Tuesday, August 25, 2020

 அறிஞரின் அமுதமொழிகள்-எஸ்.வி.வி

 

1. Pride, the never-failing vice of fools                                                                      Pope.

மூடர்களை ஒருபோதும் விட்டகலாத தீமையே கர்வம்.                (போப்)

 

2. Araise! Awake! and stop not till the goal is reached.                                             Vivekanandha.

எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கை கூடும் வரை உழைமின்! உணர்மின்!

(விவேகானந்தர்)

 

3. Time flies, death urges, knells callHeaven invites, Hell threatens.                        Young.

காலம் பறக்கின்றது, மரணம் மன்றாடுகின்றது, சாவொலி சப்திக்கின்றது, வானம்

வரவேற்கின்றது.                                                   (யங்)


4. Those thats come unto me, shall cross the river of life.                                         Bible.

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார் இறைவ னடிசேராதார்.            (குறள்)

 

5. To err is human, to forgive is divine.                                                                     Pope.

தவறுதல் எளிது, பொறுத்தலோ பெரிது.                              (போப்)

 

6. Ye have heard that it hath been said, Thou shalt love thy neighbour, and hate thine enemy. But

I say unto you love your enemies                                                                               Bible.

 

'அயலானிடம் அன்பு கொண்டொழுகு; பகைவனை வெறுத்து பல்காலும் நட வென்று பலர் கூற நீ கேட்டிருப்பாய்; ஆனால் நான்சொல்லுவதைக் கடைப்பிடி:

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்.''   (குறள்)

 
7. Sweet is pleasure after pain.                                                                                   Dryden.

நிழலினருமை வெய்யிலில் தெரியும்.                                (டிரைடென்)

 

8. My soul followeth hard after thee; thy right hand upholdeth me.                          David's Psalms

துன்பவழியிற் றுயருற் றுனை நாடி அன்புட என்னான்ம அலைகின்ற அப்போதும் மன்னு திரு வலக்கரத்தால் மாண்புடையாய் நீ ஏற்பாய்!              டேவிட் தோத்திரங்கள்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment