Saturday, August 29, 2020

ஒளவையார்

 

இனி, 'நெற்பயிர் விளை'', என்றருளினர். இதற்கு நெல்லின் பயிரை நீ வேண்டிய முயற்சி செய்து பயிரிடு என்பது பொருளாகும்.

 

பல்வகையான தானியங்கள் நம் நாட்டில் விளைகின்றன. அவைகளைப் பற்றி ஈண்டு குறிப்பிடவில்லை. நமது ஒளவையார் செஞ்சாலி விளையும் தீம்புனற் சோணாட்டிலேயே வதிந்தவ ரல்லர். புன்செய் வளமும் கெழுமிய ஈடு நாட்டிவதான் மிகவும் பயின்றவர். எனினும் விளை பொருள்களுள், தரத்தில் உயர்ந்தது நெற்பயிரே யென்பது மறுக்க முடியாது. பண்டைப் புலவர் பெருமக்களும் செஞ்சாலியுடைய நாடுகளையே தெய்வத் திருநாடுகளெனப் புகழ்ந்து போற்றிவந்தனர். அத்தகைய நாடுகளை யாண்ட மன்னர்களே எல்லா வகையிலும் மேம்பட்ட திருவாளர்களாக விளங்கினர். நெற்பயிர் விளையும் நிலங்கள் எப்போதும் நீர்வளமிக்குடையதாயிருத்தல் வேண்டும்; நீர் வளமிகுந்த எந்த நாடும் பல்வளங்களிலும் செழிப்புற்று கண்டோர் மனதைக் கவரும்.

 

தவிர மக்களுக்கு நெல்லுணவு அறிவுப் பெருக்கினை வளர்ப்பது போல் புன்செய் விளைபொருள்களின் உணவு செய்யமுடியாது. அவர்களின் குணம் சரீரவன்மை புத்தி மந்தம் இலைகளையே உண்டெணும் தியல்பு. இக் காரணம் பற்றி நெல்லின் அரிசியாலாகிய அனனத்தையே தேவதாராதனம் செய்யவேண்டு மென்பது விதியாக நடைபெற்றுவருகிறது. சத்துவ ஆகாரம் நெல் என்பது மட்டில் அல்லாமல் விவசாயிகளைத் தாததில் உயர்த்துவதும் அதுவேயாதலினால் நெற்பயிரை அலட்சியம் செய்யாமல் முயற்சி செய்து விளைவி என்றனர் போலும்.

 

முன்பொரு கால் மூதாட்டியார் சேரமானை வாழ்த்துகையில் வரப்புயா என்று கூறி ஆசீர்வதித்தார். மற்றும் அங்கு வந்திருந்த புலவர்கள் தாங்கள் கட்டுக் கட்டாகப் பிரபந்தங்களைப் பாடிக்கொண்டு வந்திருக்க, இம்மூதாட்டியார் அரச சபையின் மரியாதையையும் கருதாமல் வரப்புயா என்ற ஒரே மொழியில் வாழ்த்துகின்றாரே எனத் திகைத்தனர். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தனக்கிணை வேறில்லாத நம் தலைவியார் அவர்கள் குறிப்பினை யுணர்ந்து வரப்புயர என்பதையே திரும்பத் திரும்ப மும்முறை கூறிடு ''வாப்புயாந்தால் நீருயரும், நீருயர்ந்தால் நெல்லுயரும்; நெல்லுயர்க்தால் குடியுயரும்; குடியுயர்ந்தால் முடியுயரும் என்பதே எனது வாழ்த்துரையின் சாரம் ஆகும். இதைவிட அரசருக்கு ஆக்கம் தருவது வேறுண்டாயின் நீவிர் கூறுவீராக" என்று தெளிவித்தனர் என்பது சரித வரலாறு. இதனால் மூதாட்டியாருக்கு குடிகளைச் செல்வவான்க ளாக்குவதும் அவர்களால் அரசர்களை மேன்மையுடையராக்குவதும் நீர் நிறைந்த வரப்புகளில் விளையும் நெற்பயிர் தான் காரணமென்பது கருத்து. புன்செய் விளையும் புனங்களில் பிறவாமல் நன்செய் விளையும் நீர் நாட்டில் பிறப்பது பழம் புண்ணிய முடையார்க்கே வாய்க்கும் என இராஜ கூடப்ப கவிராயரும், “நீர் நாட்டில் வால் அரிது கண்டாய்'' என்றருளினர். தவிர நீர் நிறை வயல்களில் மச்சங்கள் முதலிய ஜல ஜந்துக்கள் இருப்பது இயல்பு. இந்த மச்சங்களே தண்ணீரிலுள்ள இயற்கைக் குற்றங்களையும் வயலின்கண் தண்ணீரின் தேக்கத்தால் ஏற்படும் செயற்கை (அசுத்தங்கள்) குற்றங்களையும் உணவாகக் கொண்டு நீரையும் நிலத்தையும் தூய்மையாக்குகின்றன வென்பது திண்ணம். அதனாலும் நிலவளம் உயர்கின்றது. நீர்வளம் நிலவளம் உடைய நாட்டிற் பிறந்தோ இளமை முதல் வளர்ந்தோ வரும் இளைஞர்களின் முக வசீகரமும் சுறுசுறுப்பும் விவேகப் பொலிவும் அந்நீர் வளமில்லாத சிற்றூர்களிலும் காட்டிலும் மேட்டிலும் பிறந்து வாழ்ந்து வெளிவரும் இளைஞர்களின் தோற்றத்தில் காணமுடியாது. இது சாதாரணமாக எவரும் உணர்ந்ததே. பெரும்பாலும் நமது தென்னாட்டில் காவிரி நீரைப் பருகி மூழ்கி வளரும் வாலிபர்களைக் காணும் போதே மேலே கூறிய வசீகரம் பொலிவு விவேகம் இவைகள் மனதைக் கவரும் தன்மையில் விளக்க மடைகின்றன.

 

தாம்பிரபருணி நீரினைப் பருகியும் மூழ்கியும் திளைத்தும் உள்ளோர் நோயற்ற யாக்கையும் திட சரீரமும் அஞ்சா நெஞ்சமும் அவர்கள் தோற்றத்தில் கூறாமலே விளங்கும். இவ்வண்ணம் ஒவ்வொரு நீரின் தன்மைக்கேற்ப மக்கள் இயல்பும் மாக்கள் இயல்பும் அமைந்துள்ள தாதலின், அத்தகைய புனிதமான நீரிலேயே விளையக்கூடிய நெற்பயிர் சிறந்த நற்குணங்களை உண்டுபண்ணும் நல்லுணவாகும். எனவே, அத்தகைய பயிரை முயன்று பயிரிடுமாறு பணித்தனர். நீர் வளமே கிட்டாத இடங்களில் உள்ள மக்கள் எப்படி நெற்பயிர் விளைவிக்கலாம் என்னும் வினா வெழும். அவர்கள் தங்கள் நிலத்திற்கேற்ற பயிர்களை விளைவிக்க வேண்டியதுதான். ஒளவையாரே ஒளவையாரே ஒரு சமயம் இதன் அருமையை நோக்கி,


*ஏரு மிரண் ளெதாய் இல்லத்தே வித்துளதாய்
நீர் அருகே சூழ்ந்த நிலமுளதாய்.''


என்று கூறியிருப்பதால் மேற்கண்ட வசதிகள் உள்ளவர்களுக்கே நெற்பயிர் விளைவிப்பது சாத்தியம். வசதியான இடங்களில் வாழும் பேறு டைய மக்களிலும் சிலர் முயற்சிக் குறைவால் நல்ல பலனையடைவதில்லை. இத்தகை யார்கட்கே மூதாட்டியார் இடித்துக் கூறியதாக சிறப்பாகவும் கொள்ளலாம். 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மீரா' தென்பது ஒரு பழமொழி. இது உண்மையே. விவசாயி தனக்கு மீதி ஏற்பட வேண்டுமென்னும் ஆசைகொண்டு கணக்கிடத் தொடங்கினால் அவனிலும் அறிவீனன் வேறிருக்க முடியாது. இவன் உழுதொழில் வருவாயினால் கிராமத் தொழிலாளிகள் கடமைகளும் பொதுத் தருமங்களும் பெரிய அரசாட்சியும் வாணிபமும் வாழ்ந்துவருகின்ற தென்பதை எவரும் மறுக்க முடியாது. அரசர்கள் முன்னாளில் வேளாண்மை செய்பவர்களுக்கே அவைகளில் பெரு மதிப்புச் செய்து வந்தனரென்பது சரித்திர உண்மை. உக்கிரகுமார பாண்டியன் மேகங்களைச் சிறை செய்தான்; இந்திரன் வேட்கைப்படி அவைகளை விடுதலை செய்யப் மீன்) நின்றவர் வேளாண்மையா பாளர் ஒருவரே என்பது திருவிளையாடற் புராண வரலாறு. இத்தகைய மேன்மை உழவுதொழில் ஒன்றினுக்கே யுரியது. அத்தகைய தலையான பெருமையைப் போற்றி மகிழாமல் பயிர்த்தொழிலில் லாபம் கிடைக்கவில்லையே யென அத்தொழிலை யிகழ்ந்து முயற்சி செய்யாமல் மாத நிவேதனம் பெறும் ஊழிய வர்க்கத்தில் நுழைய வழி பார்க்கும் தற்கால யுவர்களின் புத்திப்போக்கிற்கு இது நல்ல பாடமேயாகும். தற்கால அரசியலில் விவசாயிகளின் மதிப்பு சிறிதும் கவனிக்கப்படாமல் அவர்கள் கொந்து மெலிந்து வாடுவதால் அத்தொழிலை மேற்கொள்ளத் தயங்க வேண்டியதும் ஒரு வகையில் நியாயமே. ஆயினும் உலகத்தையே திருத்தி செழிப்புறச் செய்யும் தீவிரமான ஆலேர்சனை நிபுணர்கள் எல்லாம் ஒரேமுகமாக நிலங்கள் சாகுபடி செய்யப்படும் கிராமங்களே வறுமைப் பிணிதீர்க்கும் வயித்திய சாலைகளென வற்புறுத்தத் தலைப்பட் டிருக்கின்றனர்.

 

சுற்றிச் சுற்றி வந்தாலும் சுங்கம் சாவடி வழியாகத்தான் வரவேண்டும் என்ற முதுமொழிப்படி பல துறைகளிலும் துருவித் துருவி தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் முடிவில் உழுவான் தலைக்கடைக்கே வந்து நிற்க வேண்டும். "மேழிச் செல்வம் கோழைபடாது'' என்பது அருள்மொழி. ஆதல் பற்றியே அன்னையார் 'நெற் பயிர்விளை' எனச் சிறப்பாக எடுத்துக் கூறினார். தவிர நெற்பயிரினால் (பூஸாரம்) பூமியின் சத்து குன்றாது. ஏனைய புன்செய்ப் பயிர்களினால் பூமியின் இயற்கைச் சத்தும் குறையும். எல்லாவகைகளினாலும் நெற்பயிர் விளைப்பதின் முக்கியம் மறுக்க முடியாதது. இனி,

 

"நேர்பட ஒழுகு" என்பதாகும்.

 

இது நீ உனது ஒழுக்கம் கோணாமல் செவ்வையாக நட என்று உணர்த்தியதாகும். கோணாமல் நடப்பது இன்னதெனத் தெரிந்தவர்களும், பிறருக்கு போதிப்பவர்களும் நாட்டில் பெரும்பான்மையினர்களே. எனினும், பிறருக்குப் போதிப்பது போலத் தாமும் நடப்பவர்களே அரியராவர். அதில் ஒரு சிலர் தேரலாமோ யாதோ? கூற அஞ்சுதும். இது பற்றியே பொய்யா மொழிப் புலவர் பெருமானும்,


"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்


என தருளியுள்ளார். எவரும் வானளாவ நீதிகளைப் பேசுவன தவிடச் செய்கையில் கைக்கொண்டு ஒழுகப் பயிலுதல் வேண்டும். இவ்விதம் கோணாமல் நடக்கும் உறுதி உபாத்திமைத் தொழில் புரிவோர்களிடம் அமைந்திருத்தல் அவர்கள் திண்ணீய ஒழுங்குள்ளவர்களாயின் மாணாக்கர்களும் அவ்வழியைப் பின்பற்றுவர். தமக்குத் தே தேவையான புகையிலைப் பொடிக்காகவும் வெற்றிலை பாக்கு கட்காகவும் தலைமையான மாணாக்கர்களைக் கடைக்னுப்பும் ஆசிரியர்கள் எ
ண் எத்தனை எத்தனை?

 

எல்லாக் கடமைகளிலும் ஆசிரியக் கடமை மிகமிகச் சிறந்தது. அத்தகைய பெரும் பொறுப்பமைந்த தொழில் தற்காலம் சில பாட புத்தகங்களையும், பல அமைப்புத் திட்டங்களையும் பயிற்றுவிப்பதற்கே ஏற்றதெனக் கருதப்பட்டு நடை முறையில் கையாளப்பட்டும் வருவது கண்கூடு. உபாத்திமைத் தொழிலிற்குப் பயிற்சி பெறுவ தென்பதில் ஒழுக்கம் வேண்டுமென்னும் பகுதி முற்றிலுமில்லை. கோணாமல் கடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின் உபாத்திமைத் தொழிலுக்குச் செல்வோர் தொகை பெரும்பாலும் குறையுமென்பதில் ஐயமில்லை. நேர்பட ஒழுகப் பயிலாதவர்கள் போதிக்கும் குழுவினராக விருக்குங்கால் இளைஞர் நடை எவ்வாறு திருந்துவர். ஆவதும் அழிவதும் ஆசிரியர்களாலேயே என்பது தெளிவு. ஆதலினால் நேர்பட ஒழுகு' என்பது ஆசிரியர்களாக முன்வரும் யுவர்களையே முதன்மையாக நோக்கிக் கூறியதாகவும் கொள்ளலாம். நேர்பட ஒழுகவேண்டிய உறுதி இளமையிற்கால் கொண்டாலும் யௌவனம் வந்தடையும் கால் கடுக்சாற்றி லகப்பட்ட மரக்கலம் போற் சிதருண்டு நிலை குலையச் செய்விக்கவல்ல நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக முன்வந்து காட்சியளிக்கும்; அந்தச் சோதனையில் கலங்காமல் நேர்பட ஒழுகுந் தீரமே ஆண்மை. அவ்வாறொழுகக் கற்கும் கல்வியே கல்வி. பண்டை நாட்களில் உலக அநுபவ முதிர்ந்தவர்களே ஆசிரியர்களாகக் கொள்ளும் வழக்கமும் இருந்துவந்தது. வனவாசம் செய்து வறுமையை யேற்று மனைவியோடு வானப் பிரஸ்தாச்சிரமம் புரியும் முனிபுங்கவர்களே உலகாள வேண்டிய அரச புத்திரர்களுக்கும் குருமார்களா யிருந்தனர். அதனால் எளியவர் நிலைமை ஆடம்பரமற்ற வாழ்க்கை அடசகவுணர்ச்சி இவைகள் அவ்விளைஞர் உள்ளத்தில் அரும்பி மலா இடமிருந்தது. தமகாலம் சொற்பனத்தில்கூட அத்தகைய உதாரணம் காண முடியாது.
னால் ஒளவையார் அருள்மொழியைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நேர்மையாக நடத்தல் வேண்டுமென்று உறுதி கொள்ளல் வேண்டும். அரிச்சந்திரன் ஒரு பொய் சொல்ல மறுத்து இடுகாட்டில் சுடலைச்சாம்பானுக்கு அடிமைப்பட்டதாக நம் நாட்டில் வழங்கும் சரித்திர வுண்மையை ஊன்றிச் சிந்திக்க வேண்டும்.

 

நளன் தான் காதலித்த தமயந்தியிடம் தேவர்கள் பொருட்டுத் தூதுசென்றான். தசரதன் ஒரு மொழி மறுக்கக் கூசி உயிரையும் உயிரனைய காதல் மகனையும் துறந்தான். நச்சுப் பொய்கையில் இறந்த தம்பியர் நால்வரில் மாத்திரி புத்திரனாகிய நகுலனை முதலில் உயிர்ப்பித்துப் பிறகு தன் சொந்த தம்பியாகிய வீமனை உயிர்ப்பித்தான் தருமபூபதி.

 

ஆபத்து வந்த சமயத்தில் தான் மன நிலை குன்றாமல் நேர்மையாக ஒழுகும் திறமையைக் கற்கவேண்டும். நேர்பட ஒழுகுவோர் என்றும் இறவாப்புகழுடம்பு பெற்றவராவர் அவர்கட்கு எந்தத் தீங்கும் புரங்காட்டும். எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயங்களிலும் பிறருக்குப் பயந்து செய்யாமல் மனச்சான்றுக்காகவே நேர்வழியில் ஈடுபடக்கடவர். இனி,

 

நைவினை நணுகேல்''

 

என்பது. இதற்கு, நீகெடத்தக்க தீவினைகளை ஒருபோதும் சாராதே என்பது பொருள். இது முன்பு கூறிய நேர்பட ஒழுகென்னும் நீதியைக் கைக்கொள்ளுவதற்கு முக்கிய சாதனமாகும்.

 

உன் பெருமையை அல்லது நலத்தைக் கெடுக்கத்தக்க தீவினைகளை ஒரு போதும் சார்தல் கூடாதென்று கூறினால் செந்நெறியைத் தவிர வேறு சார்பில்லாமல் போகும்.
எனவே இரண்டு தொடர்களும் ஒன்றை யொன்று தொடர்வனவேயாகும். ஆதலினால் அடுத்துவரும்,

 

"நொய்ய வுரையேல்"

என்ற நீதியை ஆராய்வோம்.

 

இதற்கு பயனில்லாத அற்ப வார்த்தைகளை நீ சொல்லாதே என்று உணர்த்திய தாயிற்று.

இது மிகமிகப் பெரிய புத்திமதியாகும். இதில் பிழைபடாதவர்கள் இருப்பரோ வென்பதும் சந்தேகம். நமது தாயுமானவரும்,


“நெட்டுயிர்த் துத் தட்டழிந்
துளறுவார் வசன நிர்வாகரென்ற பேரும்"


என்று திட்ட மாகக் கூறியருளினார்.

 

வடித்தெடுத்த சொற்களை நிறுத்துப் பேசும் வன்மையாளரும் ஒவ்வோர் சமயத்தில் தவறுதல் இயற்கை. செருக்கும் சினமும் பொறையுடையாரையும் நிதானம் தவறும்படி செய்வதியற்கை. ஆயினும் அந்நிலையிலும் அற்ப வார்த்தைகளை அறிஞர் வழங்கார். இயல்பாகவே இழிந்த குணம் நடையுடையவர்களிடமே அற்பத்தனமான மொழிகள் பிறக்கும். உயர்ந்த 'கடையுடையவர்கள் வாக்கில் மறந்தும் இழிவான சொற்கள் வரமுடியாது. இக்குணம் பெரும்பாலும் இளமையிலும் பிறகும் தங்களுக்கு ஏற்படும் சகவாசத்தாலேயே ஏற்படுவதாகும். இது பற்றியே ஒருவன் குணத்தை அறிய வேண்டுமானால் அவன் நண்பனைப் பார்த்து அறிந்துகொள்' என்ற ஆங்கிலப் பழமொழியின் கருத்தும் எழுந்ததாகும். எப்போதும் கீழ்மக்களின் நட்பு தீய குணங்களையே வளர்க்கும். அற்பமான உரைகளை ஒருவன் வழங்கினால் அவ்வாறு வழங்குவோனையே அற்பமான மனிதன் என்று உலகம் மதிப்பது கண் இவனால் நிந்திக்கப்பட்டவனை அவ்வாறு கருதாமல் அவன்பால் இரக்கமே கொள்வதும் இயல்பு. ஆதலினால் இவன் சொற்கள் தக்கோர் கொள்ளத்தகாத பயனற்றவைக ளாகின்றன. இது குறித்தே,


"நாநல மென்னும் நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ள தூ மன்று''


எனப் புலவர் பெருமான் ஓதியருளினார். நாவைத் தூய்மைப்படுத்துவது உயர்ந்த பயனளிக்கும் செம்மொழிகளே யன்றிப் பயன் பயவாத அற்பமொழிகளே யன்று. பெரும் பதவியில் நிற்பவர்களும் ஒரு சமயம் புன்மை மொழிகளை வழங்கிப் பிறகு பொறைகோரி மன்னிப்புக் கோருவது உலகியல் அறிஞர்களுக்குப் புதியதன்று. சில வருஷங்கட்கு முன் நமது இந்திய நாட்டின் அரசப்பிரதிநிதியாக விருந்த லார்டு காஸன் என்னும் பிரபு நாவன்மையிலும், பரந்த கல்வியிலும் பேரறிவிலும் சிறந்தவர் என்பது எவரும் அறிந்த விஷ அத்தகைய மேன்மையாளர் முன் பின் நிதானியாமல் இந்தியர் பொய்யர் என்று பதட்டமாய் ஒரு மொழி கூறியருளினார். அதனாலேற்பட்ட மக்
கள் கசப்பும் வங்க நாட்டினர் மன கொதிப்பும் எத்தனை எத்தனை நடுக்குற செய்யும் விபரீதங்களை தோற்றுவித்தன? என்பதை சிறிது சிந்தித்து பார்ப்போமாயின் அக்கடுங்காற்றினின் வேகமே இன்னும் வெவ்வேறாகிய உருக்கொண்டு  காட்சி யளிக்கின்றன வென்பது புலனாகும். அத்துனை பெரிய பதவியாளருக்கே அற்ப மொழிகளை வழங்கியது இத்துனை தீமைகளை விளைவித்தது என்றால் சாமானியர் திறத்தில் என்ன தீமைகளை விளைவிக்கும் என்பதை சிந்திக்கின் ஒளவையார்  அருளிய  நொய்ய வுரையேல்” என்பதின் அருமையும் பெருமையும் விளங்கும்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஆகஸ்டு ௴

 


No comments:

Post a Comment