Tuesday, August 25, 2020

 

அதிருஷ்டமும் கர்மாவின் சம்பந்தமும்

(வி. டி. ராஜன்)

அதிர்ஷ்ட மென்பது இவ்வுலகில் ஒன்று உண்டென்பது சிலரின் கொள்கை. சிற்சில சமயங்களில் நமக்கு திடீரென ஆச்சரியத்தை உண்டு பண்ணக் கூடிய சில நிகழ்ச்சிகளை நம் இவ்வுலக வாழ்க்கையில் கண் கூடாகக் காண்பதுண்டு. மிகவும் தரித்திர திசையை யடைந்திருக்கும் ஒருவருக்கு புதையலோ அல்லது எதிர்பாராத ஒருவரின் சொத்தோ கிடைத்து அதன் மூலம் அன்னவர் குபேர சம்பத்தை யடைவதும், மற்றொருவர் திடீரென்று ஒருவரும் எதிர்பாராத விதமாய் பெரிய பதவியை யடைவதும் இவ் விரண்டும் ஒவ்வோரிடத்தில் ஒவ்வோர் சமயத்தில் ஆங்காங்கு நிகழக் கூடியவையே. ஆனால் இதனாலேயே இவர்களை நாம் பெரும் அதிர்ஷ்ட சாலிகளென்று மதித்து விடுவதா? கூடாது. ஏனெனில் நம்மிடையே சிலர் நல்ல ஜாதகப்பலனை யுடையவர்க ளென்றும் நல்ல அதிர்ஷ்டசாலிக ளென்றும் கருதப்படுகிறோ மல்லவா? அப்பேர்ப்பட்டாம்மில் சிலருக்கு ஏன் இவ்வித அதிரஷ்டம் தோன்றக் கூடாது? இவற்றிற் கெல்லாம் காரண மென்ன வென்று யோசிக்குமிடத்து எல்லாம் கர்ம விசேஷத்தின் பலனே யென்பது நன்கு விளங்கும். பூர்வ ஜென்மத்திலோ அல்லது பல ஜென்மங்களிலோ இவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசையின் மூலம்இவர்கள் மேற்சொன்ன பதவியையும் சம்பத்தையும் அடைகின்றனர். முன்சொன்னவர் பொரூளீட்டலே தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு மற்ற விஷயங்களை விட இவ் விஷயத்தில் முன்னொரு ஜென்மத்திலோ அல்லது பல ஜென்மங்களிலோ அதிகமாக உழைத்து வந்திருப்பர். அதன் பலன் இவரைத் தொடர்ந்து கொண்டே வந்திருக்கும். அவர் மேலும் மேலும் இவ் விஷயத்தில் உழைத்து வந்ததின் பயனாய் ஒரு ஜென்மத்தில் அதாவது இச் சென்மத்தில் அவருடைய காரியம் கை கூடிற்று. இது தான் காரணமாகும். இதே மாதிரி முன் சொன்னவரும் பெரிய பதவிக்காசைப்பட்டு அந் நோக்கத்தோடு உழைத்து வந்திருப்பர். அதன் பலன் அவருக்குக் கிடைத்தது
இதே மாதிரி தான் ஒவ்வொன்றும் அவனவன் பிரயாசையின் பயனாகவே விளைகின்றது என அறிய வேண்டும்.

ஆனால் நவீன சாகரீக மயக்கில் சிக்குண்ட ஒரு சிலர் இவைகளி லெல்லாம் சிறிதும் நம்பிக்கை கொள்வதில்லை. "All these are nonsense! Dam Silly Tamil! All these superstitions!'' என்று நம் அருந்தாய் மொழியையும் நம்மவர் கொள்கைகளையும் சிறிதும் மனங் கூசாது இகழ்ந்துரைக்கின்றனர். என்னே இவர்களின் கூற்று! ஆங்கிலப் படிப்பு கொஞ்சம் படித்துவிட்டதனால் தாங்களே இவ்வுலகில் மேதாவிகள் என்ற எண்ணமா இவர்களுக்கு? அதிலேயே இவர்கள் எல்லா உண்மையையும் கண்டுவிட்டனரோ? அதனால் நம் தாய்மொழியை இகழுகின் றனர். ஆங்கிலப் படிப்பு படித்தால் தானென்ன? அதனாலேயே நம் தாய்மொழியில் உள்ள நாலடியார் திரிகடுகம் நல்வழி மூதுரை நீதிவெண்பா முதலியவைகளையும் குறள் போன்ற அரும்பெரும் நூல்களையும் புரட்டிப் பார்க்க வேண்டாமென்று சொல்லியிருக்கிறதா? அல்லது இவைகளைப் பார்வையிடுவதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லையென் நர்த்தமா? என்ன காரணம்? ஏன்? காரண மொன்றுமில்லை. அதில் என்ன இருக்கிறது. தமிழில் என்ன விருக்கிறது என்று இவர்கள் அலஷியம் செய்வதே அதற்குக் காரணம். இன்னும் அநேக விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும்போதே தங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வதே அதற்குக் காரணமாம். குறளையும் மற்றும் சில நூல்களையும் அன்னிய நாட்டாரே அதிக பெருமை பாராட்டி எடுத்துக்
கொண்டுபோய் அதிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க இவர்கள் மாத்திரம் இதை அலஷ்யம் செய்வானேனெனின் இது அவர்களின் அறியாமையேயாகும்.

இன்னும் ஆராயப்புகிலோ இம்மாபெரும் புவியில் ஒருவன் படிப்பில் திக கெட்டிக்காரனா யிருக்கிறான். சட்டங்கள் பேசுவதில் அதிக சமர்த்தனாயிருக்கிறான். மற்றொருவனோ கைத்தொழிலில் அதிக தேர்ச்சிபெற் றிருக்கிறான். வேறொருவனோ சித்திரம் தீட்டுவதில் அதிக அநுபவம் வாய்ந்திருக்கிறான். வேறு சிலர் ஆயுதப் பயிற்சியில் அதிக வல்லமை பெற்றிருக்கிறார்கள். சில மேதாவிகள் ரசாயன சாஸ்திரத்திலும் மற்றும் சிலர் கணித சாஸ்திரத்திலும் அதிக நிபுணர்களாக விளங்குகின்றனர். மற்றும் சிலர் மின்சார சக்தியின் உதவியைக் கொண்டு பலரும் பிரமித்துப்போகும்படி நாளுக்கு நாள் ஒவ்வொரு அற்புதமான விஷயங்களைக் கண்டு பிடித்துக்கொண்டே வருகின்றனர்.

தவிர ஒருவர்க்கு வெகு சுலபமாகத் தோற்றுமொரு விஷயம் மற்றவர்க்கு அதிக கஷ்டமாகத் தோற்றுவதும் ஒவ்வொருவர் ஒவ்வொரு காரியத்திலேயே அதிக நிபுணத்வம் அடைந்திருப்பதுவும் இன்னும் இவை போன்ற மற்றும் சிலவும் ஆராய்ந்து நோக்குமிடத்து இவையெல்லாம் அவரவர் அதன தில் முன்ஜென்மத்தில் எடுத்துக்கொண்ட முயற்சியும் தீவிரப் பிரயாசையின் பலனுமா மென்பது நன்கு விளங்கும்.

கடவுளே இல்லை யென்றும் இயற்கையாகவே யாவும் நடந்தேறிவருகிறதென்றும் இரசாயன சாஸ்திரத்தின் உதவியைக் கொண்டும் மின்சாரத்தின் அபூர்வ சக்தியைக் கொண்டும் இன்னும் சிறிது காலத்தில் இயற்கையைக் கூட மீறி விட்டதென்று சொல்லும்படியான இன்னும் அநேக காரியங்களும் நடக்கக் கூடுமென்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர். இப்போது உலகத்தில் நடந்துவரும் தினசரி நடை முறைகளெல்லாம் இயற்கையாகவே நடந்தேறிவருகின்ற தென்பதுதான் அவர்தம் கொள்கை. ஆனால் அவ்வியற்கையென்பது யாது என்பதை இவர்களேன் சிந்தித்துப் பார்க்கவில்லை? அதுதானே ஸர்வ வியாபியாகிய சர்வேஸ்வரன். அச்சர்வேஸ்வரன் தானே நாம் என்றும் அறைகூவும் அவ்வானந்த சொரூபியாகிய சச்சிதானந்த சிற்சொரூப பரப் பிரம்ம மயமாகிய கடவுள். அதை யேன் இவர்கள் உணரவில்லை?

இயற்கைதான் கடவுளென்பதை இவர்கள் முற்றிலும் அறியவில்லையென்று நாம் இங்கு சொல்வதற்கும் ஒரு விதத்தில் இடமில்லாமல் இருக்கிறது. ஏனெனில் இவர்கள் அதை உணர்ந்தே இருக்கவேண்டும் முற்று மறிக்தும் அறியாதவர்களைப் போல நடிப்பதும் மேற் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுப்பதும் என்ன காரண மெனிலோ வெகு நாளாக அக்கடவுளிடம் அன்பு பூண்டொழுகுவதும் மத பக்திக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் பண்டைக்கால நாகரீகத்துக்கும் சிறந்த கலைகளுக்கும் இன்னவும் பிறவுமாய மற்றெல்லா
விஷயங்கட்கும் அறிவின் வளர்ச்சிக்கும் அடிப்பீடமும் பிறப்பிடமுமாகிய நம் மிந்தியாவில் உள்ள இந்து சமூகத்தினரை அவர்தம் மதத்தில் இருக்கும் உண்மையையும் நம்பிக்கையையும் நாளடைவில் இழக்கச் செய்து அவர்களை நாளும் தம் அடிமைகளாக்கி அடக்கி ஆண்டுகொண்டிருக்கலா மென்ற தந்திர நோக்கங்கொண்டே யிருக்குமென்பது வெள்ளிடை மலை.

இனி இயற்கையை மீறுவதென்பது ஒருநாளும் முடியாத காரியம்.
இயற்கையின் உதவியைக் கொண்டே எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனால் இயற்கையை மீறுவோ மென்பதோ எந்நாளும் முடியாதகாரியம். அப்படி யெண்ணிச் செய்யும் காரியமும் சீக்கிரம் அழிந்து பட்டொழியும்.

இக்காலத்தில் எத்தனையோ அற்புதமான இயந்திரங்களும் தந்திரங்களும் அதிசூக்ஷமமாக கண்டுபிடிக்கப்படினும் அவைகளின் கர்த்தாக்கள் அவைகளுக்குக் கொடுக்கும் தீர்க்கமான வயதுக்கு (That means the time of their existence) எவ்வளவோ முன்னரே அழிந்து பட்டொழிகின்றனவே! இவற்றிற்கெய்லாம் காரணம் என்னவென்று ஏன் ஒருவரும் சிந்தித்துத் தெளிவதில்லை.

மேற்சொன்னவை யாவும் அவரவர் தம் மூளையின் அபாரசக்தியாலேயே யெனினும் அவை யாவும் உலகமெலாம் போற்றும் ஒப்பற்ற விலையில்லா மாணிக்கமாகிய நம்மகான் மகாத்மா காந்தி அடிகளின் அரும்பெரும் ஆத்ம சக்திக்கு எவ்விதத்தும் இணையாகாதென்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இஃதோ இயற்கையை மீறும் நோக்கத்தோடல்லாது தன் ஆத்ம வளர்ச்சிக்குப் பொதுவாக இவ்வுலக க்ஷேமத்தைக் கோரியும் என்னோக்கத்தோடு பொறுமையுடன் ஈஸ்வர கடாக்ஷத்தை நாடி யநுஷ்டிக்கப்படுவதாதலின் இது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகுமல்லாது என்றும் குறைவு படாது. இதற்தெந்நாளும் அழிவுமில்லை. இதற்கும் காரணம்
இதற்கும் காரணம் அவருடைய நம் மகாத்மாவுடைய பூர்வ ஜென்ம நல்வினைப் பயனின் முதிர்ச்சியும் இச்சென்ம பரோபகார உலக சம்ரக்ஷணார்த்த இடைவிடாத உழைப்பின்
விடாத உழைப்பின் மிகுதியுமேயாம்.

இனி முடிவாகக் கூறுமிடத்து இவ்வுலகமே பிரமித்துப்போகும்படியாக கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு அற்புதங்களுக்கும் காரணகர்த்தா கடவுளே யென்றும் மக்களுக்கு வேண்டிய அறிவைக் கொடுத்து யாரார் எவ்வெவ்விதமாக அதாவது எவ்வளவு தூரம் அதை விருத்தி செய்கின்றனர் பார்ப்போம் என்ற நோக்கங்கொண்டு அவ்விறைவனியற்றும் அவனின் அற்புதத் திருவிளையாட்டெனலே சாலப் பொருந்துமெனக் கருதுகின்றேன்.

நாம் எல்லோரும் கடவுளுடைய அருளுக்குப் பாத்திரர்களாவோமாக!
கடவுள் நம்மை யென்றும் காப்பாராக.

ஆனந்த போதினி – 1937 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment