்கிறான். மேஜைக்கும் 4-கால்கள், நாற்காலிக்கும் 4-கால்கள். அனேகமாக இரண்டும் ஒரே மரத்தினாலும் செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் மேஜை எழுதுவதற்கும், நாற்காலி உட்காருவதற்கும் உபயோகமாவது யாவரும் அறிந்ததே ஒரே தட்டான் இரண்டு ஆபரணங்கள் செய்கிறான். இரண்டிலும் தாகத்தையும் வைரத்தையும் இழைக்கிறான் அனால் ஒன்று காதணியாகிறது. மற்றொன்று மூக்கிலணியத் தக்கதாகிறது. இந்திய ரப்பரினால் இரண்டு விளையாட்டுச் சாமானகள் ஒரே மனிதன் செய்கிறான். உருண்டை வடிவமாக்குகிறான். மற்றொன்றை
நீட்டி நடுவில் ஒரு சிறிய பொத்தல் ஏற்படுததுகிறான். முன்னது 'பந்து' என்னும் பெயர்பெற்று காலால் உருட்டப்படுகிறது, மற்றொன்று அமுக்கினால் 'கீச் கீச்'' என்று சப்தமிட்டு சிறு குழந்தைகளுக்கு படத்தையோ சந்தோஷத்தையோ கொடுக்கிறது. உருவ வித்தியாசம் எவ்வளவு வேற்றுமையை உண்டாக்குகிறது பார்த்தீர்களா?

மேஜையை சாதாரணமாக எழுதுவதற்கு உபயோகிப்பார்கள். ஆனால் அனேக இடங்களில் அது உட்காரும் ஆசனமாகவும் பயன்பட வில்லையா? எனக்குத் தெரிந்த அனேக உபாத்தியாயர்கள் பிள்ளைக்குப் பாடம் கற்பிக்கும் பொழுது மேஜை மேல் உட்கார்ந்து கொள்ளுகிறார்கள் நமது வீட்டிலும் நாற்காலிகள் வேறு வேலையாக விருக்கும்பொழுது யாராவது புது மனிதர்கள் வந்தால் மேஜையில் உட்கார வைப்பது சகஜந்தானே! அதேபோல பள்ளிக் கூடத்திலிருக்கும் பெஞ்சிகள் பிள்ளைகள் உட்காருவதற்காக செய்யப்பட்டன. ஆனால் பாடம் படித்துக்கொண்டு வராதவாகளையம் வேறு குறும்பு செய்பவர்களையும உபாத்தியாயர் பெஞ்சியின் பேரில் ஏறி நிற்கச் செய்வதில்லையா? நம் வீடுகளில் உயரமாக வைக்கப்பட்டிருக்கும் வஸ்துக்களை எடுப்பதற்கு மேஜையோ, அல்லது பெஞ்சியோ போட்டுக்கொண்டு ஏறுவதில்லையா?
ஆகவே மேற்கூறிய வஸ்துக்கள் வழக்கமாக ஒருவிதமாக உபயோகப் பட்டாலும் விசேஷமாக வேறு விதமான உபயோகமும் கொடுக்கிறது.

பெண் மக்களுக்கும் ஆண் மக்களுக்கு அளிப்பது போன்ற சௌகர்யங்கள் அளித்தால் அவாகளும மேன்மையாக விளங் தவார்கள் என்பதும், சிற் சில உதாரணங்களினால் பெண்களே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதும், ஆண் மக்கள் செய்யும் அபூர்வ செய்திகள் (ஆகாய விமானம் செலுத்துவது, நீச்சு முதலிய போட்டிகளில் கலந்து கொள்வது.......) பெண்களாலும் இயலும் என்பதும் கூறுவதில் பயனில்லை. பெண்களே உயர்ந்தவர்களாக விருந்த போதிலும் அவர்கள் இவ் விஷயங்களில் தலையிட்டுக்
கொள்வது நியாயமா என்பதைக் கவனிக்கவேண்டும். சரோஜினி தேவியார் ஆங்கிலத்தில் கவிகள் எழுதினார். பெஸண்டு அம்மையார் தியசாபிகல் சங்கத்தை இந்தியாவில் ஸ்தாபித்து அனேக வருஷ காலமாக அதற்குத் தலைவியாக விருந்து வந்தார். மற்றொரு மாது டென்னிஸ் விளையாட்டில் புருஷனுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றாள் ...... எல்லாம் வாஸ்தவந்தான். ஆனால் திலிருந்து ஒவ்வொரு பெண்ணும் சரோஜினி தேவியைப்போல் பண்டிதையாக முடியுமோ? ஆயிரத்தில் ஒருவர், இருவர்தான் எந்த ஊரிலும், எச்சமயத்திலும் முன்னணியில் நிற்பர். ஆண் மக்களிலும் அனேக கவிகள்.
ஆகாய விமானிகள்; கப்பற்படைத் தலைவர் கள், ராஜீய தந்திரிகள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண் மகனும் இந்தப் பதவிகளைம் பெற முடியுமென்பதல்ல. நடாத்துபவர். ஒருவர் தான் இருப்பர் நடத்தப்படுவர்கள் தான் ஆயிரக்கணக்கில் வேண்டும். ஒரு சேனைக்கு ஒரு தலைவன் இல்லாமல் இரண்டு பேர் இருந்தால் அனர்த்தந்தான்.

நல்லது, ஆணும் பெண்ணும் ஒரே வேலைகளைச் செய்ய சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருவரும் அவைகளைக் போல் செய்வது அவசியமா? எப்பொழுதும் வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டு செய்வதே நலம். நமக்கே வண்ணான் வேலை, சககிலவேலை, குயவன் வேலை .... யெல்லாம் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். எல்லாவற்றையும் செய்து கொண்டு நமது உத்தியோகத்தையும் பார்த்துக்கொள்ள நம்மால் இயலுமா? (காலையில் முகக்ஷவரம் செய்து கொள்வதே எவ்வளவோ நேரம் பிடிக்கிறதே. அறுந்துவிட்ட செருப்பையும் தைத்துப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப வேண்டுமென்றால் சாத்தியமா?) ஆதலால் ஆணும் பெண்ணும் ஒரே வேலைகளைச் செய்வதைவிட வெவ்வேறு வேலைகள் செய்வது குடும்பத்திற்கு நல்லதா, அல்லது ஒரே வேலை செய்வது நல்லதா என்பதை யோசிப்போம்.
உதாரணமாக, புருஷன் மாத்திரம் வேறு ஊருக்குப் பிரயாணம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனைவி அவனுக்கு உதவி செய்ய முடிவது போல, இரண்டு பேரும் போவதாக விருந்தால் செய்ய முடியுமா? இருவரும் புறப்பட வேண்டி பிருந்
தால் அவரவர்கள் தங்களுக்கு வேண்டியவைகளைத் தயாரிக்க முடியுமேயன்றி
ஒருவர் மற்றவருக்குச் செய்வது என்பது முடியாது. எனவே, ஒருவர் வீட்டு வேலைகளையும் மற்றவர் வெளிவேலைகளையும் பாத்து வருவதே கிரமம். பெண்களின் அங்கவமைப்பும் அவர்களே செய்யக்கூடும் என்று கடவுள் விதித்திருக்கும் செயல்களையும் யோசிக்குங்கால் வீட்டுவேலைகளைக் கவனிப்பதற்கென்றே பெண்கள் படைக்கப் பட்டனரென்று திட்டமாகக் கூறலாம்.

நிற்க, பெண்கள் தாழ்ந்தவர்களாக நடத்தப்படுகின்றனரா வென்பதைக் கவனிப்போம். முதலாவது அவர்கள் வீட்டிலிருக்க வேண்டுமென்று நியமித்தது. இரண்டாவது, அவர்கள் வேலை செய்யச்சென்றால் ஆண் மக்களை விட குறைந்த கூலி கொடுப்பது. மூன்றாவது, அவர்களுக்கு சொத்துரிமை கொடுக்காதது...இவைகளைத்தான் முக்கியமாக அவர்கள் எடுத்துக்காட்ட முடியும். வீட்டிலேயே இருக்கவேண்டும் என்ற விதி முன்காலத்தில் ஏற்பட்ட போதிலும் அது இக்காலத்தில் யாரும் அனுஷ்டிப்பதில்லை. எக்காலத்திலும் பெண்கள் கோயில் குளங்களுக்குப் போவதும், கதை காலக்ஷேபங்களுக்குச் செல்வதும் தடுக்கப்படவில்லை. நடுவில் முகம்மதிய படையெடுப்பினால் ஆண் மக்களுக்கே பயமாக விருந்ததால் பெண்களை ஆபத்தினின்றும் நீக்க வீட்டிலேயே இருக்கச் செய்தனர். தற்காலத்தில் அவர்கள் உல்லாஸமான பொழுது போக்கிடங்களுக்குச் செல்வது சகஜமாகி விட்டது. முக்கியமாக அவர்களை வீட்டிலிருக்கச் செய்வதற்குக் காரணம் குழந்தைகளைப் பராமரித்து பிற்காலத்துக்கு நல்ல மாந்தரை யளிப்பது தான். வெளியில் சென்று உழைத்து சாப்பாட்டிற்கு வழி தேடும்படியான கஷ்டவேலையை புருஷன் செய்யும்படியும் வீட்டில் இருந்து சொண்டு புருஷனுக்கும் குழந்தைகளுக்கும் சிச்ரூஷை செய்யும் சாதாரண வேலையைப் பெண்களுக்கும் நியமித்தது பக்ஷபாதமா?

கூலி வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களை விட குறைந்த ஊதியமளிப்பதற்குக் காரணம் பெண்களுக்குக் கஷ்டமான வேலைகளைக் கொடுப்பதில்லை என்பதே. அநேகமாக வெளியில் வேலை செய்யும் பெண்கள் வீட்டிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் கருதியே அவர்களுக்கு சாதாரணமான வேலைகளை யளிப்பது - அந்த வேலைக்குக் தகுந்த கூலிகொடுத்தால் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்? சொத்துரிமை விஷயத்திலும் பக்ஷபா தமில்லை. தகப்பனார் வீட்டிலிருக்கும் பெண்
விவாகமானவுடன் அவள் புருஷன் வீட்டைச் சேர்ந்தவளாகிறாள். வயது முதலே ஒருவருடைய பாதுகாப்பிலுள்ள ஒருவருக்கு தனி சொத்து ஏன்? நமக்குக் கஷ்டம் சேர்ந்தால் அதைப் போக்க துவஜம கட்டிக் கொண்டு மற்றவர்களிருந்தால் நாம் கவலையற்றிருக்கலா மன்றோ?

மொத்தத்தில் எல்லாவற்றிற்கும் நமது மனம் தான் காரணம் எல்லா இடங்களிலும் சுகமும் உண்டு; கஷ்டமும் உண்டு. கவர்னர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விதமாகப் பார்த்தால் அதிலுள்ள சுகங்கள் கணக்கிட முடியாது. இன்னொரு விதத்தில் அந்தப் பிழைப்பு அதிக உபத்திரவம் கொடுப்பது போல் தோன்றும். அது? போல, பெண்களும் வேண்டுமென்று தங்களைத் தாழ்த்திவைத்திருப்பதாக எண்ணி வருந்துகிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் தற்போது புருஷர்கள் செய்யும் வேலை அவர்களுக்குச் சுகம் போல் தோன்றும். ஆனால் தற்சமயம் அம்மாதிரி வேலையில் ஈடுபட்டிருக்கும் மாதரே அதன் உண்மை நிலைமையை அறிவிப்பர்.

நமது நாட்டில் பெண்களை இழிவாகக் கருதவில்லை. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்னும் முது மொழியில் அன்னைக்கு முதன்மை யளித்திருக்கிறது. 'பாழே மடக்கொடி பில்லா மனை' யென்பதில இல்லாளின் அவசியத் தைக் குறித்திருக்கிறது. லக்ஷ்மியையும் சரஸ்வதியையும் தனத்திற்கும், கலைக்கும் அதிபதிகளாக எண்ணி யிருக்கிறது ...... சாதாரணமாகவே தாயைத் தகப்பனுக்கு சமமாகவும், பெண்ணைப் பிள்ளைக்கு சமமாகவும், தமக்கையைத் தமையனுக்கு சமமாகவும் கருதப்படுகிறது. மனைவியை விட புருஷன் உயர்ந்தவன் என்பது எதன் பொருட்டென்றால் சாதாரணமாக நமது நாட்டில் மனைவியை விட புருஷன் வயது முதிர்ந்தவனாக விருக்கிறான். அதுவுமன்றி குடும்பத்துக்கு அன்ன மளிக்கிறான். அதுவேயன்றி மற்றெவ்
விதத்திலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்படிந்ததாக ஒருவரும் கருதவில்லை.

நாம் சுயராஜ்யத்திற்கு சண்டையிடுவது ஏனென்றால் இப்பொழுது அன்னிய ஆட்சிக் குட்பட்டிருப்பது போல் நாம் எப்பொழுதும் இருந்தது இல்லை. ஜாதி வித்தியாசம் ஒழிப்பதற்கு பிரயத்தனப் படுவதும் இதே போல, என்றும் அந்த வித்தியாசம் இருந்ததில்லை என்பதால் தான். இல் ஆனால் ஆணும் பெண்ணும் ஆதி முதல் இன்று வரையில் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இனியும் மாறும் என்று எண்ண இடமில்லை.
ஆகையால் ஒருவர் மற்றவருடன் சண்டை யிடுவதில் பிரயோஜனம் இல்லை. “இந்தியா' என்னும் பக்ஷிக்கு பெண் இரண்டு இறக்கைகள் இருக்கின்றன. இரண்டும் அவசியமே. ஆனால் இரண்டும் ஒரே வேலையை செய்யாமல் தங்களுக் கென்று விதித்திருக்கும் வேலைகளைச் செய்வதே நலம். இரு வகுப்பாரும் தங்கள் அவசியத்தை முன்னிட்டு
தகுந்த கல்வியைப் பெற்று, சண்டையில்லாமல் ஜீவிப்பதே அழகு. அதல்லாமல், சாஸ்திரங்கள் ஆண் மக்கள் செய்ததாகையால் அவர்கள் எப்படிக் கெட்டுப் போனாலும் குற்றமில்லை யென்றும் பெண்களுக்கு மாத்திரம் மிகவும் கடினமான விதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன' வென்று குறை கூறுவது பிசகு. ஆண் மக்களையும் துன்மார்க்க வழிகளில் பிரவேசிக்க விடாமல் பாதுகாத்துக் கொள்வதே பெண்கள் கடமை. அதை விடுத்து, தாங்களும் அவ் வழிகளிலேயே செல்ல ஆசைப்படுவது மூடத்தனமாகும்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதில் தடையில்லை. ஆனால் சில விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு அடங்கி நடப்பதும், வேறு சில விஷயங்களில் அவர்களை அடக்கி நடத்துவதும் தான் முறை அவ்விதமே நடந்து வருகிறது. அப்படி நடக்காததற்குக் காரணம் நம் பெரியோர்களல்ல. தற்கால மாந்தரின் மடமையே தான்.

ஆனந்த போதினி – 1937 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment