Saturday, August 29, 2020

 

ஒளவையின் ஆசி

(எம். முத்துகிருஷ்ணன்.)

‘கலீ' ரென்ற சிரிப்பொலி. சுற்று முற்றும் பார்த்தால் ஒன்றுமே காணோம். அமானுஷ்யமான ஒரு ஏளனச் சிரிப்பு; அவ்வளவு தான் ....

உணர்ச்சித் திரைகள் மோதி ஒலிக்கும் ஞானக் கடலில் அருள் வேட்கையுடன் பாய்ந்து முத்துக் குளிக்கும் அறிஞ னொருவனுக்கு மட்டும் வெகு சுலுவில் அது படும்.

ஆம்! இலக்கிய ஆழத்தி லிருந்து தான் வருகிறது அக் கள்ளச் சிரிப்பு. அடடா! அதன் அடிவான எழில் கடையில் எவ்வளவு முத்தம்; வைாம்; வைடுரியம்: யாவும் அஞ்ஞான மகற்றும் சுடரொளிகள்!

ஒரே ஒரு மூலை. மங்களகரமான புனித புறநானூற்று அகல் விளக்கின் மங்கிய தெய்வீக ஒளியின் சிறு அசைப்பு. அதோ! அதோ! உலகிருள் மெதுவாய் நகருகிறது. அதிலே கலந்துள்ள 'பொதுவியல்' - திணையென்னும் குளத்தின் ‘பொருண் மொழிக்காஞ்சி’த் துறையின் நட்ட நடுவே நின்று கொண்டு தன் வீரிய கரங்களைச் கொட்டிச் கொட்டி பரிகசித்து, எக்காளச் சிரிப்பை அள்ளி வீசுகிறாள் நம் பாட்டி, ஒளவை.

... எதைப் பற்றி இருக்கும் இக் கிழவியின் ஏளன நகை? ...

“ஹ ஹ ஹா! ...... பேரா! கொஞ்சம் இமையைத் திற! உன்னைப் பீடித்திருக்கும் அறியாமைத் தார்களை யுதிர்த்து விட்டு, ஞான வொளியை வந்து பாரப்பா, சற்று!"

ஒளவையின் இந்த பரிகசிப்பிற்கு ஆளாக வேண்டியதுதான் நாம். அஞ்ஞானக் கோட்டையின் வெளிரிய பிதற்றலில் அமிழ்ந்து கிடக்கும் நம்மை, கலை வாயிலில் நின்று கூவி அழைக்கிறாள் மலர் வதனத்தோடு. அவளின் அழைப்பு அலிங்கனத்தில் ஒன்றாகக் கலக்க, நம் மெளட்டியக் கோட்டையைத் தகர்த் தெறிந்து அம்மை யிடந்தான் சற்று போவோமே!

அதோ! அவள் சொல்றுகிறான்:

"மனிதனே! உன் ஞானம் துருப்பிடித்து விட்டது."

காரணம் என்ன இருக்கும்?

சாதாரணமாக நாம் பிரயாணம் செய்கிறோம். மிகுந்து வந்த அசதி,
அண்மையி லொரு நகர். அதற்குள் நுழைத்து ஒரு சத்திரத்தில் போய், அப்பா! என்று படுத்து விடுகிறோம். ஸ்மரணை யற்ற நல்ல அலுப்பு. விடிந்து எழுந்ததும் மடியைத் தடவினால்...... பணப் பை கயா! உடனே நாக்கை மடித்து ஆத்திரமாய்க் கத்த ஆரம்பித்து விடுகிறோம், “திருட்டுப் பயல் ஊர்."

காட்டு வழி சென்று கொண்டிருக்கிறோம். உச்சி வேளை, அபார பசி. எதிரே சில வேடுவர்கள் மா னிறைச்சியை வாட்டுகிறார்கள். நம்மைக் கண்டதும் ஓடோடியும் வந்து, உபசரித்து, உண்ணச் செய்கிறார்கள். நம்மையு மறியாமல் நமது குமுத வாய் புகழத் தொடங்குகிறது, "கருணை காடு இது," என.

வாணிபஞ் செய்யச் செல்கிறோம். நடுவழி. கொள்ளைக் கூட்டத்தாரால் பிடிக்கப்பட்டு ஒரு பள்ளத் தாக்கிற்குள் அடைக்கப் படுகிறோம். அங்கு நம்மைப் போலவே வேறொருவர். கள்வர் தலைவன் கத்திகொண்டு அவரை அனுகிருன். அவர் மடியி லிருந்த பணத்தைப் பறித்ததும் 'சதக்' கென்று வெட்டிப் போட்டு விடுகிறான், தலை வேறு முண்டம்
வேறாக. பயங்கரமான இந்தக் காட்சியால் நம துள்ளம் நடு நடுங்கி, “பழிகாரப் பள்ளத் தாக்கு” என் றலறுகிறது.

ஒரு மலை. வானை முத்தமிடும் உயரம். காட்டிலாக்காவில் நமக்கு வேலை. மலை யுச்சியிலுள் காட்டில் வேவு பார்த்துக்கொண்டு வரும் போது, ஒரு புலி நம்மைப் புசிக்க பதி போட்டுக்கொண் டிருக்கிறது. இதைக் கண்ணுற்ற ஒரு மலைவாசி ஒரே அம்பினால் அதைக் கொன்று நம்மையும் காப்பாற்றி விடுகிறான். அத் தருணத்தில் நன்றி யறிதலாக நம் மனம் "மாண்பு மிக்க மலை நாடு" எனப் பாராட்டுகிறது.

ஒவ்வொரு காலங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மனிதன், தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக் கேற்ப விதவிதமாய் அரற்றி விடுகிறான். உண்மை புலப்படுவதில்லை. இதைத்தான் ஒளவையும் ஊர்ஜிதம் செய்கிறாள்.

"நாடு ஆக, ஒன்றே; காடு ஆக, ஒன்றே

அல்லது

அவல் ஆக ஒன்றே; மீசை ஆக, ஒன்றே"

எவ்வித மிருந்தாலும்,

நாம் இன்ப முறும் போது, ஓரிடத்தை ‘நல்ல நில்’ மென்றும், துன்பமுறும் போது ‘கெட்ட நில' மென்றும் அதைச் சொல்லுகிறோம். இது தவறு.

ஏனெனில்,

"எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை."

எவ்விடத்தில் நல்லோர் உறைகிறார்களோ, அவ்விடம் 'நல்லூர்' விடுகிறது. எங்கு தீயோர் வதிகிறார்களோ அங்கு தீய நிலம்.

ஒருவேளை நல்ல நிலமாய் இருந்தால் கூட அங்கு தீயோர் வசித்தால், அது கொடிய பூமியாக மாறுகிறது.

இதிலிருந்து 'ஒரு தேசம் தன்னிடம் வாழ்வோரின் பண்பைக் கொண்டதே யல்லாமல் தனக்கென ஓரியல்பு உடைய தன்று' எனும் நீதி வெள்ளிடை மலையாய் விட்டது.

ஆதலின், ஒளவை கூறுகிறான். "மக்களே நல்லவர்களாய் இருங்கள், அப்பொழுது தான் உங்கள் நாடு நல்லதாக ஆகும்.'' அவ்வாறு நாட்டின் மதிப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரனுக்கும் தனது முதிர்ந்த “அசியை” கொடுக்க, தானே முன் வந்து விடுகிறள். இதோ! நிலத்தை வாழ்த்துவது போல, நிலத்தில் வசிக்கும் வீரமக்களை ஆசீர்வதிக்கிறாள்:

"வாழிய! நீலனே"

முதியவனின் இந்த வரப்பிரசாத ஒவ்வொரு இந்தியக் குரிசிலுக்கும் அத்தியாவசிய மன்றோ? இன்று முதல் ஆச்சியின் உபதேசத்தைக் கடைப் பிடிப்போம்! அவள் கூறிய பொன் மொழிகளைப் பாடிப் பாடி நல்லோ ராவோம்! அப்படியே நமது தேசத்தையும் முன்னணியில் கொண்டு வந்து நிறுத்துவோமே!!!

"நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

 

[ஒன்றோ=எண்ணிடைச் சொல்; அவல்=பள்ளம்; மிசை=மேடு; எவ்வழி=எவ்விடத்தில்; ஆடவர்=பொருள் ஆண்களைக் குறித்தாலும், ஆண் பெண் இருவருக்கும் பொது. பெண்களை விட ஆண்கள் சிறப்புடைமை பற்றி, சிறப்பையே முதலில் கூறிவிட்டார்.]

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment