Wednesday, August 26, 2020

 

ஆல்பெர்ட் அயின்ஸ்டீன்

சிவ-அமிர்தலிங்கம்

 

நம் நாடு ஏன் இன்னும் இந்நிலையில் இருக்கிறது என்று கேள்வியை எழுப்பிக்கொண்டு ஆராய்ந்தோமானால், நற் பண்பு வாய்ந்த மக்களைக் கைதூக்கி விட ஆட்கள் இல்லாமையால் தான்.

 

சர். சி. வி. ராமனைப் போன்ற பேரறிவாளிகளின் ஆராய்ச்சிகளை நாடோறும் நம் தினசரிப் பத்திரிகைகளிலும் வாரப் பத்திரிகைகளிலும், மாதத் தாள்களிலும்
வெளியிடல் வேண்டும். நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியுற வேண்டுமானால் அறிஞர்
களைப் போற்றவேண்டும். தாகூர், ராமன் போன்ற நோபல் பரிசு பெற்ற பெரியோர்களின் வாழ்க்கையைப் படம் போலச் சித்தரித்து எழுதவேண்டும். அப்பொழுது தான் ஒவ்வொருவருடைய மனத்திலும் பின் கண்ட சிந்தனை தோன்றும், 'நாமும் ஏன் இப்
பெரியோர்களைப்போல் முன்னுக்கு வர முடியாது?' என்று!

 

ஆல்பெர்ட் அயின்ஸ்டீன் என்னும் நோபல் பரிசு பெற்ற பெரியாரின் வாழ்க்கையைப் படிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் மேற் கூறப்பட்ட கேள்வி மனத்தில் தோன்றியே தீரும். அவருடைய வாழ்க்கை அவ்வளவு விசித்திரமானது!

 

ஜெர்மனியின் தென்பாகத்திலுள்ள மியூனிர்' என்னும் நகரத்திற்கு அருகிலுள்ள 'அல்ம்' (UIm) என்னுமிடத்தில், யூத குடும்பத்தில் ஹெர்மன் என்ற வியாபாரிக்கும் அவர் மனைவி பாலின்' என்பாருக்கும் ஒரே மைந்தராய், கி. பி. 1879-ல் ஆல்பெர்ட் அயின்ஸ்டீன் பிறந்தார். இவருடைய தந்தையார் மின்சாரக் கருவிகளை விற்பனை செய்து பணக்காரரானார்.

 

ஆல்பெர்ட் அயின்ஸ்டீனின் நான்காவது வயதில் ஒரு விசேடம் நிகழ்ந்தது. இவரது தந்தையார் காந்த ஊசி ஒன்றை வீட்டுக்குக் கொண்டு வந்தார். அவ் வூசியை, எவ்விதம் திருப்பினாலும் இறுதியில் தென்வட லாகவே நிற்பதை அயின்ஸ்டீன் கண்டார். அவருக்கு இயற்கையில் மனம் இலயித்தது.

 

ஆறாவது வயதில் இவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அக்காலத்துப் பள்ளிகளில் ஏழை, பணக்காரன்' என்று வேறுபாடுகளை மாணவர் மனத்தில் ஆசிரியர்களே தோன்றச் செய்தனர். அயின்ஸ்டீன் இளமையிலேயே இவ் வேறுபாடுகளை வெறுத்தார். அதனால் அத்தகைய பள்ளிகளையும் இவர் வெறுக்க நேர்ந்தது. வகுப்புவாத உணர்ச்சியும் கற்பிக்கப்பட்டது. ஒரு சமயம் ஆசிரிய்ர் ஒருவர் துருப்பிடித்த ஆணி ஒன்றைக் கையில் கொண்டு, 'ஏசுவைச் சிலுவையில் அறைய உதவி செய்த ஆணி இதுவே என்று கூறினார். மாணவரனைவரும் யூதச் சிறுவரான அயின்ஸ்டீனைச் சினத்துடன் நோக்கினர். மனம் நொந்தார் அயின்ஸ்டீன்.

 

ஆரம்பக் கல்வி முடிந்ததும் மற்றொரு பள்ளிக்குச் சென்றார் அயின்ஸ்டீன். அப்பள்ளியில் தேகப்பயிற்சிக்கு மட்டும் பரிசுகள் வழங்கினர். கணிதத்தில் இவர் மிக வல்லவர். உலகத்திலேயே சிறப்புற்றிருக்கும் கணித ஆசிசிரியர்களில் இவர் முதன்மை ஸ்தானம் வகிப்பதாகச் சொல்லுகிறார்கள், ஆசிரியர்களாலும் காணமுடியாத அபார கணித ஞானம் இவருக்கு இருந்தது.

 

வியாபார மந்தம் ஏற்பட்டதால் இவரது பெற்றோர் இவரைத் தனியே விட்டுவிட்டு இத்தாலியிலுள்ள மிலான்' என்னும் நகரத்திற்குச் சென்றனர். இவர் பெற்றோரைப் பிரிந்திருக்க விருப்ப மில்லாமல் டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொடுத்து விட்டு மிலானுக்கே சென்றார். 'மெட்ரிகுலேஷன்' பரீட்சையிலும் – அந்த ஆண்டு தேறவில்லை. ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஸூரிச்சு தொழிற் கல்விக் கழகத்தில்' சேர்ந்துவிட எண்ணினார். 'மெட்றிகுலேஷனி'ல் தேறினவர்களை மட்டுமே அக்கழகம் வேலைக்கு ஏற்றுக் கொண்டது.

 

ஆகையால் அயின்ஸ்டன், ஸ்விட்ஸ்ர்லாந்திலுள்ள ஒரு பள்வியில் சேர்ந்து படித்துத் தேறினார். கழகத்திலும் சேர்ந்தார்.

 

அத் தொழிற்கல்விக் கழகத்தில் அறிவிற் சிறந்த ஆசிரியர் பலர் இருந்தனர். ''வெபர், 'ஹெர்மன் மின்கொஸ்கி', 'கேஸெர்', முதலியோரிடம் அயின்ஸ்டீன் கற்றார். பௌதிகம், கணிதம் ஆகியவற்றில் அயின்ஸ்டீனுக்கு இருந்த ஆர்வமும் திறமையும் மேற்கூறப்பட்ட ஆசிரியர்களால் மேன்மேலும் விருத்தி யடைந்தது. கிர்க்காப்', ஹொட்ஸ்', 'ஹெம்கோல்ட்ஸ், முதலியோரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆவலுடன் படித்துணர்ந்தார் அயின்ஸ்டீன். 'மார்ஸல் கிராஸ்மன்' என்ற அரிய நண்பரையும் அக்கழகத்திலேயே நட்புச் செய்து கொண்டார். இளமையில் வறுமை வயப்பட்டார். 21-ம் ஆண்டில் தொழிலில் அமர்ந்தார். இரண்டாண்டுகள் ஆசிரியத் தொழில் நடத்தினார்.

 

பிறகு, 'உரிமைப் பரிசோதக இலாக்காவின்' தலைவரான 'ஹாலெர்' என்பவரின் உதவியால் பரிசோதகர்' பதவி பெற்றார். 1902-ல் அவ் வேலையில் அமர்ந்தார். மூன்றாண்டுகள் அங்கேயே இருந்தார். 1903-ல் 'மிலெர்வா மாரிக்கு' என்னும் பெண்ணைக் காதலித்து மணம் செய்து கொண்டார். 1904-ல் ஒரு குழந்தையும் பிறந்தது.

 

ஒழிவு நேரங்களில் எல்லாம் ஆராய்ச்சி செய்கொண்டே இருப்பார். மூன்றே ஆண்டுகளில் இவரது ஆராய்ச்சிகள் உருப் பெற்றன. 1905-ம் ஆண்டில் பல ஆராய்ச்சி யுரைகளை இவர் வெளிப்படுத்தினார். ஸுரிச்சு யூனிவர்சிட்டி இவருக்கு 'சாஸ்திர பண்டித' பட்டம் அளித்தது.

 

இவரது புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. பலர் இவருக்குப் பகைவராயினர். 'மாக்ஸ் பிளாங்கு' முதலிய பெரியோர்கள் இவரை அடிக்கடி சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார்கள்.

ஹாலந்து, ஜெர்மனி முதலிய நாடுகளில் இவர் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

1909-ல் ஸரிச்சுத் தொழிற்கல்விக்கழகம் இவருக்குப் பேராசிரியர் பதவி கொடுத்தது. ஐந்து ஆண்டுகளை இனிமையாகக் கழித்தார். முதல் விவாகம் இவ்விடைக்காலத்தில் ரத்துச் செய்யப் பட்டது.

 

பெர்லின் சர்வகலாசாலையும் இவரது அபார அறிவைக் கண்டு பேராசிரியர் பதவி கொடுத்தது. 1914-ல் ஜெர்மனிக்கு வந்தார். ஜெர்மன் கலாசாலையில் ஆராய்ச்சி செய்வோர் மாணவராயிருப்பிலும் ஆசிரியராயிருப்பினும், தம் ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொற்பொழி வாற்றவோ, விளக்கவோ பூர்ண உரிமையுண்டு.

 

சில வருஷங்களுக்கு முன்னால் ஜெர்மனியிலிருந்த யூதர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்ட பொழுது, ஆல்பெர்ட் அயின்ஸ்டீனும் வெளி யேற வேண்டடியவரானார். அது வரையில் ஜெர்மன் சர்வகலாசாலையிலயே பதவி வகித்து வந்தார். யுத்தம் நடந்து வந்தபொழுது அவர் ஆராய்ச்சியிலேயே தம் காலம் முழுவதையும் செலவழித்தார்.

 

சர்வதேச சங்கத்தின் அங்கத்தினரானார். ஆயினும் பின், பிரான்ஸின் செய்கையைக் கண்டு அதினின்றும் விலகி விட்டார்.

 

1921-ம் ஆண்டில் இவருக்குப் பாரிஸ் பட்டணத்திலும் லண்டன் நகரத்திலும் அதற்கு முன் வேறெவருக்கும் நடந்திராத வரவேற்பு நிகழ்ந்தது. பால்போர் பிரா' என்று பெயர்
கொண்ட இங்கிலாந்தின் பிரதம மந்திரியார், இவரை நியூட்டன், கலிலியோ முதலியோரைக் காட்டிலும் சிறந்த அறிஞர் என வாயார வாழ்த்தினார்.


1921-ம் ஆண்டிலேயே நோபல் பரிசையும் அயின்ஸ்டீன் பெற்றார்.

 

நோபல் பரிசுத்தொகை 8000 பவுன். அதில் தமக்கென்று ஒரு சிறிய தொகையையும் எடுத்துக் கொள்ளாமல் எண்ணாயிரம் பவுனையும் கல்வி வளர்ச்சிக்கென்றே அளித்து விட்டார். பாரிஸ் சர்வகலாசாலையும் இவருக்கு 'சாஸ்திர பண்டித' பட்ட மளித்தது.

 

குணாதியங்கள்: - ஆன்றவிந் தடங்கிய சான்றோர்'களில் அயின்ஸ்டீனும் ஒருவர். இவர் மிக அடக்கமான குணம் உள்ளவர். ஆடம்பரம் என்பதே இவரிடத்தில் கிடையாது. நிதானமாகப் பேசுவார். சாந்த குண முள்ளவர். கண்டு பிடித்த உண்மையை, 'வெறும் வேதாந்தம்' என்று இவரது பகைவர்கள் ஜனங்களிடையே புரளி செய்தனர். இதைக் கண்ட அயின்ஸ்டீன் தம்மையே நொந்து கொண்டு, 'நான் கண்டுபிடித்த உண்மை யாவருக்கும் தெரியும்படி சொல்ல முடியாததாலல்லவா பலரும் என்னைத் தூற்ற நேர்ந்தது? என்றார்.'

 

சமூகக் கொள்கைக்கு அடிமைப்படும் குணம் இவரிடம் இல்லை. பழைய ஆடையை உடுத்துச் சென்றதற்கு இவர் நண்பரொருவர் பரிகசித்தும் கூட்டத்திற்கும் அதே ஆடையை அணிந்துசென்றார்.

 

இவர் இந்தியாவிலும் இலங்கைத் தீவிலும் பிரயாணம் செய்த பொழுது இந்தியரை இவர் மிகப் புகழ்ந்து கொண்டாடினார். சீன மக்களின் ஏழ்மையைக் கண்டு மனம் நொந்தார். 'நியூயார்க்கை' உலகத்தின் தலைநகர மென்றார். இவருக்கு பிடில்' வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி உண்டு. இலக்கியத்தில் இவருக் 5.3 'ஷேக்ஸ்பியர்,''கதே' ஆகியோரிடத்தில் விருப்ப மதிகம். 'கால ஆகாச் சமுச்சய நியாயத்தை எடுத்துக் காட்டியவர் இவர் தான்!

 

மேற்படி 'நியாயத்தின் சுருக்கம்: - 'காலம்,' 'இடம்' ஆகியவை புலன்களால் அறியப்படும் உணர்ச்சிகள். சம்பவங்களினால் காலத்தை அறிந்து கொள்ளுகின்றோம். தூங்கும் போது நமக்குக் கால உணர்ச்சி ஏற்படுவதில்லை.

 

வியாபக வஸ்து. - ஒளியானது ஒரு விநாடிந்த 186000 மைல் வேகத்தில் பரவுகின்றது. அப்படிப் பரவுவதற்கு ஒரு வஸ்துவின் உதவி அவசியம் என எண்ணினார்கள். ஆதலின் அந்த வஸ்து 'கனமற்றது,' நீண்டு சுருங்குவது' என்று மனம் போன போக்கெல்லாம் கூறினார்கள். மைக்கேல் சன் செய்த சோதனையினால் 'வியாபக வஸ்து உண்டென்றால் அது பூமியுடன் சுற்ற வேண்டும்' என்று எண்ண இடமுண்டாயிற்று.

 

மைக்கேல்சன் கொள்கைக் கேற்ப வியாபக வஸ்து இல்லை' என்றார் அயின்ஸ்டீன். 'நிலைத்த ரு வஸ்து வேண்டுமானால் காலத்தையும் இடத்தையும் இணைக்கவேண்டும். இல்லாததைப் பற்றி ன் கவலைப்பட வேண்டும்?' என்று அயின்ஸ்டீன் கூறினார். இவர் கூறிய அனுமானத்தின்படியெ பல நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆகலின் இவர் அனுமானம் 'சரி' யென்று ஏற்பட்டது.


இவர் கண்டுபிடித்த உண்மைகள் சில: -


(1) பிரகிருதியும் பூத சக்தியும் ஒன்று.

(2) ஒளிக்கும் மின்சாரத்திற்கும் உள்ள சம்பந்தங்கள் என்பன.

 

மனிதர்களாகப் பிறந்தோர் பலவித அல்லல்கள் அடைந்து இறுதியில் சுகம் பெறுவர். அறிஞர்களுக்குத் தம் கொள்கைகளை நிலை நாட்டுவதில் பல தடைகள் உண்டாகும். ஆயின், தம் கருமமே கண்ணாயிருப்பர் அன்னோர். -அறிஞர் என்றால் தருக்கித் திரியாமல் அடக்கமாக இருந்து தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு இவரே சான்று.

 

அயின்ஸ்டீனைப் போல் நம் நாட்டில் பல பேரறிஞர்கள் தோன்ற வேண்டும்.

 

ஆனந்த போதினி - 1950 ௵ - டிசம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment