Sunday, August 30, 2020

 

கம்பர்

(அ. அண்ணாமலை)

கம்பர் நம் நாட்டுக் கவி சக்ரவர்த்தி யாவர். அவர் சேரணாட்டில் திருவழுந்தூர் எனும் கிராமத்தில் உவச்சர் குடியில் தோன்றியவர். இவர் தந்தை ஆதித்தர் என்பர். இவர் ஏலின் சிறப்பைக் கொண்டு உயர்ந்த குடியில் பிறந்தவரோ, எனக் கருதுகின்றனர். இவர் தம் கலைபுல உயர்வை நோக்கிப் பின் வந்தோர் கெளடத புலவர் கொடைப் புலவர்,
ஒண்பாவில் உயர் கம்பன், விருத்கத்தில் வல்லூர், வைரவமுரகாளி, வைரியின் பட்டம், கற்றார் கவியில் பெரிதாம் தமிழ்க் கம்பநாடன், கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி சொல்லும என்றெலலாம் பல அரிய பட்டங்களும் வழங்கினர்.

இவர் பெயர் இயற்பெயரா? காரணப் பெயரா? என இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது. கம்பையில் பிறந்ததால் கம்பர். ஏகம்பரின் மரூஉச்சொல் கம்பர். கையில் கம்புடைமையால் கம்பர். காளிகோயில் பூசாரியாதலால் கம்பர். கம்புகொல்லை காத்தமையால் கம்பர். கம்பர் தடியோம் வரம் பெற்றமையால் கம்பர் என்பர்.

இவர் சோழனது சமஸ்தான வித்துவான் ஆவர். இவர் வரகவி என்
பர். இவரது நூலினுட்புக்கு நோக்குவார் நன்கு படித்தே ராமாயணம் எழுதியிருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். இவரது நூலில் திருவாசகம், தேவாரம், பிரபந்தம் முதலிய சொற்செறிவுகளும், காரிகை விருத்தி களவியல், தொல்காப்பியம், மனுதர்மம், சுக்ரநீதி, காளிதாஸர் கருத்து, குறள், சீவகசிந்தாமணி அடிகளும் காணப்படுகின்றன. இவற்றால் கம்பர் இவைகளையும் நன்கு படித்து உணர்ந்தே ராமாயணம் புனைய துணிந்தார் என்பர்.

இவர் தோற்ற (பிரகிருத தத்துவ) நூலையும் உயிர் (ஆத்மத தத்துவ)
நூலையும், பரமார்த்த தத்துவ நூலையும் நன்கு ஓர்ந்தவர். பாவன்மை நாவன்மை மிக்குடையவர். வேதம் சாத்திரம் அநுபவம் கண்ட வுண்மை தீரர் சைவ வைணவ கருத்தில் மயக்கமற்றவர் எனக் கூறுவர். சொல் நயம் பொருள் நயம் தொடை நயம் தெளிவு சுவை செறிவு முதலிய குண நயமும் இசை நயமும் பெருகக் கொண்டவர். இவர் கலி விருத்தம், ஆசிரியத் துறை, கலி நிலைத்துறை தரவுகொச்சகக் கலிப்பா, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை முதலிய பாவும் பாவினமும் அமைய நூல் யாத்தார். முதல் நூலில் இருந்து சில விகற்பமும் சுட்டியுள்ளார். 'பின்னோன் வேண்டும் விகர்பங் கூறி அழியா மரபினது வழி நூலாகும்' என்பது இலக்கணமாகக் கொண்டு சில மாற்றமும் புரிந்தார்.

குமார சம்பவம் கம்பர் கூறவில்லை. வில்லை முறித்ததும் நீலமாலை கூறியதும் வான்மீகர் கூறவில்லை. தமிழ் முறை நன்கறிர்த பெருமகனார் அகப்பொருள் துறையமைத்து காட்சி முதலிய சுட்டினார். சுருங்க சொல்ல வேண்டிய இடத்துச் சுருக்கியும் பெருக்கவேண்டிய இடத்துப் பெருக்கியும் உள்ளார்.

இவர் எழுதியது பெருங் காவியமாகும். காவியம் கத்தியம் (வசனம்) பத்தியம் (செய்யுள்) சம்பூ (தொடர்நிலைச் செய்யுள்) மூன்று வகையில் வரும். இங்கு ராமாயணம் தொடர்நிலைச் செய்யுளின் பாற்பட்டதே நிகண்டு பிரயோகம் (வாச்சியார்த்தம்) குறிப்பெடுத்தல் (லட்சியார்த்தம்) பொருள் கண்டு உறல் (வியங்கியார்த்தம்) எலாம் உரை நோக்கும்போது புலனாகும். காவிய இலக்கணமாகிய வாழ்த்து வணக்கம் வரும்பொருள் உரைத்தலும், புருஷார்த்தம் நான்கும் தன்னிகரில்லா தலைவனையும் மலை
கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர் தோற்றம், நன்மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், பூப் பறித்தல், புனல் விளையாடல் தேன், மது சிறாரைப் பெறல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல், மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி, சந்திபோல் தொடரல், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் எலாம் உள்ளன. சொற்செட்டு எழுத்துச் செட்டு இசைச் செட்டு, உயிர்ப்புச் செட்டு, ஓசைப் பொலிவு உள்ளமை ஆய்க. உருக்கம் பரிவு,
உணர்ச்சி பணிவு, இரக்கம் தமிழின் அருஞ்செல்வங்கள். அவற்றையும் இடை இடை இயைத்தார் என்க.

இதனால்: -

இம்பர்காட்டில் செல்வமெலாம் எய்தி அரசாண் டிருந்தாலும்

உம்பர்நாட்டில் கற்பகக்கா ஓங்கிநிழ லிருந்தாலும்

செம்பொன்மேரு அனையபுயத்தில் சேர் இராமன் திருக்கதையில்

கம்பநாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கிதயங் களியாதே.

 

என எழலாயிற்று. இவர் இராமாயணமே யன்றி, சாசுவதியந்தாதி, திருக்கரை வழக்கம், சடகோபரந்தாதி, எரெழுபது, சிலை, எழுபது எனப் பல நூல்களும் யாத்திருக்கிறார்.

இராமாயணம் இதிகாசத்துள் ஒன்று. உபதேச பரம்பரையில் வரும் வரலாறுரைக்கும். வேத நியாயத்தை நியாய பிரமாணத்தால் சுட்டும். வேதத்தின் கருத்து மலிந்திருத்தலால் உபப்ரும்ஹண மென்பர். (வளர்ப்பது) பல கிளைக்கதைகளை விரித்துளது. இதிகாச புராணம் என்பதில் முன்னர் இதிகாசம் என்பதால் இதன் உயர்வு விளங்கும்.

இராமாயணம், இராமனுடைய நெறி எனப் பொருள் ஆம். அயனம்
கதை செலவு சேறல் சம்பவம் நெறி இடம் விடயம் எனினும் பொருந்தும். ராம் = நற்குணம் பொருந்திய, அயனம் = கதையாம். இராமனுடைய
குணாதிசயங் குறிக்கும். அழகன் என்றும் மகிழ்விப்பவன் என்றும் மனத்திற் கினியன் என்றும் கூறுவர். இது ஆறாம் வேற்றுமை செய்யுட்கிழமை கண் வந்தது. முதனூலின் பெயரே தமிழிற்கும் வந்தது. உயர்ந்த தலைவன் நிலை: - உயர்ந்த குணம் மேலான குணம் இயற்கை யழகு கொடை குணம், அதிபதி முடிக்குஞ் சக்தி வித்தையில் சிறப்பு கருத்தில் ஓங்கல் முதலிய உத்தம நாயகனாக இருக்கவேண்டியதை விளக்கினர். இடை இடையே
இணைநாயகர் நாயகிகளின் கூற்றினையும் நன்கு விளங்க வைத்தனர்.

கம்பர்: நூன்முகம், சிறப்புப்பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், அயோத்தி நகர் வருணனை, தசரதன் அரசியல், இராமாவதாரம் எனத் தொடங்கினர். வான்மீகம் நாரதர் கூறியன, பிரமன் கூறியன, தன் கருத்து சருக்கம் குசலவர் கூறியன, அயோத்தி வருணனை, சரயூநதி வருணனை எனத் தொடங்கினர் இவை வேற்றுமை.

இவர் தம் நூலில் பெற்றோர் கடமை, விபீடணன் சரணாகதி, ஏகபத்தினி விரதம், சகோதர ஒற்றுமை முறையுற, சண்டை அமைய பாடினர். அறம் உண்மை ஒழுக்கம் பிறப்புரிமை பழியச்சம் கருணை வீரம் நட்பின் சிறப்பு அரச நீதி மாணவர் முறை செய்நன்றி யறிதல் முதலிய மேன்மை குணம் பொறித்துளார். செம்பொருள் கருத்துப் பொருளாக தத்துவ அறிவு, சத்தியவாசம் இன்சொல்லுடைமை பொறுமையுடைமை பயனடைவு விசேட அறம் அடியார்க்குரிய கைங்கரியம் இன்னவும் ஆராய்ச்சியில் வைத்தார். பரத்வம் உபாயம் தோன்ற நின்றன. அஷ்டாட்சத்திலும் பஞ்சாட்சாத்திலும் முக்கிய எழுத்தாம் ராம என்பதும் 'மும்மைசால் உலகுக்கெலாம் மூலமந்திரம்' ஓங்காரப் பொருள் தேறுவார் தாமுன்னை உணர்வர் எனலால் ஓங்கார வடிவினன் என்றார். இராமர் சீதை இலக்குமணர் நிலையை ஓம் எனர் மரபு. தன்னை பறிதலும் தலைவனை யறிதலும்
விரோதியை யறிதலும் உபாயமறிதலும் பயனறிதலும் ஆகிய அர்த்தபஞ்சகமும் அநுமான் வசிட்டர் விசுவாமித்திரர் அகத்தியர் முதலிய ஆசாரிய தர்மமும் சீதை, மந்தோதரி, கௌசலை, கைகேயி, சுமித்திரை, தாடகை, சூர்ப்பனகை, தாரை, அநசூயை முதலிய ஸ்ரீதர்மமும உண்டு. நூல் ஆய்வில் திராட்சாபாகமும் நாரிகேளபாகமும் கதலிபாகமும் மதுபாகமும் க்ஷீரபாகமும் காணலாம். இவர் வரைந்த கவியை என்கு ஆய்ந்த பல
மொழி ஆன்ற பெருமக்கள் பல்லாற்றானும் உயர்த்தி யுவாத்திருக்கின்றனர். அப் புகழ் மொழியுள் சில கூறலாம்.

இவர் காவியமே சக்ரவர்த்தி யாக்கியதென்பர். ஹோமர், விர்சில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியேர், கதே முதலிய பிற நாட்டுப் புலவர்களையும் கச்சியப்பர், இளங்கோ, சாத்தனார் முதலிய தமிழ்ப் புலவர்களையும் நன்னய பட்டர், சந்த பட்டர், துளசிதாஸர், காளிதாஸர் முதலியவரையும் இவர் வென்றுவிட்டார். இயற்கையைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் போற்றிய ஹோமர், மில்டனையும் கடந்தார். ஜெருஸத்து டாலோ என்பார் கட்டும் கதையினும் இவர் கதை உயர்ந்துவிட்டது. வர்ஜில் வரைந்த
இயற்கை வர்ணனையையும் மிக்நோங்குமாறு ஆங்காங்கு வருணித்தார். ஷேக்ஸ்பியர் சுட்டும் உறுப்புகளினும் இவர் அமைத்த உறுப்புகள் மிக விஞ்சியவையே. ஆடிசில், ஹோமர் காட்டும் நகர வர்ணனையைக் காட்டிலும் இவர் காட்டிய வர்ணனை மிகையாகும். பாரசீக புலவராம் பெர், டூசியைக் காட்டினும் காவிய நடை ஓங்கியது. பல நூல்கட்கும் எடுத்துக் காட்டாக ராமாயணம் அமைந்தது.

இவர் சரிதம் தொண்டைமண்டல சரிதம், தமிழ்நாவலர் சரிதை,
சோழமண்டல சரிதம் முதலிய இடங்களிலுண்டு. கம்பர் பாடிய பாடல் 10500, வாணிதாஸர் பாடியன 1500, முற்றும் 12000 பாடலாயின. இவர் காலம் 855 என்றும் 1185 என்றும் சுட்டுவர். வான்மீகர் 7 கோடி மந்திரத்தை 24 எழுத்தால் காயத்திரி அமைய அதன் முதல் எழுத்தை
ஆதாரமாக வைத்து 24 ஆயிரம் பாடல் பாடினர். இதைச் சுருக்கிக் கம்பர் 12000 பாடல் பாடினர் என்பர்.

      இவர் இருந்த இடத்தே ஒரு மேடு உண்டாம். அதைக் கம்பர் மேடு என்பதுண்டாம். இவர் சமாதி நாட்டரசன் கோட்டையில் உளதாம். இவ்வூர் இப்போது கதிராமங்கலம் எனக் கூறப்படுகிறது. இவர் கால புலவராகக் கருதப்படும் புகழேந்தி, ஒளவை, ஒட்டர், நேமிநாதர் முதலியவர்கள் கருதப்படுகின்றனர். இப்போதுள்ள கல்வெட்டு சாசனமும் பிறவும் துணை
கொண்டு ஆராய்வோர் சுட்டும் விகற்பம் புரியவில்லை.

      இவர் தம் சரிதத்தால் மாணவர்கள் அடையும் பயன் சில உண்டு. எளிய குடும்பத்தில் பிறந்து ஏற்றமிக்கவராக ஆனமை, கல்வி வளர்ச்சியல் சிறப்புடைமை, குன்றா ஊக்கத்தால் பெரு நூல் யாத்துப் பெருமை பெற்றமை, அரசனோடிருந்து ஆண்மையோடு விளங்கியமை எலாம் கண்டு அங்ஙனம் வர முயலல் வேண்டும். இவர் காலத்திற்கு முன்னர் உள்ள சமண ராமாயணம், பௌத்த ராமாயணம், கூர்ம புராணம், வடமொழி ராமாயணங்களின் கருத்தைத் தனது கருத்தாக எடுத்தாண்டமை நன்கு புலனாகும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

 



No comments:

Post a Comment