Tuesday, August 25, 2020

அறிஞரின் அமுதமொழிகள-K.S.மணவாளன்

 

1.     For the protection of the Good For the destruction of the evil doers

For the sake of firmly establishing righteousness I am born from age to age. (Lord Krishna.)

எப்பொழுது தர்மம் குன்றி அதர்மம் அபிவிர்த்தி ஆகின்றதோஅப்பொழுது தர்மத்தை ஸ்தாபிப்பதற்காகவும், அதர்மத்தைஅழிப்பதற்காகவும் நான் யுகத்திற்கு யுகம் அவதரிக்கிறேன். (கிருஷ்ணபரமாத்மா பகவத் கீதை.

 

2.     No government can be a good governmentwhich has not the approval and support of the
            people. (Abdul Rasul.)

எந்த அரசாங்கம் குடிகளுடைய அங்கீகாரமும் ஒத்தாசையும்அடையவில்லையோ அது நீதியுள்ள அரசாங்கமாகாது. (அப்துல் ரஸல்)

 

3.     It has been ordained that a country can advanceintellectually only, if its members practise the
            virtue of self - sacrifice. (Lala Lajapat Rag.)

எந்தத் தேசத்தின் குடிகள் சுயநலம் கருதாது தம் உயிரையும் ஒருநல்ல காரியத்தின் பொருட்டு விட எண்ணியிருக்கின்றார்களோ அத்தேசமே முன்னேற்ற மடையும். (லாலாலஜபதிராய்.)

 

4.     Do yourself what you wish others to do. (Rama Krishna.)

பிறரைச் செய்யவேண்டுமென நினைப்பதை நீயே செய்துகொள். (ரரமகிருஷ்ணா.)


5.    
Knowledge is power. (Bacon.)

புத்திமானே பலவானாவான். (பேகன்)


6.    
The best school of discipline is bome. (Smiles.)

நன்னடக்கை பயிலுவதற்கு உரிய இடம் இல்லமே. (ஸ்மைல்ஸ்.)

 

7.     'The simulated friendship of an enemy is like a smoulderingfire.'
      பகைவர் நேயம் (போலிநட்பு) புகையும் நெருப்பும்.
 

8.            'He that lendeth looseth double.'(Money and Friendship)
எவனொருவன் கடன் கொடுக்கின்றானோ அவன் இருவிதத்தில்நஷ்ட மடைவான். (தான் கொடுத்த பணமும் இரண்டாவதுஅடைதற்கரிய நட்பும்)
 

9.     'A soft answer turnath away wrath but a grievous wordstirreth anger.'
இன்சொல் கோபத்தை தணிக்கும்; வன்சொல் கோபத்தை விளைக்கும்.
 

10.    'Beauty without virtue is a flower without fragrance.'
கற்பும் நல்லொழுக்கமுமில்லா அழகு மணமில்லா மலர்போன்றதாம்.
 

11.    'Money spent on brain will never go in vain.'
வித்தையின் பொருட்டு சிலவிட்ட பணம் வீணாகாது.
 

12.    Trust no future however pleasant.
எத்தகைய நன்மை பயப்பதாயினும் வருவது நினையாதே.

 

13.    Never trust to another what you should do yourself.
உடையவன் பாராத பயிர் ஒரு முழங்கட்டை.
 

14.    To throw pearls before swine. Bible.
கழுதை யறியுமோ கற்பூர வாசனை.

15.    The tears of the oppressed prove fatal to the oppressor.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்.
 

16.    Arguing with a man who has no reason is administering dosesof medicine to a dead body.
கழுதைக் குபதேசம் காதிலே ஓதினாலும் அவயக் குரலேயன்றியங்கொன்றுமில்லை.
 

17.    He conquers all who conquers self. Vivekananda.
தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவன் உலகைச் சரிப்படுத்தியவனாவான். (தானடங்கத் தன்குல மடங்கும்.)
 

18.    The learned know the value of the learned.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் (பாம்பறியும் பாம்பின் கால்)
 

19.    We must eat to live but not live to eat.
வாழ உண், உண்ண வாழேல்.
 

20.    He conquers who endures Persius.
பொறுத்தவர் பூமி யாள்வார்.
 

21.    Manyers must adorn knowledge
கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க வதற்குத் தக. (குறள்)
 

22.    No man can be wiser than destiny.
ஊழிற் பெருவலி யாவுள, மற்றொன்று சூழினும் தான்முந் துறும். (குறள்)

 

கே. எஸ். மணவாள ஐயங்கார்.

 

ஆனந்த போதினி – 1929 ௵

 

 



 


No comments:

Post a Comment